Loading

அத்தியாயம் 9

பதின்மூன்றாவது மாடியில் மட்டுமே விளக்கு எரிய, அண்ணாந்து பார்த்து அங்கு தெரிந்த யுக்தாவின் நிழலுருவத்தை முறைத்தாள் விஸ்வயுகா.

“மேல வா” என யுக்தா குறுஞ்செய்தி அனுப்ப, “நீ கீழ வா. அவ்ளோ ஹைய்ட்ல கூட்டிட்டுப் போய் என்னைத் தள்ளி விடப் போறியா?” என்றாள் சுள்ளென.

“இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல ஏஞ்சல்!” அவனிடம் இருந்தும் இடக்காக பதில் வந்தது.

பற்களை நறநறவெனக் கடித்தவள், நகராமல் அங்கேயே நிற்க, கீழ் தளங்களில் எல்லாம் விளக்குகள் மடமடவென எரிந்தது.

“லிப்ட்ல வா” மீண்டும் அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வர, அவனை மனதினுள் வறுத்தபடியே உள்ளே நுழைந்தாள்.

ஆடம்பர ஹோட்டலாக உருமாறி இருக்க வேண்டிய இடம் அது. கட்டட வேலை மட்டும் முடிந்திருக்க, கீழ் தளங்களில் எல்லாம் இன்னும் உள்வடிவமைப்புகள் செய்யப்படாமல் வெறுமையாக காட்சியளித்தது.

உள்ளே நுழைந்ததுமே அவ்வமைதி அவளுள் லேசான கிலி ஏற்படுத்த, முகத்தை தைரியமாக வைத்தபடியே மின்தூக்கியினுள் நுழைந்தாள்.

“மூதேவி… கடைசி மாடில போய் உட்காந்துட்டு என்னை டார்ச்சர் பண்ணுது. லிப்ட் படத்துல வர்ற மாதிரி பேய் எதுவும் வந்துடுமோ” என்ற பயம் அவளைத் துளைக்க, ஏசியின் குளுமையை மீறியும் நெற்றி வியர்த்தது.

இறந்து போன்றவர்களெல்லாம் கண் முன்னே ஒரு நொடி வந்து போக, “கருப்பசாமி என்னை மட்டும் காப்பாத்துப்பா…” என மானசீகமாக வேண்டும் போதே, பதின்மூன்றாம் மாடியில் லிப்ட் திறந்தது.

எதிரில் புன்னகை முகமாக யுக்தா சாகித்யன் நின்றிருந்தான்.

“க்ளோஸ் அப் விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணவா வந்துருக்க. எதுக்கு பல்லைக் காட்டுற” எனக் கடுகடுத்தபடி அவனைத் தாண்டி விறுவிறுவென சென்றாள்.

“தனியா வர பயமா இருந்துச்சோ?” அவன் கேள்வியில் சிறு கேலி இழையோடியது.

“பயமா எனக்கா?” என அவள் சிலுப்பும் போதே கீழ் தளங்களின் விளக்குகளும் காரிடரின் விளக்குகளும் அணைந்து விட, “அம்மே” என அலறி யுக்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஓ ஷிட்! தி க்ரேட் பிசினஸ் வுமன் லைட் ஆப் ஆனதுக்கு எல்லாம் பயப்படலாமா?”

“இதை சொல்றதுக்கு தான் என்ன வர சொன்னியா. டேய் லைட்டை போட்டுத்தொலை” என்று பயத்துடன் உறுமிட,

“தேவை இல்ல ஏஞ்சல். நம்ம இந்த ரூம்க்கு போகலாம்” என்று பக்கவாட்டுக் கதவை திறக்க, அங்கு நவீனத்தின் உச்சமாக படுக்கையறையும் அதனை ஒட்டியே சிறு பாரும் இருந்தது.

வெளிச்சத்தைக் கண்டதும் அவள் வேகமாக உள்ளே வந்து விட, அறைக் கதவை காலால் எட்டி உதைத்து சாத்திய யுக்தா, “யூ ஆர் சேப் நொவ் ஏஞ்சல்” என்றான் மெல்லிய நகையுடன்.

அதன்பிறகே அவனுடன் ஒரே அறையில் இருப்பது புரிய, “கதவைத் திற!” என விழிகளால் சாடினாள்.

“ஒரு மணி நேரத்துக்கு அப்பறம் அந்த டோர் ஓபன் ஆகும். டோன்ட் வொரி. பர்ஸ்ட் ரிலாக்ஸ் பண்ணலாம்…” என்று ஒரு கிளாஸில் வைனை ஊற்றி அவளிடம் நீட்டினான்.

அவள் எப்போதும் போல முகத்தைச் சுளித்துத் திரும்பிக்கொள்ள, மறுநொடி அவள் முகத்தை இரு விரல்களால் அழுத்தப் பிடித்து திருப்பியவன், “நான் வார்ன் பண்ணுனது மறந்து போச்சா? என்னைப் பார்த்து முகத்தைச் சுளிக்காத. எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னேன்” என்று கர்ஜித்தான்.

அவன் கையைத் தட்டி விட முயன்றபடி, “உனக்குப் பிடிக்கலைன்னா நான் செய்யக்கூடாதா. அப்படி தான்டா செய்வேன்” என்று உறுதியாய் கூற,

“எஸ் எனக்குப் பிடிக்காத எதையும் என் முன்னாடி செய்யக் கூடாது. செஞ்சா…” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி இகழ்ச்சியாய் பார்த்தவன்,

அவள் கன்னத்தில் பற்தடம் பதியக் கடித்து வைத்தான்.

“ஆஆ… டேய் விடுடா” என்று அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளியவளின் கன்னத்தைப் பதம் பார்த்து விட்டே நகர்ந்தான்.

கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சினம் எல்லையைக் கடக்க, அவனை அறையப் போக, அந்தக் கையைப் பற்றியவன் அவளை ஒரு சுற்றி சுற்றி அவனருகே இழுத்தான்.

அவளது முதுகு முழுதும் அவன் நெஞ்சில் பரவி இருக்க, ஒரு கையை அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து அவள் கையைப் பிடித்து அவளை அணை கட்டியவன், அவளது திமிறலை சற்றும் சட்டை செய்யாமல் அவள் செவியருகே குனிந்தான்.

“என்னை 50 பெர்சன்ட் ஜென்டில் மேனா இருக்க விடுறதும், எல்லை மீற வைக்கிறதும் உன் கைல தான் இருக்கு ஏஞ்சல். ஐ டோன்ட் வான்ன ஹர்ட் யூ. பட் என்னை செய்ய வைக்காத. ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” என்று வெப்ப மூச்சுடன் கூறி விட்டே அவளை விடுவித்தான்.

அவனிடம் இருந்து விலகி திரும்பியவளின் முகம் அவமானத்தில் சிவந்தது.

“இதுக்குலாம் உனக்கு திருப்பி குடுக்காம விட மாட்டேன் யுக்தா” வஞ்சத்துடன் விஸ்வயுகா கூற,

“திருப்பி கடிச்சுக்கோ!” என்று குனிந்து அவன் கன்னத்தைக் காட்டியதில், அவள் தான் திருதிருவென விழிக்க வேண்டியதாகப் போயிற்று.

முன்னிருந்த சீறல் இப்போது அவனிடம் சுத்தமாக இல்லை. அப்படியே குழைந்திருந்தான்.

நொடிக்கு நொடி பச்சோந்தி போல மாறிக்கொண்டே இருக்கிறானே என்ற எரிச்சலுடன் அவனைப் பார்த்து வைக்க, அவன் மீண்டும் வைன் கிளாஸை நீட்டினான்.

“ப்ச்… ஐ டோன்ட் ட்ரிங்க்” அதே எரிச்சல் தொனியில் அவள் கூற,

“ரியலி. பட் உன் வீட்ல லேடீஸ் வைன் குடிப்பாங்க தான? உனக்குப் பழக்கம் இல்லையா… ம்ம்!” என்று கூறியபடி அவன் மது அருந்தினான்.

அவனை கூர்விழிகளால் துளைத்தவள், “என் வீட்டைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

“உன் வீட்டைப் பத்தி ஊருக்கே தெரியுமே. பிக் ஷாட். வி.ஐ.பி பேமிலி. சோ எனக்குத் தெரிஞ்சுருக்குறதுல ஆச்சர்யம் எதுவும் இல்ல” என்று தோளைக் குலுக்கினான்.

அவளும் அசட்டையுடன் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, கன்னம் தான் எரிந்தது.

அந்நேரம், யுக்தாவிற்கு போன் வர, எதிர்முனையில் ஆபிசர் ஜோசப் பேசினான்.

“சார்… ரோஜா, அண்ட் அவங்க கல்யாணம் பண்ணிக்கப் போன பியான்ஸ் தருணோட பையாப்சி ரிப்போர்ட் வந்துடுச்சு. ரோஜா விஷம் குடிச்சு இறந்து இருக்காங்க. ஆனா தருணோட டெத்க்கு காரணம் பாய்சன் இல்ல. சம்திங் எல்ஸ். அதை பத்தி இன்னும் டாக்டர் புல் ரிப்போர்ட் தரல. அவரே குழம்பிப் போய் இருக்காரு” என்றான்.

நெற்றியை நீவிய யுக்தா,” ஓகே மார்னிங் வந்து பாக்குறேன். வெல், அந்த தருணோட பேக் கிரவுண்ட் டீடெய்ல்ஸ் எனக்கு வேணும். மேக் இட் பாஸ்ட்” என்று உத்தரவுடன் போனை வைத்தவனின் கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டோடியது.

‘ஒரே கல்யாண மண்படத்துல ரெண்டு கொலை. ரெண்டுமே ஒரே விதமா இருந்தாலும், அதெப்படி ஒன்னு மட்டும் கொலையா மாறும்?’ என்று யோசிக்கும் போதே, அவனையே மேலிருந்து கீழ் வரை அளந்து கொண்டிருந்த விஸ்வயுகா இடைமறித்தாள்.

“அது இருக்கட்டும், தற்கொலைன்னு முடிய போன கேஸை நீ எதுக்கு கொலையா மாத்தி வச்சுருக்க? என்னை கார்னர் பண்ணவா?” விழி சுருக்கிக் கேட்டாள்.

அக்கேள்வியில் மீண்டவன், “அதுவும் ஒரு காரணம் தான். அண்ட் மோர் ஓவர் அது ரெண்டுமே கொலை தான்” என்றான் திட்டவட்டமாக.

“ஆனா என் அண்ணன் பண்ணல” விஸ்வயுகா அழுத்தம் திருத்தமாகக் கூற, “அதை நான் தான் கன்பார்ம் பண்ணனும் ஏஞ்சல்” என நக்கலாகக் கூறினான்.

“நீ தேவை இல்லாம டைம் வேஸ்ட் பண்ற. அது ரெண்டும் கொலைன்னா அந்த வேலையைப் பாக்குறதை விட்டுட்டு என் பின்னாடி சுத்தி கொலைகாரனை தப்பிக்க விடுற” என்றாள் முறைப்பாக.

“நான் எங்க தப்பிக்க விட்டேன். கூடிய சீக்கிரம் ரவுண்டு கட்டிருவேன்” என்றதும், “கிழிப்ப” என முணுமுணுத்துக்கொண்டவள்,

“கைப்பட அவங்க எழுதி வச்சுட்டு செத்துருக்காங்க. அப்பறமும் கொலைன்னு உருட்டிட்டு இருக்க” என்றாள்.

“அப்கோர்ஸ், ரெண்டு பேருமே கைப்பட எழுதிருக்காங்க. அது அவங்க கையெழுத்து தான்னு அவங்க பேரண்ட்ஸ்ஸும் சொல்லிட்டாங்க. ஆனா, அவங்க கையெழுத்து மாதிரி அச்சுப் பிசகாம இருக்குறது தான் என்னோட சந்தேகமே. சாகப்போற யாராவது நிறுத்தி நிதானமா ஒரு புள்ளி கூட விடாம கை நடுக்கம் இல்லாம எழுத முடியுமா ஏஞ்சல்? சோ, அந்த லெட்டர் அவங்க எழுதிருக்க வாய்ப்பு இல்ல. அண்ட் அந்த பாய்சன் பாட்டில்! அதல விக்டிமோட பிங்கர் பிரிண்ட் இருக்கு. ஆனா அந்த பாய்சனை விக்டிம் குடிக்கல. கொலை பண்ண வந்தவன், அவன் வச்சுருக்குற பாய்சனை தான் எதுலயோ மிக்ஸ் பண்ணிக் குடுத்துருக்கணும். ஏன்னா, அந்த பாட்டில்ல இருந்த பாய்சன், டாய்லட்ல ப்ளெஷ் ஆகி இருக்கு. அப்படி அதுல ஊத்துன பாய்சனோட சில ட்ராப்ஸ் வெளியிலயும் சிதறி இருக்கு. இப்ப சொல்லு இது தற்கொலையா?” என்றான் அமர்த்தலாக.

அவனை இமைக்காமல் பார்த்து வைத்தவள், “சிபிஐக்கு இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லியா தரணும்! அட்லீஸ்ட் அதையாவது ஒழுங்கா பண்ணு” எனப் பாராட்டப் பிடித்தம் இல்லாமல் ஏளனம் செய்தாள்.

“நான் எல்லாமே நல்லா தான் பண்ணுவேன்… ட்ரை மீ!” என சூட்சமாக புன்னகை செய்ய, அக்கூற்றில் அமிழ்ந்து போயிருந்த கோபம் பீறிட்டு வந்தது.

“டைம் என்ன? நான் கிளம்பனும். இன்னொரு தடவை டபிள் மீனிங்க்ல பேசுன, வாயை உடைச்சுடுவேன்” எனக் கடுப்படித்தாள்.

“முடிஞ்சா செஞ்சுக்க” அதற்கும் சவால் விட்டவன், அடுத்த பாட்டில் வைனை எடுத்திருந்தான்.

கூடவே, சிக்கன் தந்தூரியும் சூடாக தட்டில் இருந்தது.

“வைன் தான் குடிக்க மாட்ட. ஜூஸ்?” என வினவளாகக் கேட்டவனிடம்,

“உன்னை நம்பி எதையும் குடிக்க மாட்டேன்” என்றாள் திணக்கமாக.

அதில் சிரித்து விட்டவன், “உன்னை மயங்க வச்சு தான் ரசிக்கணும்னு இல்ல. இப்ப நினைச்சா கூட மயக்க மருந்தே இல்லாம உன்னை மயங்க வைப்பேன்…” என கர்வமாக கூறினான்.

“என்னை அவ்ளோ வீக்குன்னு நினைச்சுட்டியா யுக்தா. இவர் பெரிய மன்மத டேஷு!”

“ஹேய்… நீ என்கிட்ட வீக்காகுவன்னு சொல்லல ஏஞ்சல். உன்னைக் கீழ அனுப்பிட்டு, போற வழில எல்லா லைட்டையும் ஆப் பண்ணிட்டாலே, நீ பயத்துல மயங்கிடுவ தான. இதுக்கு எதுக்கு நான் போதை மருந்து எல்லாம் வேஸ்ட் பண்ணனும் சொல்லு!” என்று இயல்பாகக் கேட்க, அவள் முகம் வெளிறியது.

“அப்படி பண்ண மாட்ட தான?” விழி தெறிக்க அவள் வினவ,

மௌனப்புன்னகை வீசியவன், “நீ என்னை அந்த நிலைமைக்குத் தள்ளாத வரை!” என்றான் நிதானமாக.

எழுந்த கோபத்தை அடக்க வழி தெரியாமல் அவள் திணற, அவனோ சிக்கன் பீஸ்களை காலி செய்யத் தொடங்கினான்.

‘ஒன்னு அதிகமா பேசுறான், இல்லன்னா அன்லிமிட்டடா சாப்பிடுறான். இந்த வாய்க்கு இவன் ரெஸ்டே குடுக்க மாட்டான் போல…’ என நொந்து கொண்டவள், ஒரு மணி நேரத்தைக் கடினப்பட்டு கடத்தினாள்.

அவன் சொன்ன நேரம் முடிந்ததும் கதவைத் திறந்து விட்டவன், விளக்குகளையும் எரிய விட்டான்.

அவள் வேகமாக லிப்ட்டின் அருகில் சென்று விட்டு பின் திரும்ப, அவனோ அவள் திரும்பிய நேரம் அவளை அணைத்தபடி “நாளைக்கும் இதே டைம். இதே பிளேஸ். குட் நைட் ஏஞ்சல்” என்று அவள் காதில் ஒரு முத்தம் வைத்தான்.

அவனை வலுக்கொண்டு தள்ளி விட்டவள், “லிமிட் க்ராஸ் பண்ணாத யுக்தா!” என்று கண்டிக்க,

“ஜஸ்ட் ஹக் தான பண்ணேன். இவ்ளோ நேரம் உன்னை டச் பண்ணாம இருந்ததே பெருசு ஏஞ்சல். யூ டெம்ப்ட் மீ க்னோ!” என்றான் குழறலாக.

“ச்சை குடிச்சுட்டு உளறாத!” எனக் கர்ஜித்து விட்டு கீழே சென்று காரில் ஏறி பறந்து விட்டாள்.

வீட்டின் அருகே காரை நிறுத்தியதும் தான் மூச்சே விட முடிந்தது அவளுக்கு.

‘ஒரு நாளைக்கே இப்படின்னா இன்னும் ஆறு நாளைக்கு அந்தப் பரதேசியை எப்படி தான் சமாளிக்கப் போறேனோ தெரியல…’ என நொந்தபடி வீட்டிற்குள் வந்தவளைத் தடுத்து நிறுத்தினார் சிவகாமி.

“உன் கன்னத்துல என்ன காயம்?” என்ற கேள்வியோடு.

அத்தியாயம் 10

சிவகாமியின் கேள்வியில் பின்னந்தலையை கோதிய விஸ்வயுகா, “ஒரு நாய் பிராண்டிருச்சுமா” என்றாள் எரிச்சலை அடக்கிக்கொண்டு.

“நாய் மேல ஏறி கன்னத்துல பிராண்டுற வரை என்ன செஞ்சுட்டு இருந்த. இங்க காட்டு. டிடி இன்ஜெக்ஷன் போட்டியா?” என அக்கறையுடன் வினவ, மறுப்பாக தலையசைத்தாள்.

“நந்து” என மகனை அழைத்தவர், “இதுக்குலாம் லேட் பண்ணக் கூடாது விஸ்வா. முதல்ல இன்ஜெக்ஷன் போடு” என்று பணித்தார்.

மாடி அறையில் இருந்து நந்தேஷும், கீழ் அறையில் இருந்து ஷைலேந்தரியும் வந்து விட்டார்கள்.

சிவகாமி மகனிடம், “நந்து நம்ம டாக்டரை வரச் சொல்லு. நாய் பிராண்டி இருக்காம். இவளைப் பாரு எவ்ளோ அசால்ட்டா இருக்கான்னு” என்றதும் அவனும் பதறினான்.

ஷைலேந்தரியோ தமக்கையின் கன்னத்தை அங்கும் இங்கும் திருப்பி பார்த்து விட்டு, “இதைப் பார்த்தா தெருநாய் கடிச்ச மாதிரி இல்லையே. மனுஷ நாய் கடிச்ச மாதிரில இருக்கு…” என்று சந்தேகத்துடன் முணுமுணுக்க,

அவள் கையைத் தட்டி விட்ட விஸ்வயுகா, “இந்த அம்மா சிஐடி சங்கரு. வந்துருச்சு கண்டுபிடிக்க…” என்று முறைத்து விட்டு அறைக்குச் சென்றாள்.

அவளோ விடாமல் விஸ்வயுகாவைத் துரத்தி, “அடியேய் என் ஹேண்ட்ஸம் பாயை தான பார்க்கப் போன. அவன் எதுவும்…” என்று மேலும் கூறும் முன், விஸ்வயுகா பார்வையால் சுட்டெரிக்க, “இல்லடி… அவன் எதுவும் நாய் வளர்க்குறானான்னு கேட்க வந்தேன்” என்று இளித்து வைத்தாள்.

“ம்ம் நாய் வளர்க்கலை. அவனை அவனே தின்னு தின்னு வளர்த்துட்டு இருக்கான்” என்று கடுப்பாக,

அந்நேரம் அவளது தந்தை மோகன், அசோக் அனைவருமே அறைக்குள் நுழைந்து என்ன ஏதென்று விசாரித்தனர்.

“ஒன்னும் இல்லப்பா. ரொம்ப ஆழமாலாம் இல்ல காயம்” என்று சமாளித்தாலும் அவர்கள் பதற்றத்தை குறைக்கவில்லை.

இறுதியில் சௌந்தரும் வந்து விட்டவர், “என்னடா ஆச்சு? காரை விட்டு ஏன் இறங்குன. பாரு எப்படி சிவந்து நிக்குதுன்னு” என்று கவலைப்பட, “ஐயோ சித்தப்பா… இடைல கார் பிரேக் டவுன் அதுனால காரை நிறுத்தினேன். அப்போ ஒரு நாய் பிராண்டிருச்சு அவ்ளோ தான்” என்றவளும் பொய்யை தொடர வேண்டிய நிர்பந்தம்.

இதற்கிடையில் மருத்துவரும் வந்து டிடி ஊசியைப் போட்டு விட, ஐயோ என நொந்து போனாள் விஸ்வயுகா.

“டேய் பரதேசி… அம்மா தான் சொன்னாங்கன்னா நீயும் டாக்டரை வர சொல்லிடுவியா?” என்று நந்தேஷைக் குற்றம் சாட்ட,

” என்ன விஸ்வூ இவ்ளோ கேர்லெசா இருக்க. இன்பெக்ஷன் ஆகிட்டா ரொம்ப கஷ்டம். நாளைக்குலாம் நீ தனியா போகாத. நாங்களும் வர்றோம். இன்னைக்கு உன்ன மட்டும் அனுப்பிட்டு எனக்கு நிம்மதியே இல்லை!” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

வீட்டாரின் அன்பில் உதட்டோரம் புன்னகை துளிர்த்தாலும், “நான் என்ன போருக்கா தனியா போனேன். அவனைப் பேசி சரி கட்டணும்ல. இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன் நந்து. யூ ஜஸ்ட் காம் டவுன்” என்று அவனை சமன்படுத்தினாள்.

இது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் அல்ல! அந்த கொலைகளும் சரி அதனைக் கையாளும் அவனும் சரி என உள்ளுக்குள் முணுக்கென இருந்தாலும், அதனை அசட்டையாக ஒதுக்கி விட்டாள்.

தனக்கு ஒன்றென்றாலும் துடிக்கும் இந்தக் குடும்பத்திற்கு ஒரு இழுக்கு என்றால் அவள் பார்த்துக் கொண்டா இருப்பாள்?

நந்தேஷ் அவளை உறங்கச் சொல்லி விட்டு வெளியில் போக, ஷைலேந்தரி இன்னும் அவளை யோசனையாகப் பார்த்திருந்தாள்.

“என்னடி?” விஸ்வயுகா கேட்டதும்,

“இல்ல நாய் பிராண்டுனாலும் அஞ்சு விரலும் தான பதிஞ்சு இருக்கணும். இது ஒரு மார்க்கமா இருக்கே! ரெண்டு கீறல் தான் இருக்கு. நியாயமா அஞ்சு கீறல் இருக்கணுமே” என்று நாய் கையைப் போல தனது கையை வைத்து மீண்டும் அவள் காயத்தை ஆராய,

“ம்ம்… நாய்க்கு மூணு விரல் விளங்காம இருந்துச்சு” என்றாள் நக்கலாக.

அந்த மனித நாய் இரண்டு பல்லால் நறுக்கென கடித்தது இன்னும் நினைவிலாடி எரிச்சலைக் கொடுக்க, ‘இவள் வேற’ என்று மேலும் காய்ந்தாள்.

வெளியில் சென்ற ஷைலேந்தரி கையில் ஐஸ் பேக்குடன் வந்து விட்டாள்.

“இன்னுமாடி உனக்கு சந்தேகம் தீரல…” சலிப்புடன் விஸ்வயுகா கேட்டதும்,

“அடியேய் திரும்பித் தொலை. ஊசியைப் போட்டுட்டு ஒரு வாரத்துக்கு புலம்பிக்கிட்டே இருப்ப. ஐஸ் பேக் வச்சுக்கோ” என்று அக்கறையுடன் அவளுக்கு ஊசி போட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தாள்.

ஒத்தடம் கொடுத்த இடம் தான் குளுகுளுவென இருந்தது. மனதோ தீயாக எரிந்தது.

காலையில் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக மைத்ரேயன் விஸ்வயுகாவின் அறைக்குத் தான் வந்தான்.

“விஸ்வூ நாய் கடிச்சுடுச்சாமே…” என்று ஆரம்பிக்க, கையெடுத்துக் கும்பிட்டவள், “நாயடி அடிப்பேன். தயவு செஞ்சு போய்டு!” என்றதும் சிரிப்பை அடக்கிக்கொண்டவன், “ஒரு அக்கறை…” என்று இழுத்தான்.

“ஒரு சக்கரையும் வேணாம்” எனப் பொறிந்ததில் வேறு வழியற்று வெளியில் சென்றான்.

அங்கு ஷைலேந்தரி யோசனையுடன் நிற்க, “இவள் ஏன்டி இப்படி குரைக்கிறா” என்றதும்,

“அவள் குரைக்கிறது இருக்கட்டும். உனக்காக எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது. சைட்ல ஒரு சின்ன இஸ்யூ. கடைசி ஆறு மாசத்துக்கான ப்ரொபைல் லிஸ்ட் எல்லாம் தெரியாம டெலிட் ஆகிடுச்சு மைதா” என்றாள் பதற்றமாக.

“வாட்?” என அவள் லேசாய் கத்த, அவன் வாயை மூடியவள், “கத்தித் தொலையாத. அவளுக்கு கேட்டுச்சுன்னா என்னை கண்டதுண்டமா வெட்டி காக்காவுக்கு போட்டுடுவா. என்னை எப்படியாச்சு காப்பாத்துடா” எனக் கண்ணைச் சுருக்கி அழுவது போல பாவனை செய்ய, அவளைத் தள்ளி நிறுத்தி விட்டு, “பார்த்து ஒர்க் பண்ண மாட்டியா?” என்று கடிந்து கொண்டான்.

சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகே இழந்தவைகளை மீட்டு எடுத்தான் மைத்ரேயன்.

“இதை டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம் ஷைலா…” மடிக்கணினியில் இருந்து பார்வையை எடுக்காமல் கூற,

“சூப்பர்டா மைதா” என்று பாராட்டினாள்.

ஆனால் டெஸ்ட் செய்யாமலேயே சுழல் நாற்காலியை அவள் புறம் திருப்பியவன், “அந்த சிபிஐயை தான ஹேண்ட்ஸம்ன்னு சொன்ன. அப்போ அவன்கிட்டயே போய் நீ டெலிட் பண்ணுனதை ரெட்ரைவ் பண்ணிக்கோ” என்று அசட்டையாகக் கூறினான்.

“டேய் விளையாடாத. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆத்தா மகமாயி கண்டுபிடிச்சு வந்துடுவா. ப்ளீஸ் டா மைதா” என்று அவன் தாடையைப் பற்றி கெஞ்ச, அவனோ உதடு குவித்து திமிர் குறையாமல் அமர்ந்திருந்தான்.

“அந்த சிபிஐ எல்லாம் ஒரு ஆளாடா. நீ தான்டா நிஜ ஹேண்ட்ஸம் கை. கூடவே வளர்ந்ததுனால உன் அருமை எனக்குத் தெரியல மைதா. பேர்ல மட்டும் மைதா இல்ல. நீ பார்க்குறதுக்கும் மைதா மாவு மாதிரி பளபளன்னு தான் இருக்க! என் நண்பன்டா. ப்ளீஸ்டா சோதிக்காம ரெட்ரைவ் பண்ணி குடுடா” என்று மீண்டும் கெஞ்சிட, எழுந்த புன்னகையை அடக்கிக் கொண்டவன்,

“சரி சரி ரொம்ப கெஞ்சாத வச்சுக்கோ” என்று பிரச்சனையை சரி செய்து கொடுத்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டவள்,

“டேய் மைதா மாவு, புளிச்ச மாவுல பண்ணுன பேன் கேக் மாதிரி இருந்துக்கிட்டு என்னையவே கதற விட்டுட்டீல. என் சிபிஐ தான்டா ஹேண்ட்ஸம்மு. நீ ஹட்ஸன் தயிருடா என் தயிர் சட்னி…” எனப் படபடவென அவனைக் கலாய்த்து விட்டு அவன் அடிக்க வரும் முன் ஓடியே விட்டாள்.

பற்களை நறநறவெனக் கடித்த மைத்ரேயன், ‘மவளே இருக்குடி உனக்கு’ எனப் பொருமிக்கொண்டான்.

பலவித யோசனைக்குப் பிறகு மாலை தாண்டும் நேரத்தில் விஸ்வயுகாவின் அறைக்குச் சென்றான்.

அவள் தீவிரமாக மடிக்கணினியில் புதைய, “விஸ்வூ!” எனத் தயக்கத்துடன் அழைத்த நண்பனை நிமிர்ந்து பார்த்தவள், “ம்ம் சொல்லு” என்றாள்.

நீ லவ்வைப் பத்தி என்ன நினைக்கிற?” என்றதும் மடிக்கணினியைத் தட்டுவதை நிறுத்தியவள், “நான் நினைக்க என்ன இருக்கு?” என தோள்களை குலுக்கினாள்.

“உனக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும்ல” மைத்ரேயன் விடாமல் கேட்க,

“லவ்வால என் குடும்பத்துல என்னென்ன நடந்துச்சுன்னு தெரியும்ல உனக்கு. நந்து லவ் பண்ணுனதே தேவையில்லாத ஆணியா நினைக்கிறேன். பாரு… அந்த லவ்வும் உண்மையா இல்ல, அதனால ஏகப்பட்ட பிரச்சனை வேற” என்று சலித்தாள்.

அதில் அவன் முகம் வாடியது. “எல்லா லவ்வும் ஏமாற்றத்துல முடியாது தான விஸ்வூ” என ஆரம்பிக்கும் முன்னே, “எனக்கு பெருசா நம்பிக்கை இல்ல மைதா. நான் பார்த்தவரை லவ் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்துறது தான் மிச்சமா இருக்கு. ஐ அவாய்ட் தோஸ் திங்க்ஸ்” என்று முடிவாய் உரைத்தவள்,

“ஆமா எதுக்கு திடீர்னு லவ் பத்தி கேட்குற?” எனக் கேட்டாள்.

“அது… உங்கிட்ட ஒரு லவ் மேட்டர் சொல்லணும்” எனத் திக்கி திணறி ஆரம்பிக்கும் போதே, “அதை என்கிட்ட சொல்லலாம்” என்ற உறுமல் சத்தம் கேட்டது வாசல்புறம் இருந்து.

சாட்சாத் யுக்தா சாகித்யன் தான் நின்றிருந்தான்.

“உனக்கு கதவை தட்டிட்டு வர்ற பழக்கமே இருக்காதா?” அவனைக் கண்டு மைத்ரேயன் எரிச்சல் பட,

“வை ஷுட் ஐ?” என்று புருவம் உயர்த்திக் கேட்டபடி அவனருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், ஷூ காலை முன்னிருந்த மேஜை மீது தூக்கி வைத்தான்.

தனக்கெதிரே காலை நீட்டியவனின் மீது கடும் சினம் எழ, “என்ன வேணும் உனக்கு?” என விஸ்வயுகா குரலை உயர்த்தினாள்.

“எனக்கு என்ன வேணும்னு ஏற்கனவே நான் சொல்லிட்டேனே ஏஞ்சல். மறுபடியும் மறுபடியும் கேட்க ஆசையா இருக்கா? நீ… நீ தான் எனக்கு வேணும். லவ், லஸ்ட் மேட்டரை எல்லாம் நம்ம தான டிஸ்கஸ் பண்ணனும்? கண்டவன் கூட பேச இது என்ன கட்சி மீட்டிங்கா?” என்றான் ஏளனத்துடன்.

அவனது கூற்றில் மைத்ரேயன் பொங்கி விட, அவனது சட்டையைப் பிடித்து அறையப் போனான்.

அதற்குள் யுக்தா அவன் கையைப் பிடித்து வளைத்து விட்டு, “இன்னும் ஒரு இன்ச் வளைச்சா, ஆறு மாசத்துக்கு நீ மாவுக்கட்டு தான் போடணும்! பண்ணட்டா?” என எகத்தாளத்துடன் கேட்க, மைத்ரேயன் மற்றொரு கையால் அவனை அடிக்க முயன்று தோற்றான்.

விஸ்வயுகா அவசரமாக யுக்தாவின் முன் வந்து அவனைப் படபடவென அடித்து, “டேய் விடுறா அவனை! விடுன்னு சொல்றேன்ல. யுக்தா ஜஸ்ட் ஸ்டாப் திஸ்” என்று கத்தியதுமே கையை விட்டான்.

“என்னை எதிர்க்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்குப் பல தடவை யோசிச்சுக்கோ!” என விரல் நீட்டி எச்சரிக்க,

மைத்ரேயன் வலித்த கையை பிடித்தபடி சூடாகப் பார்க்க, விஸ்வயுகா “மைதா நீ ரூம்க்கு போ” என்று உத்தரவிட்டாள்.

“விஸ்வூ அவன் இஷ்டத்துக்குப் பேசிட்டு இருக்கான். என்னைப் பார்த்துட்டு இருக்க சொல்றியா? இவன்கிட்ட உன்னைத் தனியா விட்டுட்டுலாம் என்னால போக முடியாது…” என்று வீம்பாக நிற்க,

“ஓகே… அப்போ இருந்து ப்ரீ ஷோ பாரு” என யுக்தா எழும்போதே விஸ்வயுகா நான்கடி பின்னால் நகன்றாள்.

‘பிறவிப் பைத்தியம் இது!; என்று அவனைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த விஸ்வயுகா, “மைதா நீ கிளம்பு முதல்ல” என்று பல்லைக்கடித்தாள்.

“முடியாது”

“திஸ் இஸ் மை ஆர்டர் மைத்ரா” கடுமையுடன் விஸ்வயுகா கூறியதில், “கண்டவனுக்காக என்னை ஏன் போக சொல்ற?” என்று எகிறினான்.

“கண்டவனுக்குப் பேசி புரிய வைக்க முடியாது. உனக்குப் புரியும்ல. ஜஸ்ட் அவுட்” என பொறுமை இழந்ததில் கோபத்தை அடக்கியபடி வெளியில் சென்றான்.

யுக்தா பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து ஸ்டைலாக நிற்க,

“நீ எதுக்குடா இப்ப வந்த?” என்றாள் சிவந்த விழிகளுடன்.

“உன்னைப் பார்க்க நான் எப்ப வேணாலும் வருவேன். காரணம் சொல்லணும்னு அவசியம் இல்லையே ஏஞ்சல்!” என்றவனின் சிரிப்பில் எரிச்சல் பீறிட்டு எழுந்தது.

அந்நேரம் படபடவென கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஷைலேந்தரி, அங்கு யுக்தா நிற்பதை எதிர்பாராமல் திகைத்துப் பின், “விஸ்வூ ஒரு நிமிஷம்” என்று தனியே அழைத்தாள்.

ஷைலேந்தரியின் பின் செல்லும் முன்னே காலை நீட்டி அணை கட்டியவன், “என்ன?” என்றான் விழி உயர்த்தி.

ஷைலேந்தரி மறுப்பாக தலையசைத்து விட்டு பேந்த பேந்த விழித்தபடி நிற்க, “என்னனு சொல்லு” என யுக்தா அதட்டலாகக் கேட்டதும்,

“அது… அது… இன்னொரு சூசைட்!” என்று திக்கியதில், விஸ்வயுகா திகைத்தாள்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
64
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்