Loading

அத்தியாயம் – 9

 

“அப்பா என்னை கேட்காம ஆதிரா குரூப்ஸ்க்கு எதுக்கு அப்ரூவல் கொடுத்திங்க” என்று கிட்டதட்ட சீறினான்.

கல்யாணி கொடுத்த கேசரியை சாப்பிட்டுக் கொண்டிருந்த அகர்ணன் அவளது பெயரை கேட்டதும் காதுகளை தீட்டி விகர்ணன் கூற வந்ததை கேட்க ஆரம்பித்தான்.

“என்கிட்ட கேட்டு தான் நீ எல்லாம் பண்ணியா?” என்றவர் கேள்வியில் தடுமாறினாலும்,

“அப்பா நான் ஒன்னும் தப்பு பண்ணல” என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவனை ஒரு பார்வை பார்த்தவர்,

“நீ தப்பு பண்ணிருக்கனு நான் சொல்லவே இல்லையே” என்று உணவில் கவனத்தை செலுத்தினார்.

“அவளோட திமிருக்கு நீங்களும் தீனி போட்டு தான் இந்த இடத்துக்கு கொண்டு வந்து வைச்சுருக்கிங்க. அது பத்தாதுன்னு இப்போ பிசினஸ்லயும் நம்ப சைடு லாஸ் பத்தி கூட யோசிக்காமல் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறிங்க?”

“இங்க பாரு விகா உன் வயசை  விட எனக்கு இந்த பிசினஸ்ல அனுபவம் அதிகம். நான் என்ன பண்ணிருக்கேனோ அது ரெண்டு கம்பெனிக்கும் நல்லது. குரோதத்தை முன்னேற்றத்துல காமிக்கலமே தவிர செய்ற வேலையில்ல. இனி எனக்கு அவங்க கம்பெனி கூட பிசினஸ் பண்ணுற எண்ணம் இல்லை. இப்போ போயிட்டு இருக்க ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனால் போதும். மத்தபடி எனக்கு எதுவும் வேண்டாம்.”

“என்ன பேசிட்டு இருக்கீங்கப்பா அவங்க ரிஜெக்ட் பண்ண ப்ராஜெக்ட்டோட மதிப்பு ஏழுநூறு கோடி”

“இதுல நான் என்ன பண்ண முடியும் விகா? அவங்களுக்கு நம்ப கூட டை-அப் வைக்க பிடிக்கல. போய் கெஞ்ச சொல்லுறியா ? வேற பார்ட்னர்ஸ் கிட்ட பேசி பார்க்கலாம்.” என்று அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

“சரி அதை விடுங்க. ப்ராஜெக்ட் விசயமா அவங்க கம்பெனிக்கு போகாத அளவுக்கு ஒரு விசயம் பண்ணி வைச்சு இருக்கிங்க. இப்போ யாரை யாருகிட்ட இருந்து காப்பாத்த பார்கிறிங்க” என்று விகர்ணன் கேட்க, தந்தையின் பதிலுக்காக அவரை நிமிர்ந்து பார்த்தான் அகர்ணன்.

“இங்க பாரு விகா, இவ்வளவு நடந்த அப்பறம் அங்க போய் வந்திட்டு இருக்கிறது எனக்கு சரியா படல. நான் தான் ஆதிரா கிட்ட பேசி இப்படி ஒரு முடிவை எடுத்தேன். எனக்கு எல்லாரும் ஒன்னு தான். இதுக்கு மேல எதுவும் கேட்காத. அப்பறம் நானும் கேட்பேன் உன்கிட்ட பதில் இருக்காது” என்று இறுக்கமாக கூறி எழுந்து சென்றுவிட்டார்.

“டேய் விணு எதுக்கு டா இவ்வளவு டென்ஷன் ஆகுற விடு பார்த்துக்கலாம்” என்று கேசரியை கொறித்த அகர்ணனை முறைத்த விகர்ணன்.

“இந்த ப்ராஜெக்ட் எனக்கு ரொம்ப முக்கியம் அகி, அதை ஏதோ பிச்சைப்போடுற மாதிரி ட்ரீட் பண்ணுறா. நானோ நீயோ அங்க வந்திற கூடாதுன்னு எப்படி பிளான் பண்ணி காய் நகர்திருக்க பாரேன்”

“இதெல்லாம் ஏற்கனவே நம்ப பேசினது தானே” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக பேசினான் அகர்ணன்.

விகர்ணனுக்கு நிதர்சனம் புரிந்தாலும் ஏனோ ஆதிராவிடம் இறங்கி போக அவனுக்கு மனமில்லை.

ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன் , “சரி தான் உங்க போதைக்கு நான் ஊறுகாய் ஆகிட்டேன்.” என்று வேகமாக அவனறைக்கு சென்றான்.

அவனையே பார்த்திருந்த அகர்ணன் அருகில் இருந்த கல்யாணியிடம், “இவன் என்னம்மா எப்போ பாரு பிசினஸ் ப்ராஜெக்ட்ன்னு சுத்திட்டு இருக்கான். பேசாம இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்க அப்போ தான் சரியாகும்” என்று தீவிரமாக பேசினான்.

“இந்த சிடுமூஞ்சிக்கு எந்த பொண்ணு டா ஓகே சொல்லும்” என்று சிரித்தப்படி கல்யாணி கேட்டார்.

“இவனுக்கு லவ் எல்லாம் செட் ஆகும்ன்னு நம்பிக்கை இல்லம்மா. நீங்களே ஒரு பொண்ணை பார்த்து அவன் தலையில கட்டி வைச்சிருங்க”

“இதுவும் நல்ல ஐடியா தான் நான் அப்பாகிட்ட இதைபத்தி பேசுறேன்” என்று எழுந்து சென்றார் .

விகர்ணனின் திருமணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக நடந்த அனைத்திற்கும் அகர்ணன் தான் காரணம் என்று தெரிந்ததால் , நின்று போன நிச்சயத்தை  ஒதுக்கிவிட்டு விகர்ணனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் கல்யாணிக்கு வலுவாக ஒட்டிக்கொண்டது.

 

*****

 

படுக்கையில் படுத்திருந்த ஆதிராவிற்கு, அகர்ணனின் நினைப்பு தான். கடந்த விட தான் நினைக்கின்றாள், அத்தனை சுலபமில்லை என்று அடிக்கடி அவளுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தது அவனுடனான காதல்.

காதல் தவறில்லை, யார் மீது காதல் வயப்படுகிறோம் என்பதை சரியாக தேர்வு செய்யவேண்டும். அதை செய்ய தவறிவிட்டால் முதலும் முடிவும் பிழையாக மாறி விடுகிறது. பின் நமது எண்ணம் முதல் உணர்வு வரை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து செய்யாத தவறுக்கு நமக்கு தண்டனை கொடுப்பதோடு நித்தமும் நம்மை வஞ்சிக்கும் இந்த பொல்லாத காதல்.

தனிமையில் இருந்தால் நிச்சயம் எதையாவது இந்த மனம் யோசித்துக்கொண்டே இருக்கும் என்று முகம் கழுவி பக்கத்தில் எங்காவது சென்று வரலாம் என அவள் கிளம்பி கீழே வந்தாள். அதே சமயம் அஞ்சலியை பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர் அவளை பெற்றவர்கள்.

 

“ஆது நீயும் வரியா அஞ்சலியை பார்க்க?” என்ற ராமசந்திரனிடம்,

“இல்லப்பா. நான் கொஞ்சம் டிரைவ் போயிட்டு வரேன். கிளம்பும் போது சொல்லுங்க அங்க வரேன்” என்றவள் இருவரிடமும் கூறிவிட்டு காரை உயிர்ப்பித்து கைப் போன போக்கில் காரை செலுத்தினாள்.

தூரத்தில் கடலலை ஓசை கேட்க, புத்துணர்ச்சியோடு நுழைவாயிலில் வண்டியை விட்டு மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். கிளம்பிய போது இருந்த தளும்பிய மனம் சற்று மட்டுப்பட்டிருக்க குளிர்ந்த காற்றை முகத்தில் வாங்கியப்படி கடலை வெறித்துப்பார்த்திருந்தாள்.

நெருக்கமாக காலடி சத்தம் கேட்க திரும்பி பார்க்க தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். யாரோ அவளை போல வந்திருப்பார்கள் என்று கண்டுக்கொள்ளாமல் இருக்க, அவளை அணுஅணுவாக இம்சிக்கவே வந்திருந்தான் அகர்ணன்.

அவளை உரசியப்படி அவன் அமர அதில் அதிர்ந்து திரும்பி பார்த்தவளை பார்த்து வசீகரமாக சிரித்தான்.

“என்ன தான் டா உனக்கு வேணும். அதான் இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாத நானும் உன் வழில வரமாட்டேனு சொல்லிட்டேனே? அப்பறம் எதுக்கு நான் போற பக்கம் எல்லாம் வந்து என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க” என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“நீ சொன்னா கேட்டு தான ஆகணும். அது தான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வந்துட்டேன் பேபி” என்று அவள் கன்னத்தை கிள்ளினான்.

வேண்டும் என்று செய்பவனை என்ன செய்வதென தெரியாமல் எழுந்து செல்ல முயன்றாள்.

அவள் கையை அழுத்தமாக பற்றியவன், “இன்னும் பேசி முடிக்கல அதுக்குள்ள என்ன அவசரம் பேபி” என்று அவன் இழுத்த வேகத்தில் அவன் மடியில் விழுந்தாள்.

“இப்படி பப்ளிக்கா என்னை டெம்ப்ட் பண்ணுறியே?” என்று அவளை பக்கத்தில் இறக்கிவிட்டான்.

“சீ வெக்கமா இல்லை”

“இல்லை”

“என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா?” என்று எரிந்து விழுந்தாள்.

“அவ்வளவு சீக்கரம் விடமாட்டேன். உன்னை அணு அணுவா டார்ச்சர் பண்ண தானே நான் இந்தியா வந்ததே”

“உனக்கு அப்படி என்ன தான் டா பாவம் பண்ணேன்” என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தான்.

அந்த பார்வை சொன்ன பதில் அவளுக்கு புரிபடாமல் போக அவளை பற்றி இருந்த கையை தட்டிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவளை அப்படியே போக விட்டால் அது அகர்ணன் இல்லையே. பின்னாடியே வேகமாக சென்றவன் அவள் மகிழுந்தில் ஏறி கதவை சாற்றும் முன் மறுபக்கம் ஏறி அமர்ந்திருந்தான்.

ஆதிராவின் பொறுமை காற்றில் பறந்தது.

“இப்போ நீ இறங்கல என்னை ஸ்டாக் பண்ணுறேன்னு உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருவேன் “ என்று பட்டுப் போயிருந்த அவனது ரணத்தை அவளறியாமலே கீறிவிட்டாள்.

அதில் துணுக்குற்றவன், அவள் தலைமுடியை கொத்தக்காக இழுக்க வலி தாங்க முடியாமல் ‘ஆஆஆ’ என்று அலறினாள்.

மேலும் இறுக்கியவனின் கையை விடுவிக்க முயன்றவளின் கைகளை லாவகமாக பிடித்தவன், அவள் இதழ்களை வன்மையாக கவ்வி இருந்தான். மொத்தமாக அவள் உயிரையே உறிந்துவிடும் எண்ணத்தில் மூச்சுமுட்டும் வரை அவளை விடாது அவனது பலத்தை காட்டினான்.

அவளுக்கு அவன்மீது இருந்த காதல் மொத்தமும் வெறுப்பாக மாறியிருந்தது. அவளை விடாமல் அவளிடம் தேடலில் இறங்க, அவனுக்கு வலிக்குமாறு அவன் உதட்டை கடித்திருந்தாள்.

சுயநினைவு பெற்று விலகியவனின் மூக்கில் ஒன்று வைக்க , நிலைதடுமாறினான் அகர்ணன். அந்த நேரத்தில் நினைவு வந்தவளாக கைப்பையில் இருந்த பேப்பர் ஸ்பேரேயை அவன் கண்ணில் அடிக்க எரிச்சலில் கத்த ஆரம்பித்துவிட்டான்.

எல்லாம் நொடி பொழுதில் நடந்தேறிவிட அகர்ணனால் எதுவும் செய்ய முடியவில்லை. சற்றும் தாமதிக்காமல் காரில் இருந்து இறங்கியவள், மறுபக்கம் சென்று, “டேய் இறங்கு டா “ என்று அவனை இழுத்தாள்.

கண்ணை திறக்க முடியாமல் கத்திக் கொண்டு இருந்தவனை சுலபமாக இழுத்து வெளியே விட்டு, வேகமாக வண்டியை உயிர்ப்பித்து உயர் வேகத்தில் கிளம்பியிருந்தாள்.

“உன்னை கொள்ளாம விட மாட்டேன் டி. என்னை இப்படி பண்ணதுக்கு ரொம்ப வருத்தப்படுவ என்று எரிச்சலின் நடுவே அவன் கத்தியது நினைவு வர அவளுக்கு ஒருமாதிரி படபடக்க ஆரம்பித்து விட்டது.

தான் செய்தது சரியே என்று நினைத்தவாறு அஞ்சலியை வைத்திருந்த மருத்துவமனையை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

எரிச்சல் தாங்க முடியாமல் அருகே இருந்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கி முகம் கண் அனைத்தையும் கழுவியும் அகர்ணனின் எரிச்சல் அடங்கியப் பாடில்லை. ஆதிராவின் மீது கொலைவெறி வந்தது.

“தீரா இன்னைக்கு நீ பண்ணதுக்கு அனுப்பவிப்ப டி. நாளைக்கு நீயே என்னை தேடி ஓடி வருவ வர வைப்பேன்” என்று கத்தியவன் வேகமாக காருக்கு சென்றவன் வேகமாக யாருக்கோ அலைபேசியில் அழைத்தான்

“ஹலோ கதிர் நான் அகர்ணன் பேசுறேன்”

“சொல்லுங்க சார். ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை. ஏதாவது நான் பண்ணனுமா சார்?” என்று தலையை சொரிந்து கேட்டான் .

“கதிர் உனக்கு சில பிக்ஸ் மெயில் பண்ணியிருக்கேன் . நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. நாளைக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ், ஸ்னாப் சாட், யூடியூப் னு எந்த ஆப் ஓபன் பண்ணாலும் அந்த போட்டோ வீடியோ தான் வரணும்”

“நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பண்ணிடலாம் சார். இந்த மாதிரி அடிக்கடி ஏதாவது ப்ராஜெக்ட் கொடுங்க சார்”

“அதை அப்பறம் பேசலாம். முதல நான் சொன்னதை சொதப்பாம கரெக்ட்டா செய். நாளைக்கு காலையில உன் அக்கௌன்ட்ல பணம் ஏறிடும்” என்றவன் மறுபுறம் அவன் ஏதோ கேட்க வரும் அழைப்பை துண்டிதிருந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்