288 views

அத்தியாயம் 27

 

  1. என் தளிர்மலரே

இளந்தளிர் மற்றும் கோவர்த்தனன், தங்களது குடும்ப விஷயங்களையும், வேலைகளையும் எல்லாரும் ஒன்றிணைந்துச் செய்யலாம் என்று முடிவெடுத்தனர். 

 

உறவுகளுக்குள் இப்படியான விஷயங்கள் நிகழும் போது அங்கே மன நிறைவிற்குக் குறைவா என்ன? 

 

வெள்ளிக்கிழமை நிச்சயத்தை வைத்துக் கொள்ளத் தேதி பார்க்கச் செல்வதாக முன்னரே கூறியிருந்தனர் பிள்ளைகளிடம். 

அதேபோல், தேதியைக் குறித்து விட்டும் வந்தனர் மூவரும். 

 

அவர்களும் உற்சாக மிகுதியாக வேலைகளை இழுத்துப் போட்டு, செய்ய ஆயத்தமாகி விட்டனர். 

 

நிச்சயத்திற்கு சொற்ப நாட்களே இருந்ததால், பெரியவர்களும், சிறியவர்களும் ஒன்று கூடி அவற்றிற்கான வேலைகளைப் பட்டியலிட ஆரம்பிக்க நினைத்தனர். 

 

ஒன்றாக அமர்ந்து, பருக, பசியாற சிற்றுண்டிகளைத் தயாராக வைத்துக் கொண்டு, கையில் ஆளுக்கொரு நோட்டுடன் சிறியவர்கள் அமர்ந்திருந்தனர். 

 

பெரியவர்களோ அவர்களுக்குரியப் பணிகளைப் பிரித்துக் கொடுப்பதற்குத் தயாராகினர். 

 

கோவர்த்தனனும் , இளந்தளிரும் தான் நாயகன், நாயகி என்பதால் அவர்களுக்குப் பெரிதாகப் பணி எதுவும் இல்லை, எனவே இவர்களின் அட்டூழியங்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது. 

 

குழுவாக அமர்ந்திருந்த சொன்னவர்களுக்குள் சலசலப்புச் சத்தம் கூடவும், 

“என்னாச்சு? ஏன் கத்துறீங்க?” என்று அதட்டினார் ரோகிணி. 

 

ஏனென்றால் சலசலத்தது வேறு யாருமல்ல அவரது பிள்ளைகள் தான். 

 

“குரங்கு என்னைக் கிண்டல் ப்ணணிட்டே இருக்கான்னு உங்ககிட்டப்  பல தடவை சொல்லிட்டேன்மா! நீங்க தான் ஒரு ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்குறீங்க..! இப்போ என் ஸ்நாக்ஸ்ஸை வேற திருடி இருக்கான். எல்லாம் நிறையவே இருக்குல்லடா. அப்பறம் ஏன் இந்த வேலை உனக்கு?” என்று பொரிந்து தள்ளினாள் மைதிலி. 

 

அதைக் கேட்டு பற்களைக் கடித்த ஹரீஷ், 

“கொரில்லா!!” என்று அவனும் திட்டினான். 

 

“அமைதியா இருங்க.லிஸ்ட் எழுதனும். உங்க சண்டையை அப்பறம் வச்சுக்கோங்க” என ரோகிணி அவர்களைக் கண்டித்தார். 

 

இதையெல்லாம் பார்த்த இளந்தளிரும், கோவர்த்தனனும் சிரிக்கத் தொடங்கி விட்டனர். 

 

அதற்குள் சுபாஷினி, 

“ஏன் அண்ணா! மைதிலி இங்க வந்து என் பக்கத்தில் உக்காரு” என்று அருகில் அமர வைத்துக் கொண்டாள். 

 

“வீட்டில் சிம்பிளாக நிச்சயம் வச்சிடலாம்”என்றார் சிவசங்கரி. 

 

சுமதி, ” ஆமா சிவா. உங்க ஃப்ரண்ட்ஸ்ஸை இன்வைட் பண்ணுங்க” என்றார். 

 

“சரிங்க அம்மா” என்று இருவரும் கூறிவிட, 

 

“அடுத்துச் சாப்பாட்டுக்கு சொல்லலாமா? நம்மளே செஞ்சிடலாமா சுமதி?” என்றார் சிவசங்கரி. 

 

“சாப்பாட்டுக்குச் சொல்ல வேண்டாம் சிவா.நம்மளே சமைச்சிடலாம்” என்றார் சுமதி. 

 

அதற்குள் ஹரீஷ், “வெளியவே சொல்லிடலாம்மா.நீங்க ஃப்ரீயா ஃபங்க்ஷனை செலிபிரேட் பண்ணனும்ல. வெளிய சொல்றது பெட்டர் மாமா” என்று சொல்லவும், 

 

அதுவே மற்றவர்களுக்கும் சரியென்று படவும், 

 

“ஆமாம்மா.அவன் சொல்றது தான் சரி” என்று கோவர்த்தனனும் ஒப்புக் கொண்டான். 

 

“கொஞ்சம் பேர் தான சமைச்சிடலாம்ன்னு பார்த்தோம்” என்றார் ரோகிணி. 

 

“கம்மியான ஆளுங்க தான்ம்மா. ஆனால், எங்களை விட்டுட்டு நீங்க மூனு பேரும் மட்டும் சமைக்கிறோம்னு சொல்வீங்க. அதனால் வெளியே வாங்குறது தான் ஓகேவா இருக்கும்” என்றாள் சுபாஷினி. 

 

பிள்ளைகள் இதை ஆமோதிக்கவும், பெற்றவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. 

 

“அடுத்து பூ, பழம்ன்னு எல்லாம் அளவு வாரியாக லிஸ்ட்ல எழுதியிருக்கிறேன். ஹரீஷ் வாங்கிடு ப்பா” என்றார் ரோகிணி. 

 

“சரிங்க மாமா” என்றான் ஹரீஷ். 

 

“அடுத்த வாரம் ட்ரெஸ் எடுக்கப் போகலாம்” என்று சிவசங்கரி கூறினார். 

 

” ஞாயிற்றுக்கிழமை ட்ரெஸ் எடுக்கப் போவோம் அக்கா” என்றார் ரோகிணி. 

 

அதற்குள் அனைவரது தட்டிலிருந்த சிற்றுண்டியும் காலியாகி விட, அதை நிரப்புவதற்காக தட்டுக்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனாள் இளந்தளிர். 

 

கோவர்த்தனனோ ‘சாப்பிட்டதே போதும் ‘ என்று சொல்லிட, மற்றவர்களுக்குத் தட்டில் எடுத்து வந்து வைத்தாள். 

 

மூன்று வீடுகளில் செய்தச் சிற்றுண்டியும் ஒரே இடத்தில் இருக்க, கேட்கவும் வேண்டுமா? அத்தனையையும் ரசித்து உண்டனர். 

 

ஒருவழியாக அனைத்தையும் குறிப்பெடுத்தாயிற்று. 

 

இனி அவற்றை நிகழ்த்துவதே வேலை. 

 

எப்பொழுதும் இளந்தளிரைத் தனியே விட்டு

விடாமல்,அவளுடன் வளைய வர வேண்டும் என்பது சுபாஷினிக்கும்,மைதிலிக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்பு. 

 

“ஹைய்யா…! நாங்க அக்கா கூடவே இருக்கோம்” உற்சாகத்துடன் கூறினார்கள். 

 

அன்றைய நாளில், பலவித சந்தோஷச் சாரல்களை அனுபவித்தப் பிறகு, இளந்தளிர் தனது செல்பேசியில் இருந்து மிதுனாவிற்குக் கால் செய்தாள். 

 

“ஹலோ மிது” 

 

“ஹாய் இளா ! எப்படி இருக்க? ஆஃபிஸ் பக்கமே ஆளக் காணோம்” என்று கேட்டாள் மிதுனா. 

 

“அதுவா ! எனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சுடா.அதனால் தான்  ஆஃபீஸூக்கு வர முடியல” என்றாள் இளந்தளிர். 

 

“ஹேய்…! எப்போ சொல்ற பாரு! கங்கிராட்ஸ்” என்று மகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்தாள். 

 

“தாங்க்ஸ் மிது. அப்பறம் எங்கேட்ஜ்மெண்ட்டுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு” தேதியைக் கூறியவள், 

“நீ கண்டிப்பாக வரனும் மிது” என்று அவளை நிச்சயத்திற்கு  அழைத்தாள். 

 

“கண்டிப்பாக வர்றேன் இளா. மாப்பிள்ளை ஃபோட்டோ அனுப்பி விடு” என்றாள் மிதுனா. 

 

“நேர்ல வந்துப் பாத்துக்கோ மிது” என்று சிரித்தாள் இளந்தளிர். 

 

“அப்படியா? சரி சரி. வந்துட்றேன் இளா. எந்த மண்டபத்துல ஃபங்க்ஷன்?” என்று விசாரித்தாள். 

 

“மண்டபம் எல்லாம் இல்லை மிது. வீட்ல தான் எங்கேட்ஜ்மெண்ட் வச்சிருக்கோம்.வீட்டு அட்ரஸ் தான் உனக்குத் தெரியுமே?” – இளந்தளிர். 

 

“ஹாங்.தெரியும் இளா. வர்றேன்” 

 

இவ்வாறு மிதுனாவை நிச்சயத்திற்கு அழைத்தும் விட்டாள் இளந்தளிர். 

 

“அக்கா! என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மாமாவோட ஃபோட்டோ கேட்கிறாங்க” என்று இளந்தளிரை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் சுபாஷினி. 

 

“இப்போ அனுப்பாதடா. மேரேஜூக்கு கொஞ்ச நாள் முன்னாடி அனுப்பு. இல்லன்னா ஸ்ட்ரைட் ஆக மேரேஜ் அப்போ வந்துப் பாக்க சொல்லு சுபா. ப்ளீஸ்..” என்று கோரிக்கை விடுத்து விட்டாள் இளந்தளிர். 

 

“சரிங்க அக்கா” என்று அவளும் சமாதானமாகி விட்டாள். 

 

கண் பட்டு விடக் கூடாது என்று சிவசங்கரியும், சுமதியும் மாப்பிள்ளை, பெண் புகைப்படத்தை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று முன்னரே கூறியிருந்தனர். 

 

அவர்கள் சொற்படியே சிறியவர்கள் நடந்து கொண்டனர்.

 

உடை எடுக்கத் துணிக்கடைக்குச் செல்லும் வழியெல்லாம் பேச்சும் கும்மாளமுமாக இருந்தனர். 

 

கடைக்குள் நுழைந்ததும் பிடித்ததை தயங்காமல் எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட, கோவர்த்தனன், இளந்தளிரை விட, மைதிலியும், சுபாஷினியும் மிகவும் உற்சாகமாக உடை எடுக்கத் தொடங்கி விட்டனர்.

 

“கோவர்த்தனா ! உனக்கும், சிஸ்டருக்கும் பிடிச்சதை எடுங்க. நாங்க எங்களுக்கு எடுக்கிறோம்” என்றார் சுமதி. 

 

கோவர்த்தனனும்,இளந்தளிரும் தங்களது இணைக்குத் தாமே பார்த்துப் பார்த்து உடையைத் தேர்வு செய்தனர். 

 

அவனுக்குக் கரும் பச்சை நிறச் சட்டையும், அவளுக்கு அதே நிறத்தில் புடவையும் எடுத்தனர். 

 

இது நிச்சயத்திற்கு என்பதால், கல்யாணத்திற்கும் இப்போதே எடுத்து விடலாம் என்று, 

 

கோவர்த்தனனுக்காக கருப்பு, வெள்ளை கலந்து கோட் சூட் எடுத்து விட்டு, 

 

இளந்தளிருக்காக இளஞ்சிவப்பு வர்ணத்தில் புடவையை எடுத்திருந்தனர். 

 

சுபாஷினியும், மைதிலியும் தங்களுக்குப் பிடித்தமான வர்ணங்களில் மஸ்தானி தேர்வு செய்து வைத்தனர். 

 

ஹரீஷூம் தனக்கு ஏற்றவாறே உடையை எடுத்திருந்தான். 

 

அன்னையர் மூவரும் தங்களுடைய ரசனைக்கு ஏற்ப புடவைகளை எடுத்ததும் வீட்டிற்குக் கிளம்பினர். 

 

“மஸ்தானி கரெக்ட் ஆக இருக்கான்னு வீட்டுக்குப் போய் போட்டு பார்த்துக்கோ மைதிலி” என்றாள் சுபாஷினி. 

 

“ஆமா சுபா. இல்லன்னா பிடிச்சு அடிக்கனும்” என்று கூறினாள் மைதிலி. 

 

உடைகள் எடுக்கும் வேலை முடிந்து விட்டதனால், அடுத்து இளந்தளிருக்கு முக அலங்காரம், மெஹந்திக்கு அழகு நிலையம் தேர்வு செய்யும் வேலையை ஆரம்பித்தனர். 

 

கூடவே சுபாஷினிக்கும், மைதிலிக்கும் சேர்த்து மெஹந்தி 

போட்டு விடவும் அனுமதி அளிக்கப்பட்டது. 

 

இளந்தளிர், “வீட்டில் சிம்பிளாக நிச்சயத்தார்த்தம்ன்னும் போது, இந்த மேக்கப்புக்கு எல்லாம் சொல்லனுமான்னு தோணுது அம்மா?”என்றாள்.

 

” மண்டபம் தான் ஏற்பாடு பண்ணல, இருந்தாலும் மேக்கப் மட்டுமாவது இருக்கட்டும்ன்னு நினைச்சோம் இளா.அதுவும் இல்லாமல் வீட்ல நடக்கிற ஃபர்ஸ்ட் நல்ல காரியம் அதனால் சிம்பிளாகப் பண்றதை மட்டும் பண்ணிட்டு மத்ததைக் கொஞ்சம் க்ராண்ட் ஆக பண்ணலாம்”

என்று கூறி விட்டார் சிவசங்கரி. 

 

“மெஹந்தி அளவு எவ்ளோ போடலாம் மைதிலி?” என்று ஆசையாய்க் கேட்டாள் சுபாஷினி. 

 

“அக்கா தானே அன்னைக்கு ஸ்பெஷல். சோ, நாம கைக்குள்ள மட்டும் போடலாம். அக்காவுக்கு ப்ளவுஸ்க்குக் கீழே வரைக்கும் கையில் போட்டு விடுவாங்கள்ல.அவங்களுக்கு செம்மயா இருக்கும்ல” – மைதிலி. 

 

“யெஸ் மைதிலி !” அவர்களுக்குள் இருக்கும் அந்த உற்சாகத்திற்கும் குறையாமல் நிச்சயத்தார்த்த ஏற்பாடுகளும் தடபுடலாகத் தான் நடந்து கொண்டு இருந்தது. 

 

நிச்சயத்திற்கு முதல் நாள் தங்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்த கோவர்த்தனனும், இளந்தளிரும்,

“எங்கேட்ஜ்மெண்ட்டுக்கு எல்லாரும் செம்ம ஹேப்பியா ரெடி பண்ணிட்டு இருக்காங்க போலயே தளிர்?” என்றான் கோவர்த்தனன். 

 

அதை ஒப்புக் கொண்டவள் போல,”ஆமாம் கோவர்த்தனன். இந்த சுபாவும், மைதிலியும் ரொம்ப எக்ஸைட் ஆகி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு நாங்கப் பண்றோம்னு டயர்ட் ஆகாமல், பார்த்துட்டு இருக்காங்க” என்றாள் இளந்தளிர். 

 

“சூப்பர் ” என்று அவனும் மனம் நிறைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். 

 

பிறகு அவனே, “ஹரீஷூக்கும் சீக்கிரம் பொண்ணுப் பார்த்திடனும்னு ரோகிணி அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. ஆக்சுவலா எனக்குப் பொண்ணு தேடிட்டு இருந்தப்போ ரோகிணி அம்மா அவனுக்கும் பாக்க ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தாங்க. அப்பறம் என் கல்யாணம் முடிஞ்சதும் பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்பா இல்லாமல் நாங்க மட்டும் வேலைப் பாக்குறது அவங்களுக்கு மனசு ஏத்துக்கல. அதனாலேயே எதுனாலும் அவங்க தான் வந்து முதல் ஆளா ஹெல்ப் பண்ணுவாங்க ” என்று நண்பனின் குடும்பத்தைப் பற்றி கூறினான் கோவர்த்தனன். 

 

“கவனிச்சுட்டுத் தான் இருக்கேன் கோவர்த்தனன். அவங்க மூனு பேருமே ரொம்ப நல்ல டைப். மைதிலி எங்களோட அவ்ளோ க்ளோஸ் ஆகிட்டா.சுபாவுக்கு பெஸ்ட் ஃப்ரண்ட் ஆகிட்டா.ஹரீஷ் அண்ணாவை நான் முறைச்சுப் பார்த்ததாலேயா இல்லை, சிஸ்டர்ன்ற மரியாதைன்னாலயா என்று தெரில, பேச வேண்டியதை மட்டும் பேசிட்டு, அவர் பாட்டுக்கு இருக்காரு. இப்படி ஒரு கலகலப்பான கேரக்டர் இருக்கிற ப்ரதர் இல்லன்னு எனக்கும், சுபாவுக்கும் ஃபீல் ஆயிடுச்சு” 

 

உடன்பிறவா சகோதரனைப் போல பாசம் காட்டும் ஹரீஷைப் பற்றி உயர்வாகப் பேசினாள் இளந்தளிர். 

 

“அவன் எப்பவுமே அப்படித்தான் தளிர்”

 

“அப்பறம் ங்க உங்க ஃபோட்டோவை சுபாவோட ஃப்ரண்ட்ஸ் அனுப்ப சொன்னாங்கன்னு கேட்டா. நான் தான் வேண்டாம்டா  கல்யாணத்தப்போ அனுப்புன்னு சொல்லிட்டேன்” 

 

“என் ஆஃபீஸ் கொலிக்ஸ்ஸூம் (colleagues) உன்னோட ஃபோட்டோ கேட்டாங்க. நானும் அனுப்பல தளிர். முக்கியமான விஷயம் இந்த ஃபங்க்ஷன் செலவுக்குப் பாதி அமவ்ண்ட் நாங்க குடுப்போம்.அம்மாகிட்ட சொல்லிடு” என்றான். 

 

“செலவு முழுதும் நாங்க தான செய்யனும்? இப்படி சொல்றீங்க?” என்றாள் இளந்தளிர். 

 

“அப்படியெல்லாம் விட முடியாதும்மா.இங்க நான் மட்டும் ஒரே பையன்றதால் கண்டிப்பாக முழு செலவைப் பாக்கலாம்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. உங்க வீட்ல சங்கடப்படுவீங்கன்னு தான் இப்படி ஒரு யோசனை. இதுக்கு நீங்க ஓகே சொல்லித் தான் ஆகனும்” என்று மிரட்டலுடன் அன்றைய குறுஞ்செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்து முடிந்தது. 


  • தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *