Loading

அத்தியாயம்  26 ❤

வகுப்பு முடிந்து, மாலையில் விடுதி சென்ற மஹிமாவிற்கு, கார்த்திக் தன்னை ஏன் கல்லூரி முதல்வரிடம் அப்படி குற்றம் சாட்டுவது போல் பேசினான்  ? என்று யோசனையாக இருந்தது.

இவனுடைய வழிக்கே செல்லக் கூடாது என்றிருந்தவளை, வேண்டுமென்றே வம்பிழுக்கும் அவனை நினைத்தால் எரிச்சல் மட்டுமே மனம் முழுவதும் பரவியது.

அந்த எரிச்சலின் நிலையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தவளை அழைத்தாள் ஸ்ரீதேவி.

” ஹேய் மஹி  ! என்னாச்சு  ? கூப்பிட்டுட்டே இருந்தேன் . கேட்கலயா  ? “

” அந்த கார்த்திக் தேவையில்லாமல் என்னைய வம்புக்கு இழுத்துட்டு இருக்கான் ஸ்ரீ  ! “
கவலை தோய்ந்த முகத்துடன் கூறியவளிடம்,

” உனக்கும், அவனுக்குமே  ஆகாது ! நீ தான் அவனை ப்ரின்சிபல் கிட்ட மாட்டி விட்ட – ன்னு நினைச்சுட்டு உன் மேல செம கடுப்புல இருக்கான் ” என்று தெரிவிக்க,

” நான் ஏன் ஸ்ரீ அவனை மாட்டி விடனும்  ? ஒதுங்கிப் போக நினைக்கும் போது, இப்படி பண்ணுவேனா  ? ” கவலையும், ஆற்றாமையும் கலந்து கூற  ,

” அதை அவன் நம்பனுமே  ! இனி இதனால் என்னென்ன ப்ராப்ளம் வரப் போகுதோ  ! ”
ஸ்ரீதேவியும் கலக்கமாகத் தான் இருந்தாள்.

” அப்படி ப்ராப்ளம் வந்தா ! இந்த காலேஜ்லயும் என்னால கன்டின்யூ பண்ண முடியாம போயிடும்”
ஆதங்கத்துடன் கூறியவளை கவலையுடன் பார்த்தாள் தோழி.

” இந்த சண்டையை இதோட விட்டுட்டு, முடிஞ்சளவுக்கு அவன்கிட்ட இருந்து விலகியே இரு மஹிமா. அதுக்கும் மீறி அவன் தொல்லை பண்ணினா நாமளே கம்ப்ளைண்ட் குடுக்கலாம்”
தைரியம் சொன்னவளிடம் ,

” இப்போ அது தான் எனக்கு எமனாகும் ஸ்ரீ ! கம்ப்ளைண்ட் குடுத்து வீட்டுக்குத் தெரிஞ்சா  அவ்ளோ தான். அப்பா பத்தி தெரியும்ல “

” இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீ எதுவும் செய்யல தான ! அப்பறம் என்ன  ? கார்த்திக் உன் கிட்ட வந்து கேட்டா பாத்துக்கலாம் “
என்று அவளுக்கு ஆறுதல் கூறி, மற்ற வேலைகளை கவனிக்கச் சொன்னாள்.

இந்த விஷயத்தை எண்ணி சஞ்சலப்பட ஆரம்பித்த மஹிமாவிற்கு விடாது கருப்பு போல் கார்த்திக் தன்னை சுற்றி வருவதையே வெறுத்தவள், இந்த பிரச்சனையும் தன்னை அவனிடம் கொண்டு சேர்க்கிறதே !

‘ ப்ச்  ! ‘ என்று தலையை உலுக்கிக் கொண்டு ,  முயன்று தன்னை வேறு வேலையில் செலுத்திக் கொண்டாள்.

” எப்போ பாரு கால் பேசிக்கிட்டே இருக்காத திவ்யா. உன் ஹெல்த் தான் பாதிக்கும் ” என்று திவ்யாவிற்கு அறிவுரை வழங்கினாள் ஸ்ரீதேவி.

” அதெல்லாம் நான் பாத்துக்குறேன் ஸ்ரீ ” என்று அவளும் மெத்தனமாக பதில் சொல்ல,

‘ இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை ‘ என்று ஸ்ரீ மஹிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தாள்.

மஹிமாவோ தனது பாட புத்தகத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க, இவளும் ஒரு புத்தகத்துடன் அமர்ந்து விட்டாள்.

” வாங்க. டின்னர் சாப்பிடப் போகலாம் ” என்று திவ்யா இருவரையும் அழைத்ததும் ,

இரவு உணவைத் தவிர்க்கும் மனநிலையில் இருந்தாலும், மஹிமா ஏனோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.

‘ யாரோ ஒருவனாக்கப்பட்டவனின் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் தான் ஏன் இந்தளவிற்கு எதிர்வினையாற்ற வேண்டும், வருத்தப்பட வேண்டும், என்று நினைத்துக் கொண்டு தன் அன்றாட வேலைகளும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள நினைத்தாள்.

அது போக, இப்போது உணவைத் தவிர்த்தால், அது தினசரி பழக்கமாகி விடக்கூடும் என்றும் சிந்தித்தாள்.

” சட்னி நல்லா தான் இருக்கு. ஆனா தோசை தான் முறுகலா இருந்திருக்கலாம் ! “
புலம்பிக் கொண்டு இருந்தாள் திவ்யா.

ஸ்ரீ, ” அட்ஜஸ்ட் பண்ணிக்கோ திவ்யா. நாம வீக் எண்ட் கூட வெளியே போகலாம் ” யோசனை சொல்ல,

” ஆமால்ல. ஆனா போன தடவை மாதிரி மஹிமா எந்த பையன் கிட்டயும் சண்டை போடாம இருந்தா சரி ”
கிளிக்கிச் சிரிக்க,

” திவ்யா  ! வேணாம் இந்தப் பேச்சு போதும். அவளுக்கு ரொம்ப கோவம் வரும். நீ வேற நேரம் தெரியாம பேசிட்டு இருக்க “என்று அவளை அதட்டினாள்.

முன்னே சென்ற மஹிமாவிற்கு பின்னிருப்பவள்  பேசியவை கேட்டாலும் ஊமையாக நடந்து அறைக்குள் அடைந்து கொண்டாள்.

நெருங்கிய தோழியாக இருந்த போதும் ஸ்ரீதேவியால் மஹிமாவின் மனக் கூட்டுக்குள் இருக்கும் தவிப்புக்களையும், உணர்வினையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அவர்கள் அறையில், இன்று சீக்கிரமாக திவ்யா உறங்கியிருக்க , மஹிமாவைத் கொஞ்ச நேரம் தனியே இருக்க விட்டு விட்டு, பிறகு பேசலாம் என்று இருந்தாள் ஸ்ரீ.

மஹிமாவிற்கு வரவே கூடாது என்று நினைத்த ஞாபகங்கள் எவ்வளவு முயன்றும் அவளிடமே வந்து அட்டெண்டன்ஸ் போட்டது.
🌺🌺🌺🌺🌺🌺

சிவரஞ்சனியும், கார்த்திக்கும் பப், மால் என்று சுற்றித் திரிந்தாலும் கார்த்திக்கின் கவனம் மஹிமாவை விட்டு விலகவே இல்லை.

சவால் விட்ட சிவரஞ்சனிக்கே சலித்துப் போய் விட்டது !

” கார்த்திக் ! எத்தனை தடவை சொன்னாலும் நீ அவளையே யோசிச்சுட்டு, அவளைப் பத்தியே பேசிட்டு இருக்க ? இது ஜஸ்ட் கேம் அண்ட் சேலஞ்ச் தான் ! மரமண்டைல ஸ்டோர் பண்ணி வச்சுக்கோ ”
சொல்லி சொல்லியே சோர்ந்து விட்டாள்.

” இனியும் இதை எனக்குப் புரிய வைக்குறேன்னு இப்படி ஹை பிட்ச் – ல கத்தாத சிவா ! அவ்ளோதான் சொல்லுவேன். “

அவனுடைய மிரட்டலுக்குப் பலனிருந்தது. இதற்குப் பிறகு சிவரஞ்சனி அவனுக்கு எதையும் வலியுறுத்திக் கொண்டிருக்கவில்லை.

அப்படியிருந்தும் அவன் மஹிமாவை விழிகளால் ரசிக்கும் போதெல்லாம் இவளுக்குத் தான் தன்னை சமாளிக்க முடிவதில்லை.

” சிங்கிங் காம்ப்படிஷனுக்குப் பாட்டு செலக்ட் பண்ணியாச்சு ம்மா ” என்று தாய் சுவர்ணலதாவிடம் தான் தேர்ந்தெடுத்தப் பாட்டைக் கூறினாள் மஹிமா.

” ம்ம் ! பெஸ்ட் சாய்ஸ் மஹி. இந்த சாங் உன் வாயஸூக்குக் கரெக்ட் ஆக இருக்கும். நீ ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பி.நான் அப்பப்போ வந்து கேட்டுக்கிறேன்.ஹால்ல மட்டும் ப்ராக்டிஸ் வேணாம் மா “

அவர் எதற்காக அவ்வாறு கூறுகிறார் என்பது அவளுக்கும் புரிந்து விட,

” அதை எப்பவோ முடிவு பண்ணிட்டேன் மா. நீங்க கவலையேபடாதீங்க. “

பின் வந்த நாட்களில் எல்லாம் வேறு சிந்தனை இல்லாது பாட்டைப் பாடிப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மஹிமா.

ஆனால் வகுப்பில் உடன் பயில்பவர்கள்,
” ம்ம்ம் ! கார்த்திக் ப்ரபோஸ் பண்ணதுல  இருந்து ரொம்ப ஜாலியா இருக்கியே மஹிமா “
குத்தல் பேச்சுக்களுக்குக் குறைவில்லாமல் இருக்க,

அவனிடம் அன்று தெளிவாக இதைக் கூறிய பின்னரும் அவ்வப்போது அவனும் குறும்புத்தனம் செய்வதாக நினைத்துக் கொண்டு அவளை வம்பிழுத்தவாறே இருந்தான்.

அந்த காதல் விஷயத்தை அத்துடன் விட்டு விட்டானே என்று இவள் அதைப் பற்றிய சிந்தனையற்று இருந்தாள்.

வீட்டிலும் ராமநாதன்  அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொண்டதில், மஹிமாவுக்கு நாட்கள் மிகவும் அமைதியாக, ஆனந்தமாகக் கழிந்தது.

அதன் பிறகு, பாட்டுப் போட்டிக்கு முந்தைய நாளும் சரி, போட்டி நாளன்றும் சரி , அவளுக்குக் கார்த்திக் மற்றும் சிவரஞ்சனியின் மூலம் ஏற்பட்ட எரிச்சலும், கோபமும் அதிகம்.

திடீர் திடீரென்று தன்னிடம் வந்து வழியும் கார்த்திக்கையும், சந்தேகம் கேட்கிறேன் என்று உப்புச் சப்பில்லாத சந்தேகங்களுடன் வருபவர்களை வேறென்ன சொல்வது ?

” ப்ளீஸ் காம்ப்படிஷனுக்கு ரெடியாகிட்டு இருக்கேன் ” என்று தன்மையாக அவர்களைத் தவிர்க்கவும் செய்தாள் மஹிமா.

” உன் ஃப்ரண்ட் உன்னையே அவாய்ட் பண்றா “
நக்கலாக கூற,

பதிலுக்கு அதே நக்கலுடன்,
” நீ கூட தான் அவளை லவ் பண்ண வைக்குறேன்னு சொல்லிட்டு இருக்க, ஆனால் என் கூட தான சுத்திட்டு இருக்க. ” என்று சிவரஞ்சனி கூறினாள்.

” சரி சரி. நாளைக்குப் போட்டி நாள் அதுவுமா இன்னும் பெட்டர் ஆக ப்ரபோஸ் பண்ணி அவளையும் சம்மதிக்க வைக்குறேன் பாரு ” என்று சூளுரைக்க,

” எப்படி ப்ளான் போட்ருக்கடா  ? ”
ஆர்வம் தோய்ந்த விழிகளுடன் கேட்டவளிடம்,

” நாளைக்குப் பாரு. ” அதை மட்டும் சொல்லிச் சென்றான்.

” ம்ஹூம் !  ” தன் வழக்கமான கடுகடுத்த முகத்துடன் சென்று விட்டாள்.

இவர்கள் தனக்கு எதிராக, தன்னைப் பலவீனப்படுத்த செய்யும் முயற்சிகள் யாவற்றையும் அறியாமல் போனாள் மஹிமா.

நாளைப் போட்டி என்பதால், இன்று வீட்டிற்குள்ளேயே தன்னுடைய இறுதிக் கட்டப் பயிற்சியை செய்து பார்த்துக கொண்டாள்.

ஆரம்பத்திலேயே போட்டியைப் பற்றிக் கேட்ட தீரஜூம் அவளிடம் எதுவுமே பேசாமலேயே இருந்து விட, மஹிமாவிற்கு அதுவே போதும் என்றாகிப் போனது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

உறக்கம் வராது உலவிக் கொண்டிருந்த மஹிமாவைக் கவலையுடன் பார்த்தாள் ஸ்ரீதேவி.

” ஒரு முழு நாள் இவகிட்ட எல்லா விஷயத்தையும் கேட்டுடனும். “

என்று அவளைத் தொந்தரவு செய்யாமல், உறங்கி விட்டாள் ஸ்ரீ.

கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் போதே, மஹிமாவிற்கு ஐயம் ஏற்பட்டு விட்டது.

கார்த்திக்கை மாட்டி விட்டது ‘ தீக்ஷிதா ஆக இருக்குமோ  ! ‘

பையைத் தோளில் மாட்டியபடியே கண்களால் இன்றைக்கும் கார்த்திக்கைத் துளாவிக் கொண்டே வந்தாள் தீக்ஷிதா.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்