Loading

‘யார்டா இவன் முரட்டு ஆளா எதிர்ல நின்னு இல்லாத ஆளை சுட்டுருவேன்னு உளறிட்டு இருக்கான்…’ என்று உள்ளுக்குள் புகைந்த விஸ்வயுகாவிடம், “வெல்… நம்ம பியூச்சரை பத்தி அப்பறம் டிஸ்கஸ் பண்ணலாம். நொவ் மூவ்” என வழியை மறைத்து நின்றவளை ஆள்காட்டி விரலைக் காட்டி விலகி நிற்கச் சொன்னான்.

அவ்விரலை ஒடிப்பது போல பிடித்தவள், “என்கிட்ட திமிரா பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத மிஸ்டர்…” என அனல் பறக்க மிரட்ட,

“ஆவ்… என்னை டச் பண்ண அதுக்குள்ள அவ்ளோ ஆசையா ஏஞ்சல்?” என்று விஷமத்துடன் சிரித்தான்.

வெடுக்கென கையை எடுத்துக்கொண்டவள் அவன் மீது அனலைப் பொழிய, “உன்னை இடிச்சுட்டு உரசிக்கிட்டு தான் போகணும்னு ஆசை இருந்தா அதை நான் தடுக்க மாட்டேன்” என்று அவளை உரசுவது போல வர, படக்கென தள்ளி நின்றாள் விஸ்வயுகா.

அப்போது தான் திரும்பி அவளைப் பார்த்த மைத்ரேயன், “விஸ்வூ… நீ கார்ல உட்காரு. நாங்க வந்துடுறோம்” என்று உரைக்க, வெளியில் செல்லப் போனவளை தடுத்து அறைக்கதவை அறைந்து சாத்தினான் யுக்தா சாகித்யன்.

அதில் அனைவரின் கவனமும் அவன் மீது விழுக, “மூவ்… எல்லாரும் ஓரமா போய் நில்லுங்க” என்று அதட்டியவன், அழுது கொண்டிருந்த பெரியவர்களைப் பார்த்து, “நீங்க யாரு?” என விசாரித்தான்.

“இவள் எங்க பொண்ணு தான் தம்பி” என்று வாயைப் பொத்தி அழுதனர் ரோஜாவின் பெற்றோரான சிவபாலனும் காமாட்சியும்.

“ம்ம்… வழி விட்டு நில்லுங்க” என்றவன் மெத்தையில் படுக்க வைக்கப் பட்டிருந்த ரோஜாவின் உடலை ஆழ்ந்து பார்த்து விட்டு, “பாடி முதல்ல இங்க தான் இருந்துச்சா?” எனக் கேட்டதும், ரோஜாவின் பெற்றோர்கள் இன்னுமாக அரற்றினார்கள்.

“பாடி” என்றதில் நந்தேஷிற்கு வேறு அழுகையில் கண் கசிந்தது.

புதியவனின் பேச்சுத் தொனி பிடிக்காமல் முன்னே வந்த விஸ்வயுகா, “இதெல்லாம் கேட்க நீ யாரு?” என்றாள் முறைப்பாக.

“சிபிஐ!” என ஒற்றைப் புருவம் உயர ஒரு காலை கட்டிலில் வைத்தபடி உரைக்க, அதில் அங்கு பலத்த அமைதி.

விஸ்வயுகாவோ “நீ… சிபிஐ இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. போலீசுக்கு இருக்குற முக லட்சணம் வார்த்தை லட்சணம் ஒன்னு கூட இல்ல…” என ஏளனமாக உரைக்க,

“வேற எப்படி இருக்கு ஏஞ்சல்?” எனக் கேட்டான் ஸ்டைலாகத் தலையைக் கோதியபடி.

“ம்ம் பொறுக்கி மாதிரி இருக்கு” அவள் பொருமிய நேரம் அறைக்குள் நுழைந்தனர் காவலர்கள்.

இன்ஸ்பெக்டர் தர்மன், அங்கு யுக்தாவை எதிர்பாராமல் “சார்…” என சலியூட் வைக்க, அது ஒன்றே அவனது தகுதியை பறைசாற்றியது.

“இஸ் திஸ் எனஃப்” என்பது போல விஸ்வயுகாவை நோக்கி திமிராய் விழியசைக்க, அவளுக்கு எரிச்சல் மண்டியது. தர்மன் விஸ்வயுகாவைப் பார்த்து “மேம்… நீங்க இங்க என்ன பண்றீங்க. நீங்க கிளம்புங்க மேம்” என்று விட, யுக்தா சொடுக்கிட்டு அழைத்தான்.

“மாப்பிள்ளைக்காரனும் செத்துட்டதா சொன்னாங்க. போய் என்னன்னு பாரு” என்று உத்தரவு பிறப்பிக்க,

“சார், இவங்க மோகன் சாரோட டாட்டர் அண்ட் சன். வி. ஐ. பி” என்று கூறி முடிக்கும் முன்னே, “ஓ! ஆக்டர் மைக் மோகனோட பசங்களா?” என்று போலியான வியப்பைக் காட்டி அவளது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்தான்.

தர்மன் முகம் மாறி “இல்ல சார்” எனத் திணற, “எனக்கு தெரிஞ்ச ஒரே மோகன் அவர் தான். இப்ப நீ போறியா இல்ல கேஸை நானே பெர்சனலா ஹேண்டில் பண்ணிக்கட்டுமா?” பாக்கெட்டில் இருந்து ஒரு பூமரை எடுத்து மென்றபடி யுக்தா கேட்க, அவனது கட்டளையை மீற இயலாமல் காவலர்களும் சென்று விட்டனர்.

மீண்டுமொரு முறை உயிரற்ற ரோஜாவைப் பார்த்த யுக்தா, “சோ இப்ப பதில் சொல்றீங்களா. பாடி முதல்லயே இங்க தான் இருந்துச்சா?” எனக் கேட்க, உறவினர் ஒருவர் “இல்ல சார். ட்ரெஸிங் டேபிள்ல சாய்ஞ்சு இருந்தா. இப்ப தான் தூக்கி கட்டில்ல படுக்க வச்சோம்” என்றதும்,

“எனி டெத் நோட்?” எனப் புருவம் சுருக்கினான்.

“இருக்கு சார்” ஆளுக்கு முதலில் ஷைலேந்தரி சரணடைய அவளை முறைத்துப் பார்த்தனர் மூவரும்.

“கம் ஹியர். எங்க இருந்து எடுத்த?” எனக் கேட்டதில்,

அவள் பவ்யமாக கடிதத்தை கொடுத்து விட்டு, “அந்தப் பொண்ணு கைல தான் சார் இருந்துச்சு” என்றவள், மற்ற மூவரையும் கை காட்டி, “அப்பறம் இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார். நானே அவங்க வீட்ல குப்பை அள்ளிட்டு தான் இருக்கேன்…” என்று பயத்தில் உளறினாள்.

“அடியேய் வாயை மூடு” என மைத்ரேயன் அவளைக் கடிய, நால்வரையும் ஒருமுறை அழுத்தமாகப் பார்த்தவன், கடிதத்தைப் படித்து விட்டு, ரோஜாவின் பெற்றோரிடம் விசாரித்தான்.

ரோஜாவின் தந்தை சிவபாலன் தலையில் அடித்துக்கொண்டு, “ஐயோ யாரையோ விரும்புறேன்னு சொன்னாளே. நான் தான் நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் வேணாம்னு சொல்லி வற்புறுத்துனேன். பாவி… நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாளே…” எனக் கத்தி கூப்பாடு போட, யுக்தா நெற்றியைத் தேய்த்தபடி ரோஜாவைப் பார்வையிட்டான்.

மூச்சுப் பிடிக்க எத்தனை நேரம் தான் விஸ்வயுகாவால் அங்கு நிற்க இயலும்?

அதில் “மிஸ்டர் அந்தப் பொண்ணு லவ் பெய்லியர்ல சூசைட் பண்ணிக்கிச்சு. அதுக்கு எங்களை எதுக்கு இங்கயே நிற்க வச்சுட்டு இருக்கீங்க. நான் கிளம்பனும்” என்றாள்.

அவளது திரும்பிப் பார்த்த யுக்தா, “தற்கொலையா கொலையான்னு விசாரிக்கிற நான் தான் கன்பார்ம் பண்ணனும். நீ பண்ணக் கூடாது காட் இட்” என்று உத்தரவிட அவளுக்கோ அவன் தலையிலேயே ஓங்கி அடிக்க வேண்டும் போல வெறி வந்தது.

“பாடியை யார் ஃபர்ஸ்ட் பார்த்தது?” மீண்டும் அவனிடம் இருந்து கேள்வி வர, அறையில் அமைதி நிலவியது.

“காதுல விழுகலை? யார் முதல்ல பார்ததுன்னு கேட்டேன்…” அவ்வமைதியைக் கிழித்தது அவனது கர்ஜனைக் குரல்.

“நான் தான்!” மெல்லிய குரலில் விஸ்வயுகா கூற,

“ஓஹோ! நீ இந்தப் பொண்ணுக்கு என்ன வேணும்?” என்றான் தாடையைத் தடவி.

“எனக்கு இந்தப் பொண்ணு சொந்தம் எல்லாம் இல்ல. நாங்க வி. யூ மேட்ரிமோனி அண்ட் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்டோட ஓனர்ஸ். எங்க மேட்ரிமோனில தான் இந்த அலையன்ஸ் பிக்ஸ் ஆச்சு. சோ மரியாதை நிமித்தம் எங்களை இன்வைட் பண்ணாங்க. வந்தோம். அண்ட் மோர் ஓவர், பிரைடல் மேக் – அப்பும் எங்க பொறுப்பு தான். சோ அது கரெக்ட்டா இருக்கான்னு பார்த்துட்டு போக தான் இவங்க ரூம்க்கு வந்தேன். பட் ஷாகிங்க்லி ஷீ வாஸ் டெட்” என்றவளுக்கு இந்த இறப்பின் மூலம் கவலையும் அதிகரித்தது.

“ஓ! மாமா வேலை பாக்குறீங்க அதான?” இளக்கார நகையுடன் யுக்தா வினவ, மைத்ரேயன் அவன் சட்டையைப் பிடிக்கப் போனான்.

சட்டென விஸ்வயுகா அதனைத் தடுத்து விட்டு, “விடு மைதா…” என்று யுக்தாவை முறைக்க,

“ஏய்! என்ன துள்ளுற. க்ரைம் சீன்ல ப்ரைம் சஸ்பெக்ட்ஸ் நீங்க நாலு பேரும். சட்டையைப் பிடிச்சு இருந்த, கை இருக்காது…” என்று அடிக்குரலில் மிரட்டினான்.

பதிலுக்கு மைத்ரேயனும் விழி சிவக்க முறைக்க, ஷைலேந்தரி தான், “சார் சார்… அவன் எங்க பிரெண்டு தான் சார். கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மி. ப்ளஸ் டெவலப்பர் வேற. கை இல்லன்னா கோடிங் போட முடியாது சார். நீங்க வேணும்னா அவன் முடியை எடுத்துடுங்க. என்னை விட அதிகமா வளருது அவனுக்கு…” என்று கெஞ்சுவது போல கூற, மைத்ரேயன் தீயாக முறைத்து வைத்தான்.

“வாயை மூடுடி…” என விஸ்வயுகா கடிந்து விட்டு, “இப்ப என்ன வேணும் உனக்கு?” என்று கடைசி முறையாகக் கேட்டாள் மரியாதையின்றி.

“எனக்கு என்னன்னவோ வேணுமே” என அவளை கீழிருந்து மேல் வரை ஆராய்ந்தவன், “கேட்டரிங் யார் பொறுப்பு?” எனக் கேட்டான்.

“நாங்க தான்!” அவனது பார்வையின் வீரியத்தை தனது வெம்மை பார்வையால் வீழ்த்த முனைந்தபடி விஸ்வயுகா கூற,

“ஹோல் கல்யாணம் ப்ளஸ் கருமாரி எல்லாமே உங்க பொறுப்பு தான் போலயே” குத்தலாய் மொழிந்த யுக்தா சாகித்யன், ஷைலேந்தரியின் புறம் திரும்பி “போய் சாப்பிட ஒரு நல்ல டிஷா எடுத்துட்டு வா…” என்று கட்டளையிட, “உங்களுக்கு இல்லாததா சார். இதோ வரேன்” என்று அடித்து விழுந்து கிளம்பினாள்.

“இவள் ஓவரா கூவுறா விஸ்வூ…” என மைத்ரேயன் விஸ்வயுகா காதில் கடுகடுக்க, இங்கோ யுக்தா மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்.

சில நிமிடத்திற்குப் பின், “இந்தக் கையெழுத்து உங்க பொண்ணோடதா?” என சிவபாலனிடம் கேட்க, “ஆமாங்க சார். என் பொண்ணு கையெழுத்து தான்” என்று கண்ணீருடன் ஒப்புக்கொண்டார்.

அந்நேரம் ஒரு பெரிய தாம்பூலத் தட்டில், இட்லி வடை பொங்கல் தோசை சட்னி சாம்பார் கேசரி என பல்வேறு வகைகளை அடுக்கி கொண்டு வந்திருந்தாள் ஷைலேந்தரி.

“என்னடி இது சாமிக்கு படையல் வைக்கிற மாதிரி கொண்டு வந்துருக்க?” என விஸ்வயுகா அதிர,

“ஊரைக் காப்பாத்துற காவல் தெய்வம் இந்த காவல் துறை சிபிஐ துறை தான. அப்ப அவங்களுக்கு படையல் வைக்கலாம் விஸ்வூ. நீங்க எடுத்துக்கங்க சார்” என்று கொடுத்ததில், யுக்தா பாராட்டும் தொனியில் விழி உயர்த்தினான்.

“நல்லா ஐஸ் வைக்கிற…” என்றதில் அசடு வழிந்தவள் “அப்படியே எங்களை போக விட்டா…” எனத் தலையை சொறிய

“போகலாம் போகலாம். என்ன அவசரம்” என்றபடி அவள் கொண்டு வந்திருந்ததை ஒவ்வொன்றாக உண்ணத் தொடங்கினான்.

நந்தேஷ் நடப்பது எதையும் காதில் வாங்காமல் ரோஜாவை மட்டுமே பார்த்து கண்ணீரை அடக்கிக் கொண்டிருக்க, “இவன் ஏன் அழுகுறான்?” எனக் கேட்டான் உண்டபடி.

அதில் மூவரும் திருதிருவென விழிக்க, விஸ்வயுகா வேகமாக “இவனுக்கு இதான் பழக்கம். ரொம்ப சென்சிடிவ். எந்த டெத்க்கு போனாலும் அழுதுடுவான்” என அவன் தோளில் தட்டி அழுத்தம் கொடுத்து, ‘நாயே அழுத சாவடிச்சுடுவேன்’ என்று மிரட்டினாள்.

ஷைலேந்தரியோ “ஆமா சார். அவன் அழுவான். இவள் டெத் பக்கமே வர மாட்டா. பயந்தாங்கொள்ளி சார்” என்று எடுத்துக்கொடுக்க, ‘உன்னைக் கேட்டாங்களா?’ என்று முறைத்து வைத்தாள் விஸ்வயுகா.

“ம்ம்ஹும்… ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க நாலு பேரும். இவங்களைத் தவிர மத்த எல்லாரும் வெளில இருங்க. இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சதும் சொல்றேன்” என்று மற்றவர்களை அனுப்பி விட,

“ஹலோ மிஸ்டர் எங்ககிட்ட என்ன இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்? தற்கொலைன்னு அவளே கைப்பட எழுதி இருக்காள்ல…” என்று மைத்ரேயன் எரிந்து விழ,

“தற்கொலை பண்ணிக்கிறதுனா நேத்தே பண்ணிருக்கணும், இல்ல காலைல பண்ணிருக்கணும், இவ்ளோ மெனக்கெட்டு பிரைடல் மேக்கப் போட்டு எதுக்கு பண்ணிக்கணும்?” யுக்தா வடையைப் பதம் பார்த்தபடி கேட்க, விஸ்வயுகாவிற்கோ பிணத்தின் அருகில் நின்று எந்த சங்கடமும் இல்லாமல் அவன் உண்பதைப் பார்த்து குமட்டியது.

இருந்தும் வாயை அமைதியாக வைக்க இயலாமல், “சுறா படம் பார்த்துக்கீங்களா மிஸ்டர்?” என கேட்க,

“ஏன்?” என்பது போல பார்த்தான் யுக்தா.

“அதுல தமன்னா சாகுறதுக்கு முன்னாடி மேக் அப் பண்ணுவாங்கள்ல அந்த மாதிரி இவளும் ட்ரை பண்ணிருக்கலாம்…” என்று தோளைக் குலுக்கிட,

மைத்ரேயனும் “கரெக்ட்… எப்படியும் இவள் போட்டோ பேப்பர்ல வரும் இவளோட எக்ஸ் பார்ப்பான்னு இவளே மேக் அப் பண்ணிட்டு செத்துருக்கலாம்ல” என்று வழிமொழிய,

“எப்படி நம்ம ஆளுங்க அறிவு” என்று காலரைத் தூக்கி வீட்டுக்கு கொண்டாள் ஷைலேந்தரி.

“ம்ம்க்கும்… நீ மட்டும் தான் லூசுன்னு நினைச்சேன். மொத்த கேங்கும் லூசா. அதுசரி, ஓனர்ஸ்ன்னு சொல்றீங்க. ஆளுங்களை வச்சு மேனேஜ் பண்ணாம, நீங்க ஏன் டைரக்டா வேலை பார்க்குறீங்க? இதுக்கு முன்னாடி இதே மாதிரி எத்தனை ப்ராஜக்ட்ஸ் பண்ணிருக்கீங்க. எல்லாத்துக்கும் இதே மாதிரி நேர்ல போவீங்களா?” என்று அடுத்ததடுத்து கேள்வி தொடுக்க, அனைத்திற்கும் விஸ்வயுகா சளைக்காமல் பதில் அளித்தாள்.

“எங்க ஆபிஸ்ல ஒவ்வொரு டீமுக்கும் ஹெட் இருப்பாங்க. மேக்சிமம் அவங்க தான் பார்ப்பாங்க. இந்த கல்யாண மாப்பிள்ளையோட அப்பாவும் என் அப்பாவும் தெரிஞ்சவங்க. சோ, நேர்ல நின்னு எல்லாம் பண்ணிக் குடுக்க சொன்னாங்க. பழக்கத்துக்காக நாங்களும் டைரக்டா இன்வால்வ் ஆகி இருக்கோம்.

இதுவரை நாங்க பண்ணுன ப்ராஜக்ட்ஸ், ஆபிஸ்ல ஒர்க் பண்ற ஒர்க்கர்ஸ், எங்ககிட்ட வர்ற ப்ரபைலோட சேப்டின்னு எல்லா டீடைலும் என்கிட்ட எப்பவும் ரெடியா இருக்கும். நேர்ல வந்து கலெக்ட் பண்ணிக்கிறதுனாலும் சரி, மெயில் பண்ண சொன்னாலும் சரி… ஐ வில் டூ. இப்படி தேவையில்லாம எங்களை குற்றவாளி மாதிரி விசாரிக்காதீங்க மிஸ்டர்” என்று பொங்கினாள்.

அவள் பேசியதை சுவாரஸ்யமாய் கேட்டவன், “எப்பவும் ரெடியா வச்சுருப்பன்னா, தப்பு செய்யப் போறவங்க தான் ஆதாரத்தை ரெடி பண்ணி வச்சுப்பாங்க. நீ எப்படி?” என்றான் எகத்தாளமாக.

ஷைலேந்தரி தான், “ஐயோ சார்… பாபநாசம் அளவுக்கு எல்லாம் எங்களை நினைச்சு உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க… அவ்ளோ சீன் இல்ல” எனக் கதறியதில், “ம்ம்ஹும்” என்று உண்பதை நிறுத்தாமல் கேட்டுக்கொண்ட யுக்தா மீண்டுமொரு முறை ரோஜாவை சோதித்தான்.

அப்போது தர்மனும் உள்ளே வந்து, “சார் மாப்பிள்ளைக்கு லவ் பெய்லியராம் சோ சூசைட் தான் பண்ணிருக்கான். டெத் நோட்ல க்ளியரா சொல்லிருக்கான்…” என்றதும், “ஓ!” என்றவன் யோசனையை நிறுத்தவில்லை.

பின் தர்மனே, “சார் பெரிய இஸ்யூ இல்ல சார். நாங்க மேனேஜ் பண்ணிப்போம். நீங்க இதுல இன்டர்பியர் ஆனது தெரிஞ்சா, கேஸ் முடிக்க முடியாம சிபிஐக்கு போனதா ஆகிடும் சார்…” என்று தர்மன் தயங்கி நிறுத்த,

“ஹே நோ மேன்… நான் பர்பசா வரல. பட், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அண்ட் சிசிடிவி எல்லாம் செக் பண்ணுங்க. ஐ நீட் த பைனல் ரிப்போர்ட். ஜஸ்ட் ஃபார் மை கிளாரிஃபிகேஷன்” என்று தர்மனின் தோளில் தட்டினான்.

“கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன் சார்” என்றதும் திரும்பி விஸ்வயுகாவை மேலிருந்து கீழ் வரை பார்வையால் ஸ்கேன் செய்தவன்,

“கேட்ச் யூ சூன் ஏஞ்சல்?” என்று குளிர்கண்ணாடியை மாற்றியபடி அறையை விட்டு புயலாக வெளியேற, பெரும் மழையடித்து ஓய்ந்தது போல ஓய்ந்தே போனாள் விஸ்வயுகா. அவனது ஆட்டத்தின் ஆரம்பம் தான் இது என்று புரியவில்லை பாவம்!

மோகம் தொடரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
79
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுக்தா அதிரடி தான்