200 views

அத்தியாயம் 28

அடுத்த நாளே கல்யாணம் செலவைப் பற்றி சிவசங்கரியிடம் கூறிவிட்டாள் இளந்தளிர். 

“கோவர்த்தனன் தான் கண்டிஷனா சொல்லிட்டார் அம்மா” 

“அதுக்காக விட்ற முடியுமா இளா? நாமளே செலவைப் பாத்துக்கலாம்” என்று அன்னை கூறவும், 

“நான் சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன். இனிமேல் நீங்க அத்தைகிட்ட துன் பேசியாகனும்” என்றாள் மகள். 

“சுமதி கிட்ட பேசுறேன்” என்று அவருக்குக் கால் செய்தார். 

“சொல்லு சிவா” 

” சுமதி! கல்யாணச் செலவு முழுசும் நான் பார்த்துக்கிறேனே?” என்றார் சிவசங்கரி தன் தோழியிடம். 

“இதென்ன இப்படி சொல்ற நீ? அதெல்லாம் முடியாது சிவா.நீ பொண்ணுக்கு செலவுப் பண்ணாம இருக்கோமேன்னு ஃபீல் பண்ணுவன்னு தான் பாதி செலவு சொல்லியிருக்கோம்.நீ இப்படி பேசினா முழு செலவையும் நாங்கப் பார்த்துப்போம்” என்று கறாராக கூறியவரிடம், 

“என்ன சுமதி? இப்படி பேசற?” என்றார் சிவசங்கரி. 

“பின்னே என்ன? நான் சொல்றதுக்கு நீ சரின்னு சொல்லு” 

“அதெப்படி சுமதி?” தயங்கியவரிடம், 

“நாம எப்பவோ ஒரே குடும்பம் ஆகிட்டோம் சிவா. அதனால் தான் எல்லாத்தையும் எல்லாரும் சரி சமமாகப் பிரிச்சு செய்வோம்ன்னு சொன்னேன். நீ அதுக்கு ஒத்து வர மாட்றியே?” என்றார் சுமதி. 

“அச்சோ சுமதி… ! நீ சொல்றதையே கேட்கிறேன்” என்று சமாதானம் செய்தார். 

“சிவா புரிஞ்சுக்கோ. நாம ஒன்றாக சேர்ந்து தான் எல்லாமே பண்ணனும்.பண விஷயமும் அப்படியே நடந்தால் நல்லா இருக்கும்” என்றார். 

“சரி சுமதி.நீ சொல்றதைக் கேட்டுக்கிறேன்” என்று சிவசங்கரி கூறி விட்டார். 

நிச்சயத்தன்று செய்ய வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் இனிதே நடந்து முடிந்தது. 

நிச்சயத்திற்கு முதல் நாள் இரவு இளந்தளிர், 

“நாளைக்கு நிச்சயம் கோவர்த்தனன்.எவ்ளோ ஹேப்பியான விஷயம்ல ” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தாள். 

“ஆமாம் தளிர். காலையில் சீக்கிரம் ரெடியாகனும்ல. நீங்கப் போய்த் தூங்குங்க” என்றான் கோவர்த்தனன். 

“உங்களுக்கு மெசேஜ் பண்றதுக்கு முன்னாடி தான் மெஹந்தி வச்சுட்டு, காய்ஞ்சதும் , கழுவிட்டு வந்தேன். இன்னும் சாப்பிடல” என்றதும், 

“அப்போ போய்ச் சாப்பிடுங்க இளா” என்றான் அக்கறையாக. 

“இருக்கட்டும்.ஒரு நாள் லேட்டா சாப்பிட்றேனே?” எனும் போதே, 

“நோ இளா! ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க”

சுபாஷினி அங்கு வந்து, 

“அக்கா! அம்மா சாப்பிடக் கூப்பிட்றாங்க. வாங்க” என்று அழைத்து விட்டாள். 

குறுஞ்செய்தியிலேயே, 

“சுபா வந்துக் கூப்பிட்றாங்க. நான் போய்ச் சாப்பிட்டுத் தூங்குறேன். நாளைக்குப் பார்க்கலாம். குட் நைட்” 

சுபாவுடன் சாப்பிடச் சென்றாள். 

விடியற்காலையில், விழித்தெழுந்த அக்காவின் கைகளைப் பார்த்தாள் சுபாஷினி. 

“வாவ் அக்கா! மெஹந்தி சூப்பரா சிவந்து இருக்கு” என்று அவளிடம் காட்டினாள். 

“ஆமா சுபா. உனக்கும் நல்லா சிவந்து இருக்குப் பாரு” என்று தங்கையின் கைகளையும் பார்வையிட்டாள் இளந்தளிர். 

“இப்போ தான் சிகப்பா இருக்கு அக்கா” 

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, 

“பியூட்டிஷியன் வந்துருவாங்க இளா.போய்க் குளிச்சிட்டு வா. சுபா நீயும் தான்” என்று மகள்களிடம் கூறினார் சிவசங்கரி. 

அவர்கள் குளித்து விட்டு வருவதற்குள், உடுத்தத் தேவையான துணிகளையும், அணிமணிகளையும் கொண்டு வந்து வைத்தார். 

காலைச் சமையல் மட்டும் மூவருக்குமாக சமைக்க நினைத்தவர், துரிதமாகச் செயல்பட்டு, இட்லி, சட்னி மற்றும் சாம்பார் செய்ய ஆரம்பித்தார். 

இளந்தளிர் தலைக்குக் குளித்து விட்டு, இரவு உடை ஒன்றை எடுத்து அணிந்திருந்தாள். சுபாஷினியும் வீட்டிலஇவீட்டில் உடுத்தும் உடையைத் தான் அணிந்தாள். 

அலங்காரம் செய்பவர் வருவதற்குள், 

தலையைக் காய வைத்தாள் இளந்தளிர். 

காலை உணவு முடிந்ததும், 

அலங்கரிப்பவர் வந்து விட்டார். 

“தலை நல்லா காய்ஞ்சிருச்சா ம்மா?” என்று கேட்டவாறே வந்தார் அந்தப் பெண். 

” காய்ஞ்சிருச்சு க்கா” – இளந்தளிர். 

கையோடு கொண்டு வந்திருந்த உபகரணங்களைக் கொண்டு அவளை அலங்கரிக்க ஆரம்பித்திருந்தார். 

சுபாஷினி மஸ்தானியை அணிந்து கொண்டு, கண்களுக்கு மட்டும் மையிட்டிருந்தாள். 

இளந்தளிர் தன்னுடைய நிச்சயத்திற்கானப் புடவையை உடுத்திக் கொண்டு, அலங்காரம் செய்து கொள்ள ஆயத்தம் ஆனாள். 

🌸🌸🌸

கோட், சூட்டை அணிந்திருந்த கோவர்த்தனனோ, தாயை அழைத்தான். 

“நான் ரெடி அம்மா” 

“அங்கே பொண்ணுக்கு அலங்காரம் நடக்குதுப்பா. நாம் எடுத்தச் சேவையைத் தட்டில் வச்சுட்டு வர்றேன். ரோகிணிக்குக் கால் பண்ணிட்டும் வர்றேன்” என்று ரோகிணிக்கு அழைத்தார். 

“கிளம்பிட்டோம் அக்கா. வந்துட்டே இருக்கோம்.சிவா அக்காகிட்ட சொல்லிடுங்க” என்று அவரும் சொல்லி விட்டு தன் மக்களுடன் கிளம்பி விட்டார் ரோகிணி. 

🌸🌸🌸

அலங்காரம் முடிந்து, காலை உணவையும் தயாரித்து வைத்து விட்டு அவர்களுக்காகக் காத்திருந்தனர். 

“ஏங்க ! நீங்கள் எப்பவும் அங்க வர்றதில்லன்னு சுமதியக்கா வருத்தப்பட்டாங்க. நிச்சயத்துக்காவது சீக்கிரம் வாங்க” என்று கணவரை விரைந்து தயாராகுமாறு கூறினார். 

பிள்ளைகள் ஒழுங்காக தாயின் பேச்சைக் கேட்டு, தயாராகியதும் விரைந்தனர் இளந்தளிரின் இல்லத்திற்கு. 

🌸🌸🌸

மிதுனாவை வாசலில் பார்த்ததும், 

” வாம்மா மிதுனா ” என்று மகளின் தோழியை வரவேற்றார் சிவசங்கரி. 

இவளும் புன்னகைத்தபடியே, 

“எப்படி ம்மா இருக்கீங்க? சுபா! ஹெல்த் சரியாகிடுச்சா?” என்று விசாரித்தவாறே உள்ளே நுழைந்தாள் மிதுனா. 

“ஹாய் மிது ! கரெக்ட் டைம் க்கு வந்துட்ட” என்று இளந்தளிர் தோழி மிதுனாவை வரவேற்றாள். 

சரியாக மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குக் கொஞ்சம் முன்னர் தான் மிதுனா வந்திருந்தாள். 

அவளுடன் புன்னகைத்த மிதுனா , 

“இளா! எல்லாமே பெர்ஃபெக்ட் ஆக இருக்கு” பாராட்டியவள், 

“அம்மாவையும்,

சுபாவையும் வாசல்லப் பார்த்தேன்.மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க எப்போ வர்றாங்க?” என்று கேட்டாள். 

“வந்துட்டே இருக்காங்க மிது. இப்போ வந்துருவாங்க”என்று அவள் கூறிக் கொண்டு 

இருக்கும் போதே, மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர். 

” வாங்க சம்பந்தி. வாங்க !” என்று அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றனர் அம்மாவும், இளைய மகளும். 

அப்படியே ரோகிணி , அவரது கணவர் சசிதரன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வந்தனர். 

அவர்களையும் உள்ளே அழைத்து, 

 அமர வைத்தனர். 

முதலில் குடிக்கப் பழச்சாறு கொடுத்து உபசரித்தனர். 

“சுபா ! அக்கா கூட போய் இருப்போமா?” என்று அவளிடம் மைதிலி கேட்கவும், 

“வா மைத்தி. அக்காவோட ஃப்ரண்ட்டும் இருக்காங்க. நாம அவங்க கூட இருக்கலாம். வா” என்று அவளுடன் சென்றாள் சுபாஷினி. 

கோவர்த்தனன், “நண்பா! உன் ஜூஸை மட்டும் ஃபோகஸ் பண்ணு. என்னோடதையும் குடிக்க நினைக்காத”என்றான் ஹரீஷிடம். 

“ஹிஹி… டேஸ்ட் நல்லா இருந்துச்சு. அதான்” என்று அசடு வழிந்தான். 

சிவசங்கரி, “இளா ரெடியாகிட்டா. நீங்க கொஞ்ச நேரம் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க மாப்பிள்ளை” என்று கோவர்த்தனனிடமும், 

“எல்லாரும் அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. அதுக்குள்ள மத்ததை ரெடி பண்ணிடலாம்” என்றார். 

சுமதியும், ரோகிணியும் வழக்கம் போல, 

“நாங்களும் வர்றோம்”

“ஏங்க ! நீங்களும், பசங்க ரெண்டு பேரும் ரூம்ல இருங்க” என்று கணவனிடம் கூறி அனுப்பியவர் சுமதியுடன் சென்றார். 

“ஹாய் மிது அக்கா! ” என்று சுபாஷினி உள்ளே சென்றாள். 

“மைதிலி ! இதுதான் மிதுனா அக்கா. இளா அக்கா கூட வொர்க் பண்றாங்க” அறிமுகப்படுத்தி வைத்தாள்.

தன்னைப் பேச விடாமல் அவர்களே அறிமுகம் செய்து கொண்டதைப் பார்த்து இளந்தளிர் சிரித்தாள். 

“ஹாய் கேர்ள்ஸ்” என்று இருவருக்கும் பொதுவான வணக்கம் வைத்தாள் மிதுனா. 

“அக்கா மேக்கப் எப்படி இருக்கு?” – சுபாஷினி. 

“செம்மயா இருக்குடா. வந்ததும் அதைத் தான் நோட் பண்ணேன்”

“கல்யாணத் தேதியை நம்மளை குறிச்சிடலாம் சுமதி” என்று தட்டை அடுக்கி வைத்தார் சிவசங்கரி. 

“சரி சிவா. ரோகிணி தட்டு அளவு கரெக்ட் ஆக இருக்கா?” – சுமதி.

  “கரெக்ட் ஆக இருக்கு அக்கா. எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சு” என்று ரோகிணி இருக்கும் தட்டுக்களை ஹாலில் கொண்டு சென்று அடுக்கினார். 

“அப்போ எல்லாரையும் கூப்பிட்றலாம்” 

சிவசங்கரி மகள்களின் அறைக்குப் போய், 

“தயாராக இருக்கும்மா. கூப்பிடும் போது வாங்க” என்று சொன்னார். 

ரோகிணி, “ஹரீஷா ! மாப்பிள்ளையைக் கூப்பிட்டு வாங்க” 

கோவர்த்தனனை அழைத்துக் கொண்டு, ஆண்கள் வந்து விட, 

தட்டுக்கள் முதலிலேயே வைக்கப்பட்டு இருக்க, சமர்த்தாய் அனைவரும் அமர்ந்து விட்டனர். 

இளந்தளிரை அழைத்து வந்தனர் மூவரும் (சுபாஷினி, மைதிலி மற்றும் மிதுனா) 

அன்று பெண் பார்க்க வந்த போது இருந்த தவிப்போ, இனம் புரியாத நடுக்கமோ இல்லாது, முழுக்க முழுக்கப் பூரிப்புடன் வந்தாள் இளந்தளிர். 

ஏற்கனவே புடவையில் பார்த்திருந்த தன்னவளை இன்றும் மற்றுமொரு முறை புடவையில் பார்க்கிறான் கோவர்த்தனன். 

அதற்காக அவளை அனுதினமும் சேலை உடுத்தச் சொல்லும் எண்ணமெல்லாம் இல்லை அவனுக்கு.ஆனாலும் இந்த உணர்வை ரசிக்க ஆரம்பித்தான்.

இளந்திரும் இவனை ஆராய்ந்தாள் தான். 

இரண்டு கண்களும் காதலில் திளைத்திருந்தவாறே,  தன் இணையப் பார்த்திருக்க, 

நிச்சய மோதிரங்கள் கொண்டு வரப்பட்டன. 

ஹரீஷ் நண்பன் கோவர்த்தனனின் அருகில் இருக்க, இளந்தளிரின் அருகினில் அவளது தங்கை சுபாஷினியும் , மைதிலியும் வந்து நின்றனர். 

மிதுனாவோ கம்பளத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு சடங்கையும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

எதிரெதிரே இருந்த இணைகள் இருவரும் தன் சரிபாதியைப் பார்த்தவாறே, தங்களிடம் கொடுக்கப்பட்ட மோதிரத்தை மற்றவரது விரலில் அணிவிக்க ஆயத்தமாயினர். 

“மோதிரத்தைப் போட்டு விடுங்க” என்று இருவரிடமும் கூற, 

முதலில் கோவர்த்தனன் தளிர் அவளின் விரலில் அம்மோதிரத்தைப் போட்டு விட்டான். 

விரல்களில் தெரிந்த சிறு நடுக்கத்தைக் கண்டு கொண்டவன், கரத்தை தன் கரத்தால் ஆதரவாக அழுத்தினான். 

இளந்தளிர் தனது நடுக்கத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, அவனது விரலில் மோதிரம் அணிவித்தாள். 

இனிமையான தருவாயில், ஒவ்வொருவரும் இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தனர். 

வீட்டில் உள்ள அனைவருமே இவ்விருவரின் வாழ்க்கைத் தழைத்துச், சிறக்க வேண்டும் என்பதை மட்டுமே முழு முதலாய் வேண்டிக் கொண்டிருந்தனர். 

 அத்தனை பேருடைய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர். 

 காதலித்தவர்களாக இல்லையென்றாலும், கல்யாணத்தின் மூலம் இணையப் போகிறார்கள். 

மோதிரம் போட்டு விடும் சடங்கு முடிந்ததும், உணவைப் பரிமாறத் தொடங்கி விட்டனர். 

பத்து நிமிடத்திற்கு முன்பாக சூடாக செய்த உணவை வெளியே கேட்டரிங் மூலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. 

அவ்வுணவுப் பதார்த்தங்களை வீட்டுப் பாத்திரங்களில் மாற்றி வைத்து விட்டு, இலை போட்டனர். 

“இளா, கோவர்த்தனா கை கழுவிட்டு வாங்க ” என்று முதலில் அவர்களை அழைத்து விட்டு, இளையவர்களையும் அமரச் சொல்லிப் பரிமாறினர். 

“அம்மா! இந்தப் பொரியல் சூப்பர்”  என்று சிவசங்கரியிடம் சுபாஷினி சொல்லிக் கொண்டே உண்டாள். 

சைவப் பதார்த்தங்களை விரும்பி உண்டு கொண்டிருந்தனர் அனைவரும். 

அவர்களுக்குப் பின், பெரியவர்கள் உணவுண்டு முடித்தனர். 

மிதுனாவிடம், 

“எப்படியும் என் எங்கேட்ஜ்மெண்ட் விஷயம் ஆஃபிஸ்ல தெரிஞ்சிருக்கும் மிது. யாராவது கேட்டாங்களா?” என்றாள் இளந்திர். 

“தெரிஞ்சிடுச்சுன்னு தான் நினைக்கிறேன் இளா. ஆனால் யாரும், எதுவும் கேட்கல. நீ அஃபிஷியலா எல்லாரையும் இன்வைட் பண்றப்போ கேட்பாங்க” என்று தன் அனுமானத்தைக் கூறினாள் மிதுனா. 

” இன்னைக்கு இருந்து இனிமேல் நான் ஆஃபிஸ் வர மாட்டேன் மிது. இன்விடேஷன் வைக்க வேணும்னா வர வாய்ப்பு இருக்கு. நான் வீட்ல இருந்து வேலையைப் பார்க்கிறேன். ஆஃப்டர் மேரேஜ் ஆஃபிஸூக்கு வர்றேன்” என்றாள் இளந்தளிர். 

“சரி இளா. நான் பாத்துக்கிறேன். நீ மேரேஜ்ஜைப் பாரு” என்று சிறிது நேரம் பேசிக் கொண்டு கிளம்பி விட்டாள் மிதுனா. 

அதுவரை அமைதியாக இருந்த ஹரீஷூம், மைதிலியும் தங்கள் வாலுத்தனத்தை ஆரம்பித்து விட்டனர். 

 

  • தொடரும். 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *