Loading

அன்று

 

சென்னை மாநகரத்தின் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருந்த சமுத்திரம் அலைகளின் ரம்மியமான சப்தத்தில் ஆர்பரித்துக் கொண்டிருந்தது. கடற்கரை மணலில் படர்ந்து கிடந்த செடி கொடிகளைத் தாண்டி பிரம்மாண்டமாய் வீற்றிருந்த பங்களா வீட்டை பார்த்துக் கொண்டிருந்த போதே உள்ளுக்குள் உதறல் எடுத்தது கார்த்திக்கு, அப்படியே தன் தோழி அதியை திரும்பி பார்த்தான் எதையோ சாதித்த உணர்வில் நின்றிருந்தாள் அதி.

“ஏய் அதி ரிஸ்க்குடி வேண்டாம், ஒரு சின்ன விசயத்துக்கே அகிலன் எந்த அளவுக்குப் பண்ணினான்னு நினைவு இருக்குல, மறுபடியும் அவன்கிட்டையே போய் மோதிகிட்டு இருக்கச் சொல்லுறீயா.?”

“இது ஒன்னும் நம்ம வாலன்டியரா பண்ணலை கார்த்திச் சேனல் பண்ண சொன்னாங்க நம்ம பண்ணுறோம் அவ்வளவு தான், போட்டு குழப்பாமல் என் பின்னாடி வா” எனச் சொன்னவள் பங்களாவின் இரும்பு கேட்டின் அருகே வந்து உள்ளே அமர்ந்திருந்த காவலனை அழைத்தாள்.

“சார் நாங்க விஸ்காம் ஸ்டூடண்ட்ஸ் ஷார்ட் பிலிம் எடுக்க லோகேஷன் பார்க்க வந்தோம், கொஞ்சம் உள்ள அலோ பண்ணிங்கனா போட்டோஸ் மட்டும் எடுத்திட்டு போயிருவோம்” எனச் சொன்னாள்.

“அதெல்லாம் முடியாதுங்க, இங்கே எல்லாம் கேமராவ தூக்கிட்டு வரக் கூடாது, இது ரெஸ்டிரிக்டட் ஏரியா போங்க போங்க, இங்கே யாரும் நிக்கக் கூடாது” என அந்தக் கடைநிலைக் காவலன் துரத்திவிட.

அங்கிருந்து அகரநதியும் கார்த்திக்கும் நகர்ந்திருந்தனர்.

“சரி வா போகலாம் அதி, கௌதம் சார்கிட்ட சொல்லிக்கலாம்” என அவளை அழைத்துச் செல்ல முயன்ற போது.

“உனக்குப் பயமாக இருந்தால் போ கார்த்திக், நான் வேற கேமரா மேனை வர சொல்லிக்கிறேன்” எனச் சொன்னவளுக்குத் தெரியும் அவன் அவளைத் தனியே விட்டு அங்கிருந்து அகல மாட்டான் என, சரியான நேரத்தில் சொல்லி அவன் செல்வதைத் தடுத்திருந்தாள் அதி.

“சரி இப்போ என்ன.? உள்ள போகணும் அவ்வளவு தானே, நான் போய் வீடியோஸ் எடுத்திட்டு வர்றேன், நீ இங்கேயே இரு” என வலியுறுத்தினான்.

“கார்த்தி ப்ளீஸ் நானும் வர்றேன்” கெஞ்சாத குறையாய் கேட்டாள் அதி, ஆனால் அவன் சிறிதும் ஒத்து வரவே இல்லை,

“உன்னோட சாகசத்தை இதுல காட்டதே அதி, மறுபடியும் இதுல நான் உன்ன தொலைச்சுற மாட்டேன், என்ன நடந்தாலும் அது எனக்கே நடக்கட்டும், உன்னை அப்படி ஒரு நிலைமையில் பார்க்குற சக்தி எனக்கில்லை அதி, இந்த விசயத்துல நீ சம்மந்தபடக் கூடாது, இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்லை, எனக்காக ப்ளீஸ் இதுல இருந்து ஒதுங்கி நில்லு” என்றவன் பங்களாவின் சுவர் ஏறி உள்ளே குதித்திருந்தான்.

பிரம்மாண்டமான சுவர் அவளை மிரட்டியது, அவன் ஏறி யார் கண்ணிலும் படாதவாறு உள்ளே சென்றுவிட்டான், ஆனால் நதி தான் அந்தச் சுவற்றில் ஏறி எப்படி உள்ளே குதிப்பது என்ற தீவிர யோசனையில் இருந்தாள், மீண்டும் இரும்பு கேட் அருகே வந்து நின்றாள், அங்கு நின்றிருந்த காவலனோ தொலைப்பேசியில் யாரிடமோ மும்மரமாய்ப் பேசிக்கொண்டிருந்த போதே மெல்ல கேட்டை தாண்டி பங்களாவினுள் நுழைய முயன்ற போது, நாய் லொள் லொள் எனக் குறைக்க ஆரம்பித்தது,

“அட அப்பரசன்டீ நீ ஏன்டா கத்தி காட்டிக் கொடுக்கிற” எனத் தனக்குள் புலம்பியவள் அசோக மரத்தை தாண்டி அந்தப் பிரம்மாண்ட பங்களாக்குள் நுழைய சென்ற போது அங்கிருந்த காவலன் உணவருந்த சென்றது அகரநதிக்கு வசதியாய்ப் போனது. சாவி இன்றி உள்ளே நுழைய முடியாமல் திணறி நின்றாள் அகரநதி.

“ஏய் அதி” மெலிதாய் கார்த்தியின் குரல் கேட்க ஏறிட்டாள் அகரநதி.

“டேய் கார்த்தி இரு வர்றேன்” எனச் சொன்னவள் பங்களாவின் பின்புறம் நோக்கி நடந்தாள்.

“அதி லூசு, உன்னை தான் வராதன்னு சொன்னேன்ல, எப்படிப் போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வந்த.?” அடக்கபட்ட கோபத்துடன் வெளிபட்டது அவனின் வார்த்தைகள்.

“கார்த்திக் நட்பு வேற, கேரியர் வேற, என்னோட வேலையை உன்கிட்ட ஒப்படைச்சிட்டு என்னால வெளிய நிம்மதியா இருக்க முடியாது, பிகாஸ் ஐ லவ் மை ஜாப், அதனால எனக்குக் கொடுத்த வேலையைச் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு” எனச் சொன்னவள் மேலும் முன்னேறி நடக்க, அவளிடம் பேசி மல்லுக்கட்டாமல் அவனும் அவளைத் தொடர்ந்து சென்றான்.

இருவரும் பங்களாவினுள் நுழைய வழி கிடைக்குமா என்று தீவிரமாய்த் தேடிக்கொண்டிருந்தனர். எந்தப் பக்கம் சென்றாலும் பூட்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாய் ஓரே ஒரு ஜன்னல் திறந்திருக்க, அதன் வழியே உள்ளே எட்டிப்பார்த்தாள் அதி. கண்ணாடியை தள்ளினால் உள்ளே சென்றுவிடலாம் ஏனென்றால் அது ஆளுயர சாளரம், கண்ணாடியை தள்ளிவிட்டு இருவரும் உள்ளே நுழைந்த போதேலிருந்தே வீடியோ எடுக்க ஆரம்பித்திருந்தான் கார்த்திக்.

நிசப்தம் நிறைந்திருந்த அந்தப் பங்களாவில் காலடி சப்தம் கூடக் கேட்காத அளவுக்குப் பொறுமையாய் சென்று ஒவ்வொரு அறையாய் ஆராய்ந்தனர். அங்குச் சமூக விரோதமாய் எதுவும் நடப்பதற்கான அறிகுறி கூடத் தென்படவில்லை.

“என்ன கார்த்திக் இங்கே ஒன்னுமே இல்லை.? அப்பறம் எதுக்காக இங்கே எதோ நடக்குதுன்னு டீடெய்ல்ஸ் கேதர் பண்ண சொல்லியிருக்காங்க.?” எனப் புரியாமல் விழித்தவளிடம்.

“அதி எனக்கு அப்படித் தோணலை, எதோ இங்க நடந்திட்டு தான் இருக்கு”

“எப்படிடா சொல்லுற.? கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் அதி, நமக்கு எதாவது இங்கே கிடைக்கும்” எனச் சொல்லிக்கொண்டிருந்த போதே, சாவி துவாரத்தில் யாரோ சாவியை விட, கிளிக் என்ற சப்த்துத்துடன் கதவு திறக்கப்பட்டது.

“ஹே அதி யாரோ வர்றாங்க” என அவளின் கைபிடித்து இழுத்துச் சென்றவன் படிக்கட்டுகளின் கீழே இருந்த சிறிய மறைவில் ஒளிந்துக் கொண்டனர். கதவை திறந்துக்கொண்டு வந்த அகிலனோ தொலைப்பேசியில் யாரிடமோ உரையாடிய படி வந்தான்.

“டேய் மச்சான் உனக்குக் கமிஷன் சரியா வந்திரும், ஆனா நீ பண்ண வேண்டியெதெல்லாம் அவங்க ரெண்டு பேரையும் பங்களாக்கு கூட்டிட்டு வர்றது மட்டும் தான் உன் வேலை”

“……………….”

“டேய் இங்கே எல்லாமே ரெடி மச்சான், கேமரா ரெடி பசங்க ரெடி எல்லாமே ரெடி டா, பழைய வீடியோஸ் கூட ரெடி தான், அதைக் கம்ப்யூட்டர்ல ஃபீட் பண்ண தான் பீச் பங்களாக்கு வந்திருக்கேன்” எனப் பேசியபடி அவன் மாடிப் படிகளில் ஏறி அங்கிருந்த அறைக்குள் புகுந்து பட்டெனக் கதவடைத்த சப்தம் கேட்டவுடன் மறைந்து இருந்த இருவரும் மெல்ல வெளிபட்டனர்.

“அதி நான் மாடிக்கு போய் என்ன பண்ணுறான்னு பார்த்திட்டு வந்திடுறேன், அது வரைக்கும் இந்தச் சோபா பின்னாடி மறைஞ்சுக்கோ” எனச் சொல்லியவன் சோபாவை கைகாட்ட, அவன் சொல்லியது போல் மறைந்துக்கொண்டாள் அகரநதி.

அகிலனின் குரல் அறையைத் தாண்டியும் கேட்க கார்த்திக் காதுகளைக் கூர்மையாக்கி கேட்க ஆரம்பித்தான்.

“ம்ம் மச்சான் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் பார்த்துக்குறேன்” செவிகளில் தொலைப்பேசியை வைத்தபடி அவன் விரல்கள் அந்த அறையிலிருந்த கணினியில் நாட்டியமாடியது.

“……….?”

“ப்ரெஸா..? அப்படி எவனும் உள்ள நுழையறதுக்கு வாய்ப்பே இல்லைடா, அப்பா செக்கீயூரிட்டியை காவலுக்கு வைக்கல, போலீஸ் டிபார்ட்மென்டா லீகலா காவலுக்கு நிக்குறானுகடா, நாங்க பண்ணுற இல்லீகல் வேலை தெரியாமல்” எனப் பேசியவன் விகாரமாய்ச் சிரிக்க அறை எங்கும் எதிரொலித்தது. அதே சமயம் அவன் உள்ளே என்ன செய்கிறான் எனத் துவாரத்தின் வழியே பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி. அவன் விழிகளுக்குக் காணகிடைத்தது அந்தக் கணினி.

“…….”

“மொத்தம் ஐம்பதுடா இந்த மன்த் டார்கெட்டு, இதை முடிச்சே ஆகணும் இல்லைனா அப்பாகிட்ட நான் கைக் கட்டி நிக்க முடியாது” எனச் சலித்தபடி சொல்ல, மறுமுனையிலிருந்து பேசியவன் என்ன தான் சொன்னானோ தெரியவில்லை, ஆத்திரம் பொங்க இருக்கையில் எழுந்தவனுக்கு, தறிகெட்டு வந்த கோபத்தைக் கட்டுபடுத்த இயலாது ஓங்கி சுவற்றில் குத்தியவன்.

“இப்போ எதுக்குடா அவளை ஞாபகபடுத்தின.? அவ என்ன பேரழகியா.? இல்லை ரதியா.?நான் நினைச்சா அவ என் காலுக்குக் கீழடா.?” எனச் சொல்லி போனை லவுட்ஸ்பீக்கர் போட்டு மீண்டும் கணினியில் அமர்ந்தான் அகிலன்.

“மச்சான் இல்லைடா காலேஜ்ல அவ்ளோ பெரிய பிரச்சனை ஆகலைனா உங்க அப்பா பெரிய வேலையா உன் கையில கொடுத்திருப்பாரு, இப்போ பாரு அஞ்சுக்கும் பத்துக்கும் மாரடிக்க வேண்டியதா இருக்கு” தொலைப்பேசியில் பேசியவன் புலம்பி தள்ளினான் அகிலனின் நண்டபன் அருண்.

“எல்லாத்துக்கும் அவ தான்டா காரணம், அவ என் வலையில சிக்குவா, சிக்க வைப்பேன்” என அகிலன் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றான் கார்த்திக். அதே சமயம் கணினி திரையில் ஓடிக்கொண்டிருந்த சில காட்சிகள் கார்த்திக்கின் மனதை உறைய செய்தது.

“விடுடா மச்சன் அந்தப் பொண்ணு இல்லைனா வேற பொண்ணு, என்ன உன் சுதந்திரத்தை பறிச்சுட்டா அதைத் தான் தாங்கிக்க முடியலை, அந்த ஒரு ஷார்ட் பிலிம் உங்க அப்பாக்கு தெரிஞ்சதால சரக்கு பக்கமே போக முடியலைன்னு ஓரே ஒரு வருத்தம் தான்” எனத் தூபம் போட்டான் அருண்.

“அகரநதி” எனப் பூதத்தைப் போல் கத்தியவனைப் பார்த்து கார்த்திக்குள் பயம் எழுந்தது, அவன் திரையில் பார்த்த காட்சியில் கோபமும் எழுந்தது.

“டேய் மச்சான் மார்ச் எட்டு தானே.?”

“ஆமா மார்ச் எட்டுக் கன்பார்ம், அன்னைக்கி வேலைய முடிக்கிறோம் பேமென்ட்டை வாங்குறோம், இன்னும் ஒரு அஞ்சு தெறிட்டா போதும்டா” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவன். பென்டிரைவில் இருந்து சில வீடியோ பதிவுகளை அங்கிருந்த கணினியில் ஏற்றி முடிக்கும் வரை காத்திருந்தான் கார்த்தி. அகிலன் அங்கிருந்து அகன்ற பிறகு தன் பென்டிரைவை சொருகி கணிணியிலிருந்து அனைத்து பதிவுகளையும் ஏற்றிக்கொண்டவன், கணினியில் அனைத்தையும் அழித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான், அவன் கீழே வரும் போது அதி சோபாவின் பின்னே மறைந்திருந்தாள் அகரநதி.

“அதி வா அவன் போயிட்டான் கிளம்பலாம்” அழைத்தான் கார்த்தி.

“என்ன ஆச்சுடா கார்த்தி எதாவது இல்லீகலா மேல பண்ணிட்டு இருக்கானா.? போதை மருந்து எதும் கிடைச்சுதா.?

“ஆமாடி இல்லீகலா தான் செஞ்சிட்டு இருக்கான்”

“டேய் சூப்பர்டா கார்த்தி வீடியோ எடுத்தியா.? நான் ஒருமுறை மாடிக்குப் போய்ப் பாரத்திட்டு வந்திடவா, அப்போ தான் ரீப்போர்ட் பண்ண நல்லா இருக்கும்” என ஆர்வமாய்ச் சொன்னாள் அதி.

“ஆமா ஆமா அவன் குடிக்குறதை வீடியோ எடுத்து சேனல்ல போட சொல்லுறீயா லூசு, வா கிளம்பலாம்”

“என்னடா கார்த்திச் சொல்லுற இவ்ளோ தான் விசயமா.?

“இப்படி வேணும்னா டைட்டில் போடலாம் அதி, ரகசிய பீச் பங்களாவில் தன்னை மறந்து குடித்துக் கூத்தடித்த அமைச்சர் மகன்னு, போடலாம்” என நக்கலாய் பேசினாலும், அவன் மனமோ உண்மையைச் சொல்ல மறுத்த காரணத்தை அவன் மட்டுமே அறிவான். மனம் கணத்து போயிருந்தவனுக்குப் பாலைவனத்தில் நீர் இல்லாமல் திண்டாடவது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.

“அப்போ சரிடா கார்த்தி வா கௌதம் சார்கிட்ட சொல்லாம்” என அவனை இழுத்தபோது கீழே தடுமாறி விழச் சென்றவனின் பாக்கெட்டிலிருந்து விழுந்த பென்டிரைவ் பவ்யமாய்ச் சோபாவின் அடியில் சிக்கி கொண்டதை அறியாது இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆபத்தான வேலையில் அவளை ஈடுபடுத்த மனமில்லாமல் தானே தனியே செல்கிறான் கார்த்திக். நட்பு வேறு கடமை வேறு என்று கூறிக்கொண்டு அகரும் பின்னாடியே சென்றுவிட்டாள்.

    அகிலனின் கோபம் பலி வெறியாக உருமாறி இருக்கின்றது.

    இத்தனை கஷ்டபட்டு திரட்டிய ஆதாரத்தை அங்கேயே விட்டு விட்டனரே.

  2. பென் டிரைவை மிஸ் பண்ணிட்டாங்களே🤔