டெல்லி, காக்டெய்ல் பப்!
ஒரு கொலையை இயல்பாக செய்து விட்டு, தன்னுடைய செலரியோ காரில் அமர்ந்த யுக்தா சாகித்யனின் அலைபேசி அதிர்ந்தது.
கார் ப்ளூடூத்தின் உதவியுடன் அழைப்பை ஏற்றவனுக்கு, அது தனது உயர் அதிகாரியின் அழைப்பு என்று புரிபட, “யுக்தா ஸ்பீக்கிங் சார். மிஷன் பூஷிகன் கன் பாயிண்ட்ல காலி…” என்று விவரம் கொடுக்க, எதிர்முனையில் சிபிஐயின் ஜாயிண்ட் டைரக்டரான கபீர் பற்களை கடித்தார்.
“ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்ல நம்ம செஞ்ச 10 என்கவுண்டர்க்கும் சரியான பதில் இல்லைன்னு அதிருப்தில இருக்காங்க யுக்தா. இந்த நேரத்துல இப்படி பப்ளிக்கா என்கவுண்டர் பண்ணிட்டு வந்துருக்க. ஆர் யூ அவுட் ஆப் யுவர் மைண்ட்” என்று ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து கத்தினார்.
யுக்தா ஒரு கையில் ஸ்டியரிங்கை திருப்பியடி, மறுகையில் டேஷ்போர்டில் வைத்திருந்த ஆப்பிளை கடித்தான்.
“காம் டவுன் சார். ஆல்ரெடி செஞ்ச பத்து என்கவுண்டரையும் ரகசியமா செஞ்சு என்ன பிரயோஜனம். எப்படியும் எவனாவது போட்டோ வீடியோ எடுத்து நெட்ல போட்டுடுறான். என்கவுண்டர் பண்றதே ஒரு ஒண்ணா நம்பர் க்ரிமினலை. அவனை மறைஞ்சு நின்னு நேரம் பார்த்து சுட்டுத் தள்ளி அவனுக்காக ஸ்கெட்ச் போட்டு, டைம் வேஸ்ட் பண்றதுக்கு இது சிம்பிளான வேலையா முடிஞ்சுடுது சார். ரிப்போர்ட்டர்ஸ்க்கும் ஈஸியா கன்டென்ட் கிடைக்கும். எனக்கும் ஒரு சாடிஸ்ஃபாக்ஷன் கிடைக்கும். அவனுக்கு எதிரான ஆதாரம் எல்லாம் ரெடியா தான இருக்கு. சுப்ரீம் கோர்ட்ல பேசி சரி பண்ணுங்க. குட் நைட்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டவன், கபீர் பேச இடமே கொடுக்கவில்லை.
இங்கு கபீர் தான் புலம்பித் தள்ளினார்.
“சைக்கோ… சீரியல் கில்லர் கூட இவ்ளோ ரசிச்சு கொலை பண்ண மாட்டான். ப்ச் இவனால பெரிய தலைவலி!” என பொருமினார்.
அவருக்கு எதிரில் நின்றிருந்த மற்றொரு சிபிஐ ஆபிஸரான அபய், “நான் இதுக்கு தான் சொன்னேன். அவனை இந்த என்கவுண்டர்ல இன்வால்வ் பண்ணாதீங்கன்னு. நீங்க தான் அவன் ஆகச் சிறந்த அறிவாளி அது இதுன்னு டீம்க்குள்ள விட்டீங்க. இப்போ இவன் நம்ம கையை மீறி போயிட்டு இருக்கான்” என்று எரிச்சலாய் மொழிந்தான்.
கபீர் தலையைப் பிடித்துக்கொண்டு “வேற என்ன செய்ய சொல்ற அபய், ஆறு மாசத்துக்கு முன்னாடி வரை டெல்லியை நாசம் பண்ணிட்டு இருந்த கேங்கை பிடிக்க முடியலன்னு, சிபிஐக்கு மூவ் பண்ண கேஸை நம்ம முடிச்சே ஆகணும்ன்ற கட்டாயத்துல இருந்தோம். கேஸ் நம்மகிட்ட வந்தது தெரிஞ்சு, அந்த கேங்கோட ஆட்டம் இன்னும் அதிகம் ஆகி, நம்மளையே தலைல சுத்த வச்சுச்சு. இதுல மிகப்பெரிய ட்ராபேக். நம்ம சுட்டவன் தப்பானவன்னு தெரியும் ஆனா தெளிவான ஆதாரம் நம்மகிட்ட இல்லை. அப்ப யுக்தா சொன்ன சீக்ரட் என்கவுண்டர் பிளானை அப்ரூவ் பண்றதை தவிர எனக்கு வேற வழி தெரியல. அதனால தான் இப்ப சுப்ரீம் கோர்ட்ல நம்மளை விட்டு கிழிச்சுட்டு இருக்காங்க. இவன் அதை இன்னும் பெருசாக்குற மாதிரி, அந்த கேங்கோட லீடரையே பப்ளிக்கா சுட்டுட்டு வந்துருக்கான். இது எவ்ளோ பெரிய ரிஸ்க் தெரியுமா. அவன் ஆளுங்க அவனை போட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்” என்றவருக்கு யுக்தாவின் மீது கோபமும் பெருகியது.
‘அப்படி சுட்டுருந்தா நல்லது தான்…’ அபய் கடுப்புடன் முணுமுணுத்துக் கொள்ள, “இனிமே அவன் நம்ம டீம்க்குள்ள இருந்தா நான் டீம்ல இல்லை சார்” என்றான் தீர்மானமாக.
“அப்போ கிளம்பிடு…” அறை வாயிலில் கையைக் கட்டிக்கொண்டு அசட்டையாக நின்றான் யுக்த சாகித்யன்.
“என்னைக் கிளம்ப சொல்ல இவன் யாரு சார். நான் இந்த என்கவுண்டர் டீமோட ஹெட். ஆனா இத்தனை என்கவுண்டர்லையும் என்னோட ஒரு ஆர்டர கூட இவன் மதிச்சது இல்ல. நியாயமா இவனை நீங்க டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்” எனப் பொங்கினான்.
“நீ சொன்னதை மதிச்சுருந்தா, அந்த கேங்ல மிஞ்சி இருந்த ஆளுங்க நம்மளை கூண்டோட தூக்கி இருப்பாங்கடா” என மரியாதையின்றிப் பேச, அபய் அவன் சட்டையைப் பிடித்தான்.
அதில் யுக்தாவின் விழிகளில் நெருப்பு பரவ, “நீ எனக்கு என்ன மரியாதை குடுக்குறியோ அது தான் உனக்குத் திரும்பிக் கிடைக்கும். உனக்கு ஈகுவலான பொசிஷன்ல தான் நானும் இருக்கேன். டோன்ட் பர்கெட்…” என்று சிங்கமாய் கர்ஜித்திட, அபய் தான் பின் வாங்க வேண்டியதாகப் போயிற்று.
“ஓ! ஜஸ்ட் ஸ்டாப் திஸ் கைஸ்” கபீர் சலிப்புடன் அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டு, “பப்ளிக் பிளேஸ்ல நடந்த என்கவுண்டர்க்கு ப்ராப்பர் ஆர்டர் வங்கல யுக்தா. கமிஷன்ல பேசி இதுல இருந்து வெளில வர்றது உன் திறமை!” என்று கையை விரித்து விட, இதெல்லாம் அவனுக்குப் புதிதா என்ன?
‘எது வந்தாலும் ஐ டோண்ட் கேர்’ என்ற ரீதியில் தோள்களை குலுக்கினான்.
அபய் அவனை முறைத்து விட்டு வெளியில் செல்ல, கபீர் தான், “கொஞ்சமாவது உன் உயிர் மேல அக்கறை எடுத்து நடந்துக்கோ யுக்தா. நேர்மையான ஆபிஸர்ஸ் கிடைக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கிட்ட இருக்குற நேர்மை மட்டும் தான் இன்னும் உன்னை இந்த டீம்ல இருக்க வச்சுட்டு இருக்கு… அங்க உனக்கு எதாவது” என்று மேலும் பேச வர,
“லீவ் இட் சார். நாளைக்கு ஏதோ பங்க்ஷன்னு லீவ் அப்ளை பண்ணிருந்தீங்க… கிளம்பல?” எனக் கேட்டபடி டேபிள் மீது அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த சாண்டவிச்சை அவன் எடுத்து உண்ண,
“கிளம்பனும். சென்னைல மேரேஜ். ரொம்ப க்ளோஸ் ரிலேட்டிவ் எல்லாம் இல்ல. வைஃப்போட தூரத்து சொந்தம். வீட்ல எல்லாரும் போய்ட்டாங்க. இப்ப நீ செஞ்சு வச்ச வேலையால எனக்கு எங்கயும் போற மூடே போச்சு. லீவ கான்சல் பண்ணிடலாம்னு இருக்கேன்…” என்றார்.
“அட, ஒரு ட்ரக் டீலரை கூண்டோட ஒழிச்சதுக்கு நியாயமா நீங்க எனக்கு ரிவார்டு தரணும்…” என்று உதட்டைக் குவித்துக் கூற, கபீர் முறைத்தார்.
“என் வாயைப் பிடுங்காத போய்டு…” என்று அவர் விரல் நீட்டி எச்சரிக்க, அதில் லேசாய் இதழ் விரித்தவன், “ஓகே ஓகே… இந்த சின்ன ரீசன்க்காக ட்ரிப்பை கான்சல் பண்ணாம கிளம்புங்க சார். பை…” என கிளம்பப் போனதில்,
“ஏன்டா என் சாண்டவிச்சையும் சாப்பிட்டுட்டு என் நிம்மதியையும் கெடுத்துட்டு ட்ரிப் போக சொல்றியா. உன்னை எல்லாம் சும்மா விடக் கூடாது. நீயும் என் கூட சென்னைக்கு வா…” என்றான் மிரட்டலாக.
ஒரு கணம் இறுகி நிலைக்கு வந்தது அவனது அழுத்த விழிகள்.
“சென்னைக்குலாம் நான் வரல” என்றவனிடம், “நீ வர்ற… இட்ஸ் மை ஆர்டர்” என்றார் உறுதியாக.
“விளையாடுறீங்களா. பிளைட் டிக்கட் கிடைக்கணும், திடீர்னு எப்படி கிளம்ப முடியும்?”
“நான் ஏற்கனவே ரெண்டு ஓபன் டிக்கட் எடுத்து வச்சுருக்கேன். ஆமா இவர் இருக்குற அந்த அலங்கோலமான வீட்டை விட்டு வர்றதுக்கு இவருக்கு டைம் வேற தருவாங்க. போய் குடிச்சுட்டு தூங்க தான போற. அதை சென்னைக்கு வந்து பண்ணு” என்று அவனை கடத்தாத குறையாக இழுத்துச் செல்ல, “சேஞ்ச் பண்ண கூட ட்ரெஸ் இல்லை சார். நான் வரல…” என்று சமாளித்தவனிடம்,
“நம்ம தண்ணி இல்லாத காட்டுக்கா போறோம். அங்க வாங்கிக்கலாம்!” என்றார் அசட்டையாக.
“நான் வந்தா, ரெண்டு மூணு கொலை பண்ணுவேன் பரவாயில்லையா?” விழி சிவக்க யுக்தா கேட்க, “நீ கொலை பண்ணலைன்னா தான் ஆச்சர்யம்…” என்று முணுமுணுத்துக் கொண்டார் கபீர்.
‘ப்ச்… இந்த ஆளோட’ என முனகினாலும் சென்னைக்கு செல்ல ஆயத்தமானான், அங்கு நேரப்போகும் ஆபத்துகளை அறியாமல்.
—-
காலை ஏழு மணி அளவிலேயே தங்க நிறத்தில் வெள்ளைப் பூக்கள் வேலைப்பாடுகள் செய்திருந்த சல்வாரில் தயாராகி இருந்தாள் விஸ்வயுகா.
க்ரோம்பேட்டில் நடக்கும் திருமணம் ஒன்றிற்கு ஏ டூ இசட் அனைத்துமே இவர்களின் ஏற்பாடு தான். பொதுவாக, இவர்களது மேட்ரிமோனி தளத்தின் மூலம் இணையும் மணமக்களுக்கு, திருமண ஏற்பாடு செய்வதில் இருந்து தேனிலவிற்கு சுற்றுலா அனுப்பும் வரை அனைத்துமே இவர்களின் பொறுப்பில் வந்து விடும். கோல்ட், பிளாட்டினம், சில்வர் பிளான் என ஆடம்பர திருமணத்திற்கு தனித் தொகையும், எளிமையான திருமண ஏற்பாட்டிற்கு தனித் தொகையுமாக பிரித்து வைத்துக் கொள்வர். அதில் எந்த மாதிரியான மண்டபம், மேடை அலங்காரம், உணவு வகைகள் அமைய வேண்டுமென்பது கஷ்டமர்ஸின் பணவலிமை பொறுத்து!
ஆனால், ஒவ்வொன்றையும் அத்தனை தரமாக தந்து விடுவர்.
‘வி.யூ மேட்ரிமோனியா? அங்க ப்ரொபைல் அப்டேட் பண்ணுனாலே போதும், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, ஹனிமூனே அனுப்பிடுவாங்க’ என்று மக்களிடத்தில் நற்பெயரை சம்பாரித்து வைத்திருந்தனர். நால்வருமே ஒவ்வொரு விதத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் சிறு சிறு விஷயங்களையும் கூட நுணுக்கமாக பார்வையிட்டு விடுவர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் நந்தேஷ் நேரடியாக எடுக்கும் முதல் ப்ராஜக்ட் இது என்பதாலேயே அவன் முழுக்க முழுக்க நேரடியாகக் கலந்து கொண்டான். அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது!
மரியாதை நிமித்தம், விஸ்வயுகாவிற்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்திருந்தது.
விஸ்வயுகா கிளம்பி இருக்கும் போதே மைத்ரேயன் போன் செய்தான்.
“விஸ்வூ… கிளம்பிட்டியா? முகூர்த்த டைம்ல அங்க போயிட்டு ஆபிஸ் போகணும்! இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு” எனக் கேட்க, “கிளம்பிட்டேன் மைதா… பக்கம் தான. 10 மினிட்ஸ்ல வந்துடுவேன். அங்க எல்லாம் ஆர்கனைஸ்டா தான போகுது” என்று விவரம் கேட்டுக்கொண்டாள்.
“ம்ம். ஷைலாவும் நந்துவும் அங்க தான இருக்காங்க. ஆல் செட்.” என்றதும் இருவரும் தனி தனி வாகனத்தில் திருமணத்திற்குச் சென்றனர்.
நந்தேஷ், மணமக்கள் பெயர் பலகையையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரோஜா வெட்ஸ் வெங்கடேஷ் என்ற பெயரை அலங்கரித்த ஒரு ரோஜா கீழே விழுந்திருக்க, அதைக் கூட பொறுக்காதவனாக எடுத்து ஒட்டி வைத்தான்.
தமையனைக் காணாமல் மண்டபத்தை விட்டு வெளியில் வந்த ஷைலேந்தரி, நந்தேஷை விசித்திரமாகப் பார்த்து விட்டு, “டேய் என்னடா என்னமோ உன் லவர்க்கு கல்யாணம் ஆகப் போற ரேஞ்சுக்கு சீன் போட்டுட்டு இருக்க. உள்ள பிரேக்பாஸ்ட் சர்வ் பண்ண ஆள் பத்தலையாம். எக்ஸ்ட்ரா ஆளுங்களை வரச் சொல்லு…” என்றதும்,
“சொல்லிருக்கேன். வர்றவரை நான் சர்வ் பண்றேன்” என்று நந்தேஷ் டைனிங் ஹாலுக்குச் செல்ல, ஷைலேந்தரி திருதிருவென விழித்தாள்.
‘அட நாதாரி வீட்ல ஒரு தண்ணி க்ளாஸ் கூட எடுத்து தராது. இது சர்வ் பண்ண போகுதா’ எனப் புலம்பியபடி அவனையே பின் தொடர்ந்து அவன் ‘மாங்கு மாங்கு’ என்று செய்த வேலைகளை எல்லாம் பார்த்தவள், அவனை மட்டும் ஃபோகஸ் செய்தாள்.
“கலைஞ்ச முடி, சவரம் செய்யாத தாடி, நலுங்குன சட்டை, முகத்துல ஒரு கூடை சோகம், உதட்டுல அதை மறைக்க ஒரு சிரிப்பு… காதலர் தினம் படத்துல குணால் செய்ற வேலை எல்லாம் இழுத்துப் போட்டு இவன் செய்றதை பார்த்தா…” என யோசித்தவள், “அடேய் இந்த ரோஜா உன் ஆளாடா” எனக் கத்தியபடி அவனை நெருங்கினாள்.
அந்நேரம் விஸ்வயுகா போன் செய்து “எங்கடி இருக்கீங்க? நான் மஹால்க்கு வந்துட்டேன்” எனக் கேட்க, “டைனிங் ஹால்ல உன் அண்ணன் எச்சி இலை எடுத்துட்டு இருக்கான். அதை நான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்டி” என்றதில், “வாட்?” என்று குழம்பினாள் விஸ்வயுகா.
அத்தியாயம் 4
“இன்னும் முகூர்த்தமே முடியல அதுக்குள்ள பந்தியா… யாரைக் கேட்டு இவ்ளோ சீக்கிரம் ப்ரேக்பாஸ்ட ஸ்டார்ட் பண்ணீங்க. இன்னும் கூட்டம் வரும் போல இருக்கு. ஃபுட் கரெக்ட்டா இருக்குமா? இல்ல பேக்-அப் பிளான் எதுவும் பண்ணனுமா” என ப்ரொபஷனலாக விஸ்வயுகா பேச,
“அடி பன்னாடை பரதேசி, உன் நொண்ணன் இங்க எச்சில் இலை எடுக்குறான்னு சொல்றேன். உன் தொழில் தீனில தீயை வைக்க!” என்றாள் கடுப்பாக.
“அந்த நாய் ரெண்டு வருஷமா ஃபாரீன்ல போய் உட்காந்துட்டு வந்துட்டு, இப்ப இங்க வந்து எத்தனை பேருக்கு எவ்ளோ சர்வ் பாய்ஸ் போடணும்னு தெரியாம சொதப்பி வச்சுருக்கு. நீயும் கூட தான இருந்த சொல்ல வேண்டியது தான. அவன் கூட போய் நீயும் குப்பை அள்ளு. போ!” என்று எரிச்சலுடன் கூற,
“எதே குப்பை அள்ளவா? கோடீஸ்வரிடி நானு. இந்நேரம் ‘எம்.என்.சி’ல சேர்ந்துருந்தா கூட வீக்கெண்ட் பார்ட்டி, ட்ரிப்பு, லாக்ஸ்ல சம்பளம், பாய் பிரெண்டுன்னு செட்டில் ஆகிருப்பேன் நானு. இவ்ளோ ஏன் வீட்ல வீட்டு வேலை பார்த்துட்டு இருந்திருந்தா கூட என் அப்பா என்னைத் தங்க தட்டுல தாங்கி இருப்பாரு. இங்க வந்து அஞ்சுக்கும் பத்துக்கும் உங்ககிட்ட லோல் பட வேண்டியதா இருக்கு!” எனப் புலம்பியதில்,
“ப்ச், பிரைடல் மேக் – அப்க்கு எல்லாம் நம்ம ரெகுலர் ஆளுங்களை தான கூப்பிட்டு இருக்கீங்க. மேக் அப் எக்ஸ்பெர்ட்ஸ் கேட்டு இருந்தாங்க பொண்ணு வீட்ல” என்றதில்,
‘அய்யயோ அதுக்கு இவன் வேற ஆளுங்களை ஃபிக்ஸ் பண்ணுனதை சொன்னா என்னை பொளப்பாளே’ எனப் பயந்து, “நான் போய் குப்பையே அள்ளுறேன்டி” என்று போனை வைத்து விட்டாள்.
“இவளை…” எனப் பல்லைக்கடித்த விஸ்வயுகா, “மைதா நான் போய் பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட்டை பார்த்துட்டு வரேன்…” என்று மணமகளின் அறைக்குச் சென்றாள்.
கதவு மூடி இருந்தது. நாகரிகம் கருதி “எக்ஸ்கியூஸ்மீ” எனக் கதவைத் தட்ட, உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை.
“ஹெலோ?” என மீண்டும் அழைக்க கதவு திறக்கப்படாமல் போனதில், மெதுவாக கதவைத் திறந்து உள்ளே பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்தது.
மணப்பெண்ணான ரோஜா, அழகிய மணப்பெண் அலங்காரத்தில், நாற்காலியில் அமர்ந்தபடி ட்ரெஸிங் டேபிளில் மல்லாக்க சரிந்திருந்தாள். விழிகள் நேராய் நிலை குத்தியிருக்க, வாயில் நுரை தள்ளி இருந்தது.
கையில் ஒரு காகிதம் பறக்க முயன்று கொண்டிருக்க, அதனை அவளது உயிரற்ற உள்ளங்கை இறுக்கிப் பிடித்திருந்தது. இதழ்களோ சிறிதான சிரிப்பில் உறைந்திருக்க, அப்படியே பிணமாகி இருந்தாள்.
விஸ்வயுகாவிற்கு இதயம் படபடவெனத் துடிக்க, மூச்சு வாங்கியது.
இறந்த உடலுக்கு எதிரே தன்னந்தனியாக இருந்ததில் அச்சம் உயிரைத் துளைக்க “ஆஆஆஆ” என அலறி இருந்தாள்.
அந்த அலறல் சத்தம் திருமண கெக்களிப்பு சத்தத்தைத் தாண்டி மைத்ரேயனுக்கு கேட்டிட, “விஸ்வூ” எனப் பதறி வேகமாக மணமகள் அறை இருக்கும் திசைப்பக்கம் ஓடினான்.
அந்த அறையை அடையும் முன், சற்று தள்ளி எதிர்பக்கம் இருந்த மணமகன் அறையில் இருந்து யாரோ கத்தும் சத்தம் கேட்க, சிறிது நேரத்தில் மண்டபமே கண்ணீரும் கத்தலுமாக காட்சியளித்தது.
மைத்ரேயன் மணமகளின் இறந்த உடலைக் கண்டு அதிர்ந்து, விஸ்வயுகாவை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல, அவளோ நடுங்கி கொண்டிருந்தாள்.
ஆனாலும் மணமகன் அறையிலும் சத்தம் கேட்டதில், “இங்க என்ன ஆச்சுடா?” எனக் நடுக்கத்துடன் கேட்க, “தெரியல விஸ்வூ. நான் போய் பாக்குறேன்” என்றதை மறுத்து அவளும் உடன் சென்றாள்.
அங்கோ, பட்டு வேஷ்டி சட்டையில் மின்னிய மணமகன் கட்டிலில் படுத்து விட்டதை வெறித்தபடி லேசாய் சிரித்திருந்தான்.
கையில் ஒரு காகிதம் இருக்க, அதனை இறுக்கிப் பிடித்திருத்தவனின் உடலே சில்லிட்டு இருந்தது. வாயில் நுரை தள்ளி இருக்க, அருகிலேயே விஷ பாட்டிலும் இருந்ததைக் கண்டு விஸ்வயுகா மட்டுமல்ல அனைவருமே உறைநிலைக்குச் சென்று விட்டனர். விஸ்வயுகா வியர்த்து வழிந்து அச்சம் மேலிட விறைத்தபடி அறையை விட்டு வெளியில் வர,
மண்டபமே பரபரப்பாக இருப்பதை உணர்ந்து, ஷைலேந்தரி தான், “நந்து ஏதோ ப்ராபளம் போலடா…” என்றதும் இருவரும் மணமக்களின் அறை பக்கம் சென்றனர்.
“விஸ்வூ என்ன ஆச்சு? ஏன் இப்படி ஷிவர் ஆகுற” என்று நந்தேஷ் பதறிக் கேட்க, “அங்க அங்க…” என்றவளுக்கு காற்று தான் வந்தது.
மைத்ரேயன் பெரும் குழப்பத்துடன் “டேய் அங்க போய் பாருடா” என்று மணமகளின் அறையைக் காட்ட, ஷைலுவைத் தாண்டி நந்தேஷ் நான்கே எட்டில் அறைக்குள் புகுந்தான்.
அங்கு இறந்து கிடந்த தனது முன்னாள் காதலியான ரோஜாவைக் கண்டு நந்தேஷிடம் பலத்த அதிர்வு.
“குயிலு!” சத்தமின்றி அவனது உதடுகள் அசைய, கண்ணில் நீர் நிறைந்து விட்டது.
ஷைலேந்தரி, “என்னடா, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனா இதுங்க கருமாரிக்கு ஏற்பாடு பண்ணி வச்சுருக்குங்க. கைல ஏதோ பேப்பர் வேற இருக்கு” என அதனை எடுத்துப் பார்த்தாள்.
அதில், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. என்னை பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியற்று சம்மதித்தேன். இப்போது மனது கேட்கவில்லை. எனது முன்னாள் காதலனை எண்ணியே உயிர் விடப் போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதி இருக்க, நந்தேஷ் எதையும் நம்ப இயலாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல நின்றான்.
“அடி பைத்தியமே! லவ் பண்றீன்னா எங்க கிட்ட வந்துருக்கலாம்ல. நாங்களே லவ்வரஸை சேர்த்து வைக்கிற சர்விஸும் பண்ணிடலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கோம். உன்னையும் உன் ஆளோட சேர்த்து வச்சுருப்போம். ஐடியா இல்லாத அரை வேக்காடே” என செத்த பிணத்தைப் பார்த்து திட்டிக்கொண்டிருந்த ஷைலு திரும்பி தமையனைப் பார்த்து திகைத்தாள்.
அவனோ சுவற்றில் சாய்ந்து, “ஐயோ குயிலு! என்னை இப்படி குற்ற உணர்ச்சில தள்ளிட்டு என்னை விட்டுப் போய்ட்டியே” என்று முகத்தை மூடி கதறிக் கொண்டிருந்தான்.
‘குயிலா இவள் பேர் ரோஜா இல்லையா?’ என்று தலையைச் சொறிந்திட, இவனது சத்தம் கேட்டு விஸ்வயுகாவும், மைத்ரேயனும் வந்து விட்டனர்.
“டேய் என்னடா?” மைத்ரேயன் புரியாமல் கேட்க, ஷைலுவோ “மைதா… இந்த அம்மணி எழுதி வச்ச வாக்குமூலத்தைப் பாரு” என்று பேப்பரை நீட்ட, விஸ்வயுகாவும் நெஞ்சில் நிறைந்து நின்ற பயத்துடன் முயன்று அப்பெண்ணின் இறந்த உடலை திரும்பிப் பாராமல் காகிதத்தில் இருந்த வாசகத்தைப் படித்தாள்.
“இந்த லெட்டரை படிச்சுட்டு இவன் ஏன்டி அழுகுறான்” என்று `எச்சிலை விழுங்கி கொண்டு கேட்ட விஸ்வயுகாவிடம், “அந்த எக்ஸே இவன் தானாம் விஸ்வூ” என்று அழுகுரலில் கூறினாள் ஷைலேந்தரி. அதில் இன்னுமாக அதிர்ந்தனர்.
மைத்ரேயன் தான், “டேய் அழுவாதடா. நீ தான் இவள் எக்ஸுன்னு வெளில தெரிஞ்சா கூண்டோட தூக்கி உள்ள வச்சுடுவாங்க” என அடக்கியவன், விஸ்வயுகா தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்டு, “நீ என்ன யோசிக்கிற?” என்றான்.
“ம்ம்… இந்த வாக்குமூல பேப்பரை கிழிச்சுப் போட்டுடலாமா? இல்ல இவனை அண்ணன் பதவில இருந்து தூக்கிடலாமான்னு யோசிக்கிறேன்!” என்றதில், ஷைலேந்தரி “ரெண்டையும் பண்ணிடலாம் விஸ்வூ” என்றாள் மிரண்டு.
இங்கு நந்தேஷ் தான் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும், காதலித்ததையே தங்களிடம் மறைத்தவனின் மீது மூவருக்கும் சிறிது கோபமே!
அந்தக் கோபத்தைக் காட்ட இது நேரமில்லை என்று உணர்ந்த மைத்ரேயன், அங்கு பெண் வீட்டார் கூடுவதைக் கண்டு “நந்து ஜஸ்ட் காம் டவுன். எல்லாருக்கும் சந்தேகம் வரப்போகுது…” என்று அடக்கினான்.
அந்த மண்டபத்திற்கு பக்கத்திலேயே ஒரே காம்பவுண்டில் அமைந்த மற்றொரு திருமண மண்டபத்தில் தான் கபீர் வீட்டுத் திருமணம் நடைபெற்றது.
தன்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டு, மாற்றுத் துணி வாங்க கூட வெளியில் அனுப்பாத மனிதரை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான் யுக்தா சாகித்யன்.
அவரோ வராத விருந்தினரை வலிய அழைத்துப் பேசிட, பக்கத்து மண்டபத்தில் இருந்து வினோதமான அலறல் சத்தம் கேட்டதில், என்ன ஏதென்று விசாரிக்க ஆள் அனுப்பினார்.
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வர, காவல் அதிகாரிகள் வருவதற்கும் தாமதமாவதை உணர்ந்து, “யுக்தா என்னன்னு போய் பாரு…” எனப் பணித்தார்.
“நமக்கு இருக்குற கேஸே தலைக்கு மேல இருக்கு. இதுல வந்த இடத்துல எல்லாம் கேஸ் எடுக்குறீங்க…” என்று முனகினாலும், உள்ளுக்குள் விழித்துக்கொண்ட சிபிஐ அவதாரம் அவனை அங்கு செல்லச் சொல்லி உந்தியது.
கூலர்ஸை மாட்டிக்கொண்டு அழுத்த நடையுடன் பக்கத்து மண்டபத்திற்குச் சென்றவன், மணமகளின் அறைக்கு முதலில் சென்றான்.
மணப்பெண்ணின் குடும்பத்தார் ரோஜாவைப் பார்த்து கதறி அழுதபடி, அவளைத் தூக்கி கட்டிலில் படுக்க வைக்க, அப்போது அவளது உயிரற்ற விழிகள் விஸ்வயுகாவையே வெறிப்பது போலொரு பிரம்மை அவளுக்கு.
“ஆத்தாடி…” என மிரண்டவள், அங்கு நிற்க பயந்து வேகமாக ரிவர்ஸில் வாசலுக்குச் செல்ல, அப்போது சரியாக உள்ளே நுழைந்த யுக்தாவின் மீது இடித்து விட்டாள்.
இடித்த போர்ஸில் பிரென்ச் பிரெய்ட் பின்னல் அணிந்திருந்தவளின் உச்சி கேசம் அவனது சட்டை பட்டனில் சிக்கிக் கொண்டது.
“ஸ்ஸ் ஆ…” என வலியில் முகம் சுருக்கியவள், பின்னால் திரும்ப முயல, முடியத்தான் இல்லை.
தன் மீது திடீரென இடித்து நின்ற பெண்ணைக் கண்டு அவனது முகமும் சுருங்கியது. அவள் குனிந்து நின்றதால் அவளது முகமும் தெரியவில்லை. அவளுக்கும் அவனைப் பார்க்க இயலவில்லை.
“ஹே நேரா நடக்க மாட்டியா? உனக்கென்ன முதுகுலயா கண்ணு இருக்கு. பின்னாடியே நடந்து வர்ற…” என்று எரிந்து விழுந்தான்.
அதில் பல்லைக்கடித்தவளுக்கு, ‘எவன்டா அவன் என்னையவே மிரட்டுறது’ என்ற கடுப்பு எழுந்தாலும், “எனக்கு முதுகுல கண்ணு இல்ல. உனக்கு முன்னாடி தான இருக்கு. மூடிக்கிட்டு முடியை எடுத்து விடுடா வென்று” என எப்போதும் போல பேசி விட, அதுவரை அவளது முடியை எடுத்து விட முயன்ற யுக்தா முயற்சியை கை விட்டு, கையை பின்னால் கட்டிக்கொண்டு நின்றான்.
“டேய் என்னடா பண்ற. எவ்ளோ நேரம் நான் இப்படியே நிக்கிறது…” என்றவளுக்கு சற்று முன்னே நின்று நந்தேஷை அடக்கிக்கொண்டிருந்தவர்களை அழைக்கவும் இயலவில்லை.
“எப்போ உன் வாயில இருந்து ‘டா’ போய் சார் வருதோ அது வரை இப்படியே நிக்க வேண்டியது தான்…” அவள் புறம் குனிந்து கடுமையுடன் கூறியவனின் தொனியில் அவளுக்கும் கோபம் பீறிட்டது.
‘பெரிய மன்மத ம*று இவரு… இவரை சார்ன்னு கூப்பிடணுமாம். ச்சை இன்னைக்கு நேரமே சரி இல்லை…’ என மனத்தினுள்ளேயே புலம்பிக் கொண்டவள், “சார் இதுக்கு மேல குனிய முடியல. முடியை எடுத்து விடுறீங்களா ப்ளீஸ்!” என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டாள்.
“ம்ம்…” என உறுமியவன், “இது என்னடி இவ்ளோ பின்னி வச்சுருக்க” என்றபடி பட்டனில் சிக்கிக்கொண்ட முடியை எடுத்து விட்டாலும் ஓரிரண்டு முடி அறுந்து விட்டது. அது வலியையும் கொடுக்க,
“ஊப்ஸ்” எனத் தலையைப் பிடித்தபடி திரும்பியவள், தன்னிடம் திமிர் காட்டியவன் யாரென்று நிமிர்ந்து பார்க்க, அப்போது யுக்தாவின் சுருங்கிய விழிகளிலும் விழுந்து பாவையின் அழகு கொஞ்சும் முகம்.
நெற்றி முதல் கழுத்து வரை தனது லேசர் பார்வையால் ஊடுருவியவனின் முகத்தில் ரசனை மெருகேற, கழுத்தைத் தாண்டியும் கழுகுக் கண்கள் அவளது மேனியில் படர்ந்ததில் விஸ்வயுகா தீப்பார்வை வீசினாள்.
ஆடவனின் ரசிப்புத்தன்மை இப்போது வெற்றிக்களிப்பாய் மாறி இருக்க, “ஆர் யூ சிங்கிள் ஏஞ்சல்?” எனக் கேட்டான் அவளை நோக்கி எட்டு வைத்து.
ஏற்கனவே அவன் மீது கடுங்கோபத்தில் இருந்தவளோ, இந்தக் கேள்வியை எதிர்பாராமல் திகைத்துப் பின், “எதுக்கு?” என காரமாகக் கேட்க,
“சிங்கிளா இருந்தா, என்கூட மிங்கில் ஆக வைக்கத் தான்!” எனத் தோளைக் குலுக்கினான்.
‘யூ பாஸ்டர்ட்’ என முணுமுணுத்தவள், “மிங்கிலா இருந்த என்ன பண்ணுவ?” என்று விழி இடுங்கக் கேட்க, இதழை இகழ்ச்சியாக வளைத்தான்.
“சிம்பிள் ஏஞ்சல். உன் பாய் பிரெண்டை ஷூட் பண்ணிட்டு, உன்னை சிங்கிள் ஆக்கிடுவேன்…” என்று வெகு இயல்பாக கூறிட, விழி தெறிக்க திகைத்து நின்றாள் விஸ்வயுகா.
மோகம் தொடரும்
மேகா!
Super super super super. Terror piece nu nenacha indhaYuktha kadaisiyila Remo va aayitaane. 👌👌👌👏👏👏🤩🤩🤩🤩🥰🥰🥰😍😍😍