Loading

துருவ்  கூறிய விஷயத்தில், உத்ரா அரண்டு போய் அவனை பார்க்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் மிரண்ட விழிகளில் இதழ்களை ஒற்றி எடுத்தான்.

“சான்ஸே இல்ல ஹனி… நீசெம்ம கட்…” என்று குறும்பு வழிய சொன்னவனின் வாயைப் பொத்திய  உத்ரா அவனிடம் இருந்து விலகி,

“நீ சும்மா பொய் சொல்ற. நான் நம்பமாட்டேன்.” என்று சிலுப்பிக் கொண்டாள்.

துருவ் மீண்டும் அவளை இழுத்து அருகில் அமர வைத்து  விட்டு,”நீ நம்புற மாதிரி நான் ஒரு மேட்டர் சொல்லவா…” என்று கேட்க,

அவள் தான் ‘இவன் ஸ்லாங்கே சரி இல்லையே. கேட்போமா வேணாமா’ என்று யோசித்தாள்.

“என்ன ஹனி… சொல்லவா” என்று மீண்டும் அழுத்தி கேட்க, சரி என்று தலையாட்டினாள்.

துருவ் அவள் இடையில் வருடிக்கொண்டே, “உன் இடுப்புல கியூட்டா ஒரு…” என்று சொல்லும்போதே,

“போதும் போதும் போதும் நான் நம்புறேன்… நீ ஒன்னும் சொல்லவேண்டாம்” என்று உத்ரா கெஞ்ச, அவன் சிரித்து கொண்டே, “இன்னும் சொல்லவே இல்லை. நான் சொல்லிமுடிச்சுடறேன்” என்று ஆரம்பித்தான்.

அவள் முகத்தை மூடிக் கொண்டு “அச்சோ ப்ளீஸ் வேணாம் துருவ். ப்ளீஸ்…” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

அவன் அவளையே ஆழமாய் பார்த்திருக்க, கண்ணைத் திறந்தவள் அவனின் கண்களை பார்த்து விட்டு, அவள் கைகளை தோள்களில் மாலையாக போட்டு,

“நீ பொய் சொல்றன்னு எனக்கு தெரியும். ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தாலும், என் முழு சம்மதத்தோட தான் நடந்துருக்கும்… என் துருவ்க்கு அவரோட ஹனியை  எப்பவுமே கஷ்டப்படுத்த தெரியாது.” என்று மெலிதாய் சிரித்துக் கொண்டு கூற, அவன் அவளின் புரிதலில் விழி விரித்து,

“அதெப்படிடி நான் உன்னை ஏமாத்தும்போதும் என்னை நம்புன. இப்போ நான் யாருன்னு கூட தெரியாம இருக்கும்போதும் என்னை நம்புற…” என்றவன், அவளை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டு, “லவ் யு ஹனி… லவ் யூ” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

அவனின் அணைப்பில் தன்னை மறந்தவள், அவன் நெஞ்சில் சாய்ந்து, அந்த இதத்தை கண்ணை மூடி அனுபவிக்க, துருவ் “உதி, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்ற கேள்வியில் கண் விழித்தாள்.

அவன் தாபத்துடன், “அன்னைக்கு மாதிரியே நான் இப்பவும் இருப்பேன்னு சொல்ல முடியாது உதி. உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால முடியலடி… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ஹனி.” என்று காதலுடனும், அவள் தனக்கு இப்பொழுதே வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் கேட்க, அவள் “அதான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே ஆகிடுச்சே” என்று லேசாக புன்னகைத்தாள்.

“ப்ச், அது வீட்டில யாருக்கும் தெரியாதுல. இப்போ எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கோபமாக ஆரம்பித்து சற்று கெஞ்சலாக முடிக்க,

தலையை ஆட்டி “பண்ணிக்கலாம்” என்ற உத்ரா, “ஆனால் கொஞ்ச நாள் போகட்டும். இப்போ என்ன அவசரம்” என்றாள் அவனைப் பாராமல்.

அவனோ “என்ன அவசரமா… அடியேய் என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா…” என்று விட்டு, பின், “சரி எனக்கு கால் சரியாகவும் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, அவள், அவனின் புலம்பலை ரசித்துப் பின் திருதிருவென விழித்து,

“அது ஒரு மாசத்துல சரி ஆகிடும். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றாள்.

“ஒரு மூணு மாசம்”

“இல்ல இன்னும் கொஞ்ச நாள்…” என்று தயங்க,

அவன் அவளை ஒரு பார்வை பார்த்து “ஆறு மாசம்” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

அதில் பெருமூச்சு விட்டு, “ஒரு வருஷம்” என்று கேட்க,

உத்ரா “இதை பத்தி அப்பறம் பேசுவோமே. முதல்ல உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்…” என்று அவனை விட்டு விலகப் போனவளின் கையை இறுக்கமாக பற்றியவன் அழுத்தமாக, “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீயே சொல்லு?” என்று கோபத்துடன் கேட்டான்.

அவள் மெதுவாக, “எனக்கு உங்க நியாபகம் வந்ததுக்கு அப்பறம்…” என்று சொல்ல, அவன் திகைத்து விட்டான்.

“என்ன உதி இது முட்டாள்தனம்… இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கண்டிப்புடன் கேட்க,

உத்ரா அவனைப் பாராமல் “நீ தான என்கிட்ட சொன்ன. எனக்கு நியாபகம் வந்தாதான நான் உன்னை லவ் பண்றதை ஒத்துப்பேன்னு” என்று அவனிடமே எதிர்கேள்வி கேட்டாள்.

அவன் அவளை முறைத்து, “அப்போ இருந்த என் மனநிலை அப்படி. நீ என்னை தப்பா  நினைச்சு, ஒரு பரிதாபத்துல என்னை லவ் பண்றேன்னு சொல்றியோன்னு நினைச்சேன்.

ஆனால் அதை தான் இல்லைன்னு நீ எனக்கு புரியவச்சுட்டியே உதி. நானும் புருஞ்சுகிட்டேன்ல. சொல்லப்போனா தப்பு என் மேல தான். நான் உன்கூட என்ன நடந்தாலும் இருந்து புரிய வச்சிருக்கணும். இப்போ தான் நான் எல்லாத்தையும் உணர்ந்துட்டேனே.. அப்பறம் ஏன் உதி இப்படி பேசுற…” என்று கோபமாக  ஆரம்பித்து, சலிப்பாக முடித்தான்.

உத்ரா, அவன் அருகில் சென்று, “நீ சொன்னதுக்காக மட்டும் இல்லை துருவ். இப்போ இருக்குற மனநிலையில் உனக்கு உன் நியாகம் இல்லைனாலும் பரவாயில்லைன்னு தோணலாம்.

நாளைக்கு இதே மாதிரி மனநிலை இருக்காதே. ஒருவேளை எனக்கு எதுவுமே நியாபகம் வரலைனா?

கொஞ்ச நாள் கழிச்சு நீ என்கிட்ட உன் பழைய ஹனியை தான தேடுவ. அப்போ என்னால உங்கிட்ட நான் நானா இருக்க முடியாது.

மூணு வருஷத்துக்கு முன்னாடி உன்னை எப்படி காதலிச்சேன், எப்படி நம்புனேன், இதெல்லாம் எனக்கு தெரியல.

அப்போ நான் வேற. ஆனால் கண்டிப்பா இப்போ நான் பழைய உத்ரா இல்லை. அது எனக்கே தெரியும்..அப்பா இறந்ததுக்கு அப்பறம்… வீட்டு பிரச்சனை… பிசினெஸ் பிரச்சனைன்னு…” என்று ஆரம்பித்தவள்,

“ப்ச். அதெல்லாம் உனக்கே தெரியும். எப்படியும் நீ என்னை வாட்ச் பண்ணிக்கிட்டு தான இருந்துருப்ப… அதுல நான் நிறையவே சேஞ்ச் ஆகிட்டேன்.

ஆனால் ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன்.  அப்போ நான் உன்னை எவ்ளோ லவ் பண்ணேன்னு எனக்கு தெரியாது. ஆனால் இப்போ நான் உன்னை அதை விட அதிகமா தான் லவ் பண்றேன். அதை நான் உன்கிட்ட எக்ஸ்போஸ் பண்ற விதம் கூட சரியா தப்பான்னு தெரியல. நான் உங்கிட்ட பழைய மாதிரி இல்லாமல் வித்தியாசமா நடந்துக்குறேன்னான்னு கூட எனக்கு தெரியல…” என்று கண்ணில் நீர் உருண்டோட பேசியவள்,

அவன் தோளில் சாய்ந்து கொண்டு, கமறிய குரலில் “பட் நீ கொஞ்ச நேரம் என்கூட  இல்லைன்னாலும் எனக்கு என்னமோ பண்ணுது துருவ்.

உன் பக்கத்துல இப்படி உரசிகிட்டே இருக்கணும் போல இருக்கு. உன்னை விட்டு கொஞ்சம் விலகுனாலும், என் உடம்புல இருந்து ஏதோ ஒரு பார்ட் இல்லாத மாதிரியே இருக்கு. இதெல்லாம் கடைசி வரைக்கும் வேணும் துருவ்… உன் ஹனியா இருந்தா மட்டும் தான் உன்னால முழு மனசோட என்கூட வாழ முடியும்.

இல்லைன்னா, இன்னும் நான் உன்னை யாரோவா தான் நினைச்சுருக்கேன்னு தான் நினைப்ப…” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்க, அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தான்.

அவனின் இந்த நிலைதான் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை கொடுத்தது.

“துருவ் என் மேல கோபமா… நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா” என்று பாவமாய் கேட்க,

அவன் பதிலேதும் சொல்லாமல், மணியைப் பார்த்து விட்டு, “3 மணிக்கு வீடியோ கால் கான்ஃபெரன்ஸ் இருக்கு. மீரா எங்க…? அவளை வர சொல்லு.. இம்பார்ட்டண்ட் கிளையண்ட்” என்று சம்பந்தமில்லாமல் பேச, அவள் பேந்த பேந்த முழித்தாள்.

அவள் முழியை பார்த்து விட்டு, “உனக்கும் டைம் ஆச்சு ஆஃபிஸ்க்கு கிளம்பு.” என்று சொன்னவன்,

“அப்பறம், அந்த வண்டி நம்பர் பத்தி விசாரி… அது யாரு என்னன்னு ஈவினிங்குள்ள எனக்கு தெரியணும்.” என்று கட்டளைகளைக் கொடுத்து விட்டு, லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அதில் மூழ்கினான்.

உத்ரா தான் மருகிக்கொண்டு நின்றாள். அவன் கோபமாக பேசி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சாதாரணமாக பேசியது தான் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

பின் அவளுக்கு போன் வந்ததில், அவனைப் பார்த்துக்கொண்டே வெளியில் வந்து விட்டாள்.

வெளியில், மீராவுக்கு மனது, எரிமலையாய் வெடித்தது.

‘அது எப்படி நான் இருக்கும்போது அவர் அந்த பொண்ணு கையை பிடிக்கலாம்’ என்று  நினைத்தவளின் மனசாட்சியே,

‘உன்னையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது மத்த பொண்ணுங்களையும் பார்க்க கூடாதுன்னா அப்போ அவன் என்னதான் பண்ணனும்’ என்று எக்களிக்க,

‘அதுவும் உண்மைதானே. அவன் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும்’ என்று எப்பொழுதும் போல் அவள் தேய்ந்த டேப் ரெக்கார்டரை ஓட விட, அர்ஜுன் அவளை நோக்கி வந்தான்.

வந்தவன் அவளைப் பார்த்து விட்டு, “என்ன மீரா, கண்ணு கலங்கி இருக்கு. தூசி எதுவும் விழுந்துருச்சா” என்று நக்கலாக கேட்க,

அவள் ‘நான் அழுகுறது உனக்கு நக்கலா இருக்கா’ என்று மனதினுள் திட்டிக்கொண்டு அவனை தீயாய் முறைத்தாள்.

அதில் அவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நிற்க, அப்பொழுது என்று பார்த்து முக்கியமாக ஏதோ சந்தேகம் கேட்க வந்த அனு, “அர்ஜூன் சார்… இந்த டவுட் கொஞ்சம் க்ளியர் பண்ணுங்க” என்று கேட்க, அவனும் இதான் சாக்கு என்று மீராவையும் நகரவிடாமல், அனு போதும் போதும் என்ற அளவுக்கு விளக்கம் சொன்னதில்,

அவள் தான் ‘என்ன ஆச்சு நம்ம டாக்டர்க்கு. எப்பவும் ஒரு நிமிஷம் கூட அதிகமா பேசமாட்டார். இப்போ ஏன் ஒரு மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறாரு’ என்று நினைத்துக்கொண்டே மீராவை பார்க்க,

அவள் இவளை பார்வையால் சுட்டெரிப்பதிலேயே, ‘ரைட்டு. இவனுங்க லவ்க்கு நம்மளை ஊறுகாய் ஆக்குறாய்ங்க போல.’ என்று சுதாரித்தவள்,

பின், ‘ப்ச் நமக்குத்தான் லவ்லாம் செட் ஆகல. அவங்களுக்காவது பிக் அப் ஆகட்டும்.’ என்று அமைதியாய் இருந்தாள்.

சிறிது நேரத்தில் அவள் சென்றதும், மீராவை வெறுப்பேற்றியதில் குளிர்ந்து போய் நின்றிருந்த அர்ஜுன்,

பின், அவளை ரொம்ப சோதிக்கவேண்டாம் என்று நினைத்து, “மீரா… அனு” என்று சொல்ல போக,

அவள் “நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க அர்ஜுன்… உங்களுக்கு எல்லா விதத்திலயும் அவள் தான் பொருத்தமா இருப்பாள்.” என்று சொல்லிவிட்டு, “மீட்டிங் இருக்கு நான் போய் அண்ணாவை பார்க்குறேன்” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அர்ஜுன் அவள் பேசியதில் அதிர்ந்து போய் நிற்க, இங்கு விதுனும் அவள் பேசியதை கேட்டு உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தான்.

அதில் அர்ஜுன் தோள் மேல் கையை போட்டு, “மச்சான் அனு உனக்கு தங்கச்சி மாதிரி டா. உன் ஃபோகஸ் எல்லாம் மீரா மேல தான் இருக்கணும்” என்று சற்று பாவமாக சொல்ல,

அர்ஜுன் அவனை முறைத்து, “டேய். அவள் ஏதோ உளறிட்டு போறாள்ன்னா. நீ வேற. இந்த உதி இருக்காளே… ஐடியா குடுக்குறாளாம் ஐடியா…” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற, விது நிம்மதியான மனதினை புரிந்து கொள்ளாமல், அனுவை கிண்டல் செய்யலாம் என்று அவளை பார்க்க சென்றான்.

அங்கு அவள், இரண்டு மருந்தினை கையில் வைத்து கொண்டு, சிரிஞ்சில் எதை ஏற்றலாம் என்று யோசித்துக் கொண்டு நிற்க,

விதுன், “எப்போ பாரு ஏதோ ஒரு குழப்பத்துலயே தான் இருப்பாள் போல…” என்று தனக்குள் சிரித்து கொண்டு,

“என்ன போலி டாக்டர். இன்னைக்கு யாரை கொலை பண்ணலாம்னு யோசிக்கிறியா” என்று நக்கலாக கேட்க,

அவள், “சார் போலி டாக்டர் போலி டாக்டர்ன்னு சொல்லாதீங்க சார். அப்பறம் என்னை டாக்டர்ன்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்க…” என்று முகத்தை  சுருக்க,

அவன் “அப்பவும் யாரும் ஒத்துக்க மாட்டாங்க…” என்று கிண்டலாக சிரித்தான்.

பின், ஹேண்ட் பேகில் வெளியில் தெரிந்த டிபன் பாக்ஸை எடுத்தவன், “என்ன கொண்டு வந்துருக்க” என்று அதனைத் திறக்க,

“சார் அது என்னோடது சார்…” என்று  பதறினாள்.

“ஆமா அப்பறம் என்னோடதுன்னா சொன்னேன். எனக்கு பசிக்குது. நீ கேன்டீன்ல சாப்டுக்கோ” என்று அந்த சாம்பார் சாதத்தை ஒரு வெட்டு வெட்டினான்.

அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு, அந்த சாம்பார் சாதத்தையே பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.

சாப்பிட்டு முடித்ததும், காலை நீட்டி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன், “நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்க…” என்று சொல்ல, சுள்ளென்று முதுகில் யாரோ அடிப்பது போல் இருக்க, திரும்பியவன் அங்கு உத்ரா நிற்பதை கண்டதும், அசடு வழிந்தான்.

அவள் “இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. அந்த வண்டி நம்பர் யாரோடதுனு கண்டு பிடிச்சாச்சாம்… வா போகலாம்” என்று அழைக்க,

அவனும் ‘கொஞ்ச நேரம் பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுதுங்களா’ என அனுவை பார்த்து கொண்டே சென்று விட்டான்.

அனுவிற்கு தான் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. “ஷப்பா… குடும்பமாடா இது. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு எக்ஸ்டென்ஷன்ல இருக்கு…” என்று தலையில் அடித்து கொண்டவள்,

“இவனுக்கு தெரியாமல் ஒரு ஊசியை போட்டு விட்டு நான் படர அவஸ்தை இருக்கே… அய்யய்யயோ…” என்று சந்தானம் பாணியில் அவளை அவளே கிண்டல் அடித்து விட்டு கிளம்பினாள்.

இங்கு அஜய் காரில் சுஜியிடம் சரமாரியாக அடிகளை வாங்கினான்.

“உனக்கு இப்போ கூட கிண்டல் தான்ல… என் ஃபீலிங்ஸ் உனக்கு விளையாட்டா இருக்கு இல்ல” என்று கண்கலங்க கேட்க,

அதில் பதறியவன் அமைதியாக அவளைப் பார்த்து, “லூசு… நான் சொன்ன வார்த்தைக்கு கூகிள்ல என்ன அர்த்தம்ன்னு போட்டு பாரு” என்று சொல்ல ,

அவள் புரியாமல், வேகமாக இணையத்தில் பார்க்க, அதனை பார்த்தவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

அவள் சிவப்பை ரசித்தவன், “நீ தான் ரொம்ப லேட்… நான்லாம் ஃபர்ஸ்ட் மீட்டிங்லேயே அரேபிக்ல ப்ரொபோஸ் பண்ணிட்டேன்…” என்று குறும்புடன் கூறி விட்டு,

மீண்டும் அவளருகில் சென்று “ஊஹிபுக்கி பஜ்ஜி”  என்று காதலுடன், அரேபிய மொழியில் ‘ஐ லவ் யு’ என்று கூற, அவள் வெட்கத்தில் அவனைப் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள்.

அவன் ரசனையுடன் பார்த்து விட்டு “ஆமா… இதை நீ இத்தனை வருஷமா செய்யவே இல்லையா” என்று கேட்க,

அவள் “அது, நீ என்னை எப்படியும் கலாய்ச்சு தான் சொல்லிருப்பான்னு நினைச்சு நான் பார்க்கவே இல்லை” என்று சிரித்தாள்..

பின் கோபமாக, “என்னை லவ் பண்ணாதான் அவன் ஒரே நாள்ல ஓடிப்போயிடுவானே. அப்பறம் இப்போ மட்டும் உனக்கு எப்படி லவ் வந்துச்சு” என்று முறுக்கி கொள்ள,

“ஹே நான் தான் சொன்னேன்ல, ஆரம்பத்துல இருந்தே எனக்கு உன்மேல க்ரஷ் இருந்துச்சு டி… அன்னைக்கு காலேஜ்ல முதல் தடவை பார்க்கும்போதே, என் மனசுல ஏதோ ஒரு மூலைல நீ வந்து ஸ்ட்ராங் ஆ உக்காந்துட்ட” என்று வெகு தீவிரமாக சொல்லிக்கொண்டிருக்க,

அவள் நக்கலாக, “ஆமா உன் மனசு என்ன பார்க்கா வந்து உட்கார்ந்து காத்து வாங்க…” என்று முறைக்க,

‘உன்கிட்ட போய் ரொமான்டிக் ஆ பேசுனேன் பாரு’ என்று முறைத்து விட்டு, “உன் மேல லவ் இல்லாமையா, உன்னை இழந்துட கூடாதுன்னு நைட் ஓட நைட்டா எல்லா வேலையும் பார்த்தோம்.” என்றான்.

அவள் “டேய் உன்னை கொன்னுடுவேன். லூசாடா நீங்க… ஒரு நாள் வெயிட் பண்ணிருந்தா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். “என்று தலையில் கை வைக்க, அவன் புரியாமல் பார்த்தான்.

“முதல்ல நீயும் என்னை லவ் பண்ணலைன்னு நினைச்சு கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னமோ உண்மைதான்…

ஆனால் நேத்து நீ அப்படி வந்து பேசிட்டு போனதும் என்னால, நிம்மதியா இருக்கவே முடியல. நீயும் என்னை லவ் பண்றன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் அவனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு என்ன லூசா பிடிச்சுருக்கு…” என்று விட்டு,

  மேலும், “நான் இன்னைக்கு தான், சந்துருகிட்ட பொறுமையா பேசி, அம்மாகிட்ட சொல்லி, அப்பாவுக்கு புரியவச்சு முதல்ல கல்யாணத்த நிறுத்திட்டு அப்பறமா உன்னை லவ் பண்றதை மெது மெதுவா சொல்லலாம்னு பிளான் போட்டு வச்சிருந்தேன். இப்படி அநியாயமா சிக்கல்ல மாட்டி விட்டுடீங்களேடா.” என்று பாவமாக சொன்னாள்.

அவன் தான் ‘அய்யோயோ நம்ம தான் அவசரப்பட்டுட்டோமா…’ என்று அவளிடம் “அதாவது நேத்து என்ன நடந்துச்சுன்னா” என்று சொல்லிவிட்டு மேலே பார்க்க, அவள் “என்ன பிளாஷ்பேக் ஆ..” என்று கேட்டு விட்டு, “நீ தான் இதை சொல்லாமல் இருந்த இப்போ நீயும் ஸ்டார்ட் பண்ணிட்டியா சொல்லும்… சொல்லித்தொலையும்.” என்றதும் அவன் முந்தைய நாள் இரவு நடந்ததை கூறினான்.

துருவை ஒருவன் தாக்க வந்ததற்கு பிறகு, உத்ரா, அர்ஜுனையும், அஜய்யும் வரசொல்லிவிட்டாள்.

அப்பொழுதே போலீசிற்கு தகவல் சொல்லி ஒரு மினி கூட்டமே அங்கு நடந்தது. அனைவரும் நடந்ததில் அதிர்ச்சியாகி விட்டு, பின் அதையே காமெடியாக பேசிக்கொண்டிருக்க, அஜய் தான் சுஜி பேசிய வார்த்தைகளின் தாக்கத்திலேயே இருந்தான்.

அவளை ரொம்பவும் வருத்தி விட்டோமே என்று இலக்கின்றி சிந்தித்துக் கொண்டிருந்தவனை உத்ரா, “டேய் உனக்கு என்னடா ஆச்சு..” என்றவள், துருவிடம் அவனுக்கு நடக்க இருந்த விபத்தை பற்றி சொன்னாள்.

அதனை கேட்டவன் அமைதியாக யோசிக்க, உத்ரா, “உனக்கு என்ன தான் பங்கு பிரச்சனை. சுஜியை போய் பார்த்தியா. உன் மனசுல என்னதான் இருக்கு” என்று கேட்டவளுக்கு அவனும் அவளை காதலிக்கிறானா என்றே தெரியவில்லை…

அஜய், “எனக்கு சுஜி வேணும். நான் அவளை லவ் பண்றேன். அதை நான் இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என் முட்டாள்தனத்துனால தேவையில்லாத பிரச்சனை” என்று கண் கலங்க அங்கு நடந்ததையும், தன் கவனக்குறைவால் தான் விபத்து நடந்ததையும் கூறினான்.

அர்ஜுனும் விதுனும், “இது உனக்கு இப்போதான் தெரியுதாக்கும்” என்ற ரீதியில் முறைத்தனர். உத்ராவுக்கு தான் பெரும் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மனதில் அவள் அவனையே மறக்கும் அளவுக்கு ஆழமாக இருப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

பின், “என்கூடையே தானடா இருக்கீங்க அதெப்படிடா எனக்கே தெரியாம கம்மிட் ஆகுறீங்க…” என்று சந்தேகமாய் கேட்க,

விது கலகலவென சிரித்துக்கொண்டு உதியிடம், “உதி அவனுங்க கம்மிட் ஆனது உனக்கு தெரியலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் நீ கம்மிட் ஆனதே உனக்கு தெரியல பார்த்தியா அங்க நிக்கிற நீ ” என்று கலாய்க்க, உத்ரா அவனை வெட்டவா குத்தவா ரீதியில் வெறித்தனமாய் முறைத்தாள்.

இதை கேட்ட அர்ஜுன், அஜய்க்குமே சிரிப்பு வந்து விட, துருவ் தான், “எதை எதை கிண்டல் பண்றதுன்னு விவஸ்தையே இல்லை இவனுங்களுக்கு…” என்று அவர்களை அடக்கினான்.

பின் துருவின் திட்டப்படி, முதலில் சந்துருவிடம் சென்று உத்ரா, சுஜி, அஜய் காதலை பற்றிக் கூற, அவன்,

“இப்போ இதெல்லாம் ரொம்ப சகஜம். இதெல்லாம் ஒரு விஷயமா” என்று சாதாரணமாய் கூறினான்.

பின், அவள் ஸ்டைலில் அவனை மிரட்டி, “இப்பொழுது மட்டும் நீ கிளம்பவில்லை என்றால், இனி ஜென்மத்துக்கும் நீ ஃபாரின் போகமுடியாது” என்று அவனை நடுங்க வைத்தாள். வெளிநாட்டு மோகம் கொண்டவனோ அங்கிருந்து உடனே கிளம்பி விட்டான்.

பிறகு அர்ஜுன் சென்று, சுஜியின் பெற்றோரிடம் பேச, அவளின் அம்மா கூட ஒப்புக்கொண்டார். ஆனால் அவளின் அப்பா மசியவே இல்லை.

அர்ஜுனும், அஜயும்  சலிப்பாக “இவர் என்னடா இப்படி பேசுறாரு. இவரை கொஞ்சமாவது சரி பண்ணுனா தான் நம்ம வீட்ல பேசமுடியும்” என்று துருவிடம் புலம்ப, அவன் வீடியோ கால் வரச்சொன்னான்.

பின், அவளின் அப்பாவிடம் அவனை பற்றி அறிமுகப்படுத்தி விட்டு, பேச ஆரம்பிக்க, அவர் அவன் சொல்வதை காதில் வாங்கவே இல்லை.

துருவுக்கும் பொறுமைக்கும் தான் சம்பந்தமே இல்லையே. சட்டென்று கோபமாக, “நீங்களா ஒத்துக்கிட்டா உங்க சம்மதத்தோட கல்யாணம் நடக்கும். இல்லைன்னா நீங்க இல்லாமையே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்…” என்று அழுத்தமாக கூற, அவர் தான் இவனின் தீவிரத்தை கண்டு அதிர்ந்து விட்டார்.

அதன் பின், என்னையவே எப்படி மிரட்டலாம் என்று சுஜியிடம் கோபப்பட்டு, இப்பொழுது பிடிவாதமாய் இருக்கிறார் என்று அவன் சொல்லி முடிக்க, எவ்வளவு வில்லத்தனம் பார்த்துருக்குதுங்க.. என்று தலையில் கை வைத்தாள்.

அந்நேரம் உத்ராவிடம் இருந்து போன் வந்ததில் இருவரும் அலுவலகம் விரைந்தனர்.

அங்கு அவர்களின் குடோனில், துருவின் ஆட்கள், அந்த வண்டி ஆசாமியை பிடித்து வைத்திருக்க  அங்கு சென்று அவன் யாரென்று பார்த்தவர்கள் அதிர்ந்து விட்டனர்.

அவன் உத்ராவின் பி.ஏ ராஜா.

உத்ரா கடுங்கோபத்துடன் அவனை அடிக்க, அவன் “மேம் சாரி மேம் நான் வேணும்னு பண்ணல மேம்…” என்று கெஞ்ச,

அவள் “யூ சீட்… என் கூட இருந்துகிட்டு எனக்கே குழி பறிக்கிறயா.” என்று மீண்டும் அவனை பளாரென அறைந்தாள்.

வீடியோ காலில் இவர்களைப் பார்த்து கொண்டிருந்த துருவ் “உத்ரா” என்று கண்டிக்கும் குரலில் கூறி விட்டு, ராஜாவிடம், “எதுக்கு இப்படி பண்ணுன…?”என்று கேட்க, அவன், அமைதியாய் இருந்தான்.

பின், மற்றவர்கள் அவனை போட்டு புரட்டி எடுக்கவும் தான், அவன் “சொல்லிடறேன் மேம்… ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி என் வைஃப் அ ஒருத்தன் கடத்தி வச்சுக்கிட்டு, துருவ் சாரை கொலை பண்ணனும்னு சொன்னான். அதுவும், என் மூலமா பண்ண வச்சு என்னை நீங்க தான் பண்ண வச்சீங்கன்னு உங்கள் மேல பலி போட சொன்னாங்க. என் வைஃப் இன்னும் அவங்ககிட்ட தான் மேம் இருக்காள்.

இதை நான் பண்ணலைன்னா. அவளை கொன்னுடுவேன்னு மிரட்டுனானுங்க. இப்போ கூட என்னை பார்த்துகிட்டு தான் இருப்பாங்க. ப்ளீஸ் மேம் எனக்கு என் வைஃப் வேணும்” என்று அழுது கரைந்தான்.

அர்ஜுன் தான் விதுவிடம், “பாவம்டா இவன்,  இவளுக்கு பி.ஏவா இருந்துகிட்டு, நிம்மதியா பொண்டாட்டி கூட குடும்பம் நடத்த முடியல…” என்று நக்கலடிக்க, அஜய் “அவனே பொண்டாட்டியை நினைச்சு ஃபீலிங்ல இருக்கான் ஏண்டா” என்று முறைத்தான்.

விதுவோ,”சிம்பிள் பங்கு… உனக்கு கல்யாணம் ஆகாம இருக்கேன்னு கவலை. அவனுக்கு கல்யாணம் ஆகியும் லவ் பண்ண விட மாட்டுறாங்களேன்னு கவலை.” என்று கேலி செய்தான்.

பின் உதி, ” யாரு இதெல்லம் பண்ண சொன்னது. உன் வைஃப இப்போ எங்க வச்சுருக்காங்கன்னு தெரியுமா” என்று அவனுக்கு தண்ணீரை கொடுத்து கொண்டு கேட்க, அவன் “தெரியாது” என்று தலையாட்டி விட்டு,

ஆனால் “இதெல்லாம் யாரு பண்றான்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு மேம்…” என்றான்.

உத்ரா யாரென்று பார்க்க, அவன் “கரண் பிரகாஷ்” என்று சொன்னான்.

துருவ் சொன்ன அதே பெயரை அவனும் சொல்ல, அவள் துருவை அவன் யாரென்று பார்த்தாள்.

துருவ் யோசனையுடன் புருவத்தை சுருக்கி கொண்டு இருக்க,

சுஜி தான், “அய்யோயோ ப்ரோ பிளாஷ்பேக் சொல்லபோறீங்களா… நீங்க பத்து எபிசோட்ல இழுப்பிப்பீங்க” என்று நக்கலடிக்க,

அவன் அவளை முறைத்து விட்டு, “அவர் என் பிசினெஸ் எனிமி. அது போக, அவரு என்னை விட ரொம்ப சீனியர். அனுபவஸ்தர்.

ஆனால் சரியான குரங்கு புத்தி… முதல்ல, நானும் எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன்னு மரியாதை தான் குடுத்தேன். ஆனால் அவன், ஜெயிக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுவான்னு தெரிஞ்சதும் ஆஸ்திரேலியால அவன் பிசினஸை நான் முடக்கிட்டேன்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்த ஆளு இங்க வந்துட்டாரு. இப்போ நான் இந்தியா வந்தது தெரிஞ்சதும் என்னை பழி தீர்த்துக்க நினைக்கிறான்.” என்று சொல்ல,

உத்ரா, “அவன் எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும்… அவனுக்கு செம்மதியா இருக்கு.” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற,

துருவ் “ப்ச் உதி முதல்ல ராஜாவோட வைஃப எப்படி வெளிய கொண்டு வரதுன்னு பாரு..” என்று சொல்லிவிட்டு,

அவன் “இப்போ இங்க சாதாரண ஆள் இல்லை. ஆளுங்கட்சி மினிஸ்டர். கிரிமினல் பொலிட்டீஷியன்” என்று சொல்ல,

மற்றவர்கள் “அப்போ இவ்வளவு நேரமா நீ மினிஸ்டர் கரண் பிரகாஷ் பத்தியா பேசிகிட்டு இருந்த…” என்று அதிர்ந்து பார்த்தனர்..

விதுனும் அஜயும், “அடியாளுங்க கிட்ட அடி வாங்குனது பத்தாதுன்னு அரசியல்வாதிங்ககிட்டயும் அடி வாங்கணுமா…” என்று புலம்ப,

உத்ரா, துருவிடம், “அவன் பாட்டுக்கு ஆஸ்திரேலியால இருந்துருப்பான். அவனை அடிச்சு இங்க வர வச்சு, பெரிய ஆளா ஆக்கிவிட்ட பெருமை உன்னையே தான் சேரும் துருவ்” என்று கிண்டலடிக்க,

அவன் கோபமாக “எல்லாரும் கொஞ்சம் சீரியஸ் ஆ பேசுறீங்களா…” என்று அதட்டி விட்டு,

“முதல்ல, ராஜாவோட வைஃப ரெஸ்கியூ பண்ணனும்…” என்றவன் அஜய் சுஜியிடம் “நீங்க அந்த கரணோட ஆக்டிவிடீஸ் வாட்ச் பண்ணுங்க…” என்றான்.

விதுன் அர்ஜுனிடம், “ராஜாவோட போன் கால் ஹிஸ்டரி எல்லாத்தையும் செக் பண்ணுங்க… அவனுக்கு வந்த நம்பர்ஸ் எல்லாத்தையும் ட்ரேக் பண்ணுங்க. இப்போ ராஜா நம்ம கிட்ட மாட்டிகிட்டான்னு தெரிஞ்சதும், அந்த பொண்ணை கொலை பண்ண தான் பார்ப்பாங்க. நமக்கு டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு.” என்று சொல்லிவிட்டு, 

உத்ராவிடம், “ராஜா அங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் நான் சொல்ற இடத்துக்கு வா. நான் அங்க வந்துடறேன்” என்றான்.

உத்ரா, “விளையாடறியா… உன்னால எப்படி நடக்க முடியும்? நாங்க பார்த்துக்குறோம்” என்று சொல்ல சொல்ல அவன் கேட்கவே இல்லை.

உத்ராதான், அவனைக் கண்டு பல்லைக்கடித்தாள், அங்கு நடக்க இருக்கும் சரித்திரத்தில் இடம் பொறிக்கவிருக்கும் சம்பவத்தை அறியாமல்…

உறைதல் தொடரும்…
-மேகா
 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
50
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.