Loading

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். வெரி சாரி. ரெகுலர் அப்டேட்ஸ் போடலாம் ன்னு நினைச்சேன். ஆமா அகைன் ஒரு தடங்கள்🤣 இனிமே புதன் மற்றும் சனிக்கிழமை அப்டேட்ஸ் வரும் drs. போட்டி தேதிக்குள்ள முடிக்க முடியாது. சோ, இந்த ஸ்டோரி யை போட்டில இருந்து ரிமூவ் பண்ணி இருக்கேன். அடுத்த பதிவு சனிக்கிழமை போடறேன்.

அத்தியாயம் 9

இரு காதல் உள்ளங்களும் இறுகிய அணைப்பில் சுற்றம் மறந்திருந்தனர்.

“சஹி…” மெல்ல முணுமுணுத்தவன், “லவ் யூ சோ மச்…” என்றான் அழுந்த முத்தமிட்டபடி.

அந்த வார்த்தை அவள் உயிர் வரை இனிக்க, மெல்லிய பயமும் எழுந்தது.
லேசாய் நகர்ந்து அவன் முகம் பார்த்தவள், “உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்ததுக்கு அப்பறமும் இத சொல்லுவீங்களா?” எனக் கேட்டாள் தவிப்பாக.

சில கணம் அமைதி காத்தவன், அவளை பார்வையால் ஊடுருவிவிட்டு, “எனக்கு ஞாபகம் வந்த பின்னாடியும் நீ இதே மாதிரி என்னை கட்டிப்பிடிச்சுப்பியா பிரின்சஸ்?” என்று அவள் கன்னத்தில் தன் கன்னம் உரசினான்.

சவரம் செய்யப்படாமல் புல்லாக வளர்ந்திருந்த தாடி, பாவையின் கன்னத்தில் காயம் செய்தது, மனதையும் தான்.

மேலும் விவாதிக்க இயலாமல், அவனின் தீண்டலில் உருகிய தேகத்தை அடக்கவும் வழி தெரியாமல் தவித்தவள்,

“இன்னைக்கு நீங்க சரியாவே ரெஸ்ட் எடுக்கல தீரா. போய் கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் பால் கொண்டு வரேன்.” என்று கூறி விட்டு அடுப்பு நோக்கி திரும்பிட,

“இடத்தை காலி பண்ணுடான்னு இன்டைரக்ட்டா சொல்ற அதான?” என்றான் கேலியாக.

‘கண்டுபிடிச்சுட்டானே…!’ என மருண்டவள், பேச இயலாமல் நிற்க, நமுட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகன்றான் தீரன்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. அவ்வப்பொழுது அவனது நெருக்கங்கள் தொடர, தவித்துப் போனது என்னவோ சஹஸ்ரா தான்.

அதே நேரம், அவள் காட்டும் அக்கறையை அன்பாக மாற்றி அவளின் மீதே காதலாய் பொழிந்தான்.

உறங்கும் போதெல்லாம் அவளையும் அருகில் படுக்க செய்து, கையைப் பிடித்துக் கொண்டே தான் உறங்குவான்.

உணவு உண்ணும் போதும், சண்டையிட்டு அவளை ஊட்டி விட வைப்பான். முதலில் இதெல்லாம் தயக்கத்தைக் கொடுத்தாலும், அவளுக்கும் பிடித்தே இருந்தது.

விரும்பியே அனைத்தும் செய்தவளுக்கு, இடை இடையே அவன் செய்யும் குறும்புகளைத் தான் தடுக்க இயலவில்லை.

அவள் ஊட்டி விடும் போதெல்லாம், அவளது மெல்லிடையில் கரங்கள் கொண்டு பயணிப்பவன், சாதாரணமாகவே இருப்பான். ஆனால், அவள் அல்லவோ நெளிய வேண்டியது இருக்கும்.

“தீரா… கையை எடுங்க.” அவள் அதட்டலாக பேச வந்தாலும் அது கொஞ்சலாகவே முடிந்து விட, அடுத்ததாக அவனது குறுநகை அவளை மொத்தமாக கொள்ளையிட்டுச் செல்லும்.

உறங்கும் முன்பு, பெண்ணவளின் முகம் முழுதும் முத்தங்களை தெளித்து விட்டே நகர்வான். ஆனால் அனைத்தும் எல்லை மீறாத தீண்டல்களே. அதுவே அவளுக்கு நிம்மதியைக் கொடுக்க, ஒவ்வொரு நாளும் அவன் காட்டும் காதலில் தன்னை இழந்து கொண்டிருந்தாள்.

அன்று, “பிரின்ஸஸ் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல…” என உதடு குவித்து முறைத்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன சொல்றீங்க?” அவள் புரியாமல் கேட்க,

“பின்ன என்னடி, உன் புருஷன் நாள் முழுக்க வீட்லயே இருக்கேன். ஒரு தடவையாவது ஆசையா பக்கத்துல வந்து உட்காருறியா? தலை வலிக்குது முடியலைன்னு சொன்னா தான் உனக்கு பாசம் வருமா. அப்ப மட்டும் தான் என்னை டச் பண்ணுவியா?” விழிகள் சுருங்க மனையாளின் மீது கோபம் கொண்டான்.

அவனின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் மனம் கரைந்தாலும், ஐயோ என்றிருந்தது.

அவனே தொடர்ந்து, “எப்ப பாரு, நான் தான் ஹக் பண்றேன், கிஸ் பண்றேன். ஒரு தடவையாவது நீ குடுக்குறியா?” என சிலுப்பிக் கொண்டவனைக் கண்டு திருதிருவென விழித்தாள்.

வெட்கம் வேறு பிடுங்கித் தின்ன அவஸ்தையுடன் நின்றிருந்தவளை ஆடவனின் விழிகள் வெகுவாய் ரசித்தது.

“பதில் பேசுடி!” புருவத்தை உயர்த்தி அவன் மீண்டும் வினவ, “உங்களுக்கு ஞாபகம் வரட்டும். அப்பறம் பார்க்கலாம்” என உளறி விட்டு நகர எத்தனித்தவளை தடுத்தான்.

“ம்ம். உடனே இப்படி ஒரு காரணத்தை சொல்லிடு. எனக்கு நம்ம லவ் பார்ட்லாம் ஞாபகம் வரட்டும்டி அப்பறம் உன்னை இப்படி தள்ளி நிக்க வச்சு பேச மாட்டேன்.” என்னும் போதே அவன் குரல் குழைந்தது.

கிட்டத்தட்ட அவளது மேனி முழுதும் அவன் மீது தான் படர்ந்து இருந்தது.

‘இதுக்கு பேர் தான் தள்ளி நிக்க வச்சு பேசுறதா’ என்பது போல அவள் விலகி முறைக்க, அதனைப் புரிந்தவன் போல,

“எனக்கு இதுவே ரொம்ம்ப தள்ளி இருக்குற மாதிரி தான்டி இருக்கு.” கூறிக் கொண்டே அவன் கரங்களுக்குள் அவளை அடைக்கலமாக்க, அவளும் அவனுடன் ஒன்றினாள்.

சிறிது சிறிதாக தீரனின் உடல் காயங்களும் ஆறிட, தலையில் போடப்பட்டிருந்த கட்டும் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டிருந்தது.

ஓரளவு உடல் நிலை தேறியதும், தொழிலிலும் கவனத்தை செலுத்த முயன்றான். சஹஸ்ராவிற்கும், முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்திட, அவளும் அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

“இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்ல தீரா.” அவனை அனுப்ப மனம் வராமல் சஹஸ்ரா கூற,

“எவ்ளோ நாள் தான் நிக் மட்டுமே பார்த்துப்பான் சஹி. என் பிஸ்னஸ்ன்னா மட்டும் பரவாயில்ல.  இப்ப அவனோட பிஸ்னசையும் சேர்த்து பாக்கணும். கஷ்டம் சஹி.” என்றவன் தம்பியை பற்றி பேசியதும் ஒரு கணம் முகம் சுருங்கி பின் இயல்பாக, அவளும் அதற்கு மேல் தடுக்கவில்லை.

ஆனால், பல எச்சரிக்கையுடன் தான் அனுப்பினாள்.

“வெளில எங்கேயும் அலையாதீங்க. ஆபிஸ்ல உட்காந்து பாக்குற வேலையை மட்டும் இப்போதைக்கு பாத்துக்கோங்க. மதியம் ஸ்கிப் பண்ணாம சாப்ட்டுடுங்க. மறக்காம டாப்லட் எடுத்துக்கோங்க. முடியலைன்னா உடனே வீட்டுக்கு வந்துடுங்க தீரா. நானும் ஆபிஸ்ல இருந்து வந்துடுறேன்.” என பேசிக் கொண்டே சென்றவளை, சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தான்.

“நான் அப்போ அப்போ கால் பண்றேன். கவனமா இருங்க.” என மீண்டும் அறிவுறுத்த அவன் பக்கென் சிரித்தான்.

“இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?” அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க,

அவனோ அவளின் தோள்பட்டையை வளைத்து பிடித்து, “நான் என்ன ஸ்கூலுக்கா போறேன். சவிக்கு சொல்ற அட்வைஸ் எல்லாம் எனக்கு சொல்லிட்டு இருக்க.” என்றதில்,

“நீங்க சில நேரம் அவளை விட மோசம் தீரா.” என்றாள் சிரிப்புடன்.

தன்னை கிண்டலடித்து சிரித்த இதழ்களுக்கு தக்க தண்டனை அளித்தவன், “எனக்கு இப்படி மோசமா இருக்குறது தான் பிடிச்சு இருக்குடி.” எனக் குழைந்தான்.

அக்குழைவில் அவளும் கரைந்து, “போங்க தீரா” என வெட்கத்தில் அவனை ஏறிட இயலாமல் முகத்தை மூடிக் கொள்ள, அவன் இதழ் கடையோரம் புன்னகை அரும்பியது.

அதன் பிறகு வந்த நாட்களில் இருவரும் அலுவலகம் சென்று விட, ‘அப்போ அப்போ போன் பண்றேன்’ என்றவளோ ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அவனை அழைத்து இருந்தாள்.

“நீங்க ஓகே தான தீரா? தலை வலி எதுவும் இல்லைல?” அவள் கவலையுடன் வினவ,

“நான் நல்லாதான்டி இருக்கேன். நீ என்னை மானசீகமா சைட் அடிக்காம, உன் வேலையை பாரு” என்றான் நக்கலாக.

‘போனா போகுதுன்னு போன் செஞ்சு விசாரிச்சா குசும்ப பாரு’ என வாய்க்குள் திட்டிக் கொண்டவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் அழைத்து இருந்தாள்.

இன்னொருமுறை மனையாளை சமன் செய்து விட்டு போனை வைத்தவனுக்கு, தொழிலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

நிக்கோலஸ் அனைத்தையும் ஓரளவு சமாளித்து இருக்கிறான் என்றாலும், இருவருக்கான தொழிலையும் அவன் ஒருவனே பார்க்க வேண்டும் எனும் போதே தலை சுற்றியது உண்மை தான்.

அனைத்து துறைகளிலும் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இஷ்டத்திற்கு தொழில்களை குவித்து வைத்திருந்த அவன் மீதே அவனுக்கு கடுப்பு எழுந்தது.

‘கொஞ்சம் ஆர்வத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம்.’ என தன்னை தானே அதட்டிக் கொண்டவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்த மனையாளின் அழைப்பைக் கண்டு புன்னகைத்தான்.

‘இவள் வேற…’ என செல்லக் கோபம் கொண்டவன், “என்ன தாண்டி வேணும் உனக்கு. இன்னொரு தடவை கால் பண்ணுன, நேரா அங்க வந்து கிஸ் பண்ணிடுவேன் பாத்துக்கோ.” என மிரட்டிட, செய்தாலும் செய்து விடுவானோ என்று மிரண்டவள், போனை வைத்து விட்டாள்.

எதிரில் அமர்ந்திருந்த தேவிகா தான் நக்கல் சிரிப்புடன், “அண்ணாவை விட்டுட்டு இருக்க முடியலையோ” என்றாள் கண் சிமிட்டி.

நொடியில் குப்பென சிவந்து விட்ட கன்னங்களை மறைக்க வழியில்லாமல், இன்னும் தேவிகாவின் கேலிக்கு ஆளானாள்.

தீரனுக்கு போன் செய்யாமல் ஒரு அரை மணி நேரத்தை கடத்தியவளால் அதற்கு மேல் முடியாமல், அவனுக்கு அழைக்க, அங்கு அவனோ தலையை பிய்த்துக் கொள்ளாத குறையில் அமர்ந்திருந்தான்.

நிக்கோலஸ் தான், “ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க பாஸ். போக போக உங்களுக்கே பிக் அப் ஆகிடும்” என்றான் பாவமாக.

தீரனால் தான் அப்படி விட இயலவில்லை. அவனால் ஆரம்பிக்கப்பட்ட தொழில்களில் உள்ள பிரச்சனையை கூட களைந்து விட்டான். ஆனால் உடன் பிறப்பின் தொழில்கள் தான் சிக்கலின் சின்னமாக இருக்க, நொந்து தான் போனான்.

அவனுக்கு எப்போதுமே, அனைத்தும் பெர்ஃபெக்ட் – ஆக இருக்க வேண்டும். தொழில் ரீதியில் எப்போதும் அவன் கட் அண்ட் ரைட்டாக இருப்பான். அதே தீவிரத்தை புருவ மத்தியில் ஏற்றியவன், பம்பரமாக அவன் வேலையைத் தொடர, அந்நேரம் தான், சஹஸ்ரா அழைத்து இருந்தாள்.

கவனம் முழுதும் வேலையில் இருக்க, போனை எடுத்தவன், “ஏய்… என்னடி வேணும் உனக்கு? சும்மா நசநசன்னு போன் பண்ணிக்கிட்டே இருக்க. ஆக்சிடண்ட்ல சாகாதவன், ஆபிஸ் வந்து தான் சாக போறேனா? ஓவரா பெர்ஃபார்ம் பண்ணாம வச்சுட்டு போய் வேலையை பாருடி.” என்றும் இல்லாத கடுமையுடன் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டே அழைப்பை துண்டித்தான். 

அழைப்பு துண்டிக்கப்பட்டதன் அடையாளமாக பீப் சத்தம் கேட்ட பின்னும் சஹஸ்ராவால் காதில் இருந்து போனை எடுக்க முடியவில்லை.

ஒரு கணம் அவனது கோபத்தில் அதிர்ந்து இருந்தாள். சில நாட்களாக அவள் மீது அன்பையும், கொஞ்சல் வார்த்தைகளையும் மட்டுமே பொழிந்தவன், இப்போது எரிச்சலைக் காட்டியதில் நெஞ்சம் நடுங்கியது. கூடவே கண்கள் வேறு கரித்திருந்தது.

இதையே தாங்க இயலாத தன்னால், அவனுக்கு உண்மை தெரிந்த பின் அவன் காட்டும் சினத்தை எப்படி ஏற்க இயலும் என்ற உண்மை நிலை அவளை அச்சுறுத்தியது.

அவனின்றி அவளுள் அணுவும் அசையாது என்றே அவளை மாற்றி விட்டானே!

கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்த முயன்றவள் அதில் சிறிது வெற்றியும் கண்டாள்.

ராவின் உடைய ரிசார்ட் பிராஜக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதனை பார்வையிட அங்கு சென்றாள்.

அன்றென பார்த்து ராவ் அங்கு இருக்க, அவரை கண்டுகொள்ளாமல் ரெசார்ட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி வந்தார் ராவ்.

எதுவுமே நடவாதது போல, “ஹாய் சஹஸ்ரா” என்றவரிடம் முகத்தை திருப்ப இயலாமல், “ஹாய் சார்” என்றாள்.

“உன்ன ரொம்ப நாளா இங்க ஆளையே காணோம்.” அவர் நக்கலாக கேட்பது போல தோன்றிட,

“என் ஹஸ்பண்ட்க்கு ஆக்ஸிடென்ட் சார். அதான் வரல” என்றதில்,

“வாட்? ஹஸ்பண்ட்?” எனக் கேட்டவரின் முகத்தில் அதிர்வு பிறந்தது.

“ஆமா சார். ரீசன்ட்டா தான் கல்யாணம் ஆச்சு. யாருக்கும் தெரியாது.” என்றவள், அவரின் சுருங்கிய முகம் கண்டு குஷியாகி,

“அப்பறம், என் ஹஸ்பண்ட கூட உங்களுக்கு தெரியும் சார். புரியலையா? தீரனும் நானும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” என்றாள் குதூகலமாக.

அவர் முகத்திலோ இப்போது குழப்பம் சூழ்ந்தது. கூடவே கோபம் வேறு கொழுந்து விட்டு எரிய,

“தீரனும் நீயுமா? என்ன ரகசிய திருமணமா?” நக்கலாக கேட்டவர், “ஆனாலும் அவன் இப்படி செய்வான்னு நான் எதிர்ப்பார்க்கல.” என்றதில் இப்போது அவள் விழித்தாள்.

“அன்னைக்கு உன் கூட ஜாலியா இருக்க சொன்னதே அவன் தான். நீயும் ஓகே சொல்லிடுவன்னு சொன்னான். ஆனா நீ…” என நிறுத்தியவர் அவள் அறைந்த கன்னத்தை தடவி விட்டு,

“லீவ் இட். அதுக்கு அப்பறமும் உன்ன மசிய வைக்கிறது என்ன கஷ்டமான்னு அசால்ட்டா இருந்தா, இடைல தீரன் புகுந்துட்டானா? ப்ச் பரவாயில்ல. அவனை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்ட மாதிரி என்னையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சஹஸ்ரா.” என்றார் விஷமமாக.

அவளுக்கு நிற்க கூட கால்களில் தெம்பு இல்லை.

‘தீரனா அப்படி சொன்னாரு? என்கூட… இவனை… ச்சே ச்சே இருக்காது. இவன் பொய் சொல்றான். என் தீரா இவனை மாதிரி கிடையாது. இவன் தான் ஏதோ பிளே பண்றான்’ தனக்குள்ளேயே மருகியவளின் கண்களில் நீர் துளிர்த்தது.

ராவோ, அவளின் அமைதியை சம்மதமாக ஏற்று அவளிடம் நெருங்கி, “என்னை நம்பலைன்னா தீரன்கிட்டயே கேளு சஹஸ்ரா. நான் தேவை இல்லாம பொய் சொல்ல மாட்டேன்.” என்றவரை தள்ளி விட்டவள், வீட்டிற்கு வந்த பிறகே ஆசுவாசமானாள்.

கைகள் எல்லாம் நடுங்கிட, இன்னும் ராவ் கூறிய செய்தியில் இருந்து வெளிவர இயலாமல் துவண்டாள்.

‘என் தீரா அப்படி இல்ல. நிச்சயமா இல்ல.’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், அச்சம் பரவியது என்னவோ உண்மையே.

மாலையான பிறகே, ஓரளவு வேலையை ஒதுக்கிய தீரன் நெட்டி முறித்தான். அதன் பிறகே தலைவலி எழுந்ததை உணர்ந்தவன், சஹஸ்ராவை கடிந்ததையும் உணர்ந்து தன்னையே திட்டிக் கொண்டான்.

அவளுக்கு உடனே போன் செய்திட, அவளோ அவனது அழைப்பை ஏற்கவே இல்லை. நேராக அவளது அலுவலகத்திற்கு சென்றவனுக்கு, அவள் அங்கும் இல்லை என்ற தகவலே கிடைக்க, பதற்றத்துடன் வீட்டிற்கு விரைந்தவன் அங்கும் அவளை தேடி இறுதியில் பால்கனியில் அவளைக் கண்டபிறகே நிம்மதியானான்.

இருட்டுக்குள் புதைந்திருந்த கடலை வெறித்திருந்த சஹஸ்ராவும் இப்பொழுது இருட்டுக்குள் தான் துழாவிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கே புரியவில்லை.

தன் மேல் தான் கோபமாக இருக்கிறாள் என உணர்ந்தவன், அவளை சமாதானம் செய்யும் பொருட்டு, அவள் கழுத்தில் மென் முத்தமிட, வெடுக்கென விலகி திரும்பியவளின் கன்னத்தில் கண்ணீர் தடம்.

அதைக் கண்டு அதிர்ந்தவன், “ஹே பிரின்சஸ்… சாரிடி. நான் வேலைல இருந்தா இப்படி தான் எல்லாத்தையும் மறந்துடுவேன். அதான் உன்கிட்ட கோபமா பேசிட்டேன். சாரி பிரின்சஸ்.” என்றபடி அவளின் கன்னத்தை தொட வர,

“என்னை மறந்துட்டீங்க சரி… அந்த ராவை ஞாபகம் இருக்கா?” என அழுத்தப் பார்வையுடன் வினவ, அவன் கரம் காற்றில் அப்படியே நின்றது.

“சொல்லுங்க தீரா. அந்த ராவை ஞாபகம் இருக்கா? அவன்கிட்ட என்னை விலை பேசி இருக்கீங்களே அது ஞாபகம் இருக்கா?” என அவனின் சட்டையை கொத்தாகப் பற்றி கேட்டவளுக்கு கோபமும் ஆதங்கமும் அவனைப் பார்த்த பின்பு அதிகமே ஆனது.

ஒரு கணம் திகைத்தவன், மறுநொடியே தன் மனம் கவர்ந்தவளின் கன்னத்தில் கைரேகையை பதித்து, விழியில் நெருப்பை கக்கியபடி நின்றிருந்தான்.

யாரோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
30
+1
101
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்