1,126 views

அலுவலகத்தில் இருந்த அனைவரும் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்க, அன்பினி அக்னி இருவர் மட்டுமே இருந்தார்கள். வெளியூர் சென்றிருந்த செல்வகுமார் ஒப்பந்தம் தொடர்பாக பேச காத்திருக்க சொல்லி இருந்தார். அரசு சார்பில் நடக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் இது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை  தொழில்துறையை சார்ந்த அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக வழங்குகிறது இந்த ஒப்பந்தத்தை. இதைக் கைப்பற்றுவது என்பது பெரிய சவாலான விஷயம் என்றாலும் வாங்கிவிட்டால் சிம்ம சொப்பனமாக விளங்கலாம். 

 
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செல்வகுமார் நிறுவனம் இதை கைப்பற்றி இருந்தது. அதன்பின் வாய்ப்பு கிட்ட வில்லை. இப்போது அக்னி துணையிருக்கும் தைரியத்தில் வீரியமாக செயல்படுகிறார். கடந்த முறை செல்வகுமாரின்  தொழில் எதிரி கைப்பற்று இருந்தார் இந்த ஒப்பந்தத்தை. இந்த முறை அவரை ஜெயிக்க வேண்டும் என்பது முதல் குறிக்கோளாக இருக்கிறது இவருக்கு.
 
 
“அடிமை இன்னும் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. டயர்டா இருக்கு.” ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருந்த அன்பினி சோர்வாக கேட்க,
 
“சோர்வா இருக்கா இல்ல குடிக்கணும்னு பரபரப்பா இருக்கா.” மடிக்கணினியில் பார்வையை வைத்திருந்தவன் மாற்றாமல் நக்கல் செய்தான்.
 
“அடிமை முதலாளி பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா பேசுற. எல்லாம் எங்க அப்பா கொடுக்குற இடம்.” என்று சோர்வில் மேஜை மீது படுத்துக் கொண்டாள்.
 
 
“உனக்கெல்லாம் பார்ட்டில இடம் கொடுத்தான் பாரு அவன செருப்பால அடிச்சிருந்தா நீ இந்த மாதிரி ஆறு மணிக்கு மேல கை அரிக்க  புலம்ப மாட்ட.” என்றவன் மீது மேஜையில் இருந்த பென்சிலை தூக்கி அடித்தாள்.
 
அடித்த பொருள் அவன் மேலே படாமல் வேறெங்கோ பட, வேறு பொருளை தூக்கி அடித்தாள். பார்வை திரையில் ஊடுருவ விட்டு கைகளை தற்காக்கும் கவசமாக பயன்படுத்தினான் தன்னை தாக்க வரும் பொருளை கேட்ச் பிடித்து. அதில் அதிசயத்து பார்த்தவள்,
 
“அக்னி எப்படி பார்க்காம கரெக்ட்டா கேட்ச் பிடிச்ச.” என்ற ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை அவன் முன்பு வைக்க, பதில் அளிக்கவில்லை அக்னி. 
 
“உன்ன தான் அடிமை கேக்குற.” என்றவளை கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கவனம் ஆனான்.  அவனின் உதாசீனம் கோபத்தை கொடுத்தது அன்பினிக்கு. 
 
அக்னியின் விழிகள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பொருளாக அவன் மீது தூக்கி அடித்தாள். சில பொருள் மேலே பட்டும், சில பொருள் தரையில் பட்டும் அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. இருந்தும் பார்வையை மாற்ற வில்லை மடிக்கணினியில் இருந்து.
 
“ரொம்ப பண்ணாத அக்னி எவ்ளோ நேரம் கூப்டுட்டு இருக்கேன் ஒரு தடவை பார்த்தா என்ன.”என்றவள் முகம் உண்மையாகவே சோர்வில் இருந்தது. 
 
அப்போதும் பதில் தர விரும்பவில்லை அக்னிசந்திரன். தோல்வியை தழுவியவள் மீண்டும் மேஜையில் கண் மூடினாள். நொடிக்கொரு முறை அவனை நிமிர்ந்து பார்க்க அசைவில்லை அவனிடம். கண்மூடி படுத்தவள் முகத்தில் கைகளை வைத்துக்கொண்டு அவன் அறியா வண்ணம் ஓரக்கண்ணால் விரல்களுக்கு இடையில் அவன் பார்க்கிறானா என ஆராய்ந்தாள். 
 
கொஞ்சம் கூட அசைவில்லை அவன் உடலில். பார்வை மடிக்கணினில் இருக்க, கருவிழிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. பாதி உடல் இருக்கையில் நேராக அமர்ந்திருந்தது. ஒரு கையில் தட்டச்சு படாதப்பாடு பட்டுக்கொண்டிருக்க, மற்றொரு கையில் நோட்ஸ் இருந்தது. என்ன உற்று கவனிக்கிறானோ தெரியவில்லை அடிக்கடி நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது. ஏசி அவனுக்கு நேராக இருக்க நேரடி காற்று கேசத்தை அசைத்துக் கொண்டிருந்தது. ஆராய ஆரம்பித்தவள் ரசிக்க தொடங்கி விட்டாள். 
 
குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் திரையில் மட்டுமே அவன் பார்வை இருக்க, ஓரக்கண்ணால் பார்க்க வைத்தது அலைபேசி ஒலி. உடலை அசைக்காமல் பார்வையை மட்டும் வலது புறம் திருப்பியவன் மீண்டும் திரையில் பார்வையை பதித்தான். அதைப் பார்த்தவள் மூளை ஒரு ஐடியா கொடுக்க, உடனே தன் போனிலிருந்து அழைப்பு விடுத்தாள்.
 
இந்த முறையும் ரோபோ போல் விழிகளை மட்டும் கைபேசியின் திரையில் பதித்தவன் எதிரில் இருப்பவளை முறைத்தான். அவளோ மேஜையில் கண்மூடி படுத்திருக்க, அமைதியாக தன் வேலையை கவனித்தான். சத்தம் வராமல் சிரித்தவள் மேஜைக்கு கீழே கைபேசியை வைத்துக் கொண்டு மீண்டும், அழைக்க, மீண்டும் முறைத்தான்.
 
இரண்டாவது முறைக்கே முறைத்தவன் ஆறாவது முறையாக அழைக்கும் போது பேன் ஸ்டாண்டை அவள் மேல் படாதவாறு தூக்கி அடித்தான். சத்தமிட்டு சிரித்தவள் இப்போது அவன் எதிரில் நின்று கொண்டு அழைக்க,
 
“டாக்குமெண்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாத.” என்று வேலையை கவனித்தான். அவனைக் கண்டு வக்கனை செய்தவள் அருகில் சென்றாள். காதில் மெதுவாக “அடிமை” என்று அழைக்க திரும்பவில்லை. 
 
தன் முடியை நன்றாக சுருட்டி அவன் காதில் விட, முறைத்தான் கடுமையாக. காதோரத்தில் மீண்டும் சத்தம் வராமல் சிரிப்பை கொடுத்தவள் கழுத்தில் இறங்கி வருட ஆரம்பித்தாள். போன ஜென்மத்தில் கடும் தவம் செய்யும் முனிவராக இருந்திருப்பான் போல அவள் தீண்டுகிறாள் என்பது தெரிந்து வளைந்து கொடுக்கவில்லை. 
 
 
அக்னியின் மேனரிசம் என்னவோ செய்ய, தோளில் கைகளை மாலை ஆக்கினாள். நெஞ்சில் விழும் கைகளை பிடித்தவன் கடுமையாக முறிக்க, “அக்னி வலிக்குது” என்றாள்.
 
தன்மேல் பட்ட கைகளை வீசி அடித்தவன் திரையை கவனிக்க, சற்று நேரம் ஓய்வெடுத்தவள் மீண்டும் சீண்ட ஆரம்பித்தாள். 
 
“பொறுமையா சொல்லும் போதே கேட்டுக்கோ கோபப்படுத்தாத.” என்று விட்டு தன் வேலையை கவனிக்க, அடங்குவதாக இல்லை அன்பினிசித்திரை. பொறுத்திருந்தவன் நிலை மோசமாக  பக்கத்து அறைக்கு செல்ல முயன்றான். கதவை மறைத்து நின்றவள், 
 
“நீ ஏன் இப்படி இருக்க அக்னி. இப்படி ஒரு பொண்ணு தானா கிட்ட வரா கொஞ்சம் கூட மதிக்காம போற. இதுதான் உன்கிட்ட மயங்க வைக்குது.” என்றவளின் பார்வை மயக்கத்தோடு அளந்தது அவனை.
 
“வழி விடு எனக்கு வேலை இருக்கு.” பார்வை கூறாக,
 
“ப்ச்! இங்க இருந்தே பண்ணு.” என்றாள்.
 
“எனக்கு ஆர்டர் போடுற உரிமை உனக்கு இல்லை நகரு.” என்றவன் அவளை தள்ளிவிட்டு நகர, பின்னால் ஓடியவள் கட்டி நின்றாள். 
 
உடலில் பட்டாசு துகள்கள் பட்டது போல் வெடித்து சிதற்றினான் அவளை. வேகமாக தள்ள கீழே விழுந்தவள் முட்டி பழமாக அடிப்பட்டது. வலியில் சுருண்டு படுத்தவள் எழாமல் இருக்க, “அவ்ளோ தான் உனக்கு. பொண்ணா டி நீ எல்லாம் எப்ப எவன் கிடைப்பான்னு இருப்பியோ! இன்னொரு தடவை  நெருங்கி பாரு அப்புறம் இருக்கு.” என்றவன் அவளைக் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டான்.
 
அரை மணி நேரங்கள் கடந்து செல்வகுமார் அழைத்த பின் தான் மடிக்கணினியை மூடி வைத்தான். மீட்டிங்க்கு அழைக்க அன்பினியிடம் சொல்வதற்காக வெளியில் வந்தான். அவன் எங்கு தள்ளிவிட்டு சுருண்டு விழுந்தாளோ அந்த இடத்தில் அப்படியே கவிழ்ந்து படித்திருந்தாள்.
 
பதட்டம் கொள்ளாதவன் அருகில் சென்று ஷூ கால்களால் தரையை தட்டினான். எந்த அசைவும் இல்லை அவளிடத்தில். சந்தேகம் கொண்டு  தொடலாம் என்று சென்றவன் நாகரீகம் கருதி கையை எடுத்துக் கொண்டு, “அன்பினி” என்றழைத்தான்.
 
கால்களை வயிற்றில் மடக்கியவாறு படுத்திருந்தவளை மீண்டும் அழைக்க, அசைவில்லை  உடலில். அப்போது தான் பதட்டம் சூழ ஆரம்பித்தது அவனை. ஒரு காலை மடக்கி அவள் அருகில் அமர்ந்தவன் எழுப்ப முயன்றான் தொட்டு. மெதுவாக ஆரம்பித்தவனின் குரல் வேகமாக அழைக்க ஆரம்பித்தது அவளை. 
 
கவிழ்ந்து இருந்த உடலை நிமிர்த்தி மடியில் தாங்கி, “அன்பு எந்திரிடா.” என்றவன் குரலில் அளவு கடந்த பயம் தொற்றிக் கொண்டது. 
 
“அன்பு இங்க பாரு.” விடாமல் அவளை எழுப்பிக் கொண்டிருக்க, தூங்குவது போல் கண்மூடிக்கிடந்தாள்.
 
“ஏய்!” என்று கன்னம் தட்ட,  நினைவு வந்து தண்ணீரை தேடினான். 
 
வேகமாக தேடி எடுத்தவன் பாட்டிலை திறக்க முற்பட பதட்டத்தில் முடியவில்லை. கண்மூடி நெற்றி பொட்டில் நிதானத்தை கொண்டு வந்தவன் விழித்திறக்காமல் பாட்டிலை திறந்தான். முகத்தில் தண்ணீர் தெளிக்க பலன் இல்லாமல் போனது. “அன்பு” என்று விடாமல் அழைத்துக் கொண்டிருந்தவன் முகத்தை குளிக்க வைத்து விட்டான் தண்ணீரில். 
 
 
சிறு நெளிவு கூட அவள் முகத்தில் வராமல் இருக்க, பயம் பெரும் பயமாக மாறிவிட்டது. தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் கீழே அமர்ந்து கொண்டான். கை வளைவுக்குள் கொண்டு வந்து,
 
“அன்பு ” என்றான்  உடைந்த குரலில்.  “நான் தான் அடிக்கிறன்னு தெரியுதுல அப்புறம் எதுக்கு கிட்ட வர. ரொம்ப வலிச்சுதா டி” முகத்தை அவள் முகத்தோடு வைத்து 
எழுப்பிக் கொண்டிருக்க, அசுர வேகத்தில் அவனின் பின்னந்தலையை பிடித்தது அன்பினியின் கைகள். 
 
பயத்தில் சேர்த்தணைத்து கொண்டிருந்தவன்  யோசிப்பதற்குள் உதடு சிக்கிக்கொண்டது கன்னியின் இதழ்களில். மற்றொரு கையையும் பின்னந்தலையோடு சேர்த்துக் கொண்டவள் முடிகளை முடிந்தவரை விரல்களோடு பிணைத்துக் கொண்டாள். சேர்த்தணைத்திருந்த உடல் அவன் மடிக்கு மாறிக்கொள்ள உதட்டை கவ்வியவள் அதை ருசி பார்த்தாள்.  அவன் முரட்டுத்தனமாக விலகி கொண்டிருப்பதால் முதல் முத்தம் இனிக்காமல் போய்விட்டது. 
 
 
வேகமாக தன்னிடமிருந்து பிரித்தவன் கன்னத்தில் ஐவிரல் தடம் ஆழ பதியும் அளவிற்கு வைத்தான். வாங்கிக் கொண்டவள் கண்மூடி அமர்ந்திருக்க, மீண்டும் அடித்தான். 
 
கழுத்தைப் பிடித்து தள்ளியவன் “ச்சீ அசிங்கமா இல்ல உனக்கு.” என்று  அடிக்க,
 
“இல்ல” என்றாள் இன்னும் ஒரு அடியை வாங்கிக் கொண்டு.
 
விட்டாள் தன் கையால் கொன்று விடுவோம் என பயந்தவன் அங்கிருந்து நகர்ந்தான். பின்னால் ஓடியவள் வேகமாக தடுக்க,
“வேணா  நெருங்காத.” என உறுமினான்.
 
அவள் அசராமல் இருக்க, தள்ளிவிட்டவன் நடக்கத் துவங்கினான். அவன் அறைக்கு செல்ல, பின்னால் சென்றவள் காலரைப் பிடித்து சுவற்றில் சாய்த்தாள்.
 
பிடித்த கைகளை கடுமையாக முறுக்கி வளைத்தான். வலி உயிர் போனாலும், “என்னடா சொன்ன எப்ப எவன் கிடைப்பான்னு இருப்பனா!. வரவன் எல்லாம் நீ இல்ல அன்பினி மயங்க.  உன் கண்ணுக்கு நான் தப்பா தெரிஞ்சா அது என் தப்பு இல்ல பார்க்குற உன் தப்பு.” என்றாள் வலியை மறைத்துக் கொண்டு. 
 
 
கைகளை விட்டவன் திரும்பி நிற்க, “எதுக்கு கிஸ் பண்ணன்னுலாம் தெரியல. ஆனா உன்னை எனக்கு சுத்தமா பிடிக்காது. என்னோட முதல் முத்தம் இப்படி பிடிக்காத ஒருத்தனோட இருக்கும்னு நினைக்கல. அதே நேரம் கொடுத்ததை தப்புன்னு ஏத்துக்க முடியல. நான் உன்ன ரசிக்கிறேன் அக்னி. உன்ன மட்டும் தான்.” என்று வெளியேறி விட்டாள்.
 
 
***
 
இருவருக்குமான பேச்சுவார்த்தையில் செல்வகுமார் பலமுறை அழைத்து விட்டார். அங்கு ஒப்பந்தம் தொடர்பாக சுழன்று கொண்டிருந்தவர் நேரத்தை ஒதுக்கி மீட்டிங்கு ஏற்பாடு செய்திருக்க, இருவரால் சொதப்பப்பட்டது.
 
வெளியே சென்ற அன்பினி எதற்காக இச்செயலை செய்தோம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தாள்.  அவன் பேசியது உண்மை என்பது போல் அடங்கிப் போன மனதை காரி துப்பிக் கொண்டிருந்தாள். 
 
 
உள்ளிருந்த அக்னிசந்திரனின் மனம் ஒரு நிலையில் இல்லை. பெண் நெருங்கும் அளவிற்கு இடம் கொடுத்ததை நினைத்து  வேதனை உற்றான். தனக்காக அங்கு ஒரு பெண் காத்திருக்க, தெரிந்தோ தெரியாமலோ வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட முதல் உறவை நினைவில் இருந்து அழிக்க நினைத்தான்.
 
 
இருவரும் அழைப்பை எடுக்காமல் இருக்க செல்வகுமார் புலம்ப ஆரம்பித்தார் தன் மகனிடம். விக்ரம் தங்கைக்கு அழைக்க, அவள் அதையும் எடுக்கவில்லை. அடுத்ததாக அக்னி சந்திரனை அழைத்தான். இந்த முறை கவனம் நிதானம் கொண்டதால் அழைப்பை எடுக்க, செல்வகுமார் கைக்கு மாறியது போன்.
 
“சாரி சார் கொஞ்சம் வொர்க்.” என்று சமாளித்தான். 
 
“பரவால்ல அக்னி. நான் உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் அவ்ளோ தான்.” என நிம்மதி அடைந்தார். 
 
பேச்சுக்களுக்கு இடையே மகளைப் பற்றி விசாரிக்க, அவனோ நழுவ பார்த்தான். இருப்பினும் செல்வகுமார் விடாமல், “அக்னி அவளும் போன் எடுக்கல கொஞ்சம் ஃபேன கொடு” என்றார்.
 
 
அதற்கு மேலும் தடை சொல்ல முடியாமல் அவள் முன்பு நின்றான். எந்த யோசனையும் இன்றி சாதாரணமாக அமர்ந்து இருந்தாள் அன்பினிசித்திரை. மேஜையை தட்டியவன் ஃபோனை நீட்ட, யார் என்ற யோசனையில் காதில் வைத்தாள்.
 
 
தந்தையின் குரலைக் கேட்ட பின், “ஒன்னும் இல்லப்பா ஃபோன் சைலன்ட்ல இருக்கு. நீங்க ஃப்ரீயா இருந்தா சொல்லுங்க இப்போ மீட்டிங் வச்சுக்கலாம்.” என்றவளுக்கு,
 
“இல்ல அன்பினி அது முடியாது. நாளைக்கு காலைல ஏழு மணிக்கு ஆபீஸ் வந்துடுங்க. நாளைக்கு பேசியே ஆகணும் எந்த சாக்கும் சொல்லாம ரெண்டு பேரும் அட்டென்ட் பண்ணுங்க.” என்றவர் அழைப்பை துண்டித்து விட்டார்.
 
“அடிமை நாளைக்கு காலையில மீட்டிங் இருக்கு சீக்கிரம் வந்துரு.” என்று சாதாரணமாக பேசினாள்.
 
அவனும், “சரி நீங்க கிளம்புங்க  அப்ப தான் காலையில சீக்கிரம் வர முடியும்.”  சாதாரணமாக பேசினான்.
 
“எனக்கு போக தெரியும் நீ கிளம்பு.” என்று சட்டம் பேசியவளை முறைத்தவன்,
 
“இப்ப மணி பன்னிரண்டு என்னால வீட்டுக்கு போயிட்டு வர முடியாது.” என்றான்.
 
“சோ!”
 
“இந்த மாதிரி நேரத்துல எப்பவும் ஆபீஸ்ல தங்கறது தான் பழக்கம் நீங்க கிளம்புங்க.” என்று இருவரும் எதுவும் நடக்காதது போல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 
 
“ம்ம்!” என்றவள் பார்வை தொடர்ச்சியாக வாசல் பக்கம் சென்றது. அங்கு யாரோ நிற்பது போல் தோன்ற நன்றாக தலையை சாய்த்து பார்த்தாள். அவள் பார்ப்பதை அறிந்து அக்னியும் திரும்பி பார்க்க, அங்கு யாரும் இல்லை. 
 
எழுந்தவள், “அக்னி யாரோ நிக்கிற மாதிரி இருக்கு.” என்று வாசல் நோக்கி நகர,
 
“இந்த டைம்ல யாரும் வர மாட்டாங்க.” என்றவாறு அவனும் நகர்ந்தான்.
 
வாசல் அருகில் இருவரும் நிற்க யாரோ வெளியில் நிற்பதை உணர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அன்பினி ஒரு அடி முன் வைத்தாள்‌. அவளை தடுத்தவன் முன் நகர , இப்போது அவள் தடுத்தாள்.
 
“உஷ்!”என்றவன் கதவு திறந்திருந்த அறை வாசல் பக்கம் நின்றான். 
 
 
அவளைப் பார்த்து ‘பின்னால் வராதே’ என்று சைகை செய்தவன் கால்களை நகர்த்த, வேகமாக அக்னியின் கைகளை பிடித்த அன்பினி
“அக்னி வேணா நான் போற.” என்றாள் சத்தம் வராமல்.
 
“ப்ச்! இப்ப எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க பேசாம நில்லு.” என்று காற்று நிரம்பிய வார்த்தையை‌ அவளிடம் கொட்டியவன் வாசல் சுவற்றில் ஒட்டி நின்றவாறு நகர்ந்தான். 
 
இன்னும் ஒரு அடி வைத்துவிட்டால் வெளியில் சென்று விடலாம் என்ற நிலையில் அவன் தைரியத்தோடு நகர, “பயமா இருக்கு போகாத ப்ளீஸ்டா‌” என்ற அன்பினி அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள். 
 
கோபத்தோடு தள்ளியவன் அடிக்க கை ஓங்க, அவள் முகத்தில் தெரியும் பயத்தைக் கண்டு அமைதியாகிவிட்டான். 
 
“நான் போற நீ இரு.” என்று அவனுக்கு முன்னால் நிற்க,
 
“ஒன்னும் ஆகாது நீ பின்னாடி வா.” என அவளை பின்னால் நிறுத்தினான்.
 
அன்பினி பாதுகாப்பாக நிற்கிறாள் என்பதை உறுதிப்படுத்தியவன் வேகமாக அறை வாசல் முன்பு நிற்கும் நேரம் எதிர்ப்புறம் ஓடியவள் கதவை சாற்றி விட்டாள். திடுக்கிட்டு திரும்பியவன், “நீ என்ன லூசா! இப்ப எதுக்கு கதவை சாத்துன. எவனாவது இருந்திருந்தா இந்த சத்தத்துல உஷாராக்கி ஓடி இருப்பான்.” என்று சிடுசிடுத்தான்.
 
“பரவால்ல நீ வெளிய போகாத.” என்றாள் பதட்டமாக.
 
“நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க முடியாது என்னால.” என்றவன் கதவை திறக்க,
 
“சொல்லிட்டு இருக்கல  போகாதன்னு. சொன்னா கேக்க மாட்டியாடா நீ ” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
 
“சட்டைய விடு.” அக்னி கோபத்தோடு கூற,
 
“விட முடியாது.”
 
“ஏன்?”
 
“விட்டா நீ வெளிய போவ.”
 
“அதனால உனக்கு என்ன பிரச்சினை “
 
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல நீ போகக்கூடாது அவ்ளோ தான்.” தீர்க்கமாக சொல்லி முடிக்க, கேட்கவில்லை அக்னிசந்திரன்.
 
வலுக்கட்டாயமாக சட்டையை பிடித்திருந்த அவள் கைகளை எடுத்தவன் கதவின் மீது கை வைக்க,
 
“சொன்னா கேக்க மாட்டியாடா அப்படி என்ன திமிரு உனக்கு. நீ பாட்டுக்கு போற அவன் ஏதாவது பண்ணா என்ன பண்ணுவ. நைட் நேரம் வேற எமர்ஜென்சிக்கு யாரையும் கூப்பிட கூட முடியாது. அறிவுகெட்ட தனமா பண்ணாத அக்னி. நான் அப்பாக்கு ஃபோன் பண்ணி கேமரால யாரு இருக்கான்னு பார்க்க சொல்றேன்.” என்று சத்தமாக கத்தினாள்.
 
அதில் அக்னியின் மனம் அவளிடம் சிக்கிக் கொண்டது. புருவம் சுருங்க அன்பினியை உற்று நோக்கினான். கோபத்தில் உதடுகள் துடித்தது. பிடித்திருந்த கைகள் அளவுக்கு மீறி நடுங்க,  கண்கள் படபடக்க இனம் புரியாத கலவரத்தில் எதையோ காப்பாற்ற போராடியது. 
ஏசி அறையில் வேர்வை பூத்திருக்க, முகம் சிவந்திருந்தது அன்பினிக்கு. 
 
“அன்பு” என்றதும் அவனை அணைத்துக் கொண்டாள். “போகாத வேணாம் அக்னி. அன்னைக்கு என்னை கூட்டிட்டு போய்ட்டாங்க.” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் சிரமப்பட, யோசனையோடு நினைவை புரட்டினான். 
 
 
அன்பினி தலை மீது கை வைத்து தடவியவன் கட்டிக் கொள்ள, தலை உயர்த்தி பார்த்தவள் பழையபடி கட்டிக் கொண்டாள். அவளை சமாதானப்படுத்த நினைத்து பேச ஆரம்பிக்கும் நேரம், “சித்!” என்ற மகேஷின் குரல் கேட்டது இருவருக்கும்.
 
 
சுயம் பெற்றவர்கள் விலகி நிற்க, “நான் தான் மகேஷ்.” என மீண்டும் குரல் கொடுத்தான். 
 
மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியே தள்ளியவள், “உள்ள வா!” என்றாள்.
 
அதற்குள் அக்னி கதவை திறந்திருக்க, இருவருக்கும் காட்சியளித்தான் மகேஷ். “இப்படித்தான் வந்து நிற்பியா? ஒரு ஃபோன் பண்ணிட்டு வர வேண்டியது தான. யாரோ என்னமோன்னு நினைச்சி அவ்ளோ பயந்துட்டோம். ஏதோ திருடன்னு நினைச்சு அடிச்சிருந்தா என்ன பண்ணி இருப்ப அறிவில்ல உனக்கு. இந்த நேரத்துல எதுக்கு வந்த?” என்று திட்டினாள்.
 
 
“எது நீ பயந்தியா!” என்றவன் சிரிக்க ஆரம்பித்தான்.
 
“ஸ்டாப் இட்!” என்றவள் குரலில் கடுமை.
 
“பின்ன என்ன சித் நீ எல்லாம் பயப்படுற ஆளா? இவன் பயந்தான்னு சொன்னா கூட ஓரளவுக்கு ஒத்துப்பேன்.” என்றதும் அக்னி முறைக்க,
 
“எதுக்கு வந்தன்னு கேட்டேன்” என்றாள் அன்பினிசித்திரை.
 
“என்ன சித் நீ இப்படி கேக்குற. ஏதாச்சும் காரணம் இருந்தா தான் உன்னை வந்து பார்க்கணுமா. நம்ம அப்படியா பழகி இருக்கோம். இப்போ எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட. பிரண்ட்ஸ் தான் எப்பவும் முக்கியம்னு பேசுன என் சித் நீ இல்ல. பார்த்து ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு நேரம் ஒதுக்கி பார்க்க வந்தா நல்லா அசிங்கப்படுத்திட்ட.”என்றவன் கிளம்பினான்.
 
 
நினைவு திரும்பியவளாக அவனை தடுக்க, “வேணா சித் நான் கிளம்புறேன். உனக்காக நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்ட்டு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன். சர்ப்ரைஸா உன்ன கூட்டிட்டு போய் காட்டலாம்னு ஆசையா வந்தேன் பாரு என்னை சொல்லணும்.” அவள் அழைக்க அழைக்க நடையை கட்டினான். 
 
 
“சாரி மகேஷ் ஆபீஸ் டென்ஷன் பிளஸ் இவ்ளோ  நேரம்  யாரோ என்னவோன்னு பயந்தது எல்லாம் சேர்ந்து இப்படி பேசிட்டேன். தப்பா நினைக்காம வா.” என்று அவன் கை பிடித்தாள். 
 
உடனே மனம் இறங்கியவன், “இதுக்கு எதுக்கு சித் சாரி எல்லாம்.” என்று சகஜமாக இருக்கையில் அமர்ந்தான்.
 
 
 
இருவரும் நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நடப்பது அனைத்தையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த அக்னியை கவனித்த மகேஷ், “இவன் எதுக்கு இன்னும் இங்கே இருக்கான் சித்.” எனக் கேட்டான்.
 
 
“அப்பா மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருந்தாரு மகேஷ். அதனால தான் ரெண்டு பேரும் இங்கே இருக்கோம். இப்ப மீட்டிங் கேன்சல் ஆகி காலையில பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு. கிளம்புற நேரம் தான் நீ வந்துட்ட.” என்றதும்,
 
“ஓ!” என்ற ஓசை கொடுத்தவன் அக்னியை பார்க்க, அவனோ பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான் இவனை.
 
 
அப்பார்வை அவனுள் வெடவெடுக்க, “எதுக்கு அப்படி பார்க்குற.” என்றான்.
 
 
பார்வையை மாற்றாதவன், “நீ எப்ப வந்த?” என்றான்.
 
 
பதட்டமான மகேஷ், “இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி” என்றான்.
 
 
“எவ்ளோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.” மீண்டும் அக்னி கேட்க, அன்பினியை ஒரு பார்வை பார்த்தவன்,
 
“நீங்க ரெண்டு பேரும் உள்ள பேசிட்டு இருக்க சத்தம் கேட்டதால வெளியேவே நின்னுட்டு இருந்தேன். அப்புறம் டக்குனு கதவை சாத்திட்டீங்க அதனால தான் குரல் கொடுத்தேன்.” என்றான்.
 
“ம்ம்!” என்ற அக்னி பார்வைகளால் கேள்வி எழுப்ப, பதில் சொல்ல மறுத்தது மகேஷின் முகம்.
 
“அக்னி உக்காரு.” என்றவளை மகேஷ் கடுப்போடு பார்க்க, “எனக்கு என்னமோ நீ ரொம்ப நேரமா எங்களை பார்த்துட்டு இருந்த மாதிரி தோணுது.” என்றான் அக்னி. 
 
 
பதில் சொல்ல முடியாதவன் அன்பினியை துணைக்கு இழுக்க, இப்போது தான் மகேஷை திட்டியதால் அவனுக்கு சாதகமாக பேசி அக்னியின் வாயை அடைத்தாள்.
 
இருப்பினும் அக்னியின் பார்வை கேள்வியை தொடுக்கவும், அவன் பார்வை பதிலை கொடுக்காமல் நழுவுவதுமாக இருந்தது.
 
 
அம்மு இளையாள்.
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
25
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *