தூரிகையின் எழுத்தாளர்கள்

Categories:

 12,198 views

Nuha Maryam

Nuha Maryam -144 posts

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும், அழுது அழுது தீர்த்தாலும் அதில் ஓரெழுத்தும் அழிவதில்லை... ✓Still a student 🙊 ✓Reader by Hobby!!! Writer by Passion ✓புத்தகங்கள் என்றாலே சிறு வயதிலிருந்து ஆர்வம். அதிலும் கதைகளும் நாவல்களும் தான் அதிகம். புத்தகம் ஒன்றை வாசிக்க உட்கார்ந்தால் சுற்றி என்ன நடந்தாலும் விளங்காது. அதிலே மூழ்கிப் போய் விடுவேன். பாடசாலை நூலகத்தில் கூட வாசகி என்றே அழைப்பர். அவ்வளவு ஒரு போதை புத்தகம் என்றால். ஒரு தடவை வாசித்தாலே மனதிலும் மூளையிலும் வேரூன்றிவிடும். சும்மா இருக்கும் சமயங்களில் எல்லாம் ஏதோ ஒரு காட்சியை கற்பனை பண்ணிக் கொண்டே இருப்பேன். என் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கவே கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுத ஆரம்பித்துள்ளேன். என்றும் உங்கள் ஆதரவை வேண்டும் நுஹா மர்யம் ❤️ Wattpad acnt : https://www.wattpad.com/user/NuhaMrym02 பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய : https://tamil.pratilipi.com/user/3n53e7208l?utm_source=android&utm_campaign=myprofile_share

மேக வாணி

மேக வாணி -136 posts

கதைகள் படிக்க/எழுத மிகவும் பிடிக்கும். படங்கள் பார்ப்பதை விட, ஒரு கதை நம் மனதின் ஆழத்தில் சென்று வேரூன்றி நிற்கிறது. எவ்வளவு காலமானாலும், நாம் விரும்பி, முழு ஆர்வத்துடன் படிக்கும் கதைகள் நம் மனதை விட்டு என்றும் அழியாது. அதிலும் நம் மனதை மகிழ்வூட்டும் கதைகள், என்றுமே மறவாது. அப்படிப்பட்ட கதைகளை சிரிப்புடனும், காதலுடனும் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் நான். சிறு வயதில் இருந்தே கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம். அதுவே இப்போது என்னை எழுத உந்தியுள்ளது. இதுவரை 14 நாவல்கள், இரு குறுநாவல்கள், நான்கு சிறுகதைகள் எழுதியுள்ளேன். இரண்டு கதைகள் புத்தகமாக வெளியாகி உள்ளது கதையை பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தோழமைகளே! megavani.writer@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். எனது முதல் புத்தகத்தை அச்சு வடிவில் பதிப்பித்துக் கொடுத்த அஜூ தெய்வானை பதிப்பகத்திற்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஷாலினி ( Shalini )

ஷாலினி ( Shalini ) -94 posts

எழுத்தை நேசிக்கும் எழுத்தாளினி 😍 பதினொன்றாம் வகுப்பில் தாளில் எழுத ஆரம்பித்துப் பின்னர், பிரதிலிபியில் எழுதத் தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவடைந்து, தற்போது நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன் ❤

சாரா மோகன்

Sara Mohan -69 posts

கடந்த இரண்டரை வருடங்களாக எழுத்துலகில் பயணிப்பவள். தமிழின் கரம் பற்றி தற்போதுதான் எழுத்துலகில் நடைபயில துவங்கி இருக்கிறேன். ஏதேனும் தவறுகள் இழைத்தால் மன்னிக்கவும்.

தமிழினியா

தமிழினியா -60 posts

எழுத்துக்களே என் சுவாசம்... வார்த்தையே என் வாழ்க்கை.... எழுத்துக்கள் எனை மாற்றிய எரிக்கற்கள்...

Meenakshi Adaikkappan

Meenakshi Adaikkappan -50 posts

நான் மீனாட்சி. மென்பொருள் துறையில் பணியாற்றுகிறேன். படித்தது உயிரித் தொழில்நுட்பம். தமிழும் கதைகளும் மிகவும் பிடிக்கும். கதைகள் படிக்க ஆரம்பித்த எனக்கு எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. அதனால் எழுத ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக கதைகள் எழுதுவது எனது தலையாய பொழுதுபோக்கு. எனது இரண்டு நாவல்கள் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. சரித்திர நாவல்கள் எழுத மிகவும் பிடிக்கும். அதற்கு தகவல் சேகரிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்பொழுது கம்போடியா அங்கோர் வாட் கோவிலைக்‌ கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு தேவையான தகவல்கள் இந்த வகுப்புகள் மூலம் பெறலாம் என்று எண்ணியே இதில் கலந்து கொள்கிறேன். வகுப்புகளைப் பற்றி இரு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் நனி நன்று. உண்மையில் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான தகவல்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வகுப்பின் இறுதியில் உள்ள கேள்வி பதில் நேரமும் எந்த வித குழப்பமும் இன்றி நடைபெறுகிறது. மூன்று மாதத்துடன் முடிந்துவிடாமல், வாழ்க்கை முழுக்க இந்த குழுவுடன் பிணைப்பு வேண்டும் என்று தோன்றும் அளவு வகுப்புகளும் தகவல்களும் இருக்கிறது. உண்மையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இணைந்து விடுவேன். நனி நன்றி!!!

மீயாழ் நிலா

மீயாழ் நிலா -32 posts

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

Bullet vedi

Bullet vedi -32 posts

வெடி புல்லட் வெடி 😁 முதல் முறையாக எழுதும் போட்டிக் கதை ..படித்து விட்டு ஆதரவு அளியுங்கள்.... ஏதேனும் குறை இருந்தாலும் கூறுங்கள் மாற்றிக் கொள்கிறேன் .

Abirami

Abirami -30 posts

என்னுடைய பெயர் அபிராமி. நான் ஒரு கணினி பொறியாளர் பட்டதாரி. இப்பொழுது பேங்க் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் ஆங்கிலத்தில் தான் கதைகள் எழுதி வந்தேன். ஆனால் தமிழ் கதைகள் படிக்க படிக்க தமிழில் எழுத வேண்டுமென ஆர்வம் வந்து கதை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய முதல் கதை இன்னும் முடியவில்லை. இரண்டாவது கதை ஒரு சிறுகதை.

kathai nila

kathai nila -21 posts

நம்மளை பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்லை கதை படிக்க பிடிக்கும் எழுத ரொம்ப பிடிக்கும் ஐ யம் அ லாக்டவுன் ரைட்டர்😜😜😜 ஆமாங்க வீட்ல சும்மா உக்கார்ந்திட்டு இருக்கப்ப எழுத ஆரமிச்ச இப்போ வேலைக்கு நடுவுலயும் எழுதுறன் அவ்ளோ ஆர்வம் வந்துர்ச்சி. நான் 5 கதை முடிச்சிருக்கன் 3 கநை ஆன்கேயிங். இந்த சைட்ல இல்ல இங்க ஒரு கதை ரன் பண்ணிட்டு இருக்க இப்போதைக்கு என்னோட கதைகள் அமெசான்லயும் கிடைக்கும் கதைநிலா தமிழ் இங்க்லிஷ் எதுலனா சர்ச் பண்ணுங்க வரும்

kiruthika Saravanan

kiruthika Saravanan -20 posts

vannakam makkale my name is kiruthikha saravanan nan BE cse paniruken enaku kadhai yeluthurathuna romba romba pidikum facebookla neraya kadhai yeluhtiruken pratipalila epo dhan yelutha strt paniruken epo engayaum yelutha poren enaku support panunga.............

தேவி கண்மணி

தேவி கண்மணி -15 posts

வளரும் எழுத்தாளர்

Aasaiprabhu Prabhaas

ஆசை பிரபா -15 posts

I'm Aasai. Native palace Madurai. I'm a Electrical Engineer. And I'm married. completed stories: Two series. And more than five short Stories. On-going Stories: Two

Nobelvin Stanley Daisy

nobelvin -14 posts

நான் ஒரு ஆசிரியை. இதுவரை ஏழு நாவல்கள் முடித்துள்ளேன் எட்டாவது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Dharshini

Dharshini -12 posts

Engage hobbies Spread positivity.

சஹானா "சனா"

சஹானா "சனா" -11 posts

கதையின் மீது தீராக் காதல் கொண்டவள்👸 என்னுடைய கதைகள் அனைத்தும் கிண்டிலில் கிடைக்கும்..... என்னுடைய கதைகளை படித்து உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் .

அஞ்யுகா ஶ்ரீ

அஞ்யுகா ஶ்ரீ -8 posts

நான் அஞ்யுகா ஸ்ரீ, முதலில் நான் ஒரு வாசகி அதற்கு பிறகு தான் ரைட்டர். ஒரு மணி நேர பஸ் பயணத்தில் ஆரம்பித்த என்னுடைய ரீடர் பயணம் தான் இன்று நான் இங்க இருக்க காரணம். எழுதுவதைவிட எனக்கு படிக்க ரொம்பவே பிடிக்கும். அந்த சமயத்தில் தான் எனக்கு எழுதினால் என்னனு தோணுச்சு, அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டு எழுத ஆரம்பித்தேன். ரெண்டு வருஷம் முழுசா முடிந்துவிட்டது. இந்த ரெண்டு வருஷத்தில், ஐந்து தொடர்கதைகள், எட்டு சிறுகதைகள் எழுதியிருக்கேன். ஆன்-கோயிங்கில் ஒன்று உள்ளது. தொடர்கதைகள். 1. என் வேரின் பந்தம் அவன். 2. அன்பே நீ புயலா? தென்றலா? 3. தணலில் பூத்த வெண்தாமரை. 4. என் எழில் மின்னலே! 5. நெஞ்சில் துஞ்சும் சாரல்! சிறுகதைகள்: "இமயம் என் இமைக்குள்" இணைய இதழ் மாதப்போட்டிக்காக கொடுத்திருக்கேன். 2. புழுதியொரு பூவாகி. 3. கல்லாய் போன மனது. இவை இரண்டும் தளத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் வெவ்வேறு போட்டிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கு.