Loading

 

 

 

 

 

மெல்லிய கரை வைத்த அரக்கு கலர் காட்டன் பட்டு புடவை கட்டி தழைய பின்னலிட்டு தலையில் மல்லிகை பூ சரம் தொடுத்து மெல்லிய ஒப்பனையுடன் சிறிதளவு நகைகளைப் போட்டு கொண்டு கிளம்பினாள்.

ஜீவா சந்தன கலர் பேண்ட்டும் அரக்கு கலர் சட்டையும் அணிந்திருந்தான்.

ஹாசினிக்கு தலையில் பூ வைத்து நெற்றியில்  வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான். வகிடில் குங்குமம் வைத்தவுடன் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.

ஜீவா எனக்கு எப்பவும் நீ தான் வச்சுவிடனும்   என்று கூற  வேலை அதிகமா இருந்து மறந்துட்டேன்னா அதுக்கு கோச்சுக்க கூடாது என்று கூறினான் ஜீவா.

இருவரும் கிளம்பி வெளியே வர இருவரையும் நிற்க வைத்து சுற்றி போட்டார் ஜீவாவின் அம்மா.

அத்தம்மா நீங்களும் வாங்களேன் என இல்லடா டயர்டா இருக்கு நீங்க போயிட்டு வாங்க  என் கூட துணைக்கு ஆளும் இருக்கிறார்களே அப்புறம் என்ன? என்று கூறி அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

ஜீவா கார் பொறுமையா  ஓட்டிட்டு போப்பா என்று கூற சரி என்று இருவரும் கிளம்பினார்கள்.

காரில் அமர்ந்தவுடன் பாட்டினை ஓடவிட்டாள்.  பாடல் ஒலித்தது

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ.

செம பாட்டல்ல ஜீவா எனக்கு அஜித்-ஷாலினி ரொம்ப பிடிக்கும் என்று கூற. எனக்குனே பிறந்திருக்க ஜீவா அதனால்தான் எனக்கு முன்னாடியே நீ பிறந்ததே இந்த பாட்டுல சொல்ற மாதிரியே என்று கூற அவன் அவளின் கைகளை பற்றிக்கொண்டான்.

 

இருவருக்கும் மிக இனிமையான பயணமாய் இருந்தது. வீட்டிற்கு வந்ததும்  வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை வரவேற்றனர்.

மதிய உணவு விருந்திற்கு அனைத்தும் தயாரானது சிறிதளவே சாப்பிட்டான்  ஜீவா. அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் ஹாஸினி.

சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஓய்வெடுக்க அவரவர் அறைக்கு சென்றனர்.

ராஜுவும் ஜீவாவும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹாசினி ஜீவாவிடம் கண்ணைக் காட்டிவிட்டு மேலே சென்றாள்.

தனது அறைக்கு சென்றவள். மேலிருந்து கீழே ஒரு பத்து இருபது முறையாவது பார்த்து இருப்பாள்  ஆனால் ஜீவாவோ  ராஜீவ் உடன்  பேசிக்கொண்டே இருந்தான்.

 

கண்களில் ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வந்தது நேத்து நான் தூங்கன்னு   பழி வாங்குறதுக்குனே  நீ  பேசிட்டு இருக்க ஜீவா என்று நினைத்தவள் அமர்ந்து டீவி பார்த்து கொண்டே இருந்த அவள் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.

கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க ஹாசனியின் அறைக்கு வந்தான்  வரும்பொழுது மாலை 3 மணி இருக்கும்.

 

இங்கு ஜீவாவிற்கு என்று அவள் தனியாக ஷார்ட்ஸும் டி-சர்ட்டும் லுங்கி பனியன் என அனைத்துப் பொருட்களும் வாங்கி வைத்திருந்தாள்  அவளது செல் பிலே.

டேபிள் மீது வைத்திருந்த துணியை எடுத்து மாற்றியவன்.  ஹாசனியின் அருகில் அமர அவளது கண்களில் கண்ணீர் காய்ந்திருந்தது.

இவன் வந்து அமர்ந்தவுடன் எழுந்து அமர்ந்தாள். நேத்து நான் தூங்கிட்டேன் என்ன பழி வாங்குறதுக்குன்னு பன்றியா என்றாள் எவ்வளவு நேரம் உனக்காக நான் வெயிட் பண்ணேன் என்று கூற அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

என்ன ஹாசினிமா  சின்னபிக்ளை மாதிரி  பிஹேவ் பண்ணுற நீ,

கல்யாணம் ஆகி வந்து இருக்கோம் நம்ம  சாப்பிட்டு வந்து நம்ம ரூமை  கதவை மூடிட்டா என்ன நினைப்பாங்க. சின்ன பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்காத  குட்டிமா   என்று அவளை அழைத்து தனது மடியில் அமர வைத்துக்கொண்டாள்.

ஹே நீ யாரு? நான் ஏன் உன்னை பழி வாங்கணும்.  சின்ன புள்ள தனமா இருக்கு நீ பண்றது என்று கூறினான்.

ஏனோ தெரியல ஜீவா நீ எப்பவும் என் கூடவே இருக்கணும் போல இருக்கு ஆனா அப்படி இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியுது என் மனசு சொல்லுது ஆனா என் மூளை அதை எடுக்க மாட்டேங்குது ஜீவா என்று அழுதாள்.

 

ஹாசினிமா ஒன்னும் இல்ல நம்ம ரொம்ப நாள் பிரிந்திருந்தோம் இல்லையா அந்த ஏக்கம் மனசுக்குள்ள அப்படியே இருக்கு வேற எதுவும் இல்லடா.

நான் உன்னை நினைத்து தான் இருக்கேன் ஆனா உன்னுடைய மனநிலை வேறு என்னுடைய மனநிலை வேற என்னை விட சின்ன பொண்ணு இல்ல இன்னும் மெச்சூரிட்டியாகணும் நீ.

நான் நிறைய பேரு சந்திக்கிறேன்.

 

ஐயையோ சாரி  பெரியபட்டு மஹாளோட ஓனர் உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு  சொல்ல முடியாது என்று கூற.

அப்படி எல்லாம் பேசாதே ஜீவா எனக்கு பிடிக்காது என்று கூறி அவள் அவனின் தலையை கோதிக்கொண்டே ஏன் ஜீவா  மதியம் ஒழுங்கா சாப்பிடல என்று கேட்டாள் 

என்ன ஹாசினிமா நான் சாப்பிட்டேன்  இல்லை நீ சரியாக சாப்பிடவே இல்லை எனக்கு நல்லா தெரியும் என்று கூறினாள்.

உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு  சொல்லு ஜீவா உனக்கு நான் செஞ்சு தரேன் நம்ம வீட்டுக்கு போன பிறகு  என் கூறி  அவனது உதட்டில் மெண்மையாக கடித்து வைத்தாள்.

ஏய் ஏண்டி கடிக்கிற வலிக்குது என்றான்
நாளைக்கு வீட்டுக்கு போனதும் உனக்கு கெடா விருந்து என்றான்.

எனக்கு கெடா விருந்து வேணாம் ஜீவா விருந்து தான் வேணும் என்று அறையை விட்டு வெளியே ஓடினாள்.

பிறகு கீழே வந்த பிறகுதான் தான் என்ன சொன்னோம் என்று புரிந்து அவள் தலையை தட்டி கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

என்ன ஹாசினி என்று கேட்க ஒன்னும் இல்ல அண்ணி  சும்மா தான் என்று கூறினாள்.

 

மாலை அனைவருக்கும் ஜீவா விற்கும் அவளுக்கும் காபி எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல ஜீவா அமர்ந்து நியூஸ்  பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும் நாக்கினை துரித்துக்கொண்டு மென்னகை புரிய அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்து காபி கொடுத்துவிட்டு அமர்ந்து காபி குடிக்க ஆரம்பித்தாள்.

ஜீவா காபி குடித்ததும் காபி கப்பை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற பிறகு நிம்மதியாக இருந்தது.

  அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்ய. ஜீவா  ஒரு ஜீன்ஸ் பேண்ட் டிசர்ட் என நார்மலாக வெளியே கிளம்பி வந்தான். அவளை அழைத்து அந்த குழந்தையோட பேரன்ட்ஸ்  ஆபீஸ் வந்திருக்காங்களாம்  நான் போய் பாத்துட்டு வரேன் என்று கூற 

அவளோ அவனுக்கு இங்கே இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று உணர்ந்தவள் போயிட்டு சீக்கிரமா வந்திடுங்க என்று அனுப்பி வைத்தாள்.

இரவு 9 மணிக்கு வந்தான் ஜீவா பிறகு அனைவரும் பேசிக் கொண்டே இரவு உணவினை முடிக்க தனக்கு டயர்ட்ட  இருக்கிறது என்ற
அறைக்குச் சென்றுவிட்டாள்.

இரவு 10 மணியாகியும் ஜீவா  வரவே இல்லை ராஜீவ் அவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஹாசினி கீழே வந்தவள் அவர்கள் இருவருக்கும் பிளாஸ்கில் பால் டம்ப்ளர்   எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

ராஜீவ் இடம் ஜீவாவும் மதியமே நான் உன் கூட உக்காந்து பேசிட்டு இருந்தேன் உன் தங்கச்சி அழுது அலப்பறைபண்ணிட்டா என்று கூற போடா  எந்தப் பாத்திரம் எங்கிருந்து வரும்ன்னு தெரியாது  கிளம்பு டா மச்சி சீக்கிரம் என்றான்.

ஆல் த பெஸ்ட் என்று கூறி கைகுலுக்கி அனுப்பி வைத்தான்.

காத்திருந்து தரையில் அமர்ந்து முட்டியில் கைகோர்த்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

மெதுவாக கதவை திறந்து உள்ளே வந் தவன்  பாத்ரூமிற்கு சென்று குளித்து விட்டு வெளியே வந்தான். அவன் குளித்துவிட்டு வருவதற்குள் ஹாஸனி ஜீவா முதன் முதலில் செய்த புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து நெற்றியில் பொட்டு வைதுக்கொண்டிருந்தாள்.

குங்குமம்  எடுத்துக் கொண்டு வந்து ஜீவாவிடம் நீட்ட அதனை எடுத்து அவளது நெற்றியில் பதித்து மென்மையாக முத்தமிட்டான்.

பனியன் மாற்றிக் கொண்டு வந்து  ஹே ஹசினிமா இது அந்த சாரிதானா என்று கூறிக்கொண்டே கதவினை  சென்று தாழிட்டு விட்டு வந்தான்.

இந்த புடவையை இன்னும்  வச்சிருக்கியா? பழைய புடவைனு  யாருக்காவது கொடுத்திருப்பேன்னு  நினைச்சேன் என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

உன் நினைவாய் என்கிட்ட இருந்த ஒரே அடையாளம்  ஜீவா இதை எப்படி  வச்சு இருக்கேன்னான்னு கேட்ட

நீ எப்படி அப்படி கேட்கலாம் என்றாள்.

அவள் ஒவ்வொரு பிறந்தநாளும் கடந்த 10 வருஷமா இதுதான் என்னுடைய பஸ்ட் சாரி தெரியுமா? என்று கூற. அவளை கட்டி அனைத்து முத்தமிட்டான். சாரிடாமா  மன்னிச்சிடு என்ன மன்னிச்சிடு  என்று கேட்க அவனது நெஞ்சத்துடன் இறுக்கி முத்தமிட்டான்.

கண்களை உருட்டி பேசிக் கொண்டிருந்தவள் இடைப்பற்றி அருகே இழுத்தவன் அவளது நெற்றி கன்னம் என்று முத்தமிட்டவன் அவனது இதழ்களை சுவைக்க தொடங்க அவளும் அவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்துப் போனாள்.

அவள் ஒரு நிமிஷம் இரு என்று ஓடியவள் டம்ளரில் பாலை எடுத்துவந்து ஜீவாவிற்கு கொடுத்தாள். அவன்  குடித்து அவளையும்  குடிக்க வைத்தான் .

அவனது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் இது என்ன மா என? அண்ணி தான் சொன்னாங்க ஜீவா என்ற அப்புறம் வேற என்ன சொன்னாங்க உங்க அண்ணி என்று கேட்க மிகவும் வெட்கத்துடன் முகம் சிவந்த கண்களை மூடினாள்.

அவளைத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் இட்டான் அவளது காதருகில் குனிந்து ஹாசனிமா  உனக்கு ஓகே வா  டா என்று கேட்க அவல்  அவனது மீசை  முறுக்கி  கண்ணத்தில் மென்மையாய் முத்தமிட அவன் மார்பில் முகம் புதைக்க தொடங்கினாள்.

பெண்வளின் விருப்பத்தை உணர்ந்தவன்  அவளை தன்னுடையவளாக்க முயற்சி செய்தான்.  சிறியவள் கொஞ்சம் தடுமாறினாலும் அவள்  தன்வனுக்கு ஈடுகொடுத்து தன்னவனின் ஆசையை நிறைவேற்றினாள்.

தன் அவளை மென்மையாய் கையாண்டான்

வெட்கத்துடன் இருந்தவள்  நெற்றியில்

முத்தமிட்டு தேங்க்ஸ் டா என அவள்

அவனுடைய மீசையை முறுக்கி அவனது

இதழில் மென்மையாக முத்தமிட்டு அவனது

மார்பில் புதைந்து போனாள்.

 

இல்லற வாழ்க்கை இனிதே ஆரம்பமானது.

காலையில் வழக்கம் போல்  எழுந்திரிக்க  ஹாசினியோ அவனது மார்பில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஹாசினியை  அவனது மார்பில் இருந்து மென்மையாய் நீக்கியவன் அவளை தலையணை கொடுத்து படுக்க வைத்தான். அவளின்  நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு குளியலறைக்கு குளிக்கச் சென்றான்.

அதற்கு ஹாசினியும் எழுந்து விட அவளும் குளித்து  விட்டு வந்தாள்.

காலை உணவினை  சாப்பிட்டு முடிக்க இருவரும் ஜீவாவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

காரில் வந்து அமர்ந்தவுடன் தனது வேலையை  தொடங்கினான் இடையில்  கைவைத்து கிள்ளிக்கொண்டே வந்தான். 

ஜீவா எனக்கு கூச்சமா இருக்கு அமைதியா ட்ரைவ் பண்ணிட்டு வா என்று கூறினாள்.
அப்புறமா ஹாசினிமா வெளியே எங்காவது போகலாமா என்று கேட்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு நான் போய் டியூட்டில ஜாயின் பண்ணனும் என்று கூறியவுடன் ஹாசினியின்   முகம் சோர்ந்து போனது .

ரெண்டு நாள் தான் என்று கூற சரி ஹாசினிமா நீ வேற மதிய விருந்து வேணும்மன  ஏற்பாடு பண்ணி விடுவோம் என்று கூற  அவனை பார்த்து சிரித்துக் கொண்டே அவனின்  வலது காதை திருகினாள். முகத்தில் வெட்கத்துடன்.

திருமணமாகி இரண்டு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. காலையில் ஆபீசுக்கு கிளம்பி சென்றால்  இரவு வரமணி 10 ஆனது ஹாசினிக்கோ  என்ன செய்வது என்று புரியாமல் மண்டை வெடித்தது.

மலை கிராமத்திற்கு கோயம்புத்தூருக்கு கிட்டத்தட்ட காரில் பயணம் செய்தாலே முக்கால் மணி நேரம் ஆனது.

பரவாயில்லை இன்னைக்கு பேசியாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இரவு பதினொன்றரை மணிக்கு வீட்டிற்கு வந்தான்.

அடுத்த நாள்  ஞாயிற்றுக்கிழமை இல்லை  லீவு இருக்கும் டவுட்டு தான்  காக்கி சட்டை போட்டா  என நினைக்கவே மாட்டேங்குறான் என்று கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.

, 🌺🌺 வாசம் வீசும்🌺🌺

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்