உடைந்த கேமராவை தனது துணிப்பைக்குள் போட்டுக்கொண்டவளுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. வீட்டு ஞாபகம் வேறு வதைத்தது.
ஒரு முடிவுடன் துணிகளை அடுக்கிக் கொண்டிருக்க, மூன்று பெண்களும் அங்கு வந்தனர்.
பூஜாவும் மைராவும் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு இனி தேவையற்று அவளிடம் வம்பு வைத்துக்கொள்ளக்கூடாதென்று முடிவே செய்து கொண்டனர். ஆனாலும் மைராவிற்கு அவளுக்காக வரும் ஆதரவுகள் பிடிக்கவே இல்லை.
திவிஜா தான், “உன் கேமராவை உடைச்ச ரெண்டு பசங்களையும் டெர்மினேட் பண்ணிட்டாங்க.” என்று உரைத்திட, ஆரா இமையாள் திகைத்தாள்.
‘டெர்மினேட் பண்ணுனதுக்கு பதிலா பெனாலிட்டி போட்டு கேமராவை வாங்கித் தந்து இருக்கலாம். ஐடியா இல்லாத ஜேக்கோப் சார்’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், சேர்மன் ஜேக்கோபே அவர்களை வெளியில் அனுப்பியது என எண்ணிக்கொண்டாள்.
அந்நேரம் அவளை அகாடெமியில் அழைப்பதாக வார்டன் கூறியதும், மேலும் விளக்கம் கேளாமல் அகாடெமிக்குச் சென்றாள்.
சேர்மன் அறையில் மேகன் மட்டுமே ஜன்னலோரம் நின்றுகொண்டிருந்தான்.
“ஜேக்கோப் சார் எங்க மேகா. என்னைக் கூப்பிட்டதா சொன்னாங்க.” என்று கேட்க, “இன்னைக்கு ஈவ்னிங் உனக்கு கேமரா வந்துடும் இமை. இனி இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழக் கூடாது. காட் இட்.” என்றான் உத்தரவாக.
“என் லட்ச ரூபா கேமரா உடைஞ்சு போனது உங்களுக்குச் சின்ன விஷயமா மேகா.” என நெஞ்சில் கை வைத்தவளைக் கண்டு அத்தனை நேரம் இருந்த கோபம் மறைந்து புன்னகை தோன்றியது.
“நான் இருக்கும்போது எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் அது சின்னதா தான் இருக்கணும்” என்றவன் அதை மட்டும் இந்தியில் உரைத்தான்.
“என்ன?” கண்ணைச் சுருக்கி அவள் பார்க்க, “நத்திங். இப்போ ஓகே தான? ரூம்க்கு போய் அழ மாட்ட தான இமை?” என்றவனின் வார்த்தைகளில் கூட அத்தனை மென்மை.
வாழ்க்கையில் யாரிடமும் அவன் இத்தனை சாதுவாகப் பேசியதாக நினைவில்லை.
தலையை உருட்டியவள் “அழமாட்டேன். ஆனா அப்பாகிட்ட எப்படி விஷயத்தைச் சொல்றதுன்னு தான் தெரியல” என்றாள் சோகமாக.
“ஏன் சொல்ற? வேற கேமரா வரவும் அதை வச்சுக்கோ.” மேகன் குழப்பமாகக் கேட்க,
“அதெப்படி சொல்லாம இருக்க முடியும் மேகா. இங்க இருக்குற வரை நீங்கக் குடுக்குற கேமராவை நான் யூஸ் பண்ணிக்க முடியும். அதுக்காக அதை எடுத்துட்டா போக முடியும்.” என்று உர்ரெனக் கூறியதில்,
“எல்லா விஷயத்தையும் ஒண்ணா யோசிச்சுக் குழப்பிக்கக் கூடாது இமை. ஒன் பை ஒன்னா தான் ப்ராப்ளமை க்ளியர் பண்ணனும். இப்போ இந்த காம்பெடிஷன்ல வின் பண்ண உனக்கு கேமரா இருக்கும் ரைட். அதுக்கு அப்பறம் இருக்குற பிரச்சனையை அந்த நேரத்துல ஃபேஸ் பண்ணிக்கலாம். ஒரே நேரத்துல எல்லாத்துக்கும் தீர்வு காண முடியாது.” என்றவன் அவளுக்குப் புரியும் விதமாக நிறுத்தி நிதானமாகவே பேசினான்.
“சரி தான்!” என ஒப்புக்கொண்டவள், அறைக்குத் திரும்பினாள்.
சொன்னது போன்றே விலையுயர்ந்த கேமரா ஒன்று அவளிடம் சேர்க்கப் பட்டது.
அதனைக் கண்டு விழி விரித்தவள், “வாவ்… சோனி ஏ7. செம்ம காஸ்ட்லி ஆச்சே இது.” என்று எண்ணிக்கொண்டு கேமராவைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.
அதனைத் திகைப்புடன் பார்த்த மைராவைக் கண்டு, “யம்மா பரதேவதை இதை எனக்கு டெம்பரவரி யூஸ்க்காகக் குடுத்து இருக்காங்க. இதையும் உடைச்சு விட்டு சேர்மன்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க. இது என் சொத்து இல்லை. அகாடெமி சொத்து.” என்று அவளை வம்பிழுக்க,
மைரா எரிச்சலாய் புருவத்தைச் சுருக்கினாள். பூஜாவோ, “எங்களுக்கு இது ரொம்ப தேவை பாரு. எவ்ளோ காஸ்ட்லி கேமரால குடுத்தாலும் நீ எடுக்குற போட்டோவை ‘பார்ன்’ சைட்க்கு வேணும்ன்னா யூஸ் பண்ணிக்கலாம்.” என்று கொச்சையாகப் பேசியதில் ஆராவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
பூஜாவை அறைய கையை ஓங்கியவள், “இங்க பாரு. வந்தோமா போட்டியை முடிச்சோமா போனோமான்னு இரு. அனாவசியமா பேசி என்கிட்ட அடி வாங்கிட்டுப் போகாத. இன்னொரு தடவை இப்படி கேமராவை உடைச்சு சைல்டிஸா பிஹேவ் பண்ணாதீங்க. காலேஜ் பைனல் இயர் படிக்கிறீங்க. கொஞ்சம் மெச்சூரிட்டியோட நடந்துக்கோங்க. நம்ம ஜெய்க்கிறதுக்காக இன்னொருத்தரோட உழைப்பை அசிங்கப்படுத்தக் கூடாது.” என்று அவர்களை முறைத்தபடி சொல்லி விட்டுச் செல்ல, மைராவிற்கு அது தூபம் போட்டது போல எரிந்தது.
இவளெல்லாம் எனக்கு அறிவுரை கூறும் அளவு வந்து விட்டதா? ஏதோ ஒரு கிராமத்தில் ஊர் பேர் தெரியாத இடத்திலிருந்து வந்து விட்டு இவளுக்கு இருக்கும் திமிரைப் பார் என்று காய்ந்தாள்.
அவளைப் பொறுத்தவரை மும்பை மட்டுமே மாநகரம். மும்பை வாசிகள் மட்டுமே நாகரிகம் தெரிந்தவர்கள். மற்ற ஊர்களெல்லாம் அவளைப் பொறுத்தவரை வளர்ச்சியடையாத கிரமமே. இந்த மனநிலை இன்னும் முக்கிய தலைநகரங்களில் வசிக்கும் மக்களிடம் பரவலாகவே இருந்து வருகிறது.
அது போலான மனநிலை தான் மைரா மற்றும் பூஜாவிற்கு.
மறுநாள் சனிக்கிழமை என்பதால் நண்பர்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து உறங்கச் சென்றாள் ஆரா. அருந்ததியும் வேணுவும் ஞாயிற்றுக்கிழமை வருவதாகக் கூறினார்கள்.
இரவு உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென மூச்சை அடைத்தது. மூச்சு விட இயலாமல் சிரமப்பட்டவள், அணிந்திருந்த ஸ்வெட்டரை இறுக்கிப் பிடித்தபடி எழுந்து இன்ஹேலரைத் தேடினாள்.
எப்போதும் அடைத்திருக்கும் ஜன்னல் கதவு திறந்திருக்க, அதன் வழியாகத் தான் குளிர் ஊசியாக உள்ளே ஏறி இருக்கிறது. அதிகபட்ச குளிர் வெப்பநிலை அவளது மூச்சை தடை செய்திருக்க, நகர இயலாமல் தவித்துப் போனாள்.
“தி… திவி” என்று திவிஜாவை மெல்லிய குரலில் அழைக்க, திவிஜா சத்தம் கேட்டு உடனடியாக எழுந்து அதிர்ந்து விட்டாள்.
“ஹே வாட்ஸ் ராங் வித் யூ?” என்றபடி அவளருகில் வர, மற்ற இருவரும் தூங்கும் பணியைத் தடை இல்லாமல் தொடர்ந்தனர்.
அந்நேரம் வாசற்கதவு படபடவெனத் தட்டப்பட்டது. திவிஜா ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்’ என்று வெளிறி கதவைத் திறக்க, மேகன் தான் நின்றிருந்தான்.
“விண்டோ ஏன் ஓபன்ல இருக்கு” என்று கேட்டபடி அறைக்குள் கண்ணைப் பதிக்க, அங்கு அவனவள் மூச்சுக்குத் திணறிக் கொண்டிருந்ததில் புயல் வேகத்தில் அவளருகில் நெருங்கினான்.
“வாட் ஹேப்பண்ட் இமை? ஆர் யூ ஆல்ரைட்?” என்று படபடப்புடன் கேட்டவன், முதல் வேலையாக ஜன்னலை மூடினான்.
அவளது கரத்தை எடுத்துப் பரபரவெனத் தேய்த்து சூடு காட்டியவன், “வீசிங் ப்ராப்லம் இருக்கா?” எனக் கேட்க, தலையை ஆட்டினாள்.
“இன்ஹேலர் எங்க?” எனக் கேட்டதும் அவள் ஒரு பையைக் கையைக்காட்டி மூச்சு வாங்க, “ரிலாக்ஸ் லிட்டூ. ரிலாக்ஸ்.” என அவளை ஆசுவாசப்படுத்தியபடியே இன்ஹேலரை எடுத்துக்கொடுக்க, அதனை வேகமாக உபயோகித்தாள்.
“டேக் அ டீப் ப்ரீத் லிட்டூ. காம் டவுன்.” என்று அவளது முதுகை மெல்லமாக நீவிக்கொடுக்க, அவளும் சிறிது சிறிதாக இயல்பிற்குத் திரும்பினாள்.
“இப்போ ஓகே வா இமை… பிரீத்திங் பிரீ ஆகிடுச்சா?” என்று கேட்டவனுக்கும் ஏனென்று தெரியாமல் மூச்சு வாங்கியது.
கலங்கிய கண்களைத் துடைத்தபடி, “ம்ம்” எனத் தலையாட்டியவள், “உங்களுக்கும் பிரீதிங் இஸ்யூ இருக்கா மேகா?” எனப் பரிதாபமாகக் கேட்க, முதலில் திகைத்தவன் அதன் பிறகே தனது நிலை கண்டு மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.
கூடவே இதழோரம் குட்டி முறுவல்.
பின் கோப முகத்துடன் “அறிவு இருக்கா இமை. வீசிங் இருக்குன்னு தெரியும்ல, விண்டோவை ஏன் ஓபன்ல வச்சிருந்த” எனக் கேட்க,
“நான் திறக்கல மேகா” என்றவளின் விழிகள் மைராவையும் பூஜாவையும் பார்க்க, அவர்களோ மேகனை அங்கு சற்றும் எதிர்பாராத மரண பயத்தில் அமர்ந்திருந்தனர்.
அவர்களது பயத்தைக் கண்டோ என்னவோ, “தெரியாம திறந்துருக்கும்” என்று மாற்றிக் கூறினாள்.
நடந்ததை யூகித்துக் கொண்ட மேகன், அவளையும் இரு பெண்களையும் அழுத்தத்துடன் பார்த்து விட்டு, “கெட் அப்” என்று ஆராவை எழ வைத்தான்.
“என் கூட வா.” என்று அவளது கையைப் பிடித்து வெளியில் இழுத்துச் சென்றதில், அதிர்ந்த ஆரா, “மேகா விடுங்க. எங்க கூட்டிட்டுப் போறீங்க.” என்று பதறிக் கத்த, அதைக் காதில் வாங்கும் நிலையில் அவன் இல்லை.
—-
இன்றும் ஆடவனின் பதறிய வதனம் அவளை மென்மையாய் தழுவியது. அந்தக் கருமை நிற கண்களில் தெரிந்த கணக்கில்லா நேசம் வெறும் இச்சையின் பிரதிபலிப்பென அப்போது புரியாமல் போனது அவளது பிழையில்லையே!
பழைய நினைவுகள் கொன்று குவிக்க, இப்போதும் மூச்சு விடச் சிரமப்பட ஆரம்பித்தாள்.
முயன்றவரை வீசிங் வராதவாறு முன்னெச்சரிக்கைகள் எடுத்து விடுவாள். சில நேரம் அதை மீறி இப்படி திணறுவதும் உண்டு.
அவளது உடைமைகளெல்லாம் காட்டேஜில் இருக்க, இன்ஹேலரை எடுத்துக்கொண்டு வராத மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.
மெத்தையில் இருந்த போனில் விபினுக்கு அழைக்க முயல, கரங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அந்நேரம், கதவு பட்டெனத் திறக்கப்பட இறுகிய முகத்துடன் மேகன் அறைக்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டு மீண்டும் கண்ணீர் உருப்பெற, இன்ஹேலரை சலனமற்று நீட்டியதில், அதனை அவசரமாக வாங்கிக்கொண்டவள் முதலில் தனது சுவாசப்பிரச்சனையை சரி செய்தாள்.
மெல்ல இயல்பிற்குத் திரும்பியவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
இப்போதும் அப்போதும் எப்படி தனக்கு வீசிங் வரும் போதெல்லாம் வந்து நிற்கிறானென்ற ரகசியம் மட்டும் பிடிபடுவதில்லை.
அந்த ரகசியத்தில் நிச்சயம் காதல் இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி அவளுக்கு. அதுவே அவளை மேலும் வதைத்தது.
“காட்டேஜுக்குப் போ!” கண்டிப்புடன் மேகனின் குரல் வெளிவர,
“இப்போ பரவாயில்லை. இங்க இருந்துப்பேன்” என்று அவள் கூறி முடிக்கும்முன்னே, அவள் அவனது கரத்தில் மிதந்துகொண்டிருந்தாள்.
“இறக்கி விடுங்க மிஸ்டர் மேகன்.” என்று அவள் துள்ளிட,
“நீ இருக்குறது என்னோட கண்பார்வைக்குள்ள. இங்க நான் சொல்றதை மட்டும் தான் நீ அச்சுப்பிசகாம கேட்கணும். மறுத்துப் பேசுன… பேசுன லிப்ஸ் எனக்குச் சொந்தமா இருக்கும்.” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், சட்டெனச் சூழ்ந்த மின்னலுடன், “ஆல்ரெடி அது எனக்குச் சொந்தமான லிப்ஸ் தான” எனக் கண்சிமிட்டி, அவளது தீப்பார்வையை வாங்கிக்கொண்டான்.
“நான் காட்டேஜுக்குப் போறேன். விடுங்க.” என்று அவள் முணுமுணுக்க, “அதை முன்னாடியே செஞ்சுருந்தா நடக்க விட்டுருப்பேன். இப்போ சொன்னத கேட்காததுக்கு பனிஷ்மென்ட் குடுக்க வேண்டாம்?” என அவள் காதோரம் கிசுகிசுத்தவன், தானே சுமந்து அவளை மெத்தையில் கிடத்தினான்.
அவளோ அரண்டு பார்க்க, “டோன்ட் வொரி மிஸ் இமையாள். இப்போ நான் வேறொருத்திக்கு சொந்தம் ஆகப்போறேன். சோ, அவளுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்” என்று நெஞ்சைப் பிடித்துப் பேசி விட்டுச் செல்ல, அவளுக்கோ ஆத்திரம் எழுந்தது.
‘வேறொருத்திக்கு சொந்தமாம்ல. மூஞ்சியும் முகரையும் பாரு’ என்று கறுவினாள்.
மறுநாள் சோம்பலாய் கண் விழித்த பிரதீஷ், அறையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட சிறு பால்கனிக்கு வந்து நின்றான்.
“அடடா… என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. வாட் அ பியூட்டிபுல் சீன்” கீழே வீற்றிருந்த மலர் தோட்டத்தை ரசித்துக் கூற, அப்போது தான் ஸ்லீவ்லெஸ், டிராக்குடன் தோட்டத்திற்கு நடுவே யோகா செய்து கொண்டிருந்த லிரிஷாவின் காதில் அவனது வர்ணனை விழுந்தது.
அதில் “யூ ஸ்கவுன்ட்ரல்” என்று நிமிர்ந்து அவனை முறைக்க, அவனும் அப்போது தான் அவளைப் பார்த்தான்.
“வாவ்! வாட் அ பியூட்டிபுல் கேர்ள்” என்று ஜொள்ளை டன் கணக்கில் வழிய விட,
லிரிஷா கோபத்துடன் “ஹே இடியட். ஐ வில் ப்ளக் அவுட் தி ஐஸ்” (கண்ணை நோண்டிடுவேன்) என்று ஆங்கிலத்தில் உரைக்க,
அவனுக்கு என்ன புரிந்ததோ, “டேக் இட் பியூட்டி டேக் இட். நாட் ஒன்லி திஸ் ஐஸ், எவெரி பாடி பார்ட் இஸ் பார் யூ ஒன்லி” என்று பிய்த்துப் போட்ட பரோட்டாவாக ஆங்கிலத்தை கொலை செய்ய,
“முதல்ல இங்கிலீஷை ஒழுங்கா பேசு மேன். அதுக்கு அப்பறம் உன் பாடி பார்ட்ஸை தானம் பண்ணலாம்” என்று அரைகுறை தமிழில் அவள் முறைத்து விட்டுப் போனதில், “பாரேன், என் டார்லிங் சுனிதாவுக்கே டஃப் குடுக்குற மாதிரி தமிழ் பேசுது.” எனச் சிலாகித்துக் கொண்டான்.
லிரிஷாவின் கோப முகம் ஏனோ அவனது மனதில் பசை போல ஒட்டிக்கொண்டது.
“என் ஆளைப் பார்க்கப் போறேன். சேர்ந்து யோகா பண்ண போறேன்” என்று குதூகலாமாகப் பாடிக்கொண்டு உள்ளே வந்தவனை விபின் ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
‘எதுக்கு இது இப்படி ஆடிட்டு இருக்கு’ என்ற ரீதியில் விபின் இப்போது பால்கனிக்கு வர, அப்போது தான் வாசல் கேட்டிலிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தாள் நிரவி.
‘ஹை நம்ம ஆளு!’ எனத் துள்ளியவன், “குட்மார்னிங் நிரா” என்று பால்கனியில் இருந்தே காலை வணக்கம் தெரிவித்தான்.
அவனைக் கண்டு முறைத்தவள், “என் பேர் நிரவி க்ராஸ்ட்டாக்.” என்று திருத்த,
“என் பேரும் விபின் நிரா.” என்றான் குதர்க்கமாக.
பின் அவனே “அட, விபின் நிரா நல்லா இருக்கே” என்று அசடு வழிய,
“காலைல பல்லு கூட விலக்காம பேர் பொருத்தம் பார்த்துப் பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை” என்ற நிரவியிடம், “நான் உங்களுக்காகத் தான் வெய்ட் பண்றேன் நிரவி. நீங்க தான பேஸ்ட் பிரஷ் கூட நீங்களே வாங்கி தருவீங்கன்னு சொன்னீங்க. அதான் உங்க கையால ப்ரஷ்ல பேஸ்ட் வச்சுக்குடுக்குறதுக்காகப் பல்லு விலக்காம வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.” என்று அனைத்துப் பற்களையும் காட்டியதில், நிரவி அவனை கடுமையாக முறைத்தாள்.
அவளைக் கலாய்த்து விட்ட நிம்மதியில், இம்முறை “என் ஆளை பார்க்கப் போறேன். பேஸ்ட்டு பிரஷு வாங்கப்போறேன்” என்று குதூகலத்துடன் ஆடிய படி உள்ளே வந்த நண்பனைப் பிரதீஷ் ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தான்.
இங்கோ ஆஷா பதூரி பேரனிடம் ‘அவுட் டோர் போட்டோஷூட்’ செய்யச் சொல்லிக் கெஞ்சிக்கொண்டிருந்தார்.
எல்லாம் அவனுக்கும் லிரிஷாவிற்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தத்தான்.
அவனோ “எனக்கு வேலை இருக்கு. நோ டைம்” என்று மறுத்து விட, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த லிரிஷா, “ப்ளீஸ் டியர். நம்ம போலாமே” என்று கொஞ்சலாகக் கூற, சற்றே சிந்தித்தவன் “ஓகே லிரி” என்று சம்மதித்ததில், அவள் முகம் மின்னியது. ஆஷாவின் முகமும் தான்.
“அவுட் டோர் ஷூட்டா?” நிரவியின் மூலம் விஷயம் கேள்விப்பட்டு ஆரா தான் அதிர்ந்தாள்.
“ஆமா ஆரா. போட்டோஸ் எல்லாமே பக்கவா இருக்கணும்ன்னு உவேந்திரா சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். பார்த்து பெர்பக்ட்டா பண்ணிடுங்க.” என்று கூறிட,
‘இந்த மொகரக்கட்டைக்கு அவுட் டோர் ஷூட்டிங் ஒன்னு தான் குறை. என்ன செய்யக் காத்துருக்கானோ’ என்ற பதைபதைப்பில் இருந்தவளை ஏமாற்றாமல் அவளை வெறுப்பேற்றவென்றே ஊட்டிக்குச் செல்லத் தீர்மானித்தான் மேகன் உவேந்திரா.
இமை இணையும்
மேகா
அதெப்படி அவளுக்கு மூச்சு திணறல் வரும்போது எல்லாம் இந்த மேகா கரெக்டா வரான்??
மறுபடியும் ஊட்டியா 🙄🙄🙄