306 views

5 – வலுசாறு இடையினில் 

நங்கையிடம் சவால் விட்டு விட்டு தோப்பிற்கு சென்றவன் கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து வீசினான் . வேக வேகமாக கோடாலி எடுத்து மரத்தை வெட்ட தொடங்கினான் . 

‘பொட்ட கழுதை என்ன பேச்சு பேசிட்டு போற , ஏதோ பாக்க சுமாரா இருக்கா , கட்டினா நமக்கு தோதா இருக்கும்ன்னு நினைச்சி பேசினா என்னை ஆம்பள இல்லைன்னு சொல்றா .. அவள சும்மா விட கூடாது ..’ இப்படியாக தனக்கு தானே பேசி கொண்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்த பெரிய மரக்கட்டைகளை பொடி பொடியா வெட்டி வீசி இருந்தான் .  

அப்போது அங்கே வந்த வட்டி , “ அய்யோ மச்சான் .. என்ன பண்ணிட்டு இருக்க நீ ? போச்சி என்னை கெழவி உசுரோட பொதைக்க போகுது “, என பொலம்பியபடி , காலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் . 

“என்ன டா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாக கேட்டான் . 

“உன் அப்பத்தா வாங்கி போட்ட மரத்த ஏன் இப்படி சக்கையாட்டம் ஒடச்சி போட்டு இருக்க ?”

“அந்த கெழவி எதுக்கு வாங்கி வச்சி இருக்கு ?”

“போய் அத தான் கேக்கணும் .. போச்சி என்னை தோல் உறிக்காமயே உப்பு கண்டம் போட போகுது .. நான் வேற மரலோடு வந்துரிச்சின்னு இப்ப தான் சொல்லிட்டு வந்தேன் .. “, என தலையில் துண்டை போட்டு அமர்ந்தான் . 

“விடு .. இன்னொரு லோடு அனுப்ப சொல்லு .. அப்பறம் அந்த ராஜன் சூப்பர்மார்க்கெட் ஆளோட எல்லா வெவரமும் நாளைக்கு எனக்கு வரணும் . அந்த ஆள தொட்டா எவன் வருவான் வரமாட்டான் , எங்க எல்லாம் எந்த ஆளு வம்பு வளத்து இருக்கான் எல்லாமே தெரிஞ்சிட்டு வந்து சொல்லு .. நான் பக்கத்து ஊரு பஞ்சாயத்துக்கு போறேன் .. கெழவி கிட்ட சொல்லிடு “, அங்கிருந்த குழாயில் முகம் கை கால் கழுவி , 5 நிமிடத்தில் தனது வாகனத்தில் கிளம்பி விட்டான். 

அவன் செல்வதையே பார்த்த படி நீலாயதாட்சி அங்கே வந்தார். 

“எங்க டா போறான் ?”, என வட்டியிடம் கேட்டார். 

“உன் பேரனையே கேக்க வேண்டியது தானே .. போற வரைக்கும் வேடிக்கை பாத்துட்டு , அவன் அங்க போனதும் நீ இந்த பக்கம் வர்ற “

“கொழுப்பு கூடி போச்சி உனக்கு .. எங்க டா மரம் வந்துச்சின்னு சொன்ன .. எல்லாம் சில்லு துண்டா கடக்குது “

“உன் பேரன் கைங்கரியம் தான் .. முழுசா வந்த மரத்த பிச்சி போட்டுட்டு , மனுசன பிச்சி போட போயிட்டான் .. “, வட்டி நான்கு அடி தள்ளி நின்று கூறினான் . 

“நீ தானே பொனத்த அள்ளி போட போவ .. இங்க ஏன் நிக்கற ?”

“சரிதான் .. இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன் .. நீயும் அவனும் இப்படியே எங்க உசுர எத்தனை நாளைக்கு தான் எடுப்பீங்க ?”

“நான் செத்தாலும் வந்து உன் உசுர தான் எடுப்பேன் டா பேராண்டி.. இந்த எடத்த சுத்தம் பண்ணிட்டு , இன்னொரு லோடு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் . அத வீட்ல ஏறக்க சொல்லு .. “

“ஏதே .. செத்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்ட.. அப்புறம் ஏதுக்கு இந்த லோடு பத்தி கேட்டுட்டே இருந்த நீ ?”

“எல்லாம் அப்பறம் சொல்றேன் .. இந்த மரத்த குப்பைல போடாம நம்ம கொளம் இருக்கற காட்டுல ஊணி வைக்க சொல்லு . இது பட்டு போனாலும் மொளைக்கும் .. அஞ்சு அடி தள்ளி தள்ளி நாலு துண்டா போட்டு நடுங்க ..”, என கூறி விட்டு பாட்டி வீடு நோக்கி நடந்தார். 

“அத்த எங்க போய் இருக்காங்க ? “, என கேட்ட படி ஒருவர் திண்ணையில் நின்று இருந்தார் . 

“என்னடா செங்கல்வராயா .. என்ன இந்த பக்கம் ?”, பாட்டி கேட்ட படி வந்தார் . 

“ என்ன அத்த எப்படி இருக்கீங்க ? இன்னும் தெம்பு கொறையாம தான் பண்ணையம் பாக்கறீங்கா போல .. “, சற்றே பேச்சில் எள்ளல் கலந்து கேட்டார். 

“நல்ல வார்த்தையும் , நல்லா நெணைப்பும் இருக்கற எல்லாருமே தெம்பா தான் இருப்பாங்க .. உன் ஆத்தா எப்டி இருக்கா ?”, சற்றும் இலகாமல் பதில் கொடுத்தார் பாட்டி . 

“படுக்கைல தான் அத்த .. அப்பறம் நான் நம்ம ஊருக்கே திரும்ப குடி வந்துட்டேன் .. “, எரிச்சல் கலந்த பதில் கொடுத்தார் அந்த பெரிய மனிதர் . 

“ஏன் உன் வியாபாரமெல்லாம் என்ன ஆச்சி ?”, என அவரை திண்ணையில் அமரவைத்தே பேசினார் பாட்டி . 

“முன்ன போல இல்ல அத்த .. எனக்கும் வயசு ஆகுது . பொண்ணு தலைக்கு மேல நிக்கறா .. நம்ம ஊருக்கு வந்துட்டா நீங்க எல்லாம் பாத்துக்குவீங்க.. “

“ உனக்கு ஒரு பொட்ட புள்ள தானா ? “

“பையன் படிச்சிட்டு இருக்கான் . பெங்களூரூ ல இருக்கான் . பொண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு பன்னெண்டாவது முடிச்சதும் இங்க வந்துட்டேன்”

“எங்க போனாலும் உங்க புத்தி மாறாத டா ? படிக்கற புள்ளையா இப்ப பட்டிகாட்டுக்கு இழுத்துட்டு வந்து என்ன பண்ண போற ?”, பாட்டி சற்று கோபமாகவே கேட்டார் . 

“நம்ம மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க தான் .. அவருக்கும் வயசு ஆகுதுல .. காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும் ல அத்த .. “, செங்கவராயன் விஷயத்தை  கூறினார் . 

“அதானே பாத்தேன் ஏண்டா பெருச்சாளி அம்மணத்த கட்டிக்கிட்டு வருதுன்னு .. இங்க பாரு செங்கல்வராய .. நான் இருக்கற வர இந்த வீட்டுக்கு எந்த கெட்டதும் நடக்க விடமாட்டேன் . என் பேரனுக்கு எப்போ யார கட்டி வைக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும் .. இந்த நெனைப்போட இந்த பக்கம் வராத .. “, முகத்தில் அடித்தாற்போல கூறினார் நீலாயதாட்சிபாட்டி . 

“இன்னும் எத்தன நாளைக்கு அத்த இப்படி சொல்லிட்டு இருப்பீங்க ? மருமவன பத்தி நல்லா விசாரிச்சிட்டு தான் வந்தேன் . எங்க மாமன உரிச்சாப்புல இருக்காரம் ல ..  இந்த தடவ என் கணக்கு தப்பாது அத்த .. அதுவரைக்கும் நீ உசுரோட இருக்கணும் ணு நான் கருப்பன் கிட்ட வேண்டிக்கறேன் “, செங்கல்வராயன் சிரித்தபடி பேசிவிட்டு சென்றான் . 

நீலாயதாட்சி பாட்டி செல்பவனை உதட்டில் வழியும் புன்னைகையுடன் உள்ளே சென்று பூஜை அறையில் இருந்த முருகனை பார்த்தார் . 

“ஒரு முறை அடி வாங்கிட்டேன் .. மறுபடியும் என்னை அடி வாங்க விடமாட்ட ன்னு நினைக்கறேன் . இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ண சீக்கிரம் என் கண்ணுல காட்டு டா முருகா .. “, என மனதில் பிரார்த்தனை வைத்து விட்டு சென்றார் . 

அடுத்த நாள் காலை ஒருவன் வந்து ஏதோ கூறிவிட்டு போன பின் , நீலாயதாட்சி பாட்டி வட்டியை அழைத்தார் . 

“என்ன ஆச்சி .. எதுக்கு கூப்ட ? உன் பேரன் மாந்தோப்புக்கு வர சொன்னான் . அவன் அங்க போறதுக்குள்ள நான் அங்க போகணும் . சீக்கிரம் சொல்லு . வெத்தலை கொண்டு வரணுமா ?”, வழவளத்த படியே வந்தான் . 

“நேத்து அவன் ஏன் மரத்த சில்லாக்குனான்னு உனக்கு தெரியும் ல .. யார் அந்த பொண்ணு ?”, நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பாட்டி . 

‘ஆத்தி .. பேரன விட இது பயங்கரமா இருக்குதே .. ரெண்டு பெரும் ஒரே குடும்பத்துக்கு கட்டம் கட்டாறாங்களே  .. பாவம் அந்த ஏகம்பரம் .. ‘, என மனதில் நினைத்து கொண்டான். 

“வாய தொறக்கறியா இல்ல உலக்கையா வச்சி இடிச்சி தொறக்கணுமா ?”, கையில் உலைக்கையை எடுத்து பார்த்தபடி கேட்டார் . 

“நம்ம சூப்பர் மார்கெட்டுக்கு போட்டியா ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சி இருக்க ஏகம்பரம் தான் . நமக்கு பக்கத்து ஊரு தான் . ஒரு பொண்ணு , ஒரு பையன் . பொண்ணு காலேஜ் படிக்குது . கடைசி வருஷம் , அதனால மாப்ள பாக்க ஆரம்பிச்சி இருக்காங்க .. இன்னிக்கி தான் பொண்ணு போட்டோ எடுக்க கூட்டிட்டு போய் இருக்காங்க “, அறிந்த விஷயத்தை கொட்டி விட்டான் . 

“சரி .. வண்டிய எடு .. நகை கடை வரைக்கும் போய்ட்டு வருவோம் “, என கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார் . 

“ஆச்சி .. அங்க அவன் கத்துவான் .. நீ பாட்டுக்கு வா ன்னு சொல்லிட்டு உள்ள போற .. அவனுக்கு யார் பதில் சொல்றது ?”, வட்டி தனக்கு விழ போகும் அடியை நினைத்து பொலம்பிக்கொண்டு இருந்தான் . 

“சும்மா கத்தாத .. நான் ஆளு கிட்ட அவனுக்கு சொல்லி அனுப்பிட்டேன்”, என மஞ்சள் பையுடன் தயாராகி வெளியே வந்தார் . 

“உங்க கிட்ட வந்து சிக்கினேன் பாரு .. வழக்கமான கடைக்கு தானே ?”, என பேசியபடி காரை எடுத்தான் வட்டி.

இவர் சென்ற நேரம் நங்கை குடும்பத்துடன் அங்கே வந்தது , விசாரித்தது எல்லாம் நாம் அறிந்தது தான் . 

கடையில் இருந்து வெளியே வந்தவர் , “ ஏலேய் பேராண்டி .. “, என பாசமாக அழைத்தார் . 

“இங்க பாரு ஆச்சி நீ என்னை கேட்ட வார்த்தைல கூட திட்டு ஆனா இப்டி பாசமா கூப்பிடாத எனக்கு திக்குன்னு இருக்கு “

“கிறுக்கு பயலே .. சொல்றத கேளு .. எந்த தரகர் கிட்ட அந்த பொண்ணு  ஜாதகம் இருக்குன்னு பாத்து வாங்கிட்டு வா .. “

“இல்ல எனக்கு ஒரு சந்தேகம் .. “

“என்ன டா ?”

“நீயும் உன் பேரனும் பேசி வச்சிக்கிட்டு எல்லாம் பண்றீங்களா ?”

“அவன் கிட்ட நான் ஏண்டா பேச போறேன் ? எப்போ என் பேச்ச மீறி போனானோ அப்பவே அவன் கிட்ட நான் பேசறத நிறுத்திகிட்டேன்.. இப்போ  நான் சொல்றத நீ பண்ணு .. “, என அவன் காதில் சில விஷயங்களை கூறினார். 

வட்டி பாட்டி சொன்னதை கேட்டு திகில் பிடித்து நின்றான் .. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
15
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  14 Comments

  1. வட்டி காதுல பாட்டி அப்படி என்ன விசயத்த சொல்லுச்சு. இன்னிக்கு நங்கைய காட்டவே இல்ல.அடுத்த Epi இன்னும் கொஞ்சம் பெருசா போடுங்க

  2. Archana

   ஒரு பொண்ண வெச்சு பாட்டியும் பேரனும் பந்து அடிக்குறாங்களே🤣🤣🤣 எப்பா நங்கை பாவம்

  3. Janu Croos

   அடப்பாவிகளா…பாட்டியும் பேரனும்.ஒரே பொண்ணுக்கு கட்டம் கட்டுறீங்களேடா…இதுல புதுசா ஒருத்தன் வந்து பல்லிளிச்சிட்டு அவன் பொண்ண வரமனுக்கு கட்டி வைக்க கேக்குறான்…..நங்கை ஒத்துக்க மாட்டா ஆனா அவள இங்க யாருமே சம்மதம் கேக்க போறது இல்லை….அவளோட எல்லா கோபமும் இப்போ வர்மன் மேல தான் விளப்போகுது…இன்னும் என்னெல்லாம் நடக்கபோகுதோ….

  4. Sangusakkara vedi

   Dei eruma varma…. Unnalam yaar kalyanam pannuva… Ivaruku jodi nalla irukuma athanala periya manasu panni kalyanam pannuvaram… Poda dei… Trailer la un pera pathu emanthathu thn micham…. Eei kilavi pesama senkalavarayan ponnukke intha Varma imsaiya katti vakkalam…. Theva ilama nee nallathu panrennu en chlm nangai life la risk edutha unna onnum panna Maten… Writer ji margaya thn… Be careful kilavi… Writer ji summa lololaikku….

  5. Oosi Pattaasu

   ‘வலுசாறு இடையினிலே’ செம ஸ்டோரி. ரொம்ப கேஷுவலா போகுது.
   இந்த ஸ்டோரியோட பாசிட்டிவ்ஸ்னு பார்த்தா,
   1. ரொம்ப யதார்த்தமா போற கதைக்களம். எந்த இடத்துலயும் மிகைப்படுத்தப்படாம, ஒரே ஃப்ளோவா போகுது ஸ்டோரி.
   2. கதையோட டையலாக்ஸ்… இன்னைக்கும் பையன் தான் பெருசுன்னு பல வீடுகள்ல பேசுறத, அப்டியே கேஷுவலா சொல்ற அந்த வசனங்கள்.
   3. இன்னொரு பாசிட்டிவ், நங்கை & வினிதா. இவங்க ரெண்டு பேரும் படற கஷ்டத்தையும், கடுப்பையும் வெளிய சொல்ல முடியாம, இத ஒன்னும் பண்ண முடியாதுன்னு, அவங்களுக்குள்ளயே பொலம்பிட்டு விடுறது, நார்மலா அந்த இடத்துல என்ன நடக்குமோ அத அப்டியே காட்டுற மாதிரி இருக்கு.
   அடுத்து நெகட்டிவ்ஸ்னா,
   1. சில இடத்துல வர்ற ஸ்பெல்லிங் மிஸ்டேக். அதக் கண்டிப்பா தவிர்க்க முடியாது. இருந்தாலும், முடிஞ்சளவுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம இருந்தா, இன்னும் நல்லாருக்கும்.
   2. அடுத்து வர்மன். இவன் நல்லவனா, கெட்டவனான்னேத் தெரில. போகப் போக தெரியும் தான். பட், இப்போ படிக்கிறப்ப, சில இடத்துல இவன் பேசுறதக் கேக்கும்போது, இவன் மண்டைல ரெண்டு கொட்டு வைச்சா என்னன்னுத் தோணுது.
   3. கதைல கிராமத்து ஸ்லாங் கொஞ்சம் மிஸ் ஆகுதோன்னுத் தோணுது. டையலாக்ஸ் எல்லம் நல்லா இருந்தாலும், அந்த எடத்துல ஸ்லாங் செட்டாகாத மாதிரி இருக்கு. அதக் கொஞ்சம் இன்னும் கவனீச்சிங்கன்னா செமையா இருக்கும்.
   மொத்தத்துல ஸ்டோரியோட ஃப்ளோ நல்லாருக்கு. படிக்க ஆரம்பிச்சா, போய்கிட்டே இருக்கும்.

  6. Sangusakkara vedi

   வலுசாறு இடையினில் தலைப்பு சட்டுன்னு மனசுல நிக்காட்டியும் என்னவா இருக்கும்னு கூகுள் ஆண்டவர தேட வச்சது உண்மை‌. முதல் அத்தியாயத்திலயே அதுக்கான ஜஸ்டிஃபிகேசன் கொடுத்து சூப்பர்.

   கதைக்களம் உண்மையிலேயே வேற லெவல். இந்த மாதிரியான கருவ ஏதோ ஓரமா கதையில பாத்திருக்கேனே தவிர இதையே முழுக் கதைகருவா இப்ப தான் நான் பார்க்குறேன்.

   இப்படிப்பட்ட ஜென்மங்கள் கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நங்கை நினைச்சு அதுக்கான வழிகளை கடைப்பிடிக்குறது அவளுக்கு ஆதரவாக இருக்க சொல்லுது.

   வந்த ஐந்து அத்தியாயங்கள்ல ஒரு இடத்துலே கூட பிசிறு இல்லவே இல்லை. ஒரு அத்தியாயம் முடியும் போது அடுத்த அத்தியாயம் எப்ப வரும்னு தூரிகை தளத்தை அடிக்கடி ரிஃப்ரெஸ் பண்ணி பார்க்க வக்குற கதை இதுங்குறதுல கொஞ்சமும் சந்தேகம் இல்ல….

   போட்டி கதைல நான் முதல்ல வாசிச்ச கதையும் இதுதான். இதை படிக்கும் போதே போட்டி தரமா இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன்.

   உங்க கதைக்கான நிறைகள் இன்னும் நிறைய இருக்கு. உங்க கதை முடியும் போது எல்லாத்தையும் கண்டிப்பா சொல்றேன்.

   குறைகள் னு பார்த்தா ரொம்ப கம்மி…
   அங்க அங்க ஸ்லாங்க் கொஞ்சம் மிஸ் ஆகுது.
   பொதுவாவே நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது இந்த நிலைமை நம்ம எதிரிக்கு கூட வரக்கூடாதுன்னு தான் நினைப்போம். அப்படி இருக்கும் போது தான் பட்டும் தன் பொண்ணுக்கும் நீயும் அப்டிதான் இருக்கனும்னு நங்கைக்கு சொல்றது தான் தாயா அவங்க தோத்துட்டாங்கன்னு யோசிக்க வக்கிது‌.

   அதே மாதிரி தான் வர்மா பாட்டி எதுக்காக நங்கைய கல்யாணம் பன்னி வைக்க நினைக்கிறாங்கன்னு தெரியல. ஆனா இப்படி பட்ட பையனுக்கு ஏன் நம்ம நங்கையை கல்யாணம் பண்ணி வைக்கனும். அந்த ஊர்ல அந்த ஒரு பாட்டி தான் நங்கை மாதிரி யோசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவங்களே இபப்டி செய்யலாமா? திருத்துறதுக்கு நம்ம நங்கை ஒண்ணும் அன்னை தெரேசா இல்லயே… அந்த பாட்டி சுயநலமா இருக்காங்களோன்னு தோணுது. நங்கை வாழ்க்கையை வேணும்னே பொதை குளியல் தள்ளுறதுக்கு அவங்க கொஞ்சம் வருத்தப்பட்டா நல்லா இருக்கும்…

   உங்க கதையை படிக்க ஆரம்பிக்கும் போது இந்த கதையை எழுதுறது சாரா, இல்ல வீணா சிஸ்ஸா இருக்குமோன்னு ஒரு டவுட்டு…. ஆனா இப்போ கொஞ்சம் இல்ல… ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரெகுலர் யூடி போடுறவங்க. நீங்களும் ரெகுலர் ரா தான் யூடி போட்டிங்க… ஆனா இப்போ காணல. இன்னும் ரெண்டு நாள் போச்சுனனா நானே காணவில்லை போஸ்டர் போட்ருவேன்…. நான் போடாட்டியும் மீம் கேர்ள்ஸ் வெய்டிங்க். ரெகுலர் யூடி குடுங்க… இல்லாட்டி வேற கதைகள் முதல் இடத்த பிடிக்க வாய்ப்பு இருக்கு…

   1. Seven shot
    Author

    thnk u so much ma… will try to give the best in this concept as i know…….

  7. சுபாஷினி இணைய காதலி

   #வலுசாறு_இடையினில்
   #seven_shot
   #தூரிகை_பட்டாசு_போட்டி
   #Suba_reviews
   #InkEraser

   பிடித்தது

   😍 இன்னும் சில கிராமத்தில் நடக்கும் காட்சிகளை வழக்கு மொழியில் அமைத்தது.
   😍 வர்மன் நங்கை இருவரின் அமைப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர் இல்லை என்று காட்டிய விதம்
   😍 வர்மன் பாட்டி பிளானிங் எல்லாம் செமயா இருந்துச்சு
   😍 ஏகாம்பரம் பண்ணும் தப்பு அதை தட்டி கேக்காத அவரோட மனைவி தப்பே செஞ்சாலும் அவன் ஆம்பள பையன்னு கொண்டு போற விதம் பின்னாடி ஏதாவது பெருசா சொல்லுவாங்களோ அப்படினு ஒரு எதிர் பார்ப்பை கொடுக்கிறது.
   😍 ஏற்கனவே வர்மன் நங்கை நடுல ஏதோ ஓடிருக்கும் போலயே

   பிரியாணியில் இடையூறு செய்யும் ஏலக்காய் போல

   😑 சில இடத்தில் எழுத்து பிழை
   😑 கதையில் சில குறிப்புகள் கதையோட ஒன்றாத தன்மை
   😑 வழக்கு பேச்சில் சில தவறு

   மொத்தத்தில் நிறையும் குறையும் கலந்து ஒரு நல்ல கிராமத்து கதை.