Loading

அவன் மூச்சுக்காற்று அவள் மேல் படும் அளவுக்கு துருவ் நெருங்கி நிற்க, உத்ராவிற்கு, அவனை தள்ளி விடவேண்டும் எனக் கூட தோன்றாமல் உறைந்து போய் அவனையே பார்த்தாள்.

அவன் இன்னும் நெருங்கி, “சாதாரணமா கேள்வி கேக்குறது புத்திசாலித்தனம் இல்ல. நமக்கு தோன்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிச்சுட்டு அதுக்கு அப்பறம் எதிராளிக்கிட்ட தைரியமா கேள்வி கேட்கணும். தட்ஸ் இஸ் கால்டு ஸ்மார்ட்னெஸ்.” என்றவன்,

நெற்றியில் விழுந்த அவளின் சுருண்ட முடியை ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டு, “உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் நீயே தேடு உத்ரா” என்று மர்மமாய் புன்னகைத்து அழுத்தப் பார்வையுடன்,  வெளியில் சென்றான்.

அர்ஜுனும் மீராவும் பார்த்து கொள்ளும் போது துருவ் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை.

மேலும், இந்த மீட்டிங் இப்பொழுது அவசியமே இல்லை. ஆனால் அவன் வற்புறுத்தி அர்ஜுனையும் வரவைத்திருக்கானோ என்ற சந்தேகம் உத்ராவிற்கு இருந்தது. அதனாலேயே அவனிடம் அவ்வாறு கேட்டாள்..

உத்ரா சில நொடிகள் அப்படியே நின்று, பிறகே தன்னிலைக்கு வந்தவள், ‘என்ன ஆச்சு எனக்கு? அவன் விரல் என்மேல படர வரை நான் எப்படி அவனை அனுமதிச்சேன்? ஸ்கௌண்ட்ரல்! அவன் பார்வையும் அவனும். ஏதோ முழுங்குற மாதிரி பார்க்குறான்.’ என்று அவனை வறுத்து விட்டு,

“கேள்வி கேட்டா பதில்  சொல்லாமல், பெரிய விஜயகாந்த்ன்னு நினைப்பு நேரடியா பதில் சொல்லமாட்டாராமாம்.” என்று வெளியவே திட்டிக்கொண்டு திரும்ப, அருகில் இவ்வளவு நேரம் அவள் புலம்பலைக் கேட்டு நின்றிருந்த துருவ் மேல் இடித்தாள்.

‘வெளிய போனவன் எப்போ உள்ள வந்தான்’ என்று அவனை விழி விரித்து பார்க்க,

அவன் “மீராவும், சஞ்சுவும் உன் வீட்ல இருக்கட்டும்” என்று அவளுக்கு உத்தரவாய் சொல்லிவிட்டு இப்பொழுது உண்மையிலேயே வெளியில் சென்றான்.

உத்ரா தான், இவன் என்ன எனக்கே ஆர்டர் போடுறான்…  என்று அவனை திட்ட போனவள்,

“ப்ச் வந்தாலும்  வந்துடுவான்” என கடுப்படித்து வெளியில் வந்தாள்.

அங்கு அர்ஜுனும் மீராவும், நின்றிருக்க, துருவ் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவர்களை பார்த்திருக்க, மற்ற மூவரும், கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தனர்.

மீரா அழுதுகொண்டே ஓட, அவள் பின்னே வந்த அர்ஜுன் “நில்லு மீரா” என்று அவள் கையை பிடித்தான்.

அவள் கையை உதறி விட்டு, “என்னை ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க அர்ஜுன். நான் தான் உங்களை லவ் பண்ணலைன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்ல. அப்பறம் ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க” என்று சத்தமாய் கேட்க, அதில் பயந்த சஞ்சு, அழுதுகொண்டு அவள் காலை கட்டிக்கொண்டான்.

அவனைப் பதறிக் கொண்டு தூக்கியவள், தட்டிக் கொடுத்து “ஒன்னும் இல்ல சஞ்சுமா ஒன்னும் இல்ல” என்று தேற்ற, சஞ்சு அவள் கழுத்தை கட்டி கொண்டான்.

அர்ஜுன் அவளையே மௌனமாகப் பார்க்க, அவளோ “என் லைஃப்ல நானும் என் பையனும் மட்டும் தான். வேற யாருக்கும் இடம் கிடையாது.” என்றாள் அழுத்தமாக.

விதுன், “ஏன் இங்கதான் இவ்ளோ இடம் இருக்கே!?” என்று அதீத சந்தேகமாய் கேட்க,

அஜய் “டேய் எமோஷனல் டயலாக்ல லாஜிக்லாம் பார்க்க கூடாது மூடிக்கிட்டு வேடிக்கை பாரு” என்று அவர்களை கவனித்தான்.

அர்ஜுன் கோபத்துடன், “என்னடி உன் பையன், உன் லைஃப் ஹான்.?” என்றவன் சினத்தில், அருகில் இருந்த நாற்காலியை எட்டி உதைத்து,

“நம்ம லைஃப் எப்படி உன் லைஃப் ஆச்சு. ஏண்டி என்னை கொல்ற… ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் கண்ல காட்டிட்டு, என்னை நரகத்திலே தள்ளிட்டு காரணம் கூட சொல்லாம என்னை விட்டு போய்ட்ட. உனக்கு என்ன தாண்டி பிரச்சனை?”என்று கத்தினான்.

உத்ராவோ, “பங்கு நம்ம வீடு உனக்கு நரகமா… மகனே இதை மட்டும் அத்தை கேட்கணும். அப்பறம் உனக்கு சங்கு தான் பங்கு.” என அவள் பங்கிற்கு அவனை சோதிக்க,

அஜய் “அடப்பாவி அப்போ இது ஒன் சைட் லவ் ஆ.. நீ லவர் லவர்னு சொல்லிக்கிட்டு திரியவும் நான் என்னென்னமோ எதிர்பார்த்தேன்” என்று சலித்து கொண்டான்.

அதன் பிறகே, உத்ரா, மூவரும், ஹாய்யாக கன்னத்தில் கை வைத்து, ஏதோ டிவி நிகழ்ச்சி நடப்பது போல் பார்த்து கொண்டிருப்பதை கண்டவள், “என்னங்கடா இப்படி உக்காந்துருக்கீங்க” என்று கேட்க,

சுஜி, “அது ஒன்னும் இல்ல பங்கு, நம்ம கேங்ல எல்லாரும் முரட்டு சிங்கிள். அர்ஜுன் மட்டும் தான் நானும் கமிட்டடு நானும் கமிட்டடுன்னு  சொல்லிக்கிட்டு திரிஞ்சான். சரி கழுதையை எப்படி லவ் பண்றான்னு பார்த்தாலாவது, நம்மளும், அதை யூஸ் பண்ணி கம்மிட் ஆகலாமேன்னு பார்த்துகிட்டு இருக்கோம்” என்க,

அர்ஜுன் கடுப்புடன், “பிசாசுங்களா கொஞ்சம் நேரம் அமைதியா தான் இருங்களேன்…” என்று பொரிந்து விட்டு, மீராவிடம் “இப்போ என்ன தாண்டி சொல்ற?” என்றான் சலிப்பாக.

“உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றேன்.” என்று அவன் முகம் பாராமல் பேச,

“சரி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டாம். ஆனால் சஞ்சய் இனிமே என் பையன். நீ என்னை விடு ஓடுன மாதிரி என் பையனை என்கிட்டே இருந்து பிரிக்கணும்னு நினைக்காத. நான் நினைக்கவும் விடமாட்டேன்.” என்றவன், “உத்ரா” என்று அழைக்க, அவள் விதுனைப் பார்த்தாள்.

அவன் பதறி “இப்போ எதுக்கு நீ என்னைய பாக்குற? உன் ஃபோகஸ் எல்லாம் அவன் மேல தான் இருக்கணும். அவன் எந்த முடிவு எடுத்தாலும், அதுக்கு நான் பொறுப்பு இல்ல.” என்று தன்னை வீட்டில் கோர்த்து விடுவார்களோ என்ற பயத்தில் உளறிக் கொண்டிருந்தான்.

அர்ஜுன், “உத்ரா எனக்கும் இவளுக்கும் உடனே கல்யாணம் நடக்கணும். இவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும்.” என்று சொல்ல, உத்ரா சிந்தனையுடன் நின்றாள்.

மீரா அதிர்ந்து துருவைப் பார்த்தாள். ஏனோ தனக்கு ஆதரவாய் யாருமே இல்லையோ என்று மனம் வலித்தது.

எனக்காக ஏதாவது பேசேன் என்று துருவைப் பார்க்க, அவன் அர்ஜுனின் அருகில் வந்து, “இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்க, அனைவரும் அதிர்ந்தனர்.

அர்ஜுன் அவனை யார் என்று பார்த்தான். உத்ரா அவனைப் பற்றியும், மீரா அவனிடம் தான் வேலை செய்கிறாள் என்றதும்,

அர்ஜுன் கோபத்துடன், “உங்க சம்மதம் எனக்கு தேவை இல்லை. நீங்க அவளோட பாஸ் தான். அவன் வாழ்க்கையில முடிவெடுக்குற உரிமை உங்களுக்கு இல்ல” என்றிட,

“அதை மீரா சொல்லட்டும்” என்றான் தெனாவெட்டாக.

அர்ஜுன் மீராவை பார்க்க, மீராவிற்கு இப்பொழுது யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்றே தெரியவில்லை.

அவன் முன்பு அர்ஜுனை விட்டுக் கொடுக்கவும் அவளுக்கு மனது இல்லை. அதே நேரத்தில், துருவ் மேல் அவளுக்கு ஏதோ ஒரு பாசம் இருக்கவே செய்தது.

இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க, துருவே அவளை சோதிக்க விடாமல் மேலும் பேசினான்.

“அவள் எனக்கு தங்கச்சி மாதிரி. அவள் விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்க கூடாது. நீ அவளை சம்மதிக்க வை அர்ஜுன். அவளுக்கு விருப்பம் இருந்தா உங்க கல்யாணம் நடக்கட்டும்”  என்று விட்டு,

மீராவிடம், “இந்த ப்ராஜெக்ட் முடியிற வரை நீயும் சஞ்சுவும், அர்ஜுன் வீட்ல தான் இருக்க போறீங்க” என உத்தரவிட, இவன் என்ன தான் சொல்ல வரான்… என்று அனைவரும் குழம்பினர்..

அர்ஜுன் ‘இவன் நமக்கு நல்லது பண்றானா கெட்டது பண்றானான்னே தெரிய மாட்டேங்குது.’ என்று குழம்ப,

  துருவ், தன்னை தங்கை என்றதில் மகிழ்ந்தவள், மேலும் அவன் சொன்னதை கேட்டு, “அர்ஜுன் வீட்டிலா” என்று பேயறைந்தது போல் நின்றாள்.

பின் மீராவே, “சார் நான் யார் வீட்லயும் தங்க மாட்டேன்” என்க,

“இதை நான் உன் அண்ணனா சொல்லல. உன் பாஸ் ஆ சொல்றேன். நான் உன்னை எங்க தங்க சொல்றேனோ அங்க தான் நீ தங்கணும். இட்ஸ் மை ஆர்டர்.” என்று அழுத்தமாய் சொல்ல, உத்ராவிற்கு அவனின் திட்டம் என்னவென்று தெரியவில்லை.

ஆனால், இப்போதைக்கு அவள் தன் வீட்டில் இருப்பது தான் சரி என்று தோன்றியது.

அப்பொழுது தான்  வீட்டினரும்  அவளுடனும், சஞ்சுவுடனும் பழகி, அவர்களுக்கு பிடிக்க வைக்க முடியும் என்று நினைத்து, அர்ஜுனை பார்த்தாள்.

அவனுக்கு அவளை மனைவியாய் இல்லாமல், வேறு யாரோவாக வீட்டிற்கு அழைத்து செல்ல, விருப்பமே இல்லை. மேலும், அவள் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் என்றும் அவனுக்கு புரியவில்லை. ஒன்றும் யோசிக்க தோன்றாமல், அமைதியாய் அங்கிருந்து சென்று விட்டான்.

விதுன் அஜயிடம் “இப்போ இதுக்கு என்னடா அர்த்தம்” என்று கேட்க,

அஜய், “என்னம்மோ பண்ணி தொலைங்க அப்டின்னு அர்த்தம் பங்கு…” என்றான்.

அவன் வியந்து “எப்படி பங்கு? பாடி லேங்குவேஜ்க்குலாம் அர்த்தம் சொல்லி பின்ற” என்று புகழ, உத்ரா, “விதுன்” என்று அழைத்தாள்.

அவன் வராத போனை காதில் வைத்துக் கொண்டு, “என்னது அமெரிக்கால ட்ரம்ப் என்னை உடனே வரச்சொல்றாரா. எனக்கே ப்ரெசிடெண்ட் போஸ்டும் குடுக்குறாரா. நான் கிளம்பிட்டேன் உடனே வரேன்” என்று அவள் கூப்பிட கூப்பிட, வெளியில் சென்று விட்டான்.

துருவ் அவனை விசித்திரமாக பார்த்து விட்டு, மீராவிடம், “நீ இப்போ உத்ரா கூட போ… நாளைக்கு எப்போவும் போல இங்க வந்துடு.” என்றவன்,

உத்ராவிடம் “நாளைல இருந்து நம்ம ஒர்க் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டும் பேரும் பேசணும். சோ நாளைக்கு ஷார்ப் ஆ 10 க்கு ஆபீஸ் வந்துடு” என்று அதிகாரமாக கூறி விட்டு நகர்ந்தான்.

உத்ரா தான், “இந்த கம்பெனிக்கு நம்ம பாஸ் ஆ? இவன் பாஸ் ஆ இத்தனை ஆர்டர் போடறான்.” என்று முழித்து விட்டு, மீராவை பார்க்க, அவள் என்னை இப்படியே விட்டு விடுங்களேன் நான் எங்கயாவது ஓடிடுறேன் என்ற ரீதியில் வெளிறி நின்றாள்.

மீராவை தன் தோழி என்று அறிமுகப்படுத்தி, மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து ப்ரொஜெக்ட்டிற்காக வந்திருக்கிறாள் என்று தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தாள். கருணாகரன் தான் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, அவளை திணறடித்தார்.

எல்லாரையும் சரி செய்து விட்டு, இதற்கிடையில் மீராவையும் சரி செய்து இரவு வரைக்கும் ஒரு வழி ஆகி விட்டாள். அர்ஜுன் தான் மீராவிடம் பேசவும் இல்லை அவளை பார்க்கவும் இல்லை. சஞ்சயிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான்.

மறுநாள், உத்ரா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, அவள் கழுத்தில் இருந்த செயின் எதிலோ மாட்டி அறுந்து விழுந்தது.

அந்த செயினை கையில் எடுத்தவளுக்கு மனமெங்கும் ஏதோ மாதிரி இருக்க, வெகு நேரம் அதனையே வெறித்திருந்தாள்.

பின், அதனை டேபிளில் வைத்து விட்டு, வெளியில்  வந்தவளுக்கு, கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட, அமைதியின்றி தவித்தாள்.

மீண்டும், அறைக்குச் சென்று , அந்த செயினை எடுத்தவள், ஊக்கை வைத்து, அந்த செயினை மீண்டும் கழுத்தில் போட்டு கொண்டாள். அதன் பிறகே அவளுக்கு இருந்த படபடப்பு குறைந்து அமைதி பிறந்தது.

அலுவலகம் சென்றவள், அங்கு துருவ் அவள் அறையில் ஏற்கனவே அமர்ந்திருப்பதை கண்டு, “குட் மார்னிங்” என்று அவன் முன் சென்று அமர்ந்தாள்.

துருவ் தலையை மட்டும் அசைத்து விட்டு “நம்ம ப்ராஜெக்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி, சில விஷயத்தை பத்தி பேசணும்” என்று நிறுத்த, அவள் என்னவென்று பார்த்தாள்.

“என்னோட ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும், நீ என் ப்ராஜெக்ட்ல மட்டும் தான் கான்சென்ட்ரேட் பண்ணனும்.

விச் மீன்ஸ் என் ப்ராஜெக்ட் முடியிற வரை,  என் ப்ராஜெக்ட்க்கு மட்டும் தான் ஒர்க் பண்ணனும்.” என்று சொல்ல, உத்ரா புருவத்தை சுருக்கி,

“ஹொவ் கேன் ஐ டூ தட் மிஸ்டர் துருவேந்திரன். உங்க ஒர்க் எந்த டிலேயும் இல்லாமல் பெர்ஃபெக்ட் ஆ நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு. பட் அதுக்காக மத்த கிளைண்ட்ஸ என்னால அவாய்ட் பண்ண முடியாது.. அண்ட் எனக்கு இந்த ஒரு பிசினெஸ் மட்டும் இல்லை அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறன்” என்று அவனை ஆழமாய் பார்த்து கொண்டு கேட்டாள்.

அவன் “ஐ நோ… நீ மத்த பிசினெசுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணி பார்க்குறதுல எனக்கு எந்த அப்ஜக்ஷ்னும் இல்ல. இந்த ஒரு பிசினெஸ்ல தான் சொல்றேன்”

அவளோ இதென்ன முட்டாள் தனம் எனக் கடுகடுத்தாள்.

ஏனெனில் இந்த கட்டட தொழிலில் இந்த வருடம் மட்டும் அவள் எடுத்திருக்கும் காண்ட்ராக்ட் அனைத்தும் ரொம்பவே முக்கியமானது.

இதில் கிருபா என்ற முக்கியமான புள்ளி ஒருவனின் கான்டராக்ட்டும் இருக்கிறது.

மேலும், துருவின் ப்ரொஜெக்ட் மூலமாக, அவளுக்கு இரு மடங்கு லாபம் வந்தாலும், அவள் எடுத்திருக்கும் ப்ரொஜெக்ட்டை ட்ராப் செய்தாலோ இல்லை ஒத்திப்போட்டாலோ அவளுக்கு இருக்கிற முக்கிய புள்ளிகளான அவளின் க்ளையண்ட்ஸ் அவள் கையை விட்டு போய் விடுவார்கள்.

பண விஷயத்தில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், இந்த வருடம் நிச்சயமாய் அவள் கம்பெனி முதல் இடத்தில் இருக்காது. என்று பலவாறு யோசித்தவள்,

“சாரி மிஸ்டர் துருவேந்திரன். ஏற்கனவே நான் ஸ்டார்ட் பண்ணுன ப்ரொஜெக்ட்டை என்னால ஸ்டாப் பண்ண முடியாது. உங்க ப்ராஜெக்ட்காக நான் தனியா ஒரு டீம் ரெடி பண்ணி தரேன்.

அண்ட் முழுக்க முழுக்க என்னால உங்க ப்ராஜெக்ட்ல மட்டும் கான்சென்ட்ரட் பண்ணமுடியாது. நீங்க உங்களுக்கு ஏதாவது சேஞ்ச் பண்ணணும்னாலோ, இல்லை வேற ஏதாவது மாடிஃபிகேஷன் பண்ணணும்னாலும் என் ஜி.எம் கிட்ட கேட்டுக்கோங்க” என்று சொல்ல, அவன் அழுத்தமாய் மறுத்தான்.

“இந்த ப்ராஜெக்ட நான் உன்னை நம்பி தான் கொடுக்குறேன். உன் ஒர்க்கர்ஸ நம்பியோ. இல்ல ஜி.எம் அ நம்பியோ இல்லை. எனக்கு என் பில்டிங் குவாலிட்டி ரொம்ப முக்கியம்.

அண்ட் என் பில்டிங்க்கு நீ பண்ற டிசைன் வேற யாருக்கும் நீ யூஸ் பண்ணிட கூடாது. இந்த ப்ராஜெக்ட் வர்க் முடியிற வரை, நீ எனக்கு தான்” என லேசர் பார்வையுடன் அவன் கூற, அவள் அதிர்ந்துப் பார்த்தாள்.

துருவ், இதழை வளைத்து, “ஐ மீன் நீ என் கூட தான், எனக்கு மட்டும் தான் ஒர்க் பண்ணனும்…” என்று அவளை குறுகுறுவெனப் பார்த்து கொண்டு கூற,

அவள் அவனை தீயாய் முறைத்தாள்.

“லுக் மிஸ்டர். என்னால அப்படிலாம் பண்ணமுடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவள் இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் பில்டிங் ஒன்று இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது என்று தகவல் வர, அவள் அதிர்ந்தாள்.

நல்லவேளையாக இன்று அந்த இடத்தில் வேலை எதுவும் நடைபெறாததால், வேலையாட்கள் யாரும் அங்கு இல்லை… என்று நினைத்தவள் துருவிடம் கூறிவிட்டு அங்கு செல்ல எழும்ப,

அவன் “நீ எனக்கு சாதகமா பதில் சொல்லிட்டு போகலைன்னா. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு பில்டிங்கும் இடிஞ்சு விழும். இங்கயாவது உயிர் சேதம் இல்லை பட் அங்க நிறைய பேரு வேலை பார்க்குறாங்க. இந்த நேரத்தில விழுந்தா உன் பிசினெஸ், உன் ஃபேம் எல்லாமே ஸ்பாயில் ஆகிடும்” என்றான் சுழல் நாற்காலியில் சுழன்றபடி.

உத்ரா அவனை கடுமையாக முறைத்து, “ஹொவ் டேர் யு? நீ தான் இதை பண்ணுனதா” என்று உறும,

“எனக்கு பதில் வேணும்” என்று அவன் நின்ற இடத்திலேயே இருக்க, உத்ராவிற்கு இவன் என்ன பைத்தியமா என்று தான் இருந்தது.

“லுக் துருவ், பிசினெஸ் எதிக்ஸ்ன்னு ஒன்னு இருக்கு. அதை நீங்க க்ராஸ் பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை” என எரிச்சலாக,

லேசாய் சிரித்தவன், “எனக்குன்னு தனியா ஒரு எதிக்ஸ் இருக்கு ஹனி… அதை யாருக்காகவும் என்னால மாத்திக்க முடியாது. நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லி, இந்த அக்ரீமென்ட்ல சைன் பண்ணு. இன்னும் 60 செகண்ட் தான் இருக்கு. பில்டிங் இடியறத்துக்கு…” என அவளை கார்னர் செய்ய,

“என்ன மிரட்டுறியா” என்று அவனை திமிராக எரித்தாள்.

அவன் போனில் இருந்து, அவள் சைட்டில் இருக்கும் கட்டடத்தையும், அதற்கு பின்னே அதனை இடிக்க  தயாராய் நிற்கும் வாகனங்களையும் பார்த்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவள் உறைந்து அவள் இருக்கையிலேயே அமர, துருவ் எழுந்து வந்து, அவள் சேரில் பின்னாலிருந்து அவளை அணைத்தவாறு ஒரு பேனாவை எடுத்து, அவள் கையில் கொடுத்தான்.

பின், அவள் கையை பிடித்து, அந்த அக்ரீமெண்ட்டில், அவனே அவள் கையெழுத்தைப் போட, உத்ரா அவன் தொடுகையிலும், மேலும் அவள் கையெழுத்தை அவன் போடுவதிலும் சிலையாகி இருந்தாள். 

கையெழுத்தை போட்டு முடித்துக் கொண்டு, அந்த பேப்பரை கையில் எடுத்து கொண்டு,

“தட்ஸ் குட்…” என்று அவள் கன்னத்தைத் தட்ட, அவள் அவன் கையைத் தட்டி விட்டு,

“இட்ஸ் நாட் ஃபேர் துருவ். இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்” என்று அவனை விரல் நீட்டி எச்சரிக்க,

அந்த விரலைப் பிடித்தவன்,” எப்படி பதில் சொல்லணும்னு சொல்லு ஹனி… சொல்றேன்” என்று அவளை ரசனையுடன் பார்த்தான்.

  “ஜஸ்ட் கால் மை நேம்… ஹனி சனின்னு சொல்றதெல்லாம் வேணாம்” என்று கோபத்துடன் பல்லைக்கடித்து கொண்டு பேசினாள் உத்ரா.

தோளைக் குலுக்கி, “ஓகே” என்றவன் அவள் அருகில் வந்து,

“இதெல்லாம் நீ என் ப்ராஜெக்ட்ல காட்டக் கூடாது. எப்படியும் நான் தான உன் பில்டிங்க கட்டணும் அதுல பார்த்துக்குறேன்னு நினைச்ச…” என்று கண்ணில் தீவிரத்துடன் அவளை எச்சரிப்பதை கண்டவளுக்கு குலை நடுங்கியது. அவனின் கண்ணில் தெரிந்த தீயில்.

உண்மையில் அவன் சொன்ன மாதிரி தான் அவள் நினைத்திருந்தாள். அவளின் கண்ணில் சிறிது பயத்தை பார்த்தவன், இலகுவாகி

” நீ அப்படி நினைச்ச… இதுக்கு தான் நான் தக்க தண்டனை தருவேன்.” என்று அவள் இதழ்களை வருட போக, அவள் அவன் கையை தட்டி விட்டு,

“உன் இஷ்டத்துக்கு என்னை தொடுறதுக்கு நான் ஒன்னும் உன் கேர்ள் பிரெண்ட் இல்ல. இதெல்லாம் அவளுங்ககிட்ட போய் வச்சுக்கோ.” என்று கண்ணில் தீப்பொறிப் பறக்க கூற,

அவன் இதழ் விரித்து, “பட் உன் அளவுக்கு யாரும் இல்லை.” என அவளை கீழிருந்து மேலாக விழியில் பருகி விட்டு, வெளியில் சென்றதில்.

அவள் தான் பேயறைந்தது போல் நின்றாள்.

உறைதல் தொடரும்…
மேகா
 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
62
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்