அத்தியாயம் 39
அடுத்த இரு நாட்களிலேயே அஸ்வினியின் முன் வந்து நின்றாள் விஸ்வயுகா.
“சித்தி, யுகியோட டிஸ்மிஸ் ஆர்டர் கேன்சல் ஆகிடுச்சு. இனி அவன் காலேஜ்க்கு போகலாம்” என உற்சாகமாகக் கூறியவளைப் புரியாமல் பார்த்தார் அஸ்வினி.
“எப்படி யுகா?”
“அதெல்லாம் அப்படி தான். யுகா இருக்க யுகிக்கு பயமேன்” என ஆசீர்வதிப்பது போல பாவனை செய்ய, இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியவர், “போதும் உன் பொன்மொழி. என்ன பண்ணுனன்னு சொல்லு” என்றார் விழி விரித்து.
“உண்மையைச் சொன்னேன்!” என ரஜினி வசனத்தை மொழிய, இம்முறை அஸ்வினி முறைத்தார்.
அவரைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், “யுகி ஓவரா முறைச்சுட்டே இருப்பானோ?” எனக் கேட்டாள் சந்தேகமாக.
“அட உனக்கு எப்படி தெரியும் யுகா. முசுடு இல்ல. ஆனா அளவா தான் சிரிப்பான்” என்றதில்,
“ம்ம்… நீங்களும் அவன் கூட பழகி பழகி இப்போ நல்லா முறைக்கப் பழகிட்டீங்களே” என வாரினாள்.
“பேச்சை மாத்தாத ஏஞ்சல்” அஸ்வினி கராறாகக் கேட்டதும்,
“என்னை போட்டோ எடுத்தப் பசங்களை பத்தி என் ஸ்கூல்ல கம்பளைண்ட் பண்ணுனேன். என்னை டீஸ் பண்ணாங்கன்னு நாலஞ்சு பிட்டு சேர்த்து போட்டேன். இந்த விஷயம் அம்மா, அப்பாவுக்குப் போனா என்ன ஆகும்னு ப்ரின்சிக்கு தெரியுமே. சோ டைரக்டா காலேஜ் மேனேஜ்மெண்ட்ல பேசி, அந்தப் பசங்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்காரு. அப்பறம், அவங்க பண்ணுன தப்பைத் தட்டிக் கேட்ட யுகியை பனிஷ் பண்றது நியாயமே இல்லன்னு என் ப்ரின்சியே பேசி சரி பண்ணிட்டாங்க. சிம்பிள்!” எனக் கண் சிமிட்டித் தோளைக் குலுக்கினாள்.
“அப்பறம் உங்க ஸ்பெஷல் பையன்கிட்ட சொல்லுங்க. படிக்கிறது கிரிமினாலஜி. இப்படி அவசரப்பட்டு அடிச்சு ஆதாரத்தை அழிச்சுட்டா எதை வச்சு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவானாம். முன்கோபம் அதிகம் வருமோ?” உதடு குவித்துக் கேட்டாள்.
“இல்ல ஏஞ்சல். இவ்ளோ வருஷத்துல அவன் இந்த மாதிரி எந்த பிரச்சினைக்கும் போனது இல்லை. இது தான் பர்ஸ்ட் டைம்!” என்றதும் அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
“நிஜமாவா?” அக்கண்களில் மிதந்த அதீத ஆர்வத்தை அஸ்வினி கவனியாது போனார்.
“ஆமா ஏஞ்சல். உன்னை போட்டோல பார்த்து இருக்கான்ல. சோ, இன்னொருத்தன் தப்பா போட்டோ எடுத்துட்டான்னதும் கோபம் வந்துருக்கு. பொதுவாவே அவன் இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப கோபப்படுவான். பட் அதுக்கான வேலைக்குப் போறவரைக்கும் வெளில காட்டிக்க கூடாதுன்னு அமைதியா போயிடுவான். இப்ப பிராப்ளம் சால்வ் ஆகிடுச்சுன்னு சொன்னா ரொம்ப ஹேப்பியாகிடுவான். தேங்க்ஸ் ஏஞ்சல்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.
“அவன் ஆதாரத்தை அழிச்சது வரை ஓகே தான். உன் போட்டோவை எல்லா இடத்துலயும் காட்டுனா, உன் பியூச்சர் என்ன ஆகும். அவன் சரியா தான் செஞ்சுருக்கான்” என்றபடியே யுக்தாவிற்கு போன் செய்தார்.
“ஆமா, இந்த அவசர உலகத்துல என் மூஞ்சியை தான் எல்லாரும் ஞாபகம் வச்சு, ‘ஹேய் இது அந்தப் பொண்ணுல’ன்னு கேட்க போறாங்க பாருங்க. அவனுக்கு நீங்க தூபம் போடாதீங்க சித்தி. பியூச்சர்ல ரேப் கேஸ் ஹேண்டில் பண்ற நிலைமை வந்தா, அந்தப் பொண்ணை வச்சு தான ஆதாரத்தை மூவ் பண்ண முடியும். க்ரைம் பிரான்ச் அளவுக்கு கனவு இருக்குறது தப்பில்லை. அதுக்கு முதல்ல எமோஷனலை கம்மி பண்ணனும். அவனை நீங்க உங்களை மாதிரி ஓவர் எமோஷனல் பெர்சனா மாத்திடாதீங்க” என பெரிய மனுஷியின் தோரணையில் உத்தரவிட்டாள்.
“சரிங்க ஏஞ்சலியாரே! இந்த டயலாக்கை அப்படியே சொல்லிடுறேன். ஓகே தான?” என்றவர், அவள் போனை எடுக்கவில்லை என்றதும் நேரிலேயே பார்க்கக் கிளம்பினார்.
அதில் மெல்லத் தடுமாறியவள், “சித்தி… எனக்கு அவனைப் பத்தி தெரியும்னு சொல்லிட்டீங்களா?” எனப் படபடப்புடன் கேட்க,
“இல்லை ஏஞ்சல் இனி தான் சொல்லணும்” என்றார்.
“சொல்லாதீங்க இப்போதைக்கு”
“ஏன்?”
அவளோ திருதிருவென விழித்தாள். ஏனென்று அவளுக்கும் காரணம் சொல்லத் தெரியவில்லை. இப்போது அவனிடம் சொன்னால் கூட, அவளால் அவனுடன் நட்பு பாராட்ட இயலாது என்று புரிந்தவள்,
“வேணாம் சித்தி. அவன் படிப்பு முடிஞ்சு செட் ஆகுற வரை சொல்ல வேணாம். அப்பறம் சர்ப்ரைஸா அவன் முன்னாடி வந்து நிக்கிறேன். இப்போதைக்கு நானும் யார்கிட்டயும் சொல்லல. நீங்க சொன்ன மாதிரி அவனோட சேஃப்டி ஃபர்ஸ்ட். உங்க மனநிம்மதியும் ஃபர்ஸ்ட்! என்றாள் தலைசாய்த்து.
லேசாய் கண் கலங்க, அவள் நாடியைப் பற்றி கொஞ்சிய அஸ்வினி, “படிப்பு மட்டும் லைட்டா மக்கர் பண்ணும். மத்தபடி யூ ஆர் ஜீனியஸ் ஏஞ்சல்…” என்றார்.
“இது வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கே?”
“ஹா ஹா… லைட்டா!” எனச் சிரித்தவரை வெப்ப மூச்சுடன் முறைத்தாள்.
யுக்தாவிற்கு தான் நடப்பதை நம்பவே இயலவில்லை.
“எப்படிம்மா… டிஸ்மிஸ் பண்ணவங்க மறுபடியும் காலேஜ்க்கு வர சொன்னாங்க. வாய்ப்பே இல்லையே” என யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டான் யுக்தா.
“நான் பேசுனேன் யுகி” அஸ்வினி பொய்யுரைக்க,
“அதுனால தான என்னால நம்ப முடியல” என்றான் தீவிரமாக.
“டேய்!” இடுப்பில் கை வைத்த அஸ்வினியின் கையைப் பிடித்து அருகில் அமர்த்தியவன், அவர் கன்னத்தைக் கிள்ளி, “கோச்சுக்காதீங்கமா. நீங்க பேசி, இது நடந்து… இதெல்லாம் என்னை எப்படி நம்ப சொல்றீங்க. இடைல ஏதோ நடந்து இருக்கு. என்னன்னு சொல்லுங்க ஒழுங்கா. எதுவும் காசு குடுத்தீங்களா?” என்றான் சந்தேகமாக.
“சே சே இல்லை யுகி…” என்றவர் வேறு வழியற்று “ஏஞ்சல் தான் இதை சரி பண்ணுனா” என்றதும் அவன் விழிகள் சாசர் போல விரிந்தது.
“வாட்? அவள்கிட்ட என்னைப் பத்தி சொல்லிட்டீங்களா?” சட்டென தோன்றிய படபடப்புடன் கேட்டான்.
“இல்ல இல்ல… நேரடியா சொல்லல. எனக்குத் தெரிஞ்ச பையன் உன் ஸ்கூலுக்கு வந்தான். இப்படி இப்படி ஆகிடுச்சுன்னு சொன்னேன். அவள் உடனே அந்தப் பசங்க மேல கம்பளைண்ட் பண்ணிட்டா. ஆதாரத்தைக் கைப்பற்றாம கோபத்தைக் காட்டக்கூடாதுன்னு மறைமுகமா உனக்கு அட்வைஸ் வேற விழுந்துச்சு…” என்றதும் அவனறியாமல் இதழோரம் குறுநகை பூத்தது.
“ஓஹோ! அந்த அம்மா பெரிய சிஐடி. ஆர்டர் போடுறாங்க” என வெளியில் முறுக்கிக் கொண்டான்.
பின், “என்னைப் பத்தி சொல்லல தான?” என மீண்டும் ஒரு மாதிரியாகக் கேட்டவனின் தொனியில் ‘சொல்லக்கூடாது’ என்ற கட்டளை தெரிந்ததோ என்னவோ அஸ்வினி தான் விழி பிதுங்கி பார்த்தார்.
“இல்லையே. சொல்லல” என சமாளிக்க, அதன் பின் ஆசுவாசமானவன் எப்போதும் போல கல்லூரிக்குச் சென்றான்.
வீட்டில் நால்வருக்கும் அந்த வருடம் பொதுத் தேர்வு.
மற்ற மூவரும் மொட்டைமாடியில் ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்து தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்க, “அடி ஷைலா. நீ மட்டும் மனப்பாடம் பண்றியே. எனக்கும் ஏதாவது நோட்ஸ் தரலாம்ல” எனப் படித்துக் கொண்டிருந்த ஷைலேந்தரியை திட்டினாள் விஸ்வயுகா.
“ஒரு நோட்ஸ் இல்ல ரெண்டு நோட்ஸ் இல்ல… அந்த சரஸ்வதி தேவியே இறங்கி வந்து நோட்ஸ் குடுத்தாலும் நீ பாஸ் மார்க் தான் வாங்குவ. அதுவும் ரிவிஷன்லயே மேக்ஸ்ல 40 தான்டி வாங்கியிருக்க. எனக்குத் தெரிஞ்சு நீ கணக்குல தான் கண்டமாவன்னு நினைக்கிறேன்…” என்றதும்,
“வாயை வைக்காத. நானே பரிதவிச்சு போயிருக்கேன். உங்கிட்ட பேசுனா எனக்கு நெகட்டிவ் வைப் ஏத்திடுவ. நான் ரூம்க்குப் போய் தனியா படிக்கிறேன்” என்று புத்தகங்களை அள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றாள்.
நந்தேஷ் தான், “படிக்கவிடாம என்ன நசநசன்னு பேசிட்டு இருக்கீங்க” எனக் கோபம் கொள்ள,
“ம்ம்… உன் தொங்கச்சி தனி ரூம்ல போய் நொட்டப்போறாளாம். ஸ்டேட் ஃபர்ஸ்ட் எதுவும் வந்துட போறா. ஆராத்தி கரைச்சு வச்சுக்க” என நக்கலாகக் கூறியதில் இரு ஆடவர்களும் அவளை முறைத்தனர்.
—-
அஸ்வினி கையில் சிறிய பையுடன் விஸ்வயுகாவைப் பார்க்க வந்தார்.
“ஏஞ்சல் என்ன செய்ற?” எனக் கேட்டபடி மெத்தையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவளின் அருகில் அமர,
அவளோ சீலிங்கைப் பார்த்து, “என் எக்ஸைத் தேடிட்டு இருக்கேன்” என்றாள்.
“என்னது எக்ஸா?” அஸ்வினி அதிர்ந்து போக,
“பதறாதீங்க பதறாதீங்க. ஃபைண்ட் எக்ஸ்னு ஒரு ப்ராபளம். அதை சால்வ் பண்ண நான் அந்த எக்ஸோட எக்ஸாவே மாறிட்டேன். ஆனாலும் என்னால கண்டுபிடிக்க முடியலை” என்றாள் பரிதாபமாக.
சத்தமாக சிரித்து விட்ட அஸ்வினி, “உனக்காக ஒன்னு கொண்டு வந்துருக்கேன்” என்றவர் பையிலிருந்து சில நோட்டுப் புத்தகங்களை எடுக்க, “என்ன சித்தி, சைடு பிஸினஸா புக்ஸ் விக்கப் போறீங்களா?” என நக்கலடித்தாள்.
“உனக்கு கொழுப்பு ஏஞ்சல்… இது எல்லாம் யுகியோட ’10’த் நோட்ஸ். ஈஸியா புரியிற மாதிரி எழுதி இருப்பான். உனக்கு தான் மேக்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்குல்ல. இதுல அட்லீஸ்ட் ஒரு 60, 70 மார்க் வர்ற மாதிரி இம்பார்ட்டண்ட் ப்ராபளமும் அதைப் புரியிற மாதிரி சிம்பிளா சால்வ் பண்ற ட்ரிக்கும் எழுதி இருக்கான்… இதுல மத்த சப்ஜெக்டும் இருக்கு. நீ இதை வச்சு ப்ரிப்பேர் பண்ணிப் பாரு”
“இதெல்லாம் யுகி கொடுத்தானா சித்தி?” கண்கள் விரிய கேட்டாள் பாவை.
அதில் தடுமாறியவர், “அது… இல்ல அவன் கொடுக்கல. நானா எடுத்துட்டு வந்தேன்” என்றதில், “ஓ!” என உதடு குவித்தவள், அந்த நோட்டுப் புத்தகங்களைப் பூ போல தடவினாள்.
இன்னும் தேர்வுக்கு பதினைந்து நாட்களே மீதம் இருந்தது. ஆனால், அந்தப் பதினைந்து நாட்களும் யுக்தாவுடன் இருப்பது போல எண்ணம் கொண்டு அவனது புத்தகங்களுடன் இணைந்தே இருந்தாள்.
புத்தகங்களில் ஆங்காங்கே அவனது பெயரைப் பொறித்து வைத்திருந்தான்.
‘பெரிய ப்ரைம் மினிஸ்டரு. எல்லா பக்கத்துலயும் அவர் பேரை கொட்ட எழுத்துல எழுதி இருக்காரு’ எனச் சிலுப்பிக் கொண்டாலும் அவளது தளிர் விரல்கள் அப்பெயரை அவ்வப்பொழுது வருடிக் கொண்டது.
அன்று தேர்வு முடிவு வெளிவரும் நாள்.
கம்பியூட்டர் முன்பு அமர்ந்திருந்த நால்வரில் ஷைலேந்தரி படபடப்புடன் இருந்தாள்.
விஸ்வயுகா சாவகாசமாக காபியைப் பருகியபடி “ஹே ஒரு செகண்ட் இருங்க. காபி ஆறுறதுக்குல்ல குடிச்சுட்டு வந்துடுறேன் அப்பறம் சேர்ந்து ரிசல்ட் பாக்கலாம்” என்க, மைத்ரேயன் அவள் தலையில் அடித்தான்.
“அடிப்பாவி… ஸ்டேட் ரேங்க்குக்கு எக்ஸ்பெக்ட் பண்றவளே பதட்டமா இருக்கா. நீ பாஸாவியான்னே தெரியல. எப்படி இவ்ளோ கூலா இருக்க. நீ காபி குடிச்சது போதும் வா ரிசல்ட் பாக்கலாம்” எனத் தரதரவென இழுத்து வந்து கம்பியூட்டர் முன்பு நிறுத்தினான்.
அதற்குள் நந்தேஷ் ஷைலேந்தரியின் தேர்வு முடிவைப் பார்த்திருக்க, “ஹே ஷைலா… 491 எடுத்திருக்க செம்மடி…” என்று தங்கையைப் பாராட்ட, “அவ்ளோ தானா? போச்சு… ஸ்டேட் ரேங்க் போச்சு” என உதட்டைப் பிதுக்கினாள்.
கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மூன்றிலும் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தாள். எப்போதும் தகராறு செய்யும் தமிழும் ஆங்கிலமும் காலை வாரி விட்டு இருந்தது.
மைத்ரேயன் தான், “அதான் மூணு சப்ஜெக்ட்ல சென்டம் வாங்கி இருக்கீல அப்பறம் என்ன? இதுவே நல்ல ஸ்கோர் தான் ஷைலா” என சமன்படுத்த அவள் மூக்கால் அழுதாள்.
‘ஐயோ பாவம்’ என்ற ரீதியில் விஸ்வயுகா அவளையே சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்க்க, நந்தேஷ் “இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பொழைப்பு சிரிக்கப் போகுது” என்றபடி அவளது ரிசல்டையும் பார்த்து அதிர்ந்து விட்டான்.
அத்தியாயம் 40
“அடியேய்… எங்களுக்கு தெரியாம பேப்பர் சேசிங் எதுவும் பண்ணுனியா? நீ எப்படி 400 மார்க் எடுத்த? அதுவும் மேக்ஸ்ல 80 அவ்வ்வ்வா…” என நந்தேஷ் வாயில் கை வைத்தான்.
ஷைலேந்தரி திகைத்து, “ஏய் நல்லா பாருடா. ரெஜிஸ்டர் நம்பர் தப்பா போட்டுருக்க போற. இரு நான் போட்டு செக் பண்றேன்” என்று அவள் பங்கிற்கு சோதிக்க மீண்டும் அதே 400 மார்க் வந்ததில் இப்போது அதிகமாக அழுக ஆரம்பித்தாள்.
“நான் ஸ்டேட் ரேங்க் வராதது கூட ஒரு வகைல ஏத்துக்குவேன். ஆனா இவள் எப்படிடா நல்ல மார்க் வாங்குனா. ஐயோ மம்மி” என்று உதட்டைப் பிதுக்கி அழுதவளைக் கண்டு விஸ்வயுகா கெக்க பெக்க வெனைச் சிரித்தாள்.
நந்தேஷும் மைத்ரேயனும் முயன்று சிரிப்பை அடக்கிக்கொண்டு ஷைலேந்தரியை சமன்செய்தனர்.
அஸ்வினிக்கும் விஸ்வயுகா நல்ல மதிப்பெண் எடுத்ததில் அதிகபட்ச மகிழ்வு.
நாட்கள் அதன்போக்கில் நகர, அடுத்ததாக பன்னிரெண்டாவதிலும் ஷைலேந்தரி மாநில அளவில் மதிப்பெண் எடுக்க முயன்றாள். அப்போதும் அவளுக்கு தமிழும் ஆங்கிலமும் தான் தடையாக இருந்தது.
தமிழ் தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு சோகமே உருவாக அமர்ந்திருந்தவளிடம், “என்னடி அதான் புக்கை கரைச்சு குடிச்சு இருப்பியே அப்பறம் ஏன் இப்படி உட்காந்து இருக்க” எனக் கேட்டாள் விஸ்வயுகா.
“அட போக்கா. இந்த தடவையும் ஸ்டேட் ரேங்க் ஊத்திக்கும் போல” என உர்ரென கூற, சற்று சிந்தித்தவள் “சரி இந்த டைம் நீ ஸ்டேட் ரேங்க் வாங்குற. அதுக்கு நான் கியாரண்ட்டி” என்றாள்.
“எப்படிடி?” ஷைலேந்தரி புரியாமல் பார்க்க, “வெய்ட் அண்ட் வாட்ச்” என்று வேகமாக அஸ்வினியின் அறைக்குச் சென்றாள்.
காய்ந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தவரிடம், “சித்தி… நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். உங்க ஸ்பெஷல் பையன்கிட்ட சொல்லி 12த் தமிழ் இங்கிலிஷ் நோட்ஸ் இருந்தா கேட்டு வாங்கித்தாங்க!” என்றாள்.
“உனக்கு லாங்குவேஜ்ல நல்ல மார்க் தான வரும் ஏஞ்சல்?”
“எனக்கு ஓகே தான். ஷைலா தான் சென்டம் வேணும்னு புலம்பிட்டு இருக்கா. யுகி தான் ஸ்டேட் ரேங்க் எடுத்தவன் ஆச்சே. அதுவும் லேங்குவேஜ்லயும் சென்டம் எடுத்துருக்கான். அது ஷைலாவுக்கு யூஸ் ஆகும்ல” எனக் கேட்டதும் சற்று யோசித்தவர்
“நான் கேட்டுப் பாக்குறேன். இல்லன்னா அவன் ரூம்ல தான் பழைய புக்ஸ் வச்சு இருப்பான். யார் கேட்டாலும் ஜெராக்ஸ் எடுத்து குடுப்பான். வேணும்னா ஜெராக்ஸ் எடுத்துட்டு வரேன். இல்லனா அதை அப்படியே தூக்கிட்டு வந்துடுறேன்” என்றதும்,
“ஓகே நீங்க அவனையே தூக்கிட்டு வந்தாலும் ஓகே தான்” எனக் கண் சிமிட்டியவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவரால்.
ஆனால், அன்று மாலையே நோட்ஸ் அனைத்தையும் எடுத்து வந்து விட்டார்.
ஷைலேந்தரியிடம் அதனைக் கொடுத்தவள், “இதுல ரெபர் பண்ணுடி. ஸ்டேட் ரேங்க் எடுத்தவனோட நோட்ஸ். என் க்ளாஸ்மேட்கிட்ட கேட்டு வாங்குனேன்…” என்று அழகாக சமாளித்தாள்.
இருவரும் வேறு வேறு க்ரூப் எடுத்திருப்பதால் சுலபமாக அவளை நம்ப வைக்க முடிந்தது.
ஷைலேந்தரியும் அதை வைத்தே குறிப்புகள் எடுத்துப் படிக்க, அவள் ஆசைப்பட்டது போலவே பன்னிரெண்டாவதில் மாநில அளவில் முதல் இடம் வந்து விட்டாள்.
“ஐயோ விஸ்வூ… நீ மட்டும் நோட்ஸ் கொடுக்கல. என் ட்ரீம் ஃபிளாப் ஆகியிருக்கும். என அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் அதீத உற்சாகத்தில் சுற்றினாள்.
அவளைக் கண்டு புன்னகைத்துக் கொண்டவள், “க்ரெடிட்ஸ் கோஸ் டூ யூ யுகி…” என காற்றிலேயே அவனது கற்பனை உருவத்திற்கு முத்தமிட்டாள்.
கல்லூரி வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தனர் இரு பெண்களும்.
வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்த நேரம், யுக்தாவும் படிப்பை முடித்து விட்டு, SSC-CGL தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான்.
கல்லூரியில் சேர்ந்தது முதலே தயாராகி இரண்டு முறை தேர்வு எழுதி தோற்று விட்டான். என்னவோ, ஏதோ ஒரு இடத்தில் பிழையாகி விட, மூன்றாவது முறை எழுதியும் தோற்று விட்டான்.
முகத்தைத் தொங்கப்போட்டபடி கட்டிலில் அமர்ந்திருந்தவனை பதட்டத்துடன் பார்த்த அஸ்வினி, “என்ன ஆச்சு யுகி. ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என அவன் கன்னம் பிடித்துக் கேட்டார்.
“ப்ச், இந்த தடவையும் மார்க் போச்சுமா. எக்ஸாம் ரொம்ப க்ரிக்டிகலா இருந்துச்சு. பேசாம கவர்மெண்ட் எக்ஸாம் செட் ஆகாதுன்னு முடிவு பண்ணிட்டு, ஜாப் தேடலாம்னு இருக்கேன்” என சோர்வுடன் பேச,
“இப்ப நீ உடனே வேலைக்குப் போயே ஆகணும்னு நாங்க ஃபோர்ஸ் பண்றோமா? உன் இலக்கை தேடி போறது பெருசு இல்லை யுகி. அது கிடைக்கிற வரை போராடனும். ஸ்கூல் காலேஜ்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனவனுக்கு இதெல்லாம் ஜுஜுபி…” என்றார் அவன் தலையை வருடி.
“ப்ச் இது டோட்டலா டிஃபரெண்ட்டா இருக்குமா. நான் ஒரு மாதிரி ப்ரிப்பேர் பண்ணிட்டுப் போனா, அங்க ஒரு மாதிரி இருக்கு குவெஸ்ட்டின் எல்லாம்… சரி டைம் ஆகுது. நீங்க கிளம்புங்க. அப்பா வீட்டுக்கு வந்துருப்பாங்கள்ல” என அவரைக் கிளப்ப, அவனை விட்டுச் செல்ல அவருக்கு மனமே இல்லை.
“இதுக்கு என்ன சொலியூஷன்னு எனக்கும் தெரியல யுகி. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் ஃபிரெஷா ஸ்டார்ட் பண்ணு. சரியா?” என அவனை சமன்படுத்தி விட்டு கிளம்பினார்.
ஆனால் மகனது வருத்தம் அவரையும் தாக்கிட, அது அவரது முகத்திலேயே பிரதிபலித்தது.
தனது வீட்டுத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விஸ்வயுகா அவரை வழிமறித்தாள்.
“சித்தி யுகிக்கு ரிசல்ட் வந்துருச்சா. எவ்ளோ மார்க் வாங்கிருக்கான்” என ஆர்வமாகக் கேட்க, அவர் முகம் வாடி நடந்ததைக் கூறினார்.
“அச்சோ! அதுக்கு ஏன் ரெண்டு பேரும் முகத்தை இஞ்சி தின்ன ஏதோ மாதிரி வச்சிருக்கீங்க?” எனக் கிண்டல் அடித்து அவரை லேசாய் புன்னகைக்க வைத்தாள்.
“இந்த மாதிரி கவர்மெண்ட் எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்றதுக்குன்னே நிறைய இன்ஸ்டிடியூட் இருக்குல்ல சித்தி. அதுல ஜாயின் பண்ண சொல்லுங்க. அவங்க கரெக்ட்டா ப்ரிப்பேர் பண்ண ஐடியாஸ் குடுப்பாங்க. யுகியைப் பொறுத்தவரை ஜஸ்ட் ஒருத்தர் கைட் பண்ணுனாலே போதும். பிக் பண்ணிப்பான்.”
“அதெல்லாம் கேட்டுப் பார்த்துட்டேன். அவன் இன்ஸ்டிடியூட்டே வேணாம்னு சொல்றான். தேவையில்லாத செலவு. நானே படிச்சுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறான்…”
“பிடிவாதம் பிடிச்சா மண்டையில ரெண்டு தட்டு தட்டி இன்ஸ்டிடியூட்க்கு அனுப்புங்க சித்தி. நானே பெஸ்ட் இன்ஸ்டிடியூட் பார்த்துட்டு சொல்றேன்” என அவர் பேச்சைக் காதில் வாங்காமல் உள்ளே சென்றாள்.
சொன்னது போன்றே, மறுநாள் அஸ்வினியின் முன் வந்து நின்றாள்.
“சித்தி நானும் நல்லா அலசி ஆராய்ஞ்சுட்டேன். இந்த மாதிரி கோர்ஸ்க்கு பெஸ்ட் பிளேஸ் டெல்லி தானாம். அங்க இருக்குற பெஸ்ட் இன்ஸ்டிடியூட்ல பேசி அட்மிஷனும் வாங்கியிருக்கேன். யுகியை டெல்லில போய் படிக்க சொல்லுங்க. அங்கேயே போஸ்டிங்கும் கிடைக்கும். அண்ட், பெட்டெர் எக்ஸ்பீரியன்ஸும் இங்க விட அங்க அதிகமா கிடைக்கும். அவன் ஸ்டே பண்ண ஒரு செர்விஸ்ட் அபார்ட்மெண்ட்டும் ஹோல்டு பண்ணி வச்சுருக்கேன். உடனே அவனைக் கிளம்ப சொல்லுங்க” என்றவளை அதிர்ந்து பார்த்தார்.
“என்ன ஏஞ்சல் நீ… அவனை டெல்லிக்கு அனுப்பிட்டு நான் எப்படி இருப்பேன்?”
“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு சித்தி. ஆனா அவன் ஃபியூச்சர் நல்லா இருக்கும்ல. அவனோட ட்ரீம் பிக். சோ நம்மளும் அவனைப் பறக்க விடணும். பிடிச்சு கூண்டுல போட்டு பறன்னு சொல்லக்கூடாது” கிட்டத்தட்ட அழுத்தத்துடன் கண்டித்தாள்.
அது அவருக்கும் புரிந்தாலும் மனம் சண்டித்தனம் செய்தது.
“அதெல்லாம் சரி ஏஞ்சல்… இதுக்குலாம் நிறைய செலவு ஆகும்ல. நான் ஃபர்ஸ்ட் உன் சித்தப்பாட்ட கேக்குறேன்…” அவர் தயங்க,
“அவனுக்காக நான் செலவு பண்ண மாட்டேனா?” சுருக்கென கோபம் வந்தது அவளுக்கு.
“அதை பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. அவன் ஜாப்ல சேருற வரை நான் பாத்துக்குறேன்” என அழுத்தம் திருத்தமாகக் கூறியவளை பரிதாபமாகப் பார்த்தார் அஸ்வினி.
“இல்ல ஏஞ்சல்… அது… வந்து… அவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான் ஏஞ்சல்”
“அதெல்லாம் ஒத்துப்பான்”
“ஐயோ நிஜமாவே அவன் ஒத்துக்க மாட்டான்…”
சில நொடி அமைதிக்குப் பிறகு, “நான் சொன்னேன்னு சொல்லுங்க. ஒத்துப்பான்” என்றாள் நிதானமாக.
“நான் சொல்லியே கேட்க மாட்டான்னு சொல்றேன்… ப்ச், பேசி பாக்குறேன்” என நம்பிக்கையின்றி யுக்தாவிடம் பேச அவனோ அவரைக் கடிந்து கொண்டான்.
“உங்களை யாருமா இதெல்லாம் செய்ய சொன்னது. உங்களை விட்டுட்டு நான் எப்படி போவேன். நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்ல கண்டிப்பா பாஸ் ஆகிடுவேன். ப்ளீஸ்மா என்னை இங்க இருந்து அனுப்பாதீங்க” அவனுக்கு கண்ணே கலங்கி விட்டது.
“எனக்கு மட்டும் என்ன ஆசையா? உன் பியூச்சர்க்காக தான யுகி” அஸ்வினியும் கலங்க,
“அதுக்காக? மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை பார்த்தாலும் இங்க நீங்க பக்கத்துல இருக்கீங்கன்ற நிம்மதி இருக்கு. அங்க போனா நினைச்ச நேரம் உங்களைப் பார்க்கக் கூட முடியாதுமா” என்றான் தவிப்புடன்.
“எனக்கும் அதே வருத்தம் தான். அவள் கேட்க மாட்டுறாளே!” எனக் கூறி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்.
விழி இடுங்க அவரைப் பார்த்தவன் “யாரு?” எனக் கேட்க,
“அது… உங்கிட்ட பேசிட்டு நானும் சோகமா வீட்டுக்குப் போனேனா… அப்போ ஏஞ்சல் ஏன் உர்ருன்னு இருக்கீங்கன்னு கேட்டாளா…” என இழுத்தவரிடம்,
“ம்ம் முழுசா சொல்லுங்க” என்றான் கையைக்கட்டிக்கொண்டு.
தொண்டையைக் கனைத்துக் கொண்டவர், “ஏஞ்சல்கிட்ட ஏஞ்சல் ஏஞ்சல்… ஒன்ஸ் அபான் அ டைம், உனக்காக ஒரு பையன், கூட படிக்கிற இன்னொரு பையனை அடிச்சு டிஸ்மிஸ் ஆக போனான்ல, அந்தப் பையன் இப்ப கவர்மெண்ட் எக்ஸாம்க்கு மார்க் போச்சுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தான். அதைக் கேட்டு நான் ஃபீல் பண்ணேன்னு சொன்னேன்… அவள் தான் இன்ஸ்டிடியூட்ல என்னை பேச வச்சு எல்லாம் ரெடி செய்ய வச்சா. உன்னைக் கண்டிப்பா டெல்லிக்கு போக சொன்னா. நான் சொல்லிட்டேன் நீ கேட்க மாட்டன்னு. ஆனா, நான் சொன்னேன்னு சொல்லுங்க போவான்னு சொன்னா…” என்று மீண்டும் இழுத்தார்.
அவள் தான் பணம் கட்டி இருக்கிறாள் என்று சொல்லவில்லை. அவன் எதுவும் சங்கடப்பட்டு விடக்கூடாதே!
ஏஞ்சலின் முடிவு இது என்று தெரிந்த பின்பு அவனால் மறுக்க இயலவில்லை.
“சரி நான் போறேன்!” ஒரே வார்த்தையில் முடிவைத் தெரிவித்தவனைக் கண்டு அதிசயத்துடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டார்.
ஏஞ்சலின் கட்டளைப் படி டெல்லிக்குச் சென்றவன், அடுத்த ஆறு மாதத்திலேயே தேர்வில் வென்று வேலையும் வாங்கி விட்டான். அடுத்து அவன் சென்னைக்குத் திரும்பும் போது அஸ்வினியை மட்டுமல்ல அவனது ஏஞ்சலையும் இழக்க வேண்டியது வருமென்ற விதியின் விளையாட்டை அறியாது போனான்.
மோகம் வலுக்கும்
மேகா
செம பந்தம்