ஹாலில் கேட்ட குரலில் அனைத்து வேலையாட்களும் அம்சவல்லி அம்மாவின் முன் தலைகுனிந்தவாறு குவிந்திருக்க நடக்கும் கூத்தை ஒரு பார்வை பார்த்த யாகவியோ அதற்கு மேல் கண்டு கொள்ளாமல் குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்து விட மதி தான் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அங்கே பார்த்தவளுக்கு அம்சவல்லி அம்மாள் அமர்ந்திருக்கும் சோபாவின் எதிர்ப்புறம் போடப்பட்டிருந்த டேபிளில் இருந்த தனது ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை கண்டு அதிர்ந்து தான் போனாள்.
“யாகவி என்ன நடக்குது இங்க” என குரலில் பயத்தை காட்டாமல் கேட்க இந்த இடைப்பட்ட நேரத்தில் இருவரும் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு வந்திருக்க மதி கேட்ட கேள்விக்கு யாகவியோ உதட்டை சுழித்துக் கொண்டு “எப்பயும் நடக்கிறது தான். கண்டுக்காத” என்று கூறிவிட்டு அவள் வேலைகளை கவனிக்க அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு தான் ஒன்றும் புரியாமல் போனது.
ஆனால் யாகவி கூறியதற்கான விளக்கம் அதன் பிறகான அம்சவல்லியின் செயல்களில் புரிந்தது. வேலையாள் ஒவ்வொருவர் செய்யும் தவறையும் சுட்டிக்காட்டி கடிந்து கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்த மதிக்கு தான் தானாக கை கால்களில் நடுக்கம் பிறந்தது.
சிறு சிறு தவறு இருந்தாலும் கண்டித்து அதற்கு தரும் தண்டனை சிறிது அதிக படியோ என்று தோன்றினாலும் சம்பளம் தரும் முதலாளியே எதிர்க்க கேட்க முடியாது என்பதால் அமைதியாக இருக்க இறுதியில் அந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை காட்டி யாருடையது என்று கேட்டதும் மதிக்கு குட்டி ஹார்ட் அட்டாக்கே வந்திருந்தது.
சிறு தூசி படிந்ததற்கே திட்டு வாங்கிய வேலையாட்களின் நினைவு வர என்ன செய்வது என்று புரியாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள். தேவையே இல்லாமல் வேலையாட்கள் திட்டு வாங்குவதை பொறுக்க முடியாமல் யாகவிடம் கூறிவிட்டு ஹாலுக்கு வந்தவள்.அது தன்னுடையது என கூறியதும் அம்சவள்ளியின் அழுத்தமான பார்வை அவள் மீது கூர்மையுடன் படிந்தது.அதை உணர்ந்தது போல் தலையை குனிந்தவள் நிமிரவே இல்லை.
ஒரு பார்வை தான் பார்த்திருப்பார். இவ்வளவு நேரம் கைகட்டி அமைதியாக நின்று இருந்த வேலையாட்கள் அனைவரும் அவரவர் வேலையை கவனிக்க சென்றுவிட அரை நிமிடத்தில் அந்த ஹாலில் இருவர் மட்டுமே இருந்தனர்.
அம்சவல்லி டீபாயிலிருந்த பொருட்களை காட்டி இது உன்னுடையதா எனக் கேட்ட அடுத்த நிமிடமே ஆமாம் என்ற தலை ஆட்ட அதை கண்டு அம்சவள்ளியின் முகமானது கோபத்தில் சிவந்தது “கேட்ட கேள்விக்கு பதில் தான் வரணும் இந்த தலையாட்ற வேலை இங்க வேண்டாம் “எனக் கூறியதும் அது இதயத்தில் சுருக்கின்ற தைத்தாலும் ஆமாம் மேடம் என்று கூறியவள்.
இதழ்களை கடித்து உணர்ச்சிகளை அடக்கி கொண்டிருக்க அவளை அழுத்தமாக பார்த்தபடியே “உன்னோட வேலை யாகவியும் குழந்தைகளையும் பார்த்துக்கிறதுதான். அந்த வேலையை மட்டும் செய் தேவையில்லாமல் வேற ஏதாவது விஷயத்தில் மூக்கை நுழைச்ச பாத்துட்டு இருக்குற வேலை இருக்காது. ஓவரான இடம் எடுத்துக்கற வேலை இங்கே வேண்டாம்”என எச்சரித்து விட்டு கம்பெனிக்கு சென்று விட அவர் சென்ற பிறகும் அதே இடத்தில் கல்லாக சமைந்து நின்றவளுக்கு கண்ணீர் தானாக வழிந்தது.
சிறுவயதில் இருந்து யாரும் குறை சொல்லாமல் வளர்ந்தவளுக்கு அம்சவல்லியின் கூற்று நிற்க வைத்து கேட்ட தோரணை அனைத்தும் மனதை வருத்த என்ன முயன்றும் கண்ணீர் கன்னத்தில் வழிந்திருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஹெட் குக்கான பார்வதிக்கு மதியை நினைத்து மனம் வருந்தியது.
காலையில் கூட தன்னை அம்மா என்று அழைத்து எவ்வளவு இயல்பாக பேசினாள். அவள் இப்போது கண்கலங்கி நிற்பது மனதை வருத்த யாகவியின் அறைக்கு சென்று நடந்ததை கூறியவர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதாக கூறவும் மதியை யாகவியே சென்று அழைத்து வந்தாள்.
தனக்காக உடல்நிலை சரியில்லாத நிலையிலும் யாகவி வந்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் குறுகியவள். தனது அறைக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு குளியலறை சென்று பிரஷ் ஆகிவிட்டு வந்தாள்.இனிமேல் எது நடந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் இப்படி அழக்கூடாது என மனதில் உருபோட்டவள்.
அதன் பிறகு யாகவியுடனும் குழந்தைகளுடனும் நேரத்தை போக்கினாள். அந்த நாளும் அப்படியே கழிய அடுத்த நாளும் அறைக்குள் அடைந்து கிடக்கும் யாகவியையும் குழந்தைகளையும் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது இப்படியே இருக்கக்கூடாது என யாகவி எவ்வளவோ மறுத்தும் மூவரையும் அழைத்துக் கொண்டு கார்டனுக்கு சென்றாள்.
இளஞ்சூரியன் அப்பொழுதுதான் உதித்திருக்க குழந்தைகள் இருவரையும் வெயிலில் நன்றாக காட்டிக் கொண்டிருந்தாள். யாகவியும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி குழந்தைகளையும் மதியையும் தான் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக அறையில் அடைந்து கிடந்த யாகவிக்கு அதிகாலைப் பொழுது தோட்டத்தில் அமர்ந்திருப்பது இவ்வளவு நாள் இருந்த மன இறுக்கத்தை தளர்த்தி புன்னகையை வரவழைத்தது.
குழந்தைகள் இன்னும் சூரிய வெளிச்சத்திற்கு பழக்கப்படாததால் கண்களை இறுக்க மூடிக்கொண்டு முகம் முழுவதும் சுழித்துக் கொண்டே இருக்க அதனை புன்னகையுடன் யாகவுயும் மதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். சமைக்க வந்த பார்வதி தோட்டத்தில் இருந்த நால்வரையும் பார்த்தவருக்கு மனம் நீண்ட நாட்கள் கழித்து திருப்தியாக இருந்தது. புன்னகை உடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ தோன்ற ஒரு உந்துதலில் குனிந்து கொண்டிருந்தவள்.
நிமிர்ந்து பார்க்க இரண்டாம் தளத்தில் கர்ட்டன் திடீரென்று மூடப்படவும் இவ்வளவு நேரம் யாரோ தங்களை கவனித்துக் கொண்டிருந்தார்களா என யோசனையுடன் அங்கே பார்க்க அதன் பிறகு அந்த அறையில் இருந்து எந்த அசைவம் வரவில்லாமல் போக அதை யாரிடம் கேட்பது என்று குழம்பிக் கொண்டிருந்தவள். யாகவி ஏதோ பேசவும் அதில் கவனத்தை பதித்தாலும் மனதின் ஒரு மூலையில் அந்த அறை யாருடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
எப்பொழுதும் காலை பூஜைக்கு பூக்களை பறிக்க வரும் அம்சவல்லி தோட்டத்தில் அமர்ந்திருக்கும் யாகவியையும் குழந்தைகளையும் கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார். நடந்த சண்டையின் பிறகு யாகவி யாரிடமும் பேசாமல் தனிமைப்படுத்திக் கொள்ள அதில் தாயான அம்சவல்லி தான் மிகவும் உடைந்து போனார்.
தன்னால்தான் மகள் இவ்வாறு இருக்கிறாளோ என்ற எண்ணம் உள்ளுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் மகளிடமும் பேர குழந்தைகளுடமும் நேரம் செலவிட முடியாதபடி கம்பெனியின் பணிகள் அவரைக் கட்டி இழுக்க அவரின் முழு நாளும் கம்பெனியிலே தான் கழிந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்து கொண்டிருந்த மதி யாகவியை யோசனையாக பார்க்க அவளோ தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளையும் பூச்செடிகளையும் பார்த்து ரசித்து கொண்டிருப்பதை கண்டு “யாகா வாக்கிங் போக ஆரம்பி “என்று கூறியவளின் கூற்றில் யாகவி யோசனையுடன் மதியை காண அவளோ மற்றொரு குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்தபடி
“சிசேரியன் ஸ்டிச்சஸ் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும்.ஸ்டிச்சர்ஸ் போட்ட 24 ஹார்ஸ் தான் ரெஸ்ட் எடுக்கணும் அதன் பிறகு நடக்க ஆரம்பிச்சிடனும் இல்லனா ஸ்டிச்சஸ் எல்லாம் இறுகி போயிடும். ஃபர்ஸ்ட் உங்களுக்கு இன்ஃபெக்சன் ஆகி மறுபடியும் ஸ்டிச்சஸ் போட்டு இருக்காங்க. இனிமேலாவது நீங்க நடக்க ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும் “என கூறியவள் யாகவி முகத்தை பார்க்க அவளோ அடிபட்ட பார்வை மதியின் புறம் சிந்தி கொண்டிருந்தாள்.
அதுக்கு மேல அதனை கேட்க முடியாத அம்சவல்லி “போதும் நிறுத்து. நீ நர்ஸ்தான். அதுவும் குழந்தைகளை பாத்துக்க வந்திருக்க. ஏதோ டாக்டர் போல என் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க. இனி ஒரு வார்த்தை பேசினால்உன்னோட வேலையே இருக்காது” என கூறியதும் “போதும் நிறுத்துங்க என்று கோவத்துடன் கத்திய யாகவியை இருவரும் அதிர்ந்து பார்க்க “அவள் என்னோட நல்லதுக்காக தான் சொல்றால் நான் எப்படி இருக்கணும் என்று நான் தான் டிசைட் பண்ணனும் நீங்க இல்ல”
“என்னால் நடக்க முடியும் சிசேரியன் முடிஞ்ச உடனே என்னை நடக்க தான் சொன்னாங்க உங்களால தான் நான் பெட்லேயே ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்” என்று மேலே ஏதோ கூற வருவதற்கு முன் தாயின் உடைந்த பார்வையும் மதியின் சங்கடத்தையும் கண்டு கொண்டவள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஒரு காலை ஊனியபடி எழுந்து நடக்க ஆரம்பிக்க அம்சவல்லியோ கண்கள் கலங்கியபடி தன் மகளை பார்த்தவர்.
அடுத்த நிமிடமே மதியின் புறம் தீ பார்வையை வீசி விட்டு அங்கிருந்த பூக்களை பறிக்காமல் சென்றவர்.மனம் எல்லாம் தான் தன்னால்தான் தன் மகள் அறையிலேயே முடங்கி கிடந்தாளா என்று பல கேள்விகள் இருந்தாலும் இருக்கும் வேலைகளை கருத்தில் கொண்டு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ஆபீஸருக்கு சென்றார்.
தாயிடம் வீரமாக பேசி விட்டாலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் அப்படியே அமர்ந்திருந்ததற்கு நடக்க முதலில் மிகவும் தடுமாறினாள். பிறகு மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்க ஆச்சரியப்படும் வகையில் நேரம் செல்ல செல்ல வலி குறைந்து அவளால் நன்றாக நடக்க முடிந்தது. குழந்தை உருவானதிலிருந்து சுற்றத்தாரின் கவனிப்பால் நடப்பதையே முழுவதாக குறைத்து இருந்தவளுக்கு ஏதோ மீண்டும் நடைபழகியது போல் உணர்ந்தாள்.
இப்பொழுது தான் மனதில் இருக்கும் அனைத்து இருக்கங்களும் போய் மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தால். அதை மதியிடமும் கூற அவளிடம் இருந்து ஒரு மென்புன்னகையையே கிடைத்தது.
குழந்தைகள் இருவரையும் குளிக்க வைத்து விட்டு யாகவியிடம் கொடுக்க அவளும் குழந்தைகளுக்கு பசியாற்றி விட குழந்தைகளும் எண்ணெய் குளியலிலும் வயிறு நிறைந்து உண்டதால் நல்ல உறக்கத்தை தழுவி இருந்தனர். இருவரையும் தொட்டிலில் போட்டு விட்டு வந்தவள். சில முன்னேற்ற கதைகள் உடைய நாவல்களை கொடுக்க அதை கேள்வியாக பார்க்க மதியோ “எவ்வளவு நேரம் தூங்குற குழந்தைகளே பாத்துட்டு இருப்பீங்க. எங்க அம்மா சொல்லுவாங்க தூங்குற குழந்தைகளை ரசிக்க கூடாதுன்னு” என ரகசிய குரலில் கூற அதைக் கேட்ட யாகவியும் சிரித்தபடி மதி கொடுத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.
மதியும் தனது வேலைகளை கவனிக்க அறைக்கு சென்றாள். தனது உடமைகளுடன் மறைத்து வைத்திருந்த பட்டன் ஃபோனை எடுத்து பதட்டமாக இரண்டு நாட்களாக வந்திருந்த மெசேஜை படித்து பார்த்தாள். அதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்த மதியின் மனம் போல் மமுகமும் கசங்கியது.
வந்த வேலை சீராக முடிய வேண்டும் என்று யோசித்தவளுக்கு காலையில் அம்சவல்லி பேசியதிலிருந்து அது அவ்வளவு சுலபமில்லை என்பதை அறிந்து சோர்ந்து தான் போனாள். ஆனால் மனக்கண்ணில் வந்து போன காட்சிகளை கண்டவள். அடுத்த நிமிடம் சீராகி இருக்கும் வேலைகளை முடித்தவள். ஒரு புத்துணர்வு உடனே யாகவி யாகவி அறைக்கு சென்றாள். இப்படியே சீராக 15 நாட்கள் கடந்த நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட செல்லும்போது மதியும் இரண்டு குழந்தைகளும் கடத்தப்பட்டனர். அதில் நந்தன் மாளிகையே குழந்தைகளை நினைத்து அதிர்ந்தது.
- சாரி ஃபார் த லேட் அப்டேட். இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள். என் கண்ணின் மணி நீயடி வரும் நட்புகளே தொடர்ந்து வாசித்து ஆதரவு கொடுங்க.