“அடேய் கனவு கண்டுட்டு என்னடா உளறிட்டு இருக்க? முதல்ல அவன் எதுக்கு உன் கனவுல வந்தான்?” என ஷைலேந்தரி மூச்சு முட்ட முறைக்க,
“இது என்னடி கொடுமையா இருக்கு. என் இன்டியூசன் எனக்கு கனவு வழியா வந்து அவனுக்கு ஆபத்துன்னு சொல்லுது. எங்க குடிச்சுட்டு விழுந்து கிடக்குறானோ… மொதோ உசுரோட இருக்கானான்னு வேற தெரியல” என வேகமாக கிளம்ப எத்தனித்தான்.
“ஹையோ! இவர் பெரிய ஏ. டி. எம் விஜய், கனவுல பார்த்தே பியூச்சரைக் கணிச்சுடுவாரு. முதல்ல அவனுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம். இரு” என்று போனை எடுத்தாள்.
அன்றிரவு அவர்கள் இருவரும் ஷைலேந்தரியின் வீட்டிலேயே தங்கி விட்டனர். காயத்ரிக்கு வெகு அவமானமாக இருந்தது. க்ரைம் பிரான்ச் வரை தன்னை அலைய விட்டு விட்டதே இந்தக் குடும்பம் என்ற கடுப்பை கணவனிடம் காட்டினார்.
அவரோ படுத்ததும் உறங்குவது போல பாவனை செய்து உண்மையில் உறங்கி இருக்க, ‘முதல்ல இந்த வீட்டை விட்டுப் போகணும். பொண்ணையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இனி புருஷனாவது குடும்பமாவது’ என ஆத்திரத்தில் திளைத்தார்.
இங்கு பால்கனியில் நிழலுருவம் தெரிந்ததில் விஸ்வயுகாவின் பார்வை கூர்மையாக “யாரு?” எனக் கேட்டபடி மெதுவாக முன்னோக்கி நடந்தாள்.
சுவரில் எதிரொலித்த அந்த உருவத்தில், அவன் கையில் பெரிய கத்தி இருப்பது போல அவளுக்குத் தோன்ற, பூச்சாடியைக் கையில் எடுத்துக்கொண்டு சற்று நிதானமாக முன்னேறிய விஸ்வயுகா, “யாரு?” என மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.
எதிர்புறம் பதில் வராமல் போக, இன்னும் வேகமாக முன்னோக்கி சென்று பால்கனி கதவைத் திறக்கும் முன் அவனே பால்கனி கதவைத் திறக்க, விஸ்வயுகா வேகமாக பூச்சாடியை ஓங்கி விட்டு திகைத்தாள்.
“ஏய் அடிச்சு கொன்னுடாதடி. மீ யுவர் பாவப்பட்ட புருஷன்…” எனக் கையில் மது பாட்டிலுடன் தள்ளாடியபடி நின்றிருந்தான் யுக்தா சாகித்யன்.
“நீயா?” என அதிர்ந்த விஸ்வயுகா, பூச்சாடியை இறக்கி விட்டு பற்களைக் கடித்தாள்.
“நீ இங்க என்ன செய்ற? அதுவும் குடிச்சுட்டு… முதல்ல எப்படிடா என் ரூம்க்கு வந்த?” என்றாள் காட்டமாக.
“நீ என் ரூம்க்கு வரல சோ நான் வந்துட்டேன் ஏஞ்சல்!” எனப் புருவம் சுருக்கியவன், அவள் நாடியைப் பற்றி கண்ணை உற்றுப்பார்த்து, “அழுதியாடி” என்றான்.
“இப்ப நீ இங்க இருந்து போக போறியா இல்லையா? வாட்ச்மேன்…” எனப் பால்கனி வழியே கத்த, அவள் வாயைப் பொத்தி அறைக்குள் இழுத்து வந்ததில் அவனிடம் இருந்து துள்ளி விலகினாள்.
“தூங்கிட்டு இருக்குறவனை ஏன்டி டிஸ்டர்ப் பண்ற” என்றவன் அவள் கன்னம் பற்றி திருப்பிப் பார்த்து “ரொம்ப ஃபோர்ஸா அடிச்சுட்டேனா ஏஞ்சல். சைக்கோல… அதான் சைக்கோ மாதிரி நடந்துக்கிட்டேன். உங்கிட்ட பேசணும்னுடி. நிறைய பேசணும்…” என நிற்க இயலாமல் தள்ளாட, அவள் கையைக் கட்டிக்கொண்டு அவனை உறுத்து விழித்தாள்.
அதில் அவள் கண்ணை மூடியவன், “ஐயோ பார்க்காதடி. அப்படி பார்த்து வைக்காத. என்னால உன்னை ஃபேஸ் பண்ணவே முடியல. அதான் குடிச்சுட்டா கொஞ்சம் தைரியம் வந்து உங்கிட்ட பேசலாம்னு வந்தேன். ஏஞ்சல்ல்ல்ல்ல்ல்… சாரி… சாரிடி” என்றான் தளர்ந்து.
“ஐ காண்ட் இமேஜின்! உனக்கு எவ்ளோ வலிச்சுருக்கும்னு… ரொம்ப வலிச்சுதாடி! என்கிட்ட சொல்லிருக்கலாம்லடி” அவள் கழுத்தினுள் கை விட்டு அருகில் இழுத்தவன் அன்று நடந்த சம்பவத்தைக் கேட்க,
“உங்கிட்ட நான் ஏன் சொல்லணும்? ஹூ தி ஹெல் ஆர் யூ? ஆஃப்டரால் கேஸ டீல் பண்ண, என்கிட்ட ஃப்ளர்ட் பண்ணுன உங்கிட்ட எதுக்கு நான் சொல்லணும்? சொல்லிருந்தா இன்னொருத்தன் கை பட்ட உடம்பை தொட்டுருக்க மாட்டியா. உனக்கு தான், ‘ஐ ஆம் யுவர்ஸ்’ஸா இருக்கணுமே. பட் நிறைய டைம் இன்டைரக்ட்டா அலர்ட் பண்ணுனேன். நீ என் மேல ஆசை வைக்கிறதே பேராசைன்னு… ச்சு இந்த மரமண்டைக்குப் புரியாம போச்சு!” என்றதில் அவளது செவ்விதழ்களை அழுத்திப் பிடித்தான்.
அவனது பார்வையும் உதட்டில் நிலைக்க, “இந்த லிப்ஸ்க்குள்ள இன்னும் எவ்ளோ விஷம்டி வச்சுருப்ப. அப்போ அப்போ ஹெவி டோஸ் குடுத்து கொல்லுறடி ஏஞ்சல். ஆபிஸ்ல வச்சு என்ன சொன்ன… உன் உடம்பு மேல பொஸசிவா இருக்கேன்னா… ஏ ஆமாடி. நான் பொஸசிவ் தான். இன்னைக்கு நேத்து வந்த பொஸசிவ் இல்லடி இது. உன்னை ஒருத்தன் தப்பா ஒரு பார்வை பார்த்தா கூட தாங்க முடியாத அளவு பல வருஷமா நெஞ்சுல ஊறிப்போன உணர்வுடி இது.
உன்மேல மனசு முழுக்க கோபத்தோட இருந்தும் கூட, உன்னை ரசிக்க வச்சுச்சுடி உன் மேல இருக்குற பைத்தியக்காரத்தனமான காதல்” என சீறிப்பாயும் வேதனையுடன் பேசும்போதே அவன் பிடித்த இதழ்களில் வலி எழ அவள் முகம் சுருங்குவது தெரிந்து தனது பிடியை இளக்கினான்.
ஆனால் கல் நெஞ்சம் இளகவில்லை.
“இப்பவும் யூ ஆர் மைன் ஒன்லி. எப்பவுமே நீ என்னோடவ மட்டும் தான்டி. உன்னைப் பார்த்தவனையே சுடுவேன். உன்னை… உன்னை வலிக்க வச்சவனுங்களை விடுவேனா? விட மாட்டேன் ஏஞ்சல். விட மாட்டேன். ஒருத்தனைக் கூட விடமாட்டேன். எல்லாரையும் வாஷ் அவுட் பண்ணிட்டு, உன்னை தூக்கிட்டுப் போய்டுவேன் இங்க இருந்து. இங்க… இங்க” எனத் தனது நெஞ்சை சரமாரியாக அடித்துக் காட்டியவன்,
“இந்த நெஞ்சுக்குள்ள வச்சு உன்னை அடைகாப்பேன்டி. இன்னொரு சான்ஸ் குடுடி யுகா. இந்த ரெண்டுல ஒன்னு நடக்காம போனாலும்” எனச் சொல்லிக்கொண்டே அவளது இரு கைகளையும் பற்றி அவனது கழுத்தை நெறிப்பது போல வைத்துக்கொண்டவன், “இதே கையால செத்துருவேன்… இது என் அம்மா மேல சத்தியம்” என்றவனின் குரலில் குடித்த தடமே இல்லை. அத்தனை அழுத்தமாக இருந்தது.
விஸ்வயுகா தான் அதிர்ந்து சிலையாக நின்றாள்.
“கையை விடு யுக்தா…” என வலுக்கட்டாயமாக கையை இழுத்துக் கொண்டவளுக்குள் அத்தனை நேரம் பூசிக்கொண்ட அழுத்தமும் வைராக்கியமும் மெல்லக் கரைவதைக் கண்டு பக்கென இருந்தது.
அந்தக் கோபத்தில் அவனைத் தள்ளி விட, அவன் மெத்தையில் சென்று விழுந்தான். அவன் கையில் இருந்து மதுபானம் சரிந்து தரையில் விழுந்து உடைந்தது.
“இங்க பாரு… உனக்குத் தேவையானது முடிஞ்சுருச்சு. எனக்குத் தேவையானத நானே முடிச்சுக்குறேன். போய்டு யுக்தா… இங்க இருந்து, என்னை விட்டு போய்டு” என இறுகளுடன் கூறியவளின் முழு வாசகத்தை உணரவில்லை அவன்.
மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தவன், கீழே சிதறிய மதுபானத்தை சலிப்புடன் பார்த்து விட்டு, “எங்கடி போக? போ போன்னா, யாருடி இருக்கா எனக்கு. இனி போகணும்னா கடல்ல கரைஞ்சு தான்டி போகணும். போகட்டா…” எனக் கண்கள் சொருக கேட்க, அவள் பேச்சற்று நின்றாள்.
அந்நேரம் தான் மைத்ரேயன் கனவு கண்டு விட்டுக் கத்தியது.
அந்தச் சத்தத்தில் திடுக்கிட்ட மனதுடன் அவள் அவசரமாக ஷைலேந்தரியின் அறைக்குச் சென்று பார்க்க, நந்தேஷும் பதறி அடித்து அங்கு வந்து பார்த்ததில் கணவனும் மனைவியும் இரவு உடை சகிதமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“ஹே என்ன சத்தம்? எங்க போறீங்க இந்த நேரத்துல?” விஸ்வயுகா புரியாமல் பார்த்தாள்.
“யக்கா, அண்ணா இந்தப் பைத்தியக்காரன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கடா. கனவு கண்டுட்டு உளறிட்டு இருக்கான்” என ஷைலேந்தரி கண்ணைக் கசக்க, மைத்ரேயன் நடந்ததைக் கூறியதும் நந்தேஷும் பதறினான்.
“ஐயயோ சில நேரம் உண்மையா நடக்கப் போறது கூட கனவுல வரும்டா. யுக்தாவுக்கு போன் செஞ்சுப் பார்த்தீங்களா” என்றதில், ஷைலேந்தரி “ஹையோ வாக்கப்பட்டது தான் வாழைப்பழமா இருக்குன்னா, கூட வளர்ந்ததும் வேகாத அரிசியா இருக்கே…” எனத் தலையில் கை வைத்து அமர்ந்தாள்.
விஸ்வயுகா தங்கை அடித்த கூத்தில் அத்தனை நேரம் இருந்த அழுத்தம் மறைந்து புன்னகைத்து, “அட ச்சை நிறுத்துங்க. அவன் குத்துக்கல்லாட்டம் நல்லாத் தான் இருக்கான். போய் தூங்குங்க” என்றாள் அதட்டலாக.
“என்ன இவ்ளோ அசால்ட்டா பேசுற. ஆண்ட்டி அவனைப் போட்டுத் தள்ளிடுவாங்கன்னு உனக்கு பயமே இல்லையா. அவன் மேல உனக்கு காதலை விட கோபம் அதிகம் இருக்குன்னு ஒத்துக்குறேன் அதுக்காக இப்படி பண்ணாத. அப்பறம் கோபம் குறையவும் வருத்தப்படுறதும் நீயா தான் இருப்ப. கொஞ்சம் அவன் சிட்டுவேஷனையும் கன்சிடர் பண்ணலாம்…” என மைத்ரேயன் முதன் முதலாக யுக்தாவிற்காக வாதாடியதில் “அடியாத்தி” என வாயில் கை வைத்துப் பார்த்தாள் ஷைலேந்தரி.
“என்னடா திடீர்னு அவனுக்காக பேசுற, அவனும் என் கனவை விட்டுட்டு உன் கனவுல வர்றான்… நீயும் அவனை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டியா? கள்ளா” என வாரியதில், “அடியேய் முதல்ல அவன் எதுக்குடி உன் கனவுல வர்றான்?” எனக் கடுப்பனான் மைத்ரேயன்.
“நீ வர மாட்டேங்குற. அதான் ஊர்ல இருக்குற க்ரஷை எல்லாம் நான் என் கனவுல வர வச்சுக்குறேன்” என சிலுப்பியதில் விஸ்வயுகா தலையில் அடித்துக் கொண்டே “ஐயோ நிறுத்துறீங்களா! என் கூட வாங்க” என மூவரையும் அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு மெத்தையில் கன்னத்தில் கை வைத்து சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்த யுக்தா கொட்டி விட்ட மதுவை பரிதாபமாகப் பார்த்திருந்தான்.
நந்தேஷ் திகைத்து, “ஏய் இவன் என்ன இங்க உட்காந்துருக்கான். அம்மா அப்பா பார்த்தா செத்தோம்” எனப் பதறிட, மைத்ரேயன் வேகமாக அவன் அருகில் சென்று, “நீ என்னடா வாண்டடா கொலை பண்ணுங்கன்னு சொல்ற மாறி வந்து உட்காந்து இருக்க. இவனை ஏன் விஸ்வூ உள்ள விட்ட” எனத் தோழியின் புறம் திரும்பி கேட்டான்.
“ஆமா நான் தான் இவனை வெத்தலை பாக்கு வச்சு அழைச்சேன் பாரு…” எனத் திட்டி விட்டு, “யுக்தஆஆஆ எந்திரிச்சு போடா…” என அவன் கையைப் பிடித்து இழுக்க, அவனோ அவளை வேகமாக இழுத்ததில் அவள் முழுதாக அவன் மீதே விழுந்து விட்டாள்.
அவனோ விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடர்ந்தான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லுடி. போகட்டா?” எனக் கட்டை விரல் கொண்டு அவள் கன்னத்தை வருடியபடி கேட்க, எப்போதும் அவனது நெருக்கத்தில் நழுவும் மேனி இப்போதும் நழுவியது.
அவன் கண்களை ஆழப் பார்த்தவள், “போ! போய்டு! எவ்ளோ தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம் போய்டு” எனக் கசந்த குரலில் கூறி விட்டு விருட்டென அவனை விட்டு எழ அவன் எழவில்லை.
காய்ந்திருந்த கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்து பக்கவாட்டில் இருந்து வழிந்தது அவனுக்கு.
“இவனை இங்க இருந்து தூக்கி வெளில போடுங்க” என இரு ஆடவர்களுக்கும் உத்தரவிட்டு பால்கனியில் சென்று நின்று கொண்டவள், தேய்ந்த நிலவதுவை வெறிக்க, யுக்தா போதையுடன் மீண்டும் எழுந்தமர்ந்து “ஏஞ்சல்ல்ல்ல் ஏஞ்சல்ல்ல்ல் இட்ஸ் ஹர்டிங்டி” என முனகினான்.
“இதெல்லாம் அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வந்தாடா பேசுவ” என நொந்து போன மற்ற மூவரும் அவனை நெருங்கிட, “என் பக்கத்துல எவனாவது வந்தீங்க சுட்டுடுவேன். போங்கடா” எனக் கத்த, நந்தேஷ் அவன் வாயை மூடினான்.
“ஏண்டா கத்துற. நீ கத்தி உன்னோட சேர்ந்து எங்கையும் போட்டு தள்ள வச்சுடாதடா. உன் கையை காலா நினைச்சுக் கேக்குறேன். காலைல நாங்க ஆபிஸ் வந்ததும் அங்க வந்து எப்படி வேணாலும் கத்து” எனக் கிட்டதட்ட கெஞ்ச, ஷைலேந்தரியும் “ஆமா யுக்தா. பெரிம்மா வந்தா மறுபடியும் அவளை தான் ஹர்ட் பண்ணிட்டுப் போவாங்க. ப்ளீஸ்” என்றாள் வருத்தமாக.
மைத்ரேயனும், “சமாதானம் பண்ண குடிச்சுட்டு தான் வருவியாடா” எனக் காய்ந்ததில், பால்கனியில் இருந்து விஸ்வயுகா சத்தமிட்டாள்.
“அவனைத் தூக்கி வெளில எறிங்கடான்னா என்னடா பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க!” எனக் கண்டிக்க, அதற்கு யுக்தாவே “ஏஞ்சல்… என்னைத் தூக்க உன்னைத் தவிர எவனுக்கும் தைரியம் இருக்காதுடி…” எனக் குழறினான்.
பின் அவனே எழுந்து விட்டு, “இதைக் க்ளீன் பண்ணிடு ஷைலு. அவளுக்குப் பிடிக்காது” எனக் கொட்டிய மதுவைக் காட்டி விட்டு, தள்ளாடி நடந்தபடியே,
“கனவிற்கு கலரே இல்ல…
படம் பாக்குறேன்ன்ன் கதைஏஏஏ இல்ல…” எனப் பாடியபடி கால் இடற விழப்போனவன் பின் சுதாரித்து நிமிர்ந்து விட்டு,
“உடம்பிருக்கு உசுரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல…” என இடறிய காதல் வலி பொங்க பாடியவன் இம்முறை விழுந்தே விட்டான்.
அவனது புலம்பல் விஸ்வயுகாவின் காதிலும் விழுக, இறுகிய கண்ணிமைக்குள் மீண்டும் நீர் ஊர்ந்தது.
மோகம் வலுக்கும்
மேகா