Loading

தன் சட்டையில் இருந்த ஈரத்தையும், எதிரில் அரண்டு நின்றிருந்த வான்மதியையும் மாறி மாறி சினத்துடன் ஏறிட்டவன், “யூ ஃப***” என ஆரம்பிக்கும் முன்னே, அவள் காதை இறுக்கிப் பொத்திக் கொண்டாள்.

முயன்று கடுப்பை மறைத்தவன், டேபிளின் மீதிருந்த ஒரு சார்ஜர் வயரை எடுத்து, அவளின் காதில் இருந்த கையை தட்டி விட்டான்.

அதில் திடுக்கிட்டு விழித்தவள், சடாரென பின்னால் நகர அதன் பிறகே ‘வயர்’ என்று அறிந்து ஆசுவாசமானாள்.

“கேட்டதுக்கு பதில்?” அவன் முறைத்தபடி கேட்க,

அவளோ லேசாய் பயம் குறைந்து, “யாராவது இதுக்கு கோர்ஸ் போவாங்களா சார்? என் வீட்ல என் அக்கா அண்ணா பசங்க எல்லாரையும் என் அப்பா, அம்மா இப்படி தான் வளர்ப்பாங்க. நானும் அவங்க பிறந்ததுல இருந்து கையில தூக்கி வளர்த்து, எல்லாம் செஞ்சு இருக்கேன்.

நீங்க உங்க ரிலேட்டிவ்ஸ்ல பெரியவங்க இருந்தா அவங்ககிட்ட கேளுங்க சார். அவங்களே சொல்லுவாங்க” என இறுதியில் இலவச அறிவுரை வேறு வழங்கினாள்.

அங்கு வந்த புதிதிலேயே, உடன் பணிபுரியும் பெண்களால் ஆரவிற்கு விவாகரத்து ஆனது அவளுக்கும் தெரியும். தனியாக தான் குழந்தையை வளர்க்கிறான் என்பது உட்பட.

‘கிண்டல் பண்றாளோ’ என அவளின் முகத்தையே ஆரவ் ஆராய, அவளோ இஷாந்திடம் காட்டிய மென்மையைத் துளி கூட தற்போது முகத்தில் ஏந்தாமல் தான் பேசினாள்.

பின், அவன் சட்டையின் ஈரத்தைக் கண்டு, “சாரி சார்.” என தயங்கியபடி கூறிட,

“என்ன சாரி? இப்படி பண்ணி வச்சு இருக்க. நான் எப்படி இஷுவ தூக்குறது.” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

அவளுக்கும் அப்போது தான் அது உறைக்க, செய்வதறியாமல் கையைப் பிசைந்தவள், “நான் வேணும்ன்னா உங்களுக்கு ஷர்ட் வாங்கிக் குடுத்துட்டு போகட்டா?” எனக் கேட்டாள் வேகமாக.

கேட்டு விட்டாலும், பக்கத்தில் கடை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது அவளுக்கு. ஒரு மரியாதைக்காக தான் கேட்டாள்.

ஆனால் அவனோ, “ஓகே. ஷர்ட் சைஸ் 40. ஃபுல் ஹாண்ட். 5 மினிட்ஸ்ல வாங்கிட்டு வா. அவன் எந்திரிக்கிறதுக்குள்ள” என அழுத்தமாக உத்தரவிட்டு அவனறை நோக்கி செல்ல, அவன் பேசியதை உள்வாங்கவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

‘நான் வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஈரமே காஞ்சுடும்’ என எண்ணினாலும், ‘அஞ்சு நிமிஷத்துல எப்படி வாங்குறது?’ என பதறியவள், கூகிள் மேப்பின் உதவியைத் தான் நாடினாள்.

நல்லவேளையாக அருகிலேயே ‘ட்ரெண்ட்ஸ்’ கடை இருக்க, அவசரமாக சென்று அவன் கூறிய அளவிலேயே ஒரு சட்டையை எடுத்துக் கொண்டு அவன் முன் நின்றாள்.

“சார்!” என்றழைத்து, சட்டையை அவனிடம் கொடுக்க, ஒரு கையால் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டே, மறுகையால் அதனை வாங்கி டேபிளில் வைத்தவன், “கிளம்பு” என சைகை காட்டினான்.

அவனை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் உறங்கிக் கொண்டிருந்த இஷாந்திற்கு கன்னத்தில் அழுந்த முத்தமிட, “உன் வீட்ல இவ்ளோ சொல்லி குடுத்து இருக்காங்களே, தூங்குற பேபிக்கு கிஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி தரலையா?” என அவளை அழுத்தமாக அளந்தபடி கேட்டான் ஆரவ் முகிலன்.

பேந்த பேந்த விழித்தவளுக்கோ, அவளின் அன்னை அதட்டுவது தான் காதில் கேட்டது. அக்காவின் குழந்தையை கொஞ்சும் போது, “எத்தனை தடவ சொல்றதுடி. பாப்பா தூங்கும்போது கொஞ்சாதன்னு.” என்று தலையில் கொட்ட, அவளின் தமக்கை தான், தங்கைக்காக பரிந்து கொண்டு வருவாள்.

ஏனோ அதனை எண்ணும்போது கண்ணீர் இன்னும் சுரக்கவில்லை என்பதே அவளுக்கு வியப்பு தான். அந்த அளவிற்கா மனம் மரத்துப் போயிருக்கிறது?

சட்டென சிந்தனையில் இருந்து வெளிவந்தவள், “சொல்லுவாங்க சார். நான் தான் கேட்க மாட்டேன்.” என்று முணுமுணுப்பாக பதில் அளித்து விட்டு நகரப்போனவள் ஒரு நொடி நின்று,

“இதை உங்களுக்கு யாரு சார் சொன்னது. கூகிள் ஆண்டவரா?” என ஒரு மாதிரியாகக் கேட்க, அவன் வெட்டவா குத்தவா ரீதியில் முறைத்தான்.

இப்போதும், அவன் ‘நீ எங்க கோர்ஸ் படிச்ச’ என்று கேட்ட விதம் சிரிப்பை வரவழைத்தாலும், ஒரு சிறு கீற்றுப் புன்னகை கூட அவளின் உதட்டின் வழியே உதிக்கவில்லை.

இங்கு வேலைக்கு வந்த போது இருந்த மனநிலைக்கும், இப்போதிருக்கும் மனநிலைக்கும் மலையளவு வித்தியாசத்தை அவளே உணர்ந்திருந்தாள். அதற்கு காரணமும் இஷாந்த் மட்டுமே என்பதை அவளும் அறிவாள்.

அவளை மேலும் யோசிக்கவிடாதவாறு, ஆரவ், “கூகுள் ஆண்டவர் இருந்ததுனால தான் நாலு மாசம் இவனை வளர்க்கவே முடிஞ்சுது. அட்லீஸ்ட் இந்த அளவாவது…” என்று வெறுமையாய் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க, அதிலேயே வெகுவாய் சிரமப்பட்டு இருப்பான் என்பது புரிந்தவள்,

“கஷ்டம் தான் சார். ஸ்கூல் போற வயசு வரை தான். அப்பறம் ப்ராப்ளம் இல்ல.” என சற்று ஆறுதலாகவே பேசினாள்.

மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், கிளம்பி விட்டவளின் திசையையே வெகுநேரம் பார்த்திருந்தான் ஆரவ்.

அவளின் பயோ டேட்டாவை கூட அவன் முழுதாக படித்திருக்கவில்லை. ‘பார்க்க சின்ன பொண்ணா தெரியுறா… இவளுக்கா டைவர்ஸ் ஆச்சு’ என்ற எண்ணம் மட்டுமே அவளைப் பார்த்தபோது தோன்றியது.

அடிபட்டதனாலோ என்னவோ, விவாகரத்தை ஏற்க வேண்டுமானால், எந்த அளவு மனதைரியமும், பொறுமையும் வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததுனாலயோ என்னவோ, அவளை பார்த்தபோது பரிதாபப்பட மட்டுமே முடிந்தது அவனால். ஏனோ அவள் மீது தவறிருப்பதாய் தோன்றவில்லை.

அதனாலேயே கவின் அவளை வார்த்தைகளால் சீண்டும் போது, அதனை தடுத்தான். அவளுக்கு கூறும் ஒவ்வொரு வார்த்தையும் என்னையும் தானே சேரும் என்ற விரக்தியும் அவனை ஒருங்கே வதைத்தது.

அந்நேரம், கவின் கதவருகில் சாய்ந்து, “என்ன பேபி சிட்டர் கிளம்பியாச்சா?” என நக்கலாகக் கேட்க,

அதே நக்கலுடன், “ஓ! கிளம்பியாச்சே. ஏன் இன்னும் அவளுக்கு ஏதாவது வேலை குடுக்க போறியா?” என்றான் கையை கட்டிக்கொண்டு.

“அவள்கிட்ட நீ பேசுறதும், பேபியை பார்த்துக்க சொல்றதும் எனக்கு சுத்தமா பிடிக்கல ஆரவ்” வெளிப்படையாகவே கவின் மனதை கூறி விட,

“ஏன்? நீ அந்த பொண்ணுக்கு வாழ்க்கை தர போறியா?” இடைக்காக கேட்டு அவனை அதிர வைத்தான்.

முகத்தை சுருக்கிய கவின், “என்ன உளறுற? என்னமோ, அவள் டைவர்ஸ்ன்னு பார்த்ததுல இருந்து எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல. உன் விஷயத்துல கண்டிப்பா உன் எக்ஸ் வைஃப் மேல தான் தப்பு இருக்கும்ன்னு எனக்கும் தெரியும். குழந்தையை கூட விட்டுட்டு எப்படி தான் போனாளோன்னு ஆச்சர்யமா தான் இருந்துச்சு. அதே மாதிரி, இவளும் என்ன பண்ணிட்டு டைவர்ஸ் வாங்கினாளோ…” என்று எரிச்சலாய் மொழிந்தவன், மேலும் தொடர்ந்தான்.

“அது மட்டும் இல்ல. இஷு 2 மந்த் பேபியா இருக்கும் போது, நம்ம ஆபிஸ்ல வேல பாக்குற பொண்ணு ஒன்னு தானா வந்து பேபியை பார்த்துக்குறேன்னு வந்துட்டு உனக்கே ரூட்டு போட்டாள்ல…” என்றான் கோபமாக.

ஆரவ் அமைதியுடனே அவனைப் பார்க்க, அதில் தடுமாறியவன் “அது… நீ அவளை நல்லா கத்தி விட்டு, வேலையை விட்டே தூக்கிட்ட தான். எனக்கு தெரியும். ஆனா, இவளை மட்டும் ஏன் அலோ பண்ற? நாளைக்கு மறுபடியும் உன் லைஃப்ல ஏதாவது ப்ராபளம்ன்னா…” என்று பேசிக்கொண்டே செல்ல, கரம் நீட்டி அவன் பேச்சை கத்தரித்தான் ஆரவ்.

“சரி. இப்ப நீ என்ன சொல்ல வர்ற? என்ன பொண்ணுங்களும் ஒரே மாதிரின்னா!” என்று நேரடியாகக் கேட்க, அவன் யோசியாமல் “ஆமா” என்றான்.

“ஹேமாவும் பொண்ணு தான். அவளை வர சொல்லி நியாயம் கேட்கவா? இல்ல, நம்ம கூட படிச்ச வாலு ஒன்னு டெல்லில சுத்திட்டு இருக்கே அவளை கூப்பிட்டு கேட்போமா?” சிறு சிரிப்புடன் ஆரவ் அவனை கோர்த்து விட, இப்போது விழி பிதுங்க விழிப்பது அவன் முறையானது.

பதில் கூற முடியாமல் தடுமாறிய கவினை அர்த்தத்துடன் ஏறிட்டவன், “லுக் கவி. நீ எல்லா பொண்ணுங்களும் தப்புன்னு சொன்னா, நம்ம கூட சின்ன வயசுல இருந்து பழகி, இப்போ வரை நமக்கு ஆதரவா இருக்குற பொண்ணுங்களையும் அசிங்கப்படுத்துறதுக்கு சமம்.

ஒவ்வொருத்தரோட சூழ்நிலையும் ஒவ்வொரு மாதிரி. என்னதான் நான் ஏன் அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்குனேன்னு நீ தொண்டை கிழிய கத்துனாலும், என் வலியை நீ கடன் வாங்கி அனுபவிக்க முடியாது. அவங்க அவங்க வலி அவங்கவங்களுக்கு சொந்தம். அதே மாதிரி தான் அவங்க எடுக்குற முடிவும். அதுல நாட்டாமை பண்ண, நீ ஒண்ணும் ஜட்ஜ் கிடையாது.

எனக்கு என் இன்டியூஷன் என்ன சொல்லுதோ அத தான் நான் கேட்பேன். உனக்கு உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேட்டு அவள் மேல கோபமா இருக்கிறது உன் பிரியம்.

அதுல நான் தலையிட மாட்டேன். யூ நோ அபௌட் மீ! இன்னொரு தடவை இதை பத்தி என்னை பேச வைக்காத. அப்பறம் உன்கூட நான் பேசுறது அது தான் கடைசியா இருக்கும்.” என்றவன், பேச்சற்று இன்னும் ஈரப்பதத்துடன் இருந்த சட்டையை கழற்றி விட்டு, வான்மதி வாங்கி வந்திருந்த சட்டையை அணிந்து கொண்டான்.

பின், இஷாந்தை தோளில் போட்டவன், “நாளைக்கு ப்ராஜக்ட் டெட் லைன். எல்லாரையும் ஓவர் டைம் பாக்க சொல்லிடு.” என கட்டளையிட்டு வெளியில் செல்ல, கவிக்கு அவன் பேசிய வார்த்தைகள் சுள்ளென்று தைத்தாலும், ஆழ்மனதில் அவனின் வலிகள் ஏறவில்லை என்பதே உண்மை.

கதவு இடுக்கில் கை நசுங்கி விட்டது என எதிரில் நிற்பவன் கதறும் போது, அதில் பதறி, “நீ ஏன் அதுல கை வைச்ச?” என அறிவுரை கூறும் நமக்கு தான், அக்கதவின் இடுக்கில் நம் விரல் வைத்தால் எப்படி வலி பிறக்கும் என்று புரியாமலே போகும். அப்படி தான் கவினும் இருந்தான்.

மறுநாள், அலுவலகமே பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. ஏனோ, கவினும் வான்மதியை சீண்டுவதை நிறுத்தி இருக்க, தேவைக்கேற்ற வேலையையும் கொடுத்தான்.

அதற்கும் அவள் பெரியதாக அலட்டினாள் இல்லை. சிறிது நேரத்தில், ஆரவ் வான்மதிக்கு இன்டெர்காமில் அழைத்து அறைக்கு வர சொல்ல, அவளும் வேகமாக எழுந்தாள்.

கவின் அவளை என்னவென பார்க்க, “ஆரவ் சார் வர சொன்னாரு சார்.” என்றதில், லேசாக கோபம் முளைத்தாலும், அதனை வெளியில் காட்டாமல், நகர்ந்து விட்டான். பின்னே, ஒரு தடவை ஆரவ் எடுக்கும் முடிவை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள மாட்டானே. மீண்டும் எதையாவது பேசி வைத்து தன்னிடம் அவன் பேசாமல் போய் விட்டால் என்ற பயம் கவினுக்கும் இருந்தது.

ச்சு. ச்சு. ச்சு. ஓகே டா ஓகே டா. என்ன வேணும் என் செல்லப்பட்டுக்கு!” என இஷாந்தை கையில் வைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான் ஆரவ்.

வான்மதியைக் கண்டதும், வேகமாக அவளிடம் குழந்தையைக் கொடுத்தவன், “ஒரு மணி நேரம் இவன சமாளி. ஐ வில் பீ பேக்!” என உத்தரவாகக் கூறிவிட்டு, மடிக்கணினி முன் அமர்ந்தவனுக்கு, சிந்தனை முழுதும் வேலையே ஆக்கிரமித்தது.

அவளோ, விழிகள் மின்ன அவனை கையில் வாங்கி, கதை பேசி கொஞ்ச, சிறிது நேரத்தில் அவளிடமே ஒட்டிக்கொண்டான் இஷாந்த்.

இவளின் கொஞ்சல் பேச்சும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக தன் மகன், ‘ஆ ஆ’ வென கத்துவதையும் காதில் கேட்டபடியே வேலை செய்து கொண்டிருந்தவன், அப்படியே மடிக்கணினியில் புதைந்து விட்டான் போலும். சரியாக ஒரு மணி நேரம் கழித்தே, கையை உதறி நெட்டி முறித்து நிமிர அங்கு இருவருமே இல்லை.

ஒரு நொடி உள்ளுக்குள் சுளீரென இருந்தது அவனுக்கு. என்ன தான் அவளை நம்பினாலும், அவனின் கண் பார்வைக்குள் இருப்பதால் மட்டுமே அவளிடம் கொடுத்தான்.

ஆனால், இப்போது தன் மகனை காணவில்லை என்றதில் பதறிப் போனவன், அவசரமாக வெளியில் வந்து “தன்விக், வான்மதி எங்க?” என வினவ, அவனோ “நீ தான மச்சான் அவளை கூப்பிட்ட. இப்ப என்கிட்ட கேட்குற?” என்றான் புரியாமல்.

அதற்குள் கவினும் அவர்களை நெருங்கி பதற, “நான் தான் சொன்னேன்ல அவளை நம்பாதன்னு” என்று வாய்வந்த போக்கில் உளறினான்.

சற்றே நிதானித்த ஆரவ், “இங்க தான் எங்கயாவது இருப்பா! பொறுமையா தேடலாம்.” என்றவனுக்கும் புரியவில்லை, அவளின் மீது ஏனிந்த அபார நம்பிக்கை என்று.

அவளின் எண்ணிற்கு அழைத்தாலும் அது ‘நாட் ரீச்சபிள்’ ஆக இருக்க, நெற்றி மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன், தன்னறையில் எதையோ தேடியவன், பின் விழிகள் பளிச்சிட, ‘ஃபுட் கோர்ட்’ இருக்கும் மேல்மாடிக்கு சென்றான்.

நண்பர்கள் இருவரும் அவனைக் குழப்பமாக பின் தொடர, அங்கு அவன் எதிர்பார்த்தது போன்றே, ஜன்னல் அருகில் ஒரு இருக்கையில் அமர்ந்து இஷாந்தின் பால் பாட்டிலில், அப்போது தான் வாங்கி இருந்த பாலை ஆற வைத்து, அதில் நிரப்பிக் கொண்டிருந்தாள் வான்மதி.

அவளின் குண்டு கண்கள் அங்கும் இங்கும் உருள, சிவந்த உதடுகளோ அவனை சிரிக்க வைக்கும் பணியை செவ்வனே செய்ய, குழந்தையும் எதற்கென்றே தெரியாமல், அவளின் குரங்கு சேட்டையில் குலுங்கி குலுங்கி சிரித்திருந்தது.

அக்காட்சி, ஆரவின் மனதில் நிழல்படமாக பதிந்து விட, அவனின் விழிகளோ அவனையும் மீறி இருவரையும் ரசித்தது.

இதில் யார் குழந்தை? என்றே அவனுக்குள் கேள்வி தோன்ற, இறுகிய இதழ்களும் அவன் வசமின்றி ரசனையாகப் புன்னகைத்தது.

கவினுக்கோ கோபம், ‘இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தூக்கி வந்துட்டாளே’ என்று. அதில் அவன் வேகமாக அவளை நோக்கி காலெடுத்து வைக்க, ஆரவ் கையை பிடித்து தடுத்தான்.

அவனின் கண்களோ அவர்களிடமே நிலைத்திருந்தது.

“கோ பேக் டூ ஒர்க்.” ஆரவ் உத்தரவிட,

கவின் “மச்சான். அவள்…” என்று பேசும் முன்,

“ஐ செட். கோ பேக் டூ ஒர்க்.” என்றான் அழுத்தத்துடன்.

அதில், தன்விக் தான் கவினை தரதரவென இழுத்துச் சென்றிட, மீண்டும் ஆரவ் இருவரையும் நோக்கியபடி அவர்களின் அருகில் சென்றான்.

அவனைக் கண்டதும், இஷாந்த் கையை காலை ஆட்டி சிரிக்க, இதுவரை தன்னை பார்த்ததும் ஏக்கத்துடன் அழும் குழந்தை, இன்று சிரித்ததில், அந்நிமிடத்தை நெஞ்சில் நிறைத்தவன், அவனை கைகளில் அள்ளிக்கொண்டான்.

ஆரவ் அருகில் வந்ததுமே வான்மதி எழுந்து நிற்க, தன் மகனைக் கொஞ்சுவதை நிறுத்தி விட்டு, அவளை சிறிதாக முறைத்தான்.

“ஏன் சொல்லாம வந்த?”

“இல்ல சார். நீங்க வேலை பார்த்துட்டு இருந்தீங்க. பாலும் தீர்ந்துடுச்சு. அதான், வந்தேன்.” என்னும் போதே, “இனிமே சொல்லிட்டு போ!” என்றவனின் குரலில் அத்தனை ஆதிக்கம்.

அதில் தன்னிச்சையாக அவளின் தலை ஆடிட, இப்போ என்ன செய்வது என்று குழப்பமாக நின்றாள்.

“நான் வேலையை பாக்கட்டா சார். இல்ல, இன்னும் கொஞ்ச நேரம் பேபிய வச்சுக்கவா?” என ஆர்வமாக வினவ, அது அவன் கண் பார்வையில் இருந்து தப்பவில்லை.

சில நொடிகள் அமைதி காத்து, “கொஞ்ச நேரம் மட்டும் தான் வச்சுக்குவியா?” என்றவனின் வார்த்தைகள் எவ்வித உணர்வும் கலக்காமல், சலனமின்றி வெளிவர, அவளோ இன்னும் குழம்பினாள்.

“நைட்டு வீட்டுக்கு போற வரை வைச்சு இருக்கேன் சார். ப்ராப்ளம் இல்ல. அவன் என்கிட்ட சமத்தா தான் இருக்கான்” என்றாள் அவன் கேள்வியின் உட்பொருள் அறியாமலேயே.

“ஐ டிண்ட் மீன் இட்!” எனக் கூறி விட்டு, அவன் மீண்டும் அமைதி காக்க,

“புரியல சார். நீங்க என்ன கேக்குறீங்கன்னு?” என்றவளுக்கு, அவனின் அழுத்தப் பார்வை வேறு காரணமின்றி நெஞ்சில் பயத்தை விதைத்தது.

“ஓகே. நான் நேரடியாவே கேக்குறேன். என் பையன நீ லைஃப் லாங் பார்த்துக்கணும். இதே மாதிரி! ஆர் இதை விட அதிகமா!” என்று தோளைக்குழுக்க, லேசாக தலையை சொரிந்தவள், “இங்க நான் வேல பாக்குற வரை, பேபியை பார்த்துப்பேன் சார்.” என்றாள் வேகமாக.

“எப்படி? என்ன உறவு முறைல?” என அவன் அலட்டலின்றி மறுகேள்வி கேட்க, ஒரு நொடி விழித்தவள், ‘என்ன உறவு முறைன்னா என்ன அர்த்தம்’ என்று புரியாமல், “பேபி சிட்டர் மாதிரி.” என குத்து மதிப்பாக சொல்லி வைத்தாள்.

அதில் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “என் பையனுக்கு பேபி சிட்டர் கேரிங் தேவை இல்ல. மதர் கேரிங் தான் தேவை.” என்றவன் அவளின் விழிகளை ஊடுருவ, அவளுக்கோ சில்லிட்டது.

“மதர் கேரிங்ன்னா புரியல?” நடுக்கம் கொண்டவளாக வான்மதி கேட்டதில்,

“நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா வான்மதி. உனக்கு தேவை என் இஷு பேபியோட அருகாமை. எனக்கு தேவை அவனை சொந்த பையன் மாதிரி பார்த்துக்க ஒரு ஆளு. சோ… டிசீஸன் இஸ் யுவர்ஸ்!” என அவள் தலையில் பெரிய குண்டைப் போட்டு விட்டு, பந்தையும் அவள் புறம் நகற்ற, பாவையோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

தேன் தூவும்!
மேகா!

ஹாய் டியர் ப்ரெண்ட்ஸ். முதல்ல பெரிய சார். உங்க கமெண்ட்ஸ் எதுக்கும் என்னால ரிப்ளை பண்ண முடியல. கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ. பட், உங்க சப்போர்ட் பார்த்து ஐ ஆம் வெரி ஹேப்பிய்ய்… தேங்க்ஸ் சோ மச் ஃபார் யுவர் கமெண்ட்ஸ், ஸ்டிக்கர்ஸ், ரேட்டிங்ஸ். 

ஸ்டோரி எப்படி போகுதுன்னு சொல்லுங்க டியர்ஸ். மொத்தமா டைப் பண்ணி போடணும்ன்னு எனக்கும் ஆச தான். ஆனா, டைமிங் ஒத்து வரல. சோ இனிமே இந்த கதையோட பதிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை வரும். ரம்ஜான் முடிஞ்சதும் ரெகுலரா போடுறேன். சோ அட்ஜஸ்ட் கரோ. ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச் ஆல். நாளைக்கு ஒரு அப்டேட் வரும். அதுக்கு அப்பறம் சனி, செவ்வாய் ரெண்டு நாளும் போடுறேன் drs.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
61
+1
203
+1
13
+1
11

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. நந்தினி கணேஷ்

      Adei aarav enna da ipadi erangita pavam da antha ponnu😊😊😊 unna pathave apadi bayapaduthu ithula mrg veraya ,
      Kavin eppadi ella ponnungalum thappunu sollalam😠😠😠😠😠 oru divorce ku 2 side irukkum la ivan enna ellam therinja maari ponnungala thappu soldran and athuku aarav explain pannathu thaan romba sari😍😍😍😍
      Enga antha dhanvik pathi ethum solla matinguringa yennam🙄
      Aarav friend nu soldran but avan divorce vanguna thu pathi eppadi fulla theriyama pogum
      Ellar valiyum namaku eppovum puriyathu and purinjukavum mudiyathu thaan😥
      Namma uyir ah nesikkaravanga vali mattu thaan namaku puriyum
      Entha amma vum ava kulanthai ya avlo seekkiram yaarukum vittu thara mata but kolantha porantha udaney epadi vittutu poga mudiyum.🤔🤔🤔🤔🤔🤔

    2. என்னடா இப்படி பொசுக்குனு கேட்டுபுட்ட 🤪🤪🤪🤪