Loading

மார்ச் எட்டு அன்று பெண்கள் தினம் என்பதால் சேனலில் பரபரப்பான கொண்டாட்டத்துடன் துவங்கியது அன்றைய நாள், அன்றைய இரவு நடக்க இருக்கும் ரகசிய பார்ட்டியை எண்ணி ஆர்வமாய்க் காத்திருந்தாள் அகரநதி. கார்த்திக்கை அன்றைய தினம் காணாமலும் தவித்துப் போனாள் பெண்ணவள்.

மகளிர் தினம் என்றால் தனக்குத் தவறாமல் வாழ்த்து கூறும் தோழன் இன்று ஏனோ காணவில்லை, அவன் தொலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தால் அவன் எடுக்கவில்லை, என்னாவாகியிருக்கும் இவனுக்கு என்ற யோசனையில் இருந்தாள் அகரநதி. மாலை வேளை நெருங்க நெருங்க அவளுக்கு ஆர்வம் அதிகமானது, தனியாய் சென்று எதையோ கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்புடன் அமர்ந்திருந்தாள் அகரநதி.

மாலை வேலை நெருங்கிக்கொண்டிருந்த போது தான் அகரநதிக்கு அழைப்பு வந்தது கௌதமிடமிருந்து. அவருடைய அறைக்குச் சென்றாள் அதி.

“அகரநதி ஓகேவா ரெடி ஆகிட்டிங்களா.?”

“ஐ யெம் ரெடி சார்” எனத் துணிச்சலுடன் பதில் சொன்னாள் அகரநதி.

“ஓகேமா தெட்ஸ் குட்”

“மாறு வேசத்துல போகணும் சொன்னீங்க, எப்படிச் சார்.?” அவள் ஆர்வத்துடன் கேட்க.

“அதுக்காகத் தான் உன்னை வரச் சொன்னேன்மா” எனச் சொன்னவர் அவளை அங்கிருந்து மேக்கப் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“இவங்க தான் ப்ரொப்ஃபஷ்னல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் திவ்யா, அண்ட் இவங்க தான் மேக்னா, மேக்னா ஒரு மாடல், இவங்களை மாதிரி தான் உங்களுக்கு மேக்கப் போடப்போறாங்க அகரநதி”

“வாட் இஸ்ட் பாஸிபிள் சார், இப்போ நான் மேக்னா மாதிரி ஆகணும்னா அவங்களை மாதிரி மேக்கப் போட முடியுமா? பட் அவங்க லுக் எனக்கு வருமா.?” என பட்டெனக் கேட்டாள் அகரநதி.

“திவ்யா இருந்தால் எல்லாமே சாத்தியம், நீங்க கேட்கிற லுக்கை அவங்க பண்ணி தந்திருவாங்க” எனப் புன்னகைத்தபடி சொன்ன கௌதம்மை பார்த்து மீண்டும் சந்தேகம் கேட்டாள் அகரநதி.

“சார் இப்போ நான் அந்த மேக்கப் போட்டால் மேக்னாவா மாறிருவேன் கரெக்ட்டா”

“யா அப்ஸலியூட்லி கரெக்ட்” மீண்டும் புன்னகைத்தார்.

“அப்போ மேக்னா அங்கே வந்த மாதிரி ஆகிடாதா.? மேக்னா பேரும் சேர்ந்து கேட்டு போயிராதா.?” அப்பொழுதும் யாருக்காகவோ யோசித்த நம் நாயகிக்கு தெரியவில்லை அவள் தான் இந்த மனித வேட்டையில் முதல் பலியாகப் போகிறாள் என்று.

“அதைபத்திலாம் நீங்க கவலைபடாதீங்க அகரநதி, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்” எனச் சொல்லி புன்னகைத்தபடி கௌதம் வெளியே சென்றுவிட, நாலு மணி நேரம் மேக்கப் போட்டு மேக்னாவை போலவே அகரநதியை மாற்றியிருந்தாள் அந்தப் பெண். இவ்வளவு மேக்கப் போட்டுப் பழக்கம் இல்லாதவள் முகமே கணப்பது போல் உணர்ந்தாள் அசூசையாக இருக்க,

“லிப்ஸ்டிக் வேண்டாமே ப்ளீஸ்” எனக் கேட்டாள் அகரநதி.

“நீங்க அங்கே மாடல் மாதிரி போகணும், சோ லிப்ஸ்டிக் போட்டு தான் ஆகணும்” என வற்புறுத்தி போட்டுவிட்டாள் திவ்யா.

இது போன்ற மேக்கப்கள் இப்போது சர்வ சாதாரணமாய் நடப்பதாய் இருந்தாலும், அந்த மாடலின் உடலமைப்புடன் அதியின் உடலமைப்பும் கச்சிதமாய் ஒத்துப் போனது.

“மேம் நீங்க இந்த ட்ரெஸ் தான் போட்டுட்டு போகணும்” எனத் திவ்யா காட்டிய உடையைப் பார்த்துக் கோபம் கொண்டாள் அகரநதி.

“இதென்ன இவ்ளோ சின்னதா இருக்கு, நோ வே” எனக் கோபமாய்த் திட்ட,

“இல்லை மாடல்ஸ் இப்படித் தான் போடுவாங்க” திக்கி திணறி பேசிய திவ்யாவை பார்த்துச் சந்தேகம் ஏற்பட்டது அதிக்கு.

“திவ்யா.? உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்.?”

“என்னை எங்க மேம் பார்த்திருப்பீங்க வாய்ப்பே இல்லை” என அவள் மழுப்பலாய் பதில் சொல்ல,

“உங்களுக்கு அகிலன் தெரியுமா.?” எனக் கேட்க,

“அப்படி யாரும் தெரியாது மேம், நீங்க உட்காருங்க, உங்களுக்கு மேக்கப் செட்டிங் ஸ்பேரே அடிக்கணும்” எனச் சொல்லிய படி அவள் முகத்தில் ஸ்பேரேவை தெளித்த நொடியில் மயங்கி சரிந்தாள் அகரநதி.

அந்தச் சமயம் பார்த்துக் கௌதம் அங்கே வர,

“ஏய் என்ன லூசுதனம் பண்ணி வச்சிருக்கீங்க, சார் என்ன சொன்னாரு அவளா அங்கே போகணும் தானே சொன்னாரு அதுக்காகத் தானே இந்த மேக்கப் ப்ளான்” எனத் திட்டினார் கௌதம்.

“சார் கேள்வி மேல கேள்வி கேட்கிறா சார் இந்தப் பொண்ணு, அகிலனை தெரியுமான்னு கேட்டுட்டா, அதான் என்ன செய்யுறதுனு தெரியாமல் ஸ்ப்ரே அடிச்சு விட்டுட்டேன்” என விளக்கம் கொடுத்தாள் திவ்யா, அங்கிருந்த மாடல் பெண்ணைப் பார்த்து,

“போ வெளிய போ” என அனுப்பி வைத்த கௌதம் உடனே அகிலனுக்கு அழைப்பு விடுத்தார்.

“சார் அகரநதி விசயத்துல சின்னச் சிக்கல் ஆகிருச்சு”

“யோவ் என்னையா சொல்லுற, எத்தனை நாள் ஸ்கெட்ச்சு போட்டு இன்னைக்கு முடிஞ்சிரும்னு பார்த்தால் என்ன தான் ஆச்சு சொல்லி தொலை”

“சார் அந்த மேக்கப் பொண்ண உங்க ஆளுன்னு கண்டுபிடிச்சுட்டா, அதான் அந்தப் பொண்ணு அவசர பட்டு ஸ்ப்ரே அடிச்சிருச்சு” என விளக்கிய பின்,

“இதுவும் நல்லது தான், அவளைக் கார்ல போட்டு பீச் ஹவுஸூக்கு அனுப்பி வை, நான் பார்த்துக்குறேன், திவ்யாகிட்ட இருக்கப் போதை மருந்தை அவளுக்குப் போட்டுவிடச் சொல்லிரு” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவனை எதிரே அமர்ந்திருந்த தாரா பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

“அகில் அந்தப் பொண்ணு மேல உனக்கு அப்படி என்ன கோபம், நமக்கென்ன பொண்ணா கிடைக்காது.?” என அவனின் காதலி தாரா கேட்டாள்.

“இவளை தொழில்ல விடுறதுக்கு ஒன்னும் ப்ளான் போட்டு தூக்கலை”

“அப்பறம் அகில் இந்த நேரத்தில் இது.? தேவை இல்லாத வேலை”

“சில திமிரு பிடிச்ச பொண்ணுங்களைப் பார்த்தால், அவளை அடக்கணும்னு தோணும், அப்படித் தான் இவளும், இவ திமிரை அடக்கணும்”

“அவ திமரை அடக்க நீ என்ன பண்ண போற.?”

“ஏன் உனக்குத் தெரியாதா தாரா.? உன் திமிரை எப்படி அடக்கினேனோ அப்படித் தான் அவ திமிரையும் அடக்கப் போறேன்” எனச் சொன்னவுடன் கோபம் கொண்டு எழுந்து சென்றவளின் கரம் பற்றி இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.

“என்ன தாரா கோபமா எழுந்து போற.?”

“இதெல்லாம் இங்கே இருந்து பார்க்கிற சக்தி எனக்கு இல்லை நான் கிளம்புறேன்”

“அப்போ நான் என்ஜாய் பண்ணிட்டு வரவா.?”

“என்னமோ செய், பட் ஐ லவ் யூ அகில், நம்ம காதலுக்காக இதெல்லாம் நீ விடலாம்ல, நீ தொழில் பண்ணு நான் ஒன்னும் சொல்லலை, பட் இதெல்லாம் நினைச்சு கூடப் பார்க்க முடியலை” என அவனிடம் இருந்து அவள் பிரிந்து செல்ல,

“தாரா நான் எத்தனை பேர் கூட இருந்தாலும் உன்னை மட்டும் தான்டி லவ் பண்ணுறேன்” என அவன் கத்தி சொல்ல அதையெல்லாம் காதில் வாங்காது அவள் புறப்பட்டுச் சென்றாள்.

அதே நேரம் அங்கு வந்திருந்த காரில் அகரநதியை தூக்கி வந்திருந்தார்கள். மாடியில் இருந்த அறையில் அவளைப் படுக்க வைத்திருந்தான் அகிலன். அவளின் கை கால்கள் கட்டபட்டிருந்த நிலையில் இருந்தது.

அவன் ஐம்பது பெண்களை வெற்றிகரமாக அனுப்பியதற்கான பார்ட்டி தரைதளத்தில் துவங்கியது, ஆட்டமும் பாட்டும் அந்தக் கடற்கரை பங்களாவை நிறைத்திருந்தது. அகிலனின் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாகப் போதையின் உச்சிக்கே சென்றிருந்தான் அகிலன். இங்கு நடந்துக்கொண்டிருந்த பார்ட்டி செந்தமிழனுக்குத் தெரியாமல் ரகசிய கூட்டம் போல் தான் நடந்தது. தேர்தல் இந்த வருடம் நடக்க விருப்பதால் செந்தமிழன் இது போன்ற விசயங்களில் விலகியே இருந்தார். போதை கிறக்கத்துடன் பார்ட்டியை முடித்துச் சிலர் வீடு திரும்பி இருந்தனர், சிலரோ அகிலன் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

இப்போது அந்தப் பங்களாவில் அகரநதியும், அகிலனும் தான் இருக்கிறார்கள். அகிலனின் மனம் துள்ளிக் குதித்தது.

அதியின் கதையை இன்றோடு முடித்து விட வேண்டும்,

அன்று தீரா சொன்னதும் இவனுக்கு நினைவு வந்தது.

“டேய் போலீஸ்காரா ஷி இஸ் மைன்னு சொன்னல, இப்போ அவ எனக்குச் சொந்தமாகப் போறாடா, கேவலம் போலீஸ்காரன் நீ என் மேல கைய வச்சிட்டல்ல” எனக் கடுங்கோபத்துடன் மாடியறையை நோக்கி முன்னேறியவன் போதையின் உச்சானிகொம்பில் இருந்தான். அதி கட்டியபடி மயக்கத்தில் இருப்பாள் என்று நினைத்துப் போனான் அங்க தான் அவனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.

கையில் உருட்டு கட்டையுடன் கட்டவிழ்த்து நின்றிருந்தாள் அதி, அவளுக்குக் கொடுக்கபட்டிருந்த போதையிலிருந்து மீள பலமுறை அந்த அறையில் இருந்த பாத்டப்பில் முழ்கி எழுந்திருந்தாள். அதில் அவள் பூசியிருந்த மேக்கப்பும் களைந்து போனது அவளுக்குப் போடப்பட்டிருந்த போதை மருந்து கிட்ட தட்ட பனிரெண்டு மணி நேரம் சுயநினைவின்றி வைத்திருக்கக் கூடிய சக்தியை உடையது, ஆனால் இவள் இவ்வாறு எழுந்து நிற்பது அகிலனுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது. கார்த்திக்கை அழைக்கவும் அவளிடம் தொலைப்பேசி இல்லை, இந்தக் கொடியவனிடமிருந்து அவள் தப்பித்தாக வேண்டும்.

உருட்டுகட்டையைத் திடமாகப் பிடித்தவளின் கண்கள் அவளையும் மீறி கிறக்கம் கொள்ள, சிங்கத்தைப் போல் தலையை அங்கும் இங்கும் அசைத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளின் விழிகள் ரத்த சிவப்பு ஏறியிருந்தது.

“அதி நீ இங்கே இருந்து தப்பிக்கவும் முடியாது, என்ன தாண்டி போகவும் முடியாது” அந்தக் கொடூரன் பேசியது அவளின் செவிகளில் தெளிவாய் விழுந்தது.

“என்.. உடம்புல… உயிர்.. இருக்கிற.. வரைக்கும்.. உன்னை… எதிர்த்து நிப்பேன்டா..” எனத் திக்கி திணறி பேசியவளின் உதடும் கைகளும் ஒரே நேரத்தில் நடுங்க துவங்கியது,அவளால் முடிந்தவரை தன்னைத் தற்காத்துக்கொள்ள அவனைத் தாக்கினாள். ஆனால் உடலில் செலுத்தபட்டிருந்த போதை மருந்து அவளை ஆட்டி படைத்தது.

மெல்ல நெருங்கி அவன் வர வர வேகமாய்ப் பின்னோக்கி நடந்தாள் அதி, தன்னை நிதானபடுத்தி உருட்டுக்கட்டையை வேகமாய் வீசினாள் அகரநதி, அவன் தலையைப் பதம் பார்த்து குருதி வழிந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, மேலும் அவளை நெருங்கினான்.

“ஏய் அதி உன்னால ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியாது சொன்னால் புரிஞ்சுக்கோ, கடைசியில நீ என்கிட்ட தோத்து தான் போகப் போற” எனக் கிசுகிசுப்பாய் பேசிய படி அவள் ஆடைகளைக் களைக்க முற்பட்டவனைத் தள்ளிவிட்டு ஓடியிருந்தாள் அதி. அவள் ஓடியதை பார்த்தவன் அருகே இருந்த இரும்பு ராடை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடிக்க அங்கேயே மயங்கி சரிந்தாள் பேதை பெண்ணவள். அவளின் சுயநினைவின்றி அவளுடைய கற்பு அகிலனால் அபகரிக்கபட்டது, அவனின் ஆத்திரம் அடங்கியது, பெண்ணின் அனுமதியின்றி அவளை அடைந்ததில் கர்வம் கொண்டான், அதை தன் ஆண்மையென நினைத்தான், பெண்களை ஏளனமாக நினைத்தவன், அவளைப் பழிதீர்க்க நினைத்து இன்று பழி வாங்கி விட்டோம் என்ற சந்தோசத்தில் ஆனந்த கூத்தாடினான் அகிலன். தன்னை இழந்தவள் மயக்கம் தெளியவில்லை இனி அவள் தேவையில்லை வெளியே சென்றால் சொல்லிவிடுவாள் என்ற பயம் மெல்ல துளிர்க்க, உடனே தன் காதலியான தாராவுக்கு அழைப்பு விடுத்தான்.

“தாரா தாரா..!” அழைத்தான் அவன்,

“என்ன அகில் சொல்லு”

“இல்லை அவளை முடிச்சுட்டேன், பேச்சு மூச்சு இல்லாமல் 42கிடக்குறா.? வெளிய போனா எதாவது சொல்லிருவாடி” எனப் பதட்டத்துடன் பேசினான்.

“நீ தானே தப்பு பண்ணின, நீயே சரி பண்ணு”

“ஏய் தாரா ப்ளீஸ்டி ஹெல்ப் பண்ணு”

“அவளை எரிப்பியோ.? இல்லை புதைப்பியோ.? அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை என்னை இந்த விசயத்தில் கூட்டு சேர்க்காதே, நான் உன் மேல பயங்கரமான கோபத்துல இருக்கேன் வையி போனை” எனக் கோபமாய் அழைப்பை துண்டித்தாள் தாரா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அகிலனின் வன்மம் வென்றே விட்டது. அவன் நினைத்ததை அவளை சுற்றி இருக்கும் ஆட்களை வைத்தே நடத்திக்கொண்டான்.