About

Eeswari

நான் ஈஸ்வரி . எந்த நேரமும் ஏதோ ஒரு கதையை பற்றி யோசித்துக் கொண்டே இருப்பதால் என்னை கனவுகளின் ராணி என்றே சொல்லலாம். குடும்பம் சார்ந்த காதல் கதைகள் மற்றும் திரிலர் கதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.

Eeswari
18

Completed Books

2

Ongoing Books

No data found..

Kindle

என்னை விழுங்கிவிடும் தீயே

ஒரு அழகான காதல் கதை ..ஒரு ஆணின் நேர்மையான நடத்தையின் மீது, தீராத காதல் கொண்டு, அவனை துரத்தி துரத்தி...

மாறனின் அ(ன்)ம்பு பகுதி:1

ஏற்றத் தாழ்வும்எதிரிகள் ஆக்க…ஏங்கி நிற்கும் நெஞ்சங்கள்ஏகாந்தம் கொள்ளுமோ…?பணமும் பகட்டும்

திகட்டாத திமிரே- பாகம்:1

நாயகனின் மனம்சில்லென்ற உணர்வு இதயத்துக்குள்ஊடுருவி பரவி திரிய..ரகசியமறிந்த விழிகள் இரண்டும்தேடலோடு...

தேவ சக்தி- பாகம்:1

கதையின் நாயகன் தேவா,நாயகி சத்யா,இதில் இருவரும் காதல் ரசம் என்னும் மழையில் சொட்டச் சொட்ட நனையும் கதை…சத்யா...

Reviews

நிகழ்வுகள் அப்படியே மனதைப் புரட்டிப் போட்டு விட்டது

அருமை அருமை முதலில் கொஞ்சம் என்னதிது கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல் எப்போதும் கணவன் மனைவி இருவரும் கொஞ்சிக் கொள்வதைப் பற்றியே ஒரு கதையா என்று நினைத்தேன் ஆனால் அடுத்தடுத்து வந்த நிகழ்வுகள் அப்படியே மனதைப் புரட்டிப் போட்டு விட்டது கண்களில் நம்மையறியாமல் கண்ணீர் துளிகள் ஏதோ நம் வீட்டில் நடந்த சம்பவம் போல் மனதில் ஒரு பதைப்பு கதையில் வந்த அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பு இதுதான் யதார்த்தம் புரிந்து கொண்டவர் மீண்டும் வாழ்வை அழகா அன்பினால் நகர்த்திக் கொண்டு தாமும் வாழ்ந்து தம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்துக் கொண்டால் எப்போதும் வாழ்வில் தோற்க மாட்டோம்னு ஆணித்தரமா சொன்ன விதம் இருக்கே சூப்பர் சந்தோஷம் மட்டுமே வாழ்க்கையில்லை சங்கடங்கள் வரும்போதும் தடம் மாறாமல் அதை கட்டிக் காப்பதேனு நாம வாழ்ந்த அனுபவங்கள் சொல்லுமாறு வாழ்ந்திடனும் மொத்தத்தில் பின்பாதி கதைதான் யதார்த்தம் உங்கள் எழுத்துகள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...

செம காமெடியா இருந்து

மந்திர சொல்லாட்டி கடைசி வரைக்கும் நிலவை லவ்வ சொல்லி இருக்கவே மாட்டான் போல மந்திர ஒவ்வொரு விஷயமும் செம காமெடியா இருந்து அதே நேரம் ரொம்ப அழகாவும் இருந்து தருண் சுஜி அவங்களும் சூப்பர் தேவ் தியா அவங்களும் சூப்பரோ சூப்பர் நாளும் ஜோடியும் அவ்வளவு அழகு என்னோட ஃபேவரிட் தருண் சுஜி கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்க

அருமையான கதாபாத்திரங்களுடன் சுவராசியத்துடன்

காதல் காதல் காதல் காதல் காதல்எங்கேயும் காதல் எப்போதும் காதல்என்றென்றும் காதல்உலகை ஆளும் சக்தியில் முதன்மையானஇடத்தில் உள்ளது காதல் காதல் காதல் தருண் தியா ரத்தபாசம்தியா சுஜி நட்பின் இலக்கணம்தருண் அணில் மந்தரா நட்புரிரிர் இக்கதையில் முதல் லவ் ஃபேர்தருண்தேவ்அணில்நீரவ்சுஜிதியாமந்தராப்ரியாஅழகான அன்பான நட்புறவு குடும்பம் சமுதாயம் இவையெல்லாம் விட முக்கியமானஒன்று நாம் அனைவரும் இந்தியர்கள்என்று கருத்தை அழகாகவும் நேர்த்தியானமுறையில் அருமையான கதாபாத்திரங்களுடன் சுவராசியத்துடன் ரசிக்கும் படி கொடுத்த என்தோழி ஈசக்காவிற்குசூப்பர் சூப்பர் சூப்பரோ

சமுதாய அக்கறை மிகவும் சிறப்பு

கதை மிகவும் அருமையாக உள்ளது காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் உங்கள் கதைதான் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருந்தது.தியா-தேவ், தருண்-சுஜி, அனு-விசி, அணில்-மந்த்ரா இப்படி அனைவரும் தத்தம் துணையுடன் சிறப்பாய் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னை கவர்ந்தது நீரவ்வின் காதல் நிச்சயம் சொல்ல வார்த்தைகள் இல்லை இன்றைய சமுதாயத்தில் அர்த்தமற்ற காரணங்களை கொண்டு பிரிந்து செல்பவர்கள் மத்தியில் தாம்பத்யம் தேவையில்லை என்று இவ்வளவு காதல் கொடுக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது ப்ரியா மிகவும் அதிர்ஷ்டசாலி யாரிடமும் காதலை பிடிவாதத்தாலோ அல்லது அடக்குமுறையாலோ பெற முடியாது என்பதை உணர்ந்து நீரவுடன் ஏற்ப்படுத்திக்கொண்ட பிணைப்பு பாராட்டப்படுவது. ஒவ்வொரு கதையிலும் நீங்கள் கொண்டுவரும் சமுதாய அக்கறை மிகவும் சிறப்பு. இனிவரும் படைப்புகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

4 ஜோடியும் அவ்வளவு அழகு

பிரியா நீரன் ரெண்டு பேரோட வாழ்க்கை சூப்பர் மந்திர சொல்லாட்டி கடைசி வரைக்கும் நிலவை லவ்வ சொல்லி இருக்கவே மாட்டான் போல மந்திர ஒவ்வொரு விஷயமும் செம காமெடியா இருந்து அதே நேரம் ரொம்ப அழகாவும் இருந்து அனி ரோடு லவ் ஒரு வகையான அழகுநீர் என்னுடைய லவ்வும் ஒரு வகை அழகுதருண் சுஜி அவங்களும் சூப்பர்தேவ் தியா அவங்களும் சூப்பரோ சூப்பர் நாளும் ஜோடியும் அவ்வளவு அழகு என்னோட ஃபேவரிட் தருண் சுஜி கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்க

Interview Questions

நான் சிறு வயது முதல் ரமணிச்சந்திரன் அம்மாவின் வாசகி .கதைகள் வாசிப்பதில் அலாதிப்பிரியம் .அதுவும் காதல் கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஒரு கதையை வாசித்து முடித்துவிட்டு என் மனதிற்குள் அந்த கதையில் நானே நாயகியாய் மாறி கற்பனையாய் பலவாறு காட்சிகளை மாற்றி மாற்றி யோசிப்பேன். இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என்று .   அப்படி ஒரு நாள் பிரதிலிபியில் வாசகியாய் உள் நுழைந்த போது ராணி தென்றல் அவர்களின் தேவாமிர்தனைக் காணாமல் தினமும் பிரதிலிபிக்குள் நுழைந்த நேரம் எழுத என்ற வாசகம் என்னை எழுதச் சொல்லி உந்தவும் எனக்குள் இருக்கும் கற்பனைகள் என்னை தினமும் உந்திக்கொண்டேயிருக்க எழுதத்தொடங்கினேன்.

எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன? இரண்டுமே பிழை... எழுத்தாளராய் உருவான பின் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத்து  பிழைகளை திருத்திடலாம். திருத்தனும். நானும் திருத்த முயல்கின்றேன். ஆனால் கருத்து பிழை என்பது என்னைப் பொறுத்தவரை தவறு... சரியாய் ஆராயாமல் ஒரு விசயத்தை சரி என்றும் தவறென்றும் சொல்வது கருத்துபிழை...

காதல் செய்து வாழ்

கலவியல், Deep romance பற்றி சொல்லும்போது...பல சங்கடங்கள். கதைக்குத் தேவை இருந்தாலும் இதை எழுதும்போது மனம் கொஞ்சம் சங்கடப்படும். நாளைய சமுதாயத்திற்கு தீங்கிழைக்கிற மாதிரி ஏதும் எழுதி விடக் கூடாது என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன் .

எதிர்மறையோ நேர்மறையோ.. எந்தக் கதையாய் இருந்தாலும் என்ன எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். ஒரு கதையைச் சொல்லத் துணிந்து விட்டால் அதற்கான எதிர் மறைகளை எதிர்கொள்ள என்னையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ள முனைகின்றேன். ஆரம்பக்கட்டத்தில் வருந்தி வேதனை அடைந்திருக்கிறேன் போகப் போக கடந்துவிட பழகி விட்டேன்.