Loading

 

சுதாகரின் இதழணைப்பில் மொத்தமாக தன்னை இழந்த ஹேமாவிற்கு, மனம் படபடக்க, அவனின் சட்டையை கெட்டியாக பற்றிக் கொண்டாள். அவன் விலகியும் கூட, பதற்றத்தில் இன்னும் கைப்பிடியை விலக்காதவளை சிறு கேலி புன்னகையுடன் பார்த்த சுதாகர்,

“எப்படி எப்படி…? மேடம் என்னை ஜஸ்ட் சைட்டு தான் அடிச்சீங்க? லவ் பண்ணல…! அப்படி தான… அப்போ இதுக்கு பேரு என்ன?” என்று தன் சட்டையை கண் காட்டி கேட்க, அவன் குறும்பில் வெட்கியவள், வெடுக்கென கையை இழுத்துக் கொண்டாள்.

ஆனால், அவள் கரங்கள் இப்போது சுதாகரிடம் சிறைப்பட்டிருக்க, ஒரு கணம் சிலிர்த்தவள் மறு நொடியே, “அய்யயோ!” என்றாள் விழி விரித்து.

அவ்விழிகளுக்குள் நீந்தி புதைந்தவன், “என்ன?” என்று ஆர்ப்பாட்டமே இல்லாமல் கேட்க,

“நான் வேற என்கேஜ்மெண்ட்க்கு ஓகே சொல்லிட்டேனே. இப்போ முடியாதுன்னு சொன்னா, அக்கா கல்யாணத்துல ஏதாவது ப்ராப்ளம் வருமோ…” என வாடிய முகத்துடன் கேட்க, அவனோ சிரிப்பை அடக்க இயலாமல் சிரித்தே விட்டான்.

“உனக்கு என்கேஜ்மெண்ட்ன்னு நீ மட்டும் தான் சொல்லிட்டு இருக்க. ஆனா, எப்பவோ அதை நிறுத்தியாச்சு. உன் அப்பா, அம்மாட்டயும் பேசியாச்சு.” என்றவனைக் கண்டு திகைத்தவள், “வாட்? என்ன சொல்றீங்க?” என புரியாமல் கேட்க,

“ம்ம்… உன் தளபதிங்க நானே வேணாம்ன்னு சொன்னாலும் உன்ன மாதிரி ஒரு டியூப் லைட்ட என் தலைல கட்டி இருப்பானுங்கன்னு சொல்றேன்.” என்று கிண்டலாக கூறியதில் அவனை முறைத்தவள், “நான் டியூப் லைட்டா?” என்றாள் முறைப்பாக.

அவனே, அவளை இழுத்து அருகில் இருத்தி, “ஏய்… லூசு! நீ உனக்கு என்கேஜ்மெண்ட் ஆக போகுதுன்னு சொன்னதுமே நான் ஆரவ்ட்ட சொன்னேன். அவன் தான், உன் வீட்ல பேசி, என்னை நல்லவன் வல்லவன்னு சர்டிஃபிகேட் குடுத்து ஓகே வாங்குனான். உன்கிட்ட மட்டும் சொல்லவேணாம்ன்னு சொல்லிருந்தான் போல…” என நமுட்டு சிரிப்பு சிரிக்க, “அட பிராடுங்களா?” என்று வாயில் கை வைத்தாள்.

அந்நேரம் ஆரவ் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவன், “என்னடி… கல்யாண வேலை நிறைய இருக்குன்னு சொன்ன… இங்க உட்காந்து கதை பேசிட்டு இருக்க” என்று நக்கலாக கேட்க,

“யூ… சீட்…” என்று அவனின் தோளிலேயே குத்தி, “எனக்கே தெரியாம என்னடா செஞ்சு வச்சு இருக்க?” என்றவளுக்கு கண்ணில் நீரும் தளும்பியது.

சுதாகரோ, “பட், நீயே எக்ஸ்பெக்ட் பண்ணாத இன்னொரு மேட்டர் இருக்கு சொல்லவா?” என கேட்டதில், அவள் இன்னும் குழம்ப, அவளை மேலும் குழப்பாமல் சுதாகரே, “உன் அக்கா கல்யாணத்து அன்னைக்கு தான் நமக்கும் கல்யாணம் நடக்க போகுது” என்று அதிர்ச்சி அளித்ததில் அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

“யப்பா… சாமி. போதும் முடியல.” என அதிர்ந்தவளுக்கு மகிழ்வும் தயக்கமும் ஒருங்கே தோன்ற, “ஆனா, இவ்ளோ சீக்கிரம் எதுக்கு சுதாகர்…?” என்று நெளிந்தாள்.

ஆரவ் தான், “என்னமோ ஸ்வீட் சிக்ஸ்டீன்ல இருக்கிறதா நினைப்போ உனக்கு. ஏழு கழுத வயசாகுது. போய் கல்யாணம் பண்ணுடி.” என்று கிண்டலுடன் கூறியதில், குழப்பம் தெளியாதவள்,

“விக்ராந்த் என்ன ஆனான்?” என்று கேட்டாள்.

சுதாகர், “இன்னும் உயிரோட தான் இருக்கான்னு நினைக்கிறேன்…? இருக்கானா மச்சானா?” என தாடையை தடவியபடி ஆரவை பார்த்து விஷமமாக வினவ, அவனோ அதே விஷமப் புன்னகையுடன் தோளைக் குலுக்கினான்.

“டேய் டேய்…! என்னடா கொலை ஏதாவது பண்ணிட்டீங்களா என்ன?” என விழித்தபடி வினவ, அதற்கும் இருவரும் மர்மமாய் புன்னகைக்க, சுதாகர் சொன்னதை கேட்டு அவளுக்கு உண்மையாகவே மயக்கம் வந்து விட்டது.

வேக நடை போட்டு அலுவலகத்திற்கு வந்த லயா, தன்வியிடம் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்த கவினை படபடவென அடித்தாள்.

தன்வி, சிறு சிரிப்புடன் “என்ஜாய் மச்சான்…” என்று நகர்ந்திட, அவனோ அமைதியாக அடிகளை வாங்கிக்கொண்டு, அவள் சிறிது சோர்வானதும், “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாடி. நான் வெய்ட் பண்றேன்” என்று குறும்பு மின்ன கூற, மீண்டும் அடித்து வைத்தாள்.

“எரும மாடே. என்ன தைரியத்துலடா என்னை கேட்காம, அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பொண்ணு கேட்ட?” என்று பொங்கிட, அவளின் எண்ணங்களோ காலையில் நிகழ்ந்ததை அசை போட்டது.

வெளியூருக்கு சென்றிருந்த அவளின் தாய் சுமதி, மற்றும் தந்தை கபிலனும் அப்போது தான் வீட்டிற்கு வந்திருக்க, லயாவும் ஆரவின் வீட்டில் இருந்து திரும்பியிருந்தாள்.

அப்போது தான், கவின் அவனின் தாய் செண்பகத்துடன் அங்கு வந்திருக்க, ஏற்கனவே அவர்களை தெரியும் என்பதால் சிரிப்புடன் வரவேற்று பேசிக்கொண்டிருக்க, லயா அவனை எதிர்பாராமல் திகைத்து முறைத்திருந்தாள்.

சில நல விசாரிப்புகளுக்கு பிறகு, கவினும் லயாவும் விரும்புவதாகவும், இருவருக்கும் திருமண சம்பந்தம் பேச வந்திருப்பதாகவும் செண்பகம் கூற, லயாவோ ‘அடப்பாவி’ என்று அவனைப் பார்த்தாள்.

கபிலனும் சுமதியும், லயாவை ஒரு மாதிரியாக பார்க்க, கவின் வேகமாக, “லயா தான் முதல்ல ப்ரொபோஸ் பண்ணுனா அங்கிள். என்ன தான், நம்ம ப்ரெண்ட்ஸா இருந்தாலும், வீட்ல பெரியவங்ககிட்ட கேட்டுட்டு தான் முடிவெடுக்கணும்ன்னு முடிவு பண்ணி தான் அம்மாட்ட சொன்னேன்.

அப்பறம் தான் அம்மாவும் உங்ககிட்ட பேசலாம்ன்னு சொன்னாங்க. உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க அங்கிள். நோன்னு சொன்னாலும் எங்களுக்கு ஓகே தான். இல்ல லயா?” என்று அவளையும் இழுத்து விட, அவளோ அதிர்வில் இருந்து மீளவே இல்லை.

‘நீயெல்லாம் உருப்படவே மாட்டடா.’ என்று மனதினுள் அவனை வறுத்து எடுக்க, அவளை உணர்ந்தவனோ உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

நொடியில் தன்னை மீட்ட லயாவின் பெற்றோருக்கு, கவினையும் நன்றாகவே தெரியும். அவர்களுக்கும் அவனை திருமணம் செய்ய பேச ஆசை தான். ஆனால், நண்பர்களுக்குள் உறவை திணிக்கக்கூடாது என்று நாகரீகம் காக்க, இப்போது இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

அது அவர்களின் முகத்திலேயே தெரிய, “எங்களுக்கு முழு சம்மதம் தான். என்ன இவள் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்.” என்று சுமதி லயாவின் கன்னத்தில் குத்த, அவளோ ‘ம்க்கும் எனக்கே சொல்லல…’ என்று தலையில் கை வைத்தாள்.

மேற்கொண்டு சில விஷயங்கள் பேசிவிட்டு, கவின் தாயுடன் கிளம்பி விட, அதன் பிறகு தான், தாய் தந்தையை சமாதானம் செய்து, இப்போது அவனை அடித்து கொண்டிருக்கிறாள்.

“அதெப்படிடா என் விருப்பம் இல்லாம நீ வீட்ல பேசுவ?” என அவள் மல்லுக்கு நிற்க, “சரிடி. அப்போ நானே போய் வேணாம்ன்னு சொல்லிடவா?” என்றான் எகத்தாளமாக.

“ஓ! அப்படி வேற சொல்லுவியா நீ?” என்று மூச்சிரைத்தவளைக் கண்ணெடுக்காமல் பார்த்தவன், சுற்றி முற்றி ஒரு முறை நோக்கி விட்டு, அவளின் கன்னம் பற்றி முகம் முழுதும் முத்தமிட தொடங்கினான்.

“டேய் விடுடா. விடுடா… இப்ப விட போறியா இல்லையா?” என உச்சஸ்தாதியில் கத்த வந்தவளுக்கு, வார்த்தைகள் இதழ்களுக்குள்ளேயே முடங்கி விட,

“புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம். ஆனா, புருஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறவங்ககிட்ட என்னடி புரிய வைக்கிறது. நீ என்னை லவ் பண்றியா இல்லையான்னு ஆராய்ச்சி செஞ்சுட்டே இரு. நான் அது வரை லவ் பண்ணிட்டே இருக்கேன்.” என்றவன் மீண்டும் முத்தமிட விழைய, அவனை தள்ளிவிட்டவள், அவனின் நெஞ்சுக்குள் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“என்னமோ, உன்ன லவ் பண்றதை ஒத்துக்குறதுல எனக்கு நிறைய ஈகோடா. ஆரவ்கிட்ட லவ் பண்றேன்னு சொல்ல முடிஞ்ச என்னால உன்கிட்ட சொல்ல முடியல. சொல்லவும் தெரியல. அன்னைக்கு, ஆரவ் என்னையவே லவ் பண்ணிருக்கலாம்ன்னு நீ சொன்னப்போ தான், எனக்கே தெரியாம உன்மேல ஒரு ஸ்பார்க் வந்துருச்சு.

ஆனா, அதை லவ்ன்னு அக்செப்ட் பண்ண மனசு வரல. நீயும் அதுக்கு அப்பறம் என்ன லவ் பண்றேன்னு டீஸ் பண்ணல. நார்மலா இருந்த… என்னதான் என்னை லவ் பண்ணதுக்கு நீ எக்ஸ்ப்ளனேஷன் குடுத்தாலும் அதுல ஏதோ மிஸ் ஆச்சு. அதான், ரொம்ப குழம்பிட்டேன்” என்றவளுக்கு ஏனென்று அறியாமல் அழுகை வேறு வரும் போல இருந்தது.

அதில் அவளை நிமிர்த்தியவன், அவளின் முகத்தை அவன் முகத்தில் நெருங்க வைக்க, அவன் விழிகள் நீர் திரண்டிருந்தது.

அவளோ பதறி, “என்னடா ஆச்சு உனக்கு…?” என வேகமாக கண்ணீரை துடைக்க,

“ரொம்ப கில்டியா இருக்கு லயா. ஆரவ் லைஃப்ல இவ்ளோ ட்ராஜிடி வந்துருக்க வேணாம். அதுக்கு நானும் ஒரு காரணமா இருந்துருக்க வேணாம். கொஞ்சமாவது அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணிருக்கலாம்.” என்றவன், அவளின் தோளில் புதைந்து, “கஷ்டமா இருக்குடி. அதான், உங்கிட்ட காதலை பத்தி பேசுனப்ப கூட மனசு சரியே இல்ல. சாரிடி. பட் ஐ ரியலி லவ் யூ” என்றான் அழுகுரலில்.

இப்போது இந்நிமிடம், அனைத்து குழப்பங்களும் அவளுக்கு நிவர்த்தியாகி இருக்க, சிறிதாய் முறுவலித்தவள்,

“ப்ச், முதல்ல ஒப்பாரிய நிறுத்து. இப்ப என்ன ஆகிடுச்சு? அவன் நல்லா தான் இருக்கான். அவனுக்குன்னு இப்போ ஃபேமிலி இருக்கு. நம்ம இருக்கோம். அப்பறம் என்னடா? முடிஞ்சதை பத்தி பேசி எதுவும் ஆக போறது இல்ல கவி. இனிமே என்ன பண்றதுன்னு யோசி.” என்றாள் காரமாக.

அவன் நிமிர்ந்து, “என்ன பண்றது?” என வினவ, “மதியோட மனநிலையும் கஷ்டம் தான். ஆனா, இப்படியே விட்டா சரி வராது. நம்ம தான் ஏதாவது பிளான் பண்ணனும்.” என்று ரகசியம் போல கூற, அப்போதும் புரியாதவனாய் நின்றான்.

அப்போது தான், தன்வியும் அங்கு வர, “டேய்… இன்னுமா நீங்க பேசி முடிக்கல…” என்று முறைத்தவன், “சரி நான் அப்பறம் வரேன். யூ கண்டினியூ” என்று இருவரும் நெருங்கி நிற்பதை நக்கலுடன் பார்த்து விட்டு நகர எத்தனிக்க, லயா சிவந்து சட்டென்று விலகினாள்.

அதனை கவினின் விழிகள் தான் ரசித்திருக்க, அவன் பார்வையில் இன்னும் சிவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டு, “அட ச்சி. நில்லு. நாங்க ஆரவ் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என்று கூற, அவனும் விழிகள் மின்ன, “அவனோட ஃபர்ஸ்ட் லவ் பத்தி மதிக்கு தெரியவைக்கணும்” என்றான் வேகமாக.

“சே… அறிவுடா நீ. இந்த அறிவை வைச்சுக்கிட்டா, மேரேஜ் ஆகியும் சிங்கிள் – ஆ இருக்க?” என லயா யோசனையாக கேட்க, அதில் கடியானவன், காதில் புகையுடன் நிற்க,

கவினோ, “ஐயோ நிறுத்துங்க. அவன் தான், தப்பி தவறி கூட அந்த இன்சிடென்ட்ட சொல்ல மாட்டுறானே. நம்ம சொன்னாலும் அது நல்லா இருக்காது.” என்று பின்னந்தலை தடவி சிந்திக்க,

லயா, “நம்ம ஏன் சொல்லணும். ஆரவையே சொல்ல வைக்கலாம். ஊட்டிக்கு கூட்டிட்டு போய்” என்று கண் சிமிட்ட, “அங்க போனா மட்டும் எப்படி சொல்லுவான்.” என்றான் முறைத்தபடி.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஊட்டிக்கு போனா, அவனுக்கு பழைய இம்பாக்ட் இருக்கும். அது கண்டிப்பா அவனை சொல்ல வைக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றாள் சத்தியம் செய்யாத குறையாக.

தன்விக், “அவள் சொல்றது சரி தாண்டா. எனக்கும் இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகும்ன்னு தோணுது.” என ஆமோதிக்க, கவின், “எல்லாம் ஓகே தான். பட், இன்னும் ஒரு வாரத்துல ஹேமாக்கும் சுதாகருக்கும் மேரேஜ் வேற இருக்கு. அதான் யோசிக்கிறேன்.” என்றதில்,

லயா, “அது தான் நமக்கும் நல்ல சான்ஸ்டா. தன்விக்கும் இப்போ தான் மேரேஜ் ஆகி இருக்கு. ரெண்டு கபிள்சையும் ஹனிமூன் கூட்டிட்டு போகலாம்ன்னு சொல்லலாம்.” என்றதும் தன்விக்கு வாயெல்லாம் பல்லானது.

“ஐ… இந்த ஐடியா இன்னும் சூப்பரா இருக்கும்” என்றான் தரையில் பெருவிரலால் கோலம் போட்டபடி.

“கொய்யால, அப்படி சொல்லி கூட்டிட்டு போறோம். அங்க போனதும், ஃபுல் டைம் ஜாபே அவங்களை சேர்த்து வைக்கிறது தான்.” என்று லயா முறைக்க, கவின் தான், “ஆனா, மூணு பேரும் ஜோடியா வருவானுங்க. நான் மட்டும் சிங்கிள் – ஆ வரணுமா?” என்றான் ஒரு மாதிரியாக.

அவளோ அதனை கவனியாமல், “ஏன் நீயும் கல்யாணம் பண்ணிட்டு வாயேன்” என்று தலையில் அடித்து விட்டு, அதன் பிறகே நாக்கை கடித்துக் கொண்டாள்.

“இந்த ஐடியா இன்னும் இன்னும் செம்மயா இருக்கு. நம்மளும் மேரேஜ் பண்ணிட்டே போய்டலாமா.” என அவன் ஆர்வமாக கேட்க, “உடனே எப்படிடா?” என்றாள் அவனைப் பார்க்க தடுமாறி.

தன்விக்கோ, “ஏன் எங்க கல்யாணம் உடனே நடக்கல. அப்படி தான்… அப்போ தான், அவனை வரவைக்க முடியும். அவன் வந்தா தான் நம்மளும் ஹனிமூன் போவோம்ன்னு அடம்பிடிக்கலாம்.” என்றதில், அதுவே மூவருக்கும் சரி என பட, அது ஆரவிற்கு தெரியாமல் சுதாகர் ஹேமாவிற்கும் பகிரப்பட்டது.

அதில், ஹேமா தான் “என்னது ஊட்டியா?” என திகைத்து நண்பர்களை பாவமாக பார்க்க, சுதாகர், “ஏன் ஹேமா. உனக்கு பிடிக்கலையா. நம்ம வேணும்னா, இந்த ட்ரிப் முடிச்சுட்டு தனியா வேற எங்கயாவது போலாம்” என ரொமான்டிக் மூடில் பேச,

“எதுக்கு வாந்தி எடுத்து ஊர நாறடிக்கவா…?” என மூவரும் அவர்களுக்குள் சிரித்துக்கொள்ள, ஹேமாவிற்கு இப்போது இருந்தே வாந்தி வரும் போல இருந்தது.

ஆரவ்…” என்ற வான்மதி அனுப்பிய குறுஞ்செய்தியில், போனை எடுத்து பார்த்தவன், “சொல்லு” என்றான்.

“அப்பா, அம்மா வந்துருக்காங்க.” என அவள் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியதில், ஒரு கணம் புருவம் நெளித்தவன், “ஆன் த வே…” என பதில் அளித்து விட்டு கிளம்பினான் யோசனையுடன்.

அங்கோ, எதிர்பாராத வீட்டினர் வரவு அவளை திகைப்பில் ஆழ்த்தியது. பரணியும், ரோகிணியும் தயக்கத்துடனும், கஜேந்திரனும் கார்த்திகாவும் முணுமுணுப்புடனும் அவளை எதிர்கொள்ள, நால்வரையும் தீர்க்கமாக பார்த்தவள், “உள்ள வாங்க” என்று அழைத்தாள்.

அதில் நால்வரும் வீட்டினுள் வர, அமர சொன்னவள், “என்ன விஷயம்?” எனக் கேட்டதில், அங்கு பலத்த அமைதி நிலவியது.

கார்த்திகா தான் முதலில் ஆரம்பித்தார். “என்ன விஷயம்ன்னு உனக்கு தெரியாதாக்கும்.  எல்லாம் உன்ன கட்டுனவன் தான பண்றான். நீயும் அவனுமா சேர்ந்து என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சு, இப்போ எங்க சம்மதம் இல்லாம கல்யாணம் வேற பண்ணி வைக்கிறீங்க.” என்று பொரிந்து தள்ள, ரோகிணி “அண்ணி கொஞ்சம் சும்மா இருங்க.” என்றார் அதட்டலாக.

“மாப்பிள்ளை எங்க?” ரோகிணி மகளை பாராமல் கேட்க, அவளோ சலனமற்று “இப்ப வந்துடுவாரு.” என பதிலளிக்க, பரணி குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

சற்று நேரம் முன்பு தான், சுதாகருக்கும் ஹேமாவிற்கும் திருமணம் என்ற விஷயம் அறிந்திருந்தாள் வான்மதி.

கஜேந்திரனோ, “மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. வெட்கம் கெட்டு போய் அண்ணன் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணுனவன் எல்லாம் உங்களுக்கு மாப்பிள்ளையா?” என்று எகிற, வான்மதி “பெரியப்பா…! வார்த்தையை பார்த்து பேசுங்க” என்றாள் கடினமாக.

கோபம் வேறு சுறுசுறுவென ஏற, அவளின் தந்தையை பார்த்து, “நானே உங்களை பார்க்க வரணும்ன்னு நினைச்சேன். நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க.” என்றவள், உள்ளே சென்று சில நிமிடங்களில் கையில் பத்திரத்துடன் வந்தாள்.

அதனை அவர் முன் நீட்டி, “இந்தாங்க…” எனக் கொடுக்க, அவரோ புரியாமல் பார்த்தார்.

“இது நீங்க எனக்கு குடுத்த சொத்து தான். அப்போ எனக்கு தேவை பட்டுச்சு. அதான் கேட்டு வாங்குனேன். இப்போ எனக்கு தேவைப்படல. நீங்களே வச்சுக்கோங்க.” என்று நிதானமாக அதே நேரம் அழுத்தத்துடன் கூற, பரணியும் ரோகிணியும் திகைத்தனர்.

“இது உனக்கு சேர வேண்டியது தான் மதி.” என பரணி மெதுவான குரலில் கூற, “சாரி. எனக்கு வேண்டியது எல்லாமே என் முகில்கிட்ட மட்டும் தான் இருக்கு. இப்போ நான் உங்க பொண்ணும் இல்ல. அந்த விக்ராந்துக்கு பொண்டாட்டியும் இல்ல. இப்பவும் எப்பவும் நான் மிஸஸ் வான்மதி ஆரவ் முகிலன் தான்.” என்றவள் அவ்வார்த்தைகளில் அழுத்தம் ஏற்றி எரிக்கும் பார்வையுடன், அவளின் பெரிய தந்தையை பார்த்து கூற, பரணிக்கு கண் கலங்கியது.

அப்போது ஆரவும் வந்து விட, வான்மதி மெளனமாக நின்றதில், “வந்தவங்களுக்கு காபி குடுத்தியா மதி?” எனக் கேட்டான் இயல்பாக. அவர்களை கண்டதும் கோபத்தை காட்டுவான் என அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ விருந்தோம்பல் செய்வது போல, அடுக்களைக்குள் புகுந்து அவனே காஃபி தயாரித்ததில் பெண்ணவள் குழம்பினாள்.

அவளும் அவன் பின்னே சென்று, “ஆரவ்… வந்து… அப்பா எனக்கு குடுத்த சொத்தை எல்லாம் நான் திருப்பி கொடுத்துட்டேன்” என்றாள் தலையை குனிந்த படியே.

ஆரவ் ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் வேலையில் கவனமானான்.

“உன் அப்பாவுக்கு சுகர் கம்மியா கூடவா?” எனக் கேட்க, “அப்பாவுக்கு சுகர் இருக்கு.” என்றாள், அடுப்பு மேடையை சுரண்டியபடி.

“ம்ம்…” என்றவன், உப்பை எடுக்க, “ஆரவ் இது உப்பு…” என்றாள் வேகமாக.

“ஐ நோ!” என அவளை ஆழ்ந்து பார்த்தவன், நான்கு கப்பிற்கும் உப்பை கலந்து, “சொரணை வரவைக்கணும்ன்னா உப்பு போட்டும் சாப்பிடணும்.” என்று அவளிடம் கூறி விட்டு, அவர்களிடம் கொடுக்க, கஜேந்திரன் அதனை எடுக்காமல் சிலுப்பினார்.

அவனோ, ட்ரேயை நீட்டிபடி, “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. வீட்டுக்கு வந்து யாராவது காபி சாப்பிடாம போனா, சுட சுட காபியை முகத்துல ஊத்திடுவேன்.” என விழி உயர்த்த, அவரோ ஆவி பறந்த காபி கோப்பையை மிரண்டு பார்த்து விட்டு, எடுத்துக்கொண்டார்.

மற்றவர்களும் எடுத்து விட்டு, குடிக்காமல் அமர்ந்திருக்க, “என்னை ஏன் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. குடிங்க.” என்றான் அவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து.

வான்மதி தான், இதழ்கள் மீறி வெளிவந்த சிரிப்பை அடக்க வழி தெரியாமல் உதட்டைக் கடித்தபடி நிற்க, முதல் வாய் உறிஞ்சதுமே கார்த்திகா, “உவேக்…” என முகத்தை சுளித்தார்.

“அடடா…? என்ன ஆச்சு அத்தை… நீங்க எனக்கு அத்தை முறை தான?” என சந்தேகம் தீர்த்துக்கொண்டவன், “ரொம்ப உப்பா இருக்கோ. பரவாயில்ல குடிங்க. வாரத்துல ஒரு நாள் உப்பு போட்டு குடிச்சா மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுமாம். முக்கியமா சூடு சொரணை வருமாம். ம்ம்…” என்று விழிகளாலேயே காபியை அருந்த சொல்ல, கார்த்திகாவிற்கும் கஜேந்திரனுக்கும் முகம் கடுகடுத்தது.

பரணியோ பாவமாக அமர்ந்திருக்க, ரோகிணிக்கு வாயெல்லாம் கசந்தது.

“உங்களுக்கு என்ன ஆச்சு அத்தை…? நான் என்ன காஃபில விஷத்தை கலந்து குடுத்தா உங்களை கொடுமை படுத்தினேன். ஆஃப்டர் ஆல், உப்பு தான. சும்மா குடிங்க…” என்றான் குத்தலாக.

‘விஷத்தை கூட குடிச்சுடலாம் போல’ என ரோகிணி முணுமுணுக்க, வான்மதிக்கு சிரிப்பை அடக்கவே இயலவில்லை.

பின் பரணியே, “நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு தான் வந்துருக்கேன்…” என்று ஆரம்பிக்க, அவன் அலட்டலின்றி என்னவென பார்த்தான்.

“எனக்கு அப்பறம் என் கடை எல்லாம் பார்த்துக்க, என் அண்ணன் பசங்க தான் இருக்காங்க. பெரியவனுக்கு அந்த அளவு சாமர்த்தியம் பத்தாது. கொஞ்சத்தை என் மத்த மாப்பிள்ளைங்களுக்கு பிரிச்சு குடுத்துட்டாலும், வியாபாரம் ரொம்ப ஒடிஞ்சு தான் போகுது. சுதாகர் அளவு யாரும் வியாபாரத்தை பார்த்துக்க மாட்டுறாங்க. அவன் அவனுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கட்டும். நாங்க தடுக்கல. ஆனா, வியாபாரத்தை மட்டும் பார்த்துக்க சொல்லுங்க. நீங்களும் மதியும் சொன்னா தான் அவன் கேட்பான்.” என தயக்கம் மிக கூறி முடிக்க, கஜேந்திரன் பொங்கினார்.

“ஏதோ இங்க வந்து உன் பொண்ணை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேக்க போறன்னு உன்கூட வந்தா, நீ என் பையனை தத்து குடுக்குறதும் இல்லாம, நம்ம சொல்பேச்சு கேட்காம போனவனுக்கு சொத்தை வேற குடுக்கணும்ன்னு சொல்றியா?” என்று கோபத்துடன் எகிற, பரணி “நீ வாய மூடிக்கிட்டு உட்காருண்ணே.” என்றார் அதட்டும் தொனியில்.

இவர்களை வேடிக்கை பார்த்த ஆரவ், புருவம் இடுங்க, “அதென்ன நாக்கை புடுங்குற கேள்வி… அந்த புடுங்குற கேள்வி என்னன்னு என்கிட்ட கேளுங்க.” என்றான் அமர்த்தலாக.

அவன் பார்த்த பார்வையிலேயே அவருக்கு உயிரணுக்கள் சற்றே நடுக்கம் கொள்ள, அவனோ “பட் ஒரு கண்டிஷன், நீங்க கேட்குற கேள்வி வேலிட் – ஆ இருக்கனும். இல்லன்னா, இங்க இருந்து போகும் போது நாக்கு இல்லாம தான் போகணும்.” என விரல் நீட்டி எச்சரித்தவன், “மதி… போய் கத்தி எடுத்துட்டு வா!” என்று இரு கையையும் பரபரவென தேய்க்க, வான்மதிக்கோ உண்மையாகவே செய்து விடுவாரோ என்றிருந்தது.

கூடவே, ஆரவின் ஆதிக்கத்தை அவளின் விழிகள் திருட்டுத்தனமாக ரசித்து வைக்க, அவன் கூற்றில் அரண்ட கஜேந்திரனுக்கு நா எழவில்லை.

அவனோ சொல்லாமல் நகர விடமாட்டேன் என்பது போல விழி எடுக்காமல் அவரையே அனல் பார்வை பார்த்தபடி இருக்க, கணவனை காப்பாற்றும் எண்ணத்தில் கார்த்திகா, “அவ… முதல் புருஷன் உயிரோட இருக்கும் போதே, அதுவும் அவனோட தம்பியவே கல்யாணம் பண்ணிக்கிறது நியாயமா?” என வேகமாக கேட்க வந்து விட்டு, பாதி வார்த்தையை வாய்க்குள்ளேயே விழுங்கினார் பயத்தில்.

ஆரவ் தான், தாடியை சிந்தனையுடன் வருடி விட்டு, “ம்ம். கரெக்ட் தான் அத்தை. நியாயம் இல்ல தான்…” என்று தலையாட்ட, வான்மதிக்கு முணுக்கென கண்ணில் நீர் கோர்த்தது.

“உயிரோட இருக்கும் போது தான், அவன் தம்பியை கல்யாணம் பண்ண கூடாது… ஆனா, இப்போ தான் இல்லையே…” என அலுங்காமல் குலுங்காமல் அசட்டையாக அவர்கள் தலையில் குண்டை தூக்கி போட, நால்வரும் உறைந்தனர். வான்மதியும் தான்… கன்னத்தில் வழிந்த நீருடன் ஆரவை திகைப்புடன் பார்த்தாள்.

நால்வரும் பதற்றத்துடன் அங்கிருந்து கிளம்ப, “ஆரவ் நீங்க சொன்னது உண்மையா? வி… விக்ராந்த்?” என எச்சிலை விழுங்கிக்கொண்டு கேட்க, அதற்கு பதில் கூறாதவனாய் “இஷு எங்க?” எனக் கேட்டான்.

“ரூம்ல தூங்குறான்… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்றவளிடம், “பதில் சொல்ற அளவு, நீ ஒர்த்தான கேள்வி கேட்கல மதி.” என நகர போனவனின் கையை பிடித்தாள்.

அதில், அவன் அவள் புறம் திரும்ப, சட்டென கையை எடுத்துக்கொண்டவள், “என்மேல கோபமா?” எனக் கேட்கும் போதே, கண்ணீர் அணை உடைந்தது.

“உன்மேல கோபப்பட நான் யாரு?” அவன் விழி சுருங்க எதிர்கேள்வி கேட்டவன், “உன்மேல கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு மதி…? நீ ஜஸ்ட் இங்க என் பையனுக்கு அம்மாவா மட்டும் தான் இருக்க…!” என தலை சாய்த்து கேட்டவன், அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்திக் கொள்ள, அவளுக்கு கோபம் வந்து விட்டது.     

‘நான் இஷுக்கு அம்மா மட்டும் இல்ல முகில். உங்களோட கண்ணம்மாவும் நான் தான்…’ என மனத்தினுள்ளேயே கத்தியவள், அவனின் கோபத்தின் மூலக்காரணம் புரியாது சமையலறைக்குள் சென்று பாத்திரத்தை நங்கு நங்கென்று வைத்தாள்.

அவளே, சமைக்கவும் தொடங்கி, வெங்காயத்தை நறுக்க சென்றவள் எப்போதும் போல விரல்களில் கீறிக்கொள்ள, அதை கூட உணரவில்லை அவள். சட்டியில் வெங்காயத்தை வதக்குகிறேன் பேர்வழியென சூடும் பட்டுக்கொள்ள, இந்த சத்தத்தை கேட்டு விறுவிறுவென வெளியில் வந்த ஆரவ்,

“உன்னை நான் இல்லாதப்ப இங்க வராதன்னு சொல்லிருக்குறதா எனக்கு ஞாபகம்” என்றான் கடுமையாக.

“இங்க நான் இஷுவுக்கு அம்மா மட்டும் தான். அப்படி இருக்கும்போது நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும்.” அவள் சினத்துடன் முறைக்க,

அவளை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தவன், “கேட்காத. என்ன வேணாலும் செஞ்சுக்க. ஐ டோன்ட் கேர்.” என்று தோளைக் குலுக்கிக்கொள்ள, அவளோ, சட்டியிலேயே கரண்டியையும் வைத்திருந்தாள். அது வெங்காயத்துடன் சூடாகி இருக்க, அது தெரியாமல், அவளும் அவனை முறைத்தபடி கரண்டியை பிடித்து விட்டு, சூடு தாளாமல் “ஆ…” வென கத்தினாள்.

அத்துடன் பிடிவாதத்தை விட்ட ஆரவ், அவசரமாக அவளருகில் வந்து, அவளின் உள்ளங்கையை ஊதி விட்டு, “அப்படி என்னடி ஈகோ உனக்கு? ஏன் நான் செஞ்சதை சாப்பிட்டா தொண்டைல இறங்காதா… இல்ல நான் அருவருப்பா இருக்குற மாதிரி, நான் செய்ற சாப்பாடும் உனக்கு அருவருப்பா இருக்கா?” என தன்னை மீறி கர்ஜித்தவன், அவள் ஏதோ பேச வருவதை தடுத்து,

“பேசாத. பேசுன அறைஞ்சுடுவேன்…” என்றான் விழி சிவக்க.

அதில் அவள் பிதுங்கிய உதட்டுடன் வாயை மூடிக்கொள்ள, அவளை வாய்க்குள்ளேயே திட்டியவன், ஒரு கட்டத்தில் மனது கேளாமல் சிவந்திருந்த உள்ளங்கையை அப்படியே அவனின் முகத்தில் பதித்திருந்தான்.

இதழ்நீரால், கை சிவப்பை சரி செய்ய முயன்றவன், பிஞ்சு விரல்களை மெல்ல வருடத் தொடங்கினான்.

அவனின் இதழ்கள் விரல்களையும் பதம் பார்க்க, அவன் நெருக்கத்திற்காக ஏங்கிய பெண்ணவளுக்கு, இம்மோன நிலை கண்களை சொருக வைத்தது.

அவனிடம் மீண்டும் பழைய குறும்பை வரவழைக்க பேராசை பட்டவள், “இது என்ன கிஸ்ன்னு சொல்லல…?” எனக் கேட்டாள் கண்ணை மூடியபடியே.

அவள் கேள்வியில், முத்தமிடுவதை நிறுத்தாமல், “பெயின் கிஸ். சிவந்துருக்குற கையில குடுக்கும் போது உனக்கும் வலிக்கும். குடுக்குற எனக்கும் ரொம்ப ரொம்ப வலிக்குது.” என்றவனின் குரலில் ஆதங்கமும், ஏக்கமும் பொங்கி வழிந்தது.

கவனமாக ‘கண்ணம்மா’ என்ற அழைப்பை அவன் தவிர்ப்பது புரிய, “ஆரவ்…” என தவிப்புடன் அவனை அழைத்திட, அவனோ இப்போது கரங்களின் வழியே பயணித்து, அவளின் கழுத்தில் வந்தடைந்தான்.

அங்கும் இதழ் பதித்து கோலமிட்டவன், மெல்ல நிமிர்ந்து தாடையிலும் முத்தமிட்டு, பெண்ணவளின் இதழ்களை நோக்கி படையெடுக்க, அவள் இதழ்கள் துடிக்க, அப்படியே நின்றிருந்தாள்.

ஆனால், இப்போதும் அவனிதழ்கள் அவளை தீண்டவில்லை. வெடுக்கென நகர்ந்தவன், “ஏற்கனவே என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ தண்டனை தான் அனுபவிக்கிற. இதுல இந்த தண்டனையையும் உனக்கு குடுக்க விரும்பலடி.” என ஆற்றாமை பொங்க உரைத்தவன், அவளுணரும் முன்பே விலகி சென்றிருக்க, வான்மதிக்கு ஒரு கணம் நடந்த எதுவுமே புரியவில்லை.

அதன் பிறகே, தான் பேசிய வார்த்தைகளில் உழன்று வெந்து கொண்டிருக்கிறான் என்பது புரிய, அவனின் கோபமும் காயமும் தீர்க்கும் வழி புரியாது சிலையாகி இருந்தாள், அவ்வழியை தானே உருவாக்கப் போகிறோம் என்ற ரகசியம் அறியாது.

தேன் தூவும்…
மேகா…!

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். உங்க  கமெண்ட்ஸ், ஸ்டிக்கர்ஸ், ரேட்டிங்ஸ் எல்லாத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️ சாரி என்னால ரிப்ளை பண்ண முடியல. யூடி போட முடியல. வீட்ல டைட் வொர்க் drs. Please understand… 😍😍😍 கதை முடிவை நோக்கி போய்ட்டு இருக்கு drs. Max அடுத்த யூடி சனிக்கிழமை தரேன். ஸ்டோரி எப்படி இருக்குன்னு சொல்லுங்க 🤩💖

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
39
+1
236
+1
5
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. priyakutty.sw6

   ஆரவ் கோபத்துல மத்தவங்க செம்மயா பேசறாரு ல…

   ஆரவ் வலி இப்படி மதி ட்ட பேச வைக்குது…. 😔

  3. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்