Loading

அத்தியாயம் 48

தனது காரை அதிவேகத்தில் செலுத்தி விஸ்வயுகா வீட்டின் முன் நிறுத்தினான் யுக்தா சாகித்யன்.

அவர்களும் வெகுநேரமாக காரிலேயே பேசி விட்டு வந்ததில் சில நிமிடங்களுக்கு முன் தான் வீட்டினுள் நுழைந்தனர்.

உள்ளே நுழையும் போதே சிவகாமியின் அதிகாரக் குரல் பறந்தது.

“நில்லு! உள்ள வர்றதுக்கு முன்னாடி அந்தத் தாலியை கழட்டி எறிஞ்சுட்டு வா!” என்றார் அழுத்தமாக.

அவள் எதிர்பார்த்தது தான். ஆனாலும் அதனைத் தானாக கழற்ற மனமின்றி அப்படியே விட்டிருந்தாள்.

இப்போது தாயின் பிடிவாதத்தால் கழுத்தை நிறைத்திருந்த மாங்கல்யத்தை குனிந்து வெறித்தாள். கலங்கி விடக் கூடாதென்று வீம்பு பிடித்ததன் அடையாளமாக கண்ணில் நீர் துளிர்ப்பதும் பின் உள்ளிழுப்பதுமாக கண்கள் சிவந்திருந்தது.

நந்தேஷ், “ம்மா முதல்ல உள்ள வந்துட்டு பேசிக்கலாமே… அது அவள் லைஃப் சம்பந்தப்பட்டது” என்றதில்,

“எது அவள் லைஃப் சம்பந்தப்பட்டது… தலைமுறை தலைமுறையா நம்ம பாதுகாத்துட்டு வர்ற லாக்கர் சீக்ரட்டை எல்லாம் அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு வர்றதுக்கு அவன் இந்தத் தாலியையும் இவளையும் தான கேடயமா யூஸ் பண்ணிருக்கான். இவளை மைத்ராவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு நடந்த குழப்பத்தை சரி செய்யலாம்னு நினைச்சேன். ஆனா இவள் யூஸ் அண்ட் த்ரோவா தான் போகணும்னு தலைல எழுதி இருந்தா அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது” சாட்டையடியாக நாக்கைச் சுழற்றியதில் வெடுக்கென நிமிர்ந்தாள் விஸ்வயுகா.

“ஆண்ட்டி திஸ் இஸ் டூ மச்” மைத்ரேயன் பொறுமை இழந்து அவரைக் கண்டிக்க, ஷைலேந்தரி “வார்த்தையைப் பார்த்து பேசுங்க பெரிம்மா” என அவளும் பொங்கினாள்.

“நான் என்ன இல்லாததையா சொன்னேன். இப்ப அவள் செஞ்சுட்டு வந்ததுக்கு பேர் என்ன? நீயே ஒரு பேர் வையேன் மைத்ரா…” என்றார் நக்கலாக.

“ஒரு பேரும் வைக்க வேணாம் ஆண்ட்டி. இவள் அவனை நம்புனா, அவன் துரோகம் பண்ணிட்டான். தட்ஸ் இட். அதுக்காக மொத்த பலியையும் இவள் மேல போடுறதுல நியாயமே இல்ல. உங்களுக்கு கோபம்னா அந்த சிபிஐ மேல காட்டுங்க” என எரிச்சலடைந்தான்.

“அவன் விடியிறப்ப உயிரோட இருக்க மாட்டான். என்னைச் சீண்டுனவனை அப்படியேவா விட போறேன்…” என்றதில் மூவரும் சற்று அதிர்ந்தனர்.

நந்தேஷ் வேகமாக, “ம்மா கொஞ்சம் யோசிச்சு” எனப் பேசி முடிக்கும் முன்,

:என்னடா என்ன யோசிக்கணும் ஹான்? இந்நேரம் இவளுக்கு என்ன நடந்துச்சுன்னு அவன் மீடியாவுக்கு சொல்லிருப்பான். அது மட்டுமா சிவகாமி குடும்பத்தை தன்னோட கண்ட்ரோல்ல வச்சு விசாரணை பண்ணுனேன்னு நியூஸ் வந்தா, எங்களோட இத்தனை வருஷ தொழில் வாழ்க்கையும் பாரம்பரியமும் என்ன ஆகுறது?” எனக் கொதித்ததில்,

“ஸ்ஸ்ஸ்ஸ்… அப்படி என்ன பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாத்துனாங்களாம்” மைத்ரேயன் ஷைலேந்தரிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான் கடுப்பாக.

“அப்படி ஒரு பாரம்பரியமும் இல்ல. வெளில கேட்டா கேவல கேவலமா பேசுவானுங்க… என்னமோ இந்தம்மா சீன போடுது” அவளும் நெற்றியைத் தேய்ப்பது போல கிசுகிசுத்து தனது கோபத்தை வெளிக்காட்டினாள்.

“டேய் என் ஹேண்ட்ஸம் கை பாவம்டா. இந்த அம்மா முடிச்சு விட்டுட போகுது. ஏதாவது சொல்லுடா” என மைத்ராவை துருவி விட, “இன்னொரு வாட்டி என் முன்னாடி அந்தப் பரதேசியை ஹேண்ட்சம்னு சொன்ன, நானே அவனை முடிச்சுடுவேன்” என்றான் கோபமாக.

“குட் ஜோக். நம்ம வீட்டுக்குப் போனதும் சிரிக்கிறேன். இப்ப உன் திருவாயைத் திறந்து அந்த அம்மாவை ஏதாச்சு ஆஃப் பண்ணுடா” என ஊக்குவித்ததில், “இவளை…” எனப் பற்களைக் கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்.

பின் விஸ்வயுகாவைப் பார்த்து என்ன நினைத்தானோ, “ஆண்ட்டி அவன் செஞ்ச வேலைக்கு எனக்கும் அவனைக் கொல்ல தான் தோணுது. ஆனா… இதுல விஸ்வூவோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு” என யுக்தாவின் மீதுள்ள விஸ்வயுகாவின் காதலை மனதில் வைத்துக் கூறினான்.

“வாட் வாழ்க்கையா? சுனாமில செத்துப் போயிருக்க வேண்டியவன். எப்படியோ பொழைச்சு வந்துட்டான். எங்கயோ ஒரு குப்பைல வளர்ந்த அவனோட இவள் வாழ்க்கையா? அதுக்கு இவளையும் சேர்த்து நான் கொன்னுட்டுப் போய்டுவேன்…” என்றார் சாதாரணமாக.

நந்தேஷிற்கு என்னவோ எதுவுமே ஒப்பவில்லை. அவரிடம் பேசி பலனில்லை எனப் புரிந்தவன், மைத்ரேயன் ஏதோ பேச வருவதைக் கண்டு “டேய் விட்டுத்தொலைடா. பேசிப் பேசி நாக்கு வறண்டது தான் மிச்சம். கொஞ்சமாவது மனசுல ஈரம் கீரம் இருக்குறவங்ககிட்ட ஆர்கியூ பண்ணலாம். எதுவுமே இல்லாதவங்ககிட்ட பேசுறது வேஸ்ட்” என்றான் சலிப்பாக.

அத்தனை நேரமும் அமைதி காத்த மோகன், “நந்து… உன் அம்மாவை எதிர்த்துப் பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என அதட்ட, “எனக்கும் தான் பிடிக்கல. ஏன்டா இங்க வந்து பிறந்து தொலைச்சோம்னு இருக்கு” என எரிச்சலுடன் கூறியதில் சிவகாமியின் முகத்தில் அதிர்வலைகள்.

ஷைலேந்தரியோ, “விஸ்வூ ஏதாச்சு பேசு…” என இன்னும் தாலியையே வெறித்துக் கொண்டிருந்தவளை உலுக்க, அவளோ “எதுக்கு இவ்ளோ ஆர்கியூமெண்ட். இவங்களால அவனோட ம**யி**ரைக் கூட புடுங்க முடியாது. லீவ் இட்!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டதில் சிவகாமி கோபத்துடன் அவள் முன் காலடி எடுத்து வைக்கும் நேரம், “சர்ர்ர்” என்ற சத்தத்துடன் கேட்டைத் தாண்டி அவளது பங்களாவின் முன் வந்து நின்றது யுக்தாவின் கார்.

வாட்ச்மேன் பதறிப் பின்னால் ஓடி வர, அவனையெல்லாம் கண்டுகொள்ளாதவன் விறுவிறுவென விஸ்வயுகாவின் அருகில் வந்தான்.

“டேய் நீ எதுக்குடா வந்த?” என மோகன் கத்த, அவர்கள் புறம் திரும்பி வாயில் கை வைத்தவன் “உஷ்! நான் என் பொண்டாட்டிகிட்ட பேச வந்தேன். உங்களை எல்லாம் அப்பறம் டீல் பண்ணிக்கிறேன். அதுவரை மூச்சு சத்தம் கூட வரக்கூடாது…” என நரம்பு புடைக்க கம்பீரக் குரலில் அதிர வைத்தான்.

விஸ்வயுகா அவனை விழி இடுங்கப் பார்க்க, அப்பார்வையில் அத்தனை நேரம் இருந்த கம்பீரம் தொலைந்தது.

“ஏஞ்சல்… எதுவா இருந்தாலும் நம்ம வீட்ல போய் பேசலாம். ஏஞ்சல்… நா… நீ…” என ஏதேதோ பேச எண்ணி வந்தும் அவள் முகத்தைப் பார்த்து எதுவுமே அவனால் பேச இயலவில்லை.

அவனுக்குப் புரிந்தது. தான் செய்ததும் பேசியதும் அவளைப் பொறுத்தவரையில் சிறிய விஷயமல்ல என்று. மன்னிப்பினுள் அடங்காத தவறை இழைத்திருப்பதும் புரிந்தது. அதனைச் சரி செய்யும் காலமும் கடந்து விட்டது என்ற உண்மை உறைத்தாலும் நேசம் கொண்ட நெஞ்சம் மீண்டும் மீண்டும் அவளிடமே வந்து நின்றது.

“நம்ம வீடு?” கேள்விக்கணையுடன் அவள் நிறுத்த அதில் ஒரு ஏளனமும் தெறித்தது.

கண்ணை இறுக்கி மூடித் திறந்த யுக்தா சாகித்யனுக்கு, இனி தான் பேசும் ஒரு வார்த்தையும் அவளைக் காயப்படுத்தி விடக் கூடாதென்ற உறுதி எழுந்தது.

“ஐ க்னோ ஏஞ்சல். ஐ ஹர்ட் யூ. யுகா… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. நீயும் உன் அம்மா மாதிரி ஸ்டேட்டஸ், பிளா பிளான்னு அம்மாவோட கொலையை மறைச்சுட்டீங்கன்னு தான் நினைச்சேன்” என்றவன் பின்னந்தலையை அழுந்தக் கோதி இடுப்பில் கை வைத்து முன்னும் பின்னுமாக நடந்தவன், மீண்டும் அவள் முன் நின்று, “நீ அன்னைக்கு வந்துருப்பன்னு துளி கூட நினைக்கலடி” என்ற போதே அவனுக்கு மூச்சு வாங்கி விட்டது.

“சின்னதா… சின்னதா ஒரே ஒரு சின்ன சந்தேகமோ ஆதாரமோ நீ அந்த இடத்துல இருந்துருந்தன்னு தெரிஞ்சுருந்தா கூட…” ஐயோ என்னவென்று பேச? எங்கு முடிக்க? ஒன்றுமே தெரியவில்லை அவனுக்கு.

அவளிடம் எந்தவித சலனமும் இல்லை. “சரி தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்ப? இந்த பொய்யான தாலியைக் கட்டாம இருந்துருப்ப இல்ல? சித்திக் கொலையை நேரா பார்த்த சாட்சி கிடைச்சுருக்கும். உன் கேஸ்க்கு ஒரு ரேப் விக்டிம் கிடைச்சுருக்கும்” என அசட்டையாக அவனது நேசத்தை காற்றில் பறக்க விட, அவனிடம் அதீத வலி.

தனக்கு தேவையான வலி தான் என ஒப்புக்கொண்டாலும், அவனால் தாள இயலவில்லை என்பதே உண்மை.

பொங்கி வந்த சீறலுடன் இன்னுமாக அவளை நெருங்கியவன், “ஏய்… எப்படினாலும் உன்னைக் காதலிச்சது உண்மை தான்டி. ப்ச் சொன்னா புரியாது விடு” என மனம் நோக விலகினான்.

“ஓ! என்னை கார்னர் பண்ணதும், ஏமாத்தி தாலி கட்டி உன் ஆசை நாயகியா இருக்க வச்சதுக்கும் பேர் காதலா? ச்சு ச்சு… அச்சோ இதுக்கு பேர் காதல்னு எனக்குத் தெரியாம போச்சே யுக்தா!” எனப் போலியாய் பாவப்பட்டுக் கொண்டவள்,

“சரி… அதான் நீ வந்த வேலை சிறப்பா முடிஞ்சுதே! போய் இன்வெஸ்டிகேட் பண்ற வேலையைப் பாரு. வெல்… பொதுவா எல்லாரும் கையில விலங்கு மாட்டி விசாரணை பண்ணுவாங்க. நீ கொஞ்சம் வித்தியாசமாக கழுத்துல விலங்கை மாட்டி நூதனமா விசாரிச்சுருக்க. ஓகே… எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. ஏற்கனவே நாலு பேர் கூட இருந்தவ தான. நீ ஒருத்தன் எக்ஸ்ட்ரா ஆகுறதுனால எதுவும் என் கற்புல களங்கம் வந்துட போறது இல்ல” என்றாள் நக்கல் சிரிப்புடன்.

“விஸ்வூ!” மற்ற மூவரும் அவளை அதட்ட, நந்தேஷ் “என்ன பேசிட்டு இருக்க விஸ்வூ? போதுமே” என்றான் வேதனையாக.

ஷைலேந்தரி, “அவன் மேல கோபம்ன்னா அடி திட்டு அதை விட்டுட்டு ஏன்டி இப்படி நீயும் கஷ்டப்பட்டு அவனைக் கஷ்டப்படுத்துற…” என அவள் பங்கிற்கு திட்ட, மைத்ரேயனுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

யுக்தா இறங்கிப் போய் இன்று தான் பார்க்கிறான். மற்ற நேரமாக இருந்திருந்தால் அவன் கெஞ்சலையும் கண்ணீரையும் வேதனையையும் கண்டு மகிழ்ந்திருப்பான். இன்று ஏனோ அவன் மீது பரிதாபமே உருவாகியது. அவன் என்னவோ நினைக்கப் போய் என்னவோ நிகழ்ந்து விட்டது என மட்டும் மைத்ரேயனுக்குப் புரிந்திட, மிகவும் சென்சிட்டிவான சிக்கலுக்குள் அவனும் மாட்டிக்கொண்டு அவளையும் மாட்ட வைத்து விட்டான் என்ற வருத்தமே மேலோங்கியது.

தன்னைக் காயப்படுத்தவே மீண்டும் மீண்டும் அவளையே காயப்படுத்திக்கொள்கிறாளென தெளிவாக புரிந்தது யுக்தாவிற்கு.

தான் பேசிய பேச்சிற்கு பல மடங்காக ஒவ்வொரு முறையும் அவள் திருப்பித் தருவது இரட்டைத் தண்டனையாக அவனைக் கொன்றது.
‘ஏற்கனவே செத்துக்கிட்டு இருக்குறவன ஏண்டி சாகடிக்கிற?’ என்ற ரீதியில் அவளையே அவன் வெறிக்க, அவளோ தன்னுடைய அழுத்தத்தை சிறிதும் மாற்றாமல் நின்றாள்.

“அதான் விசாரணை முடிஞ்சுதே. இனி இந்த விலங்கும் தேவை இல்லை தான!” எனத் தீர்க்கத்துடன் உரைத்தவள், தாலியில் கை வைக்க, அவள் செய்யப்போகும் செயல் புரிந்தும் அவன் தடுக்கவில்லை.

தாலியைக் கழற்றி அவன் முன் நீட்டியவள், “உன்னோடது எதுவும் இனி என்கிட்ட இருக்கக் கூடாது…” என அவன் கையைப் பிடித்து அந்தத் தாலியை வைத்து விட்டாள்.

கையில் வீற்றிருந்த மாங்கல்யத்தையும் அவளையும் ஒரு முறை பார்த்தவன், “அடி போடி… என்னோடது எதுவும் என்கிட்ட எப்பவுமே இருக்காது. எப்பவும் அதுவே தொலையும். இந்த முறை நானே தொலைச்சுட்டேன்!” என விரக்தியுடன் உரைத்து விட்டு,

“என்னோடது எதுவும் உங்கிட்ட இருக்க கூடாதுன்னா, உன் சித்திக் குடுத்த செயினும் இருக்கக் கூடாது. உனக்கும் இவளுக்கும் நான் குடுத்து விட்ட நோட்ஸ்ஸும் இருக்க கூடாது. மொத்தத்துல நீயே இங்க இருக்க கூடாது. நீயே என்னோடவ தானடி” என அழுத்தம் திருத்தமாக உரைத்ததில் விஸ்வயுகாவின் விழிகளில் மின்னலென ஒரு அதிர்வு.

அத்தியாயம் 49

விழிகளில் வலி சுமந்து, கூடவே கனத்த அந்த மாங்கல்யத்தையும் சுமந்து வெளியில் வந்தவனை காரில் அமர்ந்தபடியே பாவமாகப் பார்த்தாள் குறிஞ்சி.

“ரொம்ப ஓவரா தான் போறாங்க எல்லாரும்” என முணுமுணுத்தவள், “டேய் நீ டெல்லிக்குப் போ. இங்க இருக்குற கேஸை நான் பாத்துட்டு உனக்கு அப்டேட் தர்றேன். போதும் எல்லாமே. வருஷம் ஏற ஏற நம்ம கஷ்டம் குறையும்னு பார்த்தா கூடிக்கிட்டே தான் போகுது. கிளம்பிப் போ யுக்தா…” என்றவளுக்கு அவனது வேதனையைக் கண் கொண்டு காண இயலவில்லை.

திரும்பி அவளைப் பார்த்தவன், “ஏஞ்சலை விட்டுட்டா? நோ வே. இவ்ளோ வருஷமா தெரியாம விட்டேன். இப்போ தெரிஞ்சே விட்டுட்டு போக முடியாது குறிஞ்சி” என்றான் அடிபட்ட பார்வையுடன்.

“அவள் தாலியவே கழட்டிக் கொடுத்துட்டா. எந்த நம்பிக்கையில நீ இருக்கேன்னு சொல்ற?”

“அதைக் கட்டுன விதம் தப்புன்றதுனால தான் அமைதியா இருந்தேன். முறையா கட்டுனதும் எப்படி அவள் கழட்டிக் குடுக்க முடியும்…” என்றபடி காரை எடுத்தவன்,

“நம்பிக்கை… தெரியல குறிஞ்சி. எந்த நம்பிக்கைல அவளை பத்தி எதுவுமே தெரியாம லவ் பண்ணேனோ இப்பவும் அதே நம்பிக்கைல அவள் என்னை ஏத்துப்பான்னு நம்புறேன்” எனப் பெருமூச்சில் தனது மொத்த வேதனையையும் வெளியிட்டவன், “பேக் டூ ஒர்க்!” என்றபடி கொலை நடந்த இடத்திற்குச் சென்றான்.

போரூர் அருகே வீற்றிருந்த மிகப்பெரிய பங்களா அது. 29 வயது நிரம்பிய வாலிபன் தீனா உயிரற்று கிடந்தான். மறுவாரம் அவனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. மேட்ரிமோனியின் உதவியுடன் தான் பெண்ணைத் தேர்வு செய்திருந்தான்.

முந்தைய கொலைகளைப் போல் அல்லாமல் வயிற்றில் கத்தி சொருகி இருந்தது. அதில் குருதி வீணாகி தான் இறந்திருக்கிறான் எனக் கணித்தாலும், யுக்தா அந்த இறந்த உடலை வெகுநேரம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

அந்நேரம் “ஹாய் சார்…” என இள வயதான பாரென்சிக் எக்ஸாமினரான முரளி யுக்தாவின் முன் நின்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“நான் முரளி. சுதர்மன் சார டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க… சோ ஐ ஆம்” எனக் கூறி முடிக்கும் முன்,

க்ளவ்ஸைக் கழற்றி விட்டு அவனுக்கு கை கொடுத்த யுக்தா, “ஐ க்னோ முரளி. உங்களை சஜஸ்ட் பண்ணுனதும் நான் தான். அவரை டிரான்ஸ்பர் பண்ணுனதும் நான் தான் என்றதும் விழித்தான்.

முரளி நமக்கு நிறைய டைம் இல்ல. இப்ப நடக்குற சீரியல் கொலைக்கான குற்றவாளியைக் கண்டுபிடிக்க நீங்க குடுக்குற அக்கியூரேட் தகவல் எனக்கு ரொம்ப முக்கியம். இதுவரை நடந்த அடாப்ஸி எதுவும் கரெக்ட்டா நடக்கல. மறுபடியும் நீங்க ரீ எக்ஸ்சாமின் ஆரம்பிங்க. அதுக்கான பெர்மிஷன் பேப்பர்ஸ் காலைல உங்க கைல இருக்கும்” எனப் படபடவென பேச,

“சார் இதுவரை நடந்த எல்லாமே சீரியல் கொலைகாரன் செஞ்சதுன்னு எப்படி நினைக்கிறீங்க சார். அப்படி பார்த்தா இந்தக் கொலை அதுக்கு எக்ஸெம்ப்ஷன் தான” எனக் கேட்டான் குழப்பமாக.

“மே பி இது எக்ஸெம்ப்ஷனா இருக்கலாம். ஆனா இதுவரை மேட்ரிமோனி ரிலேட்டடா நடக்குற கொலையோட நம்பர்ஸ் அதிகரிச்சுட்டே போகுது. எப்படியோ எதுனாலயோ சம்பந்தப்பட்ட கொலைகாரன் மேட்ரிமோனியோட லிங்க் ஆகிருக்கான். பட் எப்படி லிங்க் ஆகிருக்கான். எதுனால லிங்க் ஆகிருக்கான்… அதுக்கான பதில் நமக்குத் தெரியல. அது தெரியிற வரை இந்தக் கொலை கன்டினியூ ஆகும். அண்ட் முரளி, உங்க அட்டாப்சி ரிப்போர்ட் எனக்கு உண்மையா இருக்கணும்” எனக் கண்டிப்புடன் உரைக்க,

“சியூர் சார். உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்…” என்று உறுதியாய் கூறியதில், தேவையற்று விஸ்வயுகாவின் நினைவு வந்து போனது.

முயன்று அவளது நினைவை ஒதுக்கியவன் குறிஞ்சியிடம், “இந்த ஏரியால இருக்குற சிசிடிவி ஃபுட் ஏஜ் வேணும் குறிஞ்சி. அண்ட் ஒன் மோர் திங், விக்டிம்க்கு ட்ரக்ஸ் பழக்கம் இருக்கணும்…” என்றதும் “விசாரிச்சேன் சார். அந்த மாதிரி எதுவும் இல்லன்னு பேரெண்ட்ஸ் சொல்றாங்க” என்றாள் அட்டென்சன் மோடில்.

“தென் வாட் இஸ் திஸ்?” என சிறிய கவரில் பொடி போல இருந்த பொருளை எடுத்துக் காட்டியவன், “ஒன்னு இவன் ட்ரக் எடுக்கும் போது யாரோ அட்டாக் பண்ணிருக்கணும். இல்லனா, கொலை பண்ணிட்டு ட்ரக் கேஸ்ல முடிக்க பிளான் பண்ணிருக்கணும்” என ஒற்றை விரலால் நெற்றியை நீவியவன், முரளியைப் பார்க்க “சார் இவன் நாலு நாளைக்கு முன்னாடி என்ன சாப்ட்டான்னு முதற்கொண்டு நாளைக்கு காலைலக்குள்ள உங்களுக்கு ஃபுல் டீடெய்ல் தந்துடுறேன்” என்றிட தலையை ஆட்டிய யுக்தா மேலும் அந்த பங்களாவையே சோதித்தான்.

“யுக்தா… எங்க சுத்துனாலும் ஏன் மேட்ரிமோனியே இடைல வருது” க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனை முடித்து விட்டு நள்ளிரவு 1 மணிக்கு இருவரும் அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்டியரிங்கில் தனது இரு விரல்களால் தட்டிய யுக்தா, “பொதுவா ஒரு க்ரைம் நடந்தா அங்க ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கிடைக்கலாம், இல்ல மர்டர் வெப்பன் கிடைக்கலாம். சின்ன சின்ன க்ளூ கூட கிடைக்கலாம். அவனைக் கொலை பண்றதுக்கு யாருக்கு அதிக மோட்டிவ் இருக்குன்ற கணிப்பும் கிடைக்கலாம். ஆனா குறிஞ்சி… நான் சென்னைக்கு வந்த முதல் நாள்ல இருந்து, ஐ மீன் யுகா மேட்ரிமோனி மூலமா அரேஞ்சான கல்யாணத்துல நடந்த வெரி பர்ஸ்ட் மர்டர்… ரோஜா அண்ட் வெங்கடேஷ் டெத். நந்தேஷ் ரோஜாவை விரும்பி இருக்கான். ரோஜாவும் நந்தேஷை விரும்பி இருக்கா. சோ அவன் அவளைக் கொலை பண்றதுக்கான மோட்டிவ் நிறைய இருக்கு” என சொல்லும் போதே குறிஞ்சி சுருங்கிய முகத்தைச் சீர் செய்து கொண்டாள்.

“ஓவரா ஃபீல் பண்ணாத. அதான் அவன் ஃபியான்சும் போய் சேர்ந்துட்டா. உன் ஃபியான்சும் போய் சேர்ந்துட்டானே…” என வாரிய யுக்தா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஓகே கமிங் டு தி பாயிண்ட், ஆனா நந்தேஷ் ரோஜாவைக் கொல்லல. சோ மோட்டிவ் எங்க எங்க பாசிபில்னு பார்த்தா டெட் எண்டுல தான் விடுது. அதே தான் எல்லாருக்குமே. மோட்டிவ்னு பெர்சனலா இல்லைன்னா பொதுவா இருக்குற மோட்டிவ் தான் காரணமா இருக்க முடியும். வில் ஸீ! எந்தக் கொம்பனா இருந்தாலும் என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது” என்றவனின் விழிகளில் தீவிரம் அரங்கேறியது. ஆனால் அது அத்தனை எளிதல்லவென்று மட்டும் உள்ளுணர்வு உறுத்தியது.

யுக்தா சென்றதும் இறுகிய முகத்துடன் அறைக்குள் நுழைந்த விஸ்வயுகா, கதவை அடைத்து விட்டு தேக்கு மரக்கதவில் சாய்ந்து காலைக் குறுக்கி அமர்ந்தாள்.

அத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த விழியருவி இனி தேக்க இடமற்று வெள்ளமாகக் கன்னத்தில் படர்ந்தது.

“இந்த செயின் நானே வாங்குனது!”

“உன் லவ்க்காக நீ சாக்ரிபைஸ் பண்ணிப்ப. ஆனா அவனும் ஏன் பண்ணிக்கணும்…”

அஸ்வினியின் வார்த்தைகள் அனைத்தும் மீண்டுமொரு முறை நினைவலைகளில் சிக்கி சின்னாபின்னமானது.

கூடவே, அவனது ஏமாற்று வேலையும். அவன் முழு மனதோடு தன்னுடன் பழகவில்லை என்ற உறுத்தல் இருந்தது தான். அப்படியும் அவனுடன் இழைந்தது இதைக் காரணமாக வைத்தேனும் ஒரே ஒரு கணம் அவனுடன் வாழ்ந்து விட வேண்டும், ஒரே ஒரு முறை ஆடவனின் காதலை அனுபவித்து விட வேண்டும், ஒரே ஒரு நாளேனும் அவன் வாசத்தை சுவாசித்திட வேண்டும், ஒற்றைப் பார்வையிலாவது தனது காதலை வெளிப்படுத்திட வேண்டுமென்ற தவிப்பில் தான். எப்படியும் வாழ்வு முழுக்க அவன் தன்னுடன் வரப்போவதில்லை என்ற உண்மை உறைக்கவே நாடகமென்ற போதிலும், வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலேனும் அவனது காதல் கதாபாத்திரமாக அவனுடன் நடித்து விடத் துணிந்தாள்.

எப்படியும் அவனைக் காயப்படுத்தி அவளாக பிரிய நினைத்ததை அவன் முந்திக்கொண்டு செய்து விட்டான். அவ்வளவே!

ஆனாலும், அவன் கொடுத்த காயம் வலித்தது. அதே காயத்தைத் தானே நீயும் அவனுக்கு கொடுக்கவிருந்தாய் என அவளது மனம் அவளை எள்ளி நகையாட, “ஐ லவ் யூ ஏஞ்சல்” என்ற யுக்தாவின் ரகசிய குரல் காதோரம் அசீரிரியாக ஒலித்ததில் வெடித்து அழுதாள்.

“போடா சைக்கோ! யூ ஃப**ங் ஃப்ரீக்!” எனத் தரையில் கையால் குத்தி கண்ணீரில் கரைந்தவள், “மறுபடியும் என் லைஃப்ல ஏன்டா வந்த? வந்தவன் ஸ்ட்ரேஞ்சரா இருக்காம, என்னை ஏன்டா காதல்ன்ற பேர்ல சுத்தி வந்த. ஐ ஹேட் யூ டா. ஐ ஜஸ்ட் ஹேட் யூ…” எனக் கேவியவள் நெஞ்சில் கை வைத்து இன்னும் குறுகினாள்.

அவளது கழுத்தே மொட்டையாக இருந்தது. எப்போதும் அணிந்திருக்கும் மெல்லிய செயினும் இல்லை. சில நாட்களாக நெஞ்சோடு உரசிக்கொண்டு அவளுடன் உறவாடிக் கொண்டிருந்த மாங்கல்யமும் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை! கண்ணை இறுக்கி மூடி கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

இத்தனை வருடமாக துளித் துளியாக சேர்த்து வைத்த வைராக்கியத்தையும் கம்பீரத்தையும் இழக்கக் கூடாதென்ற தீர்மானத்தை மனதில் ஏற்றிக் கொண்டு எழுந்தவளின் கவனத்தைக் கலைக்கும் வண்ணம் பால்கனியில் ஒரு நிழலுருவம் தெரிந்தது.

—-

தெரு விளக்கு வெளிச்சத்தில் ஈசல்கள் துள்ளி விளையாடும் நள்ளிரவு நேரம். இரவு நேரப் பறவைகளின் ஒலி தவிர்த்து பேரமைதி நிலவியது.

யுக்தா சாகித்யன் காரை தெருவின் நடுவில் நிறுத்தி, பேனட்டின் மீது ஏறி அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்.

அவன் விழிகள் இரத்த சிவப்பில் எங்கோ வெறித்திருக்க, அவ்வமைதியைக் கிழிக்கும் பொருட்டு கீறிச்சிட்டு அவன் முன் நின்றது ஒரு டெம்போ வேன். அதில் இருந்து ஜிம் ட்ரெயினர்கள் போல திமுதிமுவென இறங்கிய சில ஆடவர்கள் கையில் கத்தி வைத்திருந்தனர்.

மது அருந்தியதால் யுக்தாவிற்கு கண்ணே மங்கலாகத் தெரிந்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு ஆடவன், “டேய்” எனச் சத்தத்துடன் யுக்தாவின் வயிற்றில் கத்தியைச் சொருக, யுக்தா சரிந்து காரில் இருந்து விழுந்தான்.

“ஐயோ யுக்தா!” என உறக்கத்தில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்தது விஸ்வயுகாவோ ஷைலேந்தரியோ அல்ல. மைத்ரேயன்!

அவன் கத்தியதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஷைலேந்தரியும், “கொலை கொலை” என்ற பதற்றத்துடன் எழுந்து மைத்ரேயனை விழிக்க, “ஆமா கொலை தான் உனக்கு எப்படி தெரியும்?” என்றான் தனது கனவில் நடந்த கொலையைப் பற்றி.

“அதான் ஓயாம நடக்குதே. இப்ப என்ன கொலை நடந்துச்சுடா?” எனப் பயத்துடன் கேட்க,

“யுக்தாவை டெம்போ வேன் வச்சு ஆண்ட்டி கொலை பண்ணிட்டாங்கடி. வா வா அவன் பாடி இருக்கான்னு பார்க்கலாம்” எனப் போர்வையை உதறி விட்டு எழுந்தவனைத் தலையைச் சொறிந்தபடி பார்த்தவள், “டேய் இங்க தான படுத்துருந்த. கொலையை எப்படிடா பார்த்த?” எனக் குழப்பத்துடன் கேட்டாள்.

“கனவுல பார்த்தேன்டி. அந்தத் தெரு வேற எங்க இருக்குனு தெரியல. வா தேடலாம்” என்றவனை ‘அட பரதேசி பன்னாடை’ என்ற ரீதியில் முறைத்து வைத்தாள் ஷைலேந்தரி.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
140
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்