கல்யாண மண்டபத்திலிருந்து வெளியே வருவதற்குள் நால்வருக்கும் போதும் போதுமென்றாகிப் போனது.
“டிஸ்கஸ்டிங்! வெரி வொர்ஸ்ட் டே” என்று விஸ்வயுகா பொரிந்து தள்ளியபடி காரில் ஏற, ஷைலேந்தரி நைசாக நழுவப் போனதில் மைத்ரேயன் அவள் தலை முடியைப் பிடித்தான்.
ஐயனிங் செய்யப்பட்ட கூந்தல் வழுக்கிக் கொண்டு சென்றதில், இன்னும் இறுக்கமாகப் பிடித்தவன், “துரோகி… அவன் என் கையை வெட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கான். அவனுக்கு பார்த்து பார்த்து சாப்பாடு எடுத்துட்டு வர்றியா?” என்று முறைக்க,
“ஐயோ மைதா… நீ என்னை மிஸ்அண்டர்ஸ்டுட் பண்ணிட்டு இருக்க. மீ யுவர் பெஸ்ட் பிரெண்டு. உங்களைக் காப்பாத்த தான, ஒரு வண்டி இட்லியை குடுத்து அவனை ஆஃப் பண்ணேன்” என்று பவ்யமாக கூற, “அடியேய்… உன்னை எனக்கு இத்துனூண்டா இருக்குறதுல இருந்து தெரியும். ஒருத்தன் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா கூட அவன்கிட்ட போய் வழிஞ்சு தள்ளுவ. இவன் ஏதோ பரவாயில்லாம இருந்ததும் உடனே ஸ்கோர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்ட…” எனப் பல்லைக்கடித்தவன் இன்னும் அவள் முடியை விடவில்லை.
அதில் கோபம் பொங்க விருட்டென அவன் கையை தட்டி விட்டவள், “வார்த்தையைப் பார்த்து பேசு மைத்ரேயன்” என விழிகளில் அனல் பறக்க மிரட்ட, அவளை யோசனையுடன் பார்த்தான்.
“உன் மனசாட்சியை தொட்டு சொல்லு” என்று அவன் நெஞ்சில் ஒற்றை விரலால் குத்தி சாடியவள்,
“அந்த சிபிஐ ஆபிசர் பரவாயில்லாம இருந்தானா? மிஸ் வேர்ல்டுடா அவன். என்ன ஹெய்ட்டு, என்ன வெய்ட்டு, என்ன கலரு, என்ன மேனரிசமு. ‘ஹேண்ட்ஸம் கை’ டா தட் சிபிஐ. அவன் கேட்டுருந்தா என் உயிரைக் கூட பார்சல் பண்ணி குடுத்துருப்பேன். ஆஃப்டர் ஆல், உங்களைக் காட்டிக் குடுத்து இருக்க மாட்டேனா?” என இப்போது கையை அவள் நெஞ்சில் வைத்துக் கொண்டு,
“ஆனாலும் ப்ரெண்ட்ஷிப்க்கு மரியாதை குடுத்து உங்களை என் ஆளுகிட்ட இருந்து காப்பாத்திக் குடுத்து இருக்கேன். உங்களை லூசா காட்டுறதுக்காக என்னை நானே அங்க லூசா காட்டிக்கிட்டேன் மைதா… லூசா காட்டிக்கிட்டேன்” என்று இடையில் சிவாஜி ஸ்லாங் வேறு வந்து போனதில், மைத்ரேயன் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி, “கொஞ்சம் பின்னாடி பாரு…” என்று கண்ணைக் காட்டினான்.
அவள் திருதிருவென விழித்தபடி பின்னால் திரும்ப, அங்கு விஸ்வயுகா தான் நெற்றிக்கண்ணைத் திறந்து அவளை எரித்துக் கொண்டிருந்தாள்.
‘இவள் எப்ப காரை விட்டு இறங்குனா?’ என்று நொந்தவள், “சும்மா பேசிட்டு இருந்தேன்கா” என இதழ்களை இளித்த மாதிரியே காரில் ஏறிக்கொள்ள, ஏற்கனவே பின் சீட்டில் நந்தேஷ் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
“இன்னுமா நீ பொசிஷன் மாத்தாம ஃபீல் பண்ணிட்டு இருக்க?” என்றதில், சிவந்த விழிகளால் தங்கையை முறைத்தான்.
விஸ்வயுகா கோபத்தை அடக்கியபடி இன்னும் அப்படியே நிற்க, அவளை பார்த்த மைத்ரேயன் “ஆர் யூ ஓகே விஸ்வூ?” எனக் கேட்டான் அவளை நெருங்கியபடி.
“ப்ச்…” என சலித்தவாறே காரில் சாய்ந்து கொண்டவள் “சம்திங் ஃபிஷி மைதா. அந்த சிபிஐயை பார்க்க பார்க்க எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வர்றது ஒரு பக்கம், இப்போ செத்துப் போன பொண்ணு நந்துவோட எக்ஸ் லவர்ன்னா, அவனுக்கு எதுவும் ப்ராப்ளம் வருமோன்னு உறுத்திக்கிட்டே இருக்கு” என்று நெற்றியைத் தேய்த்தாள்.
“ம்ம்க்கும் உனக்கு அவனைப் பார்த்தா கோபம் வருது. உன் தங்கச்சிக்கு ஜொள்ளு வருது. நல்ல குடும்பம்” என்று முணுமுணுத்துக் கொண்டவன், “முதல்ல நந்துவுக்கும் அவளுக்கும் எப்படி பழக்கம்னு விசாரிப்போம் விஸ்வூ. அதுக்கு அப்பறம் இதைப் பத்தி யோசிக்கலாம்” என்றதில்,
“கண்ணை மூடுனா அந்தப் பொண்ணும் பையனும் செத்துக்கிடந்த கோலம் தான் கண்ணு முன்னாடி வருதுடா…” என சோர்வுடன் கூற,
“பட்டப்பகல்ல நீ ஏன் கண்ணை மூடுற” என்று சிரிப்பு வராத காமெடியை அள்ளி வீசி, அவளிடம் ஒரு கொட்டும் வாங்கி கொண்டான்.
“நானே ஏதோ சரி இல்லன்னு குழம்பி போயிருக்கேன். இதுல நீயும் ஷைலாவும் மொக்கை போடுறீங்களா… எனக்கு அஸ்வினி சித்தி டெத் தான் மறுபடியும் மறுபடியும் மூளைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு” என்று பெருமூச்சு விட்டு கலங்கிய கண்ணை சிமிட்டிட,
அதில் விளையாட்டைக் கை விட்டவன், “ரிலாக்ஸ் விஸ்வூ…” என அவள் தோள் மீது கை வைத்து, “எல்லாத்தையும் யோசிச்சு கன்பியூஸ் பண்ணிக்காத. இன்னைக்கு நடந்தது ஒரு இன்சிடென்ட் அவ்ளோ தான். இதை இங்கயே மறந்துடு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, எங்கிருந்தோ பறந்து வந்த பெப்சி சிறிய டின் மைத்ரேயனின் முதுகைப் பதம் பார்த்தது.
“அவுச்… ஆ…” என முதுகை தேய்த்தபடி துள்ளியவனைக் கண்டு திகைத்த விஸ்வயுகா, “ஹே என்னடா ஆச்சு?” என்க,
“எவனோ இந்த டின்னை எறிஞ்சுட்டான்” என்று திரும்பி திரும்பி பார்த்தவன் மேல் நோக்கிப் பார்வையை பதித்ததில் விஸ்வயுகாவும் யாரெனப் பார்த்தாள்.
பக்கத்து மண்டபத்தின் பக்கவாட்டு பக்கம் நின்று தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது சரிவர கேட்கவில்லை என்றாலும், மாடி அறையில் இருந்த பால்கனி வழியே விஸ்வயுகாவின் மீது தனது மொத்த கவனத்தையும் வைத்திருந்தான் யுக்தா சாகித்யன்.
பெப்ஸியைக் குடித்தபடி அவளது ஒவ்வொரு அசைவையும் அங்குலம் அங்குலமாக கவனித்து வந்தவன், மைத்ரேயன் அவளைத் தொட்டுப் பேசியதில் எரிச்சல் கொண்டு டின்னை எறிந்து விட்டான்.
“டேய்” என்று மைத்ரேயன் சண்டையிடப் போக, அவனை தடுத்த விஸ்வயுகா, “மைதா நீ கார்ல ஏறு” என்றாள், யுக்தாவின் மீது அனல் பார்வை வீசியபடி.
“விஸ்வூ அவன்” எனப் பேசும் முன், “உன்னைப் போன்னு சொன்னேன்” என்று கண்டிப்புடன் கூற, ஒருமுறை யுக்தாவை முறைத்து விட்டே காரில் ஏறி அமர்ந்தான் மைத்ரேயன்.
லேசாய் இதழ் வளைத்து நக்கல் புன்னகை வீசிய யுக்தா, சைகையிலேயே “ஐ ஆம் வாட்சிங் யூ” என கர்வத்துடன் உரைக்க, முகத்தை சுளித்த விஸ்வயுகா அவனை ஒதுக்கி விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டாள்.
அவளது கார் மறையும் வரை அவன் பார்வையைத் திருப்பவில்லை.
அந்நேரம் அவன் தோள்மீது கை போட்ட கபீர், “வந்த வேலை முடிஞ்சது கிளம்பலாமா?” எனக் கேட்க,
“எனக்கு இப்ப தான் ஆரம்பிக்குது சார்” என ஏளனமாக சிரித்தவன், “எனக்கு நீங்க நிறைய பேவர் பண்ணனுமே. பண்ணுவீங்களா?” என்று புருவம் உயர்த்தியதில், கபீர் புரியாத பார்வை பார்த்தார்.
—
அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்து விட்ட நால்வரும், மீட்டிங் ஹாலில் ஒன்று கூடினர்.
நந்தேஷ் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. முகம் வேதனையில் தோய்ந்திருந்தது.
விஸ்வயுகா, “நீ இப்படி பாவமா மூஞ்சியை வச்சிருந்தா பரிதாபப்பட்டு உங்கிட்ட எதுவும் கேட்க மாட்டோம்னு தப்பா கெஸ் பண்ணாத நந்து. என்ன நடந்துச்சு? அந்த ரோஜாவை உனக்கு எப்படி தெரியும்?” என்று கூர்மையுடன் வினவினாள்.
மேலுதட்டைக் கடித்து அமைதி காத்த நந்தேஷ், “எல்லாம் ஓகே ஆனதுக்கு அப்பறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்று மெல்லிய குரலில் கூற,
மைத்ரேயன் “இந்த விளக்க டேஷு எல்லாம் வேணாம். விஷயத்தை மட்டும் சொல்லு” என்று முறைத்தான்.
“ம்ம்க்கும்… இவரு கமுக்கமா லவ் பண்ணிட்டு அவளை கழட்டியும் விட்டுட்டு நம்மகிட்ட சொல்லாம வேற மறைப்பாராம். நம்ம கேங்கே ஒரு ஆன்டி லவ் கேங்க். அப்படிபட்ட இடத்துல இருந்துட்டு நீ எப்படிடா லவ் பண்ணலாம். ராஸ்கல்” என்று ஷைலேந்தரி கடிய,
“அது என்னடி ஆன்டி லவ்?” என்று குழப்பத்துடன் கேட்டாள் விஸ்வயுகா.
“அதான்டி இந்த ஆன்டி ஹீரோ, ஆன்டி இந்தியன் மாதிரி, லவ்வுக்கு எதிரா இருக்குறதுக்கு பேர் ஆன்டி லவ்… ஜஸ்ட் நவ் நான் கண்டுபிடிச்சது…” எனக் காலரை தூக்கி விட்டுக் கொள்ள, “போடிங்” என்று திட்ட வந்தவள், அவளை விடுத்து,
“இந்த லவ்வால நம்ம வீட்ல என்ன என்ன பிரச்சனை எல்லாம் வந்துச்சுன்னு தெரியும்ல நந்து. அப்பறம் ஏன் இப்படி?” என்று கேட்டாள் வருத்தத்துடன்.
அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், “சாரி விஸ்வூ” என்றான் குற்றம் செய்தவனாக.
இப்போது அவனைக் கண்டு மூவருக்குமே மெலிதான வேதனை எழ, என்ன சொல்லி அவனைத் தேற்றுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவனே வாயைத் திறந்தான்.
“பிரான்ஸ்ல நான் படிச்ச அதே இன்ஸ்டிடியூட்ல தான் ரோஜாவும் படிச்சா. ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸா இருந்தோம். அப்பறம் எனக்கே தெரியாம அவள் மேல லவ் வந்துச்சு…” என்று நிறுத்த,
விஸ்வயுகா, “அது எப்படி தெரியாம வரும்?” என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்டதில்,
“ஆவியா மாறி உடம்புக்குள்ள போயிருக்கும்… இவள் வேற…” என்ற ஷைலேந்தரி, “நீ சொல்லுடா அண்ணா” என்று கதை கேட்க ஆர்வமானாள்.
தொண்டையைச் செருமிய நந்தேஷ், “அவளுக்கும் என்னைப் பிடிக்கும். சோ, நான் நேரடியா ப்ரொபோஸ் பண்ணல. அவளுக்கு என் காதலை உணர்த்துனேன்” என்றிட,
இப்போது மீண்டும் விஸ்வயுகா குறுக்கிட்டாள்.
“நேரா சொல்லாம என்னத்த உணர்த்துன? அது எப்படி லவ்வை சொல்லாம பீல் பண்ண வைக்க முடியும். மூதேவி” என்று திட்டிட,
“ஐயோ பெருமாளே… இவளை வச்சுக்கிட்டு ஒரு லவ் ஸ்டோரி கேட்க வந்தது என் தப்பு தான்” என்று அங்கலாய்த்தாள் ஷைலேந்தரி.
அதில் அத்தனை நேரம் இறுக்கத்துடன் இருந்த நந்தேஷும் புன்னகைக்க, மைத்ரேயன் லேசாய் சிரித்து விட்டு அமைதியானான்.
விஸ்வயுகா தான், “இது லவ் ஸ்டோரி இல்லடி ஷைலா. டெத் நோட் ஸ்டோரி” என்று கலாய்க்க, “இதை நான் சொல்லிருந்தா என்னை செருப்பால அடிச்சுருப்பா. சிரிச்சு வைப்போம்” என்று ஹைஃபை கொடுத்து கொண்டதில், ஷைலேந்தரியை அடித்து செல்லமாக முறைத்தாள்.
“ப்ச் இப்ப நான் சொல்லவா வேணாமா?” என நந்தேஷ் கடுப்பாக, இரு பெண்களும் அட்டென்ஷன் மோடிற்கு வந்து விட்டனர்.
“விஸ்வூ, கொஞ்சம் நேரம் உன் திருவாயால எந்த டவுட்டும் கேட்டு தொலையாத. அவன் கதை சொல்லாம போனா என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது” என்று ஷைலேந்தரி முணுமுணுக்க, “சரி நோட் பண்ணிட்டு கடைசியா கேட்குறேன்” என்று ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டதில், “சைத்தான் கே பக்ஷி” என பொருமினாள் ஷைலேந்தரி.
நந்தேஷோ, “ரெண்டு பேரும் சொல்லாமலே லவ் பண்ணோம். அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும் விஸ்வூ. அவளுக்கு என்னோட ஐடென்டிடி தெரியாது. ஐ மீன், இங்க பிசினஸ் ரன் பண்றது. நம்ம பேமிலி பத்தி எல்லாம் நான் சொன்னது இல்ல. அதை எல்லாம் சொல்ல சான்ஸும் கிடைக்கல” என்றதும்,
“ஏன்? ரெண்டு வருஷம் ஒண்ணா ஒரே இன்ஸ்டிடியூட்ல படிச்சு இருக்கீங்க. ஒண்ணா சுத்திருக்கீங்க. இந்த விஷயத்தை சொல்ல ஏன் சான்ஸ் கிடைக்கல” என்று விஸ்வயுகா துருவ,
“தெரியல விஸ்வூ. நாங்க பெருசா எங்க பேமிலி பேக் கிரவுண்ட் பத்தி பேசிக்கிட்டது இல்ல. அதைத் தாண்டி நிறைய ஷேர் பண்ணிப்போம். அவள் பிரான்ஸ்லயே ஜாப் ட்ரை பண்ணிட்டு இருந்தா. அண்ட் படிப்பு முடிஞ்சு நாங்க திரும்பி வர வேண்டிய நாளும் வந்துச்சு.
ரெண்டு பேரும் ஒண்ணா தான் இந்தியாவுக்கு ரிட்டர்ன் வந்தோம். அதுக்கு மேல மனசுலயே வைக்க முடியாம ஏர்போர்ட்ல நின்னு அவளை லவ் பண்ற மேட்டரை சொல்லிட்டேன். அதுக்கு அவள் அப்போஸ் எல்லாம் பண்ணல. ஏற்கனவே எதிர்பார்த்த மாதிரி சந்தோஷமா தான் பேசுனா. என் லவ்வை அதிகமா எக்ஸ்போஸ் பண்றதுக்கு முன்னாடியே அவள் பேரண்ட்ஸ் வந்துட்டதுனால அவள் போய்ட்டா.
அடுத்து ஒரு ரெண்டு நாள், என்கிட்ட நல்லா தான் பேசுனா. ப்ரெண்ட்ஸாவே இருந்த நாங்க லவ்வர்ஸ்ஸா சேட்ல தான் நிறைய பேசிக்கிட்டோம்.
திடீர்னு அவள்கிட்ட இருந்து எந்த மெசேஜும் இல்ல. கால் பண்ணாலும் ரிப்ளை இல்ல. அவளை பார்க்க வீட்டுக்கே போனேன். ஆனா அவள் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
என்ன ஆச்சு அவளுக்குன்னு குழம்பி இருக்கும் போது தான், அவள் கல்யாண ப்ராஜக்ட் நம்மகிட்ட வந்த விவரமே எனக்கு தெரியும். ஐ வாஸ் ஷாக்ட். வீ போத் லவ் ஈச் அதர். அப்டி இருக்கும் போது அவள் எப்படி மேரேஜ்க்கு ஓகே சொன்னான்னு புரியாம அவளை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணேன். முடியல. கடைசியா நேத்து நைட்டு மண்டபத்துலயே அவளைப் பார்த்துட்டேன்.
என்னை பார்க்குறதுக்கு முன்னாடி வரை சந்தோஷமா சிரிச்சுட்டு இருந்தவ, என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மாறிட்டா.
‘வீட்ல ஃபோர்ஸ் பண்ணாங்க. என்னால மறுக்க முடியல’ன்னு ஏதேதோ காரணம் சொன்னா. என்னால அதை ஏத்துக்க முடியல. ஏன்னா பிரான்ஸ்ல படிக்க வந்ததே அவளோட சொந்த முடிவு தான். அவளை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண முடியாது. அது எனக்கும் தெரிஞ்சனால அவளை துருவி துருவி கேள்வி கேட்டேன். அப்போ தான் கடைசியா தெரிஞ்சுது, அவள் கல்யாணம் பண்ணிக்கப்போறவன் துபாய்ல பெரிய பிசினஸ்மேன், பணக்காரன்னு. என்னை சாதாரண ஆள்னு நினைச்சு கம்பேர் பண்ணி என்னை டீல்ல விட்டுருக்கான்னு தெரிஞ்சு ஐ லாஸ்ட் மைசெல்ஃப்…” என்று மூக்கை உறிஞ்சி கண்ணைக் கசக்கினான்.
அவன் சொன்ன கதையைக் கேட்டு திருதிருவென விழித்தனர் மூவரும். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், பீறிட்டு வந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கிட, மைத்ரேயன் “அப்பறம் என்ன ஆச்சுடா?” என்றான் வேதனையை வரவழைத்து.
“அப்பறம் என்ன… அவள்கிட்ட என்னைப் பத்தி சொல்லல. ஆனா அவளை நான் உண்மையா லவ் பண்ணேன். சோ என்னால வெறுக்கவும் முடியல. அதனால…” என்று முடிக்கும் முன்,
விஸ்வயுகா, “அதுனால எச்சி இலை எடுத்து ஏமாத்திட்டுப் போன எருமைக்காக கல்யாண வேலை பார்த்திருக்க” எனக் கோபமாக கேட்க வந்து இறுதியில் சிரித்து விட்டாள்.
ஷைலேந்தரியும் வெடித்து சிரித்து, “சாரிடி என்னால இதுக்கு மேல அடக்க முடியல” என்று சிரிக்க, நந்தேஷ் மூச்சிரைக்க “இப்ப எதுக்குடி சிரிச்சுட்டு இருக்கீங்க” என்று குமுறினான்.
மைத்ரேயனோ, “நான் கூட ஏதோ தெய்வீகக் காதலா இருக்கும் போலன்னு ஒரு நிமிஷம் ரொம்ப பீல் பண்ணிட்டேன்டா. தேவையில்லாத காதல்னு இப்ப தான புரியுது. இருந்தாலும் நீ அவளுக்காக இவ்ளோ அழுதுருக்க வேணாம்…” என்று கேலி செய்ய,
“அவள் வேணும்னா ஏமாத்திட்டு என்னை ஜோக்கராக்கிட்டு போயிருக்கலாம். உங்களுக்கும் நான் அப்படி தான் தெரியுறேனா?” என வருத்தத்துடன் கேட்க, சட்டென சிரிப்பை நிறுத்தியவர்களிடம்,
“அவள் ஸ்டேட்டஸ் பார்த்து லவ் பண்ணிருக்கலாம். ஆனா அவள் மேல நான் வச்சுருந்தது நிஜமான அன்பு. நம்ம நேசிச்ச ஒரு உறவு கண்ணு முன்னாடி இறந்து போயிருக்கதைப் பார்த்து யாரால கண்ட்ரோல் பண்ண முடியும். அவங்க நமக்கு உண்மையா இருந்தாங்களா இல்லையான்றது எல்லாம் அந்த நேரத்துல தோணாது மைதா” என்று கண்டனத்துடன் பார்த்தான் மூவரையும்.
அதில் மீண்டும் அங்கு அமைதி நிலவ, விஸ்வயுகா எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.
“நீ என்ன யோசிக்கிற?” என்று மைத்ரேயன் அவளைக் கவனித்துக் கேட்க,
“எல்லாம் ஓகே எனக்கு இப்போ வேறொரு டவுட் வந்துருக்கு” என்று கழுத்தைத் தேய்த்தவள்,
“அவளே விரும்பி தான இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா அப்பறம் ஏன் முன்னாள் காதலனை நினைச்சு சாகுறேன்னு எழுதி வச்சுட்டு சாகணும்? உண்மையிலேயே அது தற்கொலை தானா இல் இல்ல… கொலையா?” என்று நிதானமாக கேள்வி எழுப்பியதில், அப்போது தான் அந்த கோணமே உரைக்க, மற்ற மூவரும் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர்.
—
“தற்கொலை கேஸ்னு க்ளியரா இருக்கும் போது நீ ஏன் டெல்லில இருக்குற வேலையை விட்டுட்டு இங்க இருந்து இந்த கேஸை பாக்குறேன்னு அடம்பிடிக்கிற யுக்தா?” கபீர் அவனிடம் பேசி பேசி சலித்தபடி கேட்டார்.
“தற்கொலையா? கொலை… அதுவும் டபிள் மர்டர்” என்று கண்ணைச் சுருக்கி திட்டவட்டமாக உரைத்த யுக்தாவை அதிர்ந்து பார்த்தார் கபீர்.
மோகம் வலுக்கும்
மேகா
Super super super super super. Waiting for next ud eagerly.👌👌👏👏🤩🤩🥰🥰😍😍