479 views

8.உனதன்பிலே பல மின்னலே

அலுவலகத்திலோ யோசனையாக அமர்ந்திருந்த அதிரூபாவோ, 

‘நாம் தான் அதிகப்படியாக ரியாக்ட் செய்து விட்டோமோ?’ என்று மனதில் தடுமாறிக் கொண்டு இருந்தாள். 

 

ஏனென்றால் நேற்றைய தினம் முழுவதும், வீட்டில் இறுக்கத்துடனேயே வளைய வந்திருந்தாளே!  

 

முந்தைய நாளைப் போல இன்றும் இவளிடம் வம்பிழுக்காது தங்கள் வேலையில் கவனம் செலுத்தினர் அவர்கள். 

 

அதிரூபாவுக்குமே ‘அப்பாடா’ என்றிருந்தது. 

 

இதற்காகவா இப்படி அழுத்தமாக இருந்தோம்? பிரித்விக்கு எத்தனை உபதேசம் தந்திருந்தோம்? அதை நானும் கடைபிடித்திருக்க வேண்டாமா? 

 

“ரூபா! உனக்கு இப்போ எப்படி இருக்கு?” அனுசரணையுடன் கேட்டாள் சுஷ்மா. 

 

“பெட்டர் சுமி.ஓவரா ரியாக்ட் செய்துட்டோமோ என்று தோணுச்சு” என்றாள் அதிரூபா. 

 

“அந்த நேரத்தில்  அவங்கப் பேசினதைக் கேட்டதும், அப்படி ரியாக்ட் பண்ணிட்ட. அதுக்கு என்ன விடு” 

 

இனி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று அதிரூபா எண்ணிக் கொண்டாள். 

 

🌸🌸🌸

 

“எல்லாரையும் போலீஸ் அரெஸ்ட் செய்துட்டாங்க சார்”

 

தயக்கமாக சொல்லிக் கொண்டு இருந்தான் தன்வந்த்தின் அடியாள். 

 

“எப்படி?” என்று கத்தினான் தன்வந்த். 

 

“பிரித்வி தான் கம்ப்ளைண்ட் குடுத்து இருக்கார் சார்” என்று கூறவும், 

 

நன்றாக யோசித்து, ஆட்களைத் தயார் செய்து, பிரித்வியின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களை விலைக்கு வாங்க எண்ணினான். 

 

அதைத் தெரிந்து கொண்ட பிரித்வியோ, 

தன்னுடைய புத்தியின் மூலம், அவர்களைக் காவலர்களிடம் ஒப்படைத்து விட்டான். 

 

இப்போது அவர்கள் தாங்கள் செய்த தவறுக்கும், செய்யாத தவறுகளுக்கும் சேர்த்து வைத்து தண்டனை அனுபவிக்கின்றனர். 

 

வெறி கொண்டு சீறினான் தன்வந்த். 

 

“ச்சை!!  இவனை என்ன தான் பண்றது??” என்று தன்னுடைய கரத்தால் நாற்காலியில் ஓங்கி அடித்தான். 

 

தன் ஆட்கள் சிறையில் இருப்பதால் அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கினான் தன்வந்த். 

 

சில காலம் பொறுத்துப் போய் விட்டு, பிரித்வியை அடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். 

 

அதற்குள்ளாக வேறு ஒரு நல்ல திட்டத்தை சிந்திக்க ஆரம்பித்தான் தன்வந்த். 

 

🌸🌸🌸

 

“நீங்க சொன்னா மாதிரியே அவனுங்களை கம்ப்ளைண்ட் கொடுத்து உள்ளே தள்ளியாச்சு சார்”

 

பிரித்வியின் பிரத்தியேக காரியதரிசி அவனிடம் தெரிவித்தான். 

 

“குட்.” 

 

“ஆனால் சார்! தன்வந்த் அவனுங்களைக் கண்டிப்பாக வெளியே கொண்டு வர ட்ரை பண்ணுவானே?” என்று தான் யூகித்ததைக் கேட்டான் காரியதரிசி. 

 

“ஆமா.வெளியே கொண்டு வந்திடுவான் பாஸ்கர்” என்றதும், 

 

“நாம அட்டாக் பண்ணலாமா சார்? அவன் இப்போ ஆளுங்களை வெளியே எடுக்கிறதில் பிஸியாக இருப்பான்ல” என்று யோசனை அளித்தார். 

 

“வேண்டாம் பாஸ்கர். அவன் இன்னும் பயங்கரமாக திட்டம் போட நினைச்சிருப்பான்.அதை எதிர்த்து நாம சமாளிக்கனும். அந்தத் திட்டத்தோட வீரியத்தைப் பார்த்துட்டு, அப்பறமா ஆற, அமர அவனை அடிப்போம்”என்றான் பிரித்வி. 

 

அவன் சொன்னது போல், தன்வந்த் அதைத் தானே செய்வதாக இருக்கிறான்! 

 

🌸🌸🌸

 

“வேலைக் கழுத்தை நெரிச்சாலும், மத்தவங்களைப் பத்திப் பின்னாடி பேசறதை மட்டும் நிறுத்த மாட்டாங்க போல” என்று சுஷ்மா அலுத்துக் கொண்டாள். 

 

“அது சிலருக்கு பழக்கமான விஷயம் சுமி அவ்ளோ சீக்கிரத்தில் போகாது” என்று கேன்டினில் , இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். 

 

காஃபியைப் பருகி முடித்த சுஷ்மா, 

 

“நேத்து தான் பாப்பாவை ஸ்கூல்ல சேர்க்கிறதைப் பத்திப் பேசினோம்.நானும், அவரும் போய், நாளைக்கு அட்மிஷன் போட்டுட்டு வரப் போறோம்” என்றாள் சுஷ்மா. 

 

“சூப்பர் சுமி. நயனாவுக்கு என் சார்பாக கிஃப்ட் வாங்கிக் கொடுக்கிறேன்.மறக்காமல் கொண்டு போய்க் குடுத்துடு” என்றாள் அதிரூபா. 

 

“சரி ரூபா” பேச்சுக்கள் முடிந்து, வேலையைத் தொடர்ந்தனர். 

 

இன்றும் மனைவியின் போக்கு அப்படியே மாறாமல் இருக்குமோ? என்ற ஐயத்திலேயே பிரித்வி வீடு திரும்பி இருந்தான். 

 

அவன் வீட்டிற்குச் சென்ற நேரம் மனைவி இன்னும் வந்திருக்கவில்லை. 

 

சகுந்தலா தான் மகனிடம், “ஃப்ரண்ட் பையனுக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்துட்டு வர்றேன்னு சொன்னா ரூபா” என்று மருமகள் தன்னிடம் செல்பேசியில் தெரிவித்ததை மகனிடம் கூறினார். 

 

ஏன் என்னிடம் அவள் அதைச் சொல்லவில்லை? என்று சுனங்கினாலும், அதைக் காட்டிக் கொள்ளவில்லை. 

 

லயாவோ ப்ராஜெக்ட், எக்ஸாம் என்று அறையிலேயே அடைந்து கொள்ள, பிரித்வியோ வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்ததால் அன்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். 

 

தன்வந்த்தின் விஷயம் இப்போது தற்காலிகமாக சரி செய்து இருந்ததால், அதுவுமே இவனுக்கு டென்ஷனைக் கொடுத்தது. 

 

“சார்! தன்வந்த் ஆளுங்களை நாளைக்குக் காலையில்  ஜாமீனில் வெளியே எடுக்கப் போறானாம்” என்று மொபைலில் பேசிய பி. ஏ கூறினான். 

 

“அதுக்குள்ளயா? ஒரு நாள் கூட முழுசா ஆகல?”என்றான் பிரித்வி. 

 

” எல்லாம் அவனுடைய பணம் தான் சார். அதுதான் அவனுக்குப் பதிலாக எல்லா இடத்திலும் பேசிக்கிட்டு இருக்கு” 

 

“ஓஹோ!! அந்தப் பணத்தைச் சம்பாதிக்கிறத் தொழிலை முடக்கி விடுவோம்” என்று வேங்கையாகச் சீறினான் பிரித்வி. 

 

🌸🌸🌸

 

“கிஃப்ட்டைப் பாப்பாவுக்குக் குடுத்துடு. சுமி. நான் லீவ் நாள்ல வந்துப் பாக்குறேன்.”

 

என்று அவளிடம் இருந்து விடைபெற்று, தங்கள் இல்லத்திற்குள் நுழைந்தாள் அதிரூபா. 

 

வரவேற்பறை வெற்றிடமாய் இருக்க, மாமனார், மாமியாரைக் காணவில்லையே? என்று நினைக்கும் போதே, மகேஸ்வரன் அங்கே வந்து மருமகளிடம் பேச்சுக் கொடுத்தார். 

 

“வாம்மா.பிரித்வி வந்துட்டான். லயாவுக்குக் காலேஜ் வொர்க்.இரு.உன் அத்தையைக் கூப்பிட்றேன்”

 

அவள் கண்களால் அலசுவதைக் கண்ட பின், அவரே வீட்டு ஆட்களைப் பற்றி கூறி விட்டார். 

 

“சகுந்தலா” என்று மனைவியை அழைத்தார். 

 

ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அங்கே பிரசன்னம் ஆனார் அவரது மனைவி. 

 

“என்னாச்சுங்க?” என்று கேட்டவருக்கு அப்போது தான் அதிரூபா வீடு வந்திருப்பதைக் கவனித்தார். 

 

” வந்துட்டியா ரூபா ம்மா.போய் பிரித்வியைப் பாரு” என்றதும், 

 

” முன்னாடியே வந்துட்டார் போல” 

 

அறையை நோக்கிக் கால்கள் வேகமாக

நகர்ந்தது. 

 

தலையணையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்ததும், 

“கோபமா இருக்காரோ?” 

 

சிறு அச்சத்துடன் பிரித்வியிடம் சென்றாள். 

 

அவள் இன்னும் முகம் கூட கழுவி இருக்கவில்லை. வந்ததும் இங்கே அனுப்பி வைக்கப்பட்டு விட்டாளே! 

 

“பிரித்வி”  அவனை மெல்ல அழைத்தாள். 

 

“வா அதி. ஷாப்பிங் முடிஞ்சுருச்சா? போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று அவனே அவளது கைப் பையை வாங்கி வைத்து விட்டு, குளியலறைக்குள் அனுப்பி வைத்தான். 

 

கோபத்தை எதிர்பார்த்து வந்த அதிரூபாவிற்கோ, பிரித்வியின் இந்த அவதாரத்தைப் பார்த்து வியக்கத்தான் தோன்றியது. 

 

தயாராகி வந்தவளைக் கோப்பைத் தேநீருடன் வரவேற்றான் பிரித்வி. 

 

அவன் ஏற்கனவே தன்னவளுக்காகச் சமைத்துத் தந்துள்ளானே! 

 

எனவே இது அவளுக்குச்  சாதாரண விஷயமாக இருந்த போதும், சற்று முன்னர் இவனுடைய அணுகுமுறை வித்தியாசமாகவே தெரிந்தது. 

 

அதற்குப் புதிதாக ஏதேனும் காரணம் வேண்டுமோ? 

 

ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணமே அப்படித்தானே நடந்திருந்தது. 

 

( முதல் அத்தியாயத்தில் விரிவாக 

இருக்கும் நண்பர்களே) 

 

“இந்தா குடிக்காமல் பார்த்துக்கிட்டே இருக்க” 

 

அவனது குறுஞ்சிரிப்பைப் பார்த்துக் கொண்டே பருகி முடித்தாள் அதிரூபா. 

 

“நேற்று இருந்த மாதிரியே இன்னைக்கும் ஸ்ட்ரெஸ் ஆக இருப்பியோன்னு நினைச்சேன் அதி. என்ன தான் நடந்துச்சு?”

 

கெஞ்சலாகக் கேட்டவனிடம் உண்மையை மறைக்கத் தோன்றவில்லை. 

 

“உட்காருங்க” என்று அவனை அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டு விஷயத்தைப் பொறுமையாக எடுத்துக் கூறினாள் அதிரூபா. 

 

கணவனது சலனமற்ற முகமே காணக் கிடைத்தது அவளுக்கு. 

 

“என்னங்க! நான் இவ்ளோ சொன்னேன். அதுவும் அந்த மல்டி மில்லியனர் பொண்டாட்டி எல்லாம் சொன்னாங்க எனக்குக் கோபம் வந்துடுச்சுன்னு நீங்க ஒன்னுமே ரியாக்ட் பண்ணாம இருக்கீங்க?”ஐயமுறக் கேட்டாள் மனைவி. 

 

” நீ மல்டி மில்லியனரோட மனைவி தான அதி!” 

 

கேட்டதும் கோபம் வந்தாலும், அவன் அடுத்து சொல்லப் போவதைக் கேட்கத் துடித்தது மனம். 

 

” ஆமா அதி. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதுக்கு முன்னாடியே உனக்கான திறமையையும், வேலையையும் கிடைச்சுருச்சு. அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றது பொறுக்காமல் தான் அவங்க அப்படிப் பேசறாங்க. அது மட்டுமில்ல  அவங்களால் உன்னோட ஒரு நாளைய சந்தோஷம், உற்சாகம்ன்னு எல்லாத்தையும் அனுபவிக்காமல் இருந்திருக்க. நேற்று ஈவ்னிங் நீ நீயாகவே இல்லை அதி” 

 

விழி அகலாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, அவன் சொன்ன உபதேசங்கள் பசுமரத்தாணி போல், மனதில் நிலைத்து நின்றது. 

 

“இனிமேல்,  நான் நானாகவே இருப்பேன் பிரித்வி” 

 

இப்படி கிடைக்கும் நேரங்களில் எல்லாம்  ஒருவருக்கொருவர் உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டு இருந்தார்கள் கணவனும், மனைவியும். 

 

இந்தப் புரிதலையும், காதலையும் உலுக்கி எடுப்பதற்குத் தயாராக இருந்தான் தன்வந்த். 

 

ஆட்களை மீட்டுக் கொண்டு வந்தவனுக்குப் பண விரயம் ஒரு பொருட்டே இல்லை.உறக்கமோ, நிம்மதியோ கிடைக்காமல் இரவெல்லாம் ஆந்தையாக மாறிப் போனான். 

 

அடுத்து பிரித்வியின் வீட்டில் ஒருவரைக் காயப்படுத்திப் பார்க்க நினைத்தான். 

 

பரிதாபம் என்னவென்றால், பைத்தியக்காரன் இதைத் தான், தனது திட்டத்தில் முதலாவதாக சேர்த்திருப்பான் என்பதை அறிந்து வைத்திருந்தான் பிரித்வி. 

 

ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் லயா கல்லூரிக்குச் சென்றாள். 

 

அதிரூபாவுக்கும் பாதுகாப்புக்குக் குறைச்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.அதில் அவளுக்குத் தான் கோபம் கரை புரண்டு ஓடியது. 

 

“ஏங்க அவனுக்கு அறிவே இல்லையா? அந்த தன்வந்த்தால் நாங்க தான் சிரமப்பட்றோம். என்னைக்காவது மாட்டட்டும் அப்போ அவனை நல்லா நல்லா கேட்டு விட்றேன்”

 

” ஆமாம் அண்ணி. சரியான கிறுக்கன்” என்று லயாவும் வஞ்சகம் இல்லாமல், தன்வந்த்தை நார் நாராகக் கிழித்தாள். 

 

“அவன் கிறுக்கன் தான். அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்புப் படலம் செய்திருக்கேன். இன்னும் செய்யனும்னாலும் செய்வேன். உங்களை விட வேறெதுவும் எனக்கு முக்கியமில்லை. இந்தப் பலவீனம் தான் அவனுக்குச் சாதகமாகி விடக் கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க அதுக்குச் சம்மதிச்சா போதும்”

 

காலம் காலமாக நடப்பது இதுதானே! 

 

ஒரு சில தொழில் போட்டியாளர்கள் தங்களது எதிரிகளை இப்படித்தான் அடக்க எண்ணுவர். இந்தக் கேடு கெட்ட குணமும், தன்வந்த்திடம் வந்து ஒட்டிக் கொண்டது. 

 

“அவன் ஒரு கிறுக்கன்னு தெரிஞ்சும் மேற்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கீங்களே உங்களை என்னன்னு சொல்றது?” 

 

மறக்காமல் பிரித்வியையும் கழுவி ஊற்றி விட்டுப் போனாள் அதிரூபா. 

 

தனிமையில் மனைவியின் கரங்களைத் பற்றிக் கொண்ட பிரித்வி, 

“இது ரொம்ப சீரியஸான விஷயம் அதி. எனக்காகப் பொறுத்துக்கோ”என்று நினைவில் வைத்துக் கொள்ளுமாறு சில விஷயங்களையும் கூறினான். 

 

அதிரூபா அவனுடைய கன்னங்களை வருடியவள், 

” புரியுது பிரித்வி. சேஃப் ஆக இருக்கேன்” என்று வாக்குறுதி அளித்தாள். 

 

லயாவும் அவ்வாறே உறுதி அளிக்க, அலுவலகத்தையும் கவனித்துக் கொண்டான் பிரித்வி. 

 

அனைத்து வழிகளும் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால், தன்வந்த் தலை முடியைப் பிய்க்காதக் குறையாக பிரித்வியைச் சபித்துக் கொண்டு இருந்தான் தன்வந்த். 

 

– தொடரும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்