Loading

துருவ் “உதி” எனக் கத்திகொண்டே, உத்ரா மேல் செங்கல் விழுகாமல், அவளை தள்ளி, அவனும் வெளியில் செல்ல போகையில் அவன் கால் மட்டும் மாட்டிக்கொண்டது.

கீழே விழுந்தவனின் காலில் செங்கல் விழுந்து, ரத்தக்  களறி ஆகியது.

சில நொடிகளில் நடந்து விட்ட, இச்சம்பவத்தைக் கண்டு உத்ரா அதிர்ந்து நிற்க, பின், வேகமாக துருவின் அருகில் சென்று,

“துருவ் மை காட்” என்று அவன் காலை பார்க்க, அவன் கால்களில் செங்கல்கள் மலை போல் குவிந்திருந்தது.

துருவ் வலியில் முகத்தை சுருக்க, உத்ராவிற்கு அழுகையே வந்து விட்டது. உடனே அங்கிருந்த ஆட்கள் அந்த கற்களை  அப்புறப்படுத்த, உத்ரா, “துருவ் துருவ்” என்று அழுதுகொண்டே அழைத்தவளுக்கு என்ன செய்வதென்று கூட தெரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

துருவ் அந்த நிலையிலும் “ஒண்ணும் இல்ல ஹனி லைட்டாதான்” என்று சொல்லும்போதே, வலியில் மயங்கி இருந்தான்.

அன்று தான் திருமணம் முடிந்து வேலையில் சேர்ந்திருந்த உத்ராவின் பி ஏ ராஜாவின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல,

 உத்ரா, “துருவ் என்னை பாருங்க துருவ். ப்ளீஸ் என்னை பாருங்க…” என்று அழுது கரைந்தாள்.. உடனடியாய் அர்ஜுனின் மருத்துவமனைக்கே அழைத்து செல்ல,

அங்கு உத்ரா, “அர்ஜுன்… துருவ் டா. என்னை காப்பாத்த போய் கால்ல ரொம்ப அடி பட்டுடுச்சு. எந்திரிக்கவே மாட்டுறாரு டா. ஏதாவது பண்ணுடா” என்று கதறி அழுக, அர்ஜுனும் சில நொடிகள் அதிர்ந்து விட்டு, விறுவிறுவென, இதற்கென்ற ஸ்பெஷல் மருத்துவரை வர வைத்து, சிகிச்சை அளித்தான்.

விதுன், அஜய், மீரா மூவரும் நடந்ததை கேள்வி பட்டு உடனே அங்கு வர, உத்ரா, அழுதுகொண்டிருந்ததை கண்டு அவளருகில் சென்றனர்.

அஜய், “அவனுக்கு ஒன்னும் ஆகாது உதி கால்ல தான அடிபட்டுருக்கு சரி ஆகிடும்” என்று சமன்படுத்த, அவள் “எவ்ளோ ரத்தம் தெரியுமா… மயங்கியே விழுந்துட்டான். அப்போ எவ்ளோ வலிச்சுருக்கும்.” என்று முகத்தை மூடி கொண்டு அழுக,

விதுன், “உதி அழுகாதடா. தலையில விழுகாம இருந்துருச்சேன்னு நினைச்சு சந்தோசப்படு… அவன் சீக்கிரமே ரெக்கவர் ஆகிடுவான்.” என்று அவளை அமைதி படுத்த முயற்சிக்க, அவள் கேட்கவே இல்லை.

பின், அர்ஜுன் வந்து, “அவனுக்கு ஒரு கால்ல மட்டும்  ஃபிரேக்ச்சர்.” என்று சொல்ல, அவள் மேலும் அழுக ஆரம்பித்தாள்.

அர்ஜுன், “ப்ச் உதி இது ஒரு மாசத்துல சரி ஆகிடும். வேற மேஜர் இஞ்சுரிலாம் எதுவும் இல்லை…” என்று சொல்ல, அவள் அவனை முறைத்து, “அப்போ இது மேஜர் இஞ்சுரி இல்லையா” என்று கோபமாக  கேட்டாள்.

 விதுன் அவள் மண்டையில் பட்டென்று அடித்து, “ஸ்கூல் படிக்கிறப்ப, வண்டி ஓட்ட கத்துக்கிறேன்னு சொல்லி, என்னை கீழ தள்ளி விட்டு, ரெண்டு காலும் ஃபிராக்ச்சர் ஆகி, நாலு மாசமா நடக்க முடியாம இருந்தப்ப, நல்லா ஜாலியா என்னை வச்சு என்ஜாய் பண்ணுன. இப்போ மட்டும் உனக்கு அழுகை வருதா” என்று முறைக்க,

அவள், தலையை தடவி கொண்டே, “நீ எதையும் தாங்கும் இதயம். ஆனால் துருவ் பாவம்… வலிக்கும்” என்று முகத்தை சுருக்கி கூற, அர்ஜுன், அவன் பங்கிற்கு அவள் தலையில் அடித்து,

“நீ பண்ணுன பில்டப்ல, நான் பெரிய பெரிய டாக்டரை எல்லாம் வரவைச்சு ட்ரீட்மெண்ட் பார்த்தா. அவனுக்கு ஒண்ணுமே இல்ல.” என்று முறைத்து விட்டு, பின் ‘சும்மாவே ஆடுவான்… இப்போ கால்ல அடிப்பட்டுருக்க சாக்கை வச்சு என்ன என்ன ரொமான்ஸ் பண்ண போறானோ’ என்று முணுமுணுத்தான்.

மீரா தான், எப்படித்தான் இவர்களால் மட்டும், பெரிய விஷயங்களை கூட சாதாரணமாய் பேசி, மனதை அமைதி படுத்த முடிகிறதோ என்று வியந்து விட்டு,

அர்ஜுனிடம், “அப்போ நீங்க பெரிய டாக்டர் இல்லையா அர்ஜுன். எதுக்கும் அண்ணாவை ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டணும்” என்று நமுட்டு சிரிப்புடன் கிண்டலடிக்க, அவன் உன்னை காப்பாத்திருக்கவே கூடாதுடி… என்று முறைத்து  காலையில் நடந்ததை நினைத்தான்..

லட்சுமி, “என் பையனுக்கு பூரி பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அதில் திரு திருவென முழித்தவள் அர்ஜுனை பாவமாக பார்த்தாள்.

அவளின் பாவமான முகத்தில், வழுக்கி விழுந்த இதயத்தை அமைதி படுத்தி, அவளை சோதிக்க விடாமல் “அன்னைக்கு நாங்க எல்லாரும் ஹோட்டல் போனோம்மா. அங்க எனக்கு பூரி பிடிக்காதுன்னு சொன்னேன் அதை வச்சு சொல்றாள் போல” என்று அவளை பார்த்து கொண்டே சொல்ல, அவள் ஹப்பா தப்பிச்சோம் என்று உள்ளே ஓடி விட்டாள்.

அதனை நினைத்து சிரித்தவன், உத்ராவை துருவை பார்க்க அனுப்பினான். இரு கால்களிலும் கட்டு போட்டு படுத்திருந்தவனை கண்டவளுக்கு இதயமே வலிப்பது போன்று இருந்தது.

மெல்ல, கண் விழித்தவன், அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த உத்ராவை பார்த்து, “உதி…” என்று அழைக்க,

அவள், “ரொம்ப வலிக்குதா துருவ்…” என்று கண் கலங்கினாள்.

“ஹே பொண்டாட்டி… இதென்ன அழுகை. எனக்கொண்ணும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்று அவளை சமாதானப்படுத்த,

அவள் “என்னை காப்பாத்துறதுக்காக இன்னும் நீ என்னதான் பண்ணுவ…” என்று சோர்வுடன் கேட்டாள்.

அவன் அவளை முறைத்து, “இன்னும் என்னலாம் பண்ணமுடியுமோ அதெல்லாம் பண்ணுவேன்… என் உயிரையும் குடுக்கணும்னா அதையும் குடுப்பேன். ஏன்னா… எனக்கு என்னை விட நீ மட்டும் தான் முக்கியம்” என்று சற்று கோபத்துடன் சொல்ல, உத்ரா, அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள்.

பின்,சிறிது நேரம் அவள் அமைதியாய் இருக்க, துருவ் அவள் கையை எடுத்து அவன் கைக்குள் வைத்து கொண்டு, “பொண்டாட்டி” என்று மென்மையாய் அழைக்க, அவளுக்கு தான் உயிர் வரை சென்று ஊடுருவியது அந்த வார்த்தை.

அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் “லவ் யு ஹனி” என்று காதலோடு சொல்ல, அவள் அவனையே பார்த்தாள்.

துருவ் “ஏதாவது சொல்லு ஹனி” என்க,

அவள் “என்ன சொல்லணும்” என்றாள் முகத்தை சுருக்கி.

“லவ் யூ தான்” என்று குறும்புடன் லண்டனில் அவள் சொன்னது போலவே சொன்னான்.

அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு, “லவ் யு” என்று அவனை போலவே சொல்ல,

“இவ்ளோ ரொமான்டிக் ஆ யாராலயும் ப்ரொபோஸ் பண்ண முடியாது பொண்டாட்டி” என்று நக்கலடித்தான்.

உத்ரா அவனை முறைக்க, துருவ் மெலிதாய் முறுவலித்து விட்டு, பின், தீவிரமாக “எப்படி இது நடந்துச்சு உதி. சைட்ல இப்படித்தான் அஜாக்கிரதையா இருக்கிறதா. ஒர்க்கேர்ஸ் மேல விழுந்துருந்தா இல்ல, வேற எதாவது கிளையண்ட் மேல விழுந்துருந்தா என்ன ஆகியிருக்கும். எப்படி நீ இதை கவனிக்காம விட்ட. இது எதேச்சையா நடந்துச்சா இல்ல பிளான் பண்ணி யாரவது பண்ணுனாங்களா” என்று புருவத்தை சுருக்கி அவளை அதட்டும் குரலில் கேட்க, அப்பொழுது தான் அவள் இதையே யோசித்தாள்.

“இல்ல துருவ்… இந்த மாதிரி எல்லாம் இதுவரை நடந்தது இல்லை.  மேனேஜர் கூட ரொம்ப நம்பிக்கையாவனவரு தான்…” என்று சொல்ல,

அவன் அவளை நிறுத்தி, “முதல்ல, இது விபத்தா இல்ல இதுக்கு பின்னாடி வேற யாரவது இருக்காங்களான்னு பாரு. அங்க இருக்குற ஒர்க்கர்ஸ் எல்லாரையும் விசாரி… ரைட் நொவ்” என்று கட்டளையாய் சொல்ல, அவள் ராஜாவை அழைத்து  விசாரிக்க சொன்னாள்.

  துருவோ “நான் உன்னை போய் பாருன்னு சொன்னேன்” என்று அழுத்தி சொல்ல,

“உங்களுக்கு ஹெல்ப்க்கு?” 

“நான் பார்த்துகிறேன்… நீ போய் இந்த பிரச்னையை சரி பண்ணு.” என்று சொன்னதும், அவனை விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்கியவள் பின், இவன் இந்த பிரச்னையை சரி பண்ற வரை நம்மளை விட மாட்டான்… என்று நினைத்து விட்டு, கிளம்பினாள்.

ராஜா தான் ஆச்சர்யத்தின் உச்சியின் நின்றான். நம்ம மேடமா இது… என்று வாயை பிளந்து நின்று இருந்தவனை “நீ அப்பறமா ஷாக் ஆகிக்க… முதல்ல கிளம்பு” என்று அவனையும் அழைத்து கொண்டு சென்றாள்.

அஜய், துருவிடம் “இதெல்லாம் சைதன்யா வேலையா இருக்குமோ” என்று கேட்க,

அர்ஜுன், தீர்மானமாக “அவன் பண்ணிருக்க மாட்டான்” என்று சொல்ல,

மீரா, “எப்படி இவ்ளோ நம்பிக்கையா சொல்றீங்க அர்ஜுன் “என்றாள்.

“அவன் சுயநினைவோடை இருந்தாதான் இதெல்லாம் பண்ணுவான்” என்று அசால்டாக கூற, மற்றவர்கள் அதிர்ந்து பார்த்தனர்.

விது, “என்னடா சொல்ற… என்னாச்சு அவனுக்கு…” என்று கேட்க, அர்ஜுன் துருவை பார்த்தான்.

பின், “அன்னைக்கு அவன் எஸ்கேப் ஆனதும், அன்னைக்கு நைட்டே துருவ் அவனை பிடிச்சு அடிச்சு உண்டு இல்லைன்னு ஆகிட்டான். இப்போ அவன் இங்க தான் இருக்கான். இப்ப அவனுக்கு கையும் வேலை செய்யல… படுத்த படுக்கையா தான் இருக்கமுடியும்.

அதோட.. அவனுக்கு ஸ்ட்ரோக் வேற வந்ததுல அவனால பேசவும் முடியாது.” என்று சொல்ல, அனைவரும் அரண்டு போய் பார்த்தனர்.

மீரா, “இதெல்லாம் தப்பு இல்லையாண்ணா” என்று தயங்கி கொண்டு கேட்க,

துருவ் கோபமாக “என்ன தப்பு… அவனை அப்படியே விட்டா, உதியை சும்மா விடமாட்டான். உதியை அழிக்கணும்னு நினைக்கிற எவனையும் நான் சும்மா விட மாட்டேன்.” என்று ரௌத்திரத்துடன் சொன்னவன்,

அஜயிடம் “நீ உதி கூட இரு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல இந்த சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு எனக்கு தெரியணும்.” என்று அவனை அனுப்பி விட்டு, மீராவிடம், ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட வேலையை அலுவலகம் சென்று பார்க்க சொன்னான். அவனின் குரலில் அவன் சொன்னதை மறுக்க, யாருக்கும் தைரியம் இல்லை.

அவர்கள் சென்றதும், விதுவிடம் ஏதோ சொல்லவர, அவன் “ஆமா எல்லாரையும் அனுப்பிட்டு, நீ தனியா எப்படி மேனேஜ் பண்ணு.. நான் உன்கூட இருக்கேன்.” என்று பெருந்தன்மையாய் கூறினான்.

  “இப்போ உன்னை யாரு கிளம்ப சொன்னா. போய் ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்து ஜூஸ் போட்டு குடு. போ” என்று அவனை வேலை வாங்க,

அவனோ ‘தங்கச்சி வாழ்க்கைக்காக என்னலாம் பண்ண வேண்டியது இருக்கு.’ என்று விட்டு வெளியில் சென்றான். ஆனால் துருவ் மறுத்தும், அவனுக்காக அன்புடனே அனைத்தும் செய்தான்.

 உத்ரா கட்டட வேலை நடக்கும் இடத்தில், அந்த சூப்பர்வைசரை பளாரென அறைந்தாள்.

“இப்படி அடுத்தவங்க தலைல விழுகுற மாதிரி செங்கலை கொண்டு வந்து வைப்பீங்களா. கொஞ்சமாவது மூளைன்னு ஒன்னு இருக்கனும்…” என்று பல்லைக்கடிக்க,

அவர் “இல்ல மேம்… நான் இங்க ரவுண்ட்ஸ் வந்தப்போ இங்க இந்த செங்கல் மூட்டை இல்ல. இன்னைக்கு புதுசா வந்த ஒருத்தன்தான் தெரியாம இங்க வச்சுட்டான் போல” என்று சொல்ல,

அவள் “புதுசா வந்தா அவனுக்கு என்ன வேலை குடுக்கணுமோ அதை குடுக்கணும்.” என்று அனைவரிடமும் விசாரித்தவளுக்கு அந்த புதியவரின் கவனக்குறைவாலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு, அவனையும்,வேலை தெரியாதவனை வேலைக்கு வைத்தவரையும் வேலையை விட்டு தூக்கி விட்டு அலுவலகம் சென்றாள்.

அப்பொழுது தான், அலுவலகம் சென்ற சுஜிக்கு சைட்டில் விபத்து என்று தெரிந்ததும் யாருக்கு என்ன ஆனதோ என்று பதற, உத்ராவையும், அஜயையும் பார்த்ததும் தான் நிம்மதி ஆனது.

அவர்களிடம் நடந்ததை அறிந்தவள், துருவிற்க்காக வருத்தப்பட்டு, பின், மாலையில் சென்று பாப்போம் என்று நினைத்து கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

அஜய், சுஜியை பார்க்கவும், அவனுக்கு அவள் காலையில் பேசியதும் அவள் திருமணமும் நியாபகம் வர ஒரு மாதிரி நிம்மதி இன்றியே அலைந்தான்.

அவளிடம் பேச போகையில், உத்ரா அவனுக்கு ஏதோ வேலை கொடுத்து வெளியில் அனுப்பி விட்டாள்.

அவன் சென்றதும், சுஜி உத்ரா அறைக்கு வந்தாள்.

அங்கு வேலை விஷயமாக உத்ரா, மீராவுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, சுஜியை கண்டதும்  என்ன என்று பார்த்தாள்.

சுஜி, “ஒர்க் இருக்கா உதி… நான் வேணும்னா அப்பறம் வரவா” என்று கேட்க,

உத்ரா “என்ன சுஜி எதுவும் இம்போர்ட்டண்ட் ஆ” என்று கேட்டதும்,

ம்ம் என தலையாட்டியவள் “எனக்கு மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்” என்று சொல்ல,

உத்ரா சந்தோஷத்தில் “ஹே சூப்பர் பங்கு… ஆனால் ஒரு மாசத்துலயா? ரொம்ப கம்மி டைமா இருக்கு. பட் செம்மையா செலிப்ரேட் பண்ணிடலாம். என்ன என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு” என்று சந்தோசமாக பேச, மீராவும், அவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

சுஜி மெதுவாய் புன்னகைத்து, “நான் ஆஃபீஸ்க்கு வரமுடியாது உதி” என்று சொல்ல, உத்ராவிற்கு நடக்கும் எதுவும் தெரியாததால்,

“ப்ச் நீ போய் என்ஜாய் பண்ணு சுஜி. கல்யாணம், ஹனிமூன்லாம் முடிச்சுட்டு பொறுமையா வா.” என்றாள்.

சுஜி, வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, “இல்ல உதி… நான் இனிமே இங்க வரமாட்டேன்” என்று அழுத்தி சொல்ல, உத்ரா புரியாமல், “ஏன் சுஜி. கல்யாணத்துக்கும் இங்க வராம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்க,

மீரா, “உன்னை வேலைக்கு போகவேணாம்னு சொல்லிட்டாங்களா” என்று கேட்டாள்.

சுஜி, இல்லை என்று மறுப்பாய் தலையாட்டி, “கல்யாணத்துக்கு அப்பறம் நானும் சந்துருவும் ஜெனிவா போக போறோம். அங்க தான் இனிமே இருக்க போறேன்” என்று சொல்ல, உத்ரா இதை எதிர்பார்க்க வில்லை.

வீட்டிலும், ஏன் நண்பர்கள் பட்டாளம் கூட ஆண்களாய் இருக்க, சுஜி மட்டுமே பல விதத்திலும் அவளுடன் ஒன்றி விட்டாள்.

அவள் மனது விட்டு பேசுவது அவளிடம் மட்டுமே. சில வருடங்களே என்றாலும், அவள் உத்ராவின் வாழ்வில் மிக முக்கிய அங்கமே. இப்படி திடீரென தன்னை விட்டு செல்வாள் என்று எதிர்பாராதவள், என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, மீராவுக்கும் வருத்தமாக இருந்தது.

இங்கு வந்ததில் இருந்து, அவளிடம் எதையாவது பேசி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாள். நல்ல தோழியாகவும் மாறிவிட்டவள் சட்டென்று கிளம்புகிறேன் என்று சொன்னதும் அவளும் திகைத்து நின்றாள்.

இருவரின் மனதையும் நன்கு அறிந்தவள் வலுக்கட்டாயமாக தன்னை சரி செய்து கொண்டு,

“ஹே இப்போ என்ன இங்க இருக்குற ஜெனிவா தான போறேன்… எப்போ எல்லாம் உங்களை பார்க்கணும்னு தோணுதோ… அப்போ எல்லாம் இங்க வந்துடுவேன். டெயிலி வீடியோ கால் பேசலாம்.” என்று சிரித்து கொண்டு சொல்ல,

உத்ரா “நீ கண்டிப்பா போகணுமா சுஜி” என்று சொல்லிவிட்டு, அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது இப்படி அரை வேக்காடுத்தனமாய் பேசக்கூடாது என்று நினைத்து,

“எனக்கு ரொம்ப சந்தோசம் பங்கு. ஒரு மாசம் இங்க தான இருப்ப. இந்த மாசத்தை நல்லா என்ஜாய் பண்ணலாம்… ஹ்ம்ம்” என்று சொன்னதும், சுஜி அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.

“ஐ வில் மிஸ் யு உதி… இனிமே என் லைஃப்ல  உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கண்டிப்பா கிடைக்க மாட்டாங்க. உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். எப்படி உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க போறேன்னு தெரியல” என்றவளுக்கு காதல் வலியும் சேர்ந்தே நெஞ்சை அடைத்தது.

உத்ராவும் அவளுடன் சேர்ந்து கண் கலங்க, மீரா தான் இருவரையும் சமாதானப்படுத்தினாள்.

பின், சுஜி வேலை இருக்கிறது என்று, துருவையும் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அதன் பிறகே, அலுவலகம் வந்த அஜய், அலுவலகம் முழுக்க அவளை தேடி விட்டு, அவளைக் காணாமல் போக, மீராவிடம் சென்று கேட்டான்.

அவள் ஏதோ வேலையில் மும்முரமாக இருக்க, உத்ராகிட்ட கேளுங்க என்று சொல்லி விட, உத்ராவை பார்க்க போகையில் அவள் மருத்துவமனை சென்று விட்டாள் என்று தெரிந்ததும், சுஜியும் உடன் சென்றிருப்பாள் என்று நினைத்து, மருத்துவமனைக்கு சென்றான்.

அர்ஜுனும், விதுவும் வெளியில் பேசிக்கொண்டிருக்க, அஜய் வந்தவன்,

“உதி இங்க தான் இருக்காளா?” என்று கேட்க, “ஆமா உள்ளதான் இருக்கா” என்று சொன்னதும், சிறிது நேரம் வெளியில் நின்றவனுக்கு, சுஜியைப் பற்றி கேட்க ஏதோ தடுத்தது.

அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று நினைத்தவன் அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே, உத்ரா நடந்ததை அவனிடம் சொல்ல, துருவ் ஏதோ யோசித்து விட்டு, “எதுக்கும் கேர்ஃபுல் ஆ இரு உதி. எனக்கு ஏதோ தப்பா இருக்கு” என்றதும்,

அவள் அசால்டாக”சும்மா எதையாவது யோசிக்காம ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன்” என்று அதட்டி சொன்னதும் தான், தன் யோசனையை நிறுத்தி விட்டு, ‘ஷ் ஆ’ என்று காலைபிடித்தான்.

அதில் அவள் பதறி “என்னாச்சு துருவ்…” என்று அருகில் போக, சட்டென்று அவளை இழுத்து தோள் மேல் சாய்த்து

“எதுக்கு இவ்ளோ தள்ளி நின்னு பேசுற” அவள் நெற்றியில் முத்தமிட, அதில் அதிர்ந்து சிவந்தவள்,

“என்ன பண்றீங்க துருவ் விடுங்க. இது ஹாஸ்பிடல்…” என்று அவனிடம் இருந்து விலக முற்பட., அவன் பிடியில் இருந்து நகரக்கூட  முடியவில்லை.

அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “இப்படி ஒரு ஹாஸ்பிடல்ல தான் உன்னை தொலைச்சேன் உதி. இப்போ அதே மாதிரி ஒரு ஹாஸ்பிடல ல நீ என்கூட இருக்க…” என்று அழுத்தமாய் அவள் கன்னத்திலும் முத்தமிட அவள் திணறினாள்.

பின் “எப்படி எப்படி… லிப் டு லிப் கிஸ் அடிச்சுருவேன்னு என்னையவே மிரட்டுறியா… ஹ்ம்ம்” என்று புருவத்தை உயர்த்தி நக்கலாக கேட்டு கொண்டு,

“பட் நான் மிரட்டலாம் மாட்டேன். டைரக்ட் ஆ ஆக்ஷன் தான்” கண்ணடித்து, அவள் இதழை நெருங்கிட, அவளின் விழிகளும் தன்னால் மூடிக் கொண்டது.

அஜய் உள்ளே செல்கையில், அர்ஜுனும் விதுவும் அவனை தடுத்து கொண்டே  உள்ளே செல்ல, அங்கு நடந்த காட்சியை கண்டு பேந்த பேந்த முழித்தனர்.

இவர்களை கண்டதும், துருவிடம் இருந்து சட்டென்று அவள் விலக, துருவ் மூவரையும் தீயாய் முறைத்தான்.

அஜய், ‘இங்க என்னடா நடக்குது’ என்று பார்க்க, அர்ஜுன், ‘இது ஹாஸ்பிடலா என்னாடா’ என்று முறைக்க,

விது, ‘ ஒரு அண்ணன்காரன் முன்னாடியே இவன் இவ்ளோ பண்றானே…’ என்று தலையில் கை வைத்தான்.

உத்ராவுக்கு தான் யார் முகத்தையும் பார்க்கவே முடியவில்லை.

ஐயோ என்று துருவை முறைத்தாள். அவன் இவளை கண்டுகொள்ளாமல், “என்னடா பிரச்சனை உங்களுக்கு..
மனுஷனை நிம்மதியா லவ் கூட பண்ணவிடமாட்டீங்களா.” என்று கடுப்படித்தான்..

அஜய், “நல்லா பண்றடா நீ… நான் பஜ்ஜி இருக்காள்னு நினைச்சு இங்க வந்தேன்…” என்று சொல்ல, ஆண்கள் மூவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

அஜய், உத்ராவிடம், “சுஜி எங்க உதி” என்று கேட்க,

அவள் புரியாமல் பார்த்து “அவள் உங்கிட்ட எதுவும் சொல்லலையா” என்று கேட்டாள்.

அஜய் “என்ன சொல்லலையா” என்று குழப்பமாக கேட்க, அவள் நடந்ததை சொன்னதும், அவன் உறைந்தே விட்டான்.

மற்றவர்களுக்கும் இது புதுசெய்திதான்.

அவர்களும் அதிர, உத்ரா, “என்ன எல்லாரும் ஷாக் ஆகுறீங்க… இங்க வந்து துருவை பார்த்து உங்ககிட்ட விஷயத்தை சொல்றேன்னு சொன்னாளே. அவள் இங்க வரவே இல்லையா” என்று கேட்க,

விது, “அவள் வந்தாள் உதி. அப்போ அர்ஜுன் ரௌண்ட்ஸ் போய்ட்டான். துருவ் தூங்கிட்டு இருந்ததால அப்பறம் வந்து பார்க்குறேன்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டாள் எதுவுமே சொல்லல” என்று சொன்னதும்,

அவள் சாதாரணமாக, “ஓ ஒருவேளை ஹாஸ்பிடல்ல இருக்குறனாள சொல்லல போல. அப்பறம் வந்து சொல்லுவாள்” என்று சொல்ல,

அஜய், “அவள் எதுக்கு ஜெனிவா போகணும்…?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டான்.

உத்ரா, “என்னடா பேசுற. கல்யாணத்துக்கு அப்பறம் அவள் சந்துரு கூட தான இருக்க முடியும்” என்று அதட்ட.,

“அவள் போறேன்னு சொன்னா நீயும் சரினு சொன்னியா உதி… அப்படி அவள் யாரையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். ஏதாவது பண்ணு உதி” என்று அவளை இழந்து விடுவோமோ என்று நடுங்கிய குரலில் கூறினான்.

“உனக்கென்ன பைத்தியமா? நான் என்ன பண்ண முடியும் இதுல. ஏற்கனவே அவளை அவங்க அப்பா வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பனும்னு நினைச்சப்போ நம்ம தான் அவளை அங்க போக விடாம இங்க இருக்க வச்சோம்.

அதுலயே அவருக்கு நம்ம மேல செம்ம காண்டு. ஆனால் கல்யாண விஷயத்துல நம்ம என்னடா பண்ணமுடியும். அதுலயும் அவளுக்கு நல்ல லைஃப் கிடைக்கும் போது நான் எப்படி அதை தடுக்கமுடியும்” என்று உத்ரா நியாயம் கேட்க,

அஜய், “என்ன நல்ல லைஃப்? அவன் கூட இருந்தா அவள் நல்லாருப்பாளா… அவனுக்கு என்ன தெரியும் அவளை பத்தி.” என்று கேட்க,

துருவ் “ஓ அப்போ உனக்கு எல்லாமே தெரியுமா…” என்று நக்கலாக கேட்டான்.

அஜய், “ஏன் தெரியாது… என்னை விட அவளை பத்தி யாருக்கும் தெரியாது. என்னை விட யாரு அவளை நல்லா பார்த்துப்பா” என்று சொன்ன பிறகே தான் என்ன சொன்னோம் என்றே உணர்ந்தவன், அப்பொழுதுதான் அவளின்றி அவனுள் அணுவும் அசையாது என்று உணர்ந்து கொண்டான்.

விது, “யப்பா ராசா… இப்போவது உனக்கு பல்ப் எறிஞ்சுச்சே” என்று பெருமூச்சு விட,

அர்ஜுன், “இப்போ எரிஞ்சு… ஏண்டா. அவளை பத்தி நல்லா தெரியும்னு சொல்ற அப்போ அவள் உன்னை  லவ் பண்றது மட்டும் எப்படி தெரியாம போச்சு” என்று கோபமாக கேட்க,

உத்ரா தான் “ஹே என்ன நடக்குது இங்க யாரு யாரை லவ் பண்றா” என்று புரியாமல் கேட்க, துருவ் தான் நடந்ததை கூறினான்.

அஜயும் அப்பொழுது தான் அவன் செய்த முட்டாள்தனத்தை புரிந்துக் கொண்டு விருட்டென்று வெளியில் சென்றான்.

உத்ரா தான், “இந்த சுஜி பக்கி ஒரு வார்த்தை சொல்லிருந்தா, இவனை மண்டைல அடிச்சு நானே கல்யாணம் பண்ணி வச்சுருந்துருப்பேனே.” என்று புலம்பி கொண்டிருந்தாள்..

பின், அர்ஜுன், வேலையைப் பார்க்க சென்று விட, விதுன் வெளியில் துருவிற்கு உபயோகப்படுத்தும் வீல் சேரில்  சேரில் கண் மூடி சாய்ந்திருந்தவன், திடீரென ஏதோ எறும்பு கடிப்பது போல் இருக்க, ஆ வென அலறி கொண்டு எழுந்தான்.

எதிரில், வெள்ளை நிற கோர்ட் போட்டு, கையில் ஊசியுடன் ஒரு பெண் டாக்டர் நிற்க, அவன் கையை தேய்த்து கொண்டே,

“யாரு மேடம் நீங்க. எதுக்கு எனக்கு ஊசி போட்டீங்க” என்று கத்தி கேட்க,

அவள் “ஷ் இது ஹாஸ்பிடல் இங்க இப்படி கத்தக்கூடாது. இந்த டைம் உங்களுக்கு இந்த இன்ஜக்ஷ்ன் போடணும். அப்போதான் கால் சரியாகும்” என்று சொல்ல,

அவன் அவளை முறைத்து, “லூசா நீ பேஷண்ட் உள்ள இருக்கான். என் காலை பாரு நல்லா தான் இருக்கு.” என்று குதித்து காட்ட,

அவள் குழம்பி அவன் கையை காட்டி, ” இந்த பேஷண்ட் டேக் நீங்க போட்டுருக்கீங்க அப்போ நீங்க தான பேஷண்ட் ஆ இருக்கனும்.” என்று கேட்டதும், அப்போது தான், விதுன் அந்த டேகை பார்த்தான்.

துருவ் ‘இது வேற எரிச்சலா இருக்கு’ என்று சொல்லி, கையில் இருந்த பேஷண்ட் டேகை விதுவிடம் கொடுக்க, அவன் ஏதோ ஞாபகத்தில் அவன் கையில் போட்டிருந்தான்.

பின், அவன் “ப்ச் இதை போட்ருந்தா உடனே பேஷண்டா” என்று கோபமாக கேட்க,

அவள் “நீங்க வீல் சேர்ல இருந்தீங்க அதான் நான்” என்று தலையை சொரிந்தாள்.

அவன் மேலும் கடுப்புடன் கத்த, அதன் பிறகே அவளுக்கு செய்த தவறு புரிந்தது.

“சார் சார் சாரி சார்.. நான் இப்போதான் லாஸ்ட் இயர் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் சார். தெரியாம நடந்திருச்சு கத்தாதீங்க சார்” என்று கெஞ்ச,

அவன் “என்னது தெரியாம பண்ணுனியா. தெரியாம வேற ஏதாவது ஊசியை போட்ருந்தா என்ன ஆகியிருக்கும். இப்போ என்ன கருமத்தை போட்டுவிட்ட மயக்கமா வருது” என்று தள்ளாடி நிற்க,

அவள் “அது ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷ்ன் தான் சார் ..” என்று சொல்ல மேலும் கத்தினான்.

அதில் கடுப்பானவள் “ஹலோ சார்  நான் என்ன விஷ ஊசியா போட்டேன். மயக்க ஊசி தான போட்டேன். ரொம்ப தான் கத்துறீங்க” என்று சொல்ல, அவன் அவளை தீயாய் முறைத்தான்.

அந்த நேரம் அர்ஜுன் அங்கு வர, “என்ன அனு… என்ன ஆச்சு” என்று கேட்க, அவள் அர்ஜுனை பார்க்கவும் மிரண்டு, “அது ஒன்னும் இல்ல சார்” என்று ஊசியை மறைத்தாள்.

விது “என்னது ஒன்னும் இல்லையா. டேய் உங்க ஆஸ்பத்திரிக்கு வந்தா இப்படித்தான் எல்லாருக்கும் ஊசி போட்டு கொலை பண்ண பார்ப்பீங்களா.” என்று சொல்ல,

அர்ஜுன், “என்னடா சொல்ற..” என்றதும் தான் அனுவிற்கு அவன் அர்ஜுனுக்கு தெரிந்தவன் என்றே தெரிந்தது.

அர்ஜுனுக்கு தெரிந்தால் தன்னை திட்டி சஸ்பெண்டே செய்து விடுவான் என்று விதுவிடம் “சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவள் முகத்தில் என்ன கண்டானோ…
“ஒன்னும் இல்ல” என்று சொல்லி விட்டான்.

“ஒன்னும் இல்லாததுக்கா இப்படி கத்துன” என்று முறைத்து விட்டு செல்ல,

அனு தேங்க் காட்.. என்று நினைத்து விட்டு, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று அங்கிருந்த நகர போக, அவன் அவள் கையை பிடித்தான்.

“என்னது தேங்க்ஸ் ஆ… இத்துனூண்டு தேங்க்ஸ்க்கா உன்னை போட்டுகுடுக்காம இருந்தேன். ரொம்ப தூக்கம் வரமாதிரி இருக்கு போய் டீ வாங்கிட்டு வா.” என்று கெத்தாக சொல்ல,

அவன் “வாட்… மீ டீ வாங்கணுமா. ஐ ஆம் அ டாக்டர். ஹொவ் கேன் யு” என்று நளினமாக பேச,

விது ” நீ போலி டாக்டர் தான… ஒரு ஊசியாவே உனக்கு குத்த தெரியல. இரு உன்னை அர்ஜுன் கிட்ட சொல்றேன்” என்றதும்,

“சார் சார் அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடாதீங்க சார். என்னை திட்டுவாங்க” என்று சொல்லிவிட்டு,

“உங்களுக்கு டீ தான வேணும் நானே என் கையால போட்டு உங்களுக்கு எடுத்துட்டு வரேன் சார்” என்று விறுவிறுவென சென்றாள்.

விது.. ‘அட அட… நமக்கு ஒரு அடிமை சிக்கிருச்சு. இங்க இருந்து போற வரை நல்லா டைம் பாஸ் பண்ணலாம்…’ என்று அவள் சென்ற திசையை பார்த்து சிரித்துக் கொண்டான்.

உறைதல் தொடரும்…
– மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
51
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.