Loading

அத்தியாயம் 94

ஒரே மூச்சில் விஷத்தைக் குடித்து விட்டு வெறிப்பிடித்தவன் போல நின்றவனைக் கண்டு ஒரு கணம் அசையவே மறந்து போனாள் விஸ்வயுகா.

அத்தனை வேகமாய் என்றும் இதயம் துடித்ததே இல்லை. வியர்த்து வழிந்தது அவளுக்கு.

இலேசாகக் கண்ணை இருட்டிட, கடினப்பட்டு கண்ணைத் திறந்தவள், அவன் சட்டையைப் பிடித்தாள்.

“டேய் என்னடா செஞ்சு வச்சுருக்க. ஐயோ… சைக்கோ சைக்கோ சைக்கோ… அதை ஏன்டா குடிச்சு தொலைஞ்ச” எனத் தன்னிலை மறந்து துடித்து தவித்தாள்.

யோசியாமல் அவன் இதழ்களில் தன்னிதழைப் பொருத்தி விஷத்தை உறிஞ்ச எத்தனித்தவளுக்கு, சிறிதளவு தனக்கும் ஏறிக்கொள்ளட்டும் என்ற பிடிவாதம் அதிக அளவில் இருந்தது.

அவனின்றி அவள்!?
காற்றில்லா கானகம் போல,
நீரில்லா நிலம் போல,
உணவில்லா உலகம் போல,
உயிரில்லா உடல் போல,
அவனின்றி அவளுக்கேது தனி மூச்சு?

அவனைக் காணும் முன்னே அவன் மீதிருந்த காதலை மூச்சாக சுவாசித்தாள்.

கயவர்களிடம் கற்பிழந்த போதும் கண்ணனவனை மட்டுமே கருத்தினில் நிறைத்திருந்தாள்.

உணர்விழந்து வாழ்ந்த இத்துணை வருடங்களிலும் அவனது நினைவுகளை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை பக்கத்தில் அவனிருந்த போதும், மூச்சையடைக்கி அவனை புயலாக சுழற்றி அடித்து மையம் கொள்ளவிருக்கும் கடலளவு காதலை தன்னுள் புதைத்து, மனதை மரணிக்க வைத்தே நடித்தாள்.

அப்படி தன்னுள்ளே யாவுமாகி நிறைந்திருப்பவன், தானே தேடிக் கண்டுபிடித்த விஷத்தினால் உயிர் துறக்க எத்தனித்ததில், அவளே பிடித்து வைத்திருந்த கடந்தவைகளை அவளும் மறந்து போனாள்.

ஒரு துளி உடலுக்குள் சென்றாலும் போதும், உயிரைக் குலைத்து விடுமென்ற நிதர்சனம் புரிந்தும், அவன் இதழ்களில் தன்னுயிரைக் குழைத்து விஷத்துளிகளைத் தேடலானாள்.

அவளுள் அவன் தேடிய காதலை,
இன்று அவள் தேடி காட்டினாள்.
மெல்லக்கொல்லும் விஷத்தை அவள் தேட,
அவனைக்கொல்லும் அவளை அவன் கண்டுகொண்டான்…

மூச்சிரைத்து அவனிடம் இருந்து விலகியவள், “ஏண்டா இப்படி செஞ்சு தொலைச்ச? ஏதாச்சு பண்ணுதா? என்ன செய்யுது? ஹாஸ்பிடல்… ஹாஸ்பிடல் போலாம்” என்று மூச்சுக்கு ஏங்கியவள் போல பேச இயலாமல் தடுமாறினாள். அவர்களே மருத்துவமனை வாயிலில் தான் இருப்பது புரியாமல்.

அவனோ எதுவும் பேசவில்லை. கையைக் கட்டிக்கொண்டு அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

அதன்பிறகே மருத்துவமனையில் இருப்பதே உறைக்க, “வேக… வேகமா வா. டாக்டர் பெரிய டாக்டர் இருப்பாரு” என கரங்கள் நடுங்க அவனை இழுக்க, அவன் அசைந்து கொடுத்தால் தானே?

கண்ணில் நீர் தளும்பி நின்றது அவளுக்கு.

“யுகி… யுகி ப்ளீஸ்டா. என்னால முடியல. பயமா இருக்கு யுகி. வந்துடு…” உதடு துடித்தது.

“எதுக்கு வரணும். என்னைப் போக சொன்னது நீ தான?” அமர்த்தலாக வினவியவனிடம்,

“என்னை விட்டு தான் போக சொன்னேன். உலகத்தை விட்டு இல்லைடா சைக்கோ…” என்று உச்சஸ்தாதியில் கத்தினாள்.

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?” நிதானமாக கேள்வி எழுப்பியவனிடம் பேசி ஜெயிக்க அவளுக்கு பலமில்லை.

தளர்ந்து முட்டியிட்டு அவன் முன்னே அமர்ந்து விட்டாள். மனதினுள் அமிழ்ந்து போயிருந்த அழுத்தங்களெல்லாம் அழுகையாக வெளிவந்தது.

“கொல்லாதடா என்னை. ப்ளீஸ் வா ட்ரீட்மெண்ட் பண்ணலாம். இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கான்னு கூட எனக்கு தெரியலடா…

உன்னை லவ் பண்ணேன்டா. லவ் பண்ணுனதை தவிர நான் வேற என்னடா பண்ணுனேன். உன்னைப் பார்த்து லவ்வ சொல்றதுக்கு முன்னாடியே சாவு வலியை அனுபவிச்சேன். பார்த்ததுக்கு அப்பறம் உன் துரோகத்தோட வலியை அனுபவிச்சேன். திரும்பவும் நீ என்னை காதலிக்கிறேன்னு சொன்னப்ப, என்னால எதையுமே ஏத்துக்க முடியல. மறுபடியும் மறுபடியும் என் காதுல சாக்ரிபைஸ்ன்ற ஒரு வார்த்தை மட்டும் தான் ஓடிட்டே இருந்துச்சு.

எனக்காக நீ ஏன்டா சாக்ரிபைஸ் பண்ணனும். என்னால எல்லாமே குடுக்க முடிஞ்ச இடத்துல இருந்தப்ப, என் கண்ணு முன்னாடி வராம கண்ணாமூச்சி விளையாடுன. இப்போ உனக்கு நான் என்ன குடுக்க முடியும்?

நல்ல குடும்பம்? நல்ல லவர்? நல்ல வைஃப்? நல்ல பியூச்சர்?

எனக்கு தினம் தினம் நீ எனக்காக சாக்ரிபைஸ் பண்றன்ற எண்ணம் தான்டா வந்துக்கிட்டே இருக்கும். என்னால எப்படி உன் கூட வாழ முடியும்னு நினைக்கிற?

அதுக்காக இப்படி ஒரு கிறுக்குத்தனத்தை செஞ்சு வச்சு ஏன்டா எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ற பைத்தியக்காரா” எனத் துடித்துப் போனாள்.

அவள் முன்னே அவனும் மண்டியிட்டு, அவளது பின்பக்கக் கூந்தலைக் கொத்தாகப் பற்றினான்.

“என்னடி நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் சாக்ரிஃபைஸ் சாக்ரிஃபைஸ்னு உளறிக்கிட்டே இருக்க. லவ்ல எப்படிடி இதெல்லாம் பீல் பண்ண முடியும். காதல்ன்னாலே உனக்காக நானும் எனக்காக நீயும் எந்த எல்லைக்கும் போறது தானடி.

இதான் காதல்னு ஏதாவது வரையறை இருக்கா? அப்படி வரையறை இருந்தா அது காதலே கிடையாது. எனக்கு உன் மேல லவ் இருக்கு, லஸ்ட் இருக்கு, வெறி இருக்கு… இதை எல்லாம் நீ சாக்ரிபைஸ்ன்னு நினைச்சா அப்படியே நினைச்சுக்கோ. இந்த அனாதைக்காக நீயும் ஒவ்வொரு நாளும் சாக்ரிபைஸ் பண்ணிக்கிறன்னு நானும் நெருடலோட உன்கூட வாழ்ந்துக்குறேன்.

ஹொவ் எவர், எனக்கு உன் கூட ஒவ்வொரு நிமிஷமும் இருக்கணும். ஒவ்வொரு செகண்டும் உன் மூச்சுல கரைஞ்சுகிட்டே இருக்கனும். தட்ஸ் இட். யூ ஆர் மை கேர்ள் ஏஞ்சல்.

சொல்லாம போனதுனால என் காதலை நீ உணர தவறுரியா… இல்ல… உன்னை ஒரு தடவை ஏமாத்துனதுனால இனியும் உன்னை ஏமாத்திக்கிட்டே தான் இருப்பேன்னு நினைச்சுட்டியா? அதுக்காக தண்டனை குடுக்கணும்ன்னா, டெய்லியும் குடு. வலிச்சாலும் பொறுத்துக்குறேன். ஆனா, மொத்தமா போக சொல்லாதடி. அது தான் ரொம்ப ரொம்ப வலிக்குது…” என அவள் நெற்றியோடு நெற்றி முட்டி அவன் கண்ணை மூடிக்கொள்ள,

அவன் வாயிலேயே பட்டென அடித்தாள்.

“இன்னொரு தடவை அனாதைன்னு சொன்ன… நானே கொன்னுடுவேன் உன்னை” என்றாள் எரிக்கும் பார்வையுடன்.

மெல்ல விரிந்த முரட்டு இதழ்களால் அவளது இதழை வதைத்தவன், “ஐ நீட் திஸ். ஐ நீட் திஸ் பாரெவர். தா டி. ப்ளீஸ்!” மொத்தமாக அவளுள் கரைந்து அவளையும் கரைய வைத்தான்.

அவ்விதழணைப்பில் தொலைந்து போனவள், “நீ மொதோ எந்திரி. இதுக்கு மாத்து மருந்து இருக்கான்னு பாக்கணும். டைம் இல்ல யுகி. ஏண்டா இப்படி செஞ்ச” மீண்டும் ஆற்றாமையில் பொங்கினாள்.

அஸ்வினி அழுவதைக் காண இயலாதவர்களாக மற்ற இரு ஜோடிகளும் வாசலுக்கு வந்து விஸ்வயுகா அவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டு குழம்பினர்.

“என்ன சகல… நீ கெஞ்சுறது தான சீன் சீகுவென்ஸ். இங்க என்ன தலைகீழா நடக்குது?” மைத்ரேயன் யோசனையுடன் கேட்க,

மற்றவர்களும் அதானே என்ற ரீதியில் விழித்தனர்.

விஸ்வயுகாவோ அழுகையுடன் “டேய் பரதேசி அந்த சைக்கோகாரன் நம்ம யூஸ் பண்ணுன பாய்சனைக் குடிச்சுட்டான். டாக்டரை வர சொல்லுடா” என்றிட,

நந்தேஷ் திகைத்து “என்னது பாய்சனை குடிச்சுட்டு தான் பகுமானமா நிக்கிறியா. தொண்டையைக் கவ்வல? டேய் மச்சான் தூக்குடா இவனை” என்று பதறினான்.

குறிஞ்சி தான், “அட ச்சே! அவன்கிட்ட ஏது பாய்சன். அதை தான் நாங்க லேப்க்கு டெஸ்ட்டிங்க்கு குடுத்துட்டோமே. பச்சைத் தண்ணியைக் குடிச்சுட்டு அவன் தான் குடிகாரன் கணக்கா உளறிருக்கான்னா, ஆஸ் அ பிசினஸ் வுமன் இந்த சீப்பான பிளானை எல்லாமா நம்புற…” என்று விஸ்வயுகாவைக் கேவலமாகப் பார்த்து வைத்தாள்.

“அத்தான்… இந்த பச்சைத் தண்ணி பிளானை எனக்கு சொல்லிருந்தா இந்நேரம் நான் இவனை கரெக்ட் பண்ணிருப்பேனே…” என மைத்ரேயனின் தோள் மீது கை போட்டுக் கூற, அவள் கையைத் தட்டி விட்டவன், “ஆல்ரெடி கரெக்ட்டானவனை காண்டாக்கிட்டு திரும்ப வந்துட்டா கரெக்ட் பண்ண…” என முணுமுணுத்துக் கொண்டான்.

விஸ்வயுகா அழுகையை நிறுத்தி விட்டு தன்னவனை முறைத்துப் பார்த்தாள்.

அவன் மேலுதட்டை ஈரப்படுத்துவது போல முகிழ்த்த புன்னகையை அடக்கியபடி, “பிராமிஸா அது பாய்சன் தான்டி பொண்டாட்டி. என் லிப்ஸ்ல இருந்து டேஸ்ட் பண்ணி பார்த்தியே. உனக்கு டிஃபரென்ஸ் தெரியல?” எனக் கேலியாய் கேட்டதில், அவளுக்கு வெட்கம் துளைத்தது.

சிச்சே, உண்மையா பாய்சன் குடிச்சுட்டான்னு நினைச்சு லிப் டு லிப் அடிச்சுட்டோமே!’ என்ற குறுகுறுப்பு நீங்காதவளாக, அவனை நெஞ்சிலே படபடவென அடித்தாள்.

“எருமை மாடே! உண்மையாவே விஷம் குடிச்சுட்டன்னு பயந்தே போய்ட்டேன். உனக்கு என் பீலிங்ஸ் விளையாட்டா இருக்கா?”

“நீ தான் பீலிங்ஸே இல்லைன்னு சொன்னியே. அப்பறம் ஏன் பயப்படணும்…” ஒன்றும் தெரியாதவன் போல அவளைச் சீண்டினான்.

அவளோ இன்னும் அந்த தாக்கம் தீராதவளாக, “போடா பொறுக்கி!” என அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, பின் இழுத்து அணைத்துக் கொண்டாள்.

இம்முறை வெளிப்படையாகவே முறுவலித்த யுக்தா சாகித்யன், அவளைத் தன்னுடன் அழுத்தமாய் இறுக்கி அழுத்தினான்.

“இப்ப நாங்க இங்க நிக்கவா போகவா?” தங்கை மனம் மாறி விட்ட மகிழ்ச்சி முகத்தில் கொப்பளிக்க நந்தேஷ் கேட்க,

“போய் அவன் அவன் லவர பாருங்கடா…” என்று துரத்தி விட்டான்.

“எனக்கு ஏது லவரு. அவளை தான் சைக்கோ கில்லர் கொன்னுட்டானே” என மீண்டும் ஆரம்பித்தவனைத் திகிலுடன் பார்த்த ஷைலேந்தரி,

“ஆத்தாடி…” என ஓடியே விட்டாள்.

குறிஞ்சியும் அவனை முறைத்து விட்டு நகர, மைத்ரேயன் நந்தேஷின் தோளில் கையைப் போட்டு தனியே அழைத்துச் சென்றபடி, “மச்சான்… நீ ஏன் குறிஞ்சியை கன்சிடர் பண்ண கூடாது” எனக் கேட்டான்.

“ம்ம்க்கும்… அதை ஏன் மச்சி கேக்குற. நானே குழப்பத்துல இருக்கேன்” என்றான் சோகமாக.

“ஏன்டா?”

“ஆல்ரெடி குறிஞ்சி லவ் பண்ணுனது, அம்…” என சொல்ல வந்தவன் சட்டென “சித்தி செஞ்சதெல்லாம் நினைச்சே தலை வலிக்குதுடா…” என சோர்வாகக் கூறியவனை முதுகில் தட்டி தேற்றினான் மைத்ரேயன்.

“ஆண்ட்டி செஞ்சது தப்பு தான். அதுக்காக முழுக்க அவங்களை ப்ளேம் பண்ணியும் பிரயோஜனம் இல்லை நந்து. அவங்களும் நிறைய கஷ்டங்களோட, உடல்ரீதியாவும் வலியை அனுபவிச்சிட்டு இருக்காங்க. யாராவது ஒருத்தர் தழைஞ்சு போகலாம்… தப்பில்ல” என்றான்.

“ம்ம் புரியுது. சட்டுனு ஏத்துக்க முடியல. டைம் எடுக்கும்…” எனக் கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டான்.

“சரி குறிஞ்சி என்ன கதை?”

“நீ என்ன கமிட் ஆக்குறதுலயே குறியா இருடா…” என்றதும் மைத்ரேயன் சிரித்திட, அவனுக்கும் சிரிப்பே வந்தது.

“அந்தக் கொடுமையை ஏன்டா கேட்குற. ரோஜாவை நான் விரும்ப காரணமே குறிஞ்சி தான். இதை நான் ரீசன்ட்டா தான் புரிஞ்சுக்கிட்டேன். இதை போய் அவகிட்ட எப்படி சொல்லன்னு தெரியல…” என்றதும் மைத்ரேயன் தீவிர முக பாவனையுடன், அவனுக்குத் தெரியாமல் குறிஞ்சிக்கு போன் செய்திருந்தான்.

“என்னடா சொல்ற? ரோஜாவை விரும்ப குறிஞ்சி காரணமா?”

“ம்ம்… பைவ் இயர்ஸ் பிஃபோர் கொஞ்ச நாளாவே என்னை யாரோ பாலோ பண்ற பீல்டா. நம்மல்லாம் ஒண்ணா வெளில போறப்ப கூட யாரோ நம்மளை பின் தொடருற மாதிரியே இருக்கும்.

இதுல நான் தனியா போற இடத்துல எல்லாம் லாவண்டர் பொக்கே வேற இருக்கும். அதைப் பார்த்து பயந்து ஓடுனது வேற கதையா இருந்தாலும், அதுல வித் லவ்ன்ற ஒரு கார்ட் இருக்கும். அதுல பேர் எதுவும் போடலைன்னாலும் அந்தக் கையெழுத்தும் தொடர்ந்து வந்த பொக்கேவும் எனக்கும் ஒரு இன்டரஸ்ட்டை கிளப்பிடுச்சு.

அதுக்கு அப்பறம் நிறைய பிரச்சனை. பொக்கே வர்றதும் நின்னுடுச்சு. நானும் கிட்டத்தட்ட அதெல்லாம் மறந்துட்டேன். அதுக்கு அப்பறம் பிரான்ஸ் போய்ட்டேன். அங்க தான் ரோஜாவைப் பார்த்தேன். ரெண்டு பேருமே தமிழ்ன்ற ரீசனும் நாங்க ஈஸியா பழக ஒரு காரணம் தான். பிரெண்ட்ஸா தான் இருந்தோம். பட் என் பர்த்டே அன்னைக்கு அதே லாவெண்டர் பொக்கேவை குடுத்து வித் லவ்னு எழுதி இருந்தா.

சோ அவள் தான் இந்தியால இருந்தே என்னை பாலோ பண்றான்னு நானா தப்பா நினைச்சுட்டேன். ப்ரொபோஸும் பண்ணுனேன். அவளும் பிரான்ஸ் வந்ததுல இருந்தே என்னை லவ் பண்ணுனதா சொன்னா. என்னை முன்னாடியே தெரிஞ்சும் என்கிட்ட விளையாடுறான்னு நானும் விட்டுப் பிடிக்க நினைச்சேன்.

நான் லவ் சொன்னதுக்கு அப்பறம் எங்க காதலோடு ஆயுள் காலமே ரெண்டு நாள் தான். சோ, அதை பத்தி அவள்கிட்ட தீர விசாரிக்கவும் முடியல. இப்போ யோசிச்சுப் பார்த்தா, நான் தான் தப்பா ப்ரொபோஸ் பண்ணிட்டேன்னு இருக்கு. அதுக்காக இதை குறிஞ்சிகிட்ட சொல்ல முடியுமா. அவள் என்னை தேர்ட் ரேட் பொறுக்கியா நினைக்க மாட்டா…” தரையைப் பார்த்து நடந்தபடியே மனதில் அழுத்திக்கொண்டிருந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்து விட்டான்.

“நான் ஏன் நந்தா தப்பா நினைக்கப்போறேன்…”அக்மார்க் புன்னகையுடன் அவனுக்குப் பின்னே குறிஞ்சி நின்றிருந்தாள்.

அவளைக் கண்டு அதிர்ந்தவன், நண்பனைத் தேடினான்.

அவனோ தூரத்தில் ஓடிய படி, “மச்சி… இதுக்குமேல இந்தக் கருமம் பிடிச்ச ரகசியத்தை மறைச்சு காலணாவுக்கும் பிரோயோஜனம் இல்ல. எஞ்சாய் கமிட்டிங் மச்சி” என்று கத்தினான்.

திருதிருவென விழித்த நந்தேஷை ரசனை மின்னப் பார்த்திருந்தாள் குறிஞ்சி.

அத்தியாயம் 95

“ஹெலோ மிஸ்டர். நாங்க கஷ்டப்பட்டு பொக்கே ரெடி பண்ணி இவர் போற இடமெல்லாம் வைப்போமாம். இவர் என்னன்னா இன்னொரு பொண்ணை தப்பா நினைச்சு லவ் பண்ணுவாராம். ஏதோ அந்தப் பொண்ணு வேற கல்யாணம் பண்ண போனதோட மொத்தமா போய்ட்டா. இல்லன்னா, அந்த ஃபேக் பொக்கேவை கல்யாணம் பண்ணிருப்பீங்க?” எனக் கேலியாய் உரைக்க, நந்தேஷ் சோர்வு மறைந்து முறுவலித்தான்.

“வித் லவ்ன்னு மொட்டைக் கடுதாசி போட்டா, பல கோடி பெண்கள் இருக்குற இந்த உலகத்துல யாரை சந்தேகப்படுறது அழகி. என் கணிப்பு ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு தான். ஆனாலும் அந்தப் பொண்ணை நான் உண்மையாவே லவ் பண்ணுனேன்…” என்றான் உர்ரென.

“பண்ணிக்கோங்க. பட் அதுக்கு விதை நான் போட்டது. என்னை நினைச்சு தான் நீங்க அவளை விரும்பி இருக்கீங்க… அவள் மட்டும் லாவெண்டர் பொக்கேக்கு பதிலா வெள்ளைக் கலர் பொக்கே குடுத்து இருந்தா உங்களுக்கு அவளை ப்ரொபோஸ் பண்ற ஐடியாவே வந்துருக்காது தான?” என ஆணித்தரமான நம்பிக்கையுடன் கேட்டதும், ஒரு கணம் அவள் விழிகளை ஆழப்பார்த்தவன்,

“நிச்சயமா வந்துருக்காது” என்றான் உறுதியாக.

“தட்ஸ் இட்!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டவளுக்கு, அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

அவனது மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் தன்னைப் பற்றிய பாதிப்பு இருந்திருக்கிறது என்ற எண்ணமே நிம்மதியைத் தந்தது.

திரும்பி நடக்க எத்தனித்தவள், “சோ…” என்ற ஆடவனின் குரலில் நின்றாள்.

புருவம் சுருக்கி, “சோ?” என அவளும் கேட்க, “நத்திங்… போ!” என்றான் வேறு புறம் பார்த்து.

“வேற என்ன?”

“ஒன்னும் இல்ல.”

“ஒன்னுமே இல்லையா?” தலையைச் சாய்த்து ஏக்கமாக அவள் கேட்ட நொடி அவனுள் இருந்த தயக்கம் வெடித்து வெளிவர, “இதுக்கு மேல என்னால ஏமாற முடியாது அழகி. என்னை ஏமாத்த மாட்ட தான?” அவனும் அவளைப்போலவே தலைச் சாய்த்துக் கேட்டான்.

அதில் நெகிழ்ந்தவள், “ஹையோடா… இந்தக் கேள்வியை நான் கேட்கணுமாக்கும்” என சிலுப்பியவளிடம்,

“ம்ம்க்கும் உன்னை ஏமாத்துனா , நீ துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டுட மாட்ட…” என்று அவன் பயப்படுவது போல நடிக்க, “கண்டிப்பா” என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிக்கொள்ள, “சோ…” என அவன் மீண்டும் ஆரம்பித்தான்.

“சோ?”

“ஒன்னும் இல்ல…” அவன் கூறியதில்,

“யோவ்! இடைப்பட்ட வருஷத்துல உன் ஞாபகமே இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா மறக்க பழகிட்டேன். உன்னைத் திரும்ப பார்த்ததும் எனக்குள்ள தூங்கிட்டு இருந்த பட்டாம்பூச்சி எல்லாம் பறந்து வந்தது என்னவோ உண்மை தான். அதே ஈர்ப்பு, அதே காதல் குறையலைன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுது. இப்பவும் உன்னை நான் லவ் பண்ண தான் செய்றேன். நீயும் என்னை லவ் பண்றன்னா, வந்து கட்டிப்பிடிச்சு நன்றியுரை ஆத்து. இல்லன்னா, உன் எக்ஸ் ரோஜாவோட கல்லறையை போய் கட்டிபிடிச்சு குடும்பம் நடத்து,” எனப் படபடவென பொரிந்தவள்,

“வந்துட்டான், ‘சோ‘க்கு தம்பியாட்டம்… சோ, சொங்கின்னுட்டு…” என்று முணுமுணுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி நடக்க எத்தனித்தாள்.

பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிய நந்தேஷ், அவளைப் பின்னிருந்து தளர்வாய் அணைத்துக் கொண்டான்.

ஆடவனின் தீண்டலில் சிவந்த மேனி மெல்ல நடுக்கம் கொள்ள, ஐ லவ் யூ அழகி. என்னவோ உன்னைப் பார்த்ததும் என் கண்ணுக்கு நீ அழகியா தான் தெரிஞ்ச. மே பி ரோஜான்ற டிஸ்டர்பன்ஸ் நடுவில வராம இருந்துருந்தா, பர்ஸ்ட் மீட்லேயே ப்ரொபோஸ் பண்ணிருப்பேன் என்றான் காதலால் கசிந்துருகி.

என்ன தான் விளையாட்டுக்காக அவன் பின்னே அலைவதாக தன்னைத் தானே நம்ப வைத்துக்கொண்டாலும் பல வருடமாய் மனதினுள் மறைத்து வைக்கப்பட்ட காதலைக் கொடுப்பதும் பெறுவதும் அவளுக்கு கண்ணைக் கலங்க வைத்தது.

இருப்பினும் அதனை முயன்று அடக்கிக்கொண்டு, நான் சிபிஐன்னு தெரிஞ்சுருந்தாலுமா? என விழிகளை உருட்டிக் கேட்க, அவன் மீண்டும் பேந்த பேந்த விழித்ததில் வாய்விட்டு சிரித்தாள் குறிஞ்சி.

முத்தங்களின் எண்ணிக்கையில் காதலின் அவளைக் காட்டிட இயலாது என்று தெரியும் தான். ஆகினும், எண்ணற்ற முத்தங்களால் தன்னவளைக் குளிப்பாட்டினான் யுக்தா சாகித்யன்.

அவன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடமும் மருத்துவமனை கட்டடத்தில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்ததால், தன்னுணர்வுகளை வெளிக்கொட்ட இருவருக்கும் தடை இருக்கவில்லை.

அவள் கழுத்தில் அணிந்திருந்த இதய வடிய செயினை வருடி விட்டவன், அதற்கு அழுத்த முத்தமொன்றை கொடுத்து அவள் கண்களைக் காண, “சித்தி ஞாபகமா தான் போட்டுருக்கேன்” என்றாள் அவன் தீண்டலில் குழைந்து.

“ஓஹோ! அப்போ நீ 10’த்ல வாங்குன மார்க்கை எல்லாம் ரிட்டர்ன் பண்ணுடி” கேலியும் கிறக்கமும் கலந்த மென்புன்னகையால் அவளை அசரடித்தான்.

“ஹய்ய… உன் நோட்ஸ் பார்த்து படிச்சேன்னு நினைச்சியா. அது நானா நோட்ஸ் எடுத்து படிச்சு வாங்குன மார்க்கு…” உதட்டைச் சுளித்த விஸ்வயுகாவின் கன்னத்தை கடித்து வைத்தான், “படிக்கிற மூஞ்சியைப் பாரு” என்று.

“ஆ…” எனக் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டவளை, சில்மிஷமாய் ஏறிட்டான் யுக்தா.

“அன்னைக்கு பாதில விட்ட இஸ்கு இஸ்குக்கும் ஒரு நோட்ஸ் ரெடி பண்ணட்டா. பிக்கப் பண்ண ஈஸியா இருக்கும்…” என மெல்லிடைக்கு அழுத்தம் கொடுத்து கேட்க,

அவ்வழுத்ததில் நெளிந்தவள், “விடுடா சைக்கோ புருஷா” கண்ணில் மின்னிய காதலுடன் சிலுப்பினாள்.

“புருஷன்னு வாயில சொன்னா ஏத்துக்க முடியாதுடி பொண்டாட்டி” அவள் அணிந்திருந்த செயினுடன் சேர்த்து கழுத்தையும் வருடிக்கொண்டிருந்தவன் மெல்ல விரலைக் கீழிறக்க, சட்டென அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“பிராடு… பட்டப்பகல்ல ஹாஸ்பிடல் வாசல்ல என்னடா செஞ்சுட்டு இருக்க?” என்றதைக் கண்டுகொள்ளாமல் விரல் பட்ட இடத்தில் இதழையும் பதித்தான்.

உருகிக் கரைந்துப் போன விஸ்வயுகா, “யுகி…” எனச் சிணுங்கிட, “கல்யாணம் பண்ணிக்கலாமாடி?” எனக் கேட்டான் ஏக்கத்துடன்.

“மறுபடியும் பண்ணனுமா யுகி?” ஒற்றைக்கேள்வியிலேயே அவளை தனது வழிக்கு கொண்டு வரும்பொருட்டு கட்டிய தாலியையே அவள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது விளங்க, “ஏஞ்சல்” எனப் பேச தோன்றாது மீண்டும் முத்தமழையை பொழியத் தொடங்கினான்.

அவனது வேகத்தில் சற்றே தடுமாறிப்போனவள், “டேய் பொறுடா” என்று அமைதிப்படுத்த, அதனைக் காதில் வாங்கினால் தானே.

அவளை காருக்குள் தள்ளியவனை கிறுகிறுத்து பார்த்ததாள் அவள்.

பின் பக்க சீட்டில் அவளைத் தள்ளியவன், மீண்டும் நெற்றி தொடங்கி கழுத்து வரை முத்தங்களை நீட்டிக்க, மெல்ல மெல்ல அவளும் வசமிழந்தே போனாள்.

“யுகி கார்ல…” பேச வந்தவளை ஒரு விரலால் தடுத்தவன்,

“ப்ளீஸ்டி. டூ மினிட்ஸ்! ஜஸ்ட் டீப் ஹக் மட்டும். ஐ நீட் திஸ்டி” எனக் கனத்த குரலில் கேட்க, “வா!” என இரு கையையும் நீட்டி அவனை அவளுக்குள் புதைத்துக் கொண்டாள்.

சொன்னது போன்றே இரு நிமிடங்களும், அவளை இறுக்கி அணைத்து தோன்றும்போதெல்லாம் முத்தமிட்டு உரசி இத்தனை வருடப் பிரிவிற்கான ஏக்கத்தையும் தொலைக்க எத்தனித்தான்.

அவளுக்கும் அந்நொடிகளிலெல்லாம் அவன் மீண்டும் தன்னிடம் கிடைத்து விடானென்ற நிஜமே பூரிக்க வைத்தது. அவன் எப்போதோ கிடைத்து விட்டான். மீண்டும் தொலைக்க எண்ணியது அவள் தானே. ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடம் நடிக்கவும் முடியவில்லை. விலக்கி நிறுத்தவும் இயலவில்லை. இதோ… சின்னச் சின்னத் தீண்டலிகளில் கூட அவள் பயந்த ‘சாக்ரிபைஸ்’ என்ற வார்த்தை அசரீரியாய் கூட கேட்கவில்லையே!

இன்னும் அவளால் அவனுடன் எந்த அளவு இந்த உறவில் நீடிக்க இயலுமென்று அவளுக்கே தெரியவில்லை. அதை பற்றி குழப்பிட மனம் வராமல், தன்னையே முற்று முழுதாய் சரணடைந்தவனிடம் அவளும் தன்னை சரண் கொடுத்தாள்.

“லவ் யூ ஏஞ்சல். ஐ மிஸ்ட் யூ சோ மச்.”

“மீ டூ யுகி. உனக்குப் பிடிச்சுருந்துச்சா சொக்கநாதர் மீனாக்ஷி சிலை” எனக் கேட்டவளிடம், மோனப்புன்னகை சிந்தியவன், “ரொம்படி. அதை அம்மா தான் வாங்குனதா சொன்னாங்க. ஆனா என்னமோ அதைப் பார்த்ததும் உன் முகம் தான்டி தெரிஞ்சுது. என் இன்டியூஷன் வீணாப்போகல” என நெற்றி முட்டினான்.

அவனை விழி விரித்துப் பார்த்த விஸ்வயுகா, “நிஜமாவா? என்னையவா நினைச்ச?” என்க,

அங்கும் இங்கும் படபடப்பில் உருளும் கருவிழிகளுக்கு மென் முத்தம் வழங்கியவன், “உன்னை மட்டும் தான் நினைச்சேன்” என்றான் உருக்கமாய்.

சிவந்திருந்த கன்னங்கள் மேலும் பூவாய் மலர்ந்தது.

“எனக்கும் இந்த செயினை சித்தி குடுத்தப்ப, நீ தான் செலக்ட் பண்ணிருப்பன்னு தோணுச்சு. ஒருவேளை என் பிரம்மையா இருக்கும்னு நினைச்சேன்…” என்று அவன் நெற்றியில் இதழ் பதிக்க, நெக்குருகி போனான்.

“எந்த நம்பிக்கைலடி என்னை விரும்புன? அப்போ என்கிட்ட ஒண்ணுமே இல்லையே… இப்போவாவது வேலைன்னு ஒன்னு இருக்கு” கட்டை விரலால் அவள் கன்னத்தைத் தேய்த்தபடி கேட்டான் யுக்தா.

“நீ எந்த நம்பிக்கைல உனக்கு ஓகே சொல்லுவேன்னு நினைச்சியோ. அதே நம்பிக்கைல தான். நீ விளக்கம் குடு. நானும் விளக்கம் கொடுக்குறேன்…” உதட்டை மடித்து முறுவலை அடக்கியபடி அவனை மடக்க, “ஓகே… ஐ ஆம் சரண்டர்!” என்று உதட்டைப் பிதுக்கினான்.

“ச்சோ ச்சுவீட்…” அவன் அதரத்தை பிய்த்து வாயில் ஒட்டிக்கொண்டவளிடம், “இது போங்கு ஏஞ்சல். டைரக்ட் கிஸ் தான் வேணும் எனக்கு…” என்றவன் ‘உம்ம்ம்’ என உதட்டைக் குவித்து அவளுக்கு வெகு அருகில் செல்ல, அவனைத் தள்ளிவிட்டாள்.

“நீ சொன்ன ரெண்டு நிமிஷம் முடிஞ்சுது. எவ்ளோ நேரம் தம் கட்டி உன் வெயிட்ட தாங்குறது. எந்திரிடா…” எனப் போலியாய் மிரட்டினாலும், அவளுக்கு வலிக்கும்படி அவனும் அவள் மேல் சாயவில்லை தான்.

குறும்பு புன்னகையுடன் மெல்ல நகர்ந்து அமர்ந்தவன், அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டு, “என் பாரத்தை நீ தாங்க மாட்டியா?” என்றான் விஷமமாக.

செக்கச்சிவந்த மேனியதை அவனுக்கு காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டவள், “ஐயோ போடா” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தே வெட்கத்தை மறைத்துக் கொண்டாள்.

“வாவ்… செம்மயா சிவக்குறடி” நேரம் செல்ல செல்ல மீண்டும் கிறக்க நிலைக்குச் சென்றான் ஆடவன்.

“ஃப்ளர்ட் பண்ணாதடா!” மூக்கைச் சுருக்கி அழகு காட்டியவளை விழிகளில் நிரப்பிக்கொண்டவன், “உங்கிட்ட ஃப்ளர்ட் பண்றது தான் என் ஃபுல் டைம் ஜாபே…” என்று முத்தமிடக் குனியும் போதே ஒரு கையால் பேண்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தான்.

விஸ்வயுகா அதனைப் பார்த்து விட்டு புருவம் சுருக்க, அவனோ அவள் இதழ்களில் இதழ் பதித்து விலகி, “ஸ்டே ஹியர்” என அழுத்தம் திருத்தமாய் கூறியபடி காரை விட்டு இறங்கியவன் காருக்குப் பின்னால் பதுங்கி இருந்த ஒருவனை சுட்டு வீழ்த்தினான்.

அவனது குருதி பின் பக்க கண்ணாடியில் தெறிக்க, விஸ்வயுகாவிற்கு வியர்த்து விட்டது.

“யுகி…” அவள் இறங்க முற்பட,

“ஸ்டே!” என்று ஒரு விரல் நீட்டி பார்வையாலேயே அதட்டியவன், கார் கதவை மூடி விட்டு, அடுத்தடுத்து அவனை நோக்கி வெறி கொண்டு வந்த ஆள்களை துப்பாக்கியால் பதம் பார்க்கத் தொடங்கினான்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
183
+1
3
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்