Loading

4.🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு🌺🌺

அப்படி ஒரு எண்ணம் உங்க மனசுல இருந்துச்சுன்னா தயவு செய்து  என்னை  மறந்து விடுங்க என்று  கூறினான்.

என் மனசுல வேற ஒருத்தி இருக்கா இன்னைக்கு நேத்து இல்ல எனக்காகவே பிறந்தவள் என் ஹாசினி அவளிடத்தில் வேற ஒரு பொண்ணு என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கூறினான் .

குரல் ஒலித்த தருணம் ஓடி வந்தவள் பின்னால்  இருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அந்த ஸ்பரிசம் அவளது ஹாசினி என்று உணர்ந்தவன் டக்கென திரும்பிய ஹாசினிமா என ஆமாம் என்று தலை ஆட்டினாள்.

அவள் அவனை  இறுக்க கட்டிக் கொண்டாள். அவளது முகத்தினை கையில் ஏந்தியவன் நெற்றி முகமெங்கும் முத்தமிட அவளோ  அவன் காலின் மீது ஏறி நின்று அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

இருவரும் அழுதுகொண்டே நின்று கொண்டிருக்க இத்தனை வருட பிரிவு அவளின் காதல்,  ஏக்கம் என  அவனது இதழினை சுவைத்துக்கொண்டிருந்தாள் ஹாசினிமா என்று அழைத்தான்.

அவளின் இடையில் கை வைத்து அழுத்த அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள். வெட்கத்தில் அவன் மார்பில் முகம் சாய்த்து இருவரும் கண்களில் தண்ணீர் இருவரும் அழுதுக்கொண்டு இருக்க,

ஹாசினிமா என்னை எப்படி தேடி வந்தீங்க என்று கேட்டான்.  நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினாள்.

ஜீவா நீ என்ன தேடவே இல்லையா என்று கேட்க பாதர் கிட்ட போன் பண்ணி கேட்பேன்.

இந்தபிறந்தநாள்  கூட  நீ  வந்து போனாய்  என்று கூறினார்.

ஆனால் என்கிட்ட உன்ன பத்தி எதுவுமே சொல்லல ஜீவா என்று கூறினாள்.  நான் தான் சொல்ல வேணாம்னு சொல்லி இருந்தேன்  ஹாசினிமா என்றான்.

ஏன் ஜீவா என்னை பார்க்க வரவே இல்லை என்று கேட்க முன்பு இருந்தது போல இருந்தா  வந்து இருப்பேன்.

நீங்க பெரிய மல்டி மில்லியனர் ஆயிட்டீங்க நான் எப்படி உன்னை தேடி வர நீ என்னை ஞாபகம் வச்சிருக்கியோ  இல்லையோ என்று கூற. ஏன் ஜீவா இப்படி எல்லாம் சொல்றே என்று கேட்டாள்.

நெக்ஸ்ட் வீக் தான் வந்து பொண்ணு  கேட்கலாம் பார்த்தேன் என்று கூற. இப்ப  மட்டும் என்னவாம் என்று கேட்டாள்.

பெட்டியில் இருந்து ஒரு கவரை எடுத்துக் கொடுத்தான்.

அதில் அவனு டைய அப்பாய்ன் மெண்ட் oder  ஜீவானந்தம் I.P.S.என எழுதி இருக்க விரித்த கண்களோடு அந்தப் பெயரினை தன் கைகளால் தடவிப் பார்த்தாள்.

கண்களில் கண்ணீர் ஜீவாவை கட்டிக்கொண்டாள் . ஜீவாவை என்ன  சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க ஜீவா என்னால உன்னை பிரிஞ்சுக்க முடியாது என்று கூற அவளின் கண்ணீரை துடைத்தவன்  உனக்கு மட்டும்தான் கஷ்டமா ஹாசினிமா எனக்கு இல்லையா என்றான்.

மாடிக்கு போலாம் ஜீவா  பவுர்ணமி வெளிச்சம் ஜீவா என்னை தூக்கிட்டு போயேன்  என்றாள்.

அவளை தூக்கி கொண்டு மாடிக்குச் சென்றான்.  இரவு 11 மணி இருக்கும் மாடியில் முழுநிலா தெரிய நிலாவிடம்  என் ஜீவா  கண்டுபிடிச்சிட்டேன் என்று நிலாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

வீட்டில் தனியாக இருக்கும்போது இந்த நிலா கிட்டமட்டும் தான் சொல்லுவேன் ஜீவா என்று அழ ஆரம்பித்தாள்.

நிலவின் குளிர்ச்சி தாழம்பூவின் மணம்
ஜீவாவிற்கு என்னவோ செய்ய ஹாசினிமா வா கீழ  போலாம் என.

ஏன் ஜீவா நீ போ  நான்  வரலை என்று கூறினாள். மணி என்ன ஆகுது நைட்டு 11 வது அவளை இழுத்துக் கொண்டு வந்தான்.

அவனுடைய தனிமை அவளிடம் எல்லை  மீறி விடுவோமோ என்று பயந்து  தான் அவன் அவளை இழுத்துக் கொண்டு வந்தான்.

நீ போ என்று கூறி தனது அறைக்குள் நுழைந்தவன். அவனுக்கு முன் அறையில் நுழைந்து கதவை தாழிட்டாள்  நீ என்ன பண்ற   ஏன் என்னை கூட்டிட்டு வந்த ஜீவா ஒன்னும் இல்லடா நீ போ என்று கூற அவனை கட்டிகொண்டாள்.

அவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க  நாணத்தில் முகம் சிவக்க அவனின் தலைமுடியை கோதியவாறு அவனின் நெற்றியில் முத்தமிட்டு ஜீவா என்னை எடுத்துக்கோ ஜீவா என்று  தன்னை  மீறி உளறிக் கொண்டிருந்தாள்.

ஹாசினிமா என்ன பேசுற அவளை விலக்கி அவன் என்னடா என்று கேட்கத் தொடங்கினான்.

ஜீவா என விட்டுட மாட்டியே ஜீவா ப்ளீஸ் என்று ஆரம்பித்தாள். அவளின் நெற்றி முட்டி நாளைக்கு ஊருக்கு போகலாம்  என்று கூறினான்.

அவளுடைய அறைக்கு அவளை  அனுப்பிவிட்டு அவன் காலையில் எழுந்து தனது தாயாரிடம் அனைத்து விஷயங்களையும் கூறினான்.

ஹாசினிமா காபி என்று அழைக்க  அத்தமா என்று கூறி கட்டிக்கொண்டாள்.

ஒரு வாரம் கூட இருந்திருக்கேன் என்னால கண்டுபிடிக்க முடியல ஜீவா பையன் வந்து உன்னை கண்டு புடிச்சுட்டான் என்று கேட்க வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

கோயம்புத்தூர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஜீவன முன்னாடி நான்  வீட்டுக்கு போறேன் நீங்க பிறகு  வாங்க  என்று கூறியவள்.

தனது வீட்டிற்குள் நுழைந்து தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

பார்த்தவுடன் ராஜீவ் கண்டுகொண்டான்  ஜீவா ஓடி வந்து கட்டி  தழுவ இருவரது கண்களும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

எங்கள விட்டுட்டு எங்கடா போன? உன்னை எங்கே எல்லாம்  தேடினோம் தெரியுமா?  என்று கூற,

ஹாசினி  அம்மா அப்பா ஜீவாவின் அம்மா மூவரும் கண்ணிர் மல்க  பேசிக்கொண்டிருந்தனர்.

ஹாசினிமாவை பொண்ணு கேட்டு வந்திருக்கோம் என்று கூற, எத்தனை மாப்பிள்ளை பார்த்தோம்  கல்யாணம்  வேண்டாம்  என்று சொல்லிக்கிட்டே இருந்தா என்ன சொல்றான்னு தெரியலையே இப்ப என்று பெற்றோர் இருவரும்  நின்றுகொண்டிருந்தனர்.

தனது அறையிலிருந்து வெளியே வந்தாள்

முகம் வெட்கத்தில் சிவந்து இருக்க ஹாசினி   ஜீவா தம்பி நெனச்சுட்டா இத்தனை வருஷம் கல்யாணம் வேணாம்னு சொன்னே என்று கேட்ட தலையாட்டினாள் .

சொல்லியிருக்கலாம் இல்ல எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு இருப்போம் என்று கூறியவர்.

எங்க மருமக எங்களை  தேடி அங்கு வந்திருந்தாளே,    எங்க கூடவே இருந்தா ஒரு வாரம்.  ஆர்கானிக் சேரி  விஷயமா போயிருந்தா அங்கதான் வந்திருந்தாளா என்று கேட்டான் ராஜீவ். 

அம்மா அடுத்த முகூர்த்தத்திலேயே மேரேஜ் பிக்ஸ் பண்ணி விடுங்க என்றான் ராஜீவ்.

மாமா ஒரு பத்து நாள்ல டக்குனு மேரேஜ் வைக்க பாருங்க என்று கூறினான் ஜீவா.

என்ன மாப்ள ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல என்று கேட்க ஆமா மாமா நான் இங்கேயே வேலையில்  ஜாயின் பண்ணுறேன் என்று கூற I.P.S முடிச்சு இருக்கீங்களா சூப்பர் மாப்பிள்ள என்று கைகொடுத்தார்.

அப்புறம் நடந்த அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க நான் டூட்டிக்கு கிளம்புறேன் என்று கிளம்பினான்.

ஹாசினியின் ஆபீசுக்கு போக வேண்டும் என்று கூறி தனது அறையிலிருந்து கிளம்பி வந்தவளை  அனைவரும் வாய்பிளக்க பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின்னலிட்டு  கரை வைத்த பட்டு சாரி கட்டி சிறிதளவு மல்லிகை பூ வைத்து சிறுது  ஒப்பனையுடன் கீழே இறங்கி வந்து அனைவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க.

ஜீவாவின் அம்மா ஒன்றும் புரியாமல் பார்க்க கெஞ்சிக் கேட்டால் கூட புடவை கட்ட மாட்டா பூ வைக்க மாட்டா kஎன என்று கூற என் மருமகளுக்கு கல்யாண கலை வந்துடுச்சு என்று கூறினாள் ஜீவாவின் அம்மா.

ஹாசினி அலுவலகம் நுழைய ஜூலியோ மேடம் செமயா இருக்கீங்க என்றாள்.

தேங்க்ஸ் ஜூலி என கூறிக் கொண்டே தனது அறைக்குச் சென்றவள் ஜீவாவிடம் இருந்து போன் வந்தது.

சொல்லுங்க ஜீவா என்றாள். ஜாயின் பண்ணிட்டேன் ஹாசினிமா lஎன்று கூறியவன்.ஹாசினிமா என்ன சொல்லுங்க மரியாதை எல்லாம் பலமா இருக்கு என்று கேட்டான் ஜீவா.

என்ன பண்றது  இனிமே அப்படி கூப்பிட முடியாது இல்லை என்றாள். ஹாசினிமா என்னை ஜீவனே கூப்பிடு என்றான்.ass

ரூமில் நுழைய முகம் முழுவதும் வெக்கத்துடன் பேசிக்கொண்டிருக்கும் ஹாசினியை பார்த்தவள் ஆச்சரியத்துடன் வெளியேறினாள்.

போனில் ஈவினிங் நான் வரேன் உங்க ஆபீஸ்க்கு என்று கூறி போனை வைத்தான்  வேலை பரபரப்பில் மாலை ஆனதும் உள்ளே வர அனுமதி வாங்கி வெளியே அமர்ந்திருந்தான்.

ஜூலி வந்து  வெளியே போலீஸ் ஆபீஸ் யூனிபார்ம் போட்ட ஒருத்தர்  இருக்காரு புது I.P.Sஆபிஸர் என்று கூற  மறந்துட்டேன் என அவசர அவசரமாக வெளியே வந்தாள்.

  ஜூலி என்னடா  யார் வந்தாலும்  என்ன என்று  கேட்டு அந்த இருக்கையிலேயே  அமர்ந்திருப்பவள்  ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

ஜீவா ஹாஷினி உன்னுடைய சேரில் உட்கார்  என்று கூற இல்ல பரவால்ல இருக்கட்டும் என்று அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவனுக்கு காபி எடுத்து கொடுத்தாள்.

சாரி  உனக்கு ரொம்ப அழகா இருக்கு என்றான். இருவரும் ஒன்றாக வெளியே வர அவள் அவன்  தோள்உரசிய  படி நடக்க ஆரம்பித்தாள்.

அவனை வழியனுப்பி விட்டு உள்ளே வர என்ன ஜூலி அப்படி பார்க்கிறீங்க என்றாள்.

நான் மேரேஜ் பண்ணிக்க போறவர்.  பெஸ்ட் விஷஸ் மேடம் திடீர்னு பிக்ஸ் ஆகிடுச்சா  மேடம் என?  இல்லை ஜூலி லவ் மேரேஜ் என்று கூறினாள்.

என்ன என்ன மேடம் லவ் மேரேஜா என ஆச்சரியமாய் பார்க்க சின்ன வயதிலிருந்தே ஜூலி  என்றாள்.

காட்டுத்தீ போல் ஆபீஸ் முழுவதும் விசயம் பரவி கண்ணன் பட்டு சென்டருக்கு போன் போட்டு விஷயத்தை கூறினான் ஆபீஸில் வேலை செய்யும் ஒருவன்.

கண்ணன் பட்டு மஹால்  ஆபீஸ்

இங்கு அவனின் மகனைப் பார்த்து அந்த  பொண்ண லவ் பண்ண சொன்னேன்.  அதை செய்ய முடியலைய?

என்று கத்த  அவ நல்ல பிரண்டு  தான்  ஒருவாட்டி ப்ரொபோஸ் பண்ணும்போது கூட மேரேஜ் ஐடியா எல்லாம் இல்லைன்னு சொன்னா பா என்றான்.

புதுசா வந்த ஆபீஸராம் எவனோ?

அவனை  கொஞ்சம் மெரட்டி பார்க்கலாம் சத்தமில்லாம நம்ம   ரெண்டு கடையும் ஒன்று சேர்க்கலாமு கனவு கண்டு  பார்த்தா இது என்னடா புது பிரச்சனை என்று தனது அறைக்குள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார் கண்ணன் பட்டு மஹாலின் ஓனர்.

தனது பொலேரோ காரில் கிளம்பி சென்றவனை வழிமறித்து ஒரு ரவுடி வந்து

அந்த பொண்ணு விட்டு விலகி விடு என்று கூற அவனிடம் டேய் யார்ரா நீ?  உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க?

உன்னை யார் அனுப்பினாங்களோ  அவங்ககிட்ட போய் சொல்லு நான் படித்து ஐபிஎஸ் ஆனதே  அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு அதுக்காகத்தான் என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

யாரா இருக்கும் இது என்ன புது குழப்பம் ஆ இருக்கு என்ற தனது அறையினுள் வந்து அமர்ந்தவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

பிறகு ஹாசினிக்கு போன் செய்ய ஹாசினிமா பத்திரமா இருக்கியா
என்று கேட்டான்

ஏன் ஜீவா என்ன ஆச்சு என்று கேட்க ஏதாவது பிரச்சனையா  என்றாள்  ஒன்னுமில்ல ஹாசினி  தனியா போக வேணாம் நீ கிளம்பும்போது எனக்கு போன் பண்ணு என்று கூறியவன் சரி ஜீவா என்று கூறி போனை வைத்தாள்.

🌺🌺 வாசம் வீசும் 🌺🌺

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்