Loading

 

நான்கு பெண்களையும் கடத்தியதில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திணற, துருவ் உடனடியாக, அனைத்து கேமராவையும் செக் செய்தான்.

ஆனால் சரியாக, அவளை தூக்கும்போது மட்டும் கேமரா வேலை செய்யாமல் இருந்திருக்கிறது.

ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து வெளியில் சென்றிருப்பான் செக்கியூரிட்டியை மீறி… என்று நினைத்துக் கொண்டே, போலீசில் சொல்லியும், எந்த வழியாக சென்றிருப்பார்கள் என்று கெஸ் செய்து, செக் போஸ்டை மடக்கி தேட ஆரம்பிப்பதில் இருந்து எல்லாம் செய்ததிலேயே இரண்டு மணி நேரம் கழிந்தது.

ஆனால் பசங்களுக்கு தான் ஏதோ இரண்டு மாதம் ஆனது போல் இருந்தது தத்தம் துணை இல்லாமல்…

துருவிற்கு அவள் லண்டனில் இருந்து கிளம்பும் போது, மனது ஒரு மாதிரி பிசைந்தது போலயே இப்பொழுதும் இருந்ததே அவனுக்கு மிகவும் பயத்தை கொடுத்தது.

“இல்ல இல்ல என் ஹனியை நான் இன்னொரு தடவை இழக்க மாட்டேன். அவளுக்கு ஒன்னும் ஆகாது… ஷி இஸ் பிரேவ்…” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

அர்ஜுனுக்கோ இத்தனை வருடம் கழித்து இப்பொழுது தான், அவள் தான் சொல்வதை காதில் வாங்கி ஒரு நல்ல முடிவாக எடுக்கும் வேளையில் இப்படி ஆகி விட்டதே… அவள் என்ன செய்வாளோ என்று நடுங்கினான்.

அஜய்க்கு சற்று முன், சுஜி பேசியதும், அவளின் முத்தமும் அழுகையை கொடுத்தது.

இவர்கள் இப்படி என்றால், விதுனுக்கு நேரடியாக பதட்டத்தை காட்டவும் முடியவில்லை. துருவை கொலை செய்ய முயற்சித்தவனின் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னால், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தவன், இருந்தும் தன்னால் தான் அவளை கடத்தி விட்டார்கள் என்று எண்ணியும் உள்ளுக்குள்ளே கரைந்தான்.

பின் துருவ் இப்படியே இருந்தால் எதுவும் ஆகாது என்று நினைத்து, உத்ரா காருக்கு அருகில் சென்று ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று பார்த்தான்.

மற்றவர்களையும் தேட சொல்ல, நால்வரும் பார்க்கிங் – இல் தேடினார்கள்.

ஆனால், தடயம் தான் கிடைக்க வில்லை. ஒரு மிரட்டல் கால்களும் வராமல், குழம்பி தவித்துக்கொண்டிருக்கையில் திடீரென துருவ் “அர்ஜுன், சைதன்யா ஹாஸ்பிடல்ல தான இருக்கான்” என்று கேட்க, அர்ஜுனுக்கு அப்பொழுது தான், மீராவை காணவில்லை என்று சொன்ன போது மருத்துவமனையில் எல்லாரும் ஏதோ பதட்டமாக இருந்தது உறுத்தியது.

 அதுவும் போக, முந்தைய நாள் அவன் உடல்நிலையில் சிறிது மாற்றம் தெரிகிறது என்று ஒரு மருத்துவர் அவனிடம் சொல்ல, அவனை என்ன செய்வது என்று துருவிடம் கேட்க மறந்து விட்டான்.

இப்பொழுது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து கேட்டதில், சைதன்யாவை யாரோ அங்கிருந்து தூக்கி சென்று விட்டார்கள் என்று சொல்ல, துருவ் கோபத்தில் காரை நங்கென்று குத்தினான்.

“அவனை அவனை கொன்னுருக்கணும்… அவனை விட்டு வச்சதுதான் நான் பண்ணுன தப்பு.” என்றதில் அர்ஜுன் அவனை தடுத்து,

“இல்லை துருவ் அப்படியே அவன் தான் காரணம்னாளும், இதை அவன் தனியா செஞ்சுருக்க முடியாது. யாரோட உதவியும் இல்லாம” என்று சொல்ல,

துருவ் “யாரு… யாரு… யாரு அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கணும்.” என்று தலையை தட்டி யோசிக்க பாவம் அவனுக்கு யோசிக்கத்தான் முடியவில்லை. மீண்டும் மீண்டும் காரை போட்டு குத்தி உடைத்துக் கொண்டிருந்தான்.

அவனை அமைதிப்படுத்துவதே மற்ற மூவருக்கும் பெரும் பாடாக இருந்தது. இப்படி அவன் காரை உடைத்து கொண்டிருக்கையிலேயே காரினுள் சென்று கண்ணை மூடி அமர, அவனுக்கு “புருஷா” என்று அவள் கூப்பிடுவது போலவே இருந்து கண்ணீரை கொடுத்தது.

தலையில் கை வைத்து, கீழே குனிந்து அமர்ந்திருந்தவன், கீழே ஒரு பேப்பரும் பேனாவும் சிதறி இருந்ததை கண்டு, அதனை வேகமாக எடுத்தான்.

ஆனால் அதில் ஏதோ கிறுக்கி தான் இருந்தது. உடனே வெளியில் வந்து மற்ற மூவரிடமும் அதனை காண்பிக்க, அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.  

துருவ் “கண்டிப்பா இது உதி தான் எழுதிருக்கனும். அவளை தூக்கும் போது, க்ளூ குடுக்க ட்ரை பண்ணிருக்கா. ஆனால் அது என்னன்னு புரியல” என்று என்று சில நேரம் அந்த பேப்பரில் “கே” என்ற எழுத்து போல இருந்ததை பார்க்க,

விதுன் “ஒருவேளை இது அவளை கடத்துனவனோட ஃபர்ஸ்ட் லெட்டரா இருக்குமோ.” என்று கேட்க,

அர்ஜுன், “இருக்கலாம். பட் இதை பாரேன் இந்த சைட் திருப்பி பார்த்தா, இது வேற மாதிரி இருக்கு ஏதோ படம் மாதிரி” என்று திருப்பி காட்ட, துருவ் அதை கூர்மையாக பார்த்து விட்டு, “இது அவள் க்ளையண்ட்ஸ் யாரோட லோகோவா இருக்கலாம்ல” என்றான் யோசனையாக.

அஜய் அதனை வாங்கி நன்றாக பார்த்தான். அதை திருப்பி திருப்பி பார்க்க, அப்பொழுது தான், டக்கென்று அவனுக்கு இது துருவ் இடித்த பில்டிங்கின் ஓனர் கிருபாவின் கம்பெனி லோகோ என்று தெரிந்தது.

அந்த லோகோவை அவள் அவசர அவசரமாக கிறுக்கி விட்டிருக்கிறாள். என்று சொன்னதும் விறுவிறுவென நால்வரும் செயல்பட்டனர்.

சுற்றிலும்  இருட்டாய் இருக்க, உத்ரா மெதுவாக கண் விழித்தாள். கை கால் எல்லாம் கட்டப்பட்டு இருந்தது.

யாரோ அவள் மூக்கில் மயக்க மருந்து வைப்பது போல் இருக்க, காரின் மிரர் வழியே பார்த்தவளுக்கு அது, கிருபாவின் ஆள் என்று தெரிந்தது. முடிந்த அளவு மூச்சை அடக்கி திணறியவள், தட்டு தடுமாறி பேனாவை எடுத்து சீட்டில் படுத்து, அந்த லோகோவை போட்டு விட்டு மயங்கி விட்டாள். சுற்றி பார்க்க, அது ஏதோ ஒரு பெரிய சரக்கு வேன் மாதிரி இருந்தது.

என்ன நடக்குது இங்க என்று புரியாமல் அருகில் பார்க்க, மற்ற மூன்று பெண்களும், மயங்கிய நிலையில் கை கால்கள் கட்டிய நிலையில் படுத்திருந்தனர்.

உதி சுஜியை இடித்து, மயக்கம் தெளிய வைக்க, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரில் எதையோ எடுக்க போக, சட்டென்று மயங்கியது போல் இருந்தது அவளுக்கு.

சுஜி, “என்ன பங்கு, யாரு நம்மளை கடத்துனது” என்று புரியாமல் மெதுவாக கேட்க,

உத்ரா, “தெரியல. பட் அவன் செத்தான்.” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மீரா கண்விழித்தாள்.

மீரா, அர்ஜுனை பார்க்கச் செல்லும் வழியில் ஒரு கார் திடீரென வழிமறித்து, தன்னை கடத்தி விட்டது என சொல்ல,

உத்ரா, “நம்ம மூணு பேரையும் கடத்துனாங்க ஓகே. அதுல ஒரு லாஜிக் இருக்கு. இவளை ஏன் கடத்துனாங்க…” என்று அணுவைப் பார்த்துக் கேட்க,

சுஜி, “அதை அவளையே எழுப்பி கேப்போம்” என்று அவளை இடித்தாள்.

அதில் கண்விழித்த அனு பயந்து கத்திக் கொண்டே, “என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க எனக்கு ஒன்னும் தெரியாது…” என்று உத்ராவை பார்த்து மிரள,

“லூசா நீ… கத்தாத.” என்று உத்ரா பல்லைக் கடிக்க,

அனு, “எதுக்கு என்னை கடத்துனீங்க. எனக்கு ஒன்னும் தெரியாது.” என்று அவள் அப்பா மேல் பழி உணர்ச்சியில் அவளை கடத்திவிட்டதாக நினைத்தாள்.

உத்ரா கடுப்பாக, “என்னை பார்த்தா உனக்கு கடத்தல் பண்றவ மாதிரி இருக்கா. மூஞ்சியை பேத்துருவேன்…” என்று மிரட்ட, அவள் அரண்டு இருக்க,

மீரா, “ப்ச், அனு. யாரோ நம்மளை கடத்திட்டாங்க. உன்னை நாங்க கடத்துனா எங்க கையும் ஏன் கட்டி இருக்கு” என்று கேட்க, அவள் அப்பொழுது தான் அதனையே கவனித்தாள்.

ஆமால்ல என்று பல்லைக் காட்ட.. உத்ரா, இவளை எதுக்கு கடத்துனானுங்க என்று புரியாமல் இப்பொழுது இந்த வேன் எங்கு செல்கிறது என்றும் தெரியாமல், குழம்பி போனாள்.

ஒரு இடத்தில் வேன் நிற்பது போல் இருக்க, உத்ரா, “எல்லாரும் மயங்குன மாதிரியே இருங்க. அவங்க என்ன பேசுனாலும், என்ன பண்ணுனாலும் ரியாக்ஷன் காட்டாதீங்க ஓகே வா…” என்று சொல்ல மீரா, பயத்தில் நடுங்கினாள்.

மீராவை சமாதானபடுத்தி பின், அனுவை சமாளித்து, நால்வரும் மயங்கி இருப்பது போல் நடிக்க, அவர்களை யாரோ தூக்கி கொண்டு, ஒரு இடத்தில் போட்டது போல் இருந்தது.

உத்ரா லேசாக கண்ணைத் திறந்து பார்க்க, ஒருவன், “இவளுங்களை காணோம்னு அவனுங்க ஊர் ஃபுல்லா சுத்திகிட்டு இருக்கானுங்க. ஆனால் இவளுங்களோட எலும்பு துண்டு கூட அவங்களுக்கு கிடைக்க கூடாது. அதிலயும் இந்த உத்ராவை, கொஞ்ச கொஞ்சமா சாகடிக்கணும்.” என்று வெறி நிறைந்த குரலில் பேச, பெண்கள் அனைவர்க்கும் உடலெல்லாம் நடுங்கியது.

உத்ராவிற்கு அந்த குரலிலேயே தெரிந்து விட்டது. அது, கிருபாவுடைய குரல் என்று…

மேலும் அவன், “அந்த துருவ்… தேவையில்லாமல் என் விஷயத்துல தலையிட்டு, என்னையவே மிரட்டி, என் பிசினெஸ முடக்கி, எனக்கு தண்ணி காட்டிட்டான்.

அது போக என் ஆஃபீஸ்ல எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சு அசிங்கப்படுத்திட்டான்…” என்று கோபமாக கூறியவன்,

மேலும், “நான் கூட, சொன்னேன்… அதான் அவளை நான் எதுவும் பண்ணலையே அப்பறம் எதுக்கு இப்படி பண்றன்னு அதற்கு அவன், அவளை அழிக்கணும்னு நீ நினைச்சா கூட உன்னை சாவடிச்சுருவேன் என்று என்னையவே கொலை நடுங்க வச்ட்டான்…” என்றான்.

அவன் பேசியதை கேட்ட உத்ரா, அந்த நேரத்திலும் துருவை நினைத்து மெலிதாய் சிரித்துக் கொண்டாள்.

மற்றொருவன், “அவன் மட்டும் இல்ல.. அவன் காப்பாத்தணும்ன்னு நினைச்ச அந்த உத்ராவும், அவள் குடும்பமும் நரக வேதனை அனுபவிக்கனும். என் அண்ணனை படுத்த படுக்கையாக்கினவளை நான் சும்மா விட மாட்டேன்” என்றான்.

இந்த குரல் யாருடையது என உத்ராவிற்கு தெரியவில்லை. ஆனால் அவளுக்கு ஒரு வீல் சேர் மட்டும் தான் தெரிந்தது. அதிலேயே அவள், இது நிச்சயமாய் சைதன்யா சம்பந்தப்பட்டவனாக தான் இருக்கும் என்று கணித்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, அந்த மூவரும் பக்கத்துக்கு அறைக்கு செல்வது போல் இருந்தது.

அவர்களை சுற்றி அடியாட்கள் இருக்க உத்ரா மெல்ல கண்ணை திறந்து, அவர்களுக்கு சந்தேகம் வராதது போல, பின்னாடியே பதுங்கி சென்று, அவள் கை கட்டை, ஒரு டேபிளின் ஆணியில் வைத்து, அறுக்க பார்த்தாள்.

ஆனால். அது மிகவும் கடினமாக தான் இருந்தது. அந்த ஆணி இவள் கையையும் சேர்ந்தே பதம் பார்த்தது.

சிறிது நேரத்தில், வெளியில் வந்த ஆண்கள், அந்த நான்கு பெண்கள் மேலும் தண்ணீரை ஊற்ற எல்லாரும் பதறி எழுந்தனர்.

உத்ரா, துணிச்சலாய் கூர்மையாய் கிருபாவையும் மற்றவர்களையும் பார்த்து விட்டு , வீல் சேரில் அசைவில்லாமல் கண்கள் மட்டும் அவளை கோபத்துடன் நோக்கி கொண்டிருந்த சைதன்யாவை கண்டவள்,

“டேய் உனக்கு எவ்ளோ பட்டாலும் புத்தியே வராதா.” என்று எக்களிக்க, சைதன்யாவின் தம்பி ரித்திஸ் உத்ராவை சப்பென்று அறைந்தான்.

அவன் சைதன்யாவின் ஒன்று விட்ட தம்பி. சைதன்யாவிற்கு பார்வை மட்டும் தான் வேலை செய்யும், வாய் பேசவும் முடியாது. அவனை மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்து, அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை பழி வாங்கவே அந்த ரித்தீஷ் கிருபாவுடன் சேர்ந்து இவ்வளவும் செய்தான்.

ரித்தீஷ் “ஏண்டி நீ என்ன பெரிய இவளா…” என்று மற்ற மூன்று பெண்களையும் சேர்த்தே அடித்தான்.

அதில் உத்ரா, “உனக்கு என் மேல தான கோபம் என்னை என்ன வேணா பண்ணு அவங்களை விட்டுடு” என்று மூச்சு வாங்கி கொண்டு பேச,

அவன், “அப்டியா, உன்னை என்ன வேணாலும் பண்ணிக்க வா” என்று அருகில் வர, அவள் முட்டியை வைத்து, அவன் அடி வயிற்றிலேயே எத்தினாள். அதில் அவனுக்கு கண்ணெல்லாம் சிவக்க, அவளை விட்டு விட்டு, சுஜியை அடித்தான்.

உத்ரா “வேணாம் ப்ளீஸ் அவளை விட்டுடு” என்று சொன்னதை கேட்காமல், அனுவை அடிக்க வர, அப்பொழுது தான் ஒரு அடியாள் வந்து, இவள் மினிஸ்டரின் மகள் என்று சொன்னதும், அவன் யோசனையாய் புருவத்தை சுருக்கினான்.

விதுவுடன் பேசிக்கொண்டிருக்கவும், அவளையும் தூக்கி வந்து விட்டனர். உத்ரா சட்டென்று, “அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவளை விட்ருங்க. அவள் போகட்டும் ப்ளீஸ்” என்று சொல்ல,

ரித்தீஷ் தேவையில்லாமல் மினிஸ்டரிடம் வம்பு வளர்க்க வேண்டாம் என்று யோசிக்க, பின், அவளை மட்டும் ஒன்றும் செய்யாமல், மற்ற பெண்களை தாக்கினான்.

அப்பொழுது அவர்கள் கவனிக்காத நேரம், அனு உத்ராவிற்கு கண்ணை காட்டி அங்கு கீழே கிடந்த கத்தியை அவள் அருகில் தள்ளி விட்டாள்.

உத்ரா சட்டென்று அதனை எடுத்து, கை கட்டை எடுத்து விட்டு, ரித்திஷை குத்து குத்து என குத்தி தள்ளி விட்டு, அவளை தாக்க வந்த மற்றவர்களையும் அடித்தாள்.

இதற்கிடையில் மீராவின் கைகட்டை அவள் அவிழ்க்க, அவள் விறுவிறுவென, சுஜியையும், அனுவையும் விடுவித்தாள்.

 அவர்களை அடிக்க வந்தவனை சுஜி காலை தடுக்கி விட, மீரா, அவன் கையை பிடித்து  வளைக்க, அனு அங்கிருந்த கட்டையை எடுத்து மண்டையிலேயே நன்கு அடித்தாள்.

உத்ரா, கிருபாவின் சட்டையை பிடித்து, மூக்கிலேயே அடிக்க, அவன் சில்லுமூக்கு உடைந்து ரத்தம் பொல பொலவென கொட்டியது.

அப்பொழுது உத்ராவை அடிக்க வந்த ஒருவனை, சுஜி இழுத்து கீழே போட்டு நெஞ்சிலேயே மிதிக்க, மீரா அவனின் காலிலேயே ஏறி மிதிக்க, அனு அந்த கட்டையை வைத்தே, அவன் மண்டையை அடித்தாள்.

ஆனால் அவளும் வெகுநேரமாய் அடித்ததில், அவன் கல்லு மாதிரி இருந்ததை பார்த்த சுஜி, அவளை தடுத்து கட்டையை வாங்கி ஒரு போடு போட அவன் மயங்கியே விட்டான்.

அனு “வாவ்… நானும் படத்துல ஒரு அடி அடிச்சாலே மயங்கிடுவாங்களே இன்னும் மயங்கலையேன்னு நினைச்சேன்…” என்று சொல்ல,

மீரா, “ஆமா உன்னை அவனை அடிக்க சொன்னா நீ பள்ளிவாசல்ல பண்ற மாதிரி மந்திரிச்சு விட்டுகிட்டு இருக்க” என்று முறைக்க,

அவள் “ஹி ஹி நான் அவ்ளோ வீக் ஆ இல்லை அவன் அவ்ளோ ஸ்ட்ராங் ஆன்னு தெரியல..” என்று சொல்லையிலேயே  ஒருவன் அவர்கள் அருகில் வர, அனு மீண்டும் ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்க, அவன் அசையவே இல்லை.

சுஜி, வாயை பொத்திகொண்டு அனுவை பார்த்து சிரித்து “அப்போ நீ தான் வீக்” என்று மீராவிடம் ஹை ஃபை கொடுத்து கொண்டு, அவனை சுற்றி வளைத்து அடி பிண்ணி எடுத்தனர்.

ரித்திஷையும் கிருபாவையும் அடித்து தள்ளி விட்டு, அந்த இடத்தின் ஷட்டரை ஓபன் செய்து, உத்ரா அனைவரையும் வெளியில் அழைக்க மீராவும் அனுவும் வெளியில் வந்து விட்டனர். உத்ராவும் பாதி தூரம் சென்று விட்டாள். ஆனால் கடைசியாய் வந்த சுஜி ரித்திஷிடம் மாட்டிக்கொண்டாள்.

அவளை முட்டி போட்டு அமர வைத்து, அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவன் உத்ராவை “உள்ள வா” என்று அழைக்க,

அவள் பயந்து “வேணாம் அவளை ஒன்னும் பண்ணிடாத” என்று மிரட்ட, அவன் மேலும் கத்தியை அழுத்தி, “நீ இப்போ வரலை… இவள் தலை துண்டாகிடும்.” என்று சொன்னதும்,

சுஜி, “வேணாம் உதி வராத. உன்னை சும்மா விட மாட்டான் நீ போய்டு உதி. எல்லாரும் போங்க”  என்று அவர்களை அனுப்ப முயன்றாள்.

அவள் அன்பில் நெகிழ்ந்தவள், “நீ இல்லாமல் நான் போக மாட்டேன்” என்று கண் கலங்க கூறி விட்டு அருகில் வர, மீராவும், அனுவும் மீண்டும் உள்ளே வந்தனர்.

உத்ரா, அவர்களை அவசரமாக, “நீங்க வெளிய போங்க” என்று பல்லைக் கடிக்க, மீராவும், அனுவும் முடியாது என்று தலையாட்டினர்.

அதற்குள் ரித்தீஷின் ஆட்கள் அவர்கள் இருவரையும் பிடித்து கொள்ள,  ரித்தீஷ், சுஜியின் கழுத்தில் கத்தியை மேலும் அழுத்தியதில் கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

உதி நடுங்கி, “ப்ளீஸ் அவளை விட்டுடு… உனக்கு என்மேல தான கோபம்… அவளை விட்டுடு ப்ளீஸ்” என்று மன்றாட, அவள் கெஞ்சுவதை, சைதன்யாவும் சிரித்த கண்களுடன் பார்த்தான்.

ரித்தீஷ் “உன் ஃப்ரெண்ட் மேல உனக்கு இவ்ளோ பாசமா ஹ்ம்ம்…” என்று கழுத்தில் கத்தியை சொருகபோனான்.

உதி முட்டி போட்டு, “உன்னை கெஞ்சி கேக்குறேன் அவளை விட்டுடு. என்னை என்ன வேணாலும் டார்ச்சர் பண்ணு. ப்ளீஸ் அப்டி பண்ணாத ரத்தம் வருதுடா அவளுக்கு… ப்ளீஸ்” என்று கதறி அழுக, சுஜி, கொஞ்ச கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டு,

“போய்டு உதி… வெளிய போய்டு” என்று புலம்ப, மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சுஜியை கீழே தள்ளி விட்டு, உதி அருகில் வந்த ரித்திஷ் “உன்னை டார்ச்சர் பண்றதுக்கு தான கடத்திட்டு வந்ததே.” என்று கத்தியால் அவள் முகத்தை வருட, கிருபா ஒரு கட்டையை எடுத்து அவளை அடித்தான். “என்னையவாடி அடிக்கிற” என்று..

அவன் மேலும் ஒரு அடி அடிக்க போனது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது, அந்த நீளமான குடோனின் முன் வாசலில் இருந்து பின் வாசலில் சென்று விழுந்தான் துருவ் அடித்த அடியில்.

அவனிடம் சென்று கண்ணில் தீப்பொறி பறக்க, ரௌத்திரமாய் நின்றிருந்தவன், “யார் மேல டா கை வச்ச. நான் சொல்லிருக்கேன்ல டா. அவளை அழிக்கணும்னு நினைச்சா கூட உன்னை உயிரோட விட மாட்டேன்னு ஹான்” என்று இரும்பு கைகளை ஓங்கி அவன் செவிலில் விட, அவன் அந்த ஒரு அடியிலேயே மயங்கி விட்டான். அப்படியும் அவனை விடாமல் ஆத்திரம் தீர அடி அடியென அடித்தவன், உத்ராவை தேடி வந்தான்.

இங்கு, மூவரும், தத்தம் துணையிடம் சென்று அவர்களை அருகில் நின்ற அடியாட்களை கொலைவெறியுடன் அடித்து துவைத்தனர். மயங்கி கீழே இருந்தவளின் அருகில் சென்ற, அஜய்,” சுஜி சுஜி” என்று கன்னத்தை தட்ட அப்பொழுது தான் அவள் கழுத்தில் இருந்து ரத்தம் வழிவதை கண்டான்.

அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. கத்திக்கொண்டு “சுஜி சுஜி இங்க பாரு சுஜி. என்னை பாரு பஜ்ஜி. பஜ்ஜி என்னை பாருடி” என்று அவளை நெஞ்சில் சாய்த்து கதறி அழுது

“அர்ஜுன் அர்ஜுன் வாடா சுஜியை பாருடா… அர்ஜுன்” என்று கத்தியதில், மீரா வந்து பார்த்து அதிர, அர்ஜுன் அந்த அடியாளை விட்டு விட்டு, சுஜி அருகில் வந்து பார்க்க, அவனும் வெகுவாய் அதிர்ந்து வேகமாய் அவளை செக் செய்தான்.

பல்ஸ் கம்மியாக இருப்பதை உணர்ந்தவன், கர்சீப்பை வைத்து, அவள் கழுத்தில் அழுத்தி, “இன்னும் பத்து நிமிஷத்துல இவள் ஹாஸ்பிடல்ல இருக்கணும். சீக்கிரம் தூக்கிட்டு போ” என்று பதறினான்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அவர்களை விட தான் இல்லை. அஜய் வெறித்தனமாய் அவர்களை அடிக்க, அர்ஜுன் எதிர்பாராத நேரத்தில், ஒருவன் அவன் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டான்.

மீரா அதிர்ந்து அர்ஜுன் அருகில் வந்து கதற இதில் அனுவை கடத்தியது இவர்கள் தான் என்று கரணும் அவரின் ஆட்களும் வந்து இவர்களை தாக்க ஆரம்பித்தனர்.

கிருபாவின் ஆட்களை அடி வெளுத்து கொண்டு இருந்த விதுனை மினிஸ்டர் ஆள் ஒருவன் தலையில் கம்பியால் அடிக்க, அதில் அவன் சற்று தடுமாறியதை பயன்படுத்தி, அவனை அடிக்க ஆரம்பித்தனர்.

அனு “அப்பா அவங்க மேல எந்த தப்பும் இல்லைப்பா என்னை காப்பாத்த தான்பா வந்தாங்க” என்று சொல்ல சொல்ல, கேட்காமல், நால்வர் சுற்றி நின்று விதுனை அடிக்க,

அனு “அப்பா அவரை அடிக்க வேணாம்னு சொல்லுங்க ப்பா… ப்ளீஸ் பா. சத்தியமா அவங்க என்னை கடத்தலைப்பா…” என்றவள் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கவும், கத்தியை எடுத்து அவள் கழுத்திலேயே வைத்து கொண்டு,

“இப்போ நீங்க அவரை விடலை நான் செத்துருவேன்” என்று மிரட்டியதில் அவர் அரண்டே விட்டார். என்ன ஆனாலும் பெண்ணாயிற்றே.

அவர் பதறி அடிப்பதை நிறுத்த சொல்ல, விதுன் அவள் கழுத்தில் கத்தியை பார்த்து அதிர்ந்து “என்ன அனு பண்ற” என்று அதை தள்ளி விட்டவன், தலையில் அடிபட்டதில் ரத்தம் வழிய அப்படியே மயங்கி சரிந்தான்.  இது எல்லாமே, துருவ் அந்த கிருபாவை அடித்து விட்டு வரும் வேளையிலேயே நடந்து விட, குத்துயிரும் குலையுயிருமாய் இருந்த மூவரையும் பார்த்து அதிர்ந்து திகைத்தவன் உடனடியாய் மருத்துவமனை அழைத்து போக சொல்லி, அவசரப்படுத்தினான்.

அனு வேகமாக அவள் அப்பாவும்.. அடியாட்களும் வந்த காரிலேயே அவர்களை மருத்துவமனை அழைத்துப் போக ஏற்பாடு செய்தாள்.

தத்தம் துணையை நினைத்து அழுவதா… தங்களை காக்க நினைத்து, அடிபட்டு இருக்கும் மற்றவர்களை நினைத்து அழுவதா  அழுவதா என்று புரியாமல் மூன்று காதல் மனங்களும் வேதனையில் ரணமாய் துடிக்க, அர்ஜுன், மீராவிடம், “இப்போ நான் செத்துட்டாவாவது நீ உன்னால எனக்கு இறப்பு இல்லைன்னு நம்புவியா மீரா. இப்போ உன்னால நான் சாக மாட்டேன்னு தெரிஞ்சுருச்சுல்ல…” என்று வலியில் முனங்க, அதில் திகைத்தவள் கதறி அழுதாள்.

மூவரும், அவரவர் துணையை ஐ சி யூவில் சேர்க்க.. துருவ் இவர்களை அனுப்பி விட்டு உத்ராவை தேடியதில் அவள் அங்கு எங்குமே இல்லை என்று உணர்ந்து அனைத்து இடத்திலும்  தேடி அலைந்தான்.

கிருபாவும் இங்கு இருக்க, அந்த சைதன்யாவும் இங்கு இருக்க, இப்பொழுது யார் அவளை எங்கு கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று புரியாமல், கையில் கிடைத்தவளை மறுபடியும் தொலைத்து விட்டோமே என்று உருக்குலைந்து தலையில் கை வைத்து “உதிஇஇஇ” என்று கத்தினான் கண்ணீருடன்.

தென்றல் என்னை
தீண்டினால் சேலை தீண்டும்
ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி
ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை
ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்…

மருத்துவமனையில் மொத்த வீட்டினரும் கண்ணீருடன் குழும, அஜய் தான், அர்ஜுன் அறைக்கு வாசலில் நின்று “அண்ணா எந்துருச்சுரூடா” என்றும், விதுன் அறை வாசலில் நின்று “டேய் மாமா..” என்று கண்ணீர் விட்டான்.. இதில் சுஜியை நினைத்தாலே, அவனுக்கு உயிர் போவது போல் வலித்தது.

மீரா “அர்ஜுன், ஐ லவ் யு அர்ஜுன் என்கிட்ட வந்துடுங்க அர்ஜுன். இனிமே உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன் அர்ஜுன். என்கிட்ட வந்துடுங்க அர்ஜுன்” என்று புலம்பி தவித்தாள்.

அனுவோ விதுவுக்கு தலையில் கட்டு போடும்போது அருகில் நின்றவள் அவனுக்கு எதுவும் ஆக கூடாது கடவுளே என்று கண்ணை மூடி தான் மருத்துவர் என்றும் மறந்து, அங்கேயே கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.

துருவ் உயிரில்லாமல் வெற்றுடலாய் மருத்துவமனைக்கு வர, அங்கு, இவர்கள் மூவரின் நிலை மேலும் அவனுக்கு வலியை கொடுத்தது.

மருத்துவர், “மூவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டிருக்கிறது எனவும், ஆனால்…” என்று இழுத்ததில் எல்லாரும் பதறினர்.

அவர், “சுஜிக்கு
தொண்டையில் வெட்டு பட்டதால், அவள் பேசுவதற்கு சில காலம் ஆகும்” என்றும், கொஞ்ச நாளைக்கு அவள் பேசவே கூடாது என்று கூறி விட்டு, விதுனுக்கு தலையில் லேசான அடிதான். ஆனால், கண் விழித்தாள் தான் எதுவும் சொல்லமுடியும் என்று விட்டு,

“அர்ஜுன்” என இழுக்க… மீராவிற்கு இதயம் வெளியில் வந்து விடும் போல் இருந்தது.

“அர்ஜுன், வயிற்றில் ஆழமாக கத்தி பட்டதால் பிளட் சர்குலேஷன் கம்மியா இருக்கு… சோ. மூணு பேருமே சுயநினைவுக்கு வந்தா தான் எதுவும் சொல்லமுடியும்” என்று சொல்லிவிட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் கரைந்தனர்.

இதில், சுஜியும், விதுனும் சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்து அபாய கட்டத்தை தாண்டி விட, அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று சொன்னதில் நிம்மதி பெருமூச்சு விட்டவர்களை அர்ஜுன் தான் படுத்தி எடுத்தான்.  

துருவிற்கு “நண்பனா நான் என்னைக்கும் தோத்து போக மாட்டேன் உன்னையும் தோற்க விட மாட்டேன்” என்று அர்ஜுனின் குரல் காதிலே எதிரொலிக்க, சுயநினைவின்றி படுத்திருந்தவனிடம் சென்று

“நண்பா என்னை மறுபடியும் தோற்க விட்டுடாதடா…” என்று கலங்கிய குரலில் அவன் கையை பிடித்து கொண்டு பேசியவனுக்கு, அப்பொழுது தான் அவனின் ஆட்கள் ரித்திஷை பற்றி சொன்னார்கள்.

அது போக சைதன்யாவை அழைத்து போனது அந்த ரித்தீஷ் தான் என்று உறுதியானதும்,

“என் உதியை உன்னால ஒன்னும் பண்ணமுடியாதுடா” என்று நினைத்து கண் மூடி இருந்த அர்ஜுனை பார்த்து,

“நான் வந்தா, உத்ரா கூடத்தான் வருவேன். இல்லைனா…” என்று நிறுத்தி விட்டு, வெளியில் செல்ல, போக, அர்ஜுனின் கைகள் துருவின் கைகளை பிடித்தது.

மெல்ல கண்விழித்தவன், அவனை அருகில் அழைத்து, மெல்லிய குரலில்  “நீ இருக்குற வரை அவளுக்கும், அவள் இருக்குற வரை உனக்கும் எதுவும் ஆகாது டா நண்பா.. உதியோட வா… நீ வருவ.” என்று பேச இயலாமல் அழுத்தமாய் சொல்ல,

அதில் மெலிதாய் சிரித்தவன், வெறி கொண்ட வேங்கையாய் ரித்திஷைத் தேடி சென்றான்.

உறைதல் தொடரும்…
-மேகா…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
46
+1
4
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.