337 views

அத்தியாயம் 26

ஹரீஷ் நண்பனைப் பார்த்துத் திடுக்கிட்டு, 

“நண்பா..! என்னாச்சு கண் கலங்கி இருக்கு?” என்று விசாரித்தான். 

 

இளந்தளிர் இவன் மனம் கவலை கொள்ளுமாறு ஏதோ கூறி இருக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொண்டான். 

 

“இன்னைக்கு நான் செம்ம ஹேப்பியா இருக்கேன் நண்பா” அவன் கூறுவதை நம்ப முடியாமல் பார்த்தான் ஹரீஷ்.

 

“ஹேப்பியா இருக்கேன்னு சொல்ற! ஆனால் கண்ணு  கலங்கி இருக்கிறதுக்குக் காரணம் என்னன்னு சொல்ல மாட்ற?ஏன்டா அழுத?” என்று கேட்டான். 

 

கோவர்த்தனன்,”இது ஆனந்தக் கண்ணீர் டா” 

 

“ஆனந்தக் கண்ணீரா?” என்று கேட்டு விட்டு பிறகு ஏதோ புரிந்தாற் போல், 

“ஹேய் நண்பா…! அப்போ லவ் சக்ஸஸ் ஆ?” இவன் ஆர்வத்துடன் கேட்டான். 

 

“அதே தான்” உற்சாகமாக வந்தது கோவர்த்தனனின் குரல். 

 

“உண்மையிலேயே அவங்க அக்சப்ட் செய்துட்டாங்களா?” 

 

ஹரீஷூக்கு ஆச்சரியம் தாளவில்லை. 

 

“ஆமா ஹரீஷ். அவங்களை ஃபோர்ஸ் செய்யாமல் தானா என்னை லவ் பண்ணனும்னு நினைச்சேன். அப்படியே நடந்துருச்சு. இனி வீட்ல பேசனும்” என்று நண்பன் கூறவும், 

 

“எல்லாருமே உங்க சம்மதத்துக்காக தான் வெயிட்டிங். நீங்களே சரின்னு சொல்லிட்டீங்க. அப்பறம் வேறென்ன இடைஞ்சல் வரப் போகுது..! ” என்றான் ஹரீஷ். 

 

“ம்ம்… யெஸ். வீட்ல இருக்கிறவங்களுக்கு மனஸ்தாபம் எதுவும் ஆகிடாதுல்ல நண்பா?” – கோவர்த்தனன். 

 

“எதுக்குடா அவங்களுக்கு மனஸ்தாபம் ஆகனும்?” 

 

“இல்லை… வீட்ல பெரியவங்க முடிவு பண்ணின அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ நாங்க லவ் பண்ணி, கல்யாணம் பண்றோம்னு சொன்னா சரி வருமா?”

 

ஹரீஷ், “முதல்ல சொல்லுடா” 

 

“சரி நண்பா.வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட சொல்லிப் பாக்குறேன்”

 

தனது நண்பனின் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் என்பதை முதலிலேயே அறிந்திருந்த ஹரீஷ், 

 

கோவர்த்தனனின் மனம் கவர்ந்த பெண்ணையே மணம் செய்யப் போகிறான் என்பது இவனுக்கும் சந்தோஷம் தான். 

 

அந்தச் சந்தோஷத்துடன் வீட்டிற்குப் போய் தாயிடம் இதைப் பகிர்ந்தான். 

 

“இளந்தளிருக்கு இவனைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் தான் அம்மா. அவங்க கோவர்த்தனன் கிட்ட பேசினதைச் சொன்னான். சுமதி அம்மா கிட்ட சொல்றேன்னு வீட்டுக்குப் போய்ருக்கான்”

 

“இனிப்பான செய்தியே கிடைக்கனும்” என்று வேண்டிக் கொண்டார் ரோகிணி. 

 

🌸🌸🌸🌸

 

தன் அம்மாவிடம் சென்ற கோவர்த்தனனின் முகத்தின் பொலிவைப் பார்த்தார். 

 

என்னவென்று கேட்க நினைத்தாலும் அவனே கூறட்டும் என்று அமைதி காத்தார். 

 

வழக்கம் போல் அவரது காலடியில் அமர்ந்தவன், 

 

“அம்மா…! நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லப் போறேன்.அதைக் கேட்டதும், கோபமோ, வருத்தப்படவோ கூடாது சரியா?” என்கவும், 

 

புத்திரனின் இவ்வார்த்தைகள் அன்னைக்கு விதிர்ப்பை ஏற்படுத்தியது. அனர்த்தம் எதுவும் நடந்து விட்டதோ! என்று மனம் திடுக்கிடவும், அவரின் முகத்தைப் பார்த்த மைந்தன், 

 

“எதுவும் கெட்டது நடக்கல அம்மா.இளந்தளிரைப் பற்றிய விஷயம்” என்று கூறவும், 

 

“என்னாச்சு ப்பா..?” 

 

ஆர்வம் தாங்கவில்லை அவருக்கு. 

 

“அவங்களை மீட் பண்ணேன் அம்மா. ஆன்ட்டி அவங்களுக்கு வரன் பார்த்திருக்கறதா சொன்னாங்க.ஆனா இளந்தளிருக்கு…” என்று இழுக்கவும், 

 

“சொல்லு கோவர்த்தனா!” 

 

“அவங்களுக்கும், எனக்கும் இடையில் இருந்த தவறானப் புரிதல் எல்லாம் சரியாகிடுச்சு அம்மா”

 

“அதுனால?” என்று அவனை வெளிப்படையாக விஷயத்திற்கு வருமாறு கேட்டார். 

 

“அவங்களும், நானும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கோம் அம்மா” 

 

பொறுமையாக மகன் சொன்ன செய்தியில் ஒரு கணம் சுமதி திகைத்து விட்டார். 

 

அவரால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இளந்தளிர் இப்படி கூறுவாள் என்பது இவருக்கே ஆச்சரியம் தான். 

 

“அந்தப் பொண்ணுக்குப்  பரிபூரண சம்மதம் தான ப்பா?”

 

பூரிப்பாய் முகம் பூத்துக் காணப்பட்டாலும், இந்த சந்தேகத்தை உறுதிபடுத்திக் கொள்ள நினைத்தார் சுமதி. 

 

“ஆமா அம்மா. நான் அப்போ சொன்ன மாதிரி அவங்களே எங்கிட்ட மனசு விட்டுப் பேசினாங்க” என்று கூறியவன், 

 

சற்று தயக்கத்துடன், 

“நீங்க பார்த்த அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போது நாங்க கல்யாணம் பண்ணிக்க விரும்புறோம்னு சொல்றது உங்களுக்குச் சங்கடமாக இருக்கா ம்மா?”என்று கேட்டான். 

 

அவனது சிகையைக் கோதிக் கொண்டே, 

“உண்மையிலேயே இல்லை கோவர்த்தனா.இந்த சம்பந்தம் கை கூடி வந்ததே எனக்குப் போதும். நீ சந்தோஷமா இருக்கனும்”என்றார் நெகிழ்வுடன். 

 

அவர் தன்னைப் புரிந்து கொண்டதை எண்ணி மகிழ்ந்த கோவர்த்தனன், 

” அவங்க வீட்ல இளந்தளிர் பேசிட்டு சொல்றேன்னு சொன்னாங்க ம்மா.நீங்க ஃப்ரண்ட்ஸ் தான? மூனு பேரும் ஒரு தடவை கான்ஃப்ரண்ஸ்ல பேசுங்க அம்மா ப்ளீஸ்” என்றான் கோவர்த்தனன். 

 

“பேசறேன் ப்பா… அவங்களுக்கும் இதில் சம்மதம் தான்” 

 

🌸🌸🌸🌸

 

இதே நிகழ்வு இளந்தளிரின் வீட்டிலும் நடந்தேறியது. 

 

மூத்த மகள் இவ்விஷயத்தை தன்னிடம் மொழிந்த போது, 

“இளா…! இதைச் சொல்ல இவ்ளோ நாளாக்கிட்டியே!” என்றார் சிவசங்கரி. 

 

புன்னகைப் படர்ந்த முகத்துடன் மேலும் தொடர்ந்தார் அன்னை. 

 

“நாங்க இதை நினைச்சுக் கவலைப்பட்டுட்டே இருந்தோம்.அதுக்காக உங்களைக் கம்பெல் பண்ண முடியுமா ! அதுனால கொஞ்சம் நாளாகட்டும் என்று இருந்தோம்.இப்போ தான் நிம்மதியாக இருக்கும்மா”

 

உச்சி முகர்ந்தார் மகளை. 

 

அங்கே சுபாஷினியும் நின்று கொண்டு, இவர்களது இந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்வது போல், 

 

“ஹைய்யா…! அக்கா நீங்க கோவர்த்தனனையே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா ! சூப்பர்…நல்ல டிசிஷன் அக்கா. கங்கிராட்ஸ்” என்று மகிழ்ச்சிப் பெருக்கில் அக்காவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் சுபாஷினி. 

 

“அடியேய்…! கொஞ்சினது போதும்.இளா நீ போய் கோவர்த்தனன் கிட்ட சொல்லிடு.நான் போய் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வர்றேன்”

 

குறிப்பாக சுமதியிடம் உடனே பேச வேண்டும் என்று அவருக்கு அழைத்தார். 

 

“சுமதி…!” ஆரவாரத்துடன் கூக்குரலிட்டார் சிவகங்கரி. 

 

“சிவா… சம்பந்தி ஆகிட்டோம் பார்த்தியா?” என்று அவரும் உற்சாகமாகப் பேசினார். 

 

“ஆமா சுமதி.. எனக்கு இப்போ தான் நிம்மதியே வருது” – சிவசங்கரி. 

 

கான்ஃப்ரண்ஸில் ரோகிணியும் இருந்ததால், 

“ஆஹான்… ஒரு வழியாக ரெண்டு பேரும் சம்பந்தி ஆகிட்டீங்க. இனி ரெண்டு ஃப்ரண்ட்ஸ்ஸூம் அடிக்கடி மீட் பண்ணிக்குவீங்க” என்று இவர்களை வம்பிழுத்தார். 

 

“ஹாஹா… அது உண்மை தான் ரோகிணி” என்று இருவரும் சிரித்தனர். 

 

ரோகிணிக்குமே மனநிறைவாக இருந்தது. 

 

சுமதி, “சீக்கிரம் ஜோசியரைப் பார்த்து, நிச்சயத்துக்கு நாள் குறிக்கனும் சிவா. இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை கிடக்கு. ரோகிணி நீ தான் எங்களுக்கு உதவியாக இருக்கனும்” என்றார் உரிமையாக. 

 

“அதுக்கு என்னக்கா பண்ணிடலாம்” – ரோகிணி. 

 

“நிச்சயத்தேதி குறிக்க நல்ல நாளாகப் பார்த்துப் போவோம்” என்று அந்த நாளைத் தேர்ந்தெடுத்தனர் மூவரும். 

 

“வர்ற வெள்ளிக்கிழமைப் போகலாம் சிவா.உங்களுக்கு ஓகே ஆ?” 

 

“டபுள் ஓகே சுமதி. ரோகிணி வந்துரும்மா” என்று வேலையைப் பிரித்துச் செய்ய நினைத்தனர். 

 

கோவர்த்தனன், இளந்தளிர் தவிர ஏனைய பிள்ளைகள் தங்களுக்குத் தரப் போகும் வேலைக்காக காத்திருந்தனர். 

 

சொந்த, பந்தமென்று எவரும் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதால், இவர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வது என்று முடிவானது. 

 

🌸🌸🌸🌸

 

கோவர்த்தனன் மற்றும் இளந்தளிரும் தங்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பி,சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர். 

 

“நல்லவேளை யாருக்கும் எந்த சங்கடமும் ஆகல தளிர்”என்று குறுஞ்செய்தி அனுப்பினான். 

 

“ஆமா கோவர்த்தனன்.நாம தான் லேட் பண்ணிட்டோம்.ஆனாலும் இப்போ எனக்கு எந்த தயக்கமும் இல்லை.ஹேப்பி மோட் தான்” என்று தன்னிலை விளக்கம் அளித்தாள் இளந்தளிர். 

 

அவளது துள்ளல் கோவர்த்தனனுக்கும் நிறைவைக் கொடுத்தது. 

 

“இன்னும் அரேன்ட்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் செய்ய சொந்தக்காரவங்க யாரும் இல்லையே கோவர்த்தனன்?” என்று உற்சாகம் வடிந்த குரலில் கூறினாள். 

 

“அவங்க இல்லன்னா என்ன தளிர்? நாமளே எல்லாத்தையும் பார்த்துக்குவோம். ஏன் நம்மால் முடியாதா? அப்பா இறந்தப்போ யாருமே உதவி பண்ணல, ஆறுதல் தரல. நானும் , அம்மாவும் தான் எல்லாமே செய்துக்கிட்டோம்”

 

இளந்தளிர், “இங்கேயும் அதே தான் கோவர்த்தனன். அம்மா, நான், சுபா – ன்னு மூனு பேரும் தட்டுத்தடுமாறி மீண்டு வந்தோம். பணம் பேங்க்ல இருந்தாலும், ஆறுதலுக்குன்னுச் சொந்தத்துல ஒருத்தர் இல்லை. படிப்படியாக சரியாகிட்டு வந்தோம்” என்றாள். 

 

“அதே மாதிரி இப்பவும் நாமளே எல்லாம் நடத்திக் கலாம் தளிர்.அப்பறம் கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் ஒரே வீட்ல இருப்போம்” என்றான். 

 

அதைத் தானே இவளும் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள் ! அவனது வாய்மொழியாக கேட்டதும் இரட்டிப்பாக மகிழ்ச்சி ததும்பியது அவளுக்கு. 

 

“நானுமே அதைச் சொல்லனும்னு தான் டிசைட் பண்ணி இருந்தேன் கோவர்த்தனன்” என்றாள் ஆச்சரியத்துடன். 

 

“சூப்பர் தளிர்! இப்போவே சொல்லிட வேணாம்.மேரேஜ் முடிஞ்சு சர்ப்ரைஸ் ஆக சொல்லலாம்”

 

“ஆமாம்.என்னை விட்டுப் பிரிய சுபாவுக்கு மனசே வராது கோவர்த்தனன். ஆனால் இந்த பிளானைக் கேட்டா அவ ரொம்ப சந்தோஷப்படுவா !” 

 

“ம்ம்…! எல்லாரும் தனித்தனியாக பிரிஞ்சு இருக்காமல் ஒரே குடும்பமா இருக்கிறதும் செம்ம ஜாலியாக இருக்கும் தளிர் ” 

 

“பெஸ்ட் ப்ளான் கோவர்த்தனன்” என்று குதூகலம் ஆனாள். 

 

“தளிர் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று பீடிகை வைத்தான். 

 

“என்ன கோவர்த்தனன்? சொல்லுங்க?” 

 

“மேரேஜூக்கு அப்பறம் நான் வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன். நீங்க வேண்டாம்னு மட்டும் சொல்லிடக் கூடாது” என்று கூறுவும், 

 

“என்னது?!” என்று குழப்பமாக கேட்டாள். 

 

“ஆமா நீங்க பாட்டுக்கு வேலைக்குப் போகாத, வீட்டைப் பாத்துக்கோன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்னப் பண்றது?” என்று தீவிரமாக பேசினான். 

 

தளிர் மேலும் குழப்பமடைந்தவளாக, 

“புரியுறா மாதிரி சொல்லுங்க?” என்றாள்.

 

“எப்பவும் இந்த டயலாக் பொண்ணுங்க சொல்லுவாங்க, அதுவும் மாப்பிள்ளை இப்படி கண்டிஷன்ஸ் போட்றவரா இருந்தால் கண்டிப்பாக இப்படி சொல்ல வாய்ப்பு இருக்கு.ஆனால் நான் எந்த கண்டிஷன்ஸூம் இந்த மாதிரி சொல்ல மாட்டேன். அதைத் தான் இப்படி இன்டைரக்ட் ஆக சொன்னேன் தளிர்” என்று புன்னகைக்கவும், 

 

“ஓஹோ…! இதெல்லாம் நல்லா பேசறீங்களே!”

 

குறுஞ்செய்திப் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்க, மனம் விட்டுப் பேச வேண்டியதைப் பேசி முடித்த பின்னர் நிம்மதியுடன் கண் அயர்ந்தனர் இருவரும். 


தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்