அத்தியாயம் -4
அவனை பற்றி நினைக்க நினைக்க ஏமாற்றத்தின் வலி அவளை கொன்றது. எவ்வளவு நேரம் காரில் அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை. அவளை காணாமல் விக்கி அவளுக்கு அழைக்கும் வரை சிலையாக சமைந்து இருந்தாள் ஆதிரா.
“ஆது எங்க இருக்க?”
“கார்ல இருக்கேன் விக்கி. என்னாச்சு அஞ்சலி நல்லா இருக்கா தான?”
“ஹான் அவ இப்போ தான் எழுந்து பாப்பாக்கு பீட் பண்ணா. உன்னை பார்க்கணும்னு சொல்லுறா. வரியா”
பெருமூச்சுடன், “இதோ வரேன் விக்கி” என்று அஞ்சலியின் அறைக்கு சென்றாள்.
கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்த அஞ்சலிக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. ஆதிராவே அதை பற்றி பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள் .
“ஆர் யூ ஓகே அஞ்சலி” பரிவாக கேட்டாள் ஆதிரா.
“ம்ம் பெட்டர்.”
ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டவளிடம் என்ன பேசுவது என்று ஆதிராவிற்கு தெரியவில்லை. சண்டைப்போட்டிருந்தால் ஆவது அவளது தரப்பை சொல்லியிருப்பாள். அதற்கு மாறாக அந்த விசயத்தை பொறுமையாக கையாள நினைத்தாள் அஞ்சலி.
“பெத்து கொடு பார்த்துகிறேனு சொன்னிங்க? இப்போ எங்க எஸ்கேப் ஆக பார்க்கிறிங்க” என்று அவளை ஆழ்ந்து பார்த்தாள் அஞ்சலி.
“நான் ஒன்னும் எங்கயும் ஓடல. வெளில தான் இருந்தேன்”
“ஏன் அக்கா இப்படி பண்ணிங்க?”
“சாரி. இதை தவிர வேற என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல அஞ்சு”
“நான் விகா கிட்ட பேசவா அக்கா”
“இதைபத்தி எங்களை தவிர யாரு பேசினாலும் அது தப்பா போகும்”
“என்ன தான் பிரச்சினை உங்களுக்குள்ள?”
அதற்கு அவளுக்கே பதில் தெரியாததால் எதுவும் பேசாமல் குழந்தை கொஞ்ச ஆரம்பித்தாள். அதற்குமேல் எதுவும் பேசாமல் ஓய்வெடுத்தாள் அஞ்சலி.
“வீட்டுக்கு சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன் ஆது. ஒன் ஹார்ல வந்திருவாங்க.”
“சரி நீ போய் சாப்பிட்டு வா, அஞ்சலி கூட நான் இருக்கேன். எல்லாரும் வரும் வரைக்கும்.”
“இல்லை ஆது நீங்க கெஸ்ட் ஹவுஸ் போய்ட்டு தூங்கிட்டு காலையில வா.”
“ஹான் நான் இருக்கேன் உன்னை மட்டும் தனியா விட்டு எப்படி போவேன். என்னால தானே?….” என்று ஆரம்பித்தவளை,
“நீ அவளை காயபடுத்த எதுவும் பண்ணல, இன்னைக்கு என் டார்லிங் என் கைக்கு வரணும்னு இருக்கு அவ்வளவுதான். நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் வா. வீட்டுக்கு போயிட்டு வந்தாலும் சரி இல்லை கெஸ்ட் ஹவுஸ் போய்ட்டு வந்தாலும் சரி. அது உன் இஷ்டம்”
“சரி” என்று அவனிடம் இருந்து விடைப்பெற்றவள் நேராக அவர்களது கெஸ்ட் ஹவுஸிற்கு வண்டியை விட்டாள்.
ஒருமாதிரி சோர்வாக இருக்க அலுப்பு தீர ஒரு குளியலை போட்டவள் அப்படியே படுக்கையில் விழுந்து உறக்கத்தை நாடினாள்.
நள்ளிரவு இடையில் ஏதோ ஊற திடுக்கிட்டு எழுந்தவளால் ஒரு இன்ச் கூட நகரவே முடியவில்லை. கண்ணை திறந்து அருகே இருந்த விளக்கை போட அவனே தான் அவளை அணுஅணுவாக வதம் செய்ய துடிக்கும் அவளவன் தான்.
பக்கத்தில் செல்ல மது நெடி அவளுக்கு குமட்டியது. மொத்தமாக அவளை வாரி சுருட்டி கைவளைவில் வைத்திருந்தான்.
“விகர்ணன் விடுங்க!” என்று அவளின் கம்பீரமான பேச்சில் அவள் புறம் சரிந்தவன்,
“முடியாது டி” என்று மேலும் அவனோடு இறுக்கினான்.
“என் ரூமிற்கு எப்படி வந்தீங்க?”
“இந்த கெஸ்ட் ஹவுஸ் நம்ப ரெண்டு பேமிலிக்கும் காமன் ப்ரோபெர்ட்டி ஞாபகமில்லயா?”
“அதுக்கு என் பெட் வர உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது.”
“ஐ நீட் யூ” என்றான் உளறலாக,
“வாட்” என்று அதிர்ந்தவள் போராடி எப்படியோ அவனிடம் இருந்து விடுபட்டு எழுந்து நின்றாள்.
சத்தமாக சிரித்தவன் ஒரு கையை தலைக்கு கொடுத்து அவள்புறம் சாய்ந்து, “அவ்வளவு நம்பிக்கையா? இல்லை என் மேல இருக்க மயக்கத்தில நீயே உன்னை தந்திருவியோன்னு பயமா?” என்று அவளையே பார்த்தான்.
“கர்ணன் தேவையில்லாம பேசாதீங்க! ஒரு பொண்ணு ரூமுக்கு இப்படி அர்த்த ராத்திரியில் அநாகரீகமா அத்துமீறி நுழைஞ்சு , அசிங்கமா நடத்துகிறீங்க? அதுதான் வேண்டான்னு சொல்லிட்டீங்களே அப்பறம் எதுக்கு என்னை தேடி வந்தீங்க?”
கண்களில் என்னவென்று வரையறுக்க முடியாத பாவனையை வைத்து, “எனக்கு பொண்டாட்டியா தான் உன்னை வேண்டாம்னு சொன்னேன். ஆனால் என் ஹோர்மோன் தடுமாற்றத்துக்கு நீ போதும்” என்றவனின் வார்த்தையில் இரும்பாய் இருக்கும் அவள் இதயம் சற்று இளகி வேகமாய் துடித்தது.
‘என்ன பேச்சு பேசுறான். அப்போ அவனோட இச்சை தீர்க்கும் சதைப்பிண்டமா மட்டும் தான் என்னை அவனால் பார்க்க முடியுமா? அப்படி கீழ் தரமா நான் போயிட்டேன் . ஆக ஒரு பொண்ணா தனக்கான நியாயத்தையும் காதலையும் யாசித்தா பதில் இதுதானா. நீயா தானே என்னை நெருங்கி வர, அப்பறம் எதுக்கு என்னை உயிரோட கொல்லுற!’ என்று குற்றச்சாட்டோடு அவனை பார்க்க போதை அவன் கண்ணையும் மனசாட்சியையும் சேர்த்து மறைத்து இருந்தது.
“மிஸ்டர். விகர்ணன் உங்களுக்கு என்ன தான் வேண்டும்?” என்றாள் அழுத்தமான குரலில்,
“நீ தான்!” என்றவனின் கண்ணில் காதல் இருக்கிறதா என்று அவன் கண்களுக்குள் ஊடுருவினாள், அதில் மருந்துக்கும் காதலில்லை.
கண்ணை இறுக மூடியவளுக்கு மனம் தாங்கவில்லை, ‘காதலித்த பாவத்திற்கு தன்னையே கேட்பவன் காதலாய் அன்றி அவன் உணர்ச்சிக்கு வடிகாலாக கேட்கிறானே?’ என்று மனம் கனத்தது.
என்ன நினைத்தாளோ அணிந்திருந்த இரவு உடையில் பொத்தானை கழட்டினாள், அவளின் செய்கை அவனை அதிர வைத்தது. கத்தி கூப்பாடு போடுவாள், தன்னிடம் சண்டை செய்வாள், கெஞ்சுவாள் என்று எண்ணியவனுக்கு அவளது செய்கை அதிர்ச்சியளித்தது.
‘என்ன பெண்ணிவள்! தான் கேட்டாள் அவள் செய்வாளா? சீ!’ என்று அவன் மனம் அவளை இகழ்ந்தது.
முழுதாக அவள் கழட்டும் முன் எக்கி அவளை இழுத்தவன்,
“என்னை விட உனக்கு ரொம்ப அவசரம் போல? ஆனால் பாரு நான் கேட்டதும் நீ ரெடி ஆனதில என் மூட் போயிடுச்சு. அதுக்கு ஏதாவது செய்!” என்றவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
இவன் தன்னவனே இல்லை! கர்ணன் பெயரில் தன்னை வதைக்க வந்த துரியோதனன் இவன். இப்படி எல்லாம் பேசிக்கிறானே? கல்லாக நினைத்து விட்டானா? நானும் ரத்தமும் சதையும் கொண்ட பெண் தானே! என்று நினைத்தவளுக்கு தாங்க முடியவில்லை.
கண்ணில் இருந்து நிற்காமல் விழிநீர் கொட்டினாலும் இருவர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை.
‘அழு நன்றாக அழு இதை காண தானே என் ஒவ்வொரு அணுவும் துடிக்கிறது’
‘அப்படி என்ன செய்துவிட்டேன்! உன்னை காதலித்ததை தவிர?’
என்றவள் நினைத்ததை படித்தானோ என்னவோ,
தன்னிடம் இழுத்து அவள் அதிரத்தை வருடி, “தப்பு பண்ணிட்ட தீரா என்னை காதலிச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. நான் உன்னை காதலிக்கல, உன் உடம்பை தான் காதலிச்சேன்” என்று அவள் இதழை கவ்வினான்.
அதில் அத்தனை ஆவேசம் அவள் மனதை மட்டுமில்லாமல் இதழையும் காயப்படுத்தியவன், அசைவின்றி படுத்திருப்பவளை கண்ணில் நிறைத்து அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்றதை கூட உணராத அளவிற்கு அவள் மனம் துடித்துக் கொண்டிருந்தது, ‘என்ன செய்தேன் இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தையால் வதைக்கும் அளவிற்கு’ என்று மனம்போன போக்கில் புலம்பியவள் எப்போ உறங்கினாள் என்று தெரியவில்லை, அடுத்த நாள் காலை அலைபேசியின் ஒலியில் தான் விழித்தாள்.
கண்ணை திறக்க முடியவில்லை சிறிதாக முழித்து அலைபேசி திரையை பார்க்க, அவளின் தந்தை தான் அழைத்திருந்தார்.
எழுந்து முகம் கழுவி காலைக்கடனை முடித்து அவருக்கு மீண்டும் அழைத்தாள்.
“ஆதிம்மா! இஸ் எவரித்திங் ஓகே?” என்றார் எடுத்த எடுப்பிலேயே,
“எஸ் டாட். நேத்து என்னை பார்க்க அஞ்சலி வந்திருந்தா! திடிர்னு லேபர் பெயின் வந்திரிச்சு. விக்கி உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டான்.” என்று நடந்ததை பாதி மறைத்து சுருக்கமாக சொன்னாள்.
“அதெப்படி ஆதிம்மா, நீயும் உன் பிரண்ட்டும் வார்த்தை மாறாம ஒரே மாதிரி சொல்லுறீங்க? முன்னாடியே பேசி வைச்சுட்டீங்களா?” என்று அவர் கேள்வியில் அதிர்ந்தாலும்,
“பேசி வைச்சு தான் பொய் சொல்லணும்னு இல்ல டாட் நடந்தத கூட ஒரே மாதிரி சொல்லலாம்.”
“ஆதிம்மா நான் உனக்கு அப்பா, ஐ நோ யூ! தட்ஸ் பைன். இன்னைக்கு ஆபீஸ் வரியா இல்ல அஞ்சலி கூட இருக்கியா?”
“நான் அஞ்சலி கூட கொஞ்ச நேரம் இருக்கேன். நீங்க ஆபீஸ் போயிடுங்க! லஞ்ச் அப்புறம் நான் வந்திறேன். பானும்மாவும் சித்ரா அத்தையும் வந்திருப்பாங்க நான் கொஞ்சம் நேரம் அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வறேன்.”
“ஓகே டா உன் அம்மாவும் அங்க தான் கிளம்பிட்டு இருக்கா நான் ஆப்டர்நூன் என் பேத்தியை பார்க்க வறேன். ஒன்மோர் திங்க் உன்னோட கோபத்துக்காக இன்னொருத்தர் பீலிங் அண்ட் வலியில் விளையாடுறது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்” என்று அவளது மறுப்பைக் கூட கேட்க விரும்பாமல் துண்டித்தவர் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
எழுந்து குளித்து கப்போர்டை திறந்தால், அனைத்தும் கேசுவல் உடையாக இருந்தது. அலுவலகம் செல்லும் முன் வீட்டிற்கு சென்று உடை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து மேலே இருந்த ஆடையை அணிந்து கீழே சென்றாள்.
“ஆதி பேபி ஏன் இவ்வளவு லேட்? சீக்கிரம் வா சாப்பிடலாம்” என்று படியில் இறங்கியவளை அன்போடு அழைத்தார் சித்ரா.
“நீங்க எப்போ வந்திங்க அத்தைமா. உங்களை பார்க்க தான் ஹாஸ்பிடல் கிளம்பினேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பேத்தி என்ன சொல்லுறா?”
“நல்லா இருக்கேன் பேபி. என் பேத்தி சொன்னதை சொன்னால் என்கிட்ட சண்டைக்கு வருவியே!” என்று முகத்தை பயந்தார் போல் மாற்றி அவளை பார்த்தார்.
“அண்ணி வந்தும் வராததுமா என் பொண்ணை எதுக்கு வம்பு பண்ணுறிங்க?”,
“ஆதி தங்கம் வா நீ முதல் சாப்பிடு!” என்று தட்டில் உணவை எடுத்து வைத்தார் பானுமதி.
‘என்ன டா இது போட்டி போட்டுட்டு ரெண்டு பேர் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க? எதிலாவது பெருசா கோர்த்து விட போறாங்களோ!’ என்று முகத்தில் சிரிப்பை ஓட்டி வைத்து உணவு மேஜையில் அமர்ந்தாள்.
“ஆதி தங்கம் உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சிருக்கேன் சாப்பிடு!” என்ற சித்ராவை பார்த்து,
“அத்தைமா உங்க செல்ல பையன் அதுதான் விகர்ணன் இன்னேரம் நடந்ததை சொல்லி இருப்பானே? என்கிட்ட எதுவா இருந்தாலும் கேட்டிருங்க. நீங்கள் எப்பவும் போல இருக்கணும்னு கஷ்டப்பட்டு செய்றது உங்க கண்ணுல நல்லா தெரியுது” என்று பட்டென்று சொல்லிவிட்டாள்,
“பேபி உன் நிலைமை எனக்கு புரியது. விகர்ணன் செய்தது தப்பு தான் அதுக்காக அஞ்சலியை வைச்சு நீ பண்ணத என்னால ஏத்துக்கொள்ள முடியல. கொஞ்சம் வருத்தம் மத்தபடி எனக்கு உன்மேல கோபம் இல்ல. அந்த தடிமாடு நீ சொன்னதும் நிறைமாசம்ன்னு கூட யோசிக்காம பண்ணத நிஜமா ஏத்துக்க முடியல!”
“அத்தைமா எனக்கு அஞ்சலி மட்டும் தான் ட்ரங்கார்டு, அதுதான் அப்படி பண்ணேன். அவளுக்கு பெயிண் வந்தது எங்களுக்கு ஷாக் தான். அண்ட் பூரி செமயா இருக்கு” என்று கைகழுவி எழுந்தவள்,
“சாரி கேட்க தோணல, ஆனால் என்னால் உங்க பேத்திக்கும் அஞ்சலிக்கும் எதுவும் ஆகாது” என்று பொதுவாக கூறியவள்,
“பானும்மா நீங்க மட்டும் ஏன் இப்படி நான் என்ன பண்ணாலும். என்ன ஏன் இப்படி பண்ணேன்னு கூட கேட்க மாட்டேங்கிறீங்க?” என்று செல்லமாக கடிந்தாள்.
“என் செல்லம் கோபத்தில என்ன பண்ணுறோம்னு தெரியாமல் பண்ணுவா ஆனால் யாருக்கும் பாதிப்பு வராதுன்னு எனக்கு தெரியுமே. அப்பறம் எதுக்கு உன்னை கேள்வி கேட்டுட்டு.” என்று அவள் தலையை வருடினார்.
“உங்க பாச மாலையில் நனைச்சிட்டேன் பானும்மா. நான் போய் அஞ்சலியை பார்த்துட்டு வறேன்” என்று சென்றவளை புயல் வேகத்தில் கடந்து சென்றான் விகர்ணன்.
‘இவன் எப்போ வந்தான் இவன் கிளம்பும் வர நம்ப வெளிலயே வரக்கூடாது. எல்லாம் என் நேரம் இவனுக்கெல்லாம் பயந்து இப்படி ஒளிய வேண்டிய நிலைமை. ச்சைக்’ என்று நினைத்தவள் அவளையே பார்த்திருந்த இரு பெண்களிடம்,
“ஒரு இம்போர்ட்டண்ட் கால் இருக்கு மறந்துட்டேன், நான் போய் பேசிட்டு வறேன்” என்று மேலே சென்றாள்.
அவள் ஏன் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தமையால் அவள் வாழ்க்கை விரைவில் சரியாக வேண்டும் என்று எண்ணியபடி அஞ்சலிக்கு பத்திய உணவை தயாரிக்க சென்றனர்.
வெளியே யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு மேலே ஏறியவனின் முகத்தில் அப்படியொரு இறுக்கம். தன் கோபத்தை குறைக்க முடியாமல் நேராக சென்றது என்னவோ அவளிடம் தான்.
அறையில் கண்ணை மூடி படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தாழிடாமல் கதவை சாற்றி, அவளை நெருங்கினான்.
“தீரா!” என்ற வார்த்தையில் கண்ணை விழித்தவள் அவன் கண்ணில் இருந்த மென்மையை பார்த்தாள், இந்த பார்வை அவர்களின் தனிமையான நேரத்தில் மட்டும் அவன் கண்ணில் காணப்படும் உணர்வு.
நேற்று இரவு வரை நடந்தது எல்லாம் அவள் நினைவில் வராதது எவ்வளவு தவறு என்று இன்னும் சில நிமிடத்தில் அவள் கதறப்போவதை அறியவில்லை.
மீண்டும் அவனின், “தீரா!” என்ற அழைப்பில், “சொல்லுங்க”.
“நான் ஏன் உன்னை லவ் பண்ண மாதிரி நடிச்சேன்னு தானே உனக்கு தெரியணும்?” என்றவனை பார்த்து ஆமாம் என்று தலையாட்டினாள்.
ஒற்றை விரலால் அவள் காதின் பின்புறத்தை வருட அவளுடல் அதிர்ந்தது, “ப்ளீஸ் கர்ணன்” என்று கூறும்போதே அவளால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை, “ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா என் உணர்ச்சியை தூண்டி என்னை தவிக்க வைக்கிறிங்க?”
“ம்ச் நான் தான் சொன்னேன்ல எந்த பொண்ணு மேலையும் வராத அந்த தோட் உன்னை பார்த்ததும் வருது. நான் என்ன செய்ய? நீ தான் என்னை டெம்ப்ட் பண்ணுற, சோ அதை நான் உனக்கு கடத்துறேன்” என்று கூறியவன் அவள் அணிந்திருந்த ஸ்கிர்ட்டை சற்று இறக்கி தொட போக,
“நோ!” என்று விலக போக, அவளை இழுத்து அவளிடையில் கையை வைத்தான்.
அவளால் கட்டுப்படுத்த முடியாமல் அவன்மீது தோய்ந்து விழ, “நீ என்னை டெம்ப்ட் பன்னுறதே இதுக்காக தானே!” என்று கேட்டவன் அவளை மோகப்பார்வை பார்க்க, தீச்சுட்டது போல அவனை விலகி குளியல் அறைக்குள் புகுந்தாள்.
‘இதுக்கே ஓடுனா எப்படி? நான் உன்னை காதலிச்சது தப்பு தான் என்னை விட்டிருனு நீ கதறி என்கிட்ட சரண்டர் ஆகும் வரை உன்னை விடமாட்டேன் தீரா’ என்று நினைத்து கீழே இறங்க, அஞ்சலியை காண தன் தோழிகளோடு செல்ல கிளம்பி வந்த ஆதிராவில் அன்னை சீதா கண்ணில் சிக்க, அவனை கேள்வியாக பார்த்தார்.
அதே சமயம் அங்கு மருத்துவமனையில், காட்டறாரு போல் உள்ளே வந்தவனை பார்த்த அஞ்சலி மெலிதாக சிரித்து, “வா விகா!” என்றாள்.
நேற்றைய போல் அமைதியாக இருந்த விக்கி அவனை பார்வையால் துளைக்க தவறவில்லை.
“வறேன் டா! நீயே எனக்கு குட்டிமா உனக்கு ஒரு குட்டிப்பாப்பா. என்னால் நம்பவே முடியல.” என்று அவள் அருகே படுக்கவைத்திருந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான்.
“நைட் திரும்ப எப்போ வந்த விகா?” என்று விக்கி அவனை அழுத்தமாக கேட்க,
“விக்கி தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்”
“எஸ் தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ். பட் என் கசின் சேப்டி எனக்கு முக்கியம்”
“எனக்கும் தீராக்கும் நடுவில் வராதே!” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், “அப்பறம் வறேன் குட்டிமா” என்று நொடியில் முகத்தை மாற்றி அவளிடம் விடைபெற்றான்.