Loading

“நான் கேட்டா என்ன வேணாலும் செய்வியாடி?” தஷ்வந்த் ஆதங்கம் பொங்க கேட்க,

“செய்யாம என்னால விட முடியல…” என்றாள் மஹாபத்ரா.

சில நிமிடங்கள் கடும் மௌனம்! ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிட, அந்நொடிகளை அவனே கலைத்தான்.

“ஏன்டி என்னை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்த? என்னை ஏன்டி உன் வீட்டுக்கு வர சொன்ன? ஏன்டி என்னை விட்டு போன?” அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினான்.

அவளோ சலிப்புடன், “நான் உன்ன வரசொல்லல டா… என் நானா பார்த்த வேலை அது!” என்றதில் அவன் ஏதோ புரியத் தொடங்கியது.

“என்கிட்ட ஒரு வார்த்தை இதெல்லாம் சொல்லி இருக்கலாம்ல. இத்தனை வருஷம் உன்னை பிரிஞ்சு இருந்துருக்க மாட்டேனே டாலு.” வார்த்தைகள் தேய்ந்தது அவனுக்கு.

பெருமூச்சு விட்ட மஹாபத்ரா, “ஒரு விஷயத்தை புருஞ்சுக்கோ தஷ்வா. என் நானாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நான் உன்னை என்கூட இருக்கணும்ன்னு கம்பெல் பண்ணுனது அவருக்கு தெரியும். சொல்ல போனா, நான் உன்ன கம்பெல் பண்றனால தான் அவரும் சும்மா இருந்தாரு. இதே நீயும் பிடிச்சு என்கூட இருக்கன்னு தெரிஞ்சுருந்தா, அதுவும் முட்டு சந்துக்குள்ள முட்டிக்கிட்ட மாதிரி தான்.

இந்த விஷயத்தை நான் படிச்சு முடிக்கிற வரை அமி, ஆஷாகிட்ட கூட சொல்லல. அமியால கண்டிப்பா நடிக்க முடியாது. நானா அவனை க்ராஸ் செக் பண்ணுவாருன்னு எனக்கு தெரியும். அந்த நேரத்துல, அவன் முகத்துல சின்ன மாற்றம் தெரிஞ்சா கூட, அதை நோண்டி உண்மையை தெரிஞ்சுக்குவாரு.

நான் இதெல்லாம் வேணும்ன்னு செய்றேன்னு தெரிஞ்சா, அடுத்த செகண்ட் உன்னை போட்டு தள்ளிட்டு போய்டுவாரு. டூ பி ஃபிராங்க். அதுக்கு மேல என்னால அவரை தடுக்க முடியாது. அப்போதைக்கு நீ என்னை புருஞ்சுக்கணும்ன்னுலாம் நான் யோசிக்கல. சொல்லப்போனா நீ என்னை அப்டியே லவ் பண்ணுனது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு.

ஆனா, நீ லவ் பண்றேன்னு சொன்னப்ப என்னால உண்மையையும் சொல்ல முடியல. உன் லவ்வை அக்செப்ட் பண்ணவும் முடியல. அமிக்கு சொன்னது தான் உனக்கும். இப்போ இருந்த மாதிரி மூஞ்ச முகமூடி போட்டு உணர்ச்சியை காட்டாம வச்சிருந்தா ஒருவேளை நான் ஷேர் பண்ணிருக்கலாம். பட் உனக்கு எக்ஸ்பிரஸிவ் ஃபேஸ் அமுலு. உன்னால அவ்ளோ நாளைக்கு உண்மையை மனசுல வச்சுக்க முடியாது. கண்டிப்பா மாதவ்கிட்ட ஷேர் பண்ணுவ. அவன் மந்த்ரா கிட்ட சொல்லுவான். பை சான்ஸ் அது அவள் மூலமா அமிக்கு தெரிஞ்சா, அவன் மூலமா, நடக்குற டிராமாவை நானா ஈஸியா கண்டுபிடிச்சுடுவாரு.

அதுக்கு எல்லாமே என் மனசுல இருக்குறது பெட்டர். காலேஜ் முடிச்சதும், நானாவை எப்படி சரி கட்டுறதுன்றது தான், எனக்கு அப்போ இருந்தே பெரிய குழப்பமே. சாதாரணமா நடக்கபோறது இல்லன்னு தெரியும் தான். ஆனா, ஏதாவது செஞ்சு தான ஆகணும். அதுக்கு அட்லீஸ்ட் என் அம்மாவாவது கிடைக்கணும்ன்னு அவங்களை தேடியும் அலைஞ்சேன். ஒரு பிரயோஜனமும் இல்ல.” எனப் பேசி முடித்து மூச்சு வாங்கினாள்.

அவளது முதுகை நீவி விட்டவன், “ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாத டாலு. படுத்துக்கோ…” என்றிட,

அவன் மடியில் அமர்ந்து, அவன் மீது படுத்துக் கொண்டாள். இடையுடன் அவளை வளைத்துப் பிடித்த தஷ்வந்த், “ஆஷாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?” எனக் கேட்டான்.

அதில் அவளுக்கு காய்ந்திருந்த கண்கள் மீண்டும் நீரை உருவாக்கியது.

அது அவன் சட்டையையும் நனைத்திட, அவளை உணர்ந்து மெல்லக் கட்டிக்கொண்டவன், “இப்ப அவள் கொஞ்ச கொஞ்சமா ரெகவர் ஆகிட்டு இருக்கா டாலு. பயப்பட ஒண்ணும் இல்ல” என்றான் மென்மையாக.

“ஆனா, இந்த ஆறு வருஷம் அவள் இழந்த வாழ்க்கையை யாராலும் சரி செய்ய முடியாதுல அமுலு…” உதட்டைக் கடித்து வேதனையுடன் கேட்டவளிடம் அவனுக்கு பதில் கூறத்தான் தெரியவில்லை.

“அவள் பொழச்சு வந்ததே பெருசுன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான். மீதி இருக்குற வருஷத்தை அவள் சந்தோஷமா வாழட்டும்ன்னு நினைச்சுக்கலாம் டாலு…!” அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி சமன்செய்தான்.

அதனை சிறிதாய் ஆமோதிப்பது போல தலையாட்டிக் கொண்டாள். “அவளை போய் பாக்கலையா?” தஷ்வந்த் கேட்ட கேள்வியில், “வேணாம் தஷ்வா. நான் பார்க்கல.” என்றாள் வேகமாக.

“டாலு… இப்ப தான் சரி ஆகிடுச்சுல. இப்பவும் ஏன்…?” என சற்றே கண்டிப்பாக கேட்டதில், “இன்னும் எதுவும் சரி ஆகல. எல்லாம் சரி ஆகுற வரை, நான் யாரையும் பாக்குறதா இல்ல அமுலு.” என்றவளின் கோபப் பேச்சில் குழம்பினான்.

பெண்ணவளின் உள்ளங்கையைப் பற்றி அழுத்தம் கொடுத்தவன், “இந்த டைம்ல டென்ஷன் ஆகாத டாலு. ட்ரை டூ பி ரிலாக்ஸ்.” என்றதில், அவளும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“என் கண்ணு முன்னாடியே, அவள…” என சொல்ல முடியாமல் தவித்தவளின் இதழ்களை ஒற்றை விரல் கொண்டு தடுத்தவன், அவளை மடியில் படுக்க வைத்தான்.

அவள் ஏதோ பேச எத்தனிக்கையிலும், “ஷ்ஷ்!” என்று மீண்டும் அதரங்களுக்கு அணை போட்டவன், “இவ்ளோ ஸ்ட்ரெஸ் வேண்டாம் டாலு. கொஞ்ச நேரம் தூங்கு…” என அவளின் தலைமுடியை கோதிக் கொடுக்க, அவளின் விழிகள் அவனை தான் ஆழ்ந்து பார்த்திருந்தது.

“இந்த பார்வையை ஆறு வருஷத்துக்கு முன்னாடியே பாத்துருக்கலாமேடி…” என அவள் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

அதில் சிலிர்த்தவளோ, “என்னை இன்னும் லவ் பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கல தஷ்வா!” என்றாள்.

அவனோ புரியாத பார்வை வீசி, “என் லவ்வை அவ்ளோ சீப்பா நினைச்சிட்டியாடி? ஜஸ்ட் உன்னை யூஸ் பண்ணிட்டு, நீ ‘போ’ ன்னு சொன்னதும், எல்லாத்தையும் மறந்து போய்டுவேனா?” என சிறிது கோபத்துடன் கேட்டான்.

“மறந்துருப்பன்னு சொல்லல. ஆனா கடந்து வந்துருப்பியோன்னு நினைச்சேன்…” என்றவளின் கூற்றில் முகம் கடுகடுத்தது.

“ஹோ… இப்ப இவன் லவ் பண்ணல. செத்தாலும் என்னன்னு கேட்க மாட்டான். பிள்ளையை பெத்துக்குடுத்துட்டு தியாகி பட்டம் வாங்கலாம்ன்னு நினைச்சியோ…!” குரலை உயர்த்திக் கேட்டதில், மஹாபத்ரா மெல்ல சிரித்தாள்.

“சிரிக்காதடி… இங்க அவ்ளோ வலிக்குது! உனக்கு இதெல்லாம் இன்னும் டேக் இட் ஈஸி தான்ல. அடுத்தவன் வலி எல்லாம் உனக்கு என்னைக்குமே புரியாது.” என தன் நெஞ்சை சுட்டிக்காட்டி சரமாரியாக திட்டினான் தஷ்வந்த்.

அதற்கும் மெலிதாய் புன்னகைத்தவள், “இங்க வர்ற வரைக்கும் உன்னை பார்ப்பேன்னே எனக்கு தெரியாது அமுலு. அதுலயும் என் அமுலு இப்படி முழு நேர முரடனா மாறி இருப்பான்னு எந்த ஜோசியக்காரனும் சொல்லாம விட்டுட்டான் பாரேன்…” எனக் கிண்டலுடன் கூறியதில் தஷ்வந்த் முறைத்தான் அடிபட்ட பார்வையுடன்.

அதில், “சர்ஜரி பண்ணிக்க வேணாம்ன்னுலாம் நான் நினைக்கல தஷ்வா. அப்போ நிதின் சிக்ஸ் மந்த்ஸ் பேபி தான். என்னவோ, என்னை தவிர வேற யார்கிட்டயும் இருக்க மாட்டேண்டான். ரொம்ப அழுகை வேற. அழுது அழுது காய்ச்சலும் வந்துடுச்சு. என் கவனம் முழுக்க அவன் மேல தான் இருந்துச்சு அமுல் பேபி. சத்தியமா எனக்கு இவ்ளோ பொறுமை எல்லாம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கல. சில நேரம் நைட் பகல்ன்னு பாவம் பார்க்காம என்னை பிஸியாவே வச்சுக்கிட்டான்…” என்றபோதே அந்நாட்களை எண்ணி அவளுள் முறுவல் பூத்தது.

“அவன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுனதுல, சர்ஜரின்ற ஒன்னை நான் மறந்துட்டேன்னு தான் சொல்லணும்… பீரியட்ஸ் பெயின் வரும்போது தான், அடிபட்ட ஞாபகமே வரும். அது போனதும் அகைன் நார்மல் லைஃப்க்கு போயிடுவோம். அது மட்டுமில்லாம, சர்ஜரி பண்ணணும்ன்னா சும்மா இல்லையே. குறைஞ்சது ரெண்டு மாசமாவது ரெஸ்ட்ல இருக்கணும். அது வரை நிதினை யாரு பாத்துப்பா.” என்றவளை ஆயாசமாக பார்த்தவன்,

“அமிஷ் இருக்கான்… மதன் இருக்கான்… உன் அப்பா எங்கடி போய் தொலைஞ்சான். அதான் கூடவே நாலஞ்சு அடியாளு வச்சுருப்பியே.” என்றான் முறைப்பாக.

அதில் மௌனமாகி விட்டவளிடம், “அதென்ன அவன் மேல உனக்கு இவ்ளோ பாசம்…” எனக் கேட்டதில், அதற்கும் முறுவலித்தாள்.

“நிதினுக்கும் உன்னை மாதிரியே கன்னத்துல குழி விழும்…” என்று அவனது கன்னத்தை வருடிக்கொண்டு சொன்னதில், “சரி அதுக்கு…?” என்றவனுக்கு இன்னும் புரியவில்லை.

“என்ன அதுக்கு? அவனை பார்த்தா உன்னை பார்த்த மாதிரி இருந்துச்சு. நான் கூட அது என் மன பிரம்மைன்னு நினைச்சேன். இப்ப தான தெரியுது, அவன் உன் அக்கா பையன்னும், அவனுக்கு அவன் மாமாவோட ஃபேஸ் கட் இருக்குன்னும்.” என்று கண் சிமிட்டிக் கூறியவளைக் கண்டு திகைக்க தான் முடிந்தது அவனால்.

உணர்ச்சிப் பெருக்கில் விழிகள் கலங்க ஆயத்தமாக, “இ இ இதுக்காகவா அவனை வளர்த்த?” எனக் குரல் எழும்பாமல் கேட்டவனிடம், யோசியாமல் “ஆமா” என்றாள்.

மேலும், “அதுக்கு அப்பறம் வளர வளர, நிதின் காட்டுன அன்பு என்னை என்னவோ பண்ணிடுச்சு அமுலு. ஆனாலும் ஒரு விஷயத்துல நான் தெளிவா இருந்தேன். அவனோட அப்பா, அம்மாவோட உரிமையை நான் பறிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதனாலேயே, அவனுக்கு கொஞ்சம் புரியிற வயசு வர்றப்ப, அவனோட பேரண்ட்ஸ் பத்தி சொல்லிக்கிட்டே தான் இருந்தேன்.

ஒரு பக்கம், அவனோட பேரண்ட்ஸை தேடவும் சொல்லிருந்தேன். ஆனா, ஒருத்தனும் உருப்படியா ஒன்னும் சொல்லல. கொஞ்ச நாளா, நிதின் போக்கே சரி இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்ட பக்கத்து வீட்டுக்காரனை, கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்பான். அவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டான். அப்பறம் தான் புரிஞ்சுது, ஒருவேளை அவன் ஃபேமிலி என்விரான்மெண்ட் எதிர்பார்க்கிறானோன்னு, அதான், எதை பத்தியும் யோசிக்காம நானே களத்துல இறங்கிட்டேன்.

ஆனா, உண்மையை சொல்லணும்ன்னா, அவன் பேரண்ட்ஸ் கிடைச்சுட்டா நான் எப்படி சமாளிப்பேன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல அமுலு. இந்த ஆறு வருஷமா அவன மட்டுமே டிபெண்ட் பண்ணி இருந்துட்டேன். அவன் பேரண்ட்ஸ் உன் அக்கா மாமான்னு தெரிஞ்சதும், ஷாக் தான்.

அதுலயும் நீ என்னை அடிச்சதும், நீ டோட்டலா மாறி இருந்ததும் எனக்கு இன்னும் அதிர்ச்சியா தான் இருந்துச்சு. என்னால இங்க இருக்க முடியும்ன்னு தோணல. அதான் கிளம்புனேன். ஆனா நிதி எனக்கு டிவிஸ்ட் குடுப்பான்னு நினைக்கவே இல்ல.
அவனோட பாசத்தை நினைச்சு ஃபீல் பண்றதா, இல்ல எப்படா சான்ஸ் கிடைக்கும் என்னை குத்தி கிழிக்கலாம்ன்னு வெய்ட் பண்ணுன உன்ன அவாய்ட் பண்றதான்னு தெரியாம குழம்பிட்டேன்.” என்று முடித்தவளின் கழுத்தில் முகத்தை பதித்தான்.

இன்னும் தன் கன்னக்குழி நினைவில் தான், நிதினை வளர்த்தேன் என்றவளின் கூற்று அவன் நெஞ்சை விட்டு அகல மறுத்தது.

“அவ்ளோ பிடிக்குமாடி என்னை?” கலங்கிய குரலில் தஷ்வந்த் கேட்க, அவனது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து பதிலளித்தவள், “மறுபடியும் உன்னை பார்த்ததும் தான், எனக்கு உன் கூட வாழ்ந்தா தான் என்னன்னு தோணிடுச்சு அமுலு. டெலிவரி டைம்ல பாத்துக்கலாம்ன்னு…” என கூற வந்தவளை நிமிர்த்து வெறியாய் பார்த்தவன், “எதை சாகுறதையா?” என்றான் எரிச்சலாக.

அதில் முகம் சுருங்கியவள், “ப்ளீடிங் கண்ட்ரோல் பண்ணிட்டா…” என்று முடிக்கும் முன், “அது அவ்ளோ ஈஸின்னு நினைச்சுட்டியாடி? நார்மலா இருக்குறவங்களுக்கே அது எவ்ளோ கஷ்டம்ன்னு தெரியும் தான… இதுல இன்ஜியூரி வேற… அப்படி எனக்கு உனக்கு அசட்டு துணிச்சல்? நான் சாகுறதை வேடிக்கை பாரு. அடுத்த ஜென்மத்துலயாவது இந்த மாதிரி முட்டாள்தனம் பண்ணாம இருக்கியான்னு பாப்போம்.” என்று பல்லைக்கடித்தான்.

அவ்வார்த்தையில் சற்றே உடைந்தவளின் கண்கள் நீரால் சூழ்ந்திருந்தது. அவளைக் குடைய வேண்டாமென்று எண்ணி, பொறுமையை இழுத்துப் பிடித்தவனுக்கு, மருத்துவமனையில் இருந்து போன் வந்ததில், அவளைப் பாராமல் சென்று விட்டான்.

“அமி… மஹூ எங்க?” என கடினப்பட்டு பேசிய ஆஷாவிடம், “வருவா…” என்றதோடு முடித்துக் கொண்டவன், “உனக்கு இப்போ பரவாயில்லையா?” எனக் கேட்டான்.

“ம்ம்… அதான் நான் சரி ஆகிட்டேனே. இன்னும் ஏன் மூஞ்சியை தொங்க போட்டே இருக்க?” என்ற ஆஷாவிடம் மஹாபத்ரா பற்றி கூற இயலாமல், வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “மறுபடியும் டார்ச்சர் பண்ண வந்துட்டியேன்னு சோகமா இருக்கேன்” என்று கேலி செய்தான்.

அதில் அவள் முறைக்க முயல, சட்டென அவள் கையை பிடித்து அழுது விட்டான்.

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆஷா. உன்னை இப்படி பாக்கவே முடியலடி. எங்க திரும்ப வராமையே போய்டுவியோன்னு ஒவ்வொரு நாளும் செத்துட்டு இருந்தோம்.” என வலி மிகுந்த குரலில் பேசியவனை வருத்தத்துடன் பார்த்தாலும், அவளது கவனம் அவன் கரத்தின் மீது இருந்தது.

விழிகள் தான் மூடி இருந்ததே தவிர, உணர்வுகள் விழித்திருந்ததே! தினமும் யாரோ தன் கரத்தைத் தீண்டுவதும், முத்தமிடுவதும் அவளுக்கு இத்தனை வருடங்களாய் பழகிப் போன ஒன்றானது. சொல்லப்போனால், அந்த தீண்டல் முடியாமல் நீள வேண்டும் போலல்லவா இருந்தது. ஆனால், அது யாரென்று இப்போது தான் யோசிக்க முயன்றாள். அது அமிஷ் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஏதோ யோசனையில் இருந்தவளைக் கண்டு பதறி, “ஆர் யூ ஓகே ஆஷா? ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?” எனக் கேட்ட அமிஷிடம், “ஹாஸ்பிடல்ல யாரு இருந்தா?” என்றாள், ‘எப்படி கேட்பது’ என்ற தயக்கத்துடன்.

அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன், “ஹாஸ்பிடல்ல யாரு இருப்பா, டாக்டர் நர்ஸ் தான்.” என்றதில், “ஷப்பா… இந்த மொக்கையை கேக்குறதுக்கு நான் கோமாலயே இருக்கலாம்…” என்று அங்கலாய்த்தாள்.

அவள் வாயை மூடியவன், “வேண்டாம்டி. இந்த கொடுமை எல்லாம் இதோட போதும். விளையாட்டுக்கு கூட சொல்லாத. நினைச்சு பாக்கவே உயிர் போகுது.” என்றவனின் வேதனை அவளையும் கொய்தது.

அந்நேரம் சரியாக மந்த்ரா உள்ளே நுழைய, அவளது வாயில் விரல் வைத்திருந்ததைக் கண்டு திகைத்தவள், “நான்… நான் அப்பறம் வரேன்…” என்று இறுகிய முகத்துடன் வெளியேற செல்ல, ஆஷா தடுத்தாள்.

“உள்ள வா மந்த்ரா. என்னவோ லவ்வர்ஸ் ரூம்குள்ள வந்த மாதிரி இவ்ளோ ஆக்வார்ட்ட ரியாக்ட் பண்ற” என்று அவள் பங்கிற்கு கிண்டலடிக்க, அதில் நிமிர்ந்து இருவரையும் பார்த்தவள், மீண்டும் குனிந்து கொண்டாள்.

“பிபி செக் பண்ணலாம்…” என்று வேண்டிய சோதனையை எடுத்த மந்த்ராவிடம், “இத்தனை வருஷத்துல இன்னுமா நீ அமிக்கு ஓகே சொல்லல?” எனக் கேட்க, அவள் விழிகள் கலங்கியது.

அமிஷோ, “ஆஷா…” என்று அதட்டிட, அவனை அமைதியாக பார்த்தவள், “நீ என்னை என்ன நினைச்ச அமி?” என்றாள் கண்ணை சுருக்கி.

அவனோ புரியாமல் பார்க்க, “சோ நான் உன்னை லவ் பண்ணுனது உனக்கு தெரிஞ்சுடுச்சு. அதுக்காக நீ எனக்கு வாழ்க்கை குடுக்க கிளம்பிட்ட. இஸ் இட் சோ?” எனக் கோபத்துடன் கேட்டாள்.

அமிஷ் திகைத்ததில், “கடைசியா நீ அவள்கிட்ட பேசுனது எல்லாம் எனக்கும் கேட்டுச்சு அமி. நான் தான் உன் லைஃப்ன்னு நீ முடிவு பண்ணுனா போதாது. நானும் பண்ணணும். இப்பவும் எனக்கு உன்மேல இருக்குற உணர்வு மாறல தான். ஒருவேளை இந்த ஆறு வருஷமும் லாங் ஸ்லீப் இல்லாம இருந்துருந்தா, மே பி இந்த ஃபீலிங் போயிருக்கலாம்.

ஆனா, இப்ப என்னால பொய் சொல்ல முடியல. நான் உங்கிட்ட லவ்வ சொன்னா, நீயும் எனக்காக அக்செப்ட் பண்ணிப்பன்னு எனக்கு தெரியும். அதுக்காக தான் உங்கிட்ட சொல்லாமலே இருந்தேன். இப்பவும் அதான் சொல்றேன். உன்னால என்னை லவ் பண்ண முடியாது. உன் மனசுல நானே இல்லாதப்ப, ஏன் மந்த்ராவை அவாய்ட் பண்ற?” என்றாள் அதட்டலாக.

சில நொடிகள் அமைதி காத்தவன், “டாக்டர் தான் சொன்னாங்க. நீ கோமால இருக்கும் போது, உனக்கு பிடிச்ச விஷயத்தை பத்தி மட்டும் தான் பேசணும். உன்னை பாதிக்கிற எதுவுமே பண்ண கூடாதுன்னு. மந்த்ரா மேல எனக்கு இருந்த காதல் உன்னை பாதிச்சது உண்மை தான ஆஷா? உன்னை சுத்தி இருந்த நானும், உன் லவரா மட்டும் தான் இருக்கணும்ன்னு முடிவெடுத்தேன். இப்பவும் உன்மேல காதல் இருக்குன்னு என்னால சொல்ல முடியாது. என் வாழ்க்கைல காதல் அத்தியாயம் அவளோட முடிஞ்சு போச்சு. நீ சொன்னா, நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா சத்தியமா கடமைக்காக உன் கூட வாழ மாட்டேன் ஆஷா. கண்டிப்பா உன்னை நல்லா பாத்துப்பேன்.

உன்னால இப்ப என்னை அக்செப்ட் பண்ணிக்க முடியலைன்னாலும் ஓகே தான். ஆனா, முடிஞ்சு போன என் காதல் முடிஞ்சு போனது தான். நீ வேண்டாம்ன்னு சொன்னதும் திரும்பி அவள்கிட்ட போய் நின்னு அவளோட காதலை அசிங்கப்படுத்த மாட்டேன். உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவெடுத்தப்பவே, உனக்கு என்ன ஆனாலும் என் வாழ்க்கை உன்னோடயே முடிஞ்சுடும்ன்ற உறுதியோட தான் இருந்தேன். இப்பவும் அதே உறுதியோட தான் இருக்கேன்.” என உணர்விழந்த முகத்துடன் பேசி விட்டு சென்றவனை இரு பெண்களும் திகைப்பாகப் பார்த்தனர்.

இத்துடன் பத்தாவது முறையாக மந்த்ராவிற்கு அழைத்து சோர்ந்து விட்டான் மாதவ். ‘ஒரு தடையாவது போனை எடுக்குறாளா பாரு…’ என்று கடுப்பில் மிதக்கும் போதே, மந்த்ராவிடம் இருந்து போன் வந்தது.

“எங்க தான் போய் தொலைஞ்ச?” எனக் கேட்ட மாதவிடம், “ஆஷாக்கு கான்ஷியஸ் வந்துடுச்சுடா” என்றாள் ஏதோ யோசனையுடன்.

“வாவ்…! குட் நியூஸ் மந்தரா” என்று மகிழ்ந்தவனிடம், “ம்ம்… குட் நியூஸ் இன்னும் முடியல.” என்றவள், தஷ்வந்த் பற்றியும் கூற மாதவ் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.

“அந்த துரோகி, லவ் பெய்லியர்ல சுத்துறதை பார்த்தப்ப, சர்ச்ல தான் ஃபாதர் ஆகப் போறான்னு நினைச்சா, புள்ளைக்கே ஃபாதர் ஆக போறானா?” இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கேட்க, “ம்ம்… அவன் மட்டும் சிக்கட்டும் இருக்கு அவனுக்கு” எனக் கடுப்பில் காய்ந்த மந்த்ராவிற்கும் இன்னும் முழு விவரம் தெரியவில்லை.

“நாளைக்கு நானும் வரேன். சேர்ந்தே வச்சு செய்யலாம் அவனை” என்றவன், “மந்த்ரா…” என்றான் பாவமாக.

“சொல்லு…” 

“நம்ம… நம்ம சரக்கடிப்போமா?” என்று கேட்டதில், பேந்த பேந்த விழித்தவள், “என்னடா திடீர்ன்னு?” என்றாள் குழப்பமாக.

“பிளான் பண்ணி கூப்பிட்டா மட்டும் நீ வந்துடுவியாக்கும்…” என மாதவ் சிலுப்பிக்கொண்டதில், “ச்சீ ச்சீ… லவ் பெயிலியர் நானே சரக்கடிக்க யோசிக்கிறேன். உனக்கு என்னடா வந்துச்சு” என்றாள்.

“நானும் லவ் ஃபெயிலியர் தான்” முணுமுணுப்பாக மாதவ் பேசியதில், “ஏதே?” என அதிர்ந்தாள் மந்த்ரா.

“ஆமா, ஒன் சைட் லவ் ஃபெயிலியர் என்று முகத்தை சுருக்கியவன், இங்கு ரோஜாவைப் பார்த்ததைக் கூற, அவளோ விழுந்து விழுந்து சிரித்தாள்.

காயம் ஆறும்!
மேகா…

தூக்கம் வருது டியர்ஸ். மீது டிவிஸ்டை நாளைக்கு க்ளியர் பண்றேன். குட் நைட்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
41
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்