321 views

 

 

 

 

“ரகு விடுன்னு சொல்றேன்ல, விடு!” என்றவளை காருக்குள் தள்ளினான். 

 

மறுபக்க கதவு வழியாக வருவதற்குள் காருக்குள் ஏறியவன் லாக் செய்தான்.  தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டே இருந்தாள் அவனை விடாமல் அடித்து. சொரணை இல்லாதவன் போல் அத்தனையும் வாங்கிக் கொண்டிருந்தவன் தன் கைபேசியில் கேமராவை ஆன் செய்தான்.

 

“பிராடு! எதுக்குடா என்னை இப்படி டார்ச்சர் பண்ற. என் பிள்ளைங்க முகத்துக்காக பார்க்கிறேன் இல்லனா என்னைக்கோ கைய கால உடைச்சு போட்டு இருப்பேன்.” கதறிக் கொண்டிருக்கும் மனைவியின் தோள் மீது கை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

 

“வாட்ஸ் அப்ல போட்டோ வைக்க ஒரு செல்பி.” என்று பல போட்டோக்களை எடுத்தான் வசவுகளை வாங்கிக் கொண்டு. 

 

புகைப்படம் எடுக்கும் வரை சிரித்த முகமாக இருந்த ரகுவரன் தன் வேலை முடிந்ததும் தள்ளிவிட்டான் மனைவியை. ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இதில் உச்ச கடுப்பை அடைந்தாள். 

 

“இதான்டா உன் புத்தி. வேணும்னா தலையில தூக்கி வைச்சி கொண்டாடுவ, இல்லன்னா தரையில போட்டு மிதிப்ப.”

 

“மனசாட்சியோட பேசுடி பொண்டாட்டி. உன்ன இதோ இந்த நெஞ்சில ராணி மாதிரி வைச்சிருந்தேன். அதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி ஓடி வந்துட்டியே.”

 

“டேய்! யாருடா ஓடி வந்தா?”

 

“வேற யாரு பொண்டாட்டி உன்னை தவிர இந்த வேலையை செய்வா.”

 

“நான் ஒன்னும் ஓடி வரல என் பொண்ணு கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.” என்றதும் அசுர வேகத்தில் அவள்  கன்னத்தை அழுந்த பற்றினான். ரகுவரனை சந்தித்ததில் இருந்து இப்படி ஒரு அழுத்தத்தை அவனிடம் பார்க்காதவள் மிரண்டு விழி நோக்க,

 

“உன் பொண்ணு கிட்ட சொல்லிட்டு வர தெரியுது என்கிட்ட சொல்லிட்டு வர தெரியலையா. என்னமோ விரோதி கிட்ட சொல்லிட்டு போற மாதிரி வாக்கியம் எழுதி வச்சிட்டு வந்திருக்க. அந்த நேரம் எனக்கு இருந்த கோபத்துக்கு…” கன்னத்தைப் பற்றி இருந்த கைகளை கழுத்துக்கு மாற்றியவன்,

 

“கொன்னு இருப்பேன் டி உன்ன.” என்றான் கார் இருக்கையில் அவள் கழுத்தை நசுக்கி.

 

 

தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கடமை அவளுக்கு இருப்பதால் கைகளை பிரித்தாள். மனைவிக்காக விட்டுக் கொடுத்தவன் மீண்டும் கையை கழுத்தில் வைக்க,

“சைக்கோ” என முறைத்தாள் மகிழினி.

 

 

“இந்த சைக்கோ வெளிவராம அடங்கி பல வருஷம் ஆகுது டி. தேவை இல்லாம நீதான் இப்போ இழுத்துட்டு வந்த. இனி இந்த சைக்கோ என்ன பண்ணாலும் சகிச்சிட்டு தான் போகணும்.”

 

“எனக்கு என்னடா தலையெழுத்து சகிச்சிட்டு போக. இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்ட நெருங்காத. எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கல தான். நீயா புரிஞ்சிட்டு விலகிப் போயிடு, இல்லன்னா…” என்றவள் இரு இதழ்களும் ரகுவரனின் தடித்த இதழுக்குள். 

 

 

அடித்து, கிள்ளி ஓய்ந்து போனவள் அப்படியே அமர்ந்திருக்க, ஓய்ந்து போகாமல் அவள் இதழ் ரேகைகள் தேயும் அளவிற்கு செயல்பட்டான். வாயு பகவான் அவன் வேகத்தில் தோற்று போகும் வழி தெரியாமல் தேங்கி நிற்க ஆரம்பித்தான். அதை உணர்ந்து கொண்டானோ என்னவோ சற்று இடைவெளி கொடுத்தான் மனைவிக்கு.

 

 

தப்பிப்பதை விட மூச்சு விடுவதே தற்போது தமக்குத் தேவை என்பதை அறிந்தவள் அந்த வேலையில் இறங்கினாள். இதழ் ஈரத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை கழுத்தில் ஊர்ந்தது. மூச்சு எவ்வளவு கதறி இருக்கிறது என்பதை பறைசாற்றியது வேகமாக ஏறி இறங்கி. 

 

 

ரசனையான பார்வைகள் அவ்விடத்தில் பதிய, விரல்களும் அங்கு சென்றது. இதை அறியாத மகிழினி இன்னும் பெரிய மூச்சுகளை தனக்குள் உள்வாங்கி வெளியிட்டுக் கொண்டிருக்க, கீழ் தாடையின் உட்பகுதியில் வருட ஆரம்பித்தவன் மெல்ல கீழ் இறங்கி சங்கு பகுதியில் நின்றான். 

 

காற்றோடு போராடிக் கொண்டிருந்தவள் கணவனை முறைக்க, உடனே அந்த முறைப்பை அடக்கினான் கண்ணடித்து. அவள் பார்வை வேறு திசைக்கு மாறிவிட, இவன் பார்வை அந்த இடத்தில் தான் மத்தளம் அடித்தது. விரல் வித்தை காட்ட ஆரம்பித்தான் கழுத்து பகுதியை இஷ்டத்துக்கும் வருடிவிட்டு.  

 

 

மகிழினி எதுவும் பேசாமல் தடுக்கும் வேலையை மட்டும் செய்ய, இரு முறை அதை அலட்சியம் செய்தவன் மூன்றாம் முறையாக, “பொண்டாட்டி ப்ளீஸ்” என்றான் கிறக்கமாக.

 

 

மனதில் கோபம் இருப்பினும் கைகள் தடுக்கும் வேலையை செய்யவில்லை அவன் குரலில். மனைவியின் சம்மதம் கிடைத்துவிட்டதை அறிந்தவன் விரல்களுக்கு பதில் இதழ்களை தூதுவிட்டான்.‌ கூச்சம் தாங்காமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ள,

 

“பொண்டாட்டி” என்று அதற்கும் தடை விதித்தான். 

 

நேரங்கள் கடந்து இருவரும் இருக்கும் நிலையை மாற்றிக் கொண்டனர். தள்ளி இருந்த மகிழினியும் கணவன் செயலில் இறங்கி வர, “எப்பவும் எனக்கு புதுசாவே தெரியுற பொண்டாட்டி எப்படி?” அவன் ஓசை காதில் கேட்கவில்லை இதழ்கள் காதருகே இல்லாததால். 

 

கூச்சம் தாங்காமல் அவன் முகத்தை தன் நெஞ்சோடு பொருத்திக் கொண்டவள், “அன்னைக்கும் இந்த மாதிரி தான் சொன்ன. உன் வேலை முடிஞ்சதும் சும்மா சொன்னேன்னு என்னை வெறுப்பு ஏத்துன. உன் வார்த்தைய நம்ப மாட்டேன் போ.” கணவனின் முகத்தை தள்ளி விட்டாள்.

 

“என்னைக்கு பொண்டாட்டி” என்றவனுக்கு அந்த நாள் நன்றாகவே நினைவு இருந்தது. இருந்தும் மறந்தது போல் காட்டிக் கொள்ள,

 

“ஆஆஆஆ ராட்சசி எதுக்குடி நாக்க  இப்படி கடிச்ச.” வலி பொறுக்க முடியாமல் அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

 

காதல் லீலைகள் அனைத்தும் வற்றிப் போய்விட்டது அவள் கொடுத்த வலியில். 

 

“இப்படி எல்லாம் நீ பண்ணதும் மயங்கி கொஞ்சுவன்னு நினைச்சியா. ஒழுங்கு மரியாதையா ஊர பார்த்து போய் சேரு. இந்த மகிழினி கோபத்தை கிளறிவிட்டா சேதாரம் உனக்கு தான் அதிகமா இருக்கும்.” என்ற ரகுவரனின் தர்மபத்தினி கார் கதவை திறந்து கொண்டு நகர்ந்தாள்.

 

 

மனைவியை முத்தத்தால் மயக்கி அழைத்துச் செல்லலாம் என்ற திட்டம் வீணாய் போனதில் நொந்து கொண்டவன் இருக்கையில் தலை சாய்ந்தான். கிறக்கமாக அவள் சொல்லிய அன்றைய நாள் கண்முன் படம் எடுத்தது.

 

***

 

மான்விழிக்கு கண் வீக்கம் குறைய ஆரம்பித்தது அடுத்த இருநாளில். மகளின் உடல்நிலை சரியாகும் வரை ரகுவரன் முகம் சரியாகவில்லை. பார்க்கும் அனைவரையும் கடித்து வைத்தான். அவன் குணம் அறிந்து மனைவி கண்டுகொள்ளாமல் சென்று விட, 

 

“ஏண்டி நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா? புருஷன் ரெண்டு நாளா மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கான் ஒரு வார்த்தை கேட்க மாற்ற.” கடுப்போடு கேட்டான்.

 

“எதுக்கு? என்கிட்ட மல்லு கட்டவா. இந்த மாதிரி நேரத்துல தான் உன் இம்சை இல்லாம நான்  நிம்மதியா இருக்கேன். அதை கெடுத்துக்க விரும்பல.”

 

“நான் உனக்கு இம்சயாவா தெரியுறேன்.”

 

“ஆமா’னு எப்படி உன் மனச நோகடிக்க முடியும்.” 

 

வெகு நேரமாகியது அவள் சொல்லிய வார்த்தையை முழுவதுமாக உணர. சீற்றத்தோடு மனைவியைத் தேட, அவளோ பால் காய்ச்சி கொண்டிருந்தாள் பிள்ளைகளுக்கு. பால் பொங்கி வரும் நேரம் அடுப்பை நிறுத்த எண்ணியவளின் செயலை கணவன் செய்ய, வேலை மிச்சம் என்று நிம்மதி அடைந்தாள்.

 

அதையும் பார்த்த ரகுவரன் கடுப்போடு, “இந்த இம்சையை தானடி புருஷன்னு சொல்லிட்டு திரியுற.” என்றான்.

 

கழுத்தில் இருக்கும் தாலியை அவனுக்கு நேராக நீட்டியவள், “என்ன சைக்கோ பண்ண முடியும் இந்த தாலிய நீதான கட்டுன.” என கேலி செய்தாள்

 

 

“இந்த ரகுவரன் மேல இருந்த பயம் விட்டுப் போச்சுடி உனக்கு. பழையை மாதிரி ஆட்டம் காட்டுனா தான் நீ அடங்குவே.” 

 

“போடா போடா

புண்ணாக்கு போடாத

தப்பு கணக்கு 

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்பு கணக்கு

 

பல கிறுக்கு உனக்கு

இருக்கு இப்போ எண்ணாத

மனக்கணக்கு

பல கிறுக்கு உனக்கு

இருக்கு இப்போ எண்ணாத

மனக்கணக்கு” 

 

கணவனை கேலி செய்து கொண்டிருந்த மகிழினி அதிர்ந்தாள் பாத்திரங்கள் உருளும் சத்தத்தில். ரகுவரன் தான் மனைவி மீது காட்ட முடியாத கோபத்தை அங்கிருந்த பாத்திரங்களில் காட்டினான். 

 

 

விளையாட்டுக்கு இவள் பேச வினையாகி போனதன் விளைவு அவன் உச்ச ஸ்தானத்தில் குதித்துக் கொண்டிருந்தான். முகம் கடுகடுவென்று எண்ணெயில் பொரித்த மிளகாய் போல் காரமாக இருந்தது. 

 

“ரகு” என்று தோள் தொட்டவளின் கையை உதறிவிட்டவன் தன் அறைக்கு விரைந்தான்.

 

 

பெருமூச்சு விட்ட மகி அவனைப் பின் தொடர, போர்வையை போற்றிக் கொண்டு கட்டிலில் குப்புற விழுந்தான். அழைத்துப் பார்த்தவள் பதில் கிடைக்காததால் பாம்பு போல்  நுழைந்தாள் போர்வைக்குள். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ரகுவரன் கோபத்தோடு படுத்துக் கொண்டிருக்க,

 

“ரகுவரா…” என்றாள் காதலோடு.

 

“போ டி” 

 

“உன்னை பார்க்கணும் திரும்பு.”

 

“முடியாது”

 

“ப்ச்! ரகுவரா பொண்டாட்டி சொன்னா கேட்கணும்.”

 

“ஆமாம் சாமி போட வேற ஆளை பாரு.”

 

“அப்போ நீ கட்டின தாலிய கழட்டிடுறேன்.” என்று மகிழினி லேசாக எழுந்து கொள்ள, கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பிப் படுத்தவன் தாலியோடு சேர்த்து பிடித்தான் மனைவியை.

 

“நான் இப்படி வந்து கெஞ்சனும்னு தான கோவமா இருக்குற மாதிரி இவ்ளோ நேரம் சீன் போட்ட.” என

மகி சத்தமிட்டு சிரிக்க, 

 

“ஏய்!” என்றவன் உள்ளம் மாட்டிக் கொண்டதை நினைத்து காரி துப்பி கொண்டது. 

 

கணவனின் திருட்டு முழியை கண்டு கொண்டவள், “உன்னை எல்லாம் நான் அப்பவே ஒரு ஆள மதிச்சது இல்லடா ரகுவரா. இப்போ நாலு பாத்திரத்தை தள்ளிவிட்டு முறைச்சா நீ பெரிய ஆளா.” அதற்கு மேல் மனைவியை பேச விடாதவன் மொத்த தண்டனையும் எந்த தவறும் செய்யாத இதழ்களுக்கு கொடுத்தான். 

 

 

மனைவியின் முறைப்பில் உள்ளம் மகிழ்வு அடைந்தவன் கர்வத்தோடு பார்க்க, “போடா சைகோ” என்று நகரப் பார்த்தாள்.

 

 

உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டவன் அவளை தன் மேல் சாய்க்க போராட, “பொறுக்கி” திட்டிக்கொண்டே விடுதலை அடைந்தவள் சமையலறை சென்றாள்.

 

 

விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் ரகுவரன். இன்றைக்கு என்று மகி சேலை கட்டியிருக்க, பெரும் வசதி அவனுக்கு. கிடைக்கும் இடமெல்லாம் கன்னி போகும் அளவிற்கு கிள்ளி வைத்தான்.

 

அதன் தாக்கத்தை பொறுக்க முடியாத மகிழினி சூடாக இருந்த பால் டம்ளரை லேசாக கையில் வைத்தாள். “அடியே சுடுது!” என்றதும் மீண்டும் ஒருமுறை கையை சுட்டாள். 

 

 

திருமணமான புதிதில் நடந்த நிகழ்வு சற்றென்று ஞாபகத்திற்கு வந்தது இருவருக்கும். இருக்கும் பஞ்சாயத்தை மறந்தவர்கள் அன்றைய நாளை பார்வையால் பரிமாறிக் கொண்டார்கள். மனைவியின் பார்வையில் சுண்டி இழுக்கப்பட்டவன் தலை முடியை ஒதுக்கி விட்டு கன்னம் பற்றினான். 

 

 

மௌன மொழிகள் ஆட்சி செய்ய, வெகு நேரங்கள் கழித்து வாய் திருந்தான், “இப்பதான் சுடச்சுட பால கொட்டுன மாதிரி இருக்கு.‌ இவ்ளோ வருஷம் ஆனதுக்கு அப்புறமும் புதுசாவே தெரியுறடி பொண்டாட்டி.” வார்த்தையால் மயக்கும் வித்தை அவனுக்கு சர்வ சாதாரணம் என்பதால் பேசியே வழிக்கு கொண்டு வந்தான். 

 

சமையலறை மேடை கட்டிலாக, சூடான தேகங்கள் இனிமையான ஆளுமையை பொங்க வைத்தனர் வெகுநேரம். முத்தம் மட்டுமே மிச்சமிருக்க, சோர்ந்த ஜோடிகள் கட்டிலை நாடினர்.

 

***

 

“ரகு நாளைக்கு போட்டுக்க டிரஸ் இல்ல. கொஞ்சம் வாஷ் பண்ணி தரியா.” கொஞ்சி கொண்டு கேட்டாள்.

 

காதில் விழாதது போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தவனிடம் மீண்டும் கேட்க, “போடி வேலையில்லாத வேலை.” என்று அலட்சியம் செய்தான்.

 

“உன்னால தான் என் வேலை கெட்டுப் போச்சு. ஒழுங்கு மரியாதையா இந்த வேலையை முடிச்சு கொடு.”

 

“நான் பண்ணா உனக்கு எங்க போச்சு அறிவு. வீட்ல வேலை இருக்கு முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான. இப்பதான் கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி வெக்கப்பட்டு என்னை ஏத்தி விட்டுட்டு பேசுறா பேச்சு.”

 

ரகுவரனின் வார்த்தையில் அதிர்ச்சியானவள், “அடப்பாவி! இப்ப தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  புதுசா தெரியுறன்னு சொன்ன. இப்ப என்னடா மாத்தி பேசுற புது பொண்ணு மாதிரின்னு.” என்ற வார்த்தையில் கமுக்கமாக சிரித்தவன் அவளை பக்கத்தில் அழைத்தான்.

 

 

நல்ல மன நிலையில் இல்லாதவள் பதில் கிடைக்க உடனே செவி சாய்க்க, “இந்த ரகுவரன் காரியமாக  சொன்ன பிட்டு டி பொண்டாட்டி அது.” என்று கண் அடித்தான்.

 

கடுப்பான மனைவி பேச வர, “அப்பவே நீ பார்க்க ஆன்ட்டி மாதிரி தான் தெரிஞ்ச. இப்போ ஆன்ட்டிக்கு ஆன்ட்டி மாதிரி தெரியுற.” என்று எழுந்து ஓட, துரத்தியவள் அன்றைய நாள் முழுவதும் துணியை துவைப்பதற்கு பதில் கணவனின் முதுகை துவைத்தாள்.

 

***

 

தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய மகிழினியின் பார்வை ரகுவரனை தேடியது. கண் எட்டும் தூரம் வரை அவன் இல்லாமல் போக, ‘எங்க போய் தொலைஞ்சான்.’ என உள்ளுக்குள் தேடினாள்.

 

“எங்கயும் போகல பொண்டாட்டி உனக்கு பின்னாடி தான் இருக்கேன்.” தன்னை தேடும் மனைவி என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்தவன் பதில் கொடுக்க, அலட்டிக் கொள்ளாமல் அப்பார்ட்மெண்ட் நோக்கி புறப்பட்டாள்.

 

 

கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கை இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கெத்தாக பின் தொடர்ந்து கொண்டிருந்தான் மனைவியை. தனக்குப் பின்னால் வருபவனை கண்டு கொள்ளாமல் அவள் நடக்க, விசில் அடித்து பார்க்க வைத்தான். 

 

கொடைக்கானல் சாலையில் வருவோர் போவோர் என அனைவரும் இவ்விருவரையும் பார்த்து சென்றார்கள் ஒரு மாதிரியாக. அதை தாமதமாக உணர்ந்த மகிழினி, “உன்னால என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க. கல்ல கொண்டு அடிச்சு விரட்டுறதுக்கு முன்னாடி போயிடு.” என்றாள்.

 

இவள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒருவர் எதர்ச்சியாக மகிழினியை பார்த்தார். நேற்றில் இருந்து பார்க்கும் பெண் என்பதால் அவள் பின் ஒருவன் சுற்றித் திரிவதை சந்தேகக் கண் திறந்து நோக்கியவர் பின் தொடர்ந்தார் இருவரையும்.

 

தனக்குப் பின்னால் சோதனை வருகிறது என்பதை அறியாத ரகுவரன் உற்சாகமாக பாடினான்,

 

“கல்யாணம் தான்

கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்

கட்டிக்கலாமா 

 

தாலியத்தான்

கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு

கட்டிக்கலாமா”

 

என்று.

 

சந்தேகப்பட்டது சரிதான் என்பது போல், “மேடம் இவன்‌ உங்களை தொந்தரவு பண்றானா.” கேட்டார் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர்.

 

அவரை யார் என்று அடையாளம் தெரியாததால் மகிழினி குழப்பமாக பார்க்க, “நான் உங்க அப்பார்ட்மெண்டுக்கு பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல இருக்கேன்.  ரேகா மேடம் வீட்டுக்கு புதுசா வந்தது நீங்க தான.” என்று ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டார் மகிழினியை.

 

‘ஆமாம்’ என்பது போல் கதாநாயகி தலையசைக்க, “என்ன பிரச்சனை பண்றான்னு சொல்லுங்க மேடம் நம்ம கைவசம் போலீஸ், வக்கீல்னு நிறைய பேர் இருக்காங்க.” என்றவரை அவமானப்படுத்தினான் சத்தமாக சிரித்து ரகுவரன்.

 

மனைவியின் முறைப்பில் சிரிப்பை நிறுத்தியவன், “இவ்ளோ பெரிய ஆளுங்களை தெரிஞ்சு வச்சிருக்கீங்களே… நீங்க யார் சார்?” கேள்வி கேட்டான் அவரிடம்.

 

“உனக்கு எதுக்கு அதெல்லாம்? ஒரு பொண்ணு தனியா வந்துட கூடாது உடனே வேலைய காட்ட வேண்டியது. போலீஸ் கிட்ட சொல்லி தோலை உரிக்க சொல்லிடுவேன் ஜாக்கிரதை.” பேசிக் கொண்டிருந்தவர் பார்வை மகியிடம் தாவி,

 

 

“ஃபிராடு பசங்களுக்கு ஒரு பொண்ணு அழகா இருந்திட கூடாது. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க மேடம் என்னை தாண்டி தான் இனிமே உங்களுக்கு எதுவா இருந்தாலும் நடக்கும். இவன என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க” என்று விரல் நீட்டினார்.

 

 

உள்ளுக்குள் நீட்டிய விரலை நினைத்து பதறிய மகி உடனே பேச்சை மாற்றினாள், “சார் நமக்கு எதுக்கு வம்பு வாங்க போவோம்.” என்று.

 

“இருங்க மேடம் சார் என்னை எதுவோ பண்ணப் போறாராம். என்ன பண்றாருனு பார்த்திடுவோம்.”

 

“ராஸ்கல்! மேடம் கிட்ட உனக்கு என்னடா பேச்சு? ஊர் பேர் தெரியாத அளவுக்கு பண்ணிடுவேன்.” 

 

கையில் அணிந்திருக்கும் காப்பை பின்னுக்கு தள்ளிய ரகுவரன் முறுக்கிக் கொண்டு அவர் முன்பு மல்லுக்கு நிற்பது போல் நிற்க, “பிரச்சனை வேணாம் சார் கிளம்பிடுவோம்.” கணவனின் தோரணையில் வந்தவரை காப்பாற்ற நினைத்தாள்.

 

“இதுக்கெல்லாம் பயப்படாதீங்க மேடம். இவன மாதிரி நிறைய பொறுக்கி பசங்கள நான் பார்த்திருக்கேன். விலகிப் போகாம திருப்பி நின்னு அடிக்கணும் அதுதான் பொண்ணுங்களுக்கு அழகு.” என்றவர் நீட்டிய விரலை நீட்டியபடி பேசிக் கொண்டிருக்க, அதில் தான் ரகுவரனின் பார்வை இருந்தது.

 

 

கணவனின் பார்வை வீரியத்தை உணர்ந்த மகிழினி பாவம் தனக்கு ஆதரவு தெரிவிக்க வந்த விரலை காப்பாற்ற, “அதெல்லாம் அவசியமில்லை சார், வாங்க நம்ம கிளம்பலாம்.” இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துச் சென்றாள்.

 

 

சரியான அதாரு பார்ட்டி போல மகிக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர். என்னவோ காலிப்பையன் கையில் இருந்து பெண்ணை காப்பாற்றுவதாக நினைத்து  பல பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தார். காதில் ரத்தம் வராத குறையாக கேட்டுக் கொண்டு வந்த மகிழினி, “ஓகே சார் அப்புறம் பார்க்கலாம்.” என்று ஓட,

 

“எதுக்கு மேடம் அவனுக்கெல்லாம் பயந்து இப்படி ஓடுறீங்க. நான் இருக்கேன் உங்களுக்கு. பக்கத்து அப்பார்ட்மெண்ட் தான் என்னோடது . ஏதாச்சும் பிரச்சனைனா அழகு சுந்தரம்’னு ஒரு குரல் கொடுங்க. ஓடி வந்துடுறேன் உங்களுக்காக.” என்றவரை மனதுக்குள் பாவம் பார்த்து வருத்தப்பட்டாள் மகிழினி.

 

 

அந்தப் பாவம் கணவனுக்கு தோன்றாமல் போக  அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்ற அழகுசுந்தரம் முன்பு வந்து நின்றான். தன் முன்னால் நிற்பவனை அவர் கோபத்தோடு பார்க்க, “கொஞ்சம் அப்படி வாங்க சார்.” என்றான் பவ்யமாக.

 

 

தன்னை பார்த்து ரகுவரன் பயந்து விட்டதாக உணர்ந்த அந்த நபர், “மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மேடமே உன்னை மன்னிச்சி விட்டதால போலீஸ் கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன் பயப்படாம இரு.” என்று பெருமிதத்தோடு நின்றார் அங்கிருக்கும் காவலாளிகள் முன்பு.

 

“ரொம்ப நன்றி சார்” பனைமர உசரத்தில் இருக்கும் ரகுவரன் பாதி உயரத்தை குறைத்துக் கொண்டு அவரை தலை வணங்கினான்.

 

“இருக்கட்டும் தம்பி.” என்று ரகுவரன் முதுகை தட்டிக் கொடுத்தவர் அப்பார்ட்மெண்ட் உள்ளே செல்ல முயல, “ரொம்ப பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிருக்கீங்க கொஞ்சம் ஓரமா வந்தீங்கன்னா உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிப்பேன்.” முன்பை விட இப்பொழுது மிகவும் பணிவாக பேசினான்.

 

“என்ன தம்பி நீ… நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு இப்படி பயந்துட்ட. இன்னும் எனக்கு கமிஷனரை தெரியும்னு எல்லாம் சொன்னா நிக்கிற இடத்துல சுச்சா போயிடுவ போல.” என்று பெரிய காமெடி செய்தது போல் சத்தமாக சிரித்தவர்‌ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அடுக்குமாடி காவலாளிகளிடம்,

 

“நமம் அப்பார்ட்மெண்டுக்கு புதுசா வந்த அந்த மேடம் கிட்ட இவன் ரகளை பண்ணான். சும்மா ரெண்டு பேச்சு தான் பேசினேன்… அதுக்கே இப்படி பயந்து சாகுறான். இந்த காலத்து பசங்களுக்கு அவ்ளோ தான் தைரியம்.” என்றதும் ரகுவரனை பார்த்தார்கள் வயதில் பெரியவர்களான காவலாளிகள்.

 

 

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவன், “அது என்னமோ தெரியல சார் உங்களை பார்த்ததும் ரொம்ப பயம் வந்துடுச்சு. நானே ஏதோ ஒரு ஜாலிக்காக அந்த மேடமை கிண்டல் பண்ணிட்டேன். என் வாழ்க்கைய தயவு செஞ்சு அழிச்சிடாதீங்க சார்.” கை இரண்டையும் கட்டிக் கொண்டு சரணடைந்தான் ரகுவரன்.

 

“ஹா ஹா ஹா… எங்கிட்ட இவ்ளோ பணிவா பேசும்போதே தெரியுது நீ எவ்ளோ பயந்து இருக்கன்னு.”

 

 

 

“ஆமா சார்ர்ர்… ரொம்ப பயந்து போயிட்டேன். நீங்க எதாச்சும் பண்ணி என் வாழ்க்கை போயிடுமோன்னு படபடப்பா இருக்கு. கொஞ்சம் அந்தப் பக்கம் வாங்க சார். உங்க கால்ல விழுந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.” 

 

“சரி சரி ரொம்ப கெஞ்சாத.” என்ற அழகுசுந்தரம் அங்கிருக்கும் காவலாளிகளிடம், “இந்த பையன் பயந்து என் கால்ல விழ போறன்னு சொன்னதை யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. பார்க்க ரொம்ப அப்பாவியா வேற இருக்கான் அவமானம் தாங்காம தூக்குல தொங்கிட போறான்.” என்றவாறு ரகுவரன் தோள் மீது கை போட்டார்.

 

 

உடனே குனிந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து நிற்க, அவனின் கை முட்டி இருக்கும் உயரத்தில் தான் இருந்தார் அழகுசுந்தரம். அதை கவனித்த காவலாளிகள் கமுக்கமாக சிரிக்க, “சின்ன பிள்ளைல நான் ரொம்ப உயரமா இருப்பேன். இப்போ அதிகம் சோசியல் சர்வீஸ் செய்றதால நேரமில்லாம குள்ளம் ஆகிட்டேன்.” அசிங்கப்பட்டதை அழகாக சமாளித்து ரகுவரனோடு நகர்ந்தார்.

 

 

யாரும் இல்லாத இடத்தில் நின்றவர் வாய் திறப்பதற்குள், “யாருடா நீ கோமாளி” என குனிய வைத்து குத்த ஆரம்பித்தான். 

 

 

என்னவோ நினைத்து வந்த அழகுசுந்தரம் கதற முடியாமல் வாயை பொத்திக் கொண்டு அடி வாங்க, “எவ்ளோ தைரியம் இருந்தா புருஷன்காரன் என் முன்னாடி என் பொண்டாட்டி உன் கைய புடிச்சி இழுத்துட்டு வருவா.” என்றதும்,

 

“என்னது பொண்டாட்டியா!” என அதிர்ச்சியானார் அழகுசுந்தரம்.

 

“ஏன்டா இப்போ இவ்ளோ ஷாக் ஆகுற. நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருக்கக் கூடாதா.  எங்களை பார்த்தா உனக்கு அப்படி தெரியுதா இல்ல இப்படி தெரியுதா.” 

 

“ஐயோ சார்… நீங்க அவங்க புருஷன்னு தெரியாம பேசிட்டேன், விட்டுடுங்க.”

 

“எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன உறவு இருக்குன்னு கூட தெரியாம போலீசை தெரியும் வக்கீல தெரியும்னு பந்தா வேற. பரதேசி பயலே நானும் அவளுமே வக்கீல் தான்டா.” என்று அடுத்த அதிர்ச்சியை கொடுக்க,

 

 

“சாரி சார், நீங்க ரெண்டு பேரும் வக்கீல்’னு தெரியாம வான்டடா கேஸ்ல மாட்டிகிட்டேன்.”

 

 

“அது என்னடா சொன்ன கிழட்டு பயலே… வயசு பையன் மாதிரி என் பொண்டாட்டி குரல் கேட்டதும் ஓடி வருவியா. அவளுக்கு தாலி கட்டி இரண்டு பிள்ளைகளை பெத்த புருஷன் நான் இருக்கேன். நீ என்னமோ உங்களுக்காக நான் இருக்கன்னு சினிமா டயலாக் அடிக்கிற. இந்த ரகுவரன் எவ்ளோ பெரிய வில்லன் தெரியுமாடா. சொல்லுடா, தெரியுமா தெரியாதா?.” இவ்வளவு பேசிக் கொண்டிருந்தாலும் ரகுவரன் கைகள் அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

 

குனிய வைத்து அடிவயிற்றில் குத்திக் கொண்டிருப்பதால் பேச முடியாமல் தவித்த அழகு சுந்தரம், “தெரியாது சார்… தெரியாது சார். என்னை விட்டுடுங்க சார்… சத்தியமா தெரியாது சார்.” கதறி கண்ணீர் வடித்தார்.

 

அடிப்பதை நிறுத்தினான் ரகுவரன். தன் கண்ணீரில் மனமிறங்கி விட்டான் என்று அழகுசுந்தரம் நம்புவதற்குள்,  “கல்யாணமான பொண்ணு கிட்டயே இப்படி பேசுறியே வயசு பொண்ண பார்த்தா எப்படி பேசுவ. பொண்ணுங்கள பார்த்தா இனிமே பல்ல காட்டுவியா..” என இரண்டாம் சுற்றை வெற்றிகரமாக ஆரம்பித்தான்.

 

 

“சார் இனிமே பொண்ணுன்னு என் வாய்ல இருந்து வராது சார்.”

 

“ஓஹோ!  அப்ப  என் பொண்டாட்டிய செல்லப் பேரு வச்சு கூப்பிடுவேன்னு எங்கிட்டயே சொல்ற.”

 

“அப்படி சொல்லல சார். இனிமே அவங்க எனக்கு தங்கச்சி மாதிரின்னு சொல்ல வந்தேன்.” என்றதும் அதிர்ச்சியில் அடிப்பதை நிறுத்தினான் ரகுவரன்.

 

நிற்கத் தெம்பு இல்லாமல் சுவற்றில் சாய்ந்த அழகுசுந்தரம் பாவமாக தன் முகத்தை வைக்க, “ஏண்டா கிழட்டு பயலே என் பொண்டாட்டி உனக்கு தங்கச்சியா. காலம் போன காலத்துல என் பொண்டாட்டிய வயசானவன்னு கிண்டல் பண்றியா. அவ வயசு என்னன்னு தெரியுமாடா. வயச விடுடா என் பொண்டாட்டி அழகு என்னன்னு தெரியுமாடா உனக்கு. காலைல தூங்கி எழுந்தா கூட பளபளன்னு இருப்பாடா பரதேசி. அப்படி ஒரு பேரழகிய பேர்ல மட்டுமே அழகு வச்சிருக்க நீ தங்கச்சின்னு சொல்லலாமா.” பாவம் மூன்றாவது சுற்றுக்கு அழகு சுந்தரமே எடுத்துக் கொடுத்தார்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்