Loading

 

உத்ரா கூறிய கதையில் துருவ் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான் என்றால், மற்ற மூவரும் அவளை கொலை வெறியுடன் நோக்கினர்.

உத்ரா, துருவை சிரிக்காதே என்று கண்ணை காட்ட, அவன் அடங்கவே இல்லை.

லட்சுமி தான் உத்ராவின் காதை திருகி, “வாயை திறந்தாலே பொய் தான். நீ தப்பிக்கிறதுக்கு இவனுங்களை மாட்டிவிடறியாக்கும்” என்று சொல்ல,

அவள் பாவமாக, “அத்தை. நான் நிஜமா தான் சொல்றேன். நாங்க எல்லாரும் ஒரே நாள்ல ஒரே மேடைல ஒரே முகூர்த்தத்துல தான் கல்யாணம் பண்ணிக்கணும் சபதம் எடுத்துருக்கோம்…” என்று சொல்ல,

துருவ் “அதுக்கு என்ன… உன் கல்யாணத்துக்குள்ள இவனுங்களுக்கு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா போச்சு. இல்ல அங்கிள்” என்று கருணாவிடம் அபிப்ராயம் கேட்டான்.

மூவரும், “டேய் எட்டப்பா. நீயுமாடா.” என்று முறைத்தனர்.

உத்ரா, ‘இவன் என்ன பிளேட்டை மாத்துறான்’ என்று நினைத்து விட்டு, பெரியப்பா, “நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனால் எங்க நாலு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடக்கணும்” என்று உறுதியாக சொல்ல, கர்ணனும் கருணாவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, சரி சென்று விட்டு சபையை கலைத்தனர்.

உத்ரா, “யப்பா” என்று அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர, அர்ஜுனும், அஜயும் அவளை அடி பிண்ணி எடுத்தனர்.

உத்ரா, அவர்களிடம் இருந்து தப்பித்து, துருவிடம் சென்று, “உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க.” என்று கேட்க,

அவன், “உன்னை தான் நினைச்சுகிட்டு இருக்கேன் இதுல என்ன ஹனி டவுட்…” என்று அவளை ரசனையாய் பார்த்து கொண்டு கேட்க,

ஆன்னா ஊன்னா ரோமியோ ரேஞ்சுக்கு லுக் விட வேண்டியது என்று முறைத்து விட்டு, “பெரியப்பா எனக்கு கல்யாணம்ன்னு சொல்றாரு. நீங்க அமைதியா இருக்கீங்க” என்று கேட்டதும்,

துருவ், “என்ன சொல்லணும்” என்று விழி உயர்த்தி கேட்டான்.

உத்ரா, அமைதியாய் இருந்து விட்டுப் பின், “அன்னைக்கு என் மனசுல இருந்ததை தான் நான் சொன்னேன். ஆனால்… துருவ்” என்று பேச வர,

அவன், “ஆஃபீஸ்க்கு  டைம் ஆச்சு ஹனி… வா போகலாம்” என்று அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு  வெளியில் நடந்தான்.

அவன் என்னதான் நினைத்திருக்கிறான். என்று புரியாமல், “கல்யாணத்தை பத்தி பேசமாட்டுறான் பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் மட்டும் குடுக்குறான்…” என்று அவனை திட்டிக்கொண்டு அவன் பின்னே சென்றாள்.

அர்ஜுன், “கடவுளே இந்த பிளான் மட்டும் ஒர்க் அவுட் ஆச்சுன்னா… என் தம்பிக்கு மொட்டை அடிச்சு காவடி தூக்க வைக்கிறேன்” என்று கும்பிட,

அஜய், “டேய்… உன் லவ் சக்சஸ் ஆகுறதுக்கு நான் ஏண்டா மொட்டை அடிக்கணும்.” என்று பாவமாய் கேட்டுவிட்டு,

“இங்க பாரு இனிமே யாரும் லவ்க்கும் யாரும் ஹெல்ப் பண்ண வேணாம். ஹெல்ப் பண்றேன்ற பேர்ல எல்லாரையும் பிரிச்சு விட்டாச்சு. நான் போய் என் மாமனாரை பார்க்குறேன். நீ போய் மீரா அண்ணியை சரி பண்ணு…” என்று விதுனை உடன் அழைக்க, அவன் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

அர்ஜுன், முகத்தை சோகமாக வைத்து கொண்டு, அவள் முன் நின்றான்.

அவள் அவனைப் புரியாமல் பார்த்து குழம்பி, “என்ன ஆச்சு அர்ஜுன். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. கீழ கருணா அப்பா என்ன பேசிகிட்டு இருந்தாங்க” என்று கேட்க,

அவன் “ப்ச்… என் கல்யாண விஷயத்தை தான் பேசுனாங்க” என்று சொன்னதும், அவளுக்கு நெஞ்சை அடைத்தது.

இருந்தும், அவன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று அவசரமாய் கடவுளிடம் ஒரு மனு ஒன்றை போட்டு விட்டு, “பொண்ணு பார்த்தாச்சா அர்ஜுன் யாரு.. அனு வா” என்று கேட்க,

அவன் “தெரியல… அந்த பொண்ணு என்னை வேணான்னு சொல்லிடுச்சு” என்று சொன்னதும்,

மீரா, புருவத்தை சுருக்கி “என்ன வேணாம்னு சொல்லிட்டாங்களா ஏன் உங்களுக்கு என்ன குறைச்சலாம்” என்று சற்று கோபமாக கேட்டாள்.

அர்ஜுன், “எனக்கு ஒன்னும் இல்ல. என் ஜாதகத்துல தான்…” என்றதும், அவள் என்னவென்று பார்த்தாள்.

அவன், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில், “என் ஜாதகப்படி, என்னை கல்யாணம் பண்ணுனா அந்த பொண்ணு செத்துருமாம்…” என்று சொல்ல, மீரா அதிர்ந்து விட்டாள்.

“அதான், கீழ எல்லாரும் பேசிகிட்டு இருந்தோம். நல்லவேளை நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல…” என்று சொன்னதும் தான் தாமதம், மீரா, அனைத்தும் மறந்து,

“என்ன பேசுறீங்க அர்ஜுன், அது எப்படி அவள் உங்களை வேணான்னு சொல்லலாம். ஜாதகம் மண்ணாங்கட்டி ன்னு… உங்களை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க அவள் குடுத்து வச்சிருக்கணும்.

ப்ச் அவள் என்ன உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றது. நான் இருக்கும் போது நீங்க எதுக்கு வேற எவ கிட்டயோ அசிங்கப்படணும்… ஹ்ம்?

நான் உங்களை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அர்ஜுன்” என்று சொன்னதும்,

அவன், “புரியாம பேசாத மீரா. என்னை கல்யாணம் பண்ணுனா உன் உயிருக்கு ஏதாவது ஆகிடும். அப்பறம், நான் எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன்…” என்று போட்டு வாங்க,

அவள் அவன் அருகில் வந்து, “உங்க கூட ஒரு நாள் வாழ்ந்தாலும், எனக்கு போதும் அர்ஜுன்… நீங்க இருக்கும் போது, உங்க பாசத்தை மீறி, அந்த எமன் கூட என்னை நெருங்க முடியாது..” என்று தன்னை மீறி அவள் உளறி கொட்ட,

அர்ஜுன், அவளை ஆழமாய் பார்த்து கொண்டு, “நீ சொன்னதுல உனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லையே… இது எல்லாருக்கும் பொருந்தும் தான” என்று கேட்க, அவன் குரலை உணராது, தீர்க்கமாக “ஆமா” என்று தலையாட்டினாள்.

அர்ஜுன் அவளை விலக்கி, “அப்போ இந்த காரணத்தை வச்சு, நீ என்னை விட்டு விலகுறதுக்காக நான் உன்கிட்ட இதெல்லாம் சொன்னால் நீ ஒத்துப்பியா?” என்று கூர்மையாக கேட்க, மீரா, உறைந்து விட்டாள்..

அதன்பிறகே, அவளுக்கு நிலைமையே உரைத்தது.

அர்ஜுன் தொடர்ந்து, “ஏன் அமைதி ஆகிட்ட மீரா… பேசு. உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? நீ மட்டும் எல்லா முட்டாள் தனத்தையும் நம்பி, என்னை ஒதுங்கி இருப்ப எனக்கு எதுவும் ஆக்கக்கூடாதுன்னு… ஆனால் நான் மட்டும் நீ எப்படி போனாலும் பரவாயில்லைனு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும். அப்படித்தான?

என்னடி நினைச்சுகிட்டு இருக்க என்னை பத்தி… ஹான்… ?” என்று கோபமாக கேட்டவன், தன்னை சிறிது அமைதி படுத்திக் கொண்டு, அவள் தோளை இறுகப் பற்றி,

“நீ என்னை விட்டுட ஒதுங்கி போறதுக்கு இதான் காரணம்னு எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே தெரியும்… அப்போவே நான் உன்கிட்ட வந்து உன்னை சமாதானப்படுத்தி, உங்கிட்ட இப்போ நீ சொன்னியே அதெல்லம் சொல்லிருப்பேன்.

ஆனால்… நீ கண்டிப்பா அதை காதுல வாங்க மாட்ட. ஏன்னா நீங்க மட்டும் தான் எங்களை ஆத்மார்த்தமா லவ் பண்றீங்க. நாங்கல்லாம் சும்மா உடம்புக்காக கல்யாணம் பண்ணிட்டு, நீ செத்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிப்போம்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல, அவள் கேவி அழுதாள்.

பின் அர்ஜுன், சோர்ந்த குரலில், “எனக்கு ஜாதகத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல மீரா… நீ சொன்னியே அதே தான் எனக்கும்.

ஒரு நாள் வாழ்ந்தாலும் அது உன் கூட மட்டும் தான்… யு நோ. நம்ம யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கடைசில செத்து தான் போவோம். மரணம் எல்லாருக்கும் பொதுவானது.

அடுத்த நிமிஷம் நம்ம உயிரோட இருப்போமா இல்லையான்னு நமக்கு தெரியாது மீரா. நீ என்னை விட்டு விலகிப்போனா நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருப்பேனா இல்லையே.

எப்டினாலும், நான் தினமும் செத்துக்கிட்டு தான இருக்க போறேன்…” என்று கமறிய குரலில் கூறி விட்டு,

“நான் சொன்னது பொய் தான். எனக்கு எந்த பொண்ணும் பார்க்கல, அனு கூட சும்மா உன்னை டீஸ் பண்றதுக்காக தான் பேசுனேன். இந்த வீட்டுல யாருக்கும் ஜாதகம் பார்க்குற பழக்கம்லாம் இல்லை.

என் அத்தை அதான், உதி அம்மா கல்யாணத்தோட ஜாதகம் பார்க்குறதையே விட்டுட்டாங்க. ஏன் தெரியுமா…?

அத்தைக்கும் மாமாவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஜோசியக்காரன், ரெண்டு பேரும் தீர்க்காயுசோட ஒற்றுமையா இருப்பாங்கன்னு சொன்னானாம்.

ஆனால் அத்தை, கொஞ்ச வருஷத்துலயே இறந்து… அப்போ அது ஏன் பலிக்கல மீரா…? ஜோசியம் சொல்றது நடக்கும்னு நீ நம்புனா அந்த ஜோசியத்தால என் அத்தையை ஏன் திரும்ப கொண்டு வர முடியல…” என்று தலையை அழுந்த கோதிக் கொண்டு,

“இப்பயும் நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் சொல்லல… உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் நீ என்னை நினைச்சு பயந்துகிட்டே இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை.

உன் மன திருப்திக்காக வேற ஜோசியர்கிட்ட செகண்ட் ஒபினின் கேட்கவும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனக்கு நீ நீயா எனக்கு வேணும். உன் அன்பயும் பாசத்தையும் மீறி கடவுளை மீறி… நம்ம தினமும் கடவுளை கும்பிடறதை மீறி… நம்மளை சுத்தி இருக்குற எல்லாரோட ஆசீர்வாதத்தை மீறி… எனக்கு எதுவும் நடக்காதுன்னு நீ நம்பனும்.

நீயே தான் அதை உணரணும். அது வரை நான் வெய்ட் பண்ணுவேன் மீரா. உன் இஷ்டம் புருஞ்சுக்குறதும் புருஞ்சுக்காததும்…” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

மீரா தான் எதையுமே உணர முடியாதவாறு வெகு நேரம் அவன் சென்ற திசையையேப் பார்த்து கொண்டிருந்தாள்.

கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டவள் கண்ணை துடைத்து கொண்டு, அர்ஜுன் மருத்துவமனைக்கு சென்றாள்.

அஜய், சுஜியின் வீட்டிற்கு செல்ல, அங்கு அவளின் அம்மா, அஜயிடம் “அவரு உள்ள தான் இருக்காரு..” என்று சைகை காட்ட, அவன் சரி நான் போய் பாக்குறேன் என்று அவரின் அறைக்கு சென்றவன், “மாமா” என்று பாசமாய்  கூப்பிட, அவர் அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்.

அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “நான் பண்ணது தப்பு தான் மாமா. ஆனால் சுஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும்… நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன்” மேலும் அவர் பேச வருவதையும் கேட்காமல், பேசியே அவரை கரைக்க சிறிது நேரத்தில் காலிலேயே விழுந்து விட்டான்.

அதில் அவர் பதறி, “அட என்ன மாப்பிள்ளை நீங்க என் கால்ல விழுந்துகிட்டு” என்று சொல்ல, அவன் “என்னாது மாப்பிள்ளையா… யோவ் இதை ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா, என் மானமாவது மிஞ்சிருக்கும்ல” என்று மனதில் புலம்ப,

அவர், “துருவ் தம்பி என்கிட்டே வந்து பேசுனாரு பா. அந்த தம்பி பேசுனத்துக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டுச்சு. அப்பறம் அந்த தம்பி எவ்ளோ பெரிய ஆளுன்னு நான் விசாரிச்சேன். அவரே என்கிட்டே வந்து  பேசுனதும் நானும் யோசிச்சேன்… நேத்தே சுஜிகிட்ட உங்க வீட்டு பெரியவங்களோட வந்து பேச சொன்னேனே. அவள் சொல்லலையா” என்று கேட்க,

அவன் “அடிப்பாவி…” என்று அவளை திட்டி விட்டு, மேலும் ” இந்த துருவ் கால்ல விழுகப்போறேன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டுட்டானே…” என்று திட்டிக்கொண்டும் தனக்காக அவன் மன்னிப்பு கேட்டு இருக்கிறான் என்று நெகிழ்ந்து கொண்டு  அலுவலகம் சென்றான்.

அங்கு சுஜி தீவிரமாய் வேலை பார்த்து கொண்டிருக்க, மெதுவாய் அவள் பின்னே சென்று அவள் இடையை சுற்றி வளைத்தான்.

சுஜி மிரண்டு, “அஜய் இது ஆஃபீஸ் என்ன பண்ற” என்று திணற,

“ஏண்டி பஜ்ஜி… உங்க அப்பா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருன்னு ஏண்டி சொல்லல” என்று கேட்க,

அவள், சந்தோசமாக அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “நேத்து நைட் தாண்டா சொன்னாரு. உன்கிட்ட காலைல வந்து சொல்லலாம்னு நினைச்சேன். நீ தான் லேட்டா வந்துட்ட” என்றதும், அவன், அவளை முறைத்து “உன் வீட்டுக்கு தான் போயிட்டு வந்தேன் உன் அப்பாகிட்ட பேச” என்றான்.

அவள் விழி விரித்து “எதுக்குடா…” என்றதும் அவன் நடந்ததை சொன்னதும், அவள் வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்தாள்.

“அடப்பாவி, இப்படியா பண்ணுவ. உதி ஐடியா குடுத்தா உனக்கு எங்க போச்சு புத்தி… ஹா ஹா ஹா” என்று அவள் சிரிக்க, அஜய், அவள் சிரிப்பில் தொலைத்தவன், அவளை புதிதாய் பார்ப்பது போல் பார்க்க, அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு, கண் கலங்கி,

“எனக்காகவாடா என் அப்பா கால்ல விழுந்த.” என்று தேம்பி கொண்டு கேட்க, அவன் பதறி “ஹே பஜ்ஜி என்ன இது… என் மாமனார் கால்ல தான விழுந்தேன். அவரு மாப்பிள்ளைன்னு சொன்னனால தான் எந்திரிச்சேன். இல்லைன்னா அவரு காலை பிடிச்சுக்கிட்டு விட்டுருந்துருக்கவே மாட்டேன்” என்று குறும்பாய் சொல்ல அவள் மேலும் கலங்கினாள்.

அவன் வீட்டினர் காலிலே ஆசீர்வாதம் வாங்க கூட விழுகாதவன் என்று அவள் அறிந்ததே. அப்படி பட்டவன், அவன் மரியாதை எல்லாம் நினைக்காமல் இப்படி செய்தது அவளுக்கு அழுகையவே வர வைத்தது.

அவள் மேலும் “இருந்தாலும் நீ கால்”, என்று பேச வர, அஜய் பாவமாக “விடு பஜ்ஜி, நானே ஒரு தடவை தான் கால்ல விழுந்தேன். அதை நீ ஓராயிரம் தடவை சொல்லிக்காட்டாத” என்று சொல்ல, அவள் பக்கென்று சிரித்து விட்டாள்.

அவளை இழுத்து, சுவற்றோரம் நெருக்கி நின்றவன், “ஊஹிபுக்கி பஜ்ஜி” என்று காதலாய் சொல்ல, அவள் சிரித்துக் கொண்டு, “நீ இதை விடவே மாட்டியா…” என்று போலியாக சலித்து கொள்ள,

“ம்ஹும் விட மாட்டேன்.” அவள் இதழ்களை பார்த்துக்கொண்டு நெருங்கியவனை, தள்ளியவள், “கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புன்னு யாரோ சொல்லுவாங்க” என்று கேலியாய் கேட்க,

அஜய், “யாரு பஜ்ஜி அப்படி சொன்னது… அது எவனாவது கேனையா இருப்பான்” என்று புன்னகைத்து, “இதெல்லாம் தப்பு இல்ல பஜ்ஜி” என்று கிசுகிசுத்து விட்டு அவன் வேலையை செவ்வனே செய்தான்.

உத்ரா அறையில் வேலை விஷயமாக அவளுடன் பேசிக்கொண்டிருந்த துருவ் எதேச்சையாக cctv வீடியோவை பார்க்க, அதில் இவர்கள் அடிக்கும் கூத்து தான் வந்தது.

உத்ரா அதை பார்க்கும் முன்பு டக்கென்று அந்த கேமராவை அணைத்து விட்டான்.

உத்ரா, என்ன என்று பார்க்க, அவன் “நத்திங்…” என்று அவன் வேலையை பார்த்தான்.

 சிறிது நேரத்தில் அங்கு வந்த அஜய், துருவைக் கட்டி பிடித்து, “நீ போய் அவருகிட்ட பேசுனனு ஏண்டா என்கிட்ட சொல்லல. உன்னை யாருடா அவருகிட்ட மன்னிப்புலாம் கேட்க சொன்னது”  என்று சொல்ல,
உத்ரா புரியாமல் பார்த்தாள்.

அதன் பின்னே, அவன் சுஜியின் அப்பாவை பார்த்து அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, அவரை ஆக வைத்தான், என்று அறிந்து உத்ரா அவனை வியந்து பார்க்க, அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், அஜயை தள்ளி நிறுத்தி,

“இங்க எல்லா இடத்துலயும் கேமரா இருக்குல்ல” என்று சம்பந்தம் இல்லாமல் பேச, ஒரு நொடி புரியாமல் பார்த்தவன், பின் கண்ணை மூடி, ‘ஐயோ கிஸ் அடிக்கும் போது கேமராவை மறந்துட்டோமே’ என்று தலையில் கை வைத்தான்.

உத்ரா, “என்ன கேமரா? துருவ் இங்க எல்லா  இடத்துலயும் கேமரா இருக்குல்ல…” என்று குழம்ப, அவன் அஜயை பார்த்து நக்கலாக சிரித்தான்.

அஜய், விட்டால் போதும் என அங்கிருந்து ஓடியே விட்டான். உத்ரா, “என்ன இவனுங்க புரியாத மாதிரியே பேசுறானுங்க” என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே, அவளுக்கு ஒரு செய்தி வந்தது.

அடுத்த வாரம், அவளுக்கு நம்பர் 1 பிசினெஸ் விமன் அவார்ட் பங்ஷன் நடக்க இருப்பதாக கூற, அந்த அவார்டை இன்டர்நேஷனல் பிசினெஸ்மேன் துருவேந்திரன் தான் அவளுக்கு கொடுக்க இருப்பதாகவும், கூற, அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

துருவிடம் விஷயத்தை பகிர்ந்து, துள்ளிக் குதித்தவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் தான் இந்த ஏற்பாடை செய்திருந்தான்.

மேலும் சில பல ஏற்பாடுகளையும்…

அவளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, “காங்கிரேட்ஸ் ஹனி” என்று சொல்ல, அவள் அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

“தேங்க்ஸ் துருவ்… நீ மட்டும் இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமே இல்ல.” என்று சொல்ல,

அவன், “இதெல்லாம் உன் ஹார்ட் ஒர்க்னால நடந்தது தான்…” என்று மறுக்க,

அவள் “ப்ச் இல்ல… நீ மட்டும் என்னை மோட்டிவேட் பண்ணலைன்னா என்னால இவ்ளோ பண்ணிருக்கவே முடியாது. பட் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லைனாலும் ஐ கேன் ஃபீல் இட்” என்று மறுக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், அவளை பேச முடியாதவாறு இதழ்களை சிறை செய்து விட்டான்.

அவனின் முத்தத்தில் திளைத்தவளை சில நேரம் கழித்து விடுவித்தவன், அவளையே ரசனையுடன் பார்க்க, அவள் அவனை பார்க்க முடியாமல், அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.

அந்த விழா முடிந்ததும்… திருமணத்திற்கு அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு பின், வெளியில் வேலை இருப்பதாக அவள் கிளம்ப, துருவும் அவன் அறைக்கு செல்ல போனான்..

அப்பொழுது அஜய் கையில் ஒரு போனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,

“என்ன பண்ற” என்று கேட்க,

அவன், “இது சுஜி போன் துருவ்… இப்போ தான் என்கிட்டே பேசிட்டு, கார்ல ஏதோ திங்ஸ் இருக்குன்னு எடுக்க போனா. ரொம்ப நேரமா வரலைன்னு, அங்க போய் பார்த்தா, அவள் போன் கீழ விழுந்து இருக்கு. மறந்துட்டு கீழ போட்டுட்டாளான்மனு இங்க வந்து பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்று அவன் கண்கள் ஒரு வித பதட்டத்துடன் அவளை தேடி அலை பாய, துருவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

அந்த நேரத்தில், அர்ஜுன், துருவிற்கு போன் செய்து, “துருவ்… மீரா என்னை பார்க்க வரான்னு சொன்ன. எங்க டா இன்னும் காணோம்” என்று கேட்டான்.

காலையிலேயே அவள் அர்ஜுன் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக துருவிடம் சொல்லி இருந்தாள்.

அவள் குரலில் என்றும் இல்லாத உற்சாகத்தை உணர்ந்தவன் அப்பொழுதே, அர்ஜுனிடம் கூறி இருந்தான்.

ஆனால் இந்நேரம் அவள் சென்றிருக்க வேண்டுமே என்று நினைத்தவன், மீராவுக்கு அழைக்க, போன் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது.

அர்ஜுனிடம் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று பார்க்க சொல்ல, அர்ஜுனுக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.

அந்த நேரத்தில், விதுன் அஜய்க்கு போன் செய்து, “டேய், அனு அனுவை யாரோ கடத்திட்டு போறாங்கடா. வண்டியை ஃபாலோ பண்ணிட்டு போனேன். ஆனால் ஆனால் அவளை காணோம்டா” என்று கண்ணீருடனும், பதட்டத்துடனும் கூற,

அஜய் “அவளை ஆள் அப்பாவோட எதிரிங்க கடத்தி இருக்கலாம் நீ ஏண்டா பதறுற…” என்று புரியாமல் கேட்க,

அவன் “அவனுங்க என்னை தான் அடிக்க வந்தானுங்க. அப்பறம் அவள் அவள் என் கூட பேசிகிட்டு இருக்கறதை பார்த்து தாண்டா அவளை தூக்கிட்டு போய்ட்டாங்க” என்றவன், நடந்ததை நினைத்து பார்த்தான்.

உத்ரா வேறு எல்லாருடைய திருமணமும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என்று சொல்லிவிட, அவள் பொய்யாய் சொல்லி இருந்தாலும், அவளுக்கு அந்த ஆசை இருப்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.

அவளுக்காகவாவது எப்படியாவது திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்று நினைத்து தான் அர்ஜுனும், அஜயும் இவ்வளவும் செய்தனர்.

விதுனும் ஒரு முறை அனுவிடம் சென்று பேசுவோமா ஆனால் என்ன பேசுவது என்று குழம்பி கொண்டு, இறுதியில் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று அவள் கல்லூரிக்கு சென்றான்.

அங்கு அனுவோ அவள் அப்பா இவ்வளவு தவறு செய்கிறவரா என்று அதிர்ந்து இருந்தவள், விதுனும் தன்னை தவறாக நினைக்கிறானோ என்று வெம்பினாள். இரண்டு நாட்களே என்றாலும், அவனிடம் அவள் மனது நன்றாக ஒட்டிக்கொண்டது.

அவள் கல்லூரியில், விதுனை மறக்க முடியாமல், அவன் ஞாபகத்திலேயே தான் ஏன் இருக்கிறோம் என்று உணராமலும் எங்கோ வெறித்து கொண்டிருக்க,

“அனு” என்று விதுன் அழைத்தான்.

விதுனை பார்த்ததும் அவள் சோகமெல்லாம் மாயமாகி, முகம் மலர, அவள் முகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு.

ஆனால் அது சில நொடிகள் தான், சட்டென்று “எப்பொழுதும் ஏதாவது பட்ட  பெயர் வைத்து கூப்பிடுபவன் இன்று யாரோ பேர் சொல்லி அழைப்பது அவளுக்கு கண்ணீரை தான் கொடுத்தது..” கலங்கிய கண்களை அவனிடம் இருந்து மறைத்து கொண்டு, உள்ளே செல்ல போக,

அவள் முன்னே வழி மறித்து நின்றவன் “அனு… நான் உன்கிட்ட பேசணும்.” என்று சொல்ல, அவள் “என்கிட்ட பேச என்ன இருக்கு…” என்று அவனை பாராமல் கேட்டாள்.

விதுன் “அனு… நான்… அன்னைக்கு.” என்று உளறியவன், “உன் அப்பா பண்ணுன தப்புக்கு நீ ஏன் இப்படி இருக்க…” என்று சம்பந்தம் இல்லாமல் பேச, அவளுக்கு அப்பொழுது தான், அவள் அப்பா செய்கிற தவறு அவளை தாக்குவதை விட, அவனை பாராமல் இருந்ததே அவளை தாக்கியது என்று உணர்ந்து  கொண்டவள் சிலையாகி நிற்க,

அப்பொழுது தான் தான், ஒரு ரௌடி கும்பல், விதுனை தாக்க வந்தது.

ஆனால், அனுவை அருகில் பார்த்து “அவனோட ஆளை தூக்குங்கடா” என்று கத்திக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தூக்கி கொண்டு சென்றனர்.

துருவிடம் விஷயத்தை சொல்ல, ஒன்றும் புரியாமல் இருந்தவன் ஏதோ யோசித்து விட்டு விறுவிறுவென, உத்ராவின் காருக்கு செல்ல, அங்கு, அவளின் கார் கதவு திறந்திருந்தது.

அவள் வெளியிலும் செல்ல வில்லை. எங்கும் அவளை காணவும் இல்லை. அதன் பிறகே, ஆண்கள் நால்வரும் நான்கு பெண்களையும் கடத்தி இருக்கிறார்கள் என்றே புரிந்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

உறைதல் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
46
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.