Loading

அத்தியாயம் 80

மெல்லிடையைப் பற்றி நளினமாய் அவளை நெளிய வைத்தவன், மீண்டுமொரு சுழற்று சுழற்றி அவன் மீது மோத வைத்தான்.

“டேய் நீ அவனைப் பிடிக்க வந்தியா… என் கூட டான்ஸ் ஆட வந்தியா?” என விஸ்வயுகா கடுப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கடிய,

“ரெண்டுத்துக்கும் தான் ஏஞ்சல்” என்றான் இதழோர நகையுடன்.

“யூ லுக் அமேஸிங்!” எனக் கிறங்கியபடி மீண்டும் அவளைச் சுழற்றியவன், இடையைத் தாங்கி அவள் மீது சரிந்தான்.

பின், மீண்டும் சுற்றியவன் இம்முறை அவளை அவன் மீது விழச் செய்ய, “அடேய் தலையை சுத்துதுடா…” என்றாள் அதட்டலாக.

உதித்தோ மற்ற பெண்களுடன் ஆடியபடியே, “ஹே பேபி கம் அண்ட் ஜாயின் வித் மீ” என அவள் கையைப் பற்றி இழுக்க, “ஷீ இஸ் மை கேர்ள்” என்ற அழுத்தப்பார்வையை உதித்திடம் வீசினான் யுக்தா. அதில் தெரிந்த கண்டிப்பை அந்தப் போதையிலும் அவன் உள்வாங்கி கொள்ள, “ஓகே… ஓகே!” எனப் பின்வாங்கிக்கொண்டான்.

“என்னடா செஞ்சுட்டு இருக்க?” இம்முறை விஸ்வயுகா வெளிப்படையாகவே திட்ட,

“ஜஸ்ட் நவ் ஒரு நியூஸ்…” என அவனுக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டினான்.

“உதித் அந்த சம்பவம் நடக்குற டைம்ல இந்தியாவுலயே இல்லை” என்றதும் அவளும் சிந்தித்தாள்.

“ம்ம் எனக்கும் இவன் வாய்ஸ் சிங்க் ஆகல யுகி… அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.”

அவனோ நடனமாடுவது போல அவளுடன் இழைந்தபடியே, “இவன் இந்தியால தான் இல்லை. ஆனா இன்டைரக்ட்டா அதுல சம்பந்தப்பட்டு இருக்கனும்” யுக்தா குழப்பியதில் “என்ன சொல்ற மேன்?” எனப் புரியாமல் பார்த்தாள்.

இருவரின் மேனியும் ஒன்றை ஒன்று தீண்டிக்கொண்டது இதமாக.

அவளை முதுகுப் புறமிருந்து அணைத்துக் கொண்டே, மெல்ல அசைந்து ஆடியவன், “ஒரே ஒரு ப்ரூஃப் இருக்கு. ரீசன்ட்டா என் கையால கத்தி குத்து வாங்குன தீனாவுக்கு இவன் கால் பண்ணிருக்கான் டைரக்ட்டா. ஆனா அவங்க போன்ல இருந்து வேற யாருக்குமே போன் போகல. அந்த கால் ஹிஸ்டரி எதுவுமே இல்லை. மே பி வேற செல்போன் யூஸ் பண்ணிருக்கலாம். பட், இறந்து போன நாலு பேர்கிட்ட இருந்து ஹிடன் செல்போன் கிடைக்கல. அண்ட் நாலு பேருமே அவங்களுக்குள்ள கான்டேக்ட்ல இல்ல. என் மூலமா இறந்து போன சுரேஷ் அண்ட் தீனா தான் இவன் கூட காண்டாக்ட்ல இருந்து இருக்காங்க. ஹொவ் எவர், இவனைப் பிடிச்சு விசாரிக்கணும். சார் இன்னும் கொஞ்சம் மட்டையாகட்டும். அப்பறம் தெளிய வைக்கலாம்” என்றபடி, இப்போது அவளை தன் புறம் திருப்பினான்.

“அதான் வந்த வேலை வேலைக்கு ஆகலையே. அப்பறம் ஏண்டா மூச்சைப் பிடிச்சு ஆடி, என்னையும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?”

அவளது மூக்கோடு மூக்கை உரசியவன், “அட்லீஸ்ட் இந்த வேலையையாவது ஒழுங்கா பண்ணலாம்னு தான்…” எனப் பதில் அளித்தபடி அவளுடன் ஆடிக்கொண்டே டிஜே அருகில் சென்று, “ப்ரோ தமிழ் பாட்டா போடுறது” என்றதும், அவனும் “டன் ப்ரோ” என்றான்.

“இப்ப இது ரொம்ப முக்கியமாடா?” என விஸ்வயுகா மூச்சிரைக்கும் போதே,

ஸ்பீக்கரில் “மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கையானவள்” பாடல் ஒலிக்க தொடங்கியது.

பாவையின் பின்னங்கழுத்து நடுவில், கூந்தலால் மறைக்கப்பட்டிருந்த சிறு மச்சத்தை அன்றே பார்த்திருந்தான். அப்போதே அதை ரசித்தும் இருந்தான்.

இப்போதும் அதைக் காண ஆவல் எழ, அவளது கூந்தலை ஒரு கையால் அள்ளியவன் மற்றொரு கையின் ஆட்காட்டி விரலை அவளது மச்சத்தில் நிலைநிறுத்தினான்.

“ஹே மச்சக்காரி…” அவள் காதில் யுக்தா கிசுகிசுக்க அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவனிடம் இருந்து விலக போராடியவள், விழித்தபடி “உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்க,

“எனக்குப் பல இடத்துல தெரியும். ஒன்னொன்னா சொல்லட்டாடி?” என்றான் உல்லாசக்குரலில்.

கன்னம் சிவந்து கற்பனையில் நெஞ்சம் படபடத்தாலும் நெருஞ்சி முள்ளாய் அவனுடனான விரிசலே கண் முன் தோன்றிட, “நீ மட்டும் தான் பாத்துருக்கியா…” நெஞ்சைக் கல்லாக்கி கொண்டு கேட்டே விட்டாள்.

கூந்தலைப் பற்றி இருந்த அவனது பிடி இறுகியது.

“ஆமாடி. நான் மட்டும் தான உரிமைப்பட்டவன்… என் ஏஞ்சல் எனக்கு மட்டும் தான். யூ ஆர் மைன் டேமிட்…” என்று பற்களை நறநறவெனக் கடித்து கூந்தலைப் பிடித்து இழுக்க வலியில் முகம் சுருக்கினாள்.

தன்னை அடக்கிக்கொண்டு பிடியை விட்டவனுக்கு தோதாக டிஜேவில் பாடல் தொடங்க, அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்து அதோடு அவனும் பாடினான்.

மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்

மின்னல் பாதி
தென்றல் பாதி
மங்கை ஆனது

மங்கை பாடும்
மோக பாடல் கங்கை
ஆனது…

இதை பாடி முடிக்கும் முன் பல அவன் பார்த்து ரசித்த மச்சத்திற்கு முத்தங்களை கடத்தி விட்டான்.

அதில் கிறங்கி தவித்த பெண்ணவளுக்கு தாபமும் வேதனையும் ஒருங்கே தலைக்கேறியது.

அவன் சட்டையைப் பற்றி தன்னருகே இழுத்தவள், அவன் உதட்டிற்கு நேராக தன்னுடத்தை நிறுத்தி,

“உதடுகள் குவித்தேன் என் மன்னவா…
உன் உதவிக்குத் தவித்தேன் பெண்ணல்லவா…

நீ முதன் முறை கொடுத்தாய் முத்தமே நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா…”

என அவன் முதன்முறை கொடுத்த முத்தத்தில் மனம் வெந்து போனவள், அவனை விட்டுப் பின்னால் சாய அவன் தோதாய் அவளைப் பிடித்துக்கொண்டான் அழுத்தமாக.

“அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேன்
வழியினில் தொலைத்தாயே…”

என்று கண்ணில் திரண்ட நீருடன் முடிக்க,

“அன்பே அன்பே… என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வேனோ… சொல் சொல்” என இயலாமையுடன் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான். ஒரு கணம் அவ்வணைப்பில் சுயம் தொலைத்து மீண்டவள், அவனை விட்டு விலகிச் செல்ல, அவனோ விடாமல் அவள் கையைப் பற்றி முட்டியிட்டு அமர்ந்தான்.

“நீ வேணும் ஏஞ்சல். முழுசா மொத்தமா எனக்கு நீ வேணும். சாகுற வரை வேணும்டி. நீ இல்லாம மூச்சு விட முடியல. உன் மேல இருக்குற காதல் அப்பவும் சரி இப்பவும் சரி என்னை மூச்சடைக்க வைக்குதுடி. உன்மேல முழுசா காட்ட விடுடி!” என்றான் யாசகமாக.

சிவந்த விழிகளுடன் அவனை பார்த்தவளுக்கு, அவன் கேசத்தைக் கோதி நெஞ்சோடு புதைத்துக் கொள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தது.

ஆகினும், ‘உனக்காக அவன் ஏன் சாக்ரிபைஸ் பண்ணனும்’ என்ற அஸ்வினியின் அசரிரீ அவளுக்குள் ஒலிக்க தீச்சுட்டாற் போல விலகியவள், “சில நேரம் அன்பே பாரமாகிடும் யுக்தா. உன் பாரத்தை என் மேல இறக்குறேன்னு அன்பைக் காட்டி எனக்கு பாரமாக்கிடாத…” என்றாள் மனதை மறைத்து.

“என் அன்ப பாரமா தான் நீ பாக்குறன்னா, ஓகே… வாழ்க்கை முழுக்க உனக்கு பாரமா நான் இருந்துட்டுப் போறேன்” என அவனும் அழுத்தம் திருத்தமாக கூறினான்.

உதித் கன்னிகைகளுடன் ஆடிக் களைத்து விட்டு மீண்டுமொரு வோட்காவை வாயில் தள்ளினான்.

அவனைப் பார்த்த விஸ்வயுகா, “திஸ் இஸ் தி ரைட் டைம். அவனை மடக்கலாம் யுக்தா. கெட் அப்” எனத் துரிதப்படுத்த, “என் பாரத்தை தாங்குவியா மாட்டியா?” எனக் கேட்டான் ஆழ்ந்த பார்வையுடன்.

இரட்டிப்பு அர்த்தமும் அதில் விளங்க, பூவாய் சிவந்த வதனமே அவனுக்கு சிறு திருப்தியை கொடுத்தது.

அவள் முன் முட்டியிட்டபடியே பிடித்திருந்த கையைப் பற்றி அருகில் இழுக்க, அவன் முன் குனிந்தவளிடம், “உன் ஒட்டு மொத்த பாடி பார்ட்ஸும், உன் மனசும் உனக்கு அகைன்ஸ்ட்டா இருக்கும் போது, அந்த குட்டி மூளை சொல்றதை மட்டும் கேட்டுட்டு அடம்பிடிக்காத ஏஞ்சல். ஒரு நாள் அந்த மூளையும் உனக்கு அகைன்ஸ்ட்டா தான் பேசும்… எனக்காக மட்டும்” என உறுதியாய் கூறி, அவள் இதழ்களில் தன்னிதழை அழுத்தமாகப் பொருத்தினான்.

உயிர் உருகி உடையவனிடம் சேர துடிக்க, அதைப் பிடித்து இழுக்கும் முன் அவள் தானே உயிருடன் மரணிக்க நேர்கிறது!

அவன் மூச்சினையே ஆழ்ந்து சுவாசித்தவள், அவனிடம் இருந்து விடுபட்டு முகத்தை அவனுக்கு காட்டாதிருக்க, “நீ எவ்ளோ முட்டி மோதுனாலும் ஒரு நாள் என் மேல இருக்குற காதல் வெளிய வர தான் செய்யும்டி. அன்னைக்கு நீயே நினைச்சாலும் என் பாரத்தை தடுக்க முடியாது…” எழும்போதே காதோரம் முணுமுணுத்து விட்டே மீசை உரசி சென்றான்.

சில்லிட்டு சிதறி உறைந்தாள் விஸ்வயுகா. “சைக்கோ… சாவடிக்கறான்!”

உதித் குடித்து விட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி நகர, அவன் பின்னே யுக்தா தொடர்ந்தான்.

பப்பில் யுக்தாவிற்கு தோதாக ஏற்பாடு செய்திருந்த ஆள்கள், ரெஸ்ட் ரூம் பக்கம் மற்றவர்களை அனுப்பாமல் தடுக்க, அவன் பின்னே விஸ்வயுகா சென்றாள்.

கழிவறைக்குப் போகும் முன்னே, உதித்தின் வாயைப் பொத்தி மது பாட்டில்களை நிறைத்து வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் பக்கமாக இழுத்துச் சென்றான் யுக்தா.

உதித் துள்ளித் திமிர முயல, அவனால் நகரக்கூட இயலவில்லை.

அறைக்குள் அவனைத் தள்ளியதும் உதித் யுக்தாவைத் தாக்க வர, அதனை இலாவகமாகத் தடுத்தவன், ஒரு கையைப் பிடித்து வளைத்து ஒடிக்கச் சென்றான்.

உதித்திற்கு பாதி போதை தெளிந்து விட்டது. “டேய் நான் யாருன்னு தெரியாம என்கிட்டே மோதுற” என உதித் மிரட்டியதில்,

“தெரியுமே தர்ட் ரேட் பொறுக்கி தான…” என்ற ஏளனத்துடன் அவன் தொண்டைக்குழியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.

“சுரேஷையும் தீனாவையும் உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டதும் அவனது முழு போதையும் தெளிந்து விட்டது.

திருதிருவென விழித்தவன், “அவங்கள்லாம் யாரு?” எனத் தெரியாதது போல கேட்க, அவன் கன்னத்திலே பளாரென அறைந்து, மூக்கில் நச்சென குத்தினான் யுக்தா சாகித்யன்.

மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் பொலபொலவெனக் கொட்ட, “டேய் தேவையில்லாம என்கிட்ட மோதாத. உன்னை உருத்தெரியாம” எனச் சொல்லும்முன்னே யுக்தா மொத்த பலத்துடன் அவன் வயிற்றில் ஓங்கி குத்த, அவனுக்கு கதிகலங்கி விட்டது.

“நீ நீ யாரு என்ன வேணும் உனக்கு…?” வார்த்தைகளை சேகரித்து மூச்சு வாங்க முனகினான் உதித்.

கீழே சுருண்டு அமர்ந்திருந்தவனின் முன், மதுபாட்டில்கள் நிறைந்த அட்டைப்பெட்டியை இழுத்துப் போட்டு அமர்ந்த யுக்தா, உதித்தின் தலை முடியைப் பற்றி ஆட்டியபடி, “இறந்து போன இந்தப் பசங்களை உனக்கு தெரியும் ரைட்?” என்றதும் அவன் எச்சிலை விழுங்கினான்.

அவன் பதில் பேசாது அமைதியாய் இருந்ததில், ஒரு கையில் சுழன்று கொண்டிருந்த துப்பாக்கியை வைத்து உதித்தின் முட்டிக்குக் கீழே சுட்டு விட்டான்.

வலியில் அலறிய உதித்தின் குரல் பப்பில் அதீத சத்தத்துடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த யாருக்கும் கேட்டிட வாய்ப்பில்லை.

யுக்தாவோ அசட்டையாக முட்டியில் இருந்து துப்பாகையை மேலே ஏற்றி அவனது உயிர்நாடியின் மீது வைத்து அழுத்தி, “நான் கேக்குற கேள்விக்கு டான் டான்னு பதில் வரலைன்னா, இனி ஜென்மத்துக்கும் நீ உன் பொண்டாட்டியை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்!” என உறுமிட, உதித்திற்கு சர்வநாடியும் அடங்கி விட்டது.

விஸ்வயுகா தான் முகத்தைச் சுருக்கினாள். கொலையைக் கூட வன்முறை இன்றி செய்ய எத்தனித்தவளுக்கு, யுக்தாவின் வழிமுறையைக் கண்டு விழி பிதுங்கியது.

அத்தியாயம் 81

அங்கிருந்து ஓடி விடலாமா என்ற எண்ணத்தைக் கூட உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தால் அடக்கிக்கொண்டாள்.

உதித் நடுங்கிய குரலில் “உன… உனக்கு என்ன வேணும்?” எனக் கூறும்போதே காற்று தான் வந்தது.

“ஏற்கனவே கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல…” என்றவனின் அழுத்தத்தில் பதறி,

“எனக்குத் தெரியும். நாலு பேரையும் எனக்குத் தெரியும். அவங்க என் கூட பப்ல பழக்கம் ஆனவங்க. எல்லாருமே பெரிய இடத்துப் பசங்க” என்றான் வேகமாக.

“சோ அவங்களை வச்சு ஒரு கொலையையும் ரேப்பையும் நீ பிளான் பண்ணிருக்க?” யுக்தா விழிகளில் நெருப்பைப் பொழிய, அவன் பதறினான்.

“இல்ல இல்ல… நான் நான் எதுவும் பண்ணல…” என நிறுத்தி விழிக்க, துப்பாக்கியின் ட்ரிக்கரை யுக்தா அழுத்துவதை உணர்ந்து “வேணாம் ப்ளீஸ்… வேணாம்” எனக் கதறினான்.

“நான் கேட்ட… கேள்விக்குப் பதில்!” ஒவ்வொரு வார்த்தையையும் யுக்தா கடுங்கோபத்துடன் உச்சரிக்க, உதித்திற்கு வசமாக மாட்டிக்கொண்டது புரிந்தது.

அவனிடம் இருந்து உண்மையை மறைத்தால், அவனது ஆண்மையையே இழக்க நேரிடும் என்ற பயம் தோன்ற, வலியை பொறுத்துக்கொண்டு பேசினான்.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்தப் பசங்க காலேஜ் படிச்சுட்டு இருந்தாங்க. ஒரே காலேஜ் இல்ல வேற வேற காலேஜ். ஆனா சாட்டர்டே நைட் எல்லாருமே பாண்டிச்சேரில இருக்குற ஸ்கை பிஸ்டரோ பார்ல தான் மீட் பண்ணுவோம். அது என்னோட சித்தப்பாவோட பப். பெரிய பெரிய பிஸினஸ்மேன்ஸ், பெரிய ஆளுங்க எல்லாம் இம்பார்ட்டண்ட் மீட்டிங்க்கு அங்க தான் வருவாங்க. அங்க நாங்க ட்ரிங்க்ஸ், கேர்ள்ஸ்னு எல்லாமே சர்வ் பண்ணுவோம்.

சிவகாமி குடும்பத்துல எல்லாருமே அடிக்கடி வருவாங்க…” என்றதும் யுக்தா திரும்பி விஸ்வயுகாவைப் பார்த்தான்.

அவளோ “நாங்க போனது இல்ல” என்று தலையை ஆட்டினாள்.

உதித் புரியாமல் விஸ்வயுகாவை நன்றாக பார்த்து பிறகே அதிர்ச்சியானான்,

“நீ சிவகாமி பொண்ணா?” என்று.

“சரி நீ அப்பறம் ஷாக் ஆகு. இப்ப முழுசா சொல்லு” யுக்தா திணக்கமாகக் கேட்க, அவனுக்கு நெஞ்சம் படபடவென துடித்தது.

“பிசினஸ்ஃபீல்டுல இருக்குறவங்க அவங்களோட ஆப்போனென்ட் பிசினஸ்மேன்ஸ், இல்லைன்னா அவங்களை தொந்தரவு பண்றவங்களை தட்டி வைக்கவோ ஆர் கொலை செய்றதுக்கு கூட சித்தப்பாகிட்ட வருவாங்க. அவர் சில ஆள்களை வச்சு மூவ் பண்ணிட்டு இருந்தாரு.

கம்ப்ளீட்டா வேற ஆளுங்களை வச்சு, வேலையை முடிச்சுடுவாரு. அதுல சித்தப்பாவும் சரி, அதை செய்ய சொன்ன ஆள்களும் சரி மாட்டவே முடியாது.

ஒருதடவை சிவகாமி அவங்களோட கொழுந்தன் வைஃபை கொல்றதுக்கு என் சித்தப்பாகிட்ட பேரம் பேசுனாங்க. என் சித்தப்பா ரெண்டு முறை ஆக்சிடென்ட் பண்ண ட்ரை பண்ணியும் வேலை முடியாததுனால சிவகாமி சித்தப்பாகிட்ட ஹார்ஷா சத்தம் போட்டாங்க. அதுல அவங்களுக்குள்ள பேச்சு வார்த்தை முத்திப் போய் சண்டை வந்துடுச்சு. அதுக்கு அப்பறம் சிவகாமி மட்டும் இல்ல, அவங்க வீட்ல இருந்து யாருமே பப்க்கு மீட்டிங் வர்றது கிடையாது.

ஆனா அதே ஆளை கொல்றதுக்கு வேற ஒருத்தவங்க ப்ராஜக்ட் குடுத்தாங்க” என்றதும் ஆத்திரத்தில் எரிந்து கொண்டிருந்த யுக்தா “யாரு?” என்று கூர்மையாய் பார்த்தான்.

“தெரியல. பப்க்கு அவுட் சைட்ல இருந்து வர்ற ப்ராஜக்ட் பத்தி சித்தப்பா என்கிட்ட முழுசா சொன்னது கிடையாது. ஆளை சொல்லி அவங்களை அழிக்க ஆள் ரெடி பண்ண சொன்னாரு. கொலையும் பண்ணி, ஒரு பொண்ணை ரேப் பண்ணனும்னும் ப்ராஜக்ட். ஆனா ஆள் யார்னு யாருக்கும் தெரிய கூடாது. கச்சிதமா வேலைய முடிக்கணும் அப்டினு சொன்னாரு.

அப்போ அந்த பசங்க எனக்கு நல்லா பழக்கமானாங்க. அவங்களுக்கும் இதை பத்தி எல்லாம் தெரியும். அப்போ தான் ட்ரக்ஸ் எடுத்துட்டு இருந்தபோது ஒரு நாள் இதை பத்தி சொல்லிட்டு இருந்தேன். அவனுங்க, போதைல ரேப் மாதிரி ப்ராஜக்ட்லாம் எங்களுக்கு தாங்கண்ணான்னு கேட்டுக்கிட்டதுல, நான் மறுத்துட்டேன்.

ஏன்னா முன்ன பின்ன அனுபவம் இல்லாத பசங்க மாட்டிக்கிட்டா நானும் மாட்டிப்பேன். ஆனா அவங்க விடல, ஏற்கனவே ரேப் ப்ராஜக்ட்ஸ் ரெண்டு மூணு வந்துருந்துது.

ஒரு குடும்பத்து மேல பகையா இருக்குற எதிராளி அந்தக் குடும்பத்துப் பொண்ணை ரேப் பண்ணி அவங்க நிம்மதியை கெடுத்து ரெப்புட்டேஷனை கம்மி பண்றதுக்கான ட்ரிக் இது. அந்த மாதிரி சின்ன ப்ராஜக்ட்ஸ் எடுத்து அவங்களே நேரடியா இறங்கி பண்ணுனாங்க. நல்ல பல்க் அமவுண்ட் குடுப்பாரு என் சித்தப்பா. பொண்ணு சுகத்தையும் கை நிறைய காசையும் அனுபவிச்சு பழகுனவங்க, அடுத்ததா சிவகாமி டார்கெட் பண்ணி வச்சிருந்த லேடியை கொலை பண்ணிட்டு அவங்க கூட இருக்குற பொண்ணை ரேப் பண்ற ப்ராஜெக்ட்டை எடுத்துக்கிட்டாங்க.

‘ஆனா இது நீங்க நினைக்கிற மாதிரி சின்ன ப்ராஜக்ட் இல்லை. கொலையும் செய்யணும், அந்தப் பொண்ணுக்கு கராத்தே எல்லாம் தெரியும். ரொம்ப பெரிய இடம்’னு என் சித்தப்பா வார்னிங் பண்ணுனாரு. அவங்க அதை காதுலயே போட்டுக்கல. கூட ரெண்டு ப்ரெண்ட்ஸ சேர்த்துக்கிட்டு வேலையைக் கச்சிதமா முடிச்சுட்டாங்க.

அதுக்கு அப்பறம் சித்தப்பா நினைச்சமாதிரி அது கேஸ் ஃபைல் ஆகவும் இல்லை. ரேப் கேஸ்ன்னால சிவகாமியோட ரெப்புட்டேஷன் குறையவும் இல்ல. அதுல சித்தப்பாவுக்கு வர வேண்டிய பணத்துல பாதி தான் வந்துச்சு. அதனால அந்தப் பசங்களுக்கும் சித்தப்பாவுக்கு பேமெண்ட் பிரச்சனை வந்து ஆளுக்கு ஒரு பக்கம் போய்ட்டாங்க. அதுக்கு அப்பறம் என் கேரியர்க்காக நான் சென்னை வந்துட்டேன். என் பேச்சைக் கேட்காம நாலு பேரும் என்னை மீறி போனதுனால எனக்கும் அவங்ககூட பழகுற இன்டெரெஸ்ட் போய்டுச்சு.

ரீசன்ட்டா சுரேஷ் இறந்தது தெரிஞ்சு எனக்குள்ள ஒரு பயம் வந்துச்சு. அதுனால தான் தீனாவுக்கு போன் பண்ணுனேன். அவன் ‘உங்க நம்பர்ல இருந்து எனக்கு கால் பண்ணாதீங்க. ஒரு லாயர் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா’ன்னு சத்தம் போட்டான். என்னமோ எனக்கு தப்பாவே தோணுச்சு. அதுக்கு அடுத்து தீனாவும் இறந்து போனதுல என் பயம் அதிகம் ஆகிடுச்சு. எல்லாருக்கும் கனெக்டிங் பாயிண்ட்டா இருந்த சித்தப்பாவும் லாஸ்ட் இயர் தான் ஹார்ட் அட்டாக்ல இறந்து போனாரு. என் பொண்டாட்டிக்கு என்னோட பாண்டிச்சேரி லைஃப் பத்தி தெரியாது. அது தெரியக்கூடாதுனு தான் வீட்டுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வர்ற மாதிரி பிரச்சனை பண்ணி அவளை பெங்களூர்க்கு அவள் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். இப்ப நான் எந்த தப்பும் செய்றதும் இல்லை. சத்தியமா” எனும்போதே நரம்பு புடைத்தது யுக்தாவிற்கு.

படபடெவென அவனைச் சுட்டு வீழ்த்த விரும்பிய மனதை வலுக்கட்டாயமாக அடக்கியவன், “வெங்கடேஷ், விக்ரம், சுரேஷ், தீனா இவங்க நாலு பேர் தவிர்த்து மீதி ரெண்டு பேர் யாரு?” என்றான் விழி சிவக்க.

விஸ்வயுகாவிற்கு அங்கு நிற்கவே ஒப்பவில்லை. ஆக, யார் யாரோ யாரையோ பழி வாங்குவதற்காக தனது வாழ்க்கையுடன் விளையாடி உயிரான சித்தியையும் கொன்று விட்டார்கள்! நினைக்க நினைக்க அழுகை முட்டியது. ஆகினும், உடைந்து மற்றவர்கள் முன் அழுவது அவளது இயல்பில்லையே. கண்ணீரை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்துக்கொண்டவள் இறுகிய முகத்துடன் நின்றாள்.

உதித் குழம்பி, “வெங்கடேஷ் விக்ரம் இவங்க யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா சுரேஷ் தீனாவைத் தெரியும்” என்றதும் யுக்தாவிற்கு புரிந்து விட்டது. இவர்கள் கொலை செய்ய துணைக்கு அழைத்து வந்தவர்கள் தான் விக்ரமும் வெங்கடேஷும் என. போதை அதிகமாகி எசகு பிசகாகி விட கூடாதென்று அவர்களை வேனில் இருக்க வைத்து விட்டனர்.

காரணம், அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணை கற்பழித்து அதில் அப்பெண் இறந்தும் விட்டாள். சரியான ஆதாரமின்றி அந்த வழக்கு இன்னும் நிலுவையில் தொங்கி கொண்டிருக்கிறது. இது சமீபமாக யுக்தா கண்டறிந்த ஒன்று.

கற்பழிக்கப்பட்டு அப்பெண் இறந்து போனால் அருவமாகி விடுவாள். அதே பெண் உயிருடன் மீட்கப்பட்டால் அசிங்கமாகி விடுவாளே!

அதே போல ஒருவேளை விஸ்வயுகா இறந்து போனால், அது சிவகாமிக்கு ரெப்புட்டேஷனை அதிகப்படுத்தி விடும். இதுவே அவளது மானம் மட்டுமே பறிக்கப்பட்டால் மற்றவர்களின் தகாத பார்வைக்கு ஆளாகி மனஉளைச்சலாகும் என்ற உண்மை பளிச்சென புரிந்தது அவனுக்கு.

அவர்களைத் தவிர்த்து மீதி இருவர் யாரென விசாரிக்க, உதித் தடுமாறினான்.

அதிகமான உதிரப்போக்கும் அவனை மயக்கமடையச் செய்ய, “மயங்குன… மொத்தமா உன்னை சவமாக்கிடுவேன்” என அவன் ஆண்மையைக் கேள்விக்குறியாக்க முற்பட்டதில் அரண்டவன், “எனக்கு நிஜப் பேர் தெரியாது. தீனாவும் சுரேஷும் அவங்களை ப்ரோன்னு தான் கூப்பிடுவாங்க. என்கிட்ட அவ்ளோவா பேச்சு வார்த்தை வச்சுக்கிட்டது இல்ல. என்கிட்ட பேசும் போது நானும் ப்ரோன்னு தான் பேசுவேன்” என்றதும் யுக்தா சீறினான்.

“என்னடா டிவிஸ்ட் பண்றியா? நான் டிவிஸ்ட் பண்ணுனேன் நீ செத்துருவ” எனக் கடிய,

“இல்ல இல்ல சத்தியமா இல்ல” எனப் பதறியதில், “நீ அவனுங்களை பார்த்து இருக்கீல. ஸ்கெட்ச் பண்ண அவங்களை பத்தி டிஸ்க்ரைப் பண்ணு” என்றவன் துரிதமாக அதற்குரிய வேலையைப் பார்த்தான்.

விஸ்வயுகா உதித்தின் ரத்தத்தைக் கண்டு முகத்தைச் சுருக்கியபடி நின்றாள். அவளைக் கண்ட யுக்தா, “கார்ல இரு…” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு காருக்குச் சென்றாள். பழிவாங்கும் படலமாக நடந்த விஷயத்தை ஜீரணிக்க இயலவில்லை அவளால்.

அதனால் அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவளை முன் சீட்டில் அமர வைத்தவன், “வந்துடுறேன்டி” எனச் சொல்லியும் இன்னும் அவள் நிகழ்விற்கு வரவில்லை என்றுணர்ந்து இறுக்கி கட்டிக்கொண்டான்.

“ஏஞ்சல்… ஆர் யூ ஓகே?” முதுகைத் தடவிக்கொடுத்தபடி கேட்க, அவனது அழுத்தத்தில் இயல்பிற்கு திரும்பியது போல “ம்ம்” என்றாள்.

அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், “ஐ வில் பீ பேக்…” என்று வெப்ப மூச்சுத் தீண்ட மீண்டுமொரு முறை பெண்ணின் பிறைநெற்றியில் இதழ் பதித்தான்.

மற்றைய முத்தங்களைக் காட்டிலும் இம்முத்தம் அவளை பலவீனப்படுத்தியது.

இதயம் கொஞ்ச கொஞ்சமாக பலவீனமாவது முற்றிலும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்த பலவீனத்திற்கு காரணமானவனின் மீது கோபம் பெருக்கெடுத்ததில், அவனைப் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டு சப்பென கன்னத்தில் அறைந்தாள்.

ஒரே ஒரு கணம் சுருக்கென கோபம் வந்தாலும் அவள் விழிகளில் கலங்கி நின்ற நீரே அவளது மனதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அவளை இளக வைக்கும் முத்தம். அவனிடம் உருக வைக்கும் முத்தம். அதை ஏற்க பலமின்றி தன்னைக் காயப்படுத்தி அவளை இன்னும் காயப்படுத்திக்கொள்கிறாள்.

அதுவே அவனுக்கு வெற்றி நகையைப் பூக்க வைத்தது. அடித்தபிறகே அவளுக்கும் நிலை உறைத்தது.

நிச்சயம் கோபப்பட்டு திருப்பி அடிக்கப்போகிறானென்றே நினைத்தாள். ஏனெனில் அவன் ஒன்றும் மற்றைய நேரம் போல தாபத்தைக் கண்ணில் வழிய விடவில்லையே. தனதன்பு மொத்தத்தையும் தேக்கி வைத்து கொடுத்த முத்தத்தை அவமதித்தை ஏற்றுக்கொள்ளும் அளவு அவன் பொறுமைசாலியும் அல்ல.

அவனோ அவள் கன்னம் நோக்கி கையைக் கொண்டு வந்து, மெல்ல வருடி விட்டான்.

வருடிய கன்னத்திலும் அழுத்த முத்தமொன்றை வைக்கும்போதே அவள் கண்ணில் தேங்கி இருந்த நீர் கன்னம் வழியே வழிந்திருக்க, “இந்த கண்ணீருக்கும் கோபத்துக்கும் காரணம் நான் இல்ல. ஆனா என்னை அடிச்சு தான் அதுக்கான கோபத்தைத் தணிச்சுக்கனும்ன்னா டூ இட் ஏஞ்சல்…” என உயிரைத் தாண்டிய காதலை கண்களில் நிறைந்து கூறியவனை ‘எங்கு சென்று தொலைப்பது’ என்ற வழி தெரியாது மருகினாள் விஸ்வயுகா.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
154
+1
4
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்