அத்தியாயம் 78
மைத்ரேயனும் ஷைலேந்தரியும் அவர்களது அலுவலத்தில் மடிக்கணினியில் முன்பு அமர்ந்து வெகு தீவிர வேலையில் இருந்தனர்.
அஸ்வினி மற்றும் விஸ்வயுகாவின் வலிக்கு காரணமானவர்களைக் கண்டறிய டெக்னாலஜி மூலமாக என்னென்ன கற்றுக்கொள்ள முடியுமோ அனைத்தையும் கற்றுக்கொண்டனர்.
அது இப்போது இன்னும் பலமாக உபயோகப்பட்டது.
இருவரும் தங்களது தனிப்பட்ட வருத்தங்களை ஒத்தி வைத்து விட்டு இயல்பாக இருப்பது போல நடித்துக் கொண்டனர்.
“ஷைலா… கடந்த அஞ்சு வருஷமா ஸ்லோ பாய்சன் பத்தி சர்ச் பண்ணவங்களோட லிஸ்ட் இருக்கு. பிரைவேட் பிரவுசர்ல சர்ச் பண்ணவங்க லிஸ்ட்டும் எடுத்தாச்சு. கிட்டத்தட்ட லட்சக்கணக்குல ஐடி இருக்கு. அதுல இருந்து எப்படி பில்டர் பண்றது?” என மைத்ரேயன் குழம்பினான்.
“எப்படியும் ஒரே டைம் மட்டுமே சர்ச் பண்ணிருக்க மாட்டாங்கள்ல மைதா. ரிப்பீட்டடா சர்ச் பண்ணுனவங்களைப் பார்க்கலாமா?” என்றதும், “குட் ஐடியா” என்றவன் அதற்கான வேலையில் இறங்கினான்.
தகவல்கள் கிடைத்தாலும் அதிலிருந்து எப்படி சந்தேகிப்பது என்று தான் இருவருமே குழம்பினர்.
மதிய உணவை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டே விஸ்வயுகா அவர்களைத் தேடி வந்தாள்.
“எனி க்ளூஸ்?” என அவளும் மடிக்கணினியின் மீது பார்வையைப் பதிக்க, அவனும் தற்போது உள்ளவரை அனைத்தையும் கூறினான்.
“யுகியோட டவுட் படி, அபர்ணா டெத்ல இருந்தே கில்லர் ஆக்டிவா தான் இருந்துருக்கான். ஏன்னா அபர்ணா ஆக்சிடெண்ட்ல அடிபட்டு சாகல. பாய்சன்னால செத்துருக்கா. அப்போ நீ ஏன் அபர்ணா கனடால இருந்து வந்ததுல இருந்து அவள் டெத் வரைக்கும் இருந்த டியூரேஷன்ல மட்டும் சர்ச் பண்ண கூடாது?” என விஸ்வயுகா தீவிரத்துடன் கூறியதில், “பாய்ண்ட்டு” என ஆமோதித்தாள் ஷைலேந்தரி.
மைத்ரேயனோ “சரி உங்க கெஸ் படி அபர்ணாவைக் கொன்னவன் தான் இதை எல்லாம் செய்றான்னே வச்சுக்கலாம். அப்டின்னா அவன் உடனே உடனே அடுத்தடுத்து கொலை செஞ்சுருக்கணுமே. அஞ்சு வருஷம் கழிச்சு இப்ப தான் கொலை பண்றான். வொய்? அபர்ணாவோட சம்பந்தப்பட்டது ரெண்டு பேர். ஒருத்தன் நரேஷ், இன்னொருத்தன் தரணி. ரெண்டு பேருமே இப்ப உயிரோட இல்ல. ஒருவேளை அவளுக்கு கனடால யாரும் பாய் ப்ரெண்ட் இருந்து, இவள் மேல வெஞ்சன்ஸ் ஆகிருக்குமோ?” என்றதும் மறுப்பாக தலையசைத்தாள்.
“அவளோட கனடா லைஃப் பத்தி அவள் டெத் அப்பவே அலசி ஆராய்ஞ்சாச்சு. ஒன்னுமே கிடைக்கல தான. எனக்கு என்னமோ அவள் இங்க வந்ததுக்கு அப்பறம் தான் ஏதோ சம்பவம் நடந்துருக்கு. அது என்னன்னு தான் தெரியல. செத்தவளை தான் தோண்டி எடுக்கணும் போல” என நொந்து கொண்டாள்.
“சரி சாப்பிட்டு வேலையைப் பாருங்க…” இருவரையும் தட்டி கொடுத்து சென்றாள்.
—
அனுரா பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள். ஆகினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க அரும்பாடுபட்டாள்.
ஏற்கனவே மேட்ரிமோனி மூலம் நடக்கும் கொலைப்பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிந்தே தான் வைத்திருந்தாள். ஆனால் அது தனக்கே வருமென்று எண்ணவில்லை அவள்.
தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை அடைவதற்குள் அவளுக்கு மயக்கமே வந்து விட்டது.
சிஇவள் என்னத்துக்கு சோலைக்காட்டு பொம்மைக்குலாம் பயந்துட்டு இருக்கா. பாவம் ரொம்ப பயந்த பொண்ணு போல’ குறிஞ்சியிடம் பாவப்பட்ட நந்தேஷை கொலை செய்யவே தோன்றியது அவளுக்கு.
ப்ளூடூத்தில் யுக்தா வேறு, “ஏண்டி ஏதோ ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்த்தா அப்டி இப்டி பீலிங்ஸ் வரும்னு உன்னை மஃப்டில அவன் கூட அனுப்புனா, ரெண்டு பேரும் சொதப்பிட்டு இருக்கீங்க. நீ மஃப்டில கிழிச்சது போதும். அந்த நாயை வீட்டுக்கு அனுப்பிட்டு நீ ஆன் டியூட்டிக்கு வா” என்று கடித்து குதறினான்.
அவன் பேசியதை முகத்தில் காட்டாமல் இருக்க அசடு வழிந்த குறிஞ்சி, “டென்சன் ஆவாதடாவ்… இங்க பார்க்கிங்ல யாரும் இல்ல. நந்துவோட பட்டன் கேமராவையும் செக் பண்ணிட்டேன். அதிலயும் யாரும் சிக்கல. யூ ஜஸ்ட் காம் டவுன்” என சமாளிக்க, நந்தேஷிடம் அலைபேசியைக் கொடுக்கச் சொல்லி அவனையும் திட்டித் தீர்த்தான்.
“என்ன இருந்தாலும் நான் உன் ஆசை மச்சான்டா. என் தலைமைல தான் உங்க ரியல் கல்யாணம் நடக்கணும். ஏதோ கொஞ்சம் டிஃபரெண்ட்டா ட்ரை பண்ணலாமேன்னு விசிட்டிங் கார்ட் குடுத்தேன். பெயிலியர் ஆகிடுச்சு…” என்றதில், மீண்டும் கெட்ட வார்த்தைகள் வெளிவர, “சரி சரி உன் பிரெண்டுகிட்ட பேசு” என்று போனை அவளிடம் ஒப்படைத்து விட்டான் பதவிசாக.
பின் மீண்டும் அனுராவை கண்காணிக்க ஆரம்பித்தனர்.
அவளிடம் போனில் பேசவும் முடியவில்லை. ஒருவேளை கொலையாளி அவளது அலைபேசியை எல்லாம் ஹேக் செய்திருந்தால்? சந்தேகம் வந்து விட்டது என்று தெரிந்து விட்டால், அவன் டார்கெட் மாறிவிடும் என்ற பயமே ஒவ்வொன்றையும் யோசித்து செயல்பட வைத்தது.
அனுராவிற்கும் புரிந்து விட்டது தான் சிக்கிக்கொண்டது. நந்தேஷின் விசிட்டிங் கார்டில் இருந்த அவனது எண்ணிற்கு அழைத்தாள்.
ட்ரூகாலரில் அவளது பெயரைக் கண்டதுமே நந்தேஷிற்கு தெரிந்து விட்டது. ஆனால் அவளது அழைப்பை ஏற்பது சரியல்ல எனப் புரிய சில நொடிகள் சிந்தித்தவன்,
“குறிஞ்சி நாங்க நாலு பேர் மட்டும் சேட் பண்ணிக்கிறதுக்காக ஒரு சேட் பாக்ஸ் ஆப் கிரியேட் பண்ணிருக்கோம். நாங்க மர்டர்ல இன்வால்வ் ஆகுறதுக்காக எங்க மேல டவுட் வந்து போனை செக் பண்ணுனா கூட அந்த ஆப் பத்தி யாருக்குமே தெரியக் கூடாதுன்னு, மைதா இம்பார்டண்ட் விஷயம் பேசணும்னா, அவனோட டிவைஸ்ல இருந்து எங்களுக்கு ஒரு அலெர்ட் குடுப்பான். அது மெசேஜா வராது. அலெர்ட்டா வரும். அதை க்ளிக் பண்ணிட்டா நேரா சேட் பாக்ஸ் போய்டும். அதை யாருமே ஹேக் பண்ண முடியாது. அதே ட்ரிக்க இங்க யூஸ் பண்ணுனா என்ன?” என்றதும் குறிஞ்சி அவனை முறைத்தாள்.
“ஒத்த கொலை கூட பண்ணல, ஆனா கொலையைத் தவிர அதுக்கு பிளான் மட்டும் பக்காவா பண்ணிருக்கீங்க. த்து…” என துப்பிட, அவன் துடைத்துக் கொண்டான்.
—
அண்ணா லைப்ரரியில் வேலை செய்து கொண்டிருக்கும் நூலகர் கோகுலின் வாயில் துப்பாக்கியைச் சொருகி இருந்தான் யுக்தா.
“சார் சார்…” என அவன் பயத்தில் நடுங்க, “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடில இருந்தே நீ விஸ்வயுகாவை பாலோ பண்ணிட்டு இருக்க. ஏன்?” என்று யுக்தா உறுமியதும் அவனுக்கு தலை கிறுகிறுத்தது.
“நான் நான் இல்ல சார்… நான் பாலோ பண்ணல” என அவன் அரற்ற தொண்டைக்குள் துப்பாக்கியை இன்னும் ஆழமாகப் புதைத்தவன்,
“நீ பாலோ பண்ணுனதுக்கு ஆதாரம் இருக்கு. இப்ப நீ உண்மையை சொல்லல. அனாதை பொணாமா கையையும் காலையும் தனி தனியா வெட்டி கூவத்துல வீசிடுவேன்” பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.
“சொல்றேன் சொல்றேன்” என்பது போல அவன் தலையசைக்க கண்ணில் மரண பயம் மின்னியது.
வாயில் இருந்து துப்பாக்கியை எடுத்ததும், லொக்கு லொக்கு என இருமியவன், “நா… நான் வேணும்னே பாலோ பண்ணலை. என் ப்ரெண்டைப் பார்க்க வந்தேன். அதான்… அதான்” என மூச்சு வாங்கினான்.
“யார் உன் ப்ரெண்டு?” எனக் கூர்மையுடன் கேட்க, அவன் அளித்த பதிலில் யுக்தாவின் ஒற்றைப்புருவம் உயர்ந்து எக்களித்தது.
‘வரேவா… பைனலி உன் சேப்டர் க்ளோஸ் ஆக போகுது!’ என முணுமுணுத்துக் கொண்டவன், “அருண் இவனை கஸ்டடில நம்ம கண் பார்வையிலேயே வை. இவனைத் தூக்குனது கடுகளவும் வெளில கசியக்கூடாது” என உத்தரவிட்டு அவசரமாக குறிஞ்சிக்கு போன் செய்தான்.
அப்போது தான் நந்தேஷ் சேட் பாக்ஸ் பற்றி அவனிடமும் கூற, “அப்போ எனக்கும் அனுராவுக்கும் அலர்ட் குடுக்க சொல்லு நந்து. நான் அவளை டீல் பண்ணிக்கிறேன்… அண்ட் ரெண்டு பேரும் கிளம்பி மைத்ரா அண்ட் ஷைலு கூட இருங்க. ஐ ஆம் ஆன் தி வே…” என்றதும் மைத்ராவின் மூலம் அவர்களுக்காக ஒரு சேட் பாக்ஸ் உருவாக்கப்பட்டது.
மடிக்கணினி முன் அமர்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்த ஷைலேந்தரியின் தோளைத் தட்டிய யுக்தா, “எனி பிராக்ரஸ்?” எனக் கேட்க,
“எங்க அத்தான்… நம்ம நாட்டுல பல பேர் ஸ்லோ பாய்சன் பத்தி படிச்சுருக்கானுங்க. எவனா இருப்பான்னு அனுமானிக்கவே முடியல” என்று நொந்தாள்.
இரவு தூக்கமில்லாததும், புதிதாய் ஏற்பட்ட கூடலும், பகல் முழுக்க மடிக்கணினியினுள் புதைந்ததும் அவளுக்கு உடல்வலியையும் சோர்வையும் கொடுத்திருந்தது.
“யூ நீட் சம் ரெஸ்ட்… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா. தென் கன்டினியூ!” என யுக்தா கூறியதும், ஷைலேந்தரி மைத்ரேயனைப் பார்க்க, அவனோ “நைட்டு முழுக்க ஹெவி வொர்க் பண்ணுனது நானு…” என இருவருக்கும் கேட்கும்படியே முணுமுணுக்க, அவனை எரிக்கும் பார்வை வீசினாள்.
யுக்தா அவனது தலையில் நறுக்கென கொட்டி, “மூடிட்டு வேலையைப் பாரு!” என்றவன் நெற்றியைத் தேய்த்து,
“ஹான் அப்பறம்… 25 ல இருந்து 35 வயசுக்குள்ள ஏஜ் வச்சு பில்டர் பண்ணி பாரு” என்னும் போதே அந்த அறைக்குள் குறிஞ்சி, நந்தேஷ், விஸ்வயுகா மூவரும் நுழைந்தனர்.
குறிஞ்சியைக் கண்ட யுக்தா, “அஞ்சு வருஷத்துக்கு முன்ன எடுத்த போட்டோஸ் வேற எதுவும் காபிஸ் இருக்க குறிஞ்சி” எனக் கேட்க, அவளோ “என்ன போட்டோஸ்?” என்றாள் குழப்பமாக.
உதட்டுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், “அதான் என் ஏஞ்சலை பாலோ பண்ணி அவளுக்குப் பிடிச்சது பிடிக்காததை எல்லாம் கலெக்ட் பண்ண சொல்லி உனக்கு ஒரு டாஸ்க் குடுத்து இருந்தேனே. நீ கூட நிறைய போட்டோஸ் எடுத்து வச்சுருந்தியே. அதுல தான் லைப்ரரியன் என்கிட்ட சிக்கினான். அதே மாதிரி வேற எதுவும் போட்டோஸ் இருந்தா மே பி கில்லரையே கையும் களவுமா பிடிக்கலாம்ல…” எனக் குறுஞ்சிரிப்புடன் கூற, அனைவரும் வாயைப் பிளந்தனர்.
விஸ்வயுகா குறிஞ்சியை கூறு போடும் பார்வை பார்க்க, “அடேய்” என விழித்தவள், “அதெல்லாம் இல்ல அவ்ளோ தான்…” என்றாள்.
“ப்ச் அட நீ எதுவும் தனியா வச்சுருந்தாலும் வச்சுருப்பியே குறிஞ்சி…” மீண்டும் குறும்பு நகை அவனிடம்.
“டேய்ய்ய்…. சும்மா இருடா” என அவனருகில் சென்று அவனது கையைக் கிள்ளி அமைதிப்படுத்த, அவனோ அசைரவே இல்லை.
“அப்பவே ஸ்பை வேலை பார்த்துருக்கியா நீயி…” மைத்ரேயன் வாயைப் பிளக்க,
“ம்ம் ஆமா ஆமா பாத்துருக்கேன். அவளை மட்டுமா பாத்துருக்கேன். கூடவே சுத்துற உங்க ரெண்டு பேரோட கண்ணாமூச்சி ஆட்டத்தையும் சேர்த்தே தான் பார்த்தேன்” என சிலுப்பினாள்.
ஷைலேந்தரி படபடப்பாகி விட்டாள்.
மைத்ரேயனோ புரியாமல் “என்ன கண்ணாமூச்சி?” எனக் கேட்க,
“நீ இவளை லவ் பண்றேன் பேர்வழின்னு இவளுக்குத் தெரியாம சைட் அடிக்கிறதும், மேடம் உன்னைக் கவனிக்காம அவங்க தனியா நீ பார்க்காதப்ப சைட் அடிச்சு, மால்க்கு போறப்ப எல்லாம் உனக்கு ஒரு ஷர்ட் எடுத்து உனக்கே தெரியாம வச்சுப்பார்க்குறதும்… ம்ம் பேஷ் பேஷ் நல்ல காட்சியா இருக்கும்…” எனக் கோர்த்து விட, ஷைலேந்தரிக்கு விழி பிதுங்கி விட்டது.
“அடிப்பாதகத்தி” என்ற ரீதியில் குறிஞ்சியை சைலேந்தரி முறைக்க, விஸ்வயுகா வாயில் கை வைத்தாள்.
“அடியேய்… யூ ஆர் ஆல்சோ ரொமான்டிக் கேர்ளா? முழு சோத்துல பூசணிக்காயை மறைச்சு இருக்கியேடி” என அவள் காதைப் பிடித்து திருகிட, மைத்ரேயன் அவளை அமைதியாக ஏறிட்டானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.
நந்தேஷோ “நம்ம தான் இந்த க்ரூப்ல பர்ஸ்ட் லவர் பாய்னு நினைச்சோம். ஆனா நம்மளை தவிர இப்ப எல்லாம் லவர் ‘கை’யா இருந்துருக்குங்க…’ என வெகுவாய் பீல் செய்து கொண்டான்.
அத்தியாயம் 79
“ஏன்டி அவனைக் காதலிச்சும் எனக்கும் அவனுக்கும் கல்யாணம் பிளான் பண்ணுனப்ப அமைதியா இருந்த?” விஸ்வயுகா கேள்விக்கணைகளைத் தொடுக்க அவளிடம் அமைதி.
தலையைக் குனிந்து கொண்டு கீ போர்டை தடவிக்கொண்டிருந்தவளை ஆழ்ந்து பார்த்தவள், “எனக்காகவா?” எனக் கேட்க, கீழுதட்டைக் கடித்து இன்னும் அழுத்தமாகக் குனிந்தாள்.
அவ்வளவு தான்… விஸ்வயுகாவிற்கு வந்ததே கோபம். அவளை பளாரென அறைந்தே விட்டாள்.
“ஏய்!” முதலில் தடுத்தது யுக்தா தான்.
“விடுடா…” எனக் கையை உதறியவள், “தியாகியாகுறீங்களோ? நீ விட்டுக்குடுத்து… என்ன பிச்சை போடுறியா?” கேட்கும்போதே அவள் விழிகள் கோபத்தில் சிவந்து கலங்கி இருக்க, “அக்கா…” எனப் பட்டென நிமிர்ந்து அதட்டினாள்.
“என்னடி அக்கா… அவன் சொன்னான்ல, கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை விரும்புறேன்னு… ஒருவேளை அவனும் இதே முட்டாள்தனத்தைப் பண்ணிருந்தா இத்தனை வருஷம் அவன் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டதுக்கே நான் வெட்கப்பட்டுருப்பேன். அதே தான் இப்ப உனக்கும்…” என்றதும் “இப்டிலாம் பேசாத விஸ்வூ…” என்றாள் அழுகுரலில்.
குறிஞ்சிக்கு அடிவயிறு கலங்கியது. தங்கைக்கே இந்த அடியென்றால், இன்னும் முழு விவரம் தெரிந்தால் என்ன என்ன செய்வாளோ என்ற பீதியில் விழித்திட, யுக்தா அவளை அதட்டினான்.
“போதும் யுகா. அவளுக்கும் மைத்ரா அவளை விரும்புறது தெரியாது தான. அவன் என்ன முன்னாடியே காதலிச்சி உருகிட்டா இருந்தான். திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் தான சொன்னான்” என அவளுக்கு ஆதரவாகப் பேச, “நீ என்ன அவளுக்கு சப்போர்ட்டா?” என்று அவனிடம் எகிறினாள்.
“என் மச்சினிச்சிக்கு நான் தான சப்போர்ட்டுக்கு வரணும்?” என்றவனை தீயாக முறைத்தாள்.
மைத்ரேயனோ அமைதியாக, “அதெல்லாம் சரி தான். ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நான் லவ் சொன்னப்ப சொல்லிருக்கலாம். அட்லீஸ்ட் காலைல அப்படி ரியாக்ட் பண்ணிருக்க தேவையில்லை தான? அவள் என்னை விரும்பலன்னா பரவாயில்ல. விரும்பி தான இருக்கா. ஒருவேளை அவளுக்குப் பிடிக்கலைன்னா பிடிக்க வைக்கலாம். ஆனால் பிடிச்சும் பிடிக்காத மாதிரி நடிச்சா நான் என்ன செஞ்சாலும் தப்பாதான போகும்…” உள்ளுக்குள் சின்னதொரு காயம் அவனுக்கு.
சற்றே யோசித்த யுக்தா, :அக்கா தங்கச்சிக்கு எல்லாம் ஒரே ஜீன் தான. சோ நாய் வாலை நிமிர்த்த முடியாது… விடு!” என அவனுக்கும் ஆதரவு தெரிவிக்க, இப்போது இரு பெண்களும் ஒன்றாக முறைத்தனர்.
“நீங்க என்ன அத்தான்… சேம் சைட் கோல் போடுறீங்க!”
“ம்ம் இப்ப இது ரொம்ப முக்கியம். சரி இதை விட்டுட்டு விஷயத்துக்கு வரலாமா?” என அவன் கேட்கும் போதே, குறிஞ்சி ‘அய்யயோ இவன் மறுபடியும் அங்கேயே வர்றானே’ எனத் திணறினாள்.
“குறிஞ்சி உன் போன்ல கொஞ்சம் போட்டோஸ் தான் இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் போட்டோஸ் வச்சுருப்பியே. எங்க இருக்கு?” என விழி உயர்த்திக் கேட்க, அவளோ ‘ப்ளீஸ்டா’ எனக் கண்ணாலேயே கெஞ்சினாள்.
“என்ன போட்டோஸ் அது காட்டு…” என விஸ்வயுகா கேட்டதும் குறிஞ்சி தயங்கியபடி எடுத்த புகைப்படத்தைக் காட்ட, அதில் நால்வரும் குழுவாக இருந்த புகைப்படங்கள் இருந்தது.
அதனைப் பார்த்து விட்டு யுக்தாவை முறைக்க, அவனோ “உன்னைப் பத்தி டீடெய்ல் மட்டும் தான் கேட்டேன்டி. இவள் தான் சொல்ல சொல்ல கேட்காம போட்டோ எடுத்தா…” என மூக்கைச் சுருக்கி அவளது இதயத்தை நழுவ விட, பேச்சை மாற்றும் பொருட்டு குறிஞ்சியிடம் திரும்பி அது சரி இது போக என்ன போட்டோ வச்சுருக்க?” எனக் கேட்டாள்.
அவளோ மௌனமாக நிற்க, நந்தேஷ் அவளை புரியாமல் பார்த்தான்.
யுக்தா கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, “குறிஞ்சி வீ டோன்ட் ஹேவ் டைம். அதுல சில எவிடன்ஸ் சிக்கலாம்” என அவசரப்படுத்த, வழக்கிற்கு தேவையானதாக இருக்கவும் அவளாலும் மறுக்க இயலவில்லை.
“போன்லயே வேற போல்டர்ல இருக்கும் பாரு…” என முணுமுணுப்புடன் கூற, “என்ன ஃபோல்டர் எனக்கு தெரியலையே” எனப் பாவம் போல பாவனை காட்டினான்.
“உன்னை…” என மூச்சிரைக்க பொருமியபடியே “பேபிமா” என பெயர் வைத்திருந்த ஃபோல்டரைத் தட்டி அவனிடம் நீட்ட, அவனும் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கியபடி வாங்கினான்.
‘ரெண்டு பேருக்கும் முழியே சரி இல்லையே’ என்ற சந்தேகத்துடன் விஸ்வயுகா அலைபேசியை எட்டிப் பார்த்து திகைத்துப் பின் புன்முறுவல் பூத்தாள்.
“ஓஹோ… நீ அப்படி வரியா? ரைட்டு” எனக் குறும்புடன் பார்த்ததும் குறிஞ்சிக்கு அவஸ்தையாகி போனது.
“எப்படி வர்றா?” என்ற ரீதியில் மைத்ரேயனும் ஷைலேந்தரியும் எட்டிப் பார்த்து ஆத்தாடி என திகைத்தனர்.
மைத்ரேயன் நந்தேஷை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான்.
“வொர்ஸ்ட் செலக்ஷன் சிஸ்டர்!” எனக் கேலி செய்ததில், நந்தேஷ் ‘என்ன இவன் நம்மளையும் பாக்குறான் போனையும் பாக்குறான்…’ என்ற யோசனையுடன் அவனும் அருகில் வர, ஷைலேந்தரி “என்ன கருமம் இது” எனக் கன்னத்தில் கை வைத்தாள்.
நந்தேஷும் எட்டி போனை பார்த்து திகைத்து யுக்தாவிடம் இருந்து அலைபேசியைப் பிடுங்கியவன் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்வையிட்டுப் பின் குறிஞ்சியைப் பார்க்க அவள் கீழுதட்டைக் கடித்து விழிகளை எங்கோ படரவிட்டாள்.
முழுக்க முழுக்க நந்தேஷின் கேண்டிட் புகைப்படங்களே நிரம்பி வழிந்தது.
“எதுடா செல்லம் இவனை இவ்ளோ லைக் பண்ண வச்சது…” என விஸ்வயுகா வாரிட, “ஐயோ! யுக்தா” என வெட்கம் கொண்டு அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
ஆனால் நந்தேஷின் முகம் தான் தீவிரமானது.
அலைபேசியை அப்படியே யுக்தாவிடம் கொடுத்து விட்டு விறுவிறுவென வெளியில் சென்று விட்டான்.
“டேய் இவனைப் போய் பாருடா. மறுபடியும் ரோஜா புராணம் பாடப்போறான்” என விஸ்வயுகா மைத்ரேயனை விரட்ட, குறிஞ்சியின் முகத்தில் மெல்லிய வாட்டம்.
“அட… அது ஒரு இத்துப்போன காதலுங்க அண்ணி…” ஷைலேந்தரி உடனடியாக உறவுமுறைக்குத் தாவ, குறிஞ்சிக்கு அது இனித்தாலும் அவன் ஒரு உணர்வும் காட்டாது சென்று விட்டதில், “இல்ல ஷைலு. இது சும்மா ஃபன்காக எடுத்தேன். நாட் அ பிக் டீல்” என லேசாகப் புன்னகைத்தாள்.
“ஓஹோ… ஃபன்க்காக ஃபாலோலாம் பண்ணுவீங்களா உங்க ஊர்ல” என விஸ்வயுகா முறைத்து பார்க்க, அவளுக்கு ஏனோ கண்ணீர் முட்டியது.
“ஏன்டா இதை ரிவீல் பண்ணுன?” குறிஞ்சி கமறிய குரலில் யுக்தாவைப் பார்க்க,
அவனோ, “எவ்ளோ வருஷத்துக்கு பொம்பள முரளியாட்டம் ஒத்த ரோஜாவோடவே அலையுவ…” எனக் கேட்டதும் விஸ்வயுகா கிளுக்கென சிரித்து விட்டாள்.
அவள் சிரிப்பை ரசித்த யுக்தா, “அவள் அழுதுட்டு இருக்கா. நீ ஏன்டி சிரிக்கிற?” எனப் போலியாய் முறைக்க,
“இல்ல யுகி, இவள் ஒத்த ரோஜாவோட அலைய, அவன் ஒரிஜினல் ரோஜாவோட அலைய… ஒரே ஃபன் தான்…” எனச் சிரிப்பை அடக்கிக்கொண்டதில் அவனும் சிரித்து விட்டான்.
“என்ன ரெண்டு பேரும் என்னைக் கலாய்க்கிறீங்களா?” உதட்டைப் பிதுக்கி குறிஞ்சி மூச்சிரைக்க,
“இன்னுமா உனக்கு இது புரியல. நம்ம அண்ணன் தான் அரைவேக்காடுன்னா அண்ணி அரைவாசிகூட வேகாத வேக்காடா இருக்கே விஸ்வூ…” என ஷைலேந்தரி தமைக்கையையும் கூட்டு சேர்க்க, அவளோ ஷைலேந்தரியின் புறம் திரும்பவே இல்லை.
தன்மீது அவளுக்கு இருக்கும் கோபம் புரிந்தது. ஆனால் அதனை நியாயப்படுத்த தெரியவில்லை அவளுக்கு.
யுக்தாவோ இவர்களுடன் பேசினாலும் புகைப்படங்களில் கண்ணாக இருந்தான்.
அவன் எதிர்பார்த்த அளவு எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத துப்பு ஒன்று கிடைத்தது.
“ஹே யுகா… நான் வந்துடுறேன். நீ ரெடியா இரு பப்புக்கு போக…” எனச் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பியவன், நேராக சென்றது இளங்கோவின் வீட்டிற்கு தான்.
அப்போது தான் வீட்டிற்குள்ளே வந்த பானுப்பிரியாவிடம் இளங்கோவின் தாய் மங்கை, “எங்கடி போன?” எனக் கேட்க,
ஒரு கணம் விழித்தவள், “அது மால்க்கு மா” என்று ஹாலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தாள்.
மங்கை, நம்ம இருக்குற நிலைமைக்கு மால்ல போய் சும்மா வேணாலும் வேடிக்கை பார்க்கலாம். உன் அண்ணன் தான் கடனை ஒடன வாங்கி ஏதோ குடும்பத்தை நடத்திட்டு இருக்கான். நீ கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்க பானு எனத் திட்டிட, அவளுக்கு எரிச்சல் மிகுந்தது.
“அதான பொறுப்பு பருப்புலாம் இல்லையா?” ஆடவன் குரல் வந்த திசையை நோக்கிய இரு பெண்களும் அதிர்ந்தனர்.
“உன் ப்ரெண்ட் இப்ப என் கஸ்டடில மேடம் எப்படி… உங்களை ஜீப்ல ஏத்திடுட்டுப் போகவா இல்ல தெருவுக்கே தெரியிற மாதிரி இழுத்துட்டுப் போகவா?” என அர்த்தப்பார்வையுடன் கேட்க, எச்சிலை விழுங்கினாள் பானுப்பிரியா.
“சார் அவளை ஏன் சார் கூப்பிடுறீங்க…” எனப் பதறியது தாயுள்ளம்.
‘நீயே சமாளி’ என்பது போல யுக்தா பார்க்க, நடுங்கிய கைகளுடன் “ம்மா ஒன்னும் இல்ல. இதோ வந்துடுறேன். நீ அமைதியா இரு” என்று சமன்படுத்தி விட்டு அவனுடன் சென்றாள்.
“சோ நீயும் கோகுலும் லவ் பண்றீங்க? நீங்க லவ் பண்றதுக்கு பிரச்சினையா இருக்குறது பணம். அந்தப் பணத்துக்காக யுகாவை ஃபாலோ பண்ணிருக்கீங்க. ரைட்?” எனப் புட்டு புட்டு வைக்க, அவளுக்கு வியர்த்து வழிந்தது.
—
ஒன்பது மணி அளவில் விஸ்வயுகாவின் அலுவலகத்திற்கு வந்த யுக்தா சாகித்யன், காரில் அமர்ந்தபடியே அவளுக்கு போன் செய்தான்.
“ஏஞ்சல் டைம் ஆச்சு அப்டியே கிளம்பிடலாம்” என்றதும்,
“வந்துட்டேன்டா…” என்றவள் சொன்னது போன்றே சில நொடிகளில் அவனுக்கு தரிசனம் கொடுத்தாள்.
கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், முட்டி வரைக்குமான மிடியும் அணிந்திருந்தவள் கூந்தலை அதன்போக்கில் தோள்களில் பரவ விட்டிருந்தாள்.
கையில் ஒரு சிறிய ஸ்லிங் பேக். கன்னத்தில் லைட் ஃபௌண்டேஷன், ரோஸ் ப்ளஷ். டீப் ரெட் லிப்ஸ்டிக். க்ளாசி இயர்ரிங்ஸ், ஸ்லிம் ப்ரேஸ்லெட், அதற்கு தோதாய் கருப்பு நிற ஹீல்ஸ் என மொத்த அழகின் உருவாக பக்கா மாடர்ன் யுவதியாக அவனை நோக்கி வந்தவளைக் கண்டு இமைக்கவும் மறந்து போனான் யுக்தா சாகித்யன்.
அவன் பார்வை தன்னை மொய்ப்பதை பொருட்படுத்தாமல், “நீ என்னடா மீட்டிங் போற மாதிரி வந்துருக்க. இதே கெட் அப்ல பார்த்தா உதித் எஸ்கேப் ஆகிடுவான்” என்றதும் காரை விட்டு இறங்கியவன், ‘இன்னைக்கு பப்ல என் கையை கட்டிப்போடு ஆண்டவா’ என ஒரு விண்ணப்பத்தைப் போட்டபடி டிக்கியில் இருந்து ஒரு கருப்பு நிற ஜீன் சட்டையை அணிந்து கொண்டான்.
முடியை லேசாக கலைத்து விட்டு, அவனும் மாடர்ன் உலகில் பயணிக்க ஆயத்தமாக, ‘என்ன ஒரே செகண்ட்ல ட்ரெண்டி ஆகிட்டான்…’ என்ற எண்ணத்தை அவனுக்கு காட்டாமல், ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள்.
அங்கு உதித், அழகிகளுடன் நடமாடிக்கொண்டிருந்தான் உல்லாசமாக.
‘டிக்கு, டிக்கு டிக்கு…’ என்ற இசை விட்டு விட்டு ஒலித்து, இருளும் வெளிச்சமும் ஒருங்கே தந்த பப்பின் முழுதும் எதிரொலித்தது.
யுக்தாவும் விஸ்வயுகாவும் ஒன்றாய் உள்ளே நுழைய, யுக்தா உதித்தை கண் காட்டினான்.
‘நான் பாத்துக்குறேன்’ என்ற கண்ணசைவுடன் அவனருகில் சென்றவள், “ஹே! லெட்ஸ் டான்ஸ்…” என முகத்தில் விரிந்திருந்த செயற்கை புன்னகையுடன் கையை நீட்ட, அவளை போதையுடன் ஒரு கணம் கண்ணை சுருக்கிப் பார்த்தவன், “எஸ் பேபி… யூ லுக் சோ ஹாட்! நியூ டு தி பப்?” எனக் கேட்டுக்கொண்டே அவளுடன் இணைந்து ஆடினான்.
அவனது கரம் அவள் இடையைச் சுற்றி வளைப்பதற்குள் இடைபுகுந்த யுக்தா, பெண்ணவளை சுழல வைத்து அவன் புறம் இழுத்தான்.
“என்னடா பண்ற?” சிரிப்பை மாற்றாமல் அடிக்குரலில் அவள் கேட்க,
“பத்திக்கிட்டு வருது. என்கூட ஆடுடி…” என அவளது இடையை இப்போது அவன் வசமாக்கிக்கொண்டான்.
மோகம் வலுக்கும்
மேகா