மருத்துவர் சுதர்மன் டேபிள் மீது கையை ஊன்றி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்தபடி அவருக்கு எதிரில் அமர்ந்த யுக்தா, “என்ன டாக்டர்… நேச்சுரல் டெத்னு சொல்லி என்னை டென்ஷன் பண்ண தான இவ்ளோ சீனு…” எனக் கிண்டலாகக் கேட்டான்.
“ஓ காட்! அதான நிஜமா நடக்குது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இஸ்யூ ஆகுது யுக்தா. இந்த ஆறாவது கொலையான விக்ரமோட டெத்தும் ஒரு வகைல நேச்சுரல் தான். கல்யாணத்துக்கு முந்தின நாள் பேச்சுலர் பார்ட்டில அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காரு” என அவர் ஆரம்பிக்கும்போது, “ம்ம்ம் அளவுக்கு அதிகமா குடிச்சதுல, ஹார்ட் பீட் எகிறி செத்துட்டானாக்கும்” என சலிப்புடன் முடித்து வைத்தான் யுக்தா.
“க்ரேட்!” சுதர்மன் பாராட்ட, அதில் அவரை முறைத்தவன் “டாக்டர்… இதெல்லாம் உண்மையான நேச்சுரல் டெத்தா… இல்ல அப்படி ஃபிரேம் ஆகிருக்கா” என்றான் கூர்மையுடன்.
அவரோ அமைதி காக்க, “இவங்களுக்கு நார்மல் அட்டாப்ஸி பத்தாது. டூ சம்திங் பெட்டெர்!” என்றதில்,
“ஏதாவது ஒரு சின்ன க்ளூ, ஆர் சந்தேகம் வந்தா தான யுக்தா என்ன மாதிரி அட்டாப்ஸி பண்ணலாம்னு தெரியும். பாடி எல்லாம் சீக்கிரமே டீ கம்போஸ் ஆகிட்டு இருக்கு. ஐ காண்ட் கெட் இட்” எனக் குழம்பினார்.
“சரி… ஒரு அனுமானமா சொல்லுங்க. இந்த ஆறு இறப்புல ஆண்களை ஒருத்தனும் பெண்களை ஒருத்தனும் கொன்னுருக்கான் இது எல்லாம் கொலையா இருந்தா… ரைட்?”
சுதர்மன் மெல்லத் தலையசைத்தார்.
“ஓகே தென், இதுவரை நான்கு ஆண்கள், ரெண்டு பெண்கள் இறந்துருக்காங்க. அதுவும் ரைட்டா?”
“ம்ம்”
“ஃபைன்! இப்ப என் டவுட் என்னன்னா, பாய்ஸ் நாலு பேர்ல நாலு பேருமே ஸ்டமக் அப்செட், புட் பாய்சனிங், ஆர் சம்திங் எல்ஸ்ல இறந்து இருக்காங்க. ஆனா, அவங்க சாப்ட்டதுல பாய்சன்னு எதுவும் இல்ல. அதுவும் க்ளியரா இருக்கு.”
“எஸ் யுக்தா. முந்தின நாள் சாப்பிட்டது வரை எல்லாமே செக் பண்ணியாச்சு. உடம்புல விஷம் கலந்த அறிகுறியே இல்லை.”
“அதுக்கு முந்தின நாள் சாப்பிட்டது கூட செக் பண்ண முடியலையா?” கண்ணைச் சுருக்கி யுக்தா வினவ, சுதர்மன் இன்னுமாகக் குழம்பினார்.
“அட்டாப்ஸில டிடக்ட் பண்ண முடியாத மாதிரியான பாய்சன், ஆர் மே பி ஸ்லோ பாய்சன், ஆர் எனிதிங் எல்ஸ்… பாடி டோட்டலா டீகம்போஸ் ஆகுறதுக்குள்ள, எதையாவது கண்டுபிடிங்க டாக்டர். யார்கிட்டயும் காசை வாங்கிட்டு டெட் பாடியை டீலிங்க்ல விடாதீங்க. இன்னும் முழுசா 24 மணி நேரம் டைம் உங்களுக்கு. எனக்கு சரியான பதில் கிடைக்கல… பாடியோட பாடியா ஃப்ரீசர்ல பதுக்கிடுவேன்…” எனக் குளிர் கண்ணாடியை மாட்டியபடி மிரட்டி விட்டுச் சென்றவனைக் கண்டு சுதர்மனுக்கு நெற்றி வியர்த்தது.
அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு யாருக்கோ போன் செய்த சுதர்மன், “சாரி இதுக்கு மேல ஹோல்டு பண்ண முடியாது…” என்றிட, எதிர்முனையில் கோபமூச்சுக்களின் ரீங்காரம் கேட்டது.
மடிக்கணினியைத் தீவிரமாகத் தட்டிக்கொண்டிருந்தாள் ஷைலேந்தரி.
மைத்ரேயன் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருக்க அவனை அழைத்தவள், “மைதா நம்ம மேட்ரிமோனி ஆப்ல மறுபடியும் ஏதோ இஸ்யூ. ஆப் செக்கியூரிட்டி வீக்கா இருக்குற ஃபீல் எனக்கு” என்றாள் யோசனையாக.
“யாரோ ஹேக் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருக்காங்க ஷைலா. நம்மகிட்ட இருக்குற ப்ரஃபைலோட சேஃப்ட்டிக்கு நம்ம தான் கியாரண்ட்டி… முடிஞ்ச அளவு நம்ம டீம் இதுல ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. அண்ட் சைட் சர்வரை ஹேக் பண்ண முடியாத மாதிரி நானும் சர்வர் அட்ரெஸ மாத்திக்கிட்டே இருக்கேன். இன்னொரு பக்கம் ஹேக் பண்ற ஐடியைக் கண்டுபிடிக்க ஒரு டீம் ஒர்க் பண்றங்க. இது விஸ்வூவுக்கும் நந்துவுக்கும் தெரிஞ்சா தேவையில்லாத ஸ்ட்ரெஸ். நம்மளே ஃபிக்ஸ் பண்ணப் பார்க்கணும்” என நெற்றியை நீவினான்.
“யாரோ நம்மளை ரவுண்டு கட்டுற மாதிரியே ஒரு ஃபீல் மைதா. எனக்கு ஒன்னு தோணுது…” என அவள் இழுத்தாள்.
மைத்ரேயன் என்னவென்று பார்த்ததும், “நம்ம வேணும்னா சிபிஐகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாமா?” எனக் கேட்டதில் மைத்ரேயன் முறைத்தான்.
“ட்ரஸ்ட் மீ டா. அவனுக்கு ஆல்ரெடி விஸ்வூ மேல ஒரு இஸ்கு இருக்கு. விஷயத்தை லைட்டா சொல்லி வச்சா, மே பி ஹி கேன் அண்டர்ஸ்டாண்ட்.”
“லூசாடி நீ. அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லி கூட கொஞ்சம் காம்ப்ளிகேட் பண்ணனுமா?”
“ஹே எனக்கு என்னமோ அவன் ஹெல்ப்ஃபுல்லா இருப்பான்னு தோணுது.”
“மண்ணாங்கட்டி! உன் க்ரஷ் மேல உனக்கு இருக்குற நம்பிக்கையை கொஞ்சம் புருஷன் மேலயும் வைக்கலாம்” அவன் சுள்ளென உரைக்க, ஷைலேந்தரி தீப்பார்வை வீசினாள்.
“என்ன இருந்தாலும் நான் சைட் அடிச்சவனாச்சே. நான் சொன்னா கேட்டுப்பான்…” என வெடுக்கென அவளும் அவனது பொறாமைத் தீயைத் தூண்டி விட்டாள்.
“அப்போ போய் சொல்லு! ஒப்பிச்சுட்டு வா எல்லாத்தையும். ஜஸ்ட் அவுட்” அவனும் கோபத்தில் கத்த,
“சொல்லுவேன்டா என் டொமேட்டோ” எனத் தோளைக் குலுக்கி அவள் கதவின் அருகில் செல்லப்போக, அவளைப் பிடித்து இழுத்தவன் சுவரோடு ஒதுக்கினான்.
“ஒரு தர்ட் பெர்சன்கிட்ட நம்ம பெர்சனலை சொல்ற அளவு நம்ம ஒன்னும் குறைஞ்சு போய்டலடி. அதுவும் அந்த பொறுக்கியை நம்பி எல்லாத்தையும் சொன்னா, நமக்கே ஆப்பு அடிச்சுட்டு போயிடுவான். நம்ம பிளான் எல்லாம் நடந்து முடியிற வரை உன் திருவாயை மூடிட்டு இரு” என்று வார்த்தைகளை அழுத்தமாகவும் அவள் மீது பார்வையை மென்மையாகவும் படரவிட்டான்.
அவனது மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் மோத, தன்னிச்சையாக அவளின் மேனி சிவப்பு நிறம் பூசியது.
“இதை இவ்ளோ பக்கத்துல நின்னு தான் சொல்லுவியா?” அதிகாரமாகக் கேட்க வந்தவளின் குரல் தடுமாற்றம் கொண்டது.
“ஃப்ரெண்டா இருந்தா தள்ளி நின்னு புரிய வைக்கலாம். உனக்கு இப்படி தான் சொல்லணும்” என்றவனின் குரலிலும் ரசனை வழிந்தோடியது.
திடீரென ஏற்பட்ட அவனது நெருக்கமும், பார்வை மாற்றமும் புதிதான உணர்வுகளை உள்ளுக்குள் பரவச் செய்ய, சிறு வார்த்தைகளுக்கும் பஞ்சமானது ஷைலேந்தரிக்கு.
அவளின் நெற்றியின் வழியே ஒற்றை விரலால் பயணம் செய்தவன், “எவனுக்கோ இருக்குற இஸ்கு எல்லாம் உனக்குப் புரியுது. சின்ன வயசுல இருந்தே உன் மேல எனக்கு இருக்குற இஸ்கு மட்டும் உனக்குத் தெரியவே இல்லையாடி” என்றான் ஆதங்கமாக.
அதற்கு பதில் கூறத் தெரியாதவளாக அவள் திருதிருவென விழிக்க, அந்நேரம் மைத்ரேயனின் அலைபேசி வைப்ரேஷனில் அலறியது.
அதனை அணைத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்தவன், “முடிஞ்ச அளவு எல்லாத்தையும் நம்மளே சார்ட் அவுட் பண்ணலாம்… வந்துடுறேன்” என அவன் நகர்ந்த பிறகே அவளது மூச்சு சீரானது.
ஆனால் மீண்டும் அதே வேகத்தில் அவளருகில் நெருங்கியவன், மெலிதான முத்தமொன்றை கன்னத்தில் பதிப்பித்து குறும்பு மின்னும் புன்னகையுடன் வெளியில் செல்ல, ஷைலேந்தரி தான் அதிர்ந்து நின்றாள்.
கன்னத்தில் குறுகுறுத்த அவனது மீசையின் அழுத்தம் அவளது ஒவ்வொரு செல்லையும் சிலிர்க்க வைத்தது. அவளை மீறியும் சிறு முறுவல் அவள் இதழ்களில் பூக்க, தனது இருக்கையில் சென்று அமர்ந்தவள், அதே சிலிர்ப்பு மாறாமல் மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தடைய அதனைத் திறந்து பார்த்தவளின் விழிகள் அகல விரிந்து சடுதியில் கலங்கியது. கரங்களில் நடுக்கம் ஏற்பட, நெற்றி வழியே வியர்வை வழிந்தோடியது.
“நோ” என அலறி நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தவளின் இதழ்கள் நடுங்கித் துடிக்க, அவசரமாக அலைபேசியை எடுத்து நந்தேஷிற்கு அழைத்தாள்.
—-
மாலை தாண்டிய வேளையில் மீண்டும் வீட்டிற்கு வந்தடைந்தான் யுக்தா சாகித்யன்.
சிறிது நேரம் உறங்கி எழுந்த விஸ்வயுகா, காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள்.
அவளது வீட்டுப் பால்கனி என்றால், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அவளது பங்களாவின் தோட்டமே தெரியும். ஆனால், இங்கு தெருவில் அங்கும் இங்கும் தெருவைக் கடந்த மனிதர்களை வெறித்தபடி இசையில் மூழ்கினாள்.
அவளைக் கண்டு யுக்தா அருகில் நெருங்கும் போதே, மின்வெட்டு ஏற்பட, சுற்றிலும் கும்மிருட்டாக மாறியது. தெரு விளக்கும் சேர்ந்தே அணைந்து விட்டதில் அவள் சட்டென பதறி போனில் டார்ச் லைட் ஆன் செய்ய முயலும் போதே, கை தவறி அலைபேசி பால்கனி வழியே விழுந்து விட்டது.
“ஷிட்!” என எரிச்சல் கொண்டவளுக்கு பயம் நெஞ்சைக் கவ்வ, அதற்குள் யுக்தாவே அலைபேசியின் டார்ச் லைட்டை ஆன் செய்தான்.
அவனைக் கண்டதும் அவசரமாக அவனிடம் அண்டியவள், “இன்வர்ட்டர் இல்லையா?” என அச்சத்துடன் கேட்க, “ரொம்ப ரேரா தான் இங்க பவர் ஆஃப் ஆகும் ஏஞ்சல். இப்போ வந்துடும்… கூல்” என்றான் இயல்பாக.
அவளோ “நான் வீட்டுக்குப் போறேன்…” என அவசரப்படுத்த, அவளை இறுக்கமாகப் பிடித்தவன், “மகாராணிக்கு அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாம இருக்க முடியாதோ” என்று எகத்தாளமாவே கேட்டான்.
அவள் பயத்தில் நகர எத்தனிக்க, அவனோ அதனை திமிர் என எண்ணிக்கொண்டான். ஒரு கணம் தான் அதுவும்! மறுகணமே அவளது பயத்தை உணர்ந்து கொண்டான்.
“பக்கத்துல நான் இருக்கேன்ல ஏஞ்சல்…” என்றபடி அவளை அறைக்குள் அழைத்துச் சென்றவன், ஜெனெரேட்டர் விளக்கை ‘ஆன்’ செய்திட, அந்த வெளிச்சம் அவளுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது.
“என் போன் வேற விழுந்துடுச்சு…” என அவள் கடுப்பாக,
“கரண்ட் வரவும் எடுத்துடலாம் ஏஞ்சல்!” என்று மென்மையாக உரைத்தவன், “டூ மினிட்ஸ் ரெஃப்ரஷ் ஆகிட்டு வந்துடவா?” எனக் கேட்க, அவள் படபடத்த விழிகளுடன் தடுத்தாள்.
அவனது உள்ளங்கையை இறுக்கிப் பற்றிக்கொள்ள, லேசாய் சிரித்தவன், “ஃபாரென்சிக் ஆபிஸ் போயிட்டு வந்தேன். டெட் பாடியைத் தொட்டுட்டு இன்னும் ஃப்ரெஷ் ஆகல. பரவாயில்லையா?” எனக் கேட்டதும், சட்டென விலகியவள் “ச்சை!” என முகத்தைச் சுளித்தாள்.
அதில் அதே புன்னகை மாறாமல் யுக்தா குளியலறைக்குள் அலைபேசியுடன் புகுற, எமர்ஜென்சி விளக்கின் வெளிச்சம் அப்போதைக்கு அவளது பயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெத்தையில் அமர்ந்தாள்.
தலைவேறு வலித்தது. நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு சிறிது நேரம் முன்பு வந்த மின்னஞ்சலே தலையில் ஓடியது.
அவளது அமைதியின் காரணத்தை அறியாத யுக்தாவோ, குறிஞ்சிக்கும் அருணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“திஸ் இஸ் தி ரைட் டைம்! நம்ம ப்ராசஸ ஸ்டார்ட் பண்ணுங்க” என அனுப்பி விட்டு மேலும் சில தகவலை கூறியபிறகு வெளியில் வந்தான்.
எமர்ஜென்சி விளக்கு வெளிச்சத்தில் வெண்ணிலவாக ஜொலித்துக் கொண்டிருந்த விஸ்வயுகாவைக் கண்டவனுக்கு ரசனை மின்னியது.
அத்தியாயம் 33
வெண்ணிலவு முகத்தில் வீற்றிருக்கும் இறுக்கம் புரியாது போக, அவளுக்கு அருகில் அமர்ந்தவன், “ஏஞ்சல்!” என அழைத்தான் வார்த்தைக்கும் வலிக்குமளவு.
அதில் என்னவென அவள் நிமிர, “கொலை இன்க்ரீஸ் ஆக ஆக, ஆபத்தும் அதிகம் ஆகிட்டு இருக்கு யுகா. உன் பிசினஸை டார்கெட் பண்ணுற அந்த எக்ஸ் பெர்சன், உன்னையும் உன் பேமிலியையும் டார்கெட் பண்ண ரொம்ப நேரம் ஆகிடாது. நீ எனக்கு கோ ஆபரேட் பண்ண மறுக்குற ஒவ்வொரு செகண்டும் ஆபத்து உங்களுக்கு தான். அடாப்ஸி பண்ற டாக்டர் கூட நமக்கு எதிரா இருக்கறதா தான் தோணுது. இப்படியே போனா, ஒரு துரும்பைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஏதாவது ஒரு பேஸ் பாயிண்ட்டாவது எனக்குத் தெரியணும் ஏஞ்சல்…” என நிறுத்தி நிதானமாகக் கூறியபடி விரித்து விடப்பட்டிருந்த அவளது கற்றைக் கூந்தலை விரல்களால் வாரினான்.
புருவம் சுருக்கி தீவிர சிந்தனையில் இருந்த விஸ்வயுகா, “இப்ப என்ன செய்யணும்?” என நேரடியாகக் கேட்க,
“நான் ஏற்கனவே சொன்னது தான். இதுக்கு முன்னாடி உன் ஃபேமிலியை அஃபெக்ட் பண்ணுன ‘ஆர்’ உன் பேமிலியால அஃபெக்ட்டான சின்ன சின்ன விஷயங்கள் எனக்குத் தெரியணும். ஐ நீட் மோர் டீடெய்ல்ஸ்… அண்ட்…” என்று நிறுத்த,
“அண்ட், என் வீட்டு பிரைவசி லாக்கர் பாஸ்வர்ட்?” என அவள் முடித்தாள் சிறு முறைப்போடு.
“ஆனா அதுல நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது. ஐ டோன்ட் அண்டரஸ்டாண்ட்… அதை யூஸ் பண்ணி நீ என்ன கண்டுபிடிக்கப் போற?”
மற்ற நேரமாக இருந்திருந்தால் சற்று நிதானித்து இருப்பாள். இப்போது அவள் எதையும் தீவிரமாய் அலசி ஆராயும் மனநிலையில் இல்லை. அஸ்வினியிடம் அரவணைப்பு தேடி அலைபாய்ந்தது மனது. அது கிடைக்காது போனதில், அங்கிருந்து கிளம்பப் பிடிக்காமல் அவனது வாசத்தை சுவாசித்தபடி அமர்ந்திருந்தாள்.
“நான் கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் உனக்கு எல்லாமே டீடெய்லா சொல்றேன் ஏஞ்சல். என்னை நம்ப மாட்டியா?” என்ற ஒற்றை கேள்வியில் சட்டென நிமிர்ந்தாள்.
‘உன்னை ஏன் நான் நம்பணும்?’ என்ற கேள்வி வாய் வரை வந்தாலும் கேட்க தோன்றவில்லை. அக்கேள்வியை வினவ அவனது ஆழ்ந்த பார்வை அனுமதி கொடுக்கவும் இல்லை.
சில நிமிடங்கள் அமைதியில் கழித்தவள், “எனக்கும் பாஸ்வர்ட் எதுவும் தெரியாது. ஆனா, என் வீட்டு பிரைவேட் லாக்கர்ல ஒரு பார்கோட் இருக்கும். அதை என் அம்மா போன்ல லிங்க் பண்ணிருப்பாங்க. அவங்க ஃபிங்கர் பிரிண்ட் வச்சு, அதை ஸ்கேன் பண்ற மாதிரி செட் பண்ணிருக்காங்க. இன்ஃபேக்ட் அதை செட் பண்ணிக் குடுத்தது மைத்ரா தான். ஆனா, அவனால கூட அதை ஆக்சஸ் பண்ண முடியாது. அதுல ஏழு ஜெனெரேஷனா என் வீட்டுப் பெரியவங்க பாதுகாத்துட்டு வர்ற, ஆன்ட்டிக் ஜுவல்ஸ், சொத்துப் பத்திரம் அந்த மாதிரியான திங்க்ஸ் தான் இருக்கும். பிளாக் மணிக்குலாம் சான்ஸே இல்ல. அதை எல்லாம் ஆக்சஸ் பண்ண எங்களையே என் அம்மா அலோ பண்றது இல்ல…” என்றாள்.
“ம்ம்ம்ம்… ஓகே. நான் அதை இல்லீகலா ஆக்சஸ் பண்ண ட்ரை பண்றேன்” என்று அவன் எழ,
“வாட்? மாட்டுனா நானே உனக்கு எதிரா ஆதாரம் சொல்லுவேன் யுக்தா. கில்லரை கண்டுபிடிக்க வேற வழியே இல்லையா என்ன?” என்றாள் அதட்டலாக.
அவன் உதட்டைப் பிதுக்கியதில் முறைத்தாள். யுக்தா மீண்டும் கடகடவென குறுஞ்செய்தி அனுப்பிட, அருண் மூலம் ஏற்கனவே பால்கனி வழியே விழுந்த விஸ்வயுகாவின் அலைபேசியைக் கைப்பற்றினர்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், “கரண்ட் எப்ப வரும்?” என சலிப்புடன் கேட்க,
“ஏன், இந்த மொமெண்ட் நல்லா தான இருக்கு ஏஞ்சல்… யூ ஆர் லுக்கிங் ஹாட்!” என்றான் விஷமத்துடன்.
அவனை நிமிர்ந்து ஏறிட்டவள், “மேக் மீ ஃபர்கெட் எவ்ரிதிங்!” என உணர்வற்று கூற,
“வாட்?” எனக் கேட்டவனுக்கு நெற்றி மத்தியில் சுருக்கம் விழுந்தது.
“எனக்கு எல்லாத்தையும் மறக்க வை!” என்றபடி அவன் சட்டையைப் பற்றி அவளருகில் இழுத்தாள்.
“எல்லாத்தையும்னா?” அவள் ஆணையிட்ட நொடியிலேயே அவனது கரங்கள் விஸ்வயுகாவின் முதுகில் ஊர்ந்தது.
“எல்லாத்தையும்னா எல்லாத்தையும் தான்…” விழிகளில் பளபளத்த கூர்மையுடன் அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள் பாவை.
அம்முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவன், “நொவ் யூ ஆர் டோட்டலி மைன் ஏஞ்சல்!” எனக் கர்வம் மின்ன உரைக்க, அதில் முகத்தை மட்டும் விலக்கி அவன் முகம் பார்த்தவள், “பேராசை படாதடா சைக்கோ! நான் என்னைக்கும் உன்னோட உடமையா ஆக மாட்டேன்…” என அழுத்தம் திருத்தமாக உரைத்தாள்.
ஆனால் அவளைப் பேச விடாத வண்ணம், அவனது முத்தத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானது.
வெப்ப மூச்சின் வேகங்கள் அதிகரிக்க, இடைவெளிகளும் சிறிது சிறிதாக குறைந்தது.
அவள் கண்களை இறுக்கி மூடி அவனது தீண்டல்களை அனுமதிக்க, அவனோ அவள் மீதிருந்த ரசனைப் பார்வையை சிறிதும் மாற்றாமல் அவளுடன் இழைந்தான்.
பாவையின் மேலாடைகளுக்கு விடுதலை அளிக்கத் தொடங்கினான். சங்கு கழுத்திலிருந்து அவன் இதழ்கள் இறங்கும் முன்னே, மெல்ல நிறுத்தியவனுக்கு அந்த சிறு வெளிச்சமும் தொந்தரவாக இருக்க, அவளிடம் இருந்து நகர்ந்து எட்டி கட்டிலுக்கு அருகில் இருந்த அந்த எமர்ஜென்சி விளக்கை அணைத்தான்.
கண்ணை இறுக்கி மூடி இருந்தவளின் விழிகளில் கரும் இருட்டின் தடுமாற்றம் புரிய கண்ணை படக்கென திறந்தவள், அவனைத் தள்ளி விட்டு, அவசரமாக விளக்கைப் போட்டாள்.
அவளைப் புரியாமல் பார்த்திருந்த யுக்தாவின் கண்களில் மோகம் மிச்சமிருக்க, அவளோ கலைந்த ஆடைதனை கொண்டு அழகு மேனியை மூடிக்கொண்டாள்.
கண்களில் கலவரம் மின்ன, கூடவே கோபமும் கொப்பளித்தது.
அந்நேரம் கரண்ட்டும் வந்திருக்க, தலையணையை அவன் மீது தூக்கி எறிந்து “எதுக்கு டா லைட்டை ஆஃப் பண்ணுன?” எனக் கேட்டாள் அதீத ஆத்திரத்துடன்.
“ஒரு மூட் செட் பண்ணலாமேன்னு ஆஃப் பண்ணுனேன்” என்றவனின் மீது மேஜையில் வீற்றிருந்த பீர் நிறைந்த கண்ணாடி பாட்டிலை எறிந்தவள், “ம*****” எனக் கெட்ட வார்த்தையில் அவனை விளாசி விட்டு “கெட் லாஸ்ட்!” என்றாள் மூச்சிரைத்து.
நல்லவேளையாக அந்த பாட்டிலை சரியாக கேட்ச் பிடித்தவன், “ஹே இது பாரீன் ப்ராண்டுடி” என்றபடி அதனைத் திறந்து குடிக்கப் போக, அவளோ நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.
அதில் மீண்டும் பாட்டிலை மூடி வைத்து விட்டு, கட்டிலில் குதித்தவன் “சரி லைட் இருக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நீ வெட்கப்படுவியோன்னு ஆஃப் பண்ணுனேன். அப்படி எந்த ஐட்டமும் உங்கிட்ட இல்லை போலயே…” என நலுங்கிய ஆடையில் தன்னை ஏனோ தானோவென மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை சற்றே ஏளனத்துடன் குத்தியது அவனது கண்கள்.
அவள் அவனது தொனியை கவனிக்கவில்லை. “நீ மட்டும் வெட்கப்படுறியா? உனக்கே இல்ல. எனக்கு எதுக்கு இருக்கணும்?” எனத் திமிராய் பதில் பேசினாலும் அவன் முன் அமர்ந்திருந்த தனது நிலையைக் கண்டு கன்னங்களில் ரோஜாப்பூ மெல்ல மலரத்தான் செய்தது.
அச்சிவப்பில் ஈர்க்கப்பட்டவன், அவளது இடையைப் பற்றி இழுத்து, அவன் மீது போட்டுக்கொண்டான்.
மீண்டும் முத்தப்போரைத் தொடங்கி வைத்தவன், அவளுள் முழுதாய் மூழ்கும் நேரத்தில் அருணிடம் இருந்து அழைப்பு வர, சட்டென அவளை விலக்கினான்.
“சார்… ஆப்ரேஷன் சக்ஸஸ். வாரண்டும் ரெடி. சிவகாமியோட குடும்பத்தையே இப்ப அரெஸ்ட் பண்ணி நம்ம கஸ்டடில வச்சு விசாரிக்கலாம்…” என்று கூற, யுக்தாவின் முகத்தில் வஞ்சத்தில் வெற்றி கண்ட இகழ்ச்சி நகை தாண்டவமாடியது.
விருட்டென கட்டிலை விட்டு இறங்கியவனை, இப்போது அவள் புரியாமல் பார்த்தாள்.
“ஒரு வேலை இருக்கு கிளம்பு!” அவன் உத்தரவாகக் கூற, “ப்ச் இந்த நேரத்துலயா?” என சலித்தவள், வழக்கில் ஏதோ துப்பு கிடைத்திருக்கிறதென்று எண்ணிக்கொண்டு, கிளம்பினாள்.
அதே நேரம், திருவான்மையூர் கடற்பகுதியை ஒட்டி இருந்த கெஸ்ட் ஹவுசின் மதில்சுவரில் இருந்து வெளியில் குதித்தான் முகமூடி அணிந்த ஒருவன்.
உள்ளே இருந்து, “அய்யயோ என் பையன் வாயில நுரை தள்ளி இருக்கானே. சீக்கிரம் ஆம்புலன்ஸை வர சொல்லுங்க” என்று ஒரு பெரியவர் கத்தும் சத்தம் கேட்க, வந்த வேலை முடிந்து விட்ட திருப்தியில் முகமூடியைக் கழட்டினான் அவன். மைத்ரேயன்!
“மைதா சீக்கிரம் வீட்டுக்கு வா. அர்ஜண்ட்!” என ஷைலேந்தரியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததில், கையில் அணிந்திருந்த கிளவ்ஸையும், ஜெர்கினையும் கழற்றிக்கொண்டே தெரு முடியும் வரை நடந்தவன், அங்கு காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் டிக்கியில் அனைத்தையும் போட்டு விட்டு வீடு நோக்கிச் சென்றான்.
—
சிவகாமி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தார். மோகன் அவசர அவசரமாக யார் யாருக்கோ போன் செய்ய, அவர்களுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருந்தான் யுக்தா சாகித்யன்.
நந்தேஷும் ஷைலேந்தரியும் ஒன்றும் புரியாமல் நிற்க, மைத்ரேயனும் வந்து விட்டான்.
“என்ன ஆச்சுடா?” என இருவரிடமும் கேட்டு விட்டு யுக்தாவைப் பார்க்க, அவனோ காதைக் குடைந்தபடி, “நீங்க யாருக்கு போன் பண்ணுனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. குடும்பத்தோட எல்லாரும் என் விசாரணைக்கு வந்து ஒத்துழைச்சா, ஏதோ தூக்கு தண்டனை அளவுக்கு இல்லாம கொஞ்சம் கருணை காட்டுறேன். இல்ல… குடும்பத்தோட தப்பிக்க முயற்சி செஞ்சீங்கன்னு இங்கயே ஒவ்வொருத்தரையும் என்கவுன்டர் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பேன்…” என்றபடி துப்பாக்கியைக் கையில் எடுத்து லோட் செய்தான்.
“எதே எக்கவுண்டரா?” என அலறிய ஷைலேந்தரி “சார் சார்… என்கவுண்டர் பண்ற அளவுலாம் நாங்க ஒர்த் இல்ல சார். ஏன் தேவையில்லாம குண்டை எல்லாம் வேஸ்ட் பண்றீங்க. உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரவா? ஏன்னா பசி வந்தா நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க!” எனப் பதறியபடி கேட்டாள்.
“அடியேய்” என நந்தேஷ் அதட்ட, “அட சும்மா இருடா. சார் ஏதோ தப்பா நினைச்சு இங்க வந்து ஆல்ரெடி பயந்து போன நம்மளை திரும்ப பயமுறுத்திட்டு இருக்காரு” என அடக்கினாள்.
யுக்தா அவளை முறைத்து விட்டு, “என்கவுண்டர் பண்ண நீங்க வொர்த் இல்லையா… அடடா ஒரு பெரிய கொலையை ஆக்சிடெண்ட்னு ஃபிரேம் பண்ணி, அதை மூடி மறைச்சு அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி கேஷுவலா இருக்கீங்களே. நீங்களா அப்பாவி? இந்த நடிப்பை எல்லாம் நம்புற அளவு நான் முட்டாள் இல்ல ஷைலேந்தரி” என சிவந்த விழிகளுடன் அவன் உரைக்க ஷைலேந்தரி வாயடைத்துப் போனாள்.
அத்தியாயம் 34
மைத்ரேயனும் நந்தேஷும் ஒன்றாக சிவகாமியைப் பார்க்க, அவரோ பற்களை நறநறவெனக் கடித்தார்.
“நீ என்ன சொல்றன்னு எனக்குப் புரியல?” சிவகாமி கூற,
“ஓ! புரியலையா ஐயோ பாவம். கஜினி சூர்யா மாதிரி எல்லாத்தையும் அப்போ அப்போ மறக்குற கொடும் வியாதி உங்களுக்கு இருக்கே. சரி நானே ஞாபகப்படுத்தவா சிவகாமி மேடம்!” என நக்கலாக உரைக்க அவருக்கு எரிச்சல் அதிகரித்தது.
அந்நேரம் விஸ்வயுகாவும் வீட்டிற்கு வந்து விட்டாள்.
சிவகாமியை எதிர்கொள்ளப் பிடிக்காமல் அலுவலகத்திற்குச் சென்று விட எண்ணியவள், பின் ஷைலேந்தரி குறுஞ்செய்தி அனுப்பியதில் வீட்டிற்கே வந்தாள்.
போலீஸ் ஜீப்பும் யுக்தாவின் காரும் நின்றிருந்ததில் யோசனையுடன் உள்ளே சென்றவள் அங்கு யுக்தாவைக் கண்டு அதிர்ந்தாள்.
‘இவன் என்ன எனக்கு முன்னாடி வந்து உக்காந்துருக்கான்…’ என்ற கேள்வியை முகத்தில் தாங்கியபடி உள்ளே செல்ல, யுக்தாவோ “சில வருஷத்துக்கு முன்னாடி, இதே வீட்டுக்கு மருமகளா வந்த அஸ்வினியை கொடுமைப்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்குனீங்களே ஞாபகம் இருக்கா?” என்றவனின் குரலில் அதே நக்கல்.
மோகன் தான், “ஜஸ்ட் ஸ்டாப் இட். இங்க யாரும் யாரையும் கொடுமைப்படுத்தல. நீ வேணும்னே எங்களை கார்னர் பண்ற!” என்றார் அதட்டலாக.
“ஓஹோ! அப்ப ஏன் அவங்களை யாரோ ஒரு நாலு பேர் கொடூரமா தாக்கிக் கொலை செஞ்சுப் போட்டதை பத்தி ஒரு சின்ன கேஸ் கூட கொடுக்காம, அது ஆக்சிடெண்ட்னு நோகாம கேஸை முடிச்சு விட்டீங்க?” குத்திக் கிளறும் ஆதங்கத்தில் வினவினான் யுக்தா.
அதில் திகைத்தது பெரியவர்கள் மட்டுமல்ல இளையவர்களும் தான்.
விஸ்வயுகா பேச்சற்று நிற்க, அவளையும் கூர்விழிகளால் வதம் செய்தவன், சிவகாமியைப் பார்த்து பேசினான்.
“அந்தக் கொலையை செஞ்சது நீங்க தான்னு எனக்கு டவுட் இருக்கு மிஸஸ் சிவகாமி” என அலுங்காமல் அவர் தலையில் இடியை இறக்க, “வாட்? நான் எதுக்கு அவளைக் கொலை செய்யணும். நான் கொலை செய்றதுக்குலாம் அவள் வொர்த் இல்ல” என்றவரின் பேச்சில் அப்போதும் அகங்காரம் குறையவில்லை.
“காமெடி பண்ணாதீங்க மிஸஸ் சிவகாமி. வொர்த் இல்லாம தான், அவங்க இறக்குறது மூணு மாசத்துக்கு ஒரு தடவை லாரி ஆக்சிடெண்ட்டும், ஆறு மாசத்துக்கு முன்னாடி கார் ஆக்சிடெண்ட்டும் பண்ண பார்த்த்தீங்களா? ச்சு ச்சு” என போலியாகப் பரிதாபப்பட்டான்.
சடாரென திகைத்துப் போன இளையவர்கள் நால்வரும் சிவகாமியை நோக்கி கோபப்பார்வை வீச, சிவகாமிக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.
“வாய்க்கு வந்ததை உளறாத. உங்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?”
“எனக்குத் தெரியுமே. மேடம் ஆதாரம் இல்லாம எதையும் நம்ப மாட்டீங்களே. இருக்கு சிவகாமி மேடம் இருக்கு. உன் வீட்டுப் பிரைவேட் லாக்கர்ல வெறும் சொத்துப்பத்திரமும் ஆன்ட்டிக் ஜுவல்ஸும் தான் இருக்கறதா சொன்னா உங்க பொண்ணு. ஆனா அதுல உங்க ஒட்டுமொத்த கேடித்தனத்தையும் பதுக்கி வச்சுருக்கீங்களே.
நீங்க 10 ஸ்டார் ஹோட்டல் கட்டுறதுக்காக, குடிசை மாற்று வாரியத்துல வாழ்ந்துட்டு இருந்த. கிட்டத்தட்ட 100 குடும்பத்தை இடமாற்றம் பண்ணித் தரேன்னு ஏமாத்தி அவங்களை நடுத்தெருவுல விட்டதுக்காக, அஸ்வினி மறைமுகமா உங்க மேல கேஸ் போட்டாங்க. அந்த கேஸை சல்லி சல்லியா நொறுக்க உங்களுக்கு தான் எல்லா பலமும் இருக்கே. சோ, அந்தக் கடுப்புல நீங்க அஸ்வினியை ரொம்ப வெர்பல் அபியூஸ் பண்ணிருக்கீங்க. அதுக்கு அப்பறமும் அஸ்வினி உங்க தொழில்ல குறுக்கிட்டது பிடிக்காம அவங்களைக் கொலை செய்ய முயற்சி செஞ்சதுக்கான ஆதாரம்… அந்த லாரி ட்ரைவரோட நம்பர், உங்க ப்ரைவேட் மொபைல் போன், அஸ்வினியோடது கொலைன்னு தெரியாம இருக்குறதுக்காக அவங்க சம்பந்தப்பட்ட ஆதாரம் எல்லாத்தையும் போலீஸ்ல ஒப்படைக்காமல் கமுக்கமா உங்க லாக்கர்ல பதுக்கி வச்ச டாகுமென்ட்ஸ்… இன்னும் பிளா பிளா எல்லாமே என் கைல” என்று ஒவ்வொன்றையும் எடுத்து சாவகாசமாக டீ – பாய் மீது போட்டான்.
சிவகாமிக்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்ட நொடி அது.
“இது… இதெல்லாம் நீ எப்படி ஆக்சஸ் பண்ணுன?” எனக் கேட்டபடி அவர் மைத்ரேயனை முறைக்க, யுக்தாவோ அவர் முன் சொடுக்கிட்டு, “தன்னோட தாயை உள்ள தள்ள என் பொண்டாட்டி குடுத்த க்ளூ வச்சு தான் உங்க வீட்டுக்குள்ள புகுந்து லாக்கரை ஆக்சஸ் பண்ணி, ஆதாரத்தை எல்லாம் எடுத்து, அதை யூஸ் பண்ணி வாரண்ட் ரெடி செஞ்சு வச்சுருக்கேன் மிஸஸ் சிவகாமி…” என நக்கலாகப் பதில் அளித்தான்.
“பொண்டாட்டியா?” சிவகாமி புரியாமல் பார்க்க,
அத்தனை நேரமும் சிவகாமியை வெறித்துக்கொண்டிருந்த விஸ்வயுகா மெல்லத் தடுமாறினாள்.
யுக்தாவிடம் ‘நோ’ வென கண்ணைக் காட்ட, அவனோ அதனைக் கண்டுகொண்டானில்லை.
துள்ளலுடன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “என் பொண்டாட்டி உங்க பொண்ணு தான் அத்தை… ஏஞ்சல் நான் கட்டுன தாலியை என் மாமியார்கிட்ட காட்டுப் பார்க்கலாம்…” எனச் செல்லமாக அழைக்க, அத்தனை பேரின் பார்வையும் இப்போது விஸ்வயுகாவின் மீது நிலைகொண்டது.
“யுக்தா ஜஸ்ட் ஸ்டாப் இட்” அவள் முணுமுணுப்புடன் மறுக்க, “அட இவ்ளோ நேரம் என் கூட கூத்தடிச்சு, மொத்தத்தையும் காட்டுனப்ப இல்லாத கூச்சம், தாலியைக் காட்ட மட்டும் வருதாக்கும்…” என வார்த்தைகளில் விஷம் தோய்த்து சாடினான்.
இதனை முற்றிலும் எதிர்பாராதவளுக்கு சில நொடிகள் பேச்சே வரவில்லை. இருவருக்குள்ளும் நிகழ்ந்த இனிய நேச பரிமாற்றத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவானென்று அவள் கனவிலும் எண்ணவில்லை. அவனை நம்பக்கூடாதென்று உள்மனது அடித்துக் கூறியதே! ஆனாலும் அவனிடம் தஞ்சம் புகுந்த மனதைக் கலைத்தது அவன் தானே!
சிலையாக சமைந்து நின்றவளைத் துளியும் கணக்கில் எடுக்காமல் அவள் அணிந்திருந்த தாலியை எடுத்து வெளியில் போட்டான்.
பின் அவளைத் தோளோடு சேர்த்து அழுத்தமாக அணைத்து, “என் பொண்டாட்டி தான் உங்கப் பொண்ணு மாமியாரே. புருஷனுக்காக உங்க சீக்ரட்ட எல்லாம் ஒப்பிச்சுட்டா. ஆனா பாருங்க என்ன தான் பொண்டாட்டியா இருந்தாலும் கொலையை மறைச்சவளை கொஞ்சவா முடியும். சோ எல்லாரையும் என் ஆபிஸ்க்கு கூட்டிட்டுப் போய் முறைப்படி விசாரிச்சு விஷயத்தை வாங்குறேன்… ரைட்டா ஏஞ்சல்?” என அவளிடம் அபிப்ராயம் கேட்டுக்கொண்டவனை சிவந்த விழிகளுடன் ஏறிட்டாள்.
சிவகாமி மகள் மீது எழுந்த கோபத்தை முயன்று அடக்கிக்கொள்ள, அவரை விட மற்ற மூவரையும் எதிர்கொள்வதே விஸ்வயுகாவிற்கு கடினமாக இருந்தது.
‘ஏன் விஸ்வூ இப்படி?’ என்ற ஆதங்கத்தைத் தாங்கி இருந்த மூவரின் பார்வையும் அவளைக் குற்ற உணர்விற்கு ஆளாக்க, அதன் பிறகு மடமடவென வந்த யுக்தாவின் குழுவினர் சிவகாமியின் குடும்பத்தைக் கொத்தாக தூக்கியது.
காயத்ரி புலம்பித் தள்ளினார். “எல்லாம் உங்க அண்ணியால வந்தது. அவ தான அந்தக் கொலையை மூடி மறைக்க சொன்னா…” எனப் புலம்பினாலும் மோகன் அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியில் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.
யுக்தாவிற்கும் அவர்கள் எப்படியும் வெளியில் வந்து விடுவார்கள் என்று தெரியும். ஆனால் அதற்குள் விஷயத்தை வாங்கி விட வேண்டுமென்ற வெறி பரவ, நந்தேஷ் மைத்ரேயன் ஷைலேந்தரி மூவரையும் தனி அறையிலும், சிவகாமி விஸ்வயுகாவைத் தனி அறையிலும் மீதி உள்ளவர்களைத் தனி அறையிலுமாக விசாரித்துக் கொண்டிருந்தான்.
இளையவர்கள் மூவரும் வாயைத் திறக்கவே இல்லை.
“என்ன ஷைலு… திறந்த வாயை மூடாம நக்கலடிப்ப. இப்ப என்ன பெவிகால் போட்டுட்டியா?” யுக்தா அவளிடம் நக்கலடிக்க,
“நீ கேட்ட கேள்விக்கு பதில் நான் சொல்ல மாட்டேன் யுக்தா. உன் இன்வெஸ்டிகேஷன் நியாயம் தான்… ஐ அக்ரீ. ஆனா, என் அக்காவை உடைச்ச பாரு… ஐ நெவர் பர்கிவ் யூ!” என்றாள் உடைந்த குரலில்.
அவளை இடுப்பில் கை வைத்து முறைத்தவன், மைத்ரேயனை சப்பென அறைந்தான். ஆனால் அவனது கோபப்பார்வை ஷைலேந்தரியிடம் பரவியது.
“கொலையை மறைச்சுட்டு டயலாக் வேற. வேற யார் இந்தக் கொலையை மறைச்சுட்டு இருந்துருந்தாலும் இப்படி ஒரு காரியத்தை செஞ்சதுக்கு தூக்கி உள்ள மட்டும் போட்டுட்டு இருந்துருப்பேன். ஆனா செஞ்சது உன் அக்காவா இருக்காளே. அது தான்… அது தான் என் ஆத்திரத்தை அதிகம் ஆக்கிடுச்சு…” என்று மேஜையை நங்கென குத்தினான்.
“அதுக்கு ஏன்டா அவனை அடிக்கிற” ஷைலேந்தரி மைத்ரேயனைப் பிடிக்க, யுக்தா மீண்டும் அவனையே தாக்கினான்.
“ஸ்டாப் திஸ் யுக்தா. விசாரணைன்னு கூட்டிட்டு வந்துட்டு அடிக்கிறது வயலன்ஸ்…” என்றிட நந்தேஷ் மிரண்டு அமர்ந்திருந்தான்.
மைத்ரேயனோ “நீ உன் திருவாயை மூடுடி. நீ பேச பேச அவன் என்னை அடிக்கிறான்…” எனக் கன்னத்தில் கை வைக்க, “புரட்சிப் பெண்ணா மாற விட மாட்டீங்களே” என அவளும் முறைத்தாள்.
மைத்ரேயன் தான், “என்னடா கொலையை மறைச்சோம் மறைச்சோம்னு பினாத்திட்டு இருக்க. முதல்ல அந்த சீரியல் கில்லர் கேஸை கண்டுபிடிச்சியா? இல்ல யார் தான் சித்தியை கொலை செஞ்சாங்கன்னு கண்டுபிடிச்சியா? அதைக் கண்டுபிடிக்காம கொலையை ஆக்சிடென்ட்னு மறைச்சது தான் உனக்கு தப்பா தெரியுதா? முதல்ல, நீ ஏன் அஸ்வினி சித்தி கேஸ்க்குள்ள வர்ற?” என எகிறினான்.
“நான் வருவேன். நான் தான வரணும்…”
“அதான் கேட்குறேன் நீ ஏன் வர்ற?”
“ஏன்னா அவங்க என் அம்மா!” யுக்தா உச்சஸ்தாதியில் கத்தினான்.
நந்தேஷ் தான், “இந்தா உருட்டுக்கும் ஒரு அளவு இருக்கு. சித்திக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு… அதுவும் எங்களுக்கு தெரியாம இவ்ளோ பெருசா எங்க வச்சு வளர்த்தாங்க…” என்றவனோ நம்ப இயலாமல் கேட்க, மைத்ரேயன் யோசனையில் ஆழ்ந்தான்.
ஷைலேந்தரியோ, “எதே நீ சித்திக்குப் பையனா? அப்ப நீ எனக்கு அண்ணன் முறை ஆகிடுவியா. அண்ணன் முறையில இருக்குறவனையா நான் சைட் அடிச்சேன்… இரு இரு இரு… என்னக் கருமாந்திரம் ரிலேஷன்ஷிப் இது… நீ எதுக்கு விஸ்வூக்கு தாலி கட்டுன. அவள் உனக்கு தங்கச்சி முறை” என சொல்லி முடிக்கும் முன்னே, யுக்தா அவளை அடக்கினான்.
“மூடு! அவங்க வயித்துல பிறந்தா தான் நான் அவங்க பையனா இருக்க முடியுமா? என்னைத் தத்தெடுத்து வளர்த்தாங்க” என்றான் அவசரமாக.
“எங்க உன்னைத் தத்து எடுத்த ஆதாரம் ஏதாவது காமி… அவங்க இல்லைன்னு நீயா இஷ்டத்துக்கு பேசாத” மைத்ரேயன் முறைக்க,
ஒரு நொடி உள்ளே சென்ற குரலில் லேசாய் தடுமாறினான் யுக்தா.
“லீகலா தத்து எடுக்கல. ஆனா என்னை அவங்க தான் வளர்த்தாங்க. வளர்த்தவங்களா இருந்தாலும் மொத்த பாசத்தையும் காட்டுனாங்க. உங்களுக்கு விட அதிகமா!” என்றவனின் குரலில் அழுத்தமும் கர்வமும் அளவுக்கு அதிகமாக எழுந்தது.
ஆதங்கமும் ஆத்திரமும் நிரம்ப விறுவிறுவென அங்கிருந்து அகன்று அவனது அறைக்குச் சென்றவன், மேஜை மீது கையூன்றிக் கண்ணை மூடி நின்றான்.
மூடிய விழிகளுக்குள் நீரும் நிறைந்து போக, அஸ்வினியின் அன்பு தளும்பும் முகம் கலங்களாகக் காட்சியளித்தது.
மோகம் வலுக்கும்
மேகா
சிவகாமி😡😡😡