உதித்தின் அருகில் ஒரு பெண் வருவதைக் கண்டு நந்தேஷும் குறிஞ்சியும் குழம்பினர்.
“யார் குறிஞ்சி இந்தப் பொண்ணு?” நந்தேஷ் கிசுகிசுக்க, “தெரியல நந்து. சில பெரிய பிசினஸ்மேன்ஸ் கரன்சிக்கு பதிலா நைட் ஸ்டேக்கு பொண்ணை கூட ஃபிக்ஸ் பண்ணி அனுப்புவாங்க…” என்றாள் மெல்லமாக.
“இப்படியெல்லாம் கூடவா பண்றாங்க?” நந்தேஷ் அதிர்ந்து விழிக்க, அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள், “விவிஐபின்னு வெளில சொல்லிக்காதீங்க நந்து. உலகம் காறித்துப்பும்” என்றாள் நமுட்டு நகையுடன்.
“என்ன பண்றது நல்லவங்களாவே வளர்ந்துட்டோம் குறிஞ்சி” எனப் பரிதாபமாக முகத்தை வைத்தவனைக் கண்டு சிரிப்பு எழ, அவனுக்கும் புன்னகை முட்டியது.
“பொதுவா ஃபேமிலி கூட அட்டாச்மெண்ட்டா இருக்குறவங்க ஃபேமிலிக்காக வேணும்னா குற்றம் பண்ணுவாங்க. ஆனா பேசிக்கா நல்லவங்களா இருப்பாங்க குறிஞ்சி என்னை மாதிரி…” என அடக்கப்பட்ட நகையுடன் கூறியதில், “ஆஹான்… இருக்கட்டும் இருக்கட்டும். ஆனா இவ்ளோ நல்லவன் இல்லப்பா” எனக் கேலியாக உரைக்கும்போதே உள்ளிருந்து வேறொரு பெண் வெளியில் வருவது தெரிந்தது.
உதித்தின் மனைவியாக இருக்கக் கூடும். கோபத்துடன் காரில் ஏறி செல்வதும் அவளைச் சமன்செய்ய உதித் பின்னே வருவதும், அவள் சென்றதும் தோளைக்குலுக்கி விட்டு வீட்டினுள் செல்வதும் புரிந்தது.
அவன் அழைத்துச் சென்ற பெண்ணை குறிஞ்சி தூரத்திலேயே புகைப்படம் எடுக்க, அதனை தனது குழுவினருக்கு அனுப்பி விசாரிக்கச் சொல்லி இருந்தாள்.
பின் வாட்ச்மேனிடம் பொதுவாக பேச்சுக் கொடுப்பது போல பேசி சில விஷயங்களையும் வாங்கிக்கொண்டவர்கள் வீடு நோக்கி திரும்பினர்.
—-
நவீனத்தின் உச்சமான படுக்கையறையெல்லாம் இல்லை. அகலமான மரக்கட்டில், சுவரை ஒட்டி சிறிய வார்டரோப் குளுமைக்காக சிறிய ஏசி என அடிப்படையாக இருந்தது. அவர்களது படுக்கையறையில் கால்வாசி தான் இருக்கும் என்றாலும் மைத்ரேயனுக்கும் ஷைலேந்தரிக்கும் அந்த அறை பிடித்து இருந்தது.
இருவரும் கட்டிலில் அருகருகே அமர்ந்திருந்தாலும் சிறிய இடைவெளியும் இருந்தது.
அத்தனை நேரமும் நேர்ந்த உள்ளங்கைத் தீண்டல் கூட அறைக்குள் வரவும் முற்றிலும் நின்றிருந்தது.
ஷைலேந்தரி அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தான்.
அதில் மேலெழும்பிய தயக்கத்திற்கு விடைகொடுத்தவள், “மைதா விடுன்னு சொல்றேன்ல. எல்லாம் சரியாகிடும்டா” என்றாள் மென்மையாக.
“சாரி ஷைலா. அப்பா பேசுனதுக்கு” அவன் அவளது விழிகளை ஆழ்ந்து பார்க்க,
அப்பார்வையின் வீரியம் அவளைத் திணற வைத்ததோ என்னவோ “அதான் பசக்குன்னு உன் அப்பாவுக்கு ஒன்னு குடுத்தியே. அதுலயே மனுசனுக்கு சர்வமும் அடங்கி இருக்கும். நீ சாரி கேட்கணும்னு அவசியம் இல்லடா. உன்னை பத்தி எனக்குத் தெரியாதா. நண்பன்டா” என்று அவன் தோளில் கை போட்டு கூறினாள்.
அதில் மனமும் சற்று நிம்மதியாக, “நண்பன் மட்டும் தானா?” என்றான் ஓரவிழிப்பார்வையுடன்.
“இப்போ சைட்டும் ஆகிட்ட…” மெல்லிய குரலில் தோள் மீதிருந்த கரத்தை எடுத்தபடி கூறிட,
“வெறும் சைட்டு மட்டும் தானா?” எனக் கேட்கும்போதே அக்கேள்வியில் அத்தனை ஆர்வம்.
நெஞ்சம் காரணமின்றி படபடத்தது அவளுக்கு. அவளிடம் வந்த மௌனம் நேசத்திற்கான அறிகுறி என்று உணராமல் பெருமூச்சு விட்டவன், “வேற வீடு பார்க்கணும் ஷைலா. அந்த வீட்ல இருந்து நம்ம திங்ஸ எடுக்கணும்” என வருங்காலம் பற்றிய கவலையுடன் கூறினான்.
அவன் பேச்சை மாற்றி விட்டதில் எழுந்த சிறு ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டவள், “எதுக்குடா வீடுலாம் பார்த்துக்கிட்டு, கொலை கேஸ்க்கு ஆதாரம் கிடைச்சா போலீஸ்காரனே நமக்கு ஜெயில்ல தனி ரூம் குடுத்துடுவான். நம்ம வேணும்னா சூட் ரூமா வாங்கிக்கலாம். என்ன சொல்ற?” எனக் கண்சிமிட்டிக் கேட்க,
“அதை மாட்டுனா பாத்துக்கலாம். அதுக்கு முன்னாடி வேணும்ல…” என யோசித்தவன், “நீ வேணும்னா உன் வீட்ல இருக்கியா. நான் வீடு செட் பண்ணிட்டு கூப்பிடுறேன்?” என்றான்.
அவனை அமைதியாகப் பார்த்தவள், “வீடு செட் பண்ணுவியா… இல்ல ஒரேடியா சின்ன வீடு செட் பண்ண போறியா?” முறைப்புடன் கேட்டதில் அவனும் முறைத்தான்.
“இங்க பாரு… சும்மா நின்னுட்டு இருந்தவளை கூப்பிட்டு தாலி கட்டுனது நீ. சின்ன வயசுல இருந்து லவ் பண்றேன்னு உருட்டுனதும் நீ தான். இப்போ இந்த டஃப் டைம்ல என்கூட இருக்க வேணாம் ‘போ’ன்னு சொல்றதும் நீ தான். இதுல நான் எதை அக்செப்ட் பண்ணிக்கட்டும் மைத்ரா?” அழுத்தம் திருத்தமாகக் அவள் கேட்ட கேள்வியில் வாயை மூடிக்கொண்டான்.
“அதில்லடி” என அவன் பதற்றமாக மறுக்க வரும்போது, கையை நீட்டித் தடுத்தவள் “எனக்குத் தூக்கம் வருது. லீவ் மீ அலோன்” என சுருக்கென கூறியதும் மைத்ரேயன் சுண்டிய முகத்துடன் வெளியில் செல்லப்போக,
“எங்க போற?” என்றாள் பல்லைக்கடித்து.
“தனியா இருக்கனும்னு சொன்ன?”
“தனியா தான் இருக்கணும்னு சொன்னேன். தனிமைல இருக்கணும்னு சொல்லல. வந்து தூங்கு. காலைல யோசிக்கலாம். இல்லன்னா இதே மாதிரி வேற நல்ல ஐடியா இருந்தா யோசிச்சு வை” எனக் கோபத்துடன் உரைத்து விட்டு கட்டிலின் மறுபுறம் சென்று அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.
அவள் கோபத்துடன் இருப்பது புரிந்தவனுக்கு செய்வதறியாத நிலை.
அவளது அருகில் படுத்துக் கொண்டவன், “ஷைலா கோபமா?” என அவள் தோளைத் தொட, வெடுக்கென உதறியவள் திரும்பாமல் கண்ணை மூடிக்கொண்டாள்.
“ஷைலா இங்க பாரு…”
“பேசாம தூங்கிடு”
“இங்க பாரு” மீண்டும் அவன் கூற,
“முடியாது” என்றாள் திணக்கமாக.
கையை ஊன்றி இலேசாக எழுந்தவன், “ப்ச் திரும்புடி…” என வலுக்கட்டாயமாக திருப்பிட, அவன் இழுத்த வேகத்தில் அவனும் திரும்பினாள்.
அதில் கை ஸ்லிப் ஆனதில் அவன் அவள் மீது ஸ்லிப் ஆகி விட்டான்.
இதழுக்கும் இதழுக்கும் இடையில் நூலளவு இடைவெளியே இருக்க, திடீரென அவனது முகத்தை அருகில் கண்டதும் விழி விரித்த ஷைலேந்தரி உறைந்தாள்.
அவனும் இந்த நெருக்கத்தை எதிர்பாராமல் தடுமாறி விட்டுப் பின், அவளது வெப்ப மூச்சுக்காற்று சுண்டி இழுத்ததில் உணர்வுகள் கிளர்ந்தெழ “ஷைலா…” என அழைத்தான் கிறக்கமாக.
“மை… மை தா தள்… ளு” ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க கஷ்டப்பட்டவளின் இதழ்கள் முற்றிலும் அவன் வசமாகிப்போனது.
முத்தங்களில் தீர்ந்துவிடுவது இல்லையே தாபங்கள். அதிலும் அவளது இணக்கமும், மனைவி என்ற உரிமையும் மனதில் ஏற்பட்ட சோர்வுமாக ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு விதத்தில் இன்பத்தைக் கொடுத்தது. இவ்வுலகை மறக்க வைத்தது.
இதழ் தீண்டி திரும்ப எத்தனித்தவன், நெற்றி முதல் பாதம் வரை ஒவ்வொரு அங்கங்களையும் முத்தத்தால் குளிப்பாட்ட, புத்தம் புது மெல்லுணர்வில் சிக்கித் தவித்தது பாவையின் மென்மை.
தடுக்க எண்ணியும் அவளாலும் தடுக்க இயலவில்லை. உணர்வுப் பெருக்கின் எல்லையில் இருந்தவர்கள், மனம் விட்டுப் பேசும் மந்திரத்தை விட்டு விட்டு தலையணை மந்திரத்தை மட்டுமே நாடிப்போக, காதலை வாயால் உணர்த்திக் கொள்ளாமலேயே மோகத்தின் மூலம் உணர்த்திக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் வலியுணர்ந்த பிறகே நிகழ்வுணர்ந்து தன்னிலையைக் கண்டு அவளுக்குத் தூக்கிவாரிப்போட, அவனிடம் இருந்து விடுபட எண்ணியவளை அவன் விடவேண்டுமே.
“பயப்படாதடி. வலிக்காது… டேக் அ டீப் ப்ரீத்” என மென்மையாய் உரைத்தபடி அவளுள் இரண்டற கலந்தவன் அவளை மலரை விட பாதுகாப்பாக கையாள,
கண்கள் சொருக மீண்டும் தன்னிலையை இழக்கத் தொடங்கினாள் ஷைலேந்தரி.
—-
மறுநாள் கண் விழிக்கும் போதே விஸ்வயுகாவால் எழ இயலவில்லை. முடியை யாரோ பிடித்து இழுப்பது போல இருக்க, சோம்பலுடன் கண் திறந்தவள் யுக்தாவின் சட்டை பட்டனில் அவளது ஒற்றை முடி சுற்றிக்கொண்டதைக் கண்டாள்.
‘ட்ரெஸ் சேஞ்ச் கூட பண்ணாம தூங்குறதைப் பாரு’ என முணுமுணுத்தவள், தன் மீது படர்ந்திருந்த அவன் கையை எடுத்து விட்டு முடியையும் எடுக்க முயன்றாள்.
இந்தக் கலவரத்தில் அவனும் கண் விழித்திட, அவளது முயற்சிக்கு உதவி புரியும் வண்ணம் அவனே வலிக்காமல் முடியை எடுத்து விட்டான்.
அதில் சரட்டென அவனை விட்டு விலகி எழுந்தவள், அவனை மேலிருந்து கீழ் வரைப் பார்த்து, “அறிவில்ல. ‘ஷு’வைக் கூட கழட்டாம படுத்துருக்க. இனி ரெஃப்ரெஷ் ஆகமா பெட்ல படுத்த கொன்னுடுவேன்…” என்றவளை தலைக்கு கையைக் கொடுத்து ரசனையாக பார்த்தான்.
“என்னை எதிர்பார்த்தியா ஏஞ்சல்?”
அக்கேள்வியில் மௌனத்தைக் கையாண்டவள், “கிளம்பு” என்றாள் அதிகாரமாக.
“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஏஞ்சல்” இம்முறை கெஞ்சல் தொனியில் வந்தது அவன் வார்த்தைகள்.
“உன்னைக் கிளம்புன்னு சொன்னேன்” அவனைப் பாராமல் அவள் பதிலளிக்க,
“உடனெல்லாம் கிளம்ப முடியாது. ஹெட் ஆபிசரை பார்க்கப் போகணும். சோ குளிச்சு நீட்டா போகணும்” என்றவன் கட்டிலுக்கு அருகில் வைத்திருந்த ஷோல்டர் பேகில் அவனுக்கான உடையை எடுக்க விஸ்வயுகா அதிர்ந்தாள்.
“நீ என்ன பேகோட வந்துருக்க. இங்கயே செட்டில் ஆக போறியா?”
“ஏன் ஆக கூடாதா. என் மாமியார் வீடு இது தான ஏஞ்சல்” எனக் கண்ணடிக்க, அவள் நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.
“இட்ஸ் ஆல்ரெடி லேட்!” என அவள் கன்னத்தை மெல்லமாகக் கிள்ளி முத்தமிட்டவன் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.
நெருங்க நெருங்க நெஞ்சமும் நெக்குருகுவதை எப்படித் தான் நிறுத்துவது?
யுக்தா குளித்து வருவதற்குள் இன்டர்காம் மூலம் சமையலறைக்கு அழைத்தவள், டிஃபனையும் காபியையும் துரிதமாக அறை வாசலில் வந்து வைக்கும்படி உத்தரவிட்டாள்.
அதன்படி அவன் அவளது துவாலையைக் கொண்டே தலையை துவட்டியபடி வெளியில் வருவதற்கும் அவள் வாசலில் வைத்திருந்த உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய டிராலியை அறைக்குள் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
“அது என் டவல்” விஸ்வயுகா அவனது சட்டையில்லாத பரந்த மார்பை பார்த்தும் பாராமல் கண்ணைத் திருப்பிக்கொள்ள, இருப்பினும் கடினமான புஜங்கள் அவளை ஈர்க்கவே செய்தது.
‘ச்சை ஒரு ஆம்பளை பையனை இப்படி பார்க்க கூடாது’ எனத் தனக்குத் தானே கடிவாளமிட்டுக்கொள்ள, அவனோ விஷமச் சிரிப்புடன் “உன் டவல் தானா. அதான் வாசமா இருக்கா” என அவளைப் பார்த்தபடியே துவாலையை ஆழ்ந்து வாசம் பிடித்தான்.
கிடுகிடுவென அவளது கரத்திலிருந்த ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து தவித்தது. கன்னங்கள் சூடேறி சிவந்திருக்க, அதனை அவனுக்கு காட்டாமல் இருக்க குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் மீதிருந்த பார்வைதனை அவனோ விடாமல் தொடர்ந்தான். தன்னை அவள் எதிர்பார்த்திருக்கிறாள் என்ற நிஜமே அவனுக்கு அப்போதைக்கான மருந்தாக அமைந்தது.
வெள்ளைச் சட்டையை அணிந்திருந்தவன், கைப்பகுதி பட்டனைப் போட்டு விட்டு அலைபேசியில் மூழ்கி இருக்க, குளித்து முடித்து விஸ்வயுகா வரும் அரவம் கேட்க நிமிர்ந்து ஒரு கணம் பார்த்து விட்டு அலைபேசியைப் பார்த்தவனின் விழிகள் மீண்டும் அவளைத் தொட்டது.
மாற்றுடையை எடுக்க மறந்து விட்டு பாத் ரோபுடன் வந்திருந்தாள். முழுதாய் மறைத்திருந்தாலும் கூட, அவ்வுடையில் கண்கண்ட நெளிவு சுளிவுகள் அவனை ஆட்டுவித்தது.
முகத்தில் மிச்சமிருந்த நீர்த்துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாவையின் மென் அங்கங்களைத் தீண்ட அவன் தான் தன்னை அடக்க அரும்பாடுபட்டான்.
“ட்ரெஸ் கேட்டு இருந்தா நானே எடுத்து குடுத்துருப்பேன்ல…” என்றவனுக்கு இப்படி கண்ணுமுன்னாடி வந்து சோதிக்கிறாளே என்றிருந்தது.
அவளுக்கும் அப்படியே வர ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஆனால், அவனிடம் உள்ளாடையை எல்லாம் எப்படி எடுத்துத் தர சொல்ல இயலும்? அதிலும் இது முழுக்க உடலை மறைத்திருப்பதால் வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவனது ஆழ் மூச்சும், தன்னைத் தீண்டி தவிக்கும் பார்வையுமே சொல்லியது தான் அவனது உணர்வுகளைச் சீண்டி விட்டோமென.
அதில் உடனடியாக உடையை எடுத்துக்கொண்டு அவள் மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
பின் இளஞ்சிவப்பு நிற சல்வாரில் கூந்தலை வாரியபடியே வந்தவள் கண்ணாடி முன் நின்று, “டிஃபன் இருக்கு…” என்றாள்.
அவனுக்காக வரவைத்திருக்கிறாள் எனப் புரிந்தாலும் கேட்டுக்கொள்ளவில்லை.
தட்டில் ஒரு பூரியை எடுத்து வைத்தவன், அவளுக்கு ஊட்டி விட, என்னவோ அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
சின்னச் சின்ன நெருக்கங்களை அனுமதிக்காதே மனமே என மூளை கண்டித்தாலும் உள்ளம் உடன்படவில்லையே!
மோகம் வலுக்கும்
மேகா