Loading

அத்தியாயம் 96

படபடவென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதில் அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலை பரவியது. நடக்கும் கலவரம் உணர்ந்து குறிஞ்சியும் துப்பாக்கியின் மூலம் எதிரிகளை வீழ்த்த, விஸ்வயுகா எச்சிலை விழுங்கி கொண்டு அமர்ந்தாள்.

யுக்தா சாகித்யன் குண்டு தீர்ந்து போனதும், கையாலேயே தாக்கத் தொடங்கினான்.

அவனை வெறி கொண்டு கொல்ல வந்த ஒருவனை, கார் ஜன்னலில் முட்ட வைத்து ஒரு கையை பின்னால் ஏடாகூடமாக வளைத்து உடைத்தவன், ஒரு காலால் அவனைத் தாக்க வந்த மற்றவனின் குரல்வளையில் காலை வைத்து உதைத்தான்.

விஸ்வயுகாவிற்கும் கராத்தே எல்லாம் தெரியும் என்றாலும், இந்தப் பயத்தை நீக்க இயலவில்லை. கார் கண்ணாடியில் சாய்ந்தே ஒருவன் மடிந்து போக, அதைக் கண்டவளுக்கு கண்ணை இருட்டியது.

இரு பக்கமும் வந்த கயவர்கள் காரினுள் இருப்பவளை பார்வையால் கூட தொட இயலாத அளவு அரணாக நின்றவன், ஒரே நேரத்தில் கத்தியுடன் பாய்ந்தவர்களை வெறியாகத் தாக்கினான்.

அந்நிலையிலும், விஸ்வயுகாவின் மனநிலை புரிந்து, “ஏஞ்சல் கண்ணை மூடி உக்காரு…” என்று பணித்திட, படக்கென கண்ணை மூடிக்கொண்டாள்.

நந்தேஷோ, “லவ்வ சொன்னதுக்குலாமா கத்தி கடப்பாரையோட வர்றீங்க?” என செய்வதறியாமல் அதிர்ந்து நிற்க,

“நந்தா… நட்ட நடுவுல அட்டாக் பண்றதுக்கு ஏதுவா நிக்காம, ஷைலுவும் மைத்ராவும் ஓகே வான்னு பாருங்க” என்று குறிஞ்சி கூறிக்கொண்டே மற்றொருவனை அடித்தாள்.

அவனோ “உனக்கு ஹெல்ப்புக்கு…” எனும் போதே ஒரு அடியாள் அவன் முதுகில் ஏறி மிதிக்க,

“யம்மா!” என விழுகப் போனான்.

அவனைத் தாங்கிப் பிடித்த குறிஞ்சி, “‘போ’ன்னா போவேன்யா” எனக் கடிந்து கொண்டாள்.

நந்தேஷை குறிஞ்சியுடன் கோர்த்து விட்ட நிம்மதியில் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்த மைத்ரேயனைப் பிடித்துக்கொண்டாள் ஷைலேந்தரி.

அவளைப் பார்த்தும் பாராதது போல தாண்டி நடக்கப் போனவனை அவள் குரல் நிறுத்தியது.

“நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன்.”

“எதே?” விழி பிதுங்க கேட்டவன், “அதுக்குள்ளவா?” என மனத்தினுள்ளேயே நாட்களை கணக்கிட்டு, “வாய்ப்பில்லையே…” என்றான்.

“அப்போ வாய்ப்பை உருவாக்கிக்கலாமா மைதா…” எனக் கண் சிமிட்டியவளின் குறும்பிலேயே அவள் விளையாட்டைப் புரிந்து கொண்டவனுக்கு, ‘அப்பாடா’ என்றிருந்தது.

ஒரு தேனிலவு கூட இல்லாமல், தனது பேச்சுலர் வாழ்வுக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பதைபதைப்பே அவனது அதிர்விற்கு காரணம்.

“அவள் உன்னை அவ்ளோ கேவலமா நடத்தியும் உனக்கு ஹனிமூன் கேக்குதுல்ல…” மானங்கெட்ட மூளை காறித்துப்பியும் அதைக் கண்டுகொண்டானில்லை.

ஆகினும் அதனை அவளிடம் காட்டிக்கொள்ளாமல், “எதுக்குமா நானும் ஆசையா உங்கிட்ட வருவேன். விடிஞ்சதும் எல்லார் முன்னாடியும் என்னை பண்ணையார் ரேஞ்சுக்கு பாவிச்சு, வில்லனாக்கவா?” எனப் பொரிந்திட,

கிளுக்கென சிரித்தவள், “உன்னைப் போய் பண்ணையார் வில்லன் கூட கம்பேர் பண்ணுனா, அது பண்ணையாருக்கே கேவலம்டா…” என்றதில் அவனுக்கும் முறுவல் பிறந்தாலும் அடக்கினான்.

“நான் தான் சாரி சொல்றேன்ல. அன்னைக்கு நான் அப்டி பிஹேவ் பண்ணிருக்கக் கூடாது தான். மன்னிக்க மாட்டியா?” என உதடு குவித்து கேட்டவளின் மீது எப்போதோ கோபம் பறந்திருந்தது உண்மை தான். ஆனால் அந்தக் காயம் மிச்சமிருந்தது.

“என்னை லவ் பண்ணிட்டு எப்படிடி கல்யாணத்து அப்போ மேக் அப் பண்ணிட்டு அலைஞ்ச?” ஆதங்கத்துடன் அவன் கேட்க,

“அதுக்காக அழுது வடிஞ்சுட்டு இருந்தா, நாளை பின்ன ஆல்பம்ல பார்த்து கண்டுபிடிச்சுடுவீங்கள்ல அதான்” தலையை ஆட்டிக் கூறியவளை முறைத்து வைத்தான்.

“சரி அதெல்லாம் போகட்டும். திடீர்னு எனக்கு போன் பண்ணி, மேட்ரிமோனில ஒருத்தனைப் பிடிச்சு இருக்கு. அவனையே கரெக்ட் பண்ணிக் குடுன்னு கேட்ட” என்றதும் அவள் விழிகள் மின்னியது.

“ஆமா மைதா. கெளதம். கியூட் பாய்டா” என வெட்கத்தில் அங்கும் இங்கும் ஆடியவள், கட்டை விரல் நகத்தை வாயில் வைத்தவாறு, “பாரேன்… நீ செஞ்ச கலவரத்துல அந்த கியூட்டிக்கு மெசேஜ் பண்ணுனதை மறந்தே போய்ட்டேன்” என்று வேகமாக போனை எடுத்தவளின் கழுத்தைப் பற்றினான் மைத்ரேயன்.

“டேய் டேய் கொலை எதுவும் செஞ்சுடாதடா!” என அவன் கையை விடுவிக்க எத்தனிக்க,

“ஏன்டி, இங்க ஒருத்தன் உசுரைக்குடுத்து லவ் பண்ணுனா, நீ பாக்குறவனை எல்லாம் பாய் ப்ரெண்டா ஆக்குறியா? மவளே உன்னை ப்ரெக்னன்ட் ஆக்கிட்டு தான் இனி வெளில விடப்போறேன்…” எனத் தூக்கியே விட்டான்.

“அட பரதேசி… நம்ம என்ன பைவ் ஸ்டார் ஹோட்டல்லயா ரூம் போட்டிருக்கோம். இறக்கி விட்டுத் தொலை” எனக் கத்த,

“ம்ம்ஹும் யுக்தாவோட வீட்டு சாவியை வாங்குறேன். இப்பவே உன்னை சிறை பிடிக்கிறேன்” என்றான் தீர்மானமாக.

“அது ஏண்டா அத்தான் வீட்டுக்கு?”

“அவன் வீடு தான் ராசியா இருக்கு” என்றவனை ‘அடக்கருமம் பிடிச்சவனே’ என்பது போல பார்த்து வைத்தாள்.

“ஐயோ என்னை பேச விடு ராசா… நீ விஸ்வூவை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னன்னு தான் என் அம்மா சொன்னாங்க. அவங்களுக்கு என்னை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் ஆசை. உன்னை கரெக்ட் பண்ண சொல்லி என்னை டார்ச்சர் பண்ணுனாங்க. உங்க மேரேஜ்ல என்னால பிரச்சினை வந்துடுமோன்னு பயந்து, நானா தான் மேட்ரிமோனில ஒருத்தனை என் அம்மாட்ட காட்டி, அவனைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்லிருந்தேன்.

எப்படியும் உன்கிட்டயும் நான் சொன்னது உண்மையான்னு தெரிஞ்சுக்க விசாரிப்பாங்கள்ல… அதான் உனக்கும் சொல்லி வச்சேன். நீயும் விஸ்வூவும் பண்ணுன பிளான் எனக்கு எப்படி தெரியும். அப்பவே நீ விஸ்வூகிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிருக்கணும். பர்ஸ்ட் எல்லாம் நீ ஏதோ அவள் ஓடிப்போனனால வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிட்டன்னு தான் காண்டுல இருந்தேன். அப்பறமா நீ லவ் பண்ணுனது புரிஞ்சாலும், ஏதோ சம் குழப்பங்கள்ஸ். அதோட நீ வெட்கமே இல்லாம ஜல்சா வேற பண்ணிட்ட. ஒரு மாறி அழுகையா வந்துச்சு. அது ஒன்னும் நீ என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிட்டன்னு வந்த அழுகை இல்லை. உங்கிட்ட காதலை நான் சொல்லவே இல்லயே. அப்பறம் சொன்னாலும் நீ அதை பீல் பண்ணிப்பியான்னு தெரியாம, ஒரு வித ஸ்ட்ரெஸ்ல தான் அழுதேன். அதை நான் யார்கிட்ட காட்ட முடியும். உங்க கிட்ட தான காட்ட முடியும்” அவன் கையில் ஜம்பமாகப் படுத்துக்கொண்டு அவனது சட்டைப் பட்டனைத் திருகியபடி பாவமாகக் கூறினாள்.

சடுதியில் அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்த மைத்ரேயன், “லூசுடி நீ. எனக்கு உன்னை புரியுது. நானும் இந்தக் காதலை ஆரம்பத்துல இருந்து கரெக்ட்டா ஹேண்டில் பண்ணிருக்கலாம். சாரிடி!” என உள்ளம் மருக கூறிட, “அவ்ளோ சீன் இல்லைடா” என்று அவளும் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அந்நேரம் யுக்தா போன் செய்து, “மைத்ரா… அம்மா ரூம்க்கு போ. எல்லாரும் சேஃபான்னு பாரு. ஃபாஸ்ட்” என்று பேசிக்கொண்டே யாரையோ அடிப்பது புரிந்து கலவரமானனான். அதன்பிறகே மருத்துவமனைக்கு வெளியில் கூட்டம் கூடி இருந்ததே உறைத்தது இருவருக்கும்.

வேகமாக அஸ்வினியின் அறைக்குச் செல்ல, அங்கு அஸ்வினியை சமன்படுத்திக் கொண்டிருந்தார் சௌந்தர்.

“இப்ப தான் உனக்கு உடம்பு ரெகவர் ஆகிட்டுமா. ப்ளீஸ் உன்னை வருத்திக்காத”

“எப்படிங்க… என்னால தான ஏஞ்சலோட வாழ்க்கைல இவ்ளோ பெரிய கஷ்டம். எப்பவும் எங்க போனாலும் நான் இல்லாம அவள் போனதே இல்ல” எனத் துடித்தார்.

மைத்ரேயனும் ஷைலேந்தரியும் அவசரமாக அறைக்கு வந்து பார்த்து இருவரும் இன்னும் அதே பொசிஷனில் ஃபீல் செய்து கொண்டிருந்ததில் நிம்மதியாகினர்.

“செய்றதையும் செஞ்சுட்டு உக்காந்து ஒப்பாரி வைக்கிறதை பாரு…” ஷைலேந்தரி கடுகடுத்தாலும் அவளால் வெளிப்படையாக அவர் மீது கோபப்பட இயலவில்லை.

“விடு ஷைலா. ஆல்ரெடி யுக்தா ரொம்ப பேசிட்டான். நம்மளும் போட்டு ஹர்ட் பண்ண வேணாம்…” எனும் போதே பின் பக்க பால்கனி தோட்டத்தில் இருந்து இருவர் கையில் கத்தியுடன் உள்ள நுழைவது தெரிந்தது.

ஷைலேந்தரி அதிர்ந்து “மைதா அங்க பாருடா” எனப் பரபரக்க, “யாருடா இவனுங்க… லேட்டஸ்ட் துப்பாக்கிலாம் வந்தும் இன்னும் கத்தியை எடுத்துட்டு வர்றானுங்க” என்று அவசரமாக யுக்தாவிற்கு போன் செய்து கொண்டே அவர்களைத் தாக்க தொடங்கினான்.

“மூதேவி… நீயே இவனுங்களுக்கு ஐடியா கொடுக்காத…” என்று கணவனை அதட்டி விட்டு, “சித்தி சித்தப்பா நம்ம வெளில போய்டலாம்” என அவர்களை கிளப்ப, “யாரு இவங்கள்லாம்?” என இரு பெரியவரும் பதறினர்.

“யாருக்கு தெரியும். என்கிட்ட சொல்லிட்டா வந்தானுங்க” ஷைலேந்தரியும் தன் பங்கிற்கு கூறி விட்டு சௌந்தரின் முறைப்பைப் பரிசாக வாங்கி கொண்டாள்.

அஸ்வினிக்கு ஆபத்து என்றதும் யுக்தா சாகித்யன் புயல் வேகத்தில் அவர் அறைக்குள் நுழைந்து ரௌடிகளைத் தாக்கிட, அதில் ஒருவன் க்ளூகோஸ் பாட்டிலை எடுத்து யுக்தாவின் பின்னந்தலையில் எறியப் போனான்.

அதற்குள் யுக்தாவின் பின்னே வந்திருந்த விஸ்வயுகா, அதே க்ளூகோஸ் பாட்டிலால் ரௌடியின் தலையை உடைத்திருந்தாள்.

அவனை எங்கோ பார்த்தது போல தோன்ற, “நீ என் அம்மாகிட்ட வேலை பார்த்தவன் தான?” எனக் கேட்டாள் யோசனையுடன்.

அவனோ தலையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் யுக்தாவையே தாக்கப் போக, இம்முறை அவனது தலையை சுவரில் முட்ட வைத்தாள் நங்கென.

“கேட்டதுக்கு பதில் சொல்லுடா!” என அவள் கர்ஜிக்க, “ஆமா சிவகாமி மேடம் தான் எல்லாரையும் கொல்ல சொன்னாங்க. முக்கியமா இவனை… டேய் என்னடா அடி வாங்கிட்டு இருக்கீங்க. அவனைக் கொன்னு…” என்ற வார்த்தையை முடிக்கும் முன், விஸ்வயுகா அவனை ஓங்கி ஒரு அறை அறைய மயங்கியே விட்டான்.

சிவகாமி மீது கோபம் பெருக்கெடுத்து ஓடியது அவளுக்கு. யுக்தா வந்தவர்களை வீழ்த்தி விட்டு, காவலர்களை வரவழைத்து அவர்களை ஒப்படைத்தான்.

கலவரங்கள் ஓய்ந்த நிலையில், கேன்டீனில் இருந்து உணவு அவர்கள் அறைக்கு வந்தது.

நந்தேஷ் அஸ்வினியின் சோர்வைக் கண்டு, “ரொம்ப லேட் ஆகிடுச்சு. சாப்பிட்டு டேப்லட் போடுங்க சித்தி” என்றிட, அவருக்கு அவ்வழைப்பு உயிர்வதை தந்தது.

இத்தனை வருடங்களும் இந்த வலிக்கு பழகி இருந்தவர் தான். ஆனால் உண்மை தெரிந்தும் அவன் தன்னை விலக்கி வைப்பது ஊசியாக குத்தியது.

யுக்தா அவர் புறம் திரும்பக்கூட இல்லை. மிகவும் நொந்து போனார்.

தமையனையும் தன்னவனையும் முறைத்த விஸ்வயுகா, கேரியரில் வந்த உணவை எடுத்து பிரித்து, ஒரு தட்டில் வைத்தாள்.

சாம்பாரைப் பிரிக்கும் போது, லேசாகக் கைகளிலும் சிந்திட, சூடு சற்று குறைவாக இருந்ததால், அதனைப் பொருட்படுத்தாமல் எடுத்திட, யுக்தா விருட்டென அவளருகில் வந்தான்.

எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளைத் தடுத்தவன், “நகரு” என்றிட, “ஏன் நீயே குடுக்கப் போறியா?” என்றவளுக்கு பதில் கூறாது, சாம்பாரை கரண்டி வைத்து அளந்து பார்த்தான்.

“சகல பசிச்சா, எடுத்து சாப்பிடு. அதை விட்டுட்டு ஏன் சாம்பார்ல பிரியாணி கிண்டிட்டு இருக்க?” மைத்ரேயன் வாரியதில் அவனை முறைத்தவன், பேண்ட் பாக்கெட்டில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் கிளவ்ஸை அணிந்து கொண்டு சம்பாரினுள் கையை விட்டுப் பார்த்தான்.

ஷைலேந்தரி முகம் சுளித்து, “என்ன அத்தான்… விட்டா லேப்ல டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு தான் சாப்பிட தருவீங்க போல” எனக் குழம்ப,

“குறிஞ்சி, டேக் இட் டூ தி லேப்” என உத்தரவிட்டதில் அவள் பரபரப்பாக வேலை செய்தாள்.

அத்தியாயம் 97

விஸ்வயுகா விழித்தபடி நின்றதும், அவன் அடுத்த டிஷை சோதித்தபடி, “போய் கையை ஹேண்ட் வாஷ் போட்டுக் கழுவு… கோ ஃபாஸ்ட்” என்று அவளுக்குப் பணிக்க, ‘என்ன இவன் ஹாஸ்பிடல்ல இருந்து ப்ரொவைட் பண்ற ஃபுட் எல்லாம் டவுட் பண்றான்’ என்றெண்ணியவாறு, “இங்க ஃபுட் சேஃப்ட்டி எல்லாம் பக்காவா தான் இருந்துச்சு யுகி. நான் இடைல கூட போய்…” என்று கூறி முடிக்கும் முன்,

“நான் சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா. உன்னைப் போன்னு சொன்னேன்” என அதட்டிட,

“ரொம்பத்தான் ஆபிஸரா இருக்கான் இவன்…” என்று முணுமுணுத்தபடி கையைக் கழுவி வந்தாள்.

அவள் வந்ததும், சானிடைசரைக் அவள் கைகளில் தேய்த்து விட்டவன், யோசனையிலேயே இருக்க, “என்னடா?” என்றாள்.

“ஃபுட்ல பாய்சன் கலந்துருக்கு…” என்றதில் அனைவருமே அதிர்ந்தனர்.

“சாப்பிடாமலே எப்பிடிடா தெரியும்” நந்தேஷ் கேட்டதும், “இந்தா சாப்பிட்டு பாக்குறியா?” என ஒரு டிபன் பாக்ஸை எடுத்து நீட்டிட, “வேணாம் வேணாம்” என மிரண்டான்.

“என்ன பாய்சன்… என்கிட்ட இருந்ததையும் சித்தப்பாகிட்ட இருந்ததையும் ரெகவர் பண்ணிட்டியே?” விஸ்வயுகா கேட்டதும்,

“இது சீரியல் கில்லர் யூஸ் பண்ற ஸ்லோ பாய்சன். இதை யூஸ் பண்ணி தான் அவன் பொண்ணுங்களைக் கொன்னுருக்கான்” என்றான் தீவிரமாக.

“ஓ! ஃபுட்ல யூஸ் பண்ற ஸ்லோ பாய்சன் பத்தி நான் படிச்சு இருக்கேன். ஆனா அது சாப்பாடு ஏன் தண்ணி கூட டிசால்வ் ஆகிடும். அதுல பாய்சன் இருக்குனு சும்மா பார்த்து ஃபைண்ட் அவுட் பண்ண முடியாதே யுகி” விஸ்வயுகா கேட்க,

“கரெக்ட் தான். சாப்பாடுல மட்டும் இல்ல… பொண்ணுங்க யூஸ் பண்ற காஸ்மெடிக்ஸ், டவல் எதுல வேணும்னாலும் அப்ளை பண்ணலாம். அப்படி காஸ்மெடிக்ஸ் ப்ராடக்ட்ல ஸ்லோ பாய்சன கலந்து தான் கில்லர் கொலை பண்ணிருக்கான். சில கொலைகளை சாப்பாட்டுல கலந்தும் செஞ்சுருக்கான். அவன் யூஸ் பண்ணுன பாய்சன் மல்டி லெவல்ல ஒர்க் ஆகும். அதோட நேம் வெளில அவுட் பண்றது கூட டேஞ்சர்!

ஆனா சாப்பாடுல கலந்த இந்த விஷத்தை ஒரு சின்ன க்ளூ வச்சு கண்டுபிடிக்கலாம். இது முரளி சொன்ன பாய்ண்ட். பொதுவா சாம்பாரோ குழம்போ கரண்டில எடுத்து மேல இருந்து ஊத்தும் போது நுரை வரும் அல்லது அலை அலையா வரும். ஆனா விஷம் கலந்திருந்தா அதுல நுரை எழும்பாது. ஒரு சின்ன ட்ரிக் இது. இப்போதைக்கு இதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ற மருந்து கூட கிடையாது. ஆனா இத எங்க இருந்து எப்படி ப்ரொடியூஸ் பண்றாங்கன்ற இன்வெஸ்டிகேஷன்க்கு விடை என்னவோ ஸீரோ தான்” என யுக்தா கூறியதும்,

“ருமேனியால இருக்குற ஹோயா பாயுசி காடுல இருந்து இதைத் தயாரிக்கிற மூலிகையை ரொம்ப இல்லீங்களா ரொம்ப ரொம்ப ப்ரைவேட்டா எடுத்து தயாரிக்கிறாங்க இருக்காங்க. மறைமுகமா அந்த நாட்டோட கவர்மெண்ட்டும் இதுக்கு ஹெல்ப் பண்றாங்க” விஸ்வயுகா பளிச்சென கூறியதும் யுக்தாவின் விழிகள் விரிந்தது.

“ஆக்சுவலி நான் படிச்ச புக்ல என்ன என்ன பாய்சனை எங்க இருந்து ப்ரொடியூஸ் பண்றாங்க. அதுக்கான மாத்து மருந்து என்ன… இது எல்லாமே விலாவாரியா இருந்துச்சு. என் கெஸ் க்ரெட்ன்னா, சைன்டின்ஸ் பாஜி இதை பத்தின ரிசர்ச்ல முழுசா இறங்கும் போது, கில்லர் அவர் கூட இருந்துருக்கனும். அவர்கிட்ட வேண்டிய தகவலை எடுத்துக்கிட்டு அவரைக் கொலை பண்ணிருக்கலாம் இல்லனா நேச்சுரல் டெத்தாவும் இருக்கலாம்” என்றவளை அள்ளி அணைத்துக் கொண்ட யுக்தா சாகித்யன், “ஸ்மார்ட்டுடி நீ!” என்று கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“ம்ம்க்கும்” இளையவர்கள் மூவரும் வேறு புறம் திரும்பிக்கொள்ள, ஷைலேந்தரி தான், “என்னமோ இந்த அம்மா யூனிவர்சிட்டில ரேங்க் ஹோல்டர் வாங்குன ரேஞ்சுக்கு புகழுறாரு. அவளே எப்படி கொலை செய்வது? எதை வச்சு கொலை செய்றதுன்னு பாடம் எடுத்துட்டு இருக்கா” என முணுமுணுத்தாள்.

அஸ்வினியும் சௌந்தரும் ‘பே’ வென விழிக்க, யுக்தாவோ “அப்போ நீ யூஸ் பண்ணுன பாய்சனுக்கும் ட்ரீட்மெண்ட் பண்ற மருந்து இருக்கா?” எனக் கேட்டதும், அவன் முரட்டு இதழின் ஈரம் பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்து சிவப்பை அடக்கியபடி,

“ம்ம் இருக்கு. ஆனா அதை கலெக்ட் பண்றது கஷ்டம். அதே போல எல்லா விதமான ஸ்லோ பாய்சனுக்கும் மாத்து மருந்து இருக்கு. அழிவுன்னு ஒன்னு இருந்தா ஆக்கம்னு ஒன்னு இருக்க தான் புருஷா செய்யும்” எனக் கண்சிமிட்டினாள்.

அவளை ரசித்திருந்தவனை அவளும் ரசித்தபடி, “பட், உடனே இந்த மாத்து மருந்தை ரெடி பண்ண முடியாது. அதுலாம் எங்க கிடைக்கும்னு அந்த புக்ல விலாவாரியா இல்லை. மே பி அதே புக்ல செகண்ட் பார்ட் வந்திருந்தா அதுல இருக்கலாம்” எனும் போதும் இருவரின் விழிகளிலும் காதல் வழிந்திட, மைத்ரேயன் ஷைலேந்தரி காதில் ஓதினான்.

“என்னமோ ரொமான்டிக் டாக் பேசுற மாதிரி ரெண்டும் எவ்ளோ பில்ட் அப் குடுக்குதுங்க பாரேன்.”

ஷைலேந்தரி “கிளுக்” என நகைத்திட, அவளைத் திரும்பி ஒரு முறை முறைத்த யுக்தாவைக் கண்டதும் அட்டென்சன் மோடில் நின்று கொண்டாள்.

“சித்தப்பா இனி ஹாஸ்பிடல்ல இருக்குறது சேஃப் இல்ல. வீட்டுக்குப் போய்டலாம். மெடிகேஷன்ஸ் என்னன்னு நான் கேட்டு சொல்றேன்” என சௌந்தரிடம் கூறினான்.

“அப்போ சென்னைக்குப் போகலாமா?” சௌந்தர் கேட்டதும், அவரை பார்வையால் எரித்தவன் “மைத்ரா நான் நந்துவையும் குறிஞ்சியையும் கூட்டிட்டு சென்னைக்குப் போறேன். நீ மத்தவங்களை குவார்ட்டஸ்ல தங்க வை. என் அனுமதி இல்லாம நோ அவுட்சைட் ஃபுட்ஸ், நோ ஆன்லைன் ஆர்டர், அண்ட் நோ அவுட்டிங்…” என்று விஸ்வயுகாவையும் பார்த்து கண்டிப்பாய் கூற,

“ஆமா அப்படியே அவுட்டுங்கு. நீ வந்த நாள்ல இருந்து க்ரைம் சீன்க்கு தான் ட்ரிப்க்கு போற மாதிரி போயிட்டு இருக்கோம்” என சிலுப்பிக் கொண்டாள்.

உள்ளுக்குள் பூத்த குறுநகையை மறைத்துக் கொண்ட யுக்தா, “பீ சேஃப்” என மீண்டுமொரு முறை கூறி விட்டு, நந்துவையும், லேபில் இருந்து உணவில் கலந்திருந்தது விஷம் தான் என அறிந்தபின்னே விமானநிலையத்திற்கு வந்த குறிஞ்சியையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு விரைந்தான்.

நந்தேஷ், “இப்ப மறுபடியும் எதுக்கு சென்னைக்கு வந்துருக்கோம் யுக்தா?” எனக் கேட்க,

“உன் அம்மாவை கொலை பண்ண சொல்லி, உன் தங்கச்சிங்களை சீரழிக்க அடித்தளம் போட்டவனைப் பார்க்க வேணாம்” எனக் கேட்டவனின் விழிகளில் தீஜுவாலை எரிந்தது.

அதிர்ந்து போன நந்தேஷின் முகத்திலும் கோபத்தின் சாயல்.

“எந்த பரதேசி அவன்?” குமுறலுடன் நந்தேஷ் கேட்டதும், யுக்தா குறிஞ்சியைப் பார்க்க, அவள் மனதை திடப்படுத்திக்கொண்டு நந்தேஷிடம் ஒரு வீடியோவைக் காண்பித்தாள்.

அதனைக் கண்ட நந்தேஷ், “இது அந்த சம்பவம் நடந்த அன்னைக்கு வீட்ல இருந்து மூணு பேரும் கிளம்புற ஃபுட் ஏஜ் தான?” எனக் கேட்க,

“ம்ம்” எனக் கண்ணசைத்த யுக்தா, “உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்த சிசிடிவி பதிவானது. ரெக்கார்டாட் கேமரான்றதுனால உடனே தூக்கியாச்சு”

“இதுல என்ன இருக்கு?”

மீண்டும் நந்தேஷ் புரியாமல் விளங்க, “இவனுக்கு நீ டைரெக்ட்டா சொல்லிருந்தாலே புருஞ்சு இருக்காது யுக்தா” அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறைந்து குறிஞ்சி சிரித்து விட்டிருக்க, யுக்தா அவன் தலையில் தட்டி அப்படியே “உன் அம்மா மாதிரி தத்தியா இருக்காத… நல்லா உத்துப்பாரு” எனக் கடிந்தான்.

வார்த்தைக்கு வார்த்தை அஸ்வினியை தனது அம்மா என்று அழுத்திச் சொல்லியது ஒரு வகையில் வலித்தாலும் ஒரு வகையில் இனிக்கவும் செய்தது.

மறுபடியும் வீடியோவை நன்றாகப் பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.

“யுக்தா… நிஜமாவா? ஆனா ஏன்?” மனம் வலிக்க அவன் கேட்க, “அதுக்கு அந்த ஆளையே பதில் சொல்ல சொல்லலாம்” என்றான் கோரமுகத்துடன்.

சிவகாமி இங்கு கடும் கோபத்துடன் நாச்சியப்பனிடம் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

“நம்மகிட்ட வேலை பாக்குற ஆளுங்க எல்லாம் வெத்து வெட்டா இருக்காங்கண்ணா. போய் அடி வாங்கிட்டு வர்றதுக்கா வளர்த்து விட்டோம். இடியட்ஸ்… அந்த யுக்தாவைக் கொன்னுட்டு வர சொன்னா, அடி வாங்கிட்டு வந்துருக்கானுங்க” என்றார் ஆத்திரத்துடன்.

நாச்சியப்பனோ, “அமைதியா இருமா. இப்ப அவன் சென்னைக்கு வந்துருக்குறதா தகவல் வந்துருக்கு… இங்கயே முடிச்சு விட்டுடுறேன்” என நக்கலாய் சிரிக்க,

“முடிங்களேன் பாப்போம்” என்ற குரலில் நிமிர்ந்தார் நாச்சியப்பன்.

அவர் முன்னே ஆறடி ஆண்மகனின் கம்பீரத்தையும் ஒன்றாய் திரட்டி விழிகளில் எரிமலை உருவெடுக்க எமனாய் நின்று கொண்டிருந்தவனை முற்றிலும் எதிர்க்கவில்லை என்பது அவரது அதிர்விலேயே தெரிந்தது.

யுக்தாவின் குரல் அலைபேசி வழியே கேட்டதில், “அண்ணா அவனை அங்கேயே கொன்னு போடுங்க…” என்று சிவகாமி கட்டளையிட, நாச்சியப்பனின் நடுங்கும் கரத்தில் இருந்து அலைபேசியை வாங்கிய யுக்தா,

“ஹெலோ அத்தை…” என்றான் பாசமாக.

“யாருக்கு யாருடா அத்தை?” அவர் சீறினார்.

“எல்லா முறையிலயும் நீங்க எனக்கு அத்தை தான அத்தை. சரி அதை விடுங்க. உங்க பொண்ணை ரேப் பண்ண ஆள் செட் பண்ணவங்ககிட்ட இவ்ளோ குழாவுறீங்களே… ஒருவேளை உங்களுக்கும் அதுல பங்கு இருக்கோ? ம்ம்?” என வெகு கேலி போன்று குத்த, சிவகாமி ஆடிப்போனார்.

“என்… என்ன சொல்ற?” கேட்கும்போதே நாக்கு தந்தியடித்தது.

நாச்சியப்பன் எழுந்து அங்கிருந்து வெளியேற முற்பட, குறிஞ்சி அவர் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினாள்.

நந்தேஷ் அவர் கையைப் பற்றி அமர வைத்து, “மவனே இடத்தை விட்டு அசைஞ்ச. நானே முடிச்சு விட்டுடுவேன்” என்று மிரட்டினான்.

இங்கோ யுக்தா “என்ன அத்தையாரே… சத்தமே காணோம்!” மீண்டும் நக்கலாகக் கேட்க,

“நீ… நீ… நிஜமா… நிஜமாவா?” நம்பிக்கையற்று கேட்டவருக்கு தலையே சுற்றியது.

தனது தமையனே தன் பெண்ணை… நினைக்க நினைக்க ஆத்திரம் எழுந்ததோடு துரோகம் அவரை வதைத்தது.

அலைபேசியை துண்டித்து விட்ட சிவகாமிக்கு செய்வதறியாத நிலை.

யாருடனோ போனில் பேசியபடி அங்கு வந்த மோகன், “சிவகாமி நீ கவலைப்படாத. யுக்தா சென்னைல தான் இருக்கான். அங்கேயே அவனைக் கொல்ல ஆள் செட் பண்ணிட்டேன். இங்க அஸ்வினியும் சரி என் தம்பியும் சரி உயிரோட இருக்க மாட்டாங்க. நம்ம பசங்களை கூட்டிட்டு சென்னைக்குப் போறோம் சரியா?” என மனையாளுக்காக தனது தம்பியையே கொலை செய்யத் துணிந்தார்.

சிவகாமி பேச்சற்று நிற்க, “சபாஷ்!” எனக் கை தட்டினாள் விஸ்வயுகா.

அவள் முகமே சினத்தில் சிவந்து இருந்தது. “குட் மம்மி குட் டேடி. அதெப்படி யாருக்குமே பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையை உங்களால வாழ முடியுது?”

“விஸ்வா” மோகன் அதட்டிட, “ஷ்ஷ்” என வாயில் கை வைத்தவள், “பேசிட்டு இருக்கேன்ல சத்தம் வரக்கூடாது” என்றாள் அகங்காரமாக.

அத்தியாயம் 98

]சிவகாமியின் கையைப் பற்றிக்கொண்டவள், அவரது விரல்களுக்கு மெல்ல சொடுக்கெடுத்தபடி, “ஒரு அப்பாவி ஜீவன் என்னமா பண்ணுச்சு உங்களை. உங்க ஸ்டேட்டஸ்ல இல்லைன்னு சொல்லி, இத்தனை வருஷமா சித்தியை நரகத்துல வாழ விட்டு இருக்கீங்க… நீங்க அவங்ககிட்ட கடுமையா பேசுறதும் அவங்க உங்ககிட்ட பயப்படுறதும் வெறும் பேமிலி பாலிடிக்ஸ்னு நினைச்சேன். ஆனா எவ்ளோ குரூரமா ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடி இருக்கீங்க. எந்த தப்பும் செய்யாத என் யுக்தாவை ஏன்மா அனாதையாக்குனீங்க? அவனை ஏன் தண்டிச்சீங்க?” என அடிக்குரலில் இருந்து சீறியபடி அவரது ஒரு விரலை ஒடித்தாள்.

சிவகாமி கத்தி கதற, மோகன் “ஏய்” என அவளைத் தடுக்க எத்தனிக்க அவர் காலை தனது ஹீல்ஸ் செருப்பால் குத்தியவள், “பெத்த அப்பா அம்மாவை ஹர்ட் பண்ண மாட்டேன்னு கனவு கூட காணாதீங்க. நீங்க செஞ்ச, இப்ப செஞ்சுட்டு இருக்க வேலைக்கு என்னைத் தவிர வேற யாரும் உங்களுக்கு தண்டனை குடுக்க முடியாது. நீங்க செஞ்ச வினை முழுக்க முழுக்க பாதிச்சது. என்னை… என்னை மட்டும் தான்” சொல்லும்போதே குரல் உடைந்து மீண்டது அவளுக்கு.

சிவகாமியின் அடுத்த விரலுக்கு சென்றவளை மிரட்சியுடன் பார்த்தார் சிவகாமி.

கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலான காட்டுமிராண்டித்தனம் அவள் முகத்தில். இத்தனை வருடங்களாய் அமிழ்ந்து போன அழுத்தத்தின் வெளிப்பாடு இந்த சீறல்.

“டென் ஸ்டார் ஹோட்டல், பிசினஸ், ரெப்புட்டேஷன் இதெல்லாம் வச்சு உங்க பொண்ணை நாலு பேர் கற்பழிச்சதை கூட மறைச்சு அவனுங்களைக் கண்டுபிடிக்க கூட முயற்சி எடுக்காத ஒர்ஸ்ட் அம்மா நீங்க.

வெளில தெரிஞ்சா உங்க மானம் போய்டும்னு, சித்தி ஆக்சிடெண்ட்ல இறந்தாங்கனு என்னையவே சொல்ல வச்சீங்கள்ல” என்றபடி மற்றொரு விரலை ஒடிக்க, சிவகாமிக்கு கண்ணை இருட்டியது.

ஐய்யனாராய் தோரணையுடன் நாச்சியப்பன் அமர்ந்திருந்த சோபாவின் மீது காலை வைத்து, அவரை கொலை வெறியுடன் பார்த்தான் யுக்தா சாகித்யன். தன் உயிரானவளின் ஒட்டுமொத்த வலிக்கும், தனது தாயின் இத்தனை வருட வெறுமை வாழ்க்கைக்கும் காரணியாவரை துன்புறுத்தவே ஒவ்வொரு செல்லும் விரும்பியது.

அவர் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலையும் நீவி விட்டவனை பயப்பந்து உருள பார்த்தார் நாச்சியப்பன்.

“எவ்ளோ தைரியம் இருந்தா மினிஸ்டர் வீட்டுக்குள்ள நுழைஞ்சு அதிகாரம் பண்ணுவீங்க” சொல்லும்போதே காற்று தான் வந்தது.

அவரைக் கண்டு ஒற்றைப்புருவம் உயர்த்தியவன், பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த கட்டிங் ப்ளேடை எடுத்தான்.

அதைக் கண்டதும் நாச்சியப்பனுக்கு இதயமே வலிக்க ஆரம்பித்து விட்டது.

“யுக்… யுக்தா வேணாம்… என்ன… என்ன பண்ண போற?”

“நான் என்ன கேக்கப்போறேன்னு உனக்குத் தெரியும். பதில்!” அவனது நிதானமான முக பாவனை அவரை அச்சுறுத்தியது.

“இங்… இங்க பாரு… என் என் பொண்ணுன்னா எனக்கு உசுரு. அவளைக் கனடாவுக்கு அனுப்பி விட்டதே சிவகாமி தான். அவளுக்குள்ளே வெளிநாட்டு ஆசையை விதைச்சதும் அவள் தான். சரி திரும்பி வந்தாவது என் பொண்ணா இருப்பான்னு நினைச்சேன். எவனையோ காதலிக்கிறேன்னு நின்னா… என் பொண்ணோட பிடிவாதம் என்னை அசைச்சுச்சு. அவனையே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சப்ப சிவகாமி என்னைத் தடுத்தா. போயும் போயும் ஒன்னும் இல்லாதவனுக்கா பாரீன்ல படிச்ச பொண்ணை குடுப்பன்னு…

அதுக்கு அப்பறம் அவளையும் சரி கட்டுனா. அவளுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளையவே தேடுனேன். ஆனா இந்த விஸ்வா… அவளோட மேட்ரிமோனினால அங்க இருந்து மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்ததுனால என் பொண்ணு செத்தே போய்ட்டா. அதுவும் அவள் கண்ணு முன்னாடியே விபத்து நடந்தும், என் பொண்ணை காப்பாத்தாம விட்டவ மேல எனக்கு வெறியே வந்துச்சு” என்னும் போதே அவரது கட்டை விரல் ஒன்றைத் துண்டாக்கினான்.

“ஆஆ” வலியில் துடித்த நாச்சியப்பனை அதே நிதானத்துடன் பார்த்தவன், “அடுத்து?” என்றான் புருவம் சுருக்கி.

“விடு… விடு” எனகே கையை உதற முயல, “உன்னோட ஒவ்வொரு சதையையும் வெட்டி எடுக்குறதுக்குள்ள முழுசா சொல்லிடு நாச்சியப்பன்… “ம்ம்” சிங்கத்தின் கர்ஜனை அவனது அதட்டலில்.

உதடு துடித்தது அவருக்கு. பயத்தில் குரல் நடுங்கியது.

“சிவகாமி குடும்பத்தையே பழி வாங்க நினைச்சேன். அஸ்வினியைக் கொன்னுட்டு அவ தான் நந்தேஷோட உண்மையான அம்மான்னு இவனை அவள் மண்டையைக் கழுவி சிவகாமிக்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சேன். ஷைலுவையும் விஸ்வாவையும் ரேப் பண்ண வச்சு, அந்தக் குடும்பத்தோட மானத்தை சந்தி சிரிக்க வைக்க நினைச்சேன். ஆனா நான் நினைச்சது முழுசா நடக்கல. அஸ்வினி செத்ததையும் விஸ்வாவுக்கு நடந்த ரேப்பையும் சிவகாமி மறைச்சுட்டா. அது நான் நினைச்ச அளவு பூகம்பமா வெடிக்கல” என்றவரின் மற்றொரு விரல் பிய்ந்து குருதி தெறித்து கீழே விழுந்தது.

சிவகாமிக்கு மகளின் செயலில் அச்சமும் ஆத்திரமும் ஒருங்கே தோன்றியது.

“அந்த யுக்தா அஸ்வினியோட சொந்தம்னு தெரிஞ்சுருந்தா நானே சுனாமியை வரவச்சு கூட கொன்னுருப்பேன்” என வலியில் உளறித்
தள்ள, நடு விரலையும் ஒடித்தவள் “அப்படி நடந்துருந்தா வெறும் விரலை உடைச்சு இருக்க மாட்டேன். உன் எலும்பு ஒன்னொண்ணையும் உடைச்சு காய்லாங்கடைக்கு போட்டுருப்பேன்” வெறிகொண்டு விளாசினாள் அவள்.

நாச்சியப்பனோ, “விஸ்வா நார்மலா நடமாடுனது எனக்குப் பிடிக்கல. எரிச்சலா இருந்துச்சு. அவளை ஏதாச்சு செய்யணும்னு அவ்ளோ வெறி வந்தும் ஒன்னும் செய்ய முடியல. ஆனாலும் அவள் உள்ளுக்குள்ள வெந்து போனதுல என் பொண்ணு நிம்மதியா இருக்கறதை உணர்ந்தேன். இப்பவும் நீ என்னை கொன்னாலும் பரவாயில்ல. நான் நினைச்ச மாதிரி என் பொண்ணோட இறப்புக்கு காரணம் ஆனவளை இனி காலம் முழுக்க மறக்கவே முடியாத மாதிரி செஞ்சுருக்கேன்” அரை மயக்கத்தில் முனகியவரின், விரல்கள் அனைத்தையும் அதீத கோபத்தில் நறுக்கினான் யுக்தா.

“காலம் முழுக்க மறக்க முடியாத மாதிரி எந்த வடுவையும் நீ அவளுக்கு கொடுக்கல. நான் இருக்குற வரை அவளை எந்த வடுவையும் தாங்க விட்டு அதோட வாழ விட மாட்டேன். எல்லாம் சரி… ஆனா உன் பொண்ணு அவளால சாகல” என்றதும் குருதி வழிய கண்கள் சொருகிப் போனவர் மெல்ல விழித்தார்.

“என்… என்ன?”

“அவள் செத்தது உன்னால…” யுக்தா ஏளனமாகக் கூறியதும் அரை உயிராய் இருந்தவருக்கு நெஞ்சம் பதைபதைத்தது.

“புரியல. நீ தான் இதெல்லாம் செஞ்சன்னு தெரிஞ்சதுமே அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகிடல. ஆனா, உன் பொண்ணை வேற ஒருத்தன் கொன்னுருக்கான். அதோட தொடர்ந்து பல பொண்ணுங்களை கொன்னுட்டு இருக்கான். இதுக்கு காரண கர்த்தா நீ. உன்னோட பணத்திமிரு. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, உன் கட்சில மூத்த உறுப்பினரா, கவுன்சிலரா உன்னோட சில சொத்துகளுக்கு பினாமியா இருந்தவாறு ராஜமூர்த்தி. ஞாபகம் இருக்கா?” என இழிவாய் இதழ் வளைத்துக் கேட்க, நாச்சியப்பனுக்கு அதிக இரத்த போக்கில் உணர்வே இல்லை.

ஆகினும் யுக்தாவின் குரல் அவர் காதில் கேட்டுக்கொண்டே இருக்க, கண்கள் பாதி திறந்திருந்தது.

“அந்த ராஜமூர்த்தியோட பையன் உன் பொண்ணை விரும்பி இருக்கான். சோ ராஜமூர்த்தி உங்கிட்ட தரகர் மூலமா பொண்ணு கேட்டுருக்காரு. பட் நீ என்ன சொன்ன?” கதை கூறுவது போல அவரின் கன்னத்தை அழுத்தமாகப் பற்றியவன், “அவரை நேரா வர சொல்லி உன் தகுதிக்கு என் பொண்ணு கேட்குதாடான்னு அவமானப்படுத்தி அனுப்புனதும் இல்லாம, கேவலம் என் கட்சில கவுன்சிலரா இருக்குறவனுக்கு இவ்ளோ தைரியமான்ற அகம்பாவத்துல அவரை ஒரு பொய் கேஸ்ல மாட்டி ஜெயிலுக்கு அனுப்ப வச்சுருக்க. ராஜமூர்த்தியும் அவமானம் தாங்காம ஜெயில்லயே சூசைட் பண்ணிட்டாரு.

இதெல்லாம் கேட்டு கொதிச்செழுந்த அவரோட பையன், ஆல்ரெடி மனசளவு ஒரு வீக் பெர்சன். அதுக்கு அப்பறம் உன் பொண்ணுக்கு மேட்ரிமோனி மூலமா கிடைச்ச ஒரு ஹை ஃபை பையனை ஃபிக்ஸ் பண்ணிட்ட. சோ அந்த சைக்கோ பையன், மேட்ரிமோனி மேலயே கொலைவெறியாகிட்டான். உன் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவு நல்லா வாழ்ந்த குடும்பம் தான். என்கிட்ட படிப்பு இருக்கு வேலை இருக்கு என்னை ஏன் ரிஜெட்க் பண்ணணும்ன்ற வெறி அவனுக்கு. எல்லாமே கொஞ்ச கொஞ்சமா அவனை சைக்கோவா மாத்திடுச்சு. விளைவு… உன் பொண்ணை ஆக்சிடெண்ட்னு பிரேம் பண்ணி ஸ்லோ பாய்சன் குடுத்து கொன்னுருக்கான். ஒருவேளை என் ஏஞ்சல் அன்னைக்கு நடந்த விபத்தை தடுத்து இருந்திருந்தா கூட உன் பொண்ணு செத்துருப்பா. ஏன்னா, அவள் விபத்துனால சாகல. உன் பணவெறினால செத்துருக்கா…” எனும்போதே நாச்சியப்பனின் முக்கால்வாசி மூடி இருந்த விழிகளில் வழியே கண்ணீர் வழிந்தது.

இந்தக் கதையெல்லாம் நந்தேஷிற்கும் புதிது.

“அடப்பாவி உன்னை என்னைக்காவது மாமான்ற மரியாதைல இருந்து நாங்க இறக்கி பேசி இருக்கோமா? அதெல்லாம் உன் பதவிக்காக இல்ல. எந்த நிலைமைலயும் நீ எங்களுக்காக சிவகாமிக்கு எதிரா வந்து கூட பேசுவ. உன் மேல எங்களுக்கு தனி அன்பும் இருந்துச்சு. விஸ்வூ… அவளுக்கு ஒரு விஷயம் ஆகணும்ன்னா கூட மாமான்னு உன்னை தான தேடுவா. அவளோட நம்பிக்கைக்குரியவங்கள்ல முதல் ஆளா நீ இருப்பயா. அப்படிப்பட்ட பொண்ணுக்கு எப்பேர்ப்பட்ட வலியைக் குடுத்து இருக்க…” என்னும் போதே நந்தேஷின் உள்ளம் உடைந்து அழுதது.

நாச்சியப்பன் அப்படியே சோபாவில் சரிந்திருக்க, உண்மை தெரிந்த மாத்திரத்ததில் குற்ற உணர்வின் வீரியத்தில் குருதி இழந்த உடலில் உயிர் இருக்க மறுத்து பறந்திருந்தது.

சிவகாமி வலியில் துடித்திருக்க, “நீ செஞ்ச எல்லா தப்புக்கும் தண்டனை ஏன் எனக்கு மட்டும்? என் யுகியை நான் காதலிச்சதை தவிர வேற என்ன தப்பு செஞ்சேன். அவன் கூட வாழனும்னு நினைச்சேன். காலம் முழுக்க அவன் கூட குத்தலோட நான் வாழனும்ல?” எனும்போதே ஒரு கையில் ஐந்து விரல்களும் மடமடவென ஒடிக்கப்பட, அவளையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயனை திரும்பி பார்த்தாள்.

“போலீஸ் கீழ வெய்ட் பண்றாங்க!” என்றான் வேகமாக.

“உங்களுக்கு எதிரான ஆதாரம் எல்லாம் பக்காவா ஃபைல் பண்ணியாச்சு. இனி யார் நினைச்சாலும் உங்களைக் காப்பாத்த முடியாது. நீங்க செஞ்ச தப்புக்கு எல்லாம் ஆதாரம் கிடைக்கலைன்னாலும், செய்யாத தப்புக்கு நானே ஆதாரம் ரெடி பண்ணிருக்கேன். புரியல… எனக்கும் சித்திக்கும் நடந்த கொடுமைக்கு காரணமே நீங்க தான்னு ப்ரூவ் பண்ணிருக்கேன்” எனத் திட்டவட்டமாக உரைக்க இருவரும் உறைந்தே விட்டனர்.

அவர்களை காவலர்கள் கைது செய்ததும், தலைப்புச் செய்தியாகவும் இதுவே ஓடியது.

குறிஞ்சி இறந்து போன நாச்சியப்பனை அமைதியாய் பார்த்து விட்டு துப்பாக்கியை அவரை விட்டு இறக்கிட, நந்தேஷ் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது.

ஷைலேந்தரி தான் அனுப்பி இருந்தாள். அதைக் கண்டு திகைத்தவன், “யுக்தா உன் ஏஞ்சல் என்ன வேலை செஞ்சுருக்கா பாரு…” என்றான் அதிர்வாக.

செய்தி ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் செய்தியாளர் கணீர் குரலில் வாசித்தார்.

“பிரபல தொழிலதிபர்கள் சிவகாமி மற்றும் மோகன், தங்களது தொழில் ரீதியான வளர்ச்சிக்கு பெண்ணின் மானத்தையே கயவர்களுக்கு இரையாக்கிய கொடூரம் மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… மேலும் தகவல்கள் விரைவில்” என்றபடி விஸ்வயுகாவின் புகைப்படம் ஒளிர, யுக்தா உடனடியாக அவளுக்கு அழைத்தான்.

“என்னடி செஞ்சுட்டு வந்துருக்க?” ஷைலேந்தரி தமக்கையைத் திட்டித் தீர்த்தாள்.

“அவள் தான் பைத்தியக்காரச்சி மாறி ஒரு வேலையைப் பார்த்துருக்கான்னா நீயும் ஏன்டா போன?” என மைத்ரேயனையும் அதட்ட, அவனோ அமைதியாக நின்றான். தோழியின் பேச்சை மீறிடாதவன், இதை மட்டும் எப்படி மீறுவான்?

விஸ்வயுகா தலையைக் குனிந்து அமர்ந்திருக்க, அந்நேரம் யுக்தாவின் எண் அலைபேசியில் ஒளிர்ந்தது.

ஒரு வித தயக்கம் சூழ, அழைப்பை ஏற்று விட்டவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்க, அவனிடமும் அதே அமைதி.

“உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணு ஏஞ்சல். ஆனா செஞ்சதுக்கு அப்பறம் அதை நினைச்சு பீல் பண்ணாத” என்றான் மென்மையாக.

அவளை பற்றி ஊடகங்கள் பரவலாகப் பேசிக்கொண்டிருப்பதில், அதற்கு காரணமான தன்மீதே அவன் கோபப்படுவான் என்று தான் எண்ணினாள். அவளது எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகிற்றே அவளவன்.

“உன்னைப் பார்க்கணும்டா புருஷா!” ஆழ்குரலில் ஒட்டு மொத்த ஏக்கத்தையும் தேக்கி அவள் கேட்க,

“கிளம்பி வா. ஐ நீட் ஹக்ஸ்” என்றவனின் ஹஸ்கி குரல் அவளது வெறுமையை முற்றிலும் துடைத்திருக்க, அலைபேசியிலேயே முத்தத்தைப் பறக்க விட்டாள் விஸ்வயுகா.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
178
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment