195 views

அத்தியாயம் 5

தன்வந்த், இவன்  எப்போதும் பிரித்வியுடன் தொழிலில் போட்டி போட்டுக் கொண்டே இருப்பான்.

இவர்களது இருவரின் சாஃப்ட்வேர் கம்பெனிகளும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தது இல்லை.

ஆனாலும் தான் தாம் “பெரிய பிஸ்னஸ்மேன்” என்று இருவரும் தங்களுக்குள் தொழில் போட்டியை உருவாக்கிக் கொண்டனர்.

இதற்கிடையில் தன்னுடைய அத்தனை தொழில் அறிவையும் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் சீண்டிப் பார்த்துக் கொள்வர்.

ஆனாலும் சில சமயங்களில் பிரித்விக்குத் தேவையில்லாமல், தன்வந்த் நம்முடைய வழியில் குறுக்கிடுகிறான் என்று எரிச்சல் ஏற்படும்.

அந்த எரிச்சல் அதிகமாகாமல், வேலையில் கவனம் செலுத்தலானான்.

🌸🌸🌸🌸

வீட்டில் தனது கோப்புகளைச் சரிபார்த்துக்  கொண்டு இருந்தாள் அதிரூபா.

“ரூபாம்மா… லன்ச் சாப்பிட வா” மாமியார் அழைத்ததும்,

“நீங்களும், மாமாவும் சாப்பிடுங்க அத்தை, நான் ஃபைல்ஸ் சரி பார்த்துட்டு, சாப்பிட்டுக்கிறேன்” என்று வெளியே வந்து குரல் கொடுத்தாள்.

“இல்லம்மா. நீயும் வந்துடு. நாங்க வெய்ட் பண்றோம்” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் அவ்வாறு கூறியதும் அதற்குப் பிறகும் கோப்புக்களைச் சரி பார்ப்பதை விடுத்து கீழே சென்றாள் அதிரூபா.

“வாம்மா” என்று மருமகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார் சகுந்தலா.

அவருடனும், மகேஸ்வரனுடனும் கதை பேசிக் கொண்டே உண்டதில் நேரம் போவதே தெரியவில்லை அதிரூபாவிற்கு.

மாலை வீடு திரும்பிய பிரித்வியோ தன்வந்த்தின் வாழ்த்துச் செய்தியில் கடுப்பை உணர்ந்தவன், அதை வீட்டில் யாரிடமும் காட்டி கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தான்.

அவன் தன்னிடம் கூட சண்டையிடாமல் அமைதியாக இருந்ததைக் கண்டு, ஆச்சரியப்பட்டாள் அதிரூபா.

அறையில் இருக்கும் போது இதை வெளிப்படையாக கேட்டு விட்டாள் அதிரூபா.

“ரொம்ப அமைதியாக இருக்கிற மாதிரி தெரியுதே?” என்று கணவனின் புறம் திரும்பினாள்.

“ஏன் உனக்கு அது தான பிடிக்கும்? அப்பறம் என்ன?” என்றான் பிரித்வி.

“அநியாயத்துக்குப் பொறுமையாக வேற பேசுறியே?” என்று ஆச்சர்யம் கொண்டாள்.

“ஆமா” என்றவன் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் இருந்தான்.

இன்று கணவன் ஏதோ வருத்தத்திலோ, கோபத்திலோ இருக்கிறான் என்று அதிரூபா புரிந்து  கொண்டாள்.

“அப்படி என்ன சார் டென்ஷன்?”

“டென்ஷனா? எனக்கா?” என்று சாதாரணமாக கேட்டான் பிரித்வி.

” ஆமாம். உங்க முகத்திலேயே அப்பட்டமாகத் தெரியுது”

“சரி அதுக்கு என்ன?” சலித்துக் கொண்டான்.

தேவையில்லாமல் வெளிக் கோபத்தை வீட்டில் காட்டக் கூடாது என்று பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தவனுக்கு, இவள் வம்பிழுப்பது கோபத்தை மேலும் தூண்டி விட்டுக் கொண்டு இருந்தது.

“ப்ளீஸ் அதி! இன்றைக்கு எனக்கு நாள் சரியே இல்லை. உன்னை எதாவது திட்டி விட்டுடப் போறேன்.எதுவும் பேசாமல் இரு” மிகவும் நொந்து போனக் குரலில் பேசிய கணவனைப் பார்க்கையில் அவளுக்குப் பாவமாக இருந்தது.

அதனால் வம்பிழுப்பதைக் கை விட்டாலும் அருகில் போய் அமர்ந்தவள் அவனது கரத்தைத் தனதுள் அழுத்திக் கொண்டாள்.

விழி விரித்துப் பார்த்தக் கணவனோ மறுப்புக் கூறாமல், மௌனமாக அமர்ந்திருந்தான்.

அவனது மௌனம் அவளைப் பாதிக்கவில்லை என்றாலும், அப்படியே இருந்திடாமல், நெற்றியை நீவி விட்டு, அதில் மென்மையாக இதழ் பதித்தாள் அதிரூபா.

அந்த மென்மையில் தன் கோபம் மட்டுப்பட்டதை உணர்ந்த பிரித்வி, கண்களை மூடி முத்தத்தை அனுபவித்தான்.

“வீட்ல கோபத்தைக் காட்டக் கூடாதுன்னு சமாளிச்சுட்டு இருக்கிறது தெரியுது. ஆனால் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா உங்களுக்கு தான் பிராப்ளம் ஆகும்” என்று கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.

“இப்போ நான் தண்ணீர் எடுத்துட்டு வர்றேன். குடிங்க.கொஞ்ச நேரம் கழிச்சு காஃபி குடிங்க.உங்களுக்கு ஆர்டர் போட்றேன்னு நினைச்சுடாதீங்க” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“எனக்கு இந்த மொமண்ட் போதும். நீ ஆர்டரும் போடலன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

அத்தோடு நிம்மதி என்று அவனுக்குத் தண்ணீர் அருந்த தந்தாள்.

அதை வாங்கிப் பருகியவுடன் அதிரூபாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, அவளது தோளில் முகம் புதைத்தான்.

“ஆஃபீஸ்ல அதிக வேலையா? இல்லை எதாவது தப்பு நடந்துருச்சா?” என்று அவனது மோசமான மனநிலைக்கான காரணத்தைக் கேட்டாள்.

“ரெண்டுமே இல்லை. எனக்குத் தொழில் போட்டி ஒருத்தன் இருக்கான். அவன் பேர் தன்வந்த். என்னோட சோசியல் மீடியா பேஜ்ல நான் நம்ம மேரேஜ் ஃபோட்டோஸ் போட்டு இருந்தேன். அதுக்கு கங்கிராட்ஸ் சொல்லி இருந்தான் ” என்றான்.

“அது தான் விஷயமா? அதனால் என்ன? விஷ் தான சொல்லி இருக்கான்?”

“அப்படித்தான் நானும் அதை ஒதுக்க நினைச்சேன். ஆனா முடியல. அதைப் பார்த்ததும் ஒரு நெகட்டிவ் வைப்ரேஷன் வந்துச்சு” என்று விளக்கிக் கூறினான்.

“அப்போ அவனை ப்ளாக் பண்ணி விட வேண்டியது தான?” – அதிரூபா.

“அதெப்படி? அவனைக் கண்காணிச்சுட்டே இருக்கனும்ல? ப்ளாக் பண்றதுக்குச் சான்ஸே இல்லை”

“அப்போ அந்தக் கமெண்ட்டை அப்படியே விட்ருங்க. நீங்க ஏதாவது ரிப்ளை பண்ணா தான், அவனுக்கு அட்டென்ஷன் குடுக்குறீங்கன்னுத் தெரிஞ்சு இன்னும் கமெண்ட்ஸ் வந்துக்கிட்டே இருக்கும். ஜஸ்ட் இக்னோர் ஹிம்” என்று அவனிடம் கூறினாள்.

அவளது விரல்களில் முத்தமிட்டவன்,
“நீ சொல்லிட்டேல்ல. அப்படியே செய்றேன்” என்றான் பிரித்வி.

“நான் சொல்வதை அப்படியே செய்றவரைப் பாருங்கப்பா!!” என்று ஆச்சரியமாக கூறினாள் மனைவி.

“ஹா ஹா… கண்டிப்பாக கேட்பேன். நோ டவ்ட்ஸ். இப்போ காஃபி போட்டுக் கொண்டு வா.இந்த ஒரு தடவை என்னால் முடியல . இல்லன்னா நானே நம்ம ரெண்டு பேருக்கும் காஃபி போட்டுக் கொண்டு வந்துருவேன் ”

“இட்ஸ் ஓகே. நாளைக்கு டின்னர் செஞ்சுக் குடுங்க” என்று விளையாட்டாக கூறினாள்.

“செஞ்சிடலாம்” என்று அவனும் குதூகலமாக கூறவும், அவனுக்காக காஃபி தயாரித்துக் கொண்டு வந்தாள்.

” நீ பேசாமல் நம்மக் கம்பெனியிலேயே
பார்ட்னர் ஆக ஜாயின் பண்ணிடலாமே?” என்றான் பிரித்வி.

“அத்தையும் இதையே தான் சொன்னாங்க. பட் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. போகப்போக மனசு மாறினா பார்ப்போம்” என்றாள்.

சிறு முறுவலுடன், “சரி அதி. என்ன மரியாதையெல்லாம் அதிகமாக இருக்கு?” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“அதுவா! சும்மா தான்.இனிமே மரியாதை குடுக்க மாட்டேன்” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டாள்.

“அது தான் எனக்கு நல்லது” என்று அவளது இடையில் கிள்ளி விட்டான்.

அதிர்ந்தப் பெண்ணவள் இடையைத் தேய்த்துக் கொண்டே,
“பிரித்வி…!” என்று மிரட்டுவது போல் கண்களை உருட்டினாள்.

“சும்மா…!” என்று கண்டித்தான்.

“சரியில்லைடா” உடனே மரியாதை தேய்ந்ததும்,

“உடனே பழைய அதிரூபா வந்துட்டாளா?” என்றான் கணவன்.

“வந்து தானே ஆகனும்.பாவம்ன்னு விட்டா ஓவராகப்  பண்ற !” என்று வம்பு பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஆஹான்!!” என்று அவன் அவளைத் தனக்குள் இருத்திக் கொண்டவன்,

“தாங்க்ஸ்” என்று மனமார்ந்த நன்றியைக் கூறவும்,

“இட்ஸ் ஓகே” அதிரூபா நமுட்டுச் சிரிப்புடன் சொன்னவள்,

“டின்னர் வந்து சமைங்கள்”
அவனை இழுத்துக் கொண்டு போனாள்.

“அண்ணா ! நீங்கள் என்னக் குக் பண்ணப் போறீங்க?” என்று லயா ஆர்வமாய்க் கேட்டாள்.

என்ன செய்யலாம்? நீயே சொல்லு?”

“ம்ம்… சாதம், தக்காளிக் குருமா. போதும் அண்ணா” பெருந்தன்மையுடன் கூறினாள் லயா.

“ஈசி தான். செஞ்சிடலாம். அப்பா இன்னைக்கு நானே சமைச்சிடறேன்”

மகேஸ்வரனிடன் கூறிவிட்டு, சமையலறைக்குச் சென்றான் பிரித்வி.

பின்னாலேயே வந்த அதிரூபாவிடம்,
என்ன அதி?” என்று வினவினான்.

“ஹெல்ப் !” என்று கேட்டவளிடம்,

“வேண்டாம் அதி. நீ அங்கே போ. நான் சமையல் முடிச்சுட்டு வர்றேன்” என்று அவளை அனுப்பி வைத்தான்.

கொஞ்சம் நேரம் கழித்து, சமையலை முடித்தவன், அதற்குப் பிறகும் யாரையும் சமையலறையில் நுழைய விடாமல், தானே எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் இடம் மாற்றி வைத்தான் பிரித்வி.

சாப்பிடுங்க” அவர்கள் அமர்ந்ததும், மனைவியின் அருகில் உட்கார்ந்துப் புன்னகையுடன் தானும் உண்டான்.

அதிரூபா அவனுடைய சமையலை உண்மையாகவே ரசித்து உண்டாள்.அந்தளவிற்கு அவனும் சுவையாக சமைத்து அசத்தியிருந்தான்.

சகுந்தலா, “எப்பவும் போலவே இப்பவும் சூப்பரா சமைச்சிருக்கப் பிரித்வி”

அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தன்னைப் பாராட்டினாலும் மனைவியிடம் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லையே! என்ற யோசனையுடன் உண்டு முடித்தான்.

இரவு அறையினுள் பிரவேசித்தக் கணவனின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள் அதிரூபா.

“உண்மையிலேயே சாப்பாடு சூப்பர் தான்”

இன்பமாக அதிர்ந்து நின்ற பிரித்வியிடம் கூறியவள், உறங்கப் போக,அவளை இடையோடு அணைத்துக் கொண்டு உறங்கினான்.

இடையில் கண் விழித்தப் பிரித்வியோ, ஏட்டிக்குப் போட்டியாக சண்டையிட்டாலும் எனக்காக நீ செய்த விஷயங்கள் உன்னை இன்னும் காதலிக்கத் தோன்றுகிறது என்று அவளது முகத்தைப் பற்றி மிருதுவாக உச்சியில் முத்தமிட்டான் பிரித்வி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *