About

அஞ்யுகா ஶ்ரீ

நான் அஞ்யுகா ஸ்ரீ, முதலில் நான் ஒரு வாசகி அதற்கு பிறகு தான் ரைட்டர். ஒரு மணி நேர பஸ் பயணத்தில் ஆரம்பித்த என்னுடைய ரீடர் பயணம் தான் இன்று நான் இங்க இருக்க காரணம். எழுதுவதைவிட எனக்கு படிக்க ரொம்பவே பிடிக்கும். அந்த சமயத்தில் தான் எனக்கு எழுதினால் என்னனு தோணுச்சு, அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டு எழுத ஆரம்பித்தேன். ரெண்டு வருஷம் முழுசா முடிந்துவிட்டது. இந்த ரெண்டு வருஷத்தில், ஐந்து தொடர்கதைகள், எட்டு சிறுகதைகள் எழுதியிருக்கேன். ஆன்-கோயிங்கில் ஒன்று உள்ளது. தொடர்கதைகள். 1. என் வேரின் பந்தம் அவன். 2. அன்பே நீ புயலா? தென்றலா? 3. தணலில் பூத்த வெண்தாமரை. 4. என் எழில் மின்னலே! 5. நெஞ்சில் துஞ்சும் சாரல்! சிறுகதைகள்: "இமயம் என் இமைக்குள்" இணைய இதழ் மாதப்போட்டிக்காக கொடுத்திருக்கேன். 2. புழுதியொரு பூவாகி. 3. கல்லாய் போன மனது. இவை இரண்டும் தளத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் வெவ்வேறு போட்டிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கு.

அஞ்யுகா ஶ்ரீ
5

Completed Books

1

Ongoing Books

Thoorigai Novels

மதுரம் கொஞ்சும் மாயேன்(ள்) நீயே - 30

** 30 ** “பரமும்மா இந்த நேரத்தில் நீங்க ட்ராவல் பண்றது சரியில்லை, சொன்ன பேச்சைக் கேளுங்க… இன்னும் பத்துப்...

மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே- 29

** 29 ** ஆரூரனுடன் சண்டை போட்டுவிட்டு நேராக இருவரும் ஆதிரனின் இல்லத்திற்குச் சென்றனர்.  கோபமாக சென்ற...

மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே- 25

  ** 25 ** பரமேஸ்வரியை ஆஃப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்சென்று வெகு நேரம் ஆகியும் ஒரு அந்த இடத்தை விட்டு...

மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே - 18

** 18 ** “இன்னும் என்ன பண்றிங்க மாமா? சீக்கிரமா வாங்க அப்பத் தான் சரியான நேரத்திற்கு திருச்சி போக முடியும்”...

மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே - 13

** 13 ** கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் பரமேஸ்வரி, “உங்க தங்கச்சி வீட்டிற்கு யாரை மாமா அனுப்பலாம்...

மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே! - 10

** 10 ** கணவனுடன் வந்த கஸ்தூரியைக் கண்ட பரமேஸ்வரி, “எதுக்காகடி வெளியே போன? அவன் சொன்னா செய்திடுவியா?...

Kindle

Anjuka-Sri-அஞ்யுகா-ஶ்ரீ

 இது எனது அமேசான் பக்கம்.மொத்தம் ஐந்து கதைகள் உள்ளன. என் வேரின் பந்தம் அவன்அன்பே நீ புயலா? தென்றலா? தணலில்...

என் எழில் மின்னலே! (En Ezhil Minnale!)

என் எழில் மின்னலே! (En Ezhil Minnale!)சொந்தங்கள் எல்லாம் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து...

அன்பே நீ புயலா? தென்றலா?

அன்பே நீ புயலா? தென்றலா? (Anbe Nee Puyala? Thendrala?)உன்னை சிறை பிடிக்க நினைத்தால்!நீ சிறகவிழ்த்து பறந்திடு!வானம் உனக்கு...

தணலில் பூத்த வெண்தாமரை

தாய்க்கு நடந்த கொடுமையை எதிர்பாராமல் அறிந்து கொண்ட நாயகி மனம் முழுவது கோபமெனும் தணலை சுமந்து...

என் வேரின் பந்தம் அவன்

பெற்றவர்களின் வெறுப்பினால் ஒதுக்கப்பட்டு, தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் கிடைக்காமல் பாட்டி,...

நெஞ்சில் துஞ்சும் சாரல்!

தந்தையின் தகாத செயலால்சிறுவயதிலேயே அன்னையை இழந்து, பெரிப்பாவின் உதவியுடன் வாழும் போராடி வாழும்...

Reviews

அருமையான மர்மங்கள் நிறைந்த கதை

தணலில் பூத்த வெண்தாமரை சௌபர்னிகா அற்புதமான பெண் ... சுற்றத்தோடு எப்படி இணைந்து வாழணும்னு எழுத்தாளர் சூப்பரா செல்லியிருங்காங்க😍 ... யாரும் மிஸ் பண்ணிடாதீங்கா... மர்மங்கள் நிறைந்த அழகான குடும்ப கதை... நணபன் மீண்டு வருவதர்காக வர்மன் ஏங்குவதும் காத்திருப்பதும் அருமை👌😍.

Interview Questions

ஒரு போட்டி... அதுதான் என்னை எழுத தூண்டியது... அதனால் தான் நிறையா கத்துக்கிட்டேன்... நிறைய மனிதர்களை பார்த்தேன், படித்தேன்... அதில் கிடைத்த தோழ்வி தான் அடுத்து அடுத்து எழுதும் எண்ணத்தை கொடுத்தது.

எழுத்துப்பிழை இயல்பு, யாராலும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்திடமுடியாது, சரிதான? எழுத எழுத தான் பிழை திருத்த முடியும்... கருத்துப்பிழை எல்லாருக்கும் ஒரே மாதிரியானது இருக்காது, வேறுபடும்.

யாரா இருந்தாலும் முகத்திற்கு கேளுங்க, அதுதான் அழகு.

அப்படி எதுவும் இதுவரை வரலை... ஆனால் கவிதைக்கும் எனக்கும் காத தூரம்.

அது இப்படி இருந்தா நல்லா இருக்கும், இது இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு தான் தோணும்... ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி இல்லையே... அப்புறம் அந்த கதையை என்னுடைய பாணியில் யோசனை செய்து பார்ப்பேன், சற்று நிம்மதியா இருக்கும், அதே மாதிரி தான அந்த ரைட்டரும் எழுதியிருப்பாங்க... இறுதியா ஏற்றுக்க முயற்சி பண்ணுவேன்... சொல்லபோனால் அளவுக்கு மீறி என்னை எந்த கதையும் பாதிக்கலை...