Loading

மஹாபத்ரா செய்த காரியத்தால் திகைத்து அவள் சென்ற திசையையே பார்த்திருந்த தஷ்வந்த், மந்த்ரா அலறிய சத்தத்தில் தான் தன்னிலை பெற்று, அவளை பிடித்தான்.

வலியில் அழுது கதறியவளை சமன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் தஷ்வந்திற்கும் மாதவிற்கும் தான் வருத்தமாகி விட்டது.

நல்லவேளையாக ஃப்ராக்ச்சர் எதுவும் ஆகாததால், சில நாட்களில் வீக்கம் குறைந்து விடும் எனக் கூறி, கட்டிட்டு இருந்தனர். ஆகினும், வலி தான் அவளால் தாங்க இயலவில்லை.

“வலிக்குதுடா” எனப் பாவமாக அரற்றியவளைக் கண்ட தஷ்வந்திற்க்கு மஹாபத்ரா மீது கோபம் தான் வந்தது. ‘சீனியர், ரௌடி பொண்ணுன்னா என்ன வேணாலும் செய்வாளா? அவளை நான் சும்மா விட மாட்டேன் பாஸ்.” என மாதவிடம் பொரிந்தான்.

“என்ன செய்ய போற?” மாதவ் கேட்டதில், முதலில் திருதிருவென விழித்தவன், பின் “பிரின்சிபால்கிட்ட கம்பளைண்ட் பண்ண போறேன்.” என்றான் வேகமாக.

அழுகையினூடே, “வேணாம் தஷு. ஏதாவது பிரச்சனை ஆகிட போகுது.” என தேம்பிய மந்தரா, “ஆனா, நான் என்ன செஞ்சேன்னு இப்டி பண்ணுனாங்கன்னு தான் தெரியல. ஒருவேளை, நான் டாஸ்க் கம்ப்ளீட் பண்ணாததுனாலயா இருக்குமோ?” எனக் கேட்டு தஷ்வந்தை ஏறிட்டாள்.

அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், முந்தைய நாள் பார்த்த அவளது பார்வை மட்டும் அவனை உறுத்திட, அதனை ஒதுக்கியவன், மாதவை அழைத்துக் கொண்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று ப்ரின்சிபால் முன்பு நின்றான்.

நடந்ததை கூறி, மஹாபத்ரா மீது  புகார் கடிதம் கொடுக்க, அவரோ அதையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு, “எல்லாம் தெரிஞ்சு தான் கம்பளைண்ட் குடுக்குறியா தஷ்வந்த்?” எனக் கேட்க, சற்றே உள்ளுக்குள் கலவரம் மூண்டாலும் தலையை ஆட்டினான்.

“தென் ஓகே” என்றவர், அவனை வெளியில் அனுப்ப, “இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்?” என மாதவ் பீதியில் நடக்க, அதே பீதி சற்றும் குறையாமல், தஷ்வந்த்தின் கண்களிலும் பிரதிபலித்தது.

மந்த்ராவின் வலி கண்டு ஒரு வேகத்தில் முடிவெடுத்து வந்து விட்டாலும், மஹாபத்ராவை எதிர்கொள்ள அவனுக்கு தைரியம் இருக்கவில்லை தான்.

அதே நேரம், அவனது எண்ணத்தின் நாயகியே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அழுத்தப் பார்வையோடு.

“போச்சு பாஸ்! இன்னைக்கு தர்ம அடி கன்பார்ம்.” என்ற மாதவ், “எதுக்கும் மந்த்ரா பெட் பக்கத்துல நமக்கும் ரெண்டு பெட் போட்டு வைக்க சொல்றேன் பாஸ். எனக்குலாம் பிஞ்சு உடம்பு, எப்படியும் ஒரே அடில மயங்கிடுவேன்” என்று பயத்தில் உளற, அவனை விட பயத்தில் இருந்த தஷ்வந்த் தான், முயன்று அந்த பயத்தை விழுங்கி கொண்டு நின்றான்.

இரண்டடி இடைவெளியில் தஷ்வந்த் முன் நின்ற மஹாபத்ரா, கையைக் கட்டிக் கொண்டு அவனை அளவெடுக்க, அவன் எச்சிலை விழுங்கினான்.

“என்ன சார்… கம்பளைண்ட்லாம் எழுதி குடுத்தாச்சா?” எகத்தாளத்துடன் அவள் கேட்க,

“ஆ… இ…” என ஏதோ பேச வந்தவனுக்கு வார்த்தை தான் தொண்டையிலேயே நின்று விட்டது பாவம். குரலை கனைத்துக் கொண்டவன், “நீங்க பண்ணுனது தப்பு சீனியர்.” என திக்கி திணறி கூறி முடித்து விட, அவளின் பார்வையில் மாற்றமே இல்லை. இப்போதும் அதே அளவெடுக்கும் பார்வை.

அவள் அமைதியில் சற்றே தைரியம் வர, “மந்த்ரா பாவம். அவள் என்ன பண்ணுனான்னு இப்படி அவளை ஹர்ட் பண்ணுனீங்க.” என சற்று சத்தமாகவே கேட்டான்.

அதில் ஒருமுறை அவளது புருவங்கள் ஏறி இறங்க, “நீ ஏன் க்ளீன் ஷேவ் பண்ணிருக்க?” எனக் கேட்டாள் சம்பந்தமே இல்லாமல்.

அவனோ ‘பே’ வென விழித்து, “ஹான்?” என்றதில், “ஏற்கனவே அமுல் பேபி மாதிரி தான் இருக்க. இதுல க்ளீன் ஷேவ் பண்ணி இன்னும் கொஞ்சம் மொழு மொழுன்னு இருக்கடா. அளவா மீசை வைச்சு, லைட்டா தாடியை வளர்த்து ட்ரிம் பண்ணிக்கோ. இட் வுட் பீ நைஸ் டூ ஸீ.” என ரசனையாக எடுத்துரைக்க, அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

‘இப்போ இவள் அடிக்க போறாளா? இல்லை சும்மா விடப் போறாளா?’ என்பது மட்டுமே அவனது யோசனையாக இருந்தது. இருப்பினும், அவள் மீது ஆக்ஷன் எடுப்பார்கள் என்று சிறு நம்பிக்கையுடன் இருந்தவன்,

“சீனியர், நான்… நான் மந்த்ரா பத்தி பேசுறேன். அவளை அப்படி பண்ணிருக்க கூடாது சீனியர். அவளுக்கு எவ்ளோ வலிச்சுச்சு தெரியுமா? செஞ்ச தப்புக்கு தான், நான் கம்பளைண்ட் பண்ணுனேன்.” என்றவனை, சிறு கீற்றுப் புன்னகையுடன் பார்த்தவள்,

“ஹே! அமுல் பேபி… ஆஃப்டர் ஆல், அந்த ப்ரின்சிட்ட கம்பளைண்ட் பண்ணதுக்கா, இப்படி தைரியமா பேசிட்டு இருக்க. ப்ச்… உனக்கு உலக நடப்பே தெரியலடா. வா…” என அவனது கையை பிடித்து அவளது கைக்குள் வைத்துக்கொண்டு இழுத்து செல்ல, ஏற்கனவே அவளது ‘அமுல் பேபி’ என்ற அழைப்பில் திகைத்திருந்தவன், இப்போது அவளது தீண்டலில் உறைந்தே விட்டான்.

மாதவிற்கு தான் ‘செத்தான் சேகரு’ என்றிருந்தது. தன்னை நொந்து அவர்கள் பின்னே அவனும் செல்ல, பிரின்சிபாலின் அறை ஜன்னலை சிறிதாக திறந்தவள், “ம்ம் உள்ள பாரு!” எனக் கண்ணை காட்டினாள் திமிராக.

“ம்ம்ஹும். அடுத்தவங்க ரூமை எட்டி பார்க்க கூடாது…” என தஷ்வந்த் வேகமாக தலையாட்ட,

“ஓ தேவுடா!” எனப் பல்லைக்கடித்தவள், அவனது சட்டையைப் பிடித்து அவள் புறம் இழுத்து, அவரது அறையை பார்க்க வைக்க, அவள் இழுத்த இழுப்பில், இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி முற்றும் குறைந்தது.

அவளது மூச்சுக்காற்றை உணர்ந்தவனோ அவளை விட்டு விலக முற்பட, அவள் விட்டால் தானே! பின் வேறு வழியற்று பிரின்சி அறையைக் காண, அங்கோ அவர் அவன் கொடுத்த புகார் கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டிருந்தார்.

அதில் தஷ்வந்த் அதிர, “டேய் நியாயவாதி. ஏதோ கம்பளைண்ட் குடுத்தேன்னு சொன்ன… இப்ப எங்கடா போச்சு?” என உதட்டைப் பிதுக்கி நக்கலடிக்க, அவனோ முகம் சுருங்கினான்.

தன்னுடைய முயற்சி வீண் என புரிந்தவன், பதில் பேசாமல் அங்கிருந்து நகர முற்பட, அவனை சுவற்றோரம் அணை கட்டினாள் மஹாபத்ரா.

“நீ கேட்டதுக்கு நான் இன்னும் பதில் சொல்லல தஷ்வா. பதில் வேணாமா?” கண்களை உருட்டி அவள் கேட்ட விதத்தில், அவனுக்கு தான் இம்சையாகி போனது.

மற்றவை மறந்தவள், “நான் என்ன கேட்டேன்…?” எனக் குழம்பிட,

“உன் அருமை பிரெண்டை ஏன் ஹர்ட் பண்ணுனேன்னு தெரிய வேணாமா அமுல் பேபி… ம்ம்…?” என நமுட்டு புன்னகை புரிந்ததில், அவனும் ஏனென பார்த்தான்.

அவளோ, மந்த்ரா முந்தைய நாள் பிடித்த அவனது கையை பற்றிக் கொண்டு, “இந்த கையை அவள் எந்த உரிமையிலயும் தொட கூடாது. இனியொரு தடவை, இப்படி நடந்தா, அதுக்கு அப்பறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை. காட் இட்?” எனத் தீப்பார்வையுடன் கூறியவளின் பேச்சே அவனை திகைக்க வைத்தது.

இரு நாட்கள் காய்ச்சலில் விழுந்த மந்த்ரா, மூன்றாம் நாள் தான் சற்றே தெளிவு பெற்றாள். அன்று அவளுக்கென ஒதுக்கி இருக்கும் மருத்துவமனையில் போஸ்டிங் செல்ல பிடிக்காமல், கல்லூரிக்கே வந்திருந்தவளின் கரத்தில் இன்னும் வலி இருந்து கொண்டு தான் இருந்தது.

மற்ற இருவரும் வரும் வரையிலும், கேன்டீனில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவளை, தூரத்திலேயே பார்த்து விட்ட அமிஷின் கண்களில் ஒளிவட்டம் தெரிந்தது.

அன்றென பார்த்து அவன் தனியாக இருக்க, ‘ஐ ஜாலி…’ என எண்ணியபடி அவளருகில் சென்று, “ஹாய் மந்து” என்றான்.

அதில் நிமிர்ந்தவள், அவனை முறைத்து விட்டு மீண்டும் குனிந்து கொள்ள, ‘திமிருடி உனக்கு…’ என முனகியவள், “ஏய் ஜுனியர். என்ன திமிரா போச்சா உனக்கு?” என அவள் கையை பிடிக்கப் போனவன், அதில் பெரிய அளவில் கட்டிட்டிருப்பதை கண்டு அதிர்ந்தான்.

உடனே அவளருகில் அமர்ந்தவன், பதற்றமாக, “என்ன ஆச்சு மந்து. ஏன் இவ்ளோ பெரிய காயம்?” என அதனை தடவிக் கொடுக்க எத்தனிக்க, சட்டென இடத்தில் இருந்து எழுந்தாள்.

“அதெப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறீங்க?” என்றவளுக்கு கூடவே கண்களும் கலங்கி விட்டது.

அவனோ கடந்த நான்கு நாட்களாக கல்லூரிக்கே வரவில்லை. அதனால் குழம்பி, “எனக்கு தெரியாது மந்து. எப்படி ஆச்சுடி. இங்க காட்டு…” என மீண்டும் மென்மையுடன் கேட்க,

“சும்மா நடிக்காதீங்க சீனியர். உங்க பிரெண்டு தான், என் கையை வேணும்ன்னே கதவுல நச்சுட்டான்னு உங்களுக்கு தெரியாதா? இப்ப வந்து ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க.” எனக் கூறி முடிக்கும் முன்னே, அது கேவலாக வெளிப்பட்டது.

“மஹுவா இப்படி செஞ்சா?” என ஒரு நொடி அவன் முகத்திலும் திகைப்பு தான்.

“அவள் ஏன் இப்படி செய்யணும்டா. நீ ஏதாவது அவள்கிட்ட வம்பிழுத்தியா?” என சற்றே தயக்கமாக அவன் கேட்க,

அவளோ கடுப்பாகி விட்டாள். “எனக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நினைச்சீங்களா? நீங்களும் உங்க ப்ரெண்டும் பண்ற மாதிரி பொறுக்கித்தனமெல்லாம் எங்களுக்கு பண்ண தெரியாது. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தான் இருக்கேன். அவளுக்கு தான் பைத்தியம் பிடிச்சு இருக்கு.” என்றவளின் கன்னங்கள் நொடி நேரத்தில் சிவந்திருந்தது அவன் கொடுத்த அடியில்.

“இன்னொரு வார்த்தை பேசுன… உன்னை இங்கயே கொன்னு போட்டுட்டு போய்டுவேன். ஏதோ போனா போகுதுன்னு விசாரிச்சா, ரொம்ப ஓவரா பேசுற. போடி முதல்ல.” எனக் காய்ந்தவன் அவளை முறைத்து வைக்க,

அவளுக்கோ அவனது கோபம் கண்டு அழுகை பீறிட்டது. நியாயமாக அவன் கொடுத்த அடியை திருப்பி கொடுத்து, சண்டையிட வேண்டும் என அவளது மூளை கூற, மனமோ ஏதோ ஒரு ஏமாற்றம் தாக்க, தடுமாறி நின்றது.

கன்னத்தில் கை வைத்து தேம்பியபடியே, அவள் அங்கிருந்து நகர்ந்து விட, அமிஷ் தலையில் அடித்துக் கொண்டான்.

ஏனோ, அவள் அவனைப் பார்த்த பார்வையும், கண்ணீரும் அவனை அசைத்துப் பார்க்க, ‘சே… அமி இடியட். பொறுமையா பேசாம என்ன பண்ணி வச்சுருக்க?’ என தன்னை தானே திட்டிக் கொண்டவன், சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவளை தேடி செல்ல, அவள் எப்போதோ வீட்டை நோக்கி சென்று விட்டாள்.

ஒரு வாரம் கடந்த நிலையில் கூட, தஷ்வந்த் பிரம்மை பிடித்த நிலையில் தான் இருந்தான். மாதவும் அவனிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பயனில்லை.        

“எனக்கு என்னமோ அவள், உள்ள என்னமோ வச்சுக்கிட்டு, வெளில உன்ன டீஸ் பண்றான்னு நினைக்கிறேன் பாஸ்” என மாதவ் கூற, அதனை அவன் மனம் நம்ப மறுத்தது.

உள்ளதை உள்ளபடி பேசும் அவள் விழிகள் ஒன்றும் பொய் பேசியதாக தெரியவில்லை அவனுக்கு. ஆனால், இந்த நிலை தான் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என் கையை யாரு பிடிச்சா அவளுக்கு என்ன? என்று எரிச்சலாக தான் இருந்தது.

முயன்று, அவளிடம் இருந்து கவனத்தை திருப்பி பாடத்தில் பதித்து அதில் சிறிது வெற்றியும் கண்டு, சாதாரணமாக இருக்க தொடங்க, அந்நேரம் மீண்டும் அவனவளது தரிசனம் கிடைத்தது.

கல்லூரி முடிந்து விடுதி நோக்கி மாதவுடன் நடந்து கொண்டிருந்த தஷ்வந்த்தின் முன், ஒரு கார் நிறுத்தப்பட, அதில் இருந்தவளைக் கண்டு விழித்தான்.

கதவை அன்லாக் செய்தவள், “கெட் இன் அமுல் பேபி!” என்றிட, அவனுக்கோ எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது.

இதில் அவளது அழைப்பு வேறு, அவனை சங்கடப்படுத்த, பாவமாக மாதவை பார்த்தான்.

“தஷ்வா!” அதிகாரமாக அவள் அழைத்த அழைப்பில், மிரண்டு பார்த்தான் தஷ்வந்த்.

“இப்ப நீ கார்ல ஏறுரியா? இல்ல கார் உன் ஃப்ரெண்டு மேல ஏறட்டுமா?” என ஆக்சிலேட்டரை கோபத்துடன் மிதித்தபடி கேட்டதில், மாதவ், “அக்கா நான் என்னக்கா பண்ணுனேன்.” என அரண்டு, “பாஸ். அக்கா கூப்புடுறாங்கள்ல போய் என்னன்னு தான் கேட்டுட்டு வாயேன்…” என ஜகா வாங்கினான்.

“அடப்பாவி…” என அவனை முறைத்த தஷ்வந்திருக்கு ஐயோ என்றிருந்தது.

வேறு வழியற்று, காரினுள் அவளருகில் அமர்ந்திட, அடுத்த நொடி கார் அங்கிருந்து சீறி பாய்ந்தது.

சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் பெரும் மௌனம்.

அவனே அதனை உடைத்து, “சீனியர், எட்டு மணிக்குள்ள ஹாஸ்டலுக்கு போகலைன்னா, உள்ள விட மாட்டாங்க சீனியர்…” என்றான் பரிதாபமாக. அப்போதே மணி 7.

அவளோ, “நான் உன்னை எவ்ளோ அழகா அமுல் பேபி, தஷ்வான்னு கூப்புடுறேன். நீ என்னை சீனியர்ன்னு கூப்புடுற. டூ பேட்.” என தலையாட்டிக் கொண்டவளிடம், “இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்?” என்றான் தன்னை நொந்து.

“சிம்பிள். நீ தான் வேணும்.” என அவள் தோளைக் குலுக்க, அவனோ அதிர்ந்தான்.

“உடனே ஓவரா யோசிக்காதடா. வில் யூ பீ மை பாய் ப்ரெண்ட்?” என விழி உயர்த்தி கேட்டு விட்டு, அவள் காரை ஓட்ட, அவனுக்கோ எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.

“பாய் ஃப்ரெண்டா? நானா?” என்றவனிடம், “ம்ம். பட், நோ லவ். நோ கமிட்மெண்ட்ஸ். ஜஸ்ட் லிவ் இன் டுகெதர்.” என அடுத்த குண்டை போட, அவனுக்கு ஹார்ட் அட்டாக் தான் வரவில்லை.

அவளிடம் காதல் என்ற வார்த்தை வந்திருந்தாலே அவன் அவளை விட்டு ஓட தான் நினைத்திருப்பான். இவளோ, என்னன்னவோ பேசுகிறாளே என குழம்பியவன், “சீனியர்… நீங்க நினைக்கிற மாதிரி பையன் நான் இல்ல…” என வேகமாக கூற, காரை மெதுவாக ஓரம் கட்டியவள், நன்றாக திரும்பி அவனை காட்டமாக பார்த்தாள்.

“அஃப்கோர்ஸ். நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நானும் இல்ல தஷ்வந்த். ரோட்டுல போற எல்லார்கிட்டயும் இதே மாதிரி கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்காத. நான் ரசிக்கிற ஒரே ஆள் நீ மட்டும் தான். ஏதோ உன்மேல எனக்கு ஒரு ஈர்ப்பு. தட்ஸ் ஆல். அதுக்காக லவ், மேரேஜ்ன்னு என் டைம  வேஸ்ட் பண்ண விரும்பல. அட் தட் சேம் டைம், உன்னை மிஸ் பண்ணவும் விரும்பல. சோ தட், ஐ ஆம் ஹியர். பிடிக்கிற வரை, நீ எனக்கு பாய் ப்ரெண்டா இரு. தென், வீ வில் பிரேக் அப். பட், இப்ப உனக்கு வேற ஆப்ஷன் இல்ல அமுல் பேபி. இப்போதைக்கு பிரேக் அப் பண்ற ஐடியாவும் எனக்கு இல்ல. சோ…” என  நெற்றியில் விழுந்த முடிகளை அழகாக கோதிக் கொண்டாள்.

அவனுக்கு தான், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. ‘ரசிக்கிற அளவுக்கு என் மூஞ்சில என்ன இருக்கு?’ என தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு, ஏனோ ஒரு விதம் பயமே வந்தது.

அவனது நிலை புரிந்து, “சில் தஷ்வா. உடனே சொல்லணும்ன்னு அவசியம் இல்ல. டேக் யுவர் ஓன் டைம்.” என்றவள், அவள் சொல் மீறி மீண்டும் அவன் க்ளீவ் ஷேவ் செய்திருந்ததை உணர்ந்து,

“நான் உன்னை ஷேவ் செய்யக் கூடாதுன்னு சொன்னதா ஞாபகம்.” என்றாள் முறைப்பாக.

அவளுக்கு பதில் கூறக் கூடாது என மனம் அறிவுறுத்தினாலும், வாயோ தானாக, “காலேஜ் ரூல்ஸ் சீனியர்” என முணுமுணுத்தது.

அதில், அவன் சட்டைக் காலரை பற்றி இழுத்தவள், “இனிமே உனக்கு நான் வைக்கிறது தான் ரூல்ஸ் அமுலு.” என்றவாறு, அவனது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள், “அடுத்த முறை ஷேவ் பண்ணும் போது இதை ஞாபகம் வச்சுக்கோ.” எனக் கிசுகிசுப்பாக கூறியதைக் கேட்டு, ஏற்கனவே அதிர்வில் மூழ்கி இருந்த தஷ்வந்திற்கு இப்போது இதயமே வெளியில் வந்து விடும் போல் இருந்தது.

தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள எண்ணுபவளோ, தன்னெதிரில் இருப்பது பொம்மை அல்ல, உயிரும் உணர்வும் உள்ள மனிதன் என உணராமல் போனது யாரின் பிழையோ!

காயம் ஆறும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
30
+1
0
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்