About

hani hani

அன்புடன் ஹனி…. வணக்கம். நான் ஹனி. எழுத்துக்களை வாசிக்க பழகி எழுதும் ஆர்வம் கொண்டு கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன். கதையில் காதலும் குடும்பமும் கலந்து கொடுக்கவே பிடிக்கும். அதையே எல்லா நாவலிலும் கொடுக்க முயற்சிக்கிறேன். என் பிற கதைகளை நீங்கள் பிரதிலிபி தளத்திலும், அமேசானிலும் படித்து மகிழலாம். நன்றி.

hani hani
14

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

பைங்கிளி புதுமொழி 15 (final)

  மூன்று வருடங்களுக்கு பிறகு..."ம்மா" என்று மழலை மொழியில் அழைத்துக் கொண்டு, பந்து போன்று உருண்டு ஓடி...

பைங்கிளி புதுமொழி 14

 "என்ன வேணும் உனக்கு?""உன் தோல்வி கதை வேணும். தனியா அழுதுட்டு இருப்பியே.. அதான் கதை கேட்டு ஆறுதல் சொல்லலாம்னு...

பைங்கிளி புதுமொழி 13

  வருணிகா ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. இங்கு வரும் போதே, ஹரிஹரனுக்கு கம்பெனி கொடுத்த கார் நிற்பதை பார்த்து...

பைங்கிளி புதுமொழி 12

  அன்றைய நாள் யாருக்குமே நல்லதாக இல்லை. எல்லோரும் துக்கத்தில் இருக்க, வருணிகா மட்டும், நேரத்திற்கு...

பைங்கிளி புதுமொழி 10&11

முன்பு நடந்தவைகள்...ஹரிஹரன் வருணிகாவிற்கு திருமணம் முடிந்து, ஹரிஹரன் திருச்சி சென்று இருந்தான். முதல்...

பைங்கிளி புதுமொழி 9

 வருணிகா கண் விழித்துப் பார்த்தாள். மருத்துவமனைக்குள் நுழைந்தது மட்டும் தான் நினைவு இருந்தது. மெத்தையில்...

Kindle

ஆனந்த கவிதை அவள்

"என்னது … இவன போய் கட்டிக்கவா? "" என்னது? போயும் போயும் இவளயா எனக்கு பொண்ணு பார்த்து வச்சீங்க?"" இவன கட்டுறதுக்கு...

உருகும் நிலவாய்

தவிக்கும் மனதினை சுமந்தபடி கோயிலை நோக்கி புறப்பட்டாள். ஒவ்வொருவரும் அவர்களின் வேலையில் மூழ்கி இருந்தனர்....

தகிக்கும் மலரவள் (ராஜா- ராணி):

வணக்கம்.. இது என்னுடைய மூன்றாவது நாவல். இது முதல் பாகம். இதன் இரண்டாம் பாகம் அமேசானில் இருக்கிறது....

கர்வம் தொலைந்ததடி பூந்தளிரே:

இக்கதை உருகும் நிலவாய் மற்றும் தகிக்கும் மலரவள் கதைகளின் இரண்டாம் பாகம்.தலைவனின் காதலில் மயங்கும்...

பார்வை ஒரு வரம்

இவ்வளவு நேரம் கழுத்தில் கிடந்த மாலை நகைகள் எதுவும் கனக்கவில்லை. அந்த பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிறு...

கனவு பூவே வருக

வணக்கம்.. இது குடும்ப பின்னணி கலந்த குறுநாவல்.. "சோ இப்ப வர உங்க வீட்டுல யாரு கிட்டயும் விசயத்த சொல்லாம...

காதலின் மறு ஜனனம்

காதல் கதை. நாயகனின் இரண்டாம் திருமணத்தை பற்றிய கதை.

தவறிய பனிமலர்

சாப்பாடு டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சத்யனை பார்த்து விட்டாள். அடுத்த வினாடி அவளது...

கொஞ்சும் உயிரே கொத்தும் உறவே

காதலும் மோதலும் கலந்த குடும்ப கதை ,"எத்தனை வருசமா சென்னையில இருக்க?" என்று கேட்டான். காதில் விழாதது...

சொ(பொ)ல்லாத ரகசியங்கள்

பல ரகசியங்களை உள்ளடக்கிய திகில் கதை...

அஸ்தமிக்கும் பொழுதுகள்

திகிலும் மர்மங்களும் நிறைந்த க்ரைம் நாவல்

Reviews

Reviews 1

வேற லெவல் story. செம interestingஆ இருந்தது. காதல் இல்லைன்னு குறையா தோன்றவே இல்ல அந்தளவுக்கு ஒவ்வொரு எபியும் பரபரப்பா இருந்தது. ஜீவிதா அவளுடைய வாழ்க்கையைப் பற்றி கூறும் போது அப்படியொரு ஆத்திரம் அந்த குடும்பத்து மேல வந்தது இதில் அவங்க குடும்பத்தோட ஜீவிதா சேராதது தான் குறையா? அட போங்க சகி.இந்த தண்டனையெல்லாம் பத்தாது இவங்களுக்கு ஆனால் ஜீவிதா அவங்க குடும்பத்த பார்த்து கேக்கற கேள்வியெல்லாம் செம.கொலை குற்றவாளி யாருன்னு தேடறதும் கண்டுபிடிக்கறதும் சூப்பர்.உண்மையிலேயே வேற லெவல் story இது

Reviews 2

சூப்பர் கதை அக்கா வேற லெவல்...... யுவா ஆரா ஜோடி தெறிக்க விட்டிடிச்சு.....ஆரம்பத்துல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மாறி மாறி கால வாருரது எதிர்த்து எதிர்த்து பேசுறதுனு ரொம்ப ஜாலியா இருந்துது......இவங்க ரெண்டு பேர விட இவங்க ரெண்டுபேர பெத்த அந்த மனிதர் குல மாணிக்கங்கள் பண்ண அலப்பறை வேற லெவல்.....எந்த சூழ்நிலையா இருந்தாலும் ரெண்டு பேரும் யோசிச்சு நிதானமா முடிவு எடுக்குறது அவ்வளவு அழகா இருந்துது.... இவங்க நடுவுல பாவம் இம்ரான் தான் மாட்டி முழிச்சிட்டான்....சங்கவி எவ்வளவு குழப்பம் பண்ணாலும் ரெண்டு பேரும் சேர்ந்து அவ மூக்க உடைச்சு அனுப்புனதும் யுவா மேல பழிபோட சங்கவி பண்ண சகுனி வேலைய நம்பாம ஆரா யுவாமேல நம்பிக்கையா பேசினது எல்லாமே சூப்பரா இருந்துது....மொத்தத்துல இவ்வளவு நாள் காக்க வச்சதுக்கு ஒரு தரமான சிறப்பான கதைய குடுத்திருக்கீங்க...... இதே மாதிரி அடுத்து ஒரு சூப்பர் கதையோட சீக்கிரம் வாங்க....உங்க ரசிகர்கள் ஆவலா வெயிட் பண்றோம்.....

Reviews 3

சூப்பர் சூப்பர் அருமையாக அழகான கதை. இந்த கதையில் பென்சியின் கனவு சொன்னது மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.சாம் பெனியின் காதல் அன்பு பாசம் மிகவும் ரசிப்பதாக இருந்தது.சக்திவேலின் நட்பு சாமை ஜெசிகா விடமிருந்து காப்பாற்றியது நன்று.இதில் வெற்றியின் கதாபாத்திரம் அருமை அருமை.ஸ்ப்ராவின் மூலம் பெனியின் மனதை புரிந்து பெனியை தேடி வந்த சாம் அருமையாக இருந்தது.இடையில் வந்த ஜெனிபர் விஜயநந்தன் இவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் ஆனாலும் நன்றாக இருந்தது.பெனியின் அம்மா அப்பா சக்திவேலின் மனைவி சங்கீதா மகன் சந்தோஷ் அனைவரையும் மறக்க முடியாது.இதில் ஜெஸிகாவின் மனநிலை பணத்தின் மீதுள்ள பேராசை க்கு முழு காரணம் அவளுடைய தாய் தந்தை என்பது மிகவும் வருத்தமாக இருந்தது.இதில் மறக்க முடியாதது சாம் பெனி.மொத்தத்தில் கதை சூப்பர் சூப்பர் சூப்பர்.

Reviews 4

semmaya irunthuchu antha thiriling feel!!Hai sagi how are you? i hope you are fine na romba naaliku aprm oru thrill story eduthu padichen!!! semmaya irunthuchu antha thiriling feel!! muthalaye oru mudichoda tan kathaiya start pannenga!! athuku antha mudichukum namma shravya, atheeran kum oda kal iruntha connection a romba teliva thrilla soltenga engaume aduthu enna nadakam nu guess e panna mudiyala!! shaya ku yean apd kanavu varuthu, atheeran apd enna abathu, avanoda veetula iruntha marmamgal,ella vishaythaum teliva sonnenga!! ithealm yean nadakuthu aodngrathuku neenga sonna kathai unmailyile shocking a tan irunthuchugowrathukaga ivlo keela erangi seiyanuma? soundarya, shaya oda appa, amma ellarum patta kashtam romba kodumaiya irunthuchu athuku correct ama punishment a avngale kuduthathu supera irunthuchu analum shaya ku avangaloda appa, amma ku ipd nadanthathu teirnjapo unmaiyile evlo kashtama irunthurkum antha maathri nerathula avaluku romba supportive a irunthathu indrajith tan!! avanoda friendship unmailyile avlo alagu atheeran love a first kandupidichathe avan tane ana avanukum piindium oru love story irunthurkeepdiyo kadaisila ellarume happy agitanga engaume thoivu illama viruvirupa kondu poi mudichathuku parattukkal sagiintha maathri oru thrilling ana oru nalla story a kudthathuku thankssagi all the best for your future stories

Reviews 5

romba arumaiyana mudivu... sister.. enaku romba pudichu irunthuchu... Ella characters romba iyalba nija vazhkaiyila nama pakura mathiri than irunthuchu... ovoru character kum neenga kodutha vilakam .. and 100 true vana oru vishayam, amma appa thiruthama oru pilaiya vara pora ponu thiruthuva nu ninaikirathu... namala athukagava pethu padika vechu, kashta patu selavu senchu katti kodukuranga theetchi senchathu enaku thappa theriyala mathimaranum purinchikitu romba porumaiya irunthu irukan, avanukum periyaunmaiyileye ipadi oru nambargal (aadhi, harini) thangai (yasi) kidaika koduthu vechu irukanum... ivanga matume Namma vazhkaiyila iruntha kooda antha life sorgam than mothathula ipadi oru story kodutha ungaluku ... vazhthukal sister koodiya seekiram ithe mathiri oru story kaga waiting

Interview Questions

5th படிக்கும் போது ஒரு இங்கிலீஸ் கதைய அப்பா தமிழ்ல சொன்னார். அதை அப்படியே தமிழ்ல எழுதிட்டேன். அதுக்கப்புறம் தான் கதை ஆர்வம் அதிகமாச்சு. ஒரு நான்கு வருடத்துக்கு முன்னாடி திரும்ப மனசுல தோனுறத எழுதனும்னு ஆர்வம் வந்தது. அதன் விளைவு நானும் ஒரு குட்டி எழுத்தாளர்.

எழுத்துப்பிழை சகஜம் தான். எவ்வளவு‌ பெரிய உயர்ந்த எழுத்தாளரும் Proofreading பார்க்காம புத்தகத்தை வெளிவிடுறது இல்லயே. அதுனால அது தப்பு இல்ல. திருத்திக்கலாம். கருத்துப்பிழை... அது ஒவ்வொருத்தரையும் பொறுத்து மாறும். சிலருக்கு சரியா தெரியுற விசயம் சிலருக்கு தவறா படலாம். உதாரணத்துக்கு... சிலருக்கு சிகரெட் பிடிக்குறது போதை பழக்கம் எல்லாம் சாதாரணமா தெரியும். சிலரோட சூழ்நிலை அதை கொலை குற்றம் மாதிரி பார்க்க வைக்கும். அவங்க அவங்க எண்ணங்கள பொறுத்து கருத்துக்கள் மாறுபடும்.

கவிதையும் வராது கருத்தும் வராது. ஆனா எனக்கு தோன்றிய ஒரு வரி... நமக்கு பிடிச்சத செய்யும் போது அடுத்தவங்களோட பிடித்தம் பற்றி யோசிக்காம இருந்தாலே எல்லாம் சிறப்பா அமையும்.

ஆன்டி ஹீரோ.. அது என்னவோ வில்லன ஹீரோவா போட்டா கூட மனசு ஏத்துக்குது. இந்த ஆன்டி ஹீரோவ மட்டும் ஏத்துக்கவும் முடியல. எழுதவும் முடியல.

நாம சரியா தான் எழுதுறோமா? கதையோட முடிவ ஏத்துப்பாங்களா? இல்ல இன்னும் விளக்கம் கொடுக்கனுமானு தோனும். ஆனா நான் யோசிச்சத எழுதிட்டு அதுக்கு மேல தான் அதிக விளக்கம் தேவை பட்டா சேர்ப்பேன். என் எண்ணத்த மாத்திக்க மாட்டேன்.