1,015 views

“உன்ன எதுக்கு அவன் குண்டம்மான்னு சொல்றான். என் பஞ்சு மிட்டாய் எவ்ளோ அழகா க்யூட்டா புசுபுசுன்னு இருக்கு. அவன் பொண்டாட்டி மாதிரியா இருக்க.”

“ஹா ஹா! தைரியம் இருந்தா எங்க அண்ணன் முன்னாடி இந்த வார்த்தைய சொல்லிப் பாருங்களேன்.” இரவெல்லாம் தூங்காமல் கதை அளந்து கொண்டிருந்த திவ்யா ஒரு பக்கம் சாய்ந்து படுத்து பேச,

“என் முன்னாடி இன்னொரு தடவை  குண்டம்மானு கூப்பிடட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.” வீரத்தோடு பதில் சொன்னான் விக்ரம்.

“வீட்டுக்குள்ள மட்டும் தான் கூப்பிடுவான் மாமா. வெளியே எங்க போனாலும் பாப்பான்னு தான் சொல்லுவான்.” அண்ணன் வைத்த செல்லப் பெயருக்கு அவள் காரணம் கூற,

“எதுவா இருந்தாலும் இனி சொல்லக்கூடாது.” பேச்சை முடித்தான் விக்ரம்.

தூக்கம் மறந்து இருவரும் காதலித்துக் கொண்டிருக்க, திவ்யா வைத்த அலாரம் அடித்து விடியலை ஞாபகப்படுத்தியது. இத்தோடு போதும் என்று அழைப்பை அவள் துண்டிக்க பார்க்க,

“பஞ்சு மிட்டாய் இன்னும் கொஞ்ச நேரம் பேசட்டுமா.”  ஆறாவது முறையாக கெஞ்சி கூத்தாடி விட்டான் விக்ரம்.

வரும் கொட்டாவியை அடக்காமல் சத்தமாக விட்டவள், “மாமா என்னை விட்டுருங்க தெரியாம உங்கள லவ் பண்ணிட்டேன் ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிச்சீங்க இப்போ மணி விடியற்காலை  ஆறு. இன்னைக்கு முதல் நாள் காலேஜ் வேற தூங்கு மூஞ்சியோட போனா நல்லா இருக்காது. ” என தூக்க கலக்கத்தில் திவ்யா கெஞ்ச, அழைப்பை துண்டித்தான்.

அரை மணி நேரம் தூக்கத்தில் சுழன்றவள் முதல் நாள் முதுகலை பட்டப்படிப்பிற்கு செல்ல தயாரானாள். குளித்து முடித்து வெளியில் வந்தவள் வாயை பிளக்காத குறையை விக்ரமை பார்த்தாள். அவள் அழைப்பை துண்டித்த கையோடு தயாரானவன் இங்கு வந்து விட,

“மாமா இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.” என்றாலும் உள்ளுக்குள் புதுவித அனுபவம் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

“அன்னைக்கு சொன்னது தான் இனிமே உன்னோட சம்பந்தப்பட்ட எதுவா இருந்தாலும் அதை நான் தான் பண்ணுவேன்.” என்றவனின் பேச்சை கேட்டுக் கொண்டு தான் இருந்தார் மணிவண்ணன்.

மருமகனின் வார்த்தைக்கு மகிழவும் முடியாமல், வேண்டாம் என்ற மறுப்பை முன் வைக்கவும் முடியாமல் காது கேட்காதவர் போல் அமர்ந்திருக்க, “விக்ரம் பொண்ணுக்கு அப்பா அங்க தான் இருக்காரு‌” என்று ஞாபகப்படுத்தினார் அன்னபூரணி.

மாமனாரை பார்த்தவன், “மாமனார் சுமைய குறைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் பாட்டி.” என்றான்.

சமையல் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இவை அனைத்தும் பரமேஸ்வரி காதில் விழத்தான் செய்தது. அக்னி கல்யாணத்தில் இணைந்த குடும்பம் திவ்யாவின் கல்யாணத்தில் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது தான் அவரின் வேண்டுதல்.

சாப்பிட்டு தயாரான திவ்யா பெற்றோர்கள் முன் உத்தரவிற்காக நிற்க, அவர்களோ வாயை திறக்கவில்லை. பொறுத்திருந்து பார்த்த விக்ரம் சத்தமாக,

“மாமா அத்தை நான் திவ்யாவ கூட்டிகிட்டு காலேஜ் கிளம்புறேன்.” என்றதோடு நில்லாமல் அவள் கைப்பிடித்து பறந்து விட்டான்.

“மாமா நீங்க இவ்ளோ பெரிய காதல் ரோமியோவா இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல.” என்றவள் சிரிக்க,

“நானே நினைக்கல திவ்யா எல்லாம் புதுசா இருக்கு. இன்னும் என்னன்னு மனசு தேடுதே தவிர போதும்னு சொல்ல மாட்டேங்குது. அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் தூரமா போயிட்டு நீ ரொம்ப கிட்ட வந்துட்ட.” என்றவன் பார்வை அவள் மீது இல்லாமல் சாலையில் இருந்தது.

“ஃப்யூச்சர்ல நானும் தூரமா போயிருவேனா மாமா.” ஆர்வமாக பதிலுக்கு காத்திருக்க,

“என்னை நானே தூரமா வச்சுக்க விரும்ப மாட்டேன்.” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான்.

சாலையில் உள்ள கோவிலை தாண்டியதும் சட்டென்று நின்றது கார். காரில் இருந்து இறங்கி திவ்யா இருக்கும் புறம் நகர்ந்தவன் கதவை திறந்து விட்டு, “சாமி கும்பிட்டுட்டு வா வெயிட் பண்றேன்.” என்றான். விழி அகலவில்லை அவனை விட்டு.

கோவிலை தாண்டிய அந்த அரை நொடியில் அவள் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்க அதற்குள் நிறைவேற்றி விட்டான். சற்றுமுன் அவன் சொன்ன வார்த்தை பலித்து போனது திவ்யாவிற்கு. உலகமே பின் சென்று விக்ரம் மட்டுமே முன் நின்றான்.

இமை சிமிட்டாமல் தன்னை பார்க்கும் வருங்கால மனைவியின் கன்னத்தை தட்டி, “பார்த்தது போதும் இறங்கு.” என்றவனுக்கு வேலை கொடுத்தாள் கைகளை நீட்டி.

சிரிப்போடு தாங்கிக் கொண்டவன் அவள் கீழ இறங்க உதவி செய்ய, “நீங்களும் வாங்க மாமா.” அழைத்துச் சென்றாள்.

சன்னிதானத்தில் நின்றவள் ஐயரிடம் பூஜை பொருட்களை கொடுத்து விக்ரம் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொன்னாள். அதில் அவன் வியப்பதற்குள் ராசி நட்சத்திரம் அனைத்தையும் அவன் சொல்லாமல் தெரிந்து கொண்டதை தெரியப்படுத்தி இன்னும் வியக்க வைத்தாள்.

புருவம் உயர்த்தி அவன் விசாரிக்க, “உங்க அளவுக்கு இல்லனாலும் கொஞ்சம் லவ் பண்றேன் மாமா.” என்றவள் சிரித்துக்கொண்டு கண் மூடினாள்.

நேற்று வரை கடவுளிடம் வைத்த கோரிக்கைகள் ஆயிரம் இருக்க இன்று ஒரே ஒரு கோரிக்கை தான் அது விக்ரம். மனதினுள் செல்வகுமார்  பற்றிய பயம் அவளுக்கு இன்னும் இருக்க துணைக்கு கடவுளை அழைத்தாள். விழித்திறந்தவள் கடவுளை பார்ப்பதற்கு முன்னால் விக்ரமை பார்க்க, அவனும் அவள் சாமி கும்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

கண்களால் கண்டித்தவள் சாமியை கைகாட்டி வணங்கச் சொல்ல உடனே செய்தான். அவனைப் போல் ரசிப்பாள் என்ற ஆசையோடு அவன் கண் திறக்க, அவளின் ரசிப்பு அங்கு தரும் பொங்கல் மீது இருந்தது. தலையில் அடித்துக் கொண்டவன்  பதினைந்து பேரைத் தாண்டி வரிசையில் நின்றான். படிக்கட்டில் அமர்ந்து ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டிருந்தவள் கையில் பொங்கலை திணிக்க, முதல் வாய் அவனுக்கு கொடுத்தாள்.

நல்ல ஆரம்பத்தோடு கல்லூரி வாசலில் நின்றவள் விடை பெறாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவனும் கிளம்பவில்லை. பரமேஸ்வரி அழைப்பில் நடப்புக்கு வந்த திவ்யா கிளம்ப கை அசைக்க, கார் நகர்ந்தது. நான்கு அடி நடந்தவள் நகராமல் அப்படியே நிற்க, கண்ணாடியில் அதை பார்த்தவன் காரை நிறுத்தினான்.

உள்ளுக்குள் காதல் ஹார்மோன்ஸ் பெருமைப்பட்டு சிரிக்க, கார் அவள் இருக்கும் இடத்தை நோக்கி பின் நகர்ந்தது. புன்னகை முகமாக காரில் ஏறியவள், “லவ் யூ மாமா” என்றதோடு தாடி நிறைந்திருந்த  கன்னத்தில் இதழை வைக்க, பேச்சில்லை அவனிடம்.

விக்ரமின் முக பாவனைகளை ரசித்தவள் காரை விட்டு இறங்கினாள். என்ன நினைத்தாளோ மீண்டும் ஏறி, “இப்படி பார்க்காத மாமா இன்னொரு முத்தம் கொடுத்திடுவேன்.” என்ற பின்னும் அவன் பார்வை தொடர, இரண்டாம் முத்தம் மூன்றாக மாறியது விக்ரம் திருப்பி கொடுத்ததால்.

***

மிஸஸ் அக்னி தம்பதிகளுக்கு இன்னும் விடியல் பிறக்கவில்லை. திரை அனைத்தையும் கள்வன் எப்போது மூடினானோ இருட்டு சிக்கிக்கொண்டது. இருவரும் தூக்கத்தில் பிரியாமல் ஒட்டிக்கொண்டிருக்க, “அன்பு” கரகரப்பான குரலில் அழைத்தான் அக்னி.

“ம்ம்ம்!” என்ற குரல் மட்டுமே அவளிடம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுப்ப மனமின்றி இரண்டு மணி நேரம் பொறுத்தவன், “எந்திரிடி பொண்டாட்டி” உசிப்பி கொண்டிருந்தான்.

“போடா தூங்க விடாமா டார்ச்சர் பண்ணிட்டு.” அவனை விட்டு விலகி படுத்தாள்.

“அன்பு” குழைவாக கொஞ்சியவன் பக்கத்தில் நெருங்கி படுக்க, உடனே தூக்கம் கலைந்து விட்டது அன்பினிக்கு.

“கொன்றுவேன்டா இதுக்கு மேல ஆட்டம் போட்டின்னா. ” என்றதும் நல்ல சிரிப்பு அவன் முகத்தில்.

“அக்னி வேணாமா” என்று மீண்டும் குழைய, அவள் அமைதியாக படுத்திருந்தாள்.

விடுவானா அவன்! காதில் நாக்கை நுழைத்து அடியை வாங்கி கொண்டவன் “அக்னி குட் பாய் அன்பு. சமந்தா இந்த ஒரு தடவை மட்டும் ஓகே சொல்லு அப்புறம் கேட்கவே மாட்டான்.” என்றவன் உதடு ஒரு இடத்தில் இல்லை.

கிறங்கி அவன் பக்கம் திரும்பியவள், “கொஞ்சம் வேணும்னு தான் தோணுது.” என்று சரணடைய, தடுக்க ஆள் இல்லாமல் போனது அக்னியின் ஆட்டத்தை.

ஒருவழியாக பசி அவன் ஆட்டத்தை நிறுத்த துணிவோடு களமிறங்க, வேலை செய்தது. குளித்து முடித்து கீழே வந்தவர்கள் குஷியாகி போனார்கள் வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதால். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரிக்க, சாப்பாடு அவர்களை பார்த்து முறைத்தது காக்க வைத்ததால்.

அப்போது தான் ஞானம் பெற்ற அன்பினி பொறுப்பான மருமகளாக மதிய உணவை சமைத்துக் கொண்டிருக்க, உதவி செய்தான் அவை பாதியில் நிற்க.

“எரும எதுக்கு தொல்ல பண்ற அத்தைக்கு சாப்பாடு கொடுத்து விடணும்.” என்று கரண்டியால் அவனை வெளுக்க,

“மக்கு பொண்டாட்டி உன் மாமியார் உஷாரா பாட்டிய கூட இருக்க வைக்காம கிளப்பி இருங்காங்க அவங்களா உன் சாப்பாட்ட எதிர் பார்க்க போறாங்க.” என்று அவள் மண்டையில் மணி அடித்தான்.

“அப்போ யாரும் நம்மளை தொந்தரவு பண்ண மாட்டாங்க அப்படித்தான அக்னி.” என்றவள் விழ கொஞ்ச,

“பண்ண விட்றுவேனா டி நானு. நமக்கு எவ்ளோ முக்கியமான வேலை இருக்கு.” என்று அவள் இடுப்பில் கை வைக்க,

“அதான” என்று கை கோர்த்து தன்னிடம் இழுத்தவள், “வெளிய கூடிட்டு போறியா.” என்றாள் ஆசையாக.

அந்த நாள் மனதில் தோன்றி அவனை வருத்தத்தில் ஆழ்த்த, பதில் சொல்லாதவன் நட்ட நடு இரவு தான் வீடு வந்து சேர்ந்தான் அவளோடு.

***
கல்லூரி முடித்தவள் சிட்டாகப் பறந்து வர, கார் கூட்டில் காத்திருந்தான் விக்ரம். அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றவன் மெல்ல பேச்சு கொடுத்தான், “திவி மூணு நாள் நான் வெளியூர் போறேன்.” என்று.

ஐஸ்கிரீம் கசந்தது போல் முகத்தை சுழித்தவள், “வேணா மாமா” என்றாள் காரணத்தை கூட கேட்காமல்.

“இல்லடா ஒரு முக்கியமான வேலை போய் தான் ஆகணும்.” என்ற பின் அவள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்க,

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டு ஓடி வந்துடுறேன்.” என்ற வாக்குறுதியில் அரை மனதோடு சம்மதித்தாள். வீட்டில் இறக்கி விட்டவன் வேக வேகமாக கிளம்பினான் வெளியூருக்கு.

நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தவர்கள் சோர்வாக துயில் கொள்ள அன்பினியின் ஃபோன் விடாமல் அடித்தது. அவள் அசதியில் தூங்கிக் கொண்டிருக்க, சத்தத்தில் எழுந்தான் அக்னி. போனை எடுத்தவனுக்கு விக்ரம் முகம் தெரிய, நள்ளிரவு என்பதால் உடனே எடுத்தான்.

“அன்பினி அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் சீக்கிரம் வீட்டுக்கு போ அம்மா அழுகுறாங்க.” என்றான் பதட்டமாக.

“நீ எங்க இருக்க வீட்டுக்கு போகாம.” என்ற அக்னியின் குரல் கேட்டதும்,

“நான் வேலை விஷயமா வெளியூர் வந்து இருக்கேன். அவருக்கு ஏதோ பிக்ஸ் வந்துட்டதா அம்மா அழுகுறாங்க எனக்கு ஒன்னும் புரியல கொஞ்சம் என்னன்னு பாரு.” என்றான் பதட்டமாக.

எதைப் பற்றியும் யோசிக்காத அக்னி விரைந்தான் மாமனார் இல்லத்திற்கு. அங்கு அவனைக் கண்டதும் நந்தினி அழ ஆரம்பிக்க, துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

தோல்வியில் ஏற்பட்ட மன அழுத்தம், தொடர் தனிமை அத்தோடு கூடா நட்பால் சேர்ந்த கெட்ட பழக்கங்கள் என்று அவரை முடியாத நிலைக்கு சாய்த்து விட்டது நோய். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை முடித்த மருத்துவர்கள்,

“அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்திருக்கு. அதோட சேர்த்து இப்போ மதுவும் உள்ள போய்  கல்லீரல், கணையம் ரெண்டும் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. கொஞ்ச நாளைக்கு தொடர் சிகிச்சையில இருக்கணும்.” என்றார்கள்.

அவர்களின் பேச்சைக் கேட்கும் வரை கூடவே இருந்த அக்னி, “அத்தை நான் போயிட்டு அன்பினிய அனுப்பி வைக்கிறேன்.” என்று விடை பெற்றான்.

அவர் மீது இருக்கும் கோபத்தில் இவ்வளவு தூரம் வந்ததே பெரிதென்று நினைத்தவர் மௌனமாக தலையசைத்தார். விடியற்காலை நேரம் வீட்டிற்கு வந்தவன் அன்பினியிடம் விஷயத்தை கூற, அவளோ சாதாரணமாக இருந்தாள். அக்னி காரணம் கேட்க,

“நான் அவர் பொண்ணான்னு உறுதியா தெரியாதா அப்போ எப்படி போறது அக்னி.” என்றவள் உள் எழும் வருத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மடி சாய,

“அன்பு அதெல்லாம் கோபத்துல பேசுறது. நீ முதல்ல ஹாஸ்பிடல் கிளம்பு.” என்றான் பக்குவமாக.

எத்தனை சமாதானங்கள் சொல்லியும் அவள் மனம் கேட்கவில்லை. பிடிவாதமாக செல்ல மறுக்க, அன்னபூர்ணியிடம் விஷயத்தை கூறினான். அவரும் பேத்தியை போல் பார்க்க மறுத்து விட, கடைசியாக நின்றான் அன்னை முன்பு.

மனம் துடிக்க தான் செய்தது அவருக்கு. இருந்தும் நேரில் சென்று நலம் விசாரிக்க மட்டும் மனம் வரவில்லை. மகனைப் போல் கணவனும் எடுத்துக்கூற, “வேணாங்க என்னை பார்க்காம இருக்கிறது தான் அவர் உடல் நலத்துக்கு நல்லது.” என்று விட்டார்.

அக்னி நடவடிக்கைகளை கவனித்த அன்பினி, “என்ன அக்னி எங்க அப்பாவ மன்னிச்சிட்டியா.” சந்தேகமாக கேட்க,

“அவ்ளோ பெரிய மனசு எனக்கு இல்ல அன்பு. ஆனா உடம்பு முடியாம ஒருத்தர்   இருக்கும் போது மறுக்க மனம் இல்லை. ” என்றதும் அன்பினி எதையோ கூற வர,

“என்ன கேட்க வரேன்னு புரியுது. அன்னைக்கு பாட்டி கூட விக்ரம் இருந்தான். அவன தாண்டி என் உதவி அதிகம் தேவைப்பட்டு இருக்காது. அதுவும் இல்லாம அப்போ எனக்கு இருந்த மனநிலை அப்படி. இப்போ நிறைய மாற்றம்  எல்லாம் உனக்காக. நேத்து விக்ரம் குரலை கேட்டதும் எனக்காக எங்க அம்மா தவிச்சது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. அத்தை தனியா இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் இங்க இருக்க முடியல.” என்று லேசாக கண் கலங்கினான்.

தட்டி கொடுத்து ஆறுதலாக , “அப்படி அன்னைக்கு  நடக்கலன்னா இன்னைக்கு நம்ம சேர்ந்து இருக்க முடியாது அக்னி. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு .” தேற்றினாள்.

தந்தையின் உடல் நிலையை அறிந்து விக்ரம் உடனே வீடு திரும்பி விட்டான்.  மகன் வந்ததும் பெரிய பக்கபலமாக உணர்ந்த நந்தினி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். கண்விழித்த செல்வகுமார் முதலில் தன் மனைவியை பார்த்து, அடுத்ததாக யாரையோ தேடி ஏமாந்தார். விக்ரம் அனைத்தையும் செய்தானே தவிர அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் பேசி நாட்கள் பல ஆகிவிட்டது.

விஷயம் கேள்விப்பட்ட திவ்யா பார்க்க அனுமதி கேட்க யாரும் மறுக்கவில்லை. மருத்துவமனை வரை வந்தவள் உள்ளே செல்ல தயங்கி நிற்க, கதவு லேசாக திறந்து இருப்பதால் மகள் தான் வந்திருக்கிறாள் என்று ஆர்வமாக எழுந்த அமர்ந்தார் செல்வகுமார். திவ்யாவை பார்த்ததும் ஏமாற்றம் தெரிந்தாலும் லேசாக சிரிப்பு வந்தது. பெற்ற தாயும், மகளும் வராமல் இருக்க மருமகளின் வரவு அனாதை இல்லை என்று உணர்த்தியது அவருக்கு.

இளமைக்காலத்தில் ஆட்டம் போட்டு முதுமையில் சோர்ந்து படுக்கும் பொழுது தான் உறவுகளின் அருமை புரிந்தது அவருக்கு. வந்தவள்  தயங்கி அவரின் உடல்நிலை பற்றி விசாரிக்க, “உனக்காது என்னை பார்க்கணும்னு தோணுச்சே சந்தோஷம்.” என்று பேச்சை நிறுத்தினார்.

செல்வகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு பத்து நாட்கள் முடிந்து விட்டது. நந்தினி விக்ரம் திவ்யாவை தவிர வேறு யாரும் வரவில்லை. வழக்கம் போல் மாமாவை பார்க்க திவ்யா வர, “வாடா திவி” புன்னகை முகமாக அழைத்தார்.

இந்த பத்து நாட்களில் சிகிச்சை அவர் மனதை தேற்றியதோ இல்லையோ திவ்யா சாதித்து விட்டாள் மனதில் இடம் பிடித்து. அவரோடு சிறிது நேரம் பேசி பொழுதை கழித்தவள் விக்ரமை விசாரிக்க,

“அவன் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன்னு கிளம்பிட்டான்.” என்றார் நந்தினி.

தனியாக சமைக்கிறான் என்றதில் கஷ்டமாகி போனது அவளுக்கு. சாக்கு சொல்லி அவனை பார்க்க கிளம்பியவள் வீட்டில் கால் வைத்ததும் தான் புத்தி உரைத்தது உனக்கு சுடு தண்ணீர் கூட போடத் தெரியாது என்று. சமாளிப்போம் என்ற தைரியத்தோடு அவள் சமையல் அறைக்குள் நுழைய,

“வாங்க பஞ்சு மிட்டாய்.” வரவேற்றான் விக்ரம்.

“தள்ளுங்க மாமா நான் சமைக்கிறேன்.” என்றதும் பிடித்திருந்த  தோசை மாவை கரண்டியை பாத்திரத்தில் போட்டவன், “வேணாம் திவி எங்க அப்பா இன்னும் கொஞ்சம் வருஷம் உயிரோட இருந்துட்டு போகட்டும்.” என்றான் அதிர்ச்சியாக.

இடுப்பில் கை வைத்து முறைத்தவள் வெளியில் செல்ல முயல, “எங்க போற பஞ்சு மிட்டாய் ” இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

“மாமா நான் ஒரு தோசை சுடுறேன்” என்று குழந்தை போல் கெஞ்ச,

“இன்னைக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு போன மாதிரி தான்.” என்ற புலம்பலோடு அவள் கைக்கு மாற்றினான் கரண்டியை.

“அய்ய என்ன மாமா இது தோசையே வரல” என்று முகம் சுழிக்க,

“இந்த மாதிரி தோசை ஊத்தினா ஜென்மத்துக்கும் வராது.” என்று தலையில் அடித்துக் கொண்டவன் சொல்லிக் கொடுத்தான்.

பிற்காலத்தில் பாடம் கற்பிக்கப் போகிறவள் சமையல் பாடத்தை கற்றுக் கொண்டிருக்க, “அப்படியே ஒரு சுத்து சுத்தி வளைச்சு விடனும்” என்றவன் கை அவள் வயிற்றில் புதைந்து போனது. கூச்சத்தில் கரண்டியை விட்டவள், “மாமா நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல” என்றாள் கடினப்பட்டு.

உடனே விலகி நின்றவன், “இதுக்கு மேல நீ இங்க இருந்தன்னா அவ்ளோ தான் வேலை ஆகாது. ஹால்ல உட்காரு” என்று துரத்தி விட்டான்.

டிவி பார்க்க அமர்ந்தவள் கண் எல்லாம் விக்ரம் மீது தான் இருந்தது. உடல் வேர்க்கவில்லை என்றாலும் முகம் வேர்த்தது. தன்னவன் சமைக்கும் அழகை ரசித்தவள் அவன் அருகில் சென்றாள்.

“திவி இந்த பக்கம் வா சாம்பார் சூடா இருக்கு.” என்றவன் சட்டியை இழுக்க, வேர்வையை துடைத்தாள்  முகத்தை ஒட்டி எடுத்து.

“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல.” அவள் சொன்னதை அவளுக்கே சொல்லிக் காட்டியவன் சிரிக்க,

“அதனால தான் முகத்தால துடைக்கிறேன் மாமா” என்றாள் காதலோடு.

அந்த வார்த்தையில் விக்ரம் ஊடுருவ, திவ்யாவின் பார்வை தான் வெட்கி தலைகுனிந்தது. முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, “கல்யாணம் பண்ணிக்கலாம திவி” என்று ஆசையாக கேட்க,

“வேணான்னு சொல்ற ஐடியா இல்ல மாமா.” என்றாள்.

காதல் மனம் கட்டுப்பாட்டை மீற முயல, இருவரும் கண்ணியத்தோடு காதல் புரிந்தனர்.

***

அக்னி வீட்டில் பல மாற்றங்கள். அன்னபூரணி மகனைப் பார்க்கவில்லையே தவிர அனுதினமும் கடவுளிடம் பிரார்த்தனை வைத்தார். பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் முன்னர் விட கம்பீரம் கூடி காட்சியளித்தது பரமேஸ்வரி நிர்வாகத்தில். தொழில் லாபத்தை விட தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்தையும் செய்தார். மணிவண்ணன் விக்ரமிடம்  விசாரித்து தெரிந்து கொண்டார் செல்வகுமார் உடல்நிலையை. தினமும் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர் தான். உள்ளே மட்டும் செல்ல மாட்டார்.

அன்பினி அக்னி உறவில் ஆயிரம் மாற்றங்கள். இந்த பத்து நாளும் வீட்டிற்குள் ஹனிமூன் செலிபிரேட் செய்தார்கள். தந்தை ஞாபகம் எழுதும்போதெல்லாம் அவளை திசை திருப்ப அக்னி குறும்பு தனங்களை காட்ட, சில நேரங்கள் வேலை செய்தது. இருந்தும் மகளாய் மனம் மருண்டு பிடித்தது. அவளின் சோக முகத்தை காண சகிக்காமல் செல்வகுமார் உறங்கும் நேரத்தை அறிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். வந்த தடையும் தெரியாமல் தந்தையின் அருகில் அமர்ந்து விட்டு சென்றாள்.

தந்தையைப் பார்த்த மகிழ்வில் அக்னியை கண்டு கொள்ளவில்லை அன்பினி. அதில் கடுப்பானவன் வீடு வந்து சேரும் வரை அவளிடம் பேச்சு கொடுக்காமல் இருக்க, அவளோ அதை உணரவில்லை. அதில் இன்னும் கடுப்பானவன் சாப்பிடாமல் அறையில் இருக்க,

“அக்னி எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் காது கேக்கலையா.” என்றாள் கோபமாக.

கண்டுகொள்ளாமல் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் தலையில் ஒன்று வைத்தவள் சாப்பிட இழுத்துச் சென்றாள். அவன் கேட்காமல் முடிவாக சாப்பாட்டை மறுத்து விட, கோபம் வந்துவிட்டது அன்பினிசித்திரைக்கு.

அவளும் பிடிவாதத்தோடு படுத்துவிட்டாள். அரை மணி நேரம் கழித்து அக்னியின் ரோஷம் குறைய, “அன்பு பசிக்குது வா சாப்பிடலாம்.” என்றான் வெட்கம் இல்லாமல்.

அவள் முரண்டு பிடிக்க, “அன்பு ” என்று நெருங்கி சென்றான். கட்டிலை விட்டு இறங்கியவள், “இன்னைக்கு தனியா படு” என்று விட்டு வெளியில் செல்ல, இரண்டு எட்டில் தாவி பிடித்தான்.

“விடுடா” என அவள் போராடிக் கொண்டிருக்க, “அப்பன பார்த்ததும் புருஷன மறந்த உனக்கு இன்னைக்கு செம பனிஷ்மென்ட் இருக்கு.” என தள்ளினான் மெத்தையில். உருண்டு விழுந்த அன்பினி எழுவதற்குள் அவள் மேல தொப்பன்று விழுந்தான்.

அன்பினி இணங்க மறுத்து போராட, விடுவதாய் இல்லை அவளின் அக்னி.  தொடர்ந்து அவளை சிக்க வைக்க முத்த ஆயுதத்தை கையில் எடுக்க, தலையை அசைத்து தோல்வியை கொடுத்தாள் அவனுக்கு.

பொறுத்து கையாண்டவன் கடைசியாக, “ஏய்! ஒழுங்க ஓகே சொல்லிடு இல்லன்னா பனிஷ்மென்ட் பெருசா இருக்கும்.” என எச்சரிக்கை மணி அடிக்க புரிந்து கொள்ளவில்லை அன்பினி.

வயிற்றில் அமர்ந்து அவளை முறைத்தவன் கட்டிலை விட்டு இறங்கினான். வெற்றி பெற்ற மிதப்பில் அன்பினி மேல் ஆடையை உயர்த்தி பெறுமை பேச, “ஆஹான்!” என்றவன் அவள் கதறலை ரசித்தபடி தூக்கி சென்றான் பால்கனிக்கு.

வாயடைத்துப் போனால் பால்கனி இருக்கும் கோலத்தை பார்த்து. கண்ணாடி கதவு போட்டவன் அதற்கு மேல் கருப்பு நிற திரை சீலைகள் போட்டு, ஒரே ஒரு மின்விளக்கு, மேல் தளத்தில் மின்விசிறி, மெத்தை என்று அழகாக மாற்றி இருந்தான் அந்த இடத்தை.

“பிராடு! இதெல்லாம் எப்படா பண்ண. அதுக்கு தான் உள்ள இருந்து நான் பார்க்காத மாதிரி ஸ்கிரீன் போட்டு மறைச்சு இருந்தியா.” என்றவளை மெத்தையில் போட்டவன் புது பனிஷ்மென்ட் என்று சிரித்தான்.

அவளுக்குள் ஏதோ ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கதவை திறந்து ஓட பார்த்தாள். நகர விடாமல் பிடித்தவன், “இன்னைக்கு முதல் ராத்திரி இங்க தான் ” என்று சிரித்தான்.

கண்கள் இரண்டும் விரிந்து பேச மறந்தது அவன் வார்த்தையில். திருத்திருவென்று முழித்தவள், “கீழே இருந்து பார்த்தா எல்லாம் தெரியும் அக்னி” என அவன் மனதை மாற்ற முயற்சிக்க,

“அதுக்கு தானடி இந்த செட்டப் பண்ணி இருக்கேன். இதை தாண்டி எவன் கண்ணுக்கு படாது நம்ம செகண்ட் பெட்ரூம்.” என்று மீண்டும் சிரித்தான்.

“எது பெட்ரூமா! என்னடா உளறிட்டு இருக்க.” என்றவாள் கதவை திறக்க முயற்சித்தாள்.

உள்புறம் மட்டுமே தழுப்பாள் இருந்த பால்கனி கதவில் வெளிப்பக்கம் போடுமாறு ஏற்பாடு செய்தவன் அவள் திறக்கப் போகும் நேரம் சாவி கொண்டு பூட்டினான். ‘இதை எப்படா பண்ண.’ என்ற ரீதியில் அவள் பார்க்க,

மேலும்  அலற விட்டான் சாவியை கண்ணாடி கதவை திறந்து வெளியில் தூக்கி போட்டு. “ஐயோ அக்னி இப்ப எப்படி நம்ம ரூமுக்குள்ள போவோம்.” என்று அன்பினி பதறினாள்.

“காலை வரைக்கும் அங்க நமக்கு வேலை இல்லை அன்பு.”என்றவன் அவள் காலை இடறி விட மெத்தையில் சரிந்தாள். தாமதிக்காமல் மேல் சரிந்தவன், “எங்க இப்ப அடம் பிடி பார்ப்போம்.” என்று கடித்தான் கன்னத்தை.

கத்த முடியாமல் அவள் தடுமாற, “அக்னி ப்ளீஸ்டா உள்ள போகலாம் முடியல” என்று சரண் அடைந்தாள்.

கேட்பதாக இல்லை அவன். தனக்கு சாதகமான சூழ்நிலை ஏகத்துக்கும் இருப்பதால் ராஜாவானான் அவள் தேகத்தை தனி ஒருவனாக ஆட்சி செய்து. முனகல் கூட காற்றாக வெளிவர…. “அக்னி” என்று சத்தம் காற்றில் மிதக்க வைத்தது அவனை.

அவள் அவஸ்தை அவனுக்காக வெற்றி பரிசாக அமைந்துவிட, தடுக்கும் கைகளை மீறி தடம் பதித்தான். மோகம் சங்கமிக்க முதல் பிள்ளைக்கு உத்தரவு கொடுத்த கையோடு இரண்டாம் பிள்ளைக்கும் உத்தரவு பிறப்பிக்க, இரண்டு சேர்ந்தது அன்னையிடம்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *