Loading

கையில் போடப்பட்ட கட்டுடன் மருத்துவமனை மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் மைத்ரேயன்.

“டிஸ்சார்ஜ் ஆகிடலாம் ஷைலா. சின்னக் காயம் தான்” என்றவனை நிமிர்ந்து முறைத்தவள், “டிஸ்சார்ஜ் ஆகி அடுத்த லாரிக்குள்ள விட போறியா? ஒழுங்கா ரெஸ்ட் எடு!” எனக் கடிந்தாள்.

அவள் முகம் சிடுசிடுவென இருந்ததோடு லேசான வாடலுடன் காணப்பட்டது.

சற்று தள்ளி நின்று அவனுக்காக ஆரஞ்சு சாறு தயாரித்துக் கொண்டிருந்தவளை நிதானமாக ஏறிட்டது அவன் விழிகள்.

சட்டென அவள் கையைப் பற்றி அருகில் இழுத்ததில், அவள் தடுமாறி அவன் மீதே விழச் சென்று பின் நிதானித்தாள்.

“ஏன்டா இப்படி புடிச்சு இழுக்கிற?” எனக் கேட்டாலும் லேசான தடுமாற்றம் அவன் நெருக்கத்தில்.

“இன்னும் என்மேல கோபமா?” மெல்லிய குரலில் மைத்ரேயன் கேட்க, அவளிடம் பதில் இல்லை.

“அம்மா பேசுறதை பெருசா எடுத்துக்காத ஷைலா”

அதில் அவனைத் தீப்பார்வை வீசினாள்.

“அவங்க பேசுறது தப்பு தான். ஆனா அவங்ககிட்ட பேசுறது வேஸ்ட். அவங்களுக்கும் அப்பாவுக்கும் பிசினஸ் தான் பர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ். ஃப்ராங்கா சொல்லனும்னா உங்க ஸ்டேட்டஸ் பார்த்து தான் உங்ககிட்டயாவது என்னைப் பழக விட்டாங்க. இல்லன்னா தனியாவே இருந்துருப்பேன் என் லைஃப் முழுக்க… இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும் நம்ம தனி வீடு பார்த்து போய்டலாம். எனக்காக கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்!” எனக் கெஞ்சுதலுடன் பார்த்தான்.

அவனது பெற்றோரின் குணம் பற்றி ஷைலேந்தரிக்கும் தெரியும் தான். ஆனாலும் ஒரு வித ஆதங்கம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்க, “பிளான் பண்ணுன படி உனக்கும் விஸ்வூவுக்கும் மேரேஜ் நடந்துருந்தா அவங்களும் சமாதானம் ஆகிருப்பாங்க. நீயும் பேச விட்டு வேடிக்கைப் பார்த்திருக்க மாட்டீல?” விழி இடுங்க அவள் கேள்வி எழுப்பியதில் மைத்ரேயனுக்கு கோபம் பீறிட்டு எழுந்தது.

அவன் பிடித்திருந்த கரத்தை மேலும் அழுத்தியவன், “வாயை மூடு ஷைலா. உனக்குத் தெரியுமா நான் அவளைக் கல்யாணம் பண்ணப் போனேன்னு? உனக்கு தான் என் மேல இன்டரஸ்ட் சுத்தமா இல்ல. ஊர்ல இருக்குற பசங்களை எல்லாம் சைட் அடிச்ச உனக்கு உன் முன்னாடி குத்துக் கல்லு மாதிரி இருக்குற என் மூஞ்சி எல்லாம் ரசிக்கிற மாதிரி தெரியல. பட் நான் உன்னைத் தான் ரசிச்சேன். உன்னை தான் விரும்புனேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்பட்டேன். நான் உனக்கு வெறும் ஆப்ஷன் தான். ஆனா எனக்கு நீ என்னோட அன்கண்டிஷனல் லவ்!” என காதலைக் கூட கனல் வார்த்தைகளுடன் கூறி முடித்தவனைக் கண்டு சிலையானாள்.

அந்நேரம் விஸ்வயுகாவும் நந்தேஷும் வந்து விட்டதில், அவளது கையை விடுவித்தான்.

“மைதா என்னடா ஆச்சு? எவன்டா இடிச்சது? லாரி நம்பர் பார்த்தியா?” என இருவரும் மாறி மாறி கேள்வி எழுப்ப, “இல்ல விஸ்வூ பார்க்கல…” என்றான்.

“எக்ஸ்சாக்ட்டா எங்க நடந்துச்சு?” விஸ்வயுகாவின் கேள்விக்கு விடையளித்தான்.

விறுவிறுவென வெளியில் சென்றவள் யுக்தா சாகித்யனை அழைத்தாள்.

“எஸ் ஏஞ்சல்!” துள்ளலுடன் யுக்தா கேட்க,

நடந்ததை எடுத்துரைத்தவள், “மைத்ராவை இடிச்சது யாருன்னு எனக்குத் தெரியணும் யுக்தா” என்றாள் கட்டளையாக.

மெல்லச் சிரித்தவன், “நான் கவர்மெண்ட் எம்பிளாயி ஏஞ்சல். விட்டா நீ கொஞ்ச கொஞ்சமா உன் குடும்பத்துக்கு சேவை செய்ற அடியாளா மாத்திடுவ போல. கம்பளைண்ட் குடு. பாக்குறேன்” என விட்டேத்தியாகப் பதில் அளித்து விட்டு போனை வைக்க, பற்களைக் கடித்தாள் அவள்.

நேராக அவனைக் காண அலுவலகமே சென்று விட்டவள் யுக்தாவின் சட்டையைப் பிடித்து, “என்னடா ஓவரா பண்ற. மத்த நேரமெல்லாம் உரசிட்டு உருகிட்டு இருக்கத் தெரியுது. ஏன் கவர்மெண்ட்க்கு மட்டும் தான் வேலை பாப்பியா?” என்றாள் அதிகாரமாக.

அவள் கையை எடுத்து விட்டவன், “கூல் ஏஞ்சல். அந்த லாரி நம்பரை ட்ரேஸ் அவுட் பண்ணியாச்சு. அது ஃபேக் நம்பர். ட்ரைவர் எஸ்கேப்ட். உனக்காக, எக்ஸ்டரா ரெண்டு ஆபிசர அனுப்பி தேட சொல்லிருக்கேன். சிபிஐ ரேஞ்சுக்கு சீரியல் கில்லர் வேலை குடுத்தா பரவாயில்ல, லாரிக்காரனை கண்டுபிடிக்கலாம் சொன்னா என் வேலைக்கு என்ன மரியாதை… ம்ம்” என்றபடி அவளை இடையோடு இழுத்து நெஞ்சில் முட்டிக்கொண்டான்.

தனக்காக முயற்சி எடுத்திருக்கிறான் என்று தெரிந்ததுமே எழுந்த கோபம் அப்படியே மட்டுப்பட்டது விஸ்வயுகாவிற்கு.

அவனோ அவளது செவிமடலில் மூச்சுக்காற்றை மோத விட்டு, “உனக்காக இவ்ளோ இறங்கி வேலை பார்க்குற எனக்கு என்ன கிடைக்கும் ஏஞ்சல்?: என்றான் கிசுகிசுப்பாக.

அவனைத் தள்ளியவள், “உனக்கு ப்ரோமோஷன் குடுக்க ஏற்பாடு பண்ணிடுறேன்…” என திமிராய் பதிலளிக்க,

“ப்ச், ஜாப்ல ப்ரோமோஷன் எல்லாம் நானே வாங்கிடுவேன். வேற ப்ரோமோஷன் தர்றது!” என்றவாறே அவளை நெருங்கினான்.

“இதென்ன சிபிஐ ஆபிஸா. இல்லை உன் வீடா… இடம் பொருள் ஏவல் பார்க்காம வழிஞ்சுத் தள்ளுற? போடா அந்தப் பக்கம்” என அவனது நெஞ்சில் கை வைத்துத் தள்ளியதில்,

“லவ் வந்தா அதை இடம் பார்க்காம கொட்டிடனும் ஏஞ்சல்…” என்றான் உருக்கமாக.

“போடா சைக்கோ!” அவன் கன்னத்தில் மெல்லமாக அடித்து விட்டு அவள் மைத்ரேயனைப் பார்க்க கிளம்ப, அவள் சென்ற திசையை இளக்காரமாகப் பார்த்தவன், யாருக்கோ போன் செய்தான்.

எதிர்முனையில் “சார் லாரியோட நாங்க தலைமறைவாகிட்டோம். நீங்க சொல்றப்ப வெளில வர்றோம் சார்” என்றிட,

“ம்ம்… இன்னொரு ஆளையும் நீங்க அடிச்சுத் தூக்கணுமே! லாரி வேணாம். சின்ன வெஹிக்கிலா எடுத்துக்கோங்க” என்று யுக்தா விளக்கம் கொடுத்தான்.

“மைத்ரேயனை தூக்குன மாதிரி போதுமா, இல்ல ஹெவி டேமேஜ் குடுக்கணுமா சார்?”

“கொஞ்சம் ஹெவியா குடுக்கலாம். தப்பில்ல!”

“யாரை சார் தூக்க?”

“ம்ம்ம்ம்ம்… யார தூக்கலாம். ஷைலுவா நந்துவா?” என சிந்தித்தான் தீவிரமாக.

பின் “சரி பொண்ணைத் தூக்குனா சென்டியா பீல் வரும். பயமும் வரும். சோ ஷைலுவைத் தூக்கிடு” என்று பணித்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

மைத்ரேயனைப் பார்க்க இரு குடும்பத்தாரும் கூடி விட, சிவகாமி “காரை பார்த்து ஓட்டுறது இல்லையா மைத்ரா” என்று அதட்டினார்.

அவர்களிடம் உண்மையைக் கூறி பதற்றப்பட வைக்க விரும்பாமல், “அவன் ஹார்ன் அடிக்கல ஆண்ட்டி. அதான் தெரியல” என்று சமாளித்தான்.

சௌந்தர் அவன் தலையை தடவிக் கொடுத்து, “வேற ஒன்னும் ப்ராபளம் இல்லைல” என்று அன்பாய் கேட்க, மெதுவாய் முறுவலித்தவன் “இல்ல அங்கிள். தேவை இல்லாம எல்லாரும் பேனிக் ஆகாதீங்க. காலைல நானே டிஸ்சார்ஜ் ஆகிடுவேன். கிளம்புங்க எல்லாரும். நீங்கள்லாம் சுத்தி நிக்கிறதை பார்த்தா தான் எனக்குப் பயமா இருக்கு” என்று அச்சம் கொள்வது போல நடித்தான்.

நந்தேஷ் நண்பனைப் புரிந்து, “அதான் நாங்க இருக்கோம்ல. மார்னிங் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றோம் ஆண்ட்டி. நீங்க போங்க” என்று அகிலாவையும் அனுப்ப முயன்றான்.

இங்கோ மருந்தகத்தில் ஷைலேந்தரி அவனுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டிருக்க, விஸ்வயுகாவும் அவளுடன் இருந்தாள்.

எண்ணம் முழுதும் மைத்ரேயன் அவளிடம் காதலை உரைத்த கணமே நிரம்பி இருக்க, அவனிடம் தனியே பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதனால்,” விஸ்வூ நீயும் நந்துவும்கூட வீட்டுக்கு கிளம்புங்களேன். யாராச்சு ஒருத்தர் இருந்தா போதும்ல” எனக் கூற,

“உங்களை இங்க விட்டுட்டு வீட்ல போய் என்ன செய்யப் போறோம். பரவாயில்ல இருக்கோம்” என்று அவள் போனை நோண்டியபடி பதில் அளித்ததில், ‘நியூ கபில்ஸ்க்கு கொஞ்சமாவது தனிமை குடுக்குதுங்களா…’ எனத் திட்டிக்கொண்டவள், மருத்துவமனைக்கு எதிர் கடையில் சுடச்சுட பாதம் பால் செய்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

“விஸ்வூ, மைதாவுக்குப் பாதாம் பால் பிடிக்கும்ல. நீ இங்க இரு. நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்றதும் சரியென தலையசைத்தவள் அங்கே நின்று கொள்ள, ஷைலேந்தரி மட்டும் சாலையைக் கடந்து எதிர்கடைக்குச் சென்றாள்.

அதிவேகத்தில் வாகனம் வரும் நெடுஞ்சாலை அது. வெகுநேரமாகவே வேன் ஒன்று ஓரமாக நிற்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள் விஸ்வயுகா.

சரியாக ஷைலேந்தரி கிளம்பும் போது அதன் எஞ்சின் உறுமுவதைக் கண்டவளுக்கு எதுவோ சரிப்படவில்லை.

கடையை விட்டுக் கிளம்பிய ஷைலேந்தரி சாலையைக் கடக்காமல் போன் வந்ததில் பேசிக்கொண்டே நிற்க, விஸ்வயுகா யோசனையுடன் சாலையைக் கடந்தாள். அந்நேரம் அவளைப் பார்க்காமல் ஷைலேந்தரியும் சாலையைக் கடக்க, அந்த வேன் உறுமியபடி அவளை நோக்கி வந்ததில், விஸ்வயுகா ஓடிச் சென்று அவளைத் தள்ளி விட, நல்லவேளையாக வேன் சட்டென நின்று விட்டது.

“டேய் நில்லுடா” என்று விஸ்வயுகா கத்த, ஓட்டுனரோ ரிவர்ஸ் கியர் போட்டு பின்னே சென்றாலும், விஸ்வயுகா நான்கே தாவில் ஓடிச் சென்று வேனிற்குள் ஏறினாள்.

“ஏய் விஸ்வூ!” என ஷைலேந்தரியும் அவள் பின்னே செல்ல, விஸ்வயுகா ஓட்டுனரை பளாரென அறைந்தாள்.

“யாருடா நீ? எதுக்குடா அவளை அட்டாக் பண்ண வந்த?” என்று கர்ஜனையுடன் கேட்க,

அவனோ திருதிருவென விழித்தான். இலாவகமாக வேன் சாவியையும் பிடுங்கி விட்டவள், அவன் சட்டைக் காலரைப் பிடித்து தரதரவென வேனை விட்டு இறக்கினாள்.

“விஸ்வூ என்னடி செய்ற? யுக்தா சாருக்கு கால் பண்ணலாம். தேவையில்லாத பிரச்சனை வேணாம்…” என ஷைலேந்தரி மறுக்க, “என்னடி செய்வான் இவன்? உன்னை வேனை விட்டு ஏத்த பார்த்துருக்கான் சும்மா இருக்க சொல்றியா? டேய்… யாருடா உன்னை அனுப்புனா?” என மீண்டும் அந்த ஓட்டுனரை அடிக்க வர,

இம்முறை அவன் தடுத்து அவளை அடிக்கப் போனான். அவனது கையை வளைத்துப் பிடித்து ஒடிக்கச் சென்ற விஸ்வயுகா, “எவ்ளோ தைரியம் இருந்தா இடிக்க வந்ததும் இல்லாம அடிக்க வேற போவ. மவனே இப்ப நீ உண்மையை சொல்லல. வேன் ஓட்ட கை இருக்காது…” என முகம் சிவக்க மிரட்டியவள் அவன் கையை வளைத்துக் கொண்டே செல்ல அவனோ வலியில் அலறினான்.

ஷைலேந்தரி அவசரமாக யுக்தாவிற்கு போன் செய்து விவரம் கூற, யுக்தா சில நிமிடங்களில் அங்கு வந்து விட்டான்.

அது வரைக்கும் வேன் ஓட்டுநர் வாயைத் திறப்பேனா என்று விட, யுக்தா வந்த பிறகே விஸ்வயுகாவை அமைதியாக்கினான்.

“ஏஞ்சல் ரிலாக்ஸ். லீவ் ஹிம்!” என்ற பிறகே அவன் கையை விட்டாள்.

ஓட்டுனரின் கையில் உண்டியல் உடைந்த சத்தம் கேட்க, “சார்” என்று யுக்தாவிடம் ஏதோ பேச வரும்போதே அவன் உண்மையை உளறிவிடக்கூடாதென்று ஓட்டுனரை யுக்தாவே அறைந்தான்.

“அருண், இவனை கஸ்டடில வச்சு விசாரி…” என்று உடனே அருணை வைத்து அவனை அப்புறப்படுத்த இன்னும் விஸ்வயுகாவின் கோபம் தீர்ந்தபாடில்லை.

“அவன் எதுக்கு இவள் மேல வேனை ஏத்த வந்தான்னு தெரியணும் யுக்தா. அவனை சுடுவியோ கொல்லுவியோ எனக்கு தகவல் வந்தே ஆகணும்” என்று தீயாய் காய்ந்தாள்.

“ஓகே டி. நான் பாத்துக்குறேன். ரிலாக்ஸ். என் ஸ்டைல்ல விசாரிச்சு அவன் வாய்ல இருந்து உண்மையை வரவைக்கிறேன். நீங்க உள்ள போங்க…” என்று இருவரையும் மருத்துவமனைக்குள் அனுப்பியவன் நேராக சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றான்.

அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த ஓட்டுனரை ஓங்கி எத்தியவன், “ஒரு வேலையை உருப்படியா செய்யத் தெரியாதா? உன்னால என் ஒட்டு மொத்த பிளானும் பிளாப் ஆகியிருக்கும். இடியட். என் கண்ணு முன்னாடி நிக்காத. நான் சொல்றவரை எங்கயாவது போய் தலைமறைவா இரு போ!” என்று உச்சஸ்தாதியில் கத்தி அவனை பயந்து ஓட விட்டான்.

“ச்சை!” காலைத் தரையில் உதைத்தவன், “அருண்” என உறும, அடுத்த நொடி அருண் யுக்தாவின் முன் நின்றான்.

“டோன்ட் வேஸ்ட் டைம். கூடிய சீக்கிரம் சிவகாமியோட மொத்த குடும்பமும் என் என்கொயரிக்கு இருக்கணும். என்ன செய்யலாம்?” என கண்ணில் அனல் பறக்க யுக்தா கேட்க,

“சார்… பட் இட்ஸ் ஹை ரிஸ்க். தேவையான ஆதாரம் இல்லாம அவங்களைத் தொட கூட முடியாது. தலைமுறை தலைமுறையா பணத்துல புரளுற குடும்பம். பொலிட்டிகல் சப்போர்ட்டும் இருக்கு” என்றதும் இகழ்ச்சியாய் இதழ் விரித்தான்.

“ஹா… அவள் கட்ட நினைக்கிற 10 ஸ்டார் ஹோட்டலை இத்தனை வருஷமா கட்ட விடாம செய்றேனே. அப்ப எந்த பொலிட்டிகல் பவர் அவளைக் காப்பாத்துச்சு. அதே மாதிரி அவளை யாருமே காப்பாத்த விடாத மாதிரி செய்வேன். எவிடன்ஸ்! தட் எவிடன்ஸ்…” என பேசியபடி அங்கும் இங்கும் சில நொடிகள் வெறிப்பிடித்தவன் போல அலைந்தவன், “வாங்குறேன்… வாங்க வேண்டியவகிட்டயே வாங்குறேன்…” என்று சபதம் எடுத்துக்கொண்டான்.

குடும்பத்தாரை அனுப்பி விட்டு மருந்தின் வீரியத்தில் மைத்ரேயன் கண் அயர, நந்தேஷும் மடிக்கணினியுடன் அவன் அருகில் அமர்ந்தான்.

அவர்களை குழப்ப விரும்பாமல் இரு பெண்களும் நடந்த விஷயத்தைக் கூறாமல் அமைதி காக்க, மறுநாள் பொழுது பல அதிர்வுகளுடன் விடிந்தது.

நந்தேஷும் விஸ்வயுகாவும் மட்டும் செய்து வைத்த ஏற்பாடுகளை பார்வையிடும் பொருட்டு குறிஞ்சியின் திருமணத்திற்குச் சென்றனர்.

நந்தேஷ் தான், “ஏன் என்னை வச்சு விளையாடுனான்னு அந்தப் பொண்ணுகிட்ட கேட்டே ஆகணும் விஸ்வூ” எனப் பரிதாபமாகக் கூற, “அவளுக்கு கல்யாணம் முடியவும் கேட்டுக்கலாம். முதல்ல எந்த வித அசம்பாவிதமமும் நடக்கக்கூடாது…” எனப் புலம்பியபடியே மண்டபத்திற்குச் சென்றாள்.

அங்கு குறிஞ்சி மணப்பெண் அலங்காரத்தில் மின்ன, “காங்கிரேட்ஸ் குறிஞ்சி” எனக் கையில் பரிசுப்பொருளுடன் வந்து நின்றான் யுக்தா சாகித்யன். அவனைக் கண்டதும் முகம் மலர, “தேங்க் யூ யுக்தா…” எனப் பரிசை வாங்கியவள், ஏதோ பேச வரும்முன் வெளியில் கதறல் சத்தம் கேட்டதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெளியில் சென்றனர்.

மணமகனின் அறையில் உறவினர்கள் சுற்றி இருக்க, விஸ்வயுகாவும் நந்தேஷும் அதிர்ந்த முகத்துடன் நின்றிருந்தனர்.

மணமகனான விக்ரம் உயிரற்ற விழிகளை விட்டத்தில் புகுத்தி மல்லாந்து கிடக்க, உடல் சில்லிட்டு இருந்தது.

அவனைப் பார்த்ததும் விஸ்வயுகாவிற்கு பயத்தில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. குறிஞ்சியும் யுக்தாவும் அவசரமாக அங்கு வந்து உறைந்து நின்றனர்.

குறிஞ்சிக்கு கண் கலங்க ஆயத்தமாக, யுக்தா துரிதமாக தனது வாக்கி டாக்கியில் தனது குழுவினருக்கு தகவல் அனுப்பி மண்டபத்தைச் சுற்றி வளைக்கக் கூறினான்.

பின் குறிஞ்சியைப் பார்த்தவன், அவள் அதிர்வு மாறாமல் நின்றதில் அவளது கையைப் பற்றி அழுத்தினான்.

விஸ்வயுகா அதற்கு மேல் அங்கு நிற்க இயலாமல் திரும்பப் போக, சரியாக அவன் குறிஞ்சியின் கையைப் பிடித்து இருப்பதைப் பார்த்து விட்டாள்.

சட்டென மனதினுள் ஒரு தீ எரிந்தது.

குறிஞ்சியோ “யுக்தா… விக்… விக்ரம்…” என குரல் நடுங்க கூற, அவனுக்கும் என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல், “ப்ளீஸ் பீ பிரேவ் குறிஞ்சி…” என்று அவள் தோளைத் தட்டிக்கொடுக்க, இந்தக் காட்சியை எதேச்சியாகத் திரும்பிய நந்தேஷும் பார்த்து விட்டான்.

கையை இறுக்கி மூடி எழுந்த கண்மண் தெரியாத கோபத்தை அடக்கிய விஸ்வயுகா, விறுவிறுவென அவனருகில் சென்று குறிஞ்சியின் தோள்மீதிருந்த ஆடவனின் கையை சப்பென அடித்து விலக்கினாள்.

பாவையின் அனல் மூச்சுக்காற்றில் விக்ரமின் உடலே தீப்பற்றி இருக்கும்… கூடவே யுக்தாவையும் பொசுக்கியவள் “வா!” எனத் தரதரவென இழுத்துச் சென்றாள்.

யுக்தா ஒன்றும் புரியாமல் அவளுடன் செல்ல, குறிஞ்சியோ கண்ணில் தேங்கி நின்ற நீருடன் பேந்த பேந்த விழித்திருந்தாள்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
130
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுக்தா மாட்டினார்?