Loading

 

தன் நெஞ்சத்தில் புதைந்திருந்த பெண்ணவளை சிறிதும் விலக்க விரும்பாத ஆரவ், “ஐ லவ் யூ கண்ணம்மா. ப்ளீஸ் காம் டௌன். ரிலாக்ஸ்.” என்றபடி வான்மதியின் கழுத்தில் புதைந்து, முதுகை மென்மையாக நீவி விட்டான்.

அவளோ, “இப்ப என்ன விட போறியா இல்லையா? என்ன விடுடா.” என்று கோபத்துடன் நெளிய,

“விடமாட்டேன். என்கிட்ட இருந்து துளி கூட உன்ன நகர விடமாட்டேன். யூ ஆர் மைன் கண்ணம்மா. யூ ஆர் ஒன்லி மைன்.” என அழுத்தக்குரலில் பிதற்றினான்.

ஒரு கட்டத்தில், அவனிடம் இருந்து விலக முடியாது என்று உணர்ந்தவளாய், சில நொடிகள் எதிர்க்காமல் அமைதி காத்தவள், “உங்க அண்ணன் என்னை விபச்சாரின்னு சொன்னான்… நீங்க ப்ராக்டிகலா என்னை விபச்சாரியா மாத்துறீங்களா ஆரவ்?” நிறுத்தி நிதானமாகவே அவன் மீது அமிலத்தை வீசினாள்.

அக்கூற்றில் துடித்து விலகிய ஆரவின் விழிகள் ரத்த நிறமென சிவந்திருக்க, “ஸ்டாப் இட். ஜஸ்ட் ஸ்டாப் திஸ் வான்மதி.” என்று கனைத்தவன், கோபத்தையும் ஆதங்கத்தையும் அடக்க இயலாமல், அவளை தரதரவென இழுத்து காரினுள் அமர வைத்தவன், வீட்டை நோக்கி சென்றான்.

நல்லவேளையாக, இஷாந்த் உறக்கத்தில் இருந்ததால், அவனை காரின் பின் பகுதியில் உறங்க வைத்திருந்தான்.

அவள் காரினுள் நுழைந்ததும், தலையில் கை வைத்து அழுது கரைய, “ஏன் என்கிட்ட சொல்லல. உனக்கு தெரியும் தான. ஏன்டா என்னை ஏமாத்துன. உன் குடும்பம் மொத்தமும் சேர்ந்து இன்னும் என்னை என்ன தாண்டா செய்யணும்ன்னு நினைக்கிறீங்க. அசிங்கமா இருக்கு முகில். உன்னை கல்யாணம் பண்ணிருக்குறதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு.” என்று வாய் விட்டு கதறியவள், சட்டென நிறுத்தி அவனை நோக்கி தீப்பார்வை வீசினாள்.

“நீ… நீ தான… நான் விக்ராந்த் மேல கம்பளைண்ட் குடுத்தப்போ அவனை ஜெயில்ல இருந்து வெளிய கொண்டு வந்தது… நீ நீ தான அது. எனக்கு தெரியும். அன்னைக்கு… அன்னைக்கு அவன் அப்பா வெளிநாட்டுக்கு போய் இருந்தாரு. அவரோட ஹெல்ப் இல்லாம அவனால எதுவும் பண்ண முடியாதுனு தெரிஞ்சு தான், அவரு ஊருக்கு போற வரைக்கும் வெய்ட் பண்ணி கம்பளைண்ட் குடுத்தேன். அப்போ கூட, அவனோட தம்பின்னு யாரோ தான் வெளிய எடுத்ததா என் வீட்ல பேசிக்கிட்டாங்க. அப்போ இருந்த நிலைமைல நான் எதுவும் யோசிக்கல. அது… அது… நீ தான? சொல்லுடா நீ தான அது?” என்று அவன் கன்னத்தை பதம் பார்த்தாள்.

எதற்கும் அவன் எந்த உணர்வையும் காட்டவில்லை. “குடும்பம் இல்லைன்னு ஏண்டா பொய் சொன்ன? என்ன ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்ட.” என்று அவன் தோள்களில் சரமாரியாக அடிக்க, முந்தைய நாள் அவளின் நேசத்தை தாங்கிய தோள்கள், இந்த வெறுப்பை ஏற்க இயலாமல் இறுகியது.

எதற்கும் பதிலளிக்காமல் நேராக வீட்டை அடைந்தவன், பின்னால் இருந்த இஷாந்தை தூக்கிக்கொண்டு, வான்மதியின் பக்க கதவை திறந்து விட, அவளோ “நான் வரல. இனிமே ஒரு நிமிஷம் கூட உன் கூட இருக்க மாட்டேன்.” என்றாள் பிடிவாதமாக.

அதில், அவள் கையை அழுத்தமாக பற்றியவன், கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவளுக்கு தான் அழுகை முட்டியது. வீட்டினுள் சென்றதும், இஷாந்தை தொட்டிலில் கிடத்தியவன், வெளியில் வர, வான்மதியோ இன்னும் வீட்டினுள் வராமல், வாசல் கதவிலேயே சாய்ந்து அமர்ந்து கண்ணீரில் கரைந்தாள்.

அவள் முன் வந்து நின்றவன், முட்டியிட்டு அமர்ந்து, “பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சுட்டியா மதி. இப்போ நான் பேசவா?” என்றான் வேதனையுடன்.

அவள் பதில் கூறாமல், அழுத்தமாக அமர்ந்திருக்க, “ஊஃப்…” என பெருமூச்சு விட்டவன், “முதல்ல ஒரு விஷயத்தை உன் மனசுல நல்லா ஏத்திக்க, விக்ராந்த் என் பிரதர் இல்ல. என் கூட பிறந்தவன் இல்ல.” என்றதில், அவள் சலனமின்றி அவனைப் பார்த்தாள்.

“அவனோட அப்பாவை தான் என் அம்மா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.” என்று கூறி விட்டு ஒரு நொடி அமைதி காத்தான்.

பின், “எனக்கு தெரியாது மதி. சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது. விக்ராந்த்க்கு கல்யாணம் ஆனது, அதுவும் உன்னை கல்யாணம் பண்ணது, எதுவுமே…” என்றவனின் விழிகள் அவளிடம் யாசிக்க, அவள் கல் போல தான் அமர்ந்திருந்தாள்.

“10 வயசுல அப்பா இறந்ததும், புது குடும்பம், புது அப்பான்னு ஏத்துக்க மனசு வரல தான். ஆனா, ஒரு கட்டத்துல எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அந்த குடும்பத்தோட பொருந்த உன்னை மாதிரி தான் ட்ரை பண்ணேன். அப்பறம் தன் தெரிஞ்சுது, குடும்பமா இருந்தா இருக்கலாம். அது, வெறும் பணத்தால கட்டுன கட்டமைப்புன்னு.

என் அம்மாவுக்கு, என்னை விட விக்ராந்த் தான் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, அவன் தான் அவங்க சொன்ன மாதிரி படிச்சான். அவங்க சொன்ன ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கிட்டான். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துப்பான். ப்ளா ப்ளா…

நான் சொன்னேனே, என் இன்னர் ஃபீலிங்ஸ். அது சின்ன வயசுல இருந்தே என்னை ரொம்ப ஆட்டி வைக்கும். அது சொன்ன மாதிரி தான் நான் நடந்துப்பேன். அது சொல்ற மாதிரி தான் நான் படிப்பேன். அது பழக சொல்ற மனுஷங்ககிட்ட தான் நானும் பழகுவேன்.

கடைசி வர, அது என் குடும்பத்துக்கிட்ட என்னை ஒட்டவே விடல மதி. அதுவும் விக்ராந்த்க்கும் எனக்கும் சுத்தமா செட் ஆகாது. ஒன்னு அவன் கேரக்டர் எனக்கு பிடிக்காது. இன்னொன்னு, என்ன டீஸ் பண்ணிட்டு, என் அப்பா, அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி அவன் நடிச்சுடுவான். நான் கோபம் வந்து, அவனை அடிச்சுடுவேன். அதனால, அவன் அப்பாவுக்கு என்னை சுத்தமா பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்காம போனதுனால என் அம்மாவுக்கும் என்ன பிடிக்காது.  

ஆனா, அம்மான்னா யாருக்கு தான் பிடிக்காம போகும் சொல்லு. அவங்களுக்காக தான், நான் காலேஜ் முடிக்கிற வரை கூட அங்கே இருந்தேன். ஆனா, அதுக்கு அப்பறம், இன்னொரு பெரிய ப்ராப்லம் ஆகிடுச்சு. அதுல, நான் அந்த குடும்பமே வேண்டாம்ன்னு தனியா வந்துட்டேன். அதுக்கு அப்பறம், ஒரு இடத்துல கூட, என் அம்மா பேரையோ என் குடும்பத்து பேரையோ நான் சொன்னதே இல்ல. என் ப்ரெண்ட்ஸ்க்கு தெரியும். அதனால அவங்களும் என்ன அந்த குடும்பத்தோட சம்பந்தப்படுத்தி பேச மாட்டாங்க.

சுத்தமா அவங்களோட நான் தொடர்புலயே இல்ல மதி. அன்னைக்கு விக்ராந்தை போலீஸ் புடிச்சுட்டு போய்டுச்சுன்னு அம்மா கால் பண்ற வரை, நான் அவங்கட்ட பேச கூட இல்ல. ஏன் எனக்கு கல்யாணம் ஆனது கூட அவங்களுக்கு தெரியாது.

அப்பவும் நான் போயிருக்க மாட்டேன் மதி. அந்த நேரத்துல தான், மிருணா அஞ்சு மாசம் ப்ரெக்னன்ட் ஆ இருந்தா. அப்போ தான் அவள் ஏமாத்துனதும் எனக்கு தெரிஞ்சு மொத்தமா உடைஞ்சு போயிருந்தேன். என்னை சுத்தி என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியல மதி.

அம்மா கால் பண்ணப்போ, அவள் எனக்கு குடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாம, அவங்க மடியில படுத்து அழணும் போல இருந்துச்சு. அப்போ கூட அவங்க எனக்காக கால் பண்ணலைன்ற உண்மை புரிஞ்சு மனசு வெறுத்து போச்சு.

அப்போ, சடனா விக்ராந்த்தோட பேபி அபார்ட் ஆகிடுச்சுன்னு சொன்னதும் எனக்கு எனக்கு… ஐ ஆம் டோட்டலி ப்ளாங்க். அந்த ஒரு வார்த்தையை தவிர என்னால வேற எதையும் கேட்க முடியல. எங்க இஷு பேபிக்கும் அந்த மாதிரி ஆகிடுமோன்னு ரொம்ப பயந்துட்டேன் மதி.

என்ன தான் எனக்கு விக்ராந்தை பிடிக்கலைன்னாலும், பேபி இறந்த நேரத்துல என்னால அவனை ஹர்ட் பண்ண முடியல. அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்பறம் கொஞ்சம் மாறி இருப்பான்னு நம்பி இருந்தேன். அதான், எதையும் யோசிக்காம அவனை வெளிய எடுத்தேன். 

அப்போ கூட அவன் யாரை கல்யாணம் பண்ணிருக்கான். என்ன பிரச்சனை எதுவுமே விசாரிக்கல. ஏன், உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டப்போ கூட, எனக்கு சத்தியமா தெரியாது. உன் பாஸ்ட் பத்தி… நான் நினைச்சுருந்தா விசாரிச்சு இருந்துருக்கலாம். ஆனா, உன் மூலமா மட்டும் தான் நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்.

அப்படி நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள் என்னை உயிரோட கொன்னுடுச்சுடி. உனக்கு தெரியாது… நீ பழசை சொல்லி முடிக்கும் போது, நான் கொஞ்ச கொஞ்சமா செத்துட்டு இருந்தேன்னு!” கரங்களை தரையில் ஊன்றி, தலையை குனிந்து தன்னிலை விளக்கம் கொடுத்தவனின் வார்த்தைகளிலும், கண்களிலும் ரணம் மிகுந்தது.

அவளோ அத்தனையையும் கேட்டும் அசையவே இல்லை. “என்ன பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியாதுன்னா, அப்போ… என் அப்பாவை மட்டும் எப்படி தெரியும். நான் அவரோட பொண்ணுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” இன்னும் சினம் குறையாமல் கேட்டவளை, அமைதியுடன் ஏறிட்டவன்,

“முதல் முதல்ல, உன்ன எனக்கு கல்யாணம் பண்ண தான் உன் வீட்ல கேட்டாங்க. அது உனக்கும் தெரியும்ன்னு எனக்கு தெரியும்.” என்று கூர்மையாக வினவ, அவளோ ஒரு நொடி தடுமாறினாள்.

“எ… எப்… எப்படி… நா… நான் தான் போட்டோ மாத்தி குடுத்து இருந்தேனே. அப்பறம் எப்படி…?” என்று திணறிட, அதற்கு பதில் கூறாமல் தவிர்த்தவன், அவளை நெருங்கி, அவளின் கன்னங்களைப் பற்றி,

“அப்பவே நான் உன்ன கல்யாணம் பண்ணிருக்கணும் மதி. உன் வீட்ல என்னை என்ன சொல்லிருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிருக்கணும். உன் அப்பா, எனக்கு வசதி இல்ல, குடும்பம் இல்ல, பிரெண்ட்ஸ் அது இதுன்னு சுத்துறேன்னு சொல்லிருந்தாலும், நான்… நான் அப்போ உன்னை விட்டு போயிருக்க கூடாது.” என்றவனின் விழிகளின் வழியே திரவம் வழிய, அவள் நெஞ்சில் இருந்து ரத்தம் வழிந்தது.

இமைக்காமல் திகைத்தவள், “அது எப்படி உங்களுக்கு தெரியும்… என் அப்பா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லி தான் வேணாம்ன்னு சொன்னாரா?” என்றவள் எச்சிலை விழுங்கி ரணத்துடன் கேட்க, விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்தவன், “லீவ் இட்!” என்று எங்கோ வெறித்தான்.

சில நொடிகளில் மீண்டும் அவளை கதவோரம் சாய்த்து இதழ்களின் அருகில் நெருங்கி, “நான் உன்ன மறந்துட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்ன்னு தான் நினைச்சேன். உன் அப்பா என்ன அப்படி சொன்னப்போ, நீயும் என்ன அப்படி தான நினைச்சு இருப்பன்னு உன்ன விட்டு ஒதுங்க தான் நினைச்சேன்டி. ஆனா முடியல…

உனக்காக என் ஈகோவை எல்லாம் விட்டுட்டு என் அம்மாட்ட போய் நின்னேன்… எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்குடுக்க, உன் வீட்ல பேச சொல்லி.

ஆனா, அவங்க எதை பத்தியும் விசாரிக்காம, ‘குடும்பம் வேணாம்ன்னு தான இங்க இருந்து போன, இப்போ மட்டும் எதுக்கு உனக்கு நாங்க வேணும்’ன்னு, முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

சச் அ ஒர்ஸ்ட் மதர் தான்… நீ சொன்ன மாதிரி, அவங்க வயித்துல நான் பிறந்ததுக்கும், என்னை அவங்க பெத்ததுக்கும் ரெண்டு பேருமே வெட்கப்படணும்…” என்று கழுத்து நரம்புகள் புடைக்க, தன்னுள் பெரும் வலிதனை அடக்கியவனுக்கு, ஆற்றாமையில் உள்ளம் கொதித்தது.

வான்மதி சட்டென, கரம் கொண்டு அவன் வாயை மூடியவளுக்கு, அவனுக்கு என்ன ஆறுதல் அளிப்பது என்றும் புரியவில்லை. தனக்கு தானே என்ன ஆறுதல் சொல்லிக்கொள்வது என்றும் புரியவில்லை. தலையெல்லாம் பாரமாக இருந்தது.

“அட்லீஸ்ட், நான் என்னை பத்தி சொன்னப்பவாச்சு, என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமே…?” முட்டிய அழுகைதனை கேவலாக வெளிப்படுத்தி அவள் கேட்டிட,

“என்ன சொல்லடி? என்னன்னு சொல்ல? உன் மொத்த வலிக்கும் காரணம் என் கேடுகெட்ட குடும்பம்ன்னா? இல்ல… நூலிழைல உன்ன விட்டுக்கொடுத்ததையா? என்ன சொல்ல சொல்ற?” என கண்ணில் நீர் தெறிக்க கேட்டவனின் முகம் நொடியில் ஆத்திரம் போர்த்திக் கொள்ள,

“நீ சொன்னதை எல்லாம் கேட்க கேட்க, அவனை கொலையே பண்ணனும்ன்னு ஆத்திரம் வந்துச்சு. அந்த நாய் உயிரோட இருந்தா தான உனக்கு விளக்கம் சொல்லணும். அவனை கொன்னுட்டா, உனக்கு இந்த விளக்கமும் சொல்ல தேவை இல்லை தான.

அதான்… அவனை அவனை… கொன்னு போட்டுடணும்ன்னு, அவனை கடத்துனேன். ஆனா, அவன் அவ்ளோ சீக்கிரம் ஈஸியா சாக கூடாதுல. ஏண்டா வாழுறோம்ன்னு நினைச்சு துடிச்சு சாகணும். எனக்கு கோபம் வரும் போதெல்லாம், அவனை சாவடி அடிச்சேன்.

உண்மையை சொல்லாமலேயே உன் முன்னாடியே அவனை துண்டு துண்டா நறுக்கணும்ன்னு தான் உயிரோடயே வைச்சு இருந்தேன். ***** எப்படியோ தப்பிச்சுருக்கான். ஆனா, ரொம்ப நேரம் அவன் வெளிய சுத்த மாட்டான்.” என்று கண்களில் எரிமலையைத் தேக்கி, அனலாக கொதித்தவனைக் கண்டு அவளுள் அச்சம் பரவியது.

அவன் முகத்தில் பரவி இருந்த சினம் கண்டு அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. பின் முயன்று “அவனை அடிச்சு தான் உங்க கை காயமா இருந்துச்சா?” எனக் கேட்டாள் உள்ளே சென்ற குரலில்.

“ம்ம்!” கோபம் மாறா நிலையுடன் அவன் உறுமிட,

“இதெல்லாம் சுத்திக்கு தெரியுமா?” அவள் இறுக்கத்துடன் வினவ, “ம்ம்… அவன் மூலமா தான் விக்ராந்தை கடத்துனேன்.” என ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவன் கூறியதில் அவளுக்கு தான் பதில் கூற தெரியவில்லை.

அவனே, அவளின் இரு பக்கமும் கையை ஊன்றி, “ஒருவேளை, உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டப்பவே, எனக்கு எல்லாம் தெரிஞ்சு இருந்தாலும், உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் எடுத்த முடிவை நிச்சயமா மாத்தி இருக்க மாட்டேன்…” என்றான் அழுத்தம் திருத்தமாக. 

சொன்னதோடு நில்லாமல், அவளின் கன்னங்களை மென்மையாக வருடியவன், “ஐ ஆல்வேஸ் லவ் யூ கண்ணம்மா. என் வானத்தோட மதி நீ மட்டும் தான். உன்னை முழுசா தனக்குள்ள புதைச்சுக்குற உன்னோட மேகம் நான் மட்டும் தான்.” என புருவம் சுருக்கி உணர்ந்து உரைத்தவன், துடித்துக் கொண்டிருந்த அதரங்களை நோக்கி படையெடுக்க, அவள் இதழ்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

அதற்கு மென்முத்தம் ஒன்று வைத்தவன், “நான் சொல்லாமலேயே லிப்ஸ க்ளோஸ் பண்ணிட்ட கண்ணம்மா. இந்த பெக் கிஸ்ஸ இப்படி தான் குடுக்கணும்.” என்றான் மீண்டும் அவ்விதழ்களுக்கு அழுத்த முத்தமிட்டு.

அவன் கண்ணையே ஆழ பார்த்திருந்தவள் சலனமின்றி இருக்க, அவளுடன் மீண்டும் பழைய உறவைப் புதுப்பிக்க அவனெடுத்த முயற்சிகள் கடலில் வீழ்த்தப்பட்டது போல காணாமல் தான் போனது.

“கண்ணம்மா… என்னை புருஞ்சுக்கோயேன். நான் உன்ன ஏமாத்தல கண்ணம்மா.” கெஞ்சலுடன் கூடிய தவிப்புடன் அவன் கூற,

அவளோ “என்னை அப்படி கூப்பிடாதீங்க ஆரவ். அருவருப்பா இருக்கு…” அவன் சட்டையை பார்த்தபடி முகத்தை சுளித்து கூற, அவனுள் சுள்ளென தைத்தது.

விழிகளில் நீர் பளபளக்க, “நான் கூப்புட்ற வார்த்தை மட்டுமா? இல்ல நானுமா?” வார்த்தைகள் பிசிறடித்தது அவனுக்கு.

“உங்க கண்ணம்மாவும், நீங்க குடுக்குற முத்தமும், நீங்களும்… ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட நானும் எனக்கு அருவருப்பை தான் குடுக்குது. நீங்க என்னைக்குமே எனக்கு வெறும் பாஸிங் க்ளவ்ட் தான் முகில்” என்று அவள் கூறி முடிக்கும் போது, ஆரவின் கண்ணில் இருந்து வந்த நீர்த்துளிகள் அவளின் கைகளை நனைக்க, வான்மதிக்கு வலித்தாலும் அவள் நிலையில் இருந்து மாறவில்லை.

“அவ்ளோ தானாடி?” ஏக்கத்துடன் ஆரவ் அவள் முகம் பார்க்க, பொங்கி வந்த அழுகையை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு,

“என்னால முடியல ஆரவ். நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது தான். ஆனா, ஆனா… இதெல்லாம் யாரு புருஞ்சுக்குவா. அண்ணனையும் கல்யாணம் பண்ணிட்டு, தம்பியையும் கல்யாணம் பண்ணிட்டு…” எனக் கூற வந்து தேம்பியவள், “கேட்கவே கேவலமா இருக்கு ஆரவ். இங்க இருக்கவே எனக்கு நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு.” என கால்களுக்குள் முகத்தை புதைத்து அழுது தீர்த்தவளிடம்,

“அந்த கல்யாணம் ஒரு விபத்து மதி. அதை முதல்ல புருஞ்சுக்கோ” என்றான் அவளுக்கு புரியவைக்கும் நோக்கில்.

அதில் நிமிர்ந்து அவனை உணர்வின்றி பார்த்தவள், “என்னை பொறுத்தவரை கல்யாணமே விபத்து தான் ஆரவ். முதல் தடவை தெரியாம செஞ்ச முட்டாள்தனத்தை எந்த நம்பிக்கையில ரெண்டாவது தடவை தெரிஞ்சே செஞ்சேன்னு தெரியல. அதுவும் உங்களை பத்தி எதுவுமே தெரியாம…” என்றவளுக்கு தொண்டையை அடைத்தது.

“என்னை பத்தி எதுவுமே தெரியாம எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட?” ஆரவ் ஆழ்ந்த பார்வையுடன் வினவ, அவளிடம் பதில் இல்லை.

“உன்னால பதில் சொல்ல முடியாதுடி. என்னாலையும் பதில் சொல்ல முடியாது. உன்மேல வைச்சுருக்குற நேசத்தை விளக்க முடியாதுடி.” என மேலும் அவன் பேச வருவதை தடுத்தவள், “எனக்கு டைவர்ஸ் வேணும்” என்று கதவில் சாய்ந்தபடியே எழுந்து நின்றாள்.

“இனிமே என்னால இங்க இருக்க முடியாது ஆரவ். நான் இங்க இருந்து போறேன்…” என்று அவனை தாண்டி நகர எத்தனித்தவளால் நகர இயலவில்லை. அவளின் புடவை கொசுவம் அவனின் நீண்ட கால்களில் அகப்பட்டு இருந்ததே!

ஆரவின் பொறுமை காற்றில் பறந்திருந்தது. “போறியா…? எங்கடி போவ?” விழி இடுங்க அவன் கத்த,

“ஆரவ் காலை எடுங்க. சாரிய விடுங்க.” என்றவள் உதடு பிதுங்க நின்றாள். முந்தைய நாள், அவன் புடவை கட்டுவது பிடிக்கும் என கூறியதால், இன்றும் புடவையையே அணிந்திருந்தாள்.

“இங்க பாருடி. மூச்சு நின்னு குழில இறங்கும் போது தான், நீ இங்க இருந்து வெளிய போகணும். அப்போ கூட, மூச்சை நிறுத்திட்டு, நானும் உன்கூட தான் வருவேன். செத்தாலும் என் நிழல் உன் கூடவே தான் இருக்கும். என் நிழலை தாண்டி போகணும்ன்னு நினைச்ச…!” கருவிழிகள் சிவந்து கனலை கக்க, பல்லைக்கடித்து பிடிவாதத்துடன் விரல் நீட்டி எச்சரித்தவன், “என் மூச்சு என்கிட்ட இருக்காது…” என்று மிரட்டி விட்டே அவள் புடவையில் இருந்து காலை எடுத்தான்.

பெண்ணவள் தான், அவனின் கோபத்திலும், மிரட்டலிலும் மிரண்டிருக்க, கண்மண் தெரியாமல் அவன் காட்டிய காதலில் சிக்குண்டு போனாள்.

அறிவிருக்கா. அவன் தப்பிச்சு போற வரை என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?” லயா எரிச்சலுடன் கவினை திட்ட,

“ஃபுல் ப்ரொடெக்ஷன் போட்டு தான் வச்சுருந்தோம் லயா. எப்படி தப்பிச்சான்னே தெரியல. அதான் அப்பவே சொன்னேன். அவனை அப்படியே போட்டு தள்ளிடலாம்ன்னு” என்றான் வெறுப்பாக. விக்ராந்தை கடத்தி வைத்த இடத்தில் நின்று கவின், லயா, தன்விக் மூவரும் தீவிர சிந்தனையில் இருக்க,

தன்விக், “சுதாகர் தான் அவனை பார்த்துட்டு இருந்தான். அவன் ஊருக்கு போன கேப்ல இந்த சம்பவம் நடந்துருச்சு போலடா.” என்றபோதே, சுதாகர் பதறி அங்கு வந்திருந்தான்.

“அந்த பொறுக்கி நாய் எப்படிடா தப்பிச்சுச்சு. கூட இருந்த கார்ட்ஸ்லாம் என்னடா செஞ்சுட்டு இருந்தாங்க” என்று கோபத்துடன் கேட்க, கவின், “யாரோ வெளிய இருந்து ஹெல்ப் பண்ணிருக்காங்க சுதாகர். கார்ட்ஸ் எல்லாம் மயக்கமாகி இருந்தாங்க. அனேகமா அவன் அப்பா தான் ஹெல்ப் பண்ணி இருக்கணும்.” என்று யோசனையுடன் கூறியதில்,

லயா, “சரிடா. முடிஞ்சது முடிஞ்சுருச்சு. இதுக்கு அப்பறம் அவனை என்ன பண்றதுன்னு யோசிங்க. அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது. ஆரவ்க்கும் மதிக்கும் அவன் பிரச்சனைய குடுக்குறதுக்குள்ள டூ சம்திங்.” என்றாள் பரபரப்பாக.

அந்நேரம், தன்விக்கின் அலைபேசி அலற, மோனிஷா தான் போன் செய்திருந்தாள்.

அவன் போனை எடுத்து “சொல்லு” என்றதும், அவள், “மாமா. திடீர்னு மதி மெஸேஜ் பண்ணிருக்கா டைவர்ஸ் வேணும்ன்னு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஏதாவது பிரச்சனையா? நேத்து கூட நல்லா தான இருந்தாங்க?” என்று வேகமாக கேட்க, தன்விக் திகைத்திருந்தான்.

ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டவனை மற்ற மூவரும் என்னவெனப் பார்க்க, “தப்பிச்சு வந்து சிறப்பா சம்பவம் பண்ணிட்டான்டா. மதிக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.” என்றவன் விவரம் கூற, அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

சுதாகருக்கு மீண்டுமொரு முறை தங்கையின் வாழ்வு கேள்விக்குறியாய் மாறியதில் கண்ணில் நீர் துளிர்த்தது.

“ஏண்டா. ஏண்டா… அவளுக்கு மட்டும் இப்படி ஆகணும். அந்த பரதேசி, அவளை என்ன சொல்லி கஷ்டப்படுத்தி இருப்பானோ” என்று உடைந்தவனுக்கு, மூவரும் ஆறுதல் உரைக்க, அவர்களுக்கோ ஆரவ் இப்போது என்ன நிலையில் இருப்பானோ என்று தான் தவிப்பாக இருந்தது.

உடனடியாக, நால்வரும் ஆரவ் வீட்டிற்கு விரைய, ஹால் சோபாவில் ஆரவ் மட்டும் இஷாந்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வான்மதி அறைக்கு சென்றவள் தான் அதன் பிறகு வெளியில் வரவே இல்லை.

கண்கள் சிவப்பேறி, தளர்ந்து, வேதனையில் சாயலுடன் எங்கோ வெறித்திருந்த ஆரவைக் கண்டவர்களுக்கு இதயம் வலிக்க, சுதாகருக்கும் என்னவோ போல் ஆகி விட்டது.

“சாரிடா. இந்த சூழ்நிலைல நான் ஊருக்கு போயிருக்க கூடாது.” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.

ஆரவோ “எனக்கு அவன் வேணும்.” என்றிட, “ஆளுங்களை சொல்லி அவனை வாட்ச் பண்ண தான் சொல்லிருக்கேன். நேரம் பார்த்து தூக்கிடலாம்.” என்றவன், “மதி எங்கடா?” எனக் கேட்க, ஆரவ் அறையை கண் காட்டினான்.

சுதாகர் உடனே, வான்மதியின் கதவை தட்ட, உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. “வண்டு… கதவை திறயேன்!” என பாவமாக சுதாகர் அழைக்க, அவளோ அழுத்தமாக அமைதி காத்தாள்.  

ஆரவும், மோனிஷாவிடம் விவாகரத்து கேட்ட வான்மதியை எண்ணி கோபமானான். ‘நான் அவ்ளோ சொல்லியும் விவாகரத்து பத்தி பேசி இருக்கீல…’ என்று கடுப்பானவன், கடுமையுடன் அமர்ந்திருக்க, கவின் ஆதரவாக ஆரவின் தோள்களை அழுத்த, அவனிடமும் எந்த சலனமும் இல்லை.

லயா தான், “அவ புருஞ்சுப்பாடா. ஃப்ரீயா விடு. நம்மளை மீறி அவள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.” என்றாள் அவனை சமன்படுத்த.

தன்விக்கோ, “ஆமா மச்சான். எப்படியும் மோனி அவளுக்கு ஹெல்ப் பண்ண மாட்டா. சீக்கிரம் சரி ஆகிடுவாடா” என்று அவனை தேற்ற முற்பட, அவனோ தன்னிலையில் இருந்து மாறவே இல்லை.

இருவரையும் கண்டு நால்வரும் செய்வதறியாமல் நிற்க, உறக்கத்தில் இருந்து விழித்த இஷாந்த் வான்மதியை தேடி அழ ஆரம்பித்தான்.

அதில் தான், சுயத்திற்கு வந்த ஆரவ், மகனை சரி செய்ய முயல, அவனோ வான்மதியின் அறையை பார்த்தே அழுதான்.

அவன் அழத் தொடங்கியதுமே, இத்தனை நேரம் இருந்த பிடிவாதம் எல்லாம் தோற்றுப் போக, நிகழ்வுக்கு அந்த பெண்ணவள், கதவை மடாரென திறந்து கொண்டு உர்ரென்ற முகத்துடனே வெளியில் வந்து, இஷாந்தை தூக்கப் போக, ஆரவ் அவனை அவளிடம் தராமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“பேபிய குடுங்க. அழுகுறான்.” எங்கோ பார்த்துக்கொண்டு, யாரிடமோ பேசுவது போல அவள் பேச,

“என் பையனை, பாசிங் க்ளவ்டா மறைஞ்சு போக போற ஒருத்திக்கிட்ட நான் ஏன் குடுக்கணும்?” என்று கண்ணை சுருக்கி தீர்க்கமாக வினவியதில் அவளுக்கு சுருக்கென இருந்தது.

“என் பையனை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும். யூ ஜஸ்ட் ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ்.” என்றவனின் கூற்றில் பழைய ஆரவைப் பார்ப்பது போல இருக்க, அவளால் இஷாந்தின் அழுகையைக் கேட்க இயலவில்லை. அதிலும் இப்போது இன்னுயிராய் கலந்து விட்ட மகனின் கண்ணீர் அவளை வருத்தியது.

கோபத்துடன், “இஷு என் பையனும் தான் ஆரவ்…” என அதட்டலாக கூற, “ஓ! எவ்ளோ நாளைக்கு? நீ டைவர்ஸ் வாங்கிட்டு போற வரைக்குமா?” என்றான் நக்கலுடன்.

அதில் திடுக்கிட்டவளுக்கு ஒரு உண்மை அப்போது தான் உறைத்தது. அவள் விலக நினைப்பது ஆரவிடம் இருந்து மட்டுமல்ல, இஷாந்த்திடம் இருந்தும் தானே!

அவனை விட்டு செல்ல முடியுமா அவளால்? அவனின் சிறு அழுகையிலும் பதறித் துடிப்பவள், எப்படி அவனை மொத்தமாக அழுக விட்டு செல்வாள்.

நினைக்கவே கரங்கள் நடுங்க, இஷாந்தை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அவனிடம் தன்னுரிமையை நிலைநாட்ட, வெளியில் வெற்றிப்புன்னகை ஒன்றை சிந்திய ஆரவிற்கு உள்ளுக்குள் பெரும் வலி ஒன்று உற்பத்தி ஆகி, அவனை சிதைத்துக் கொண்டிருந்தது.

இஷுக்காக மட்டும் தான் என்கூட இருப்பியாடி. நான் வேணாமா கண்ணம்மா உனக்கு?’ என்ற கூவல்கள் அவனுள் வேதனையுடன் அதிகரிக்க, அதனை உணராமல், அவனின் புன்னகையைக் கண்டு முறைத்தவள், “நினைச்சதை சாதிச்சுடுறது…!” என முணுமுணுத்தாள் சத்தமாகவே.

அதில் நமுட்டு சிரிப்பு சிரித்த கவினை திரும்பி தீப்பார்வை பார்க்க, அவனோ வேகமாக சிரிப்பை அடக்கிக் கொண்டான்.  

தேன் தூவும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
65
+1
233
+1
7
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மிக மிக அருமை இப்படியே தொடராதோ என்று எண்ணத் தோன்றுகின்றது வாழ்த்துக்கள்