Loading

அத்தியாயம் 24

“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?
இல்லை ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?”

காரை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலுக்குள் செலுத்தியபடி, வானொலி பாடிய பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள் ஷைலேந்தரி.

“கல்யாணம் கட்டிட்டும் ஓடிப்போக தேவை இல்ல. ஓடிப்போயும் கல்யாணம் பண்ண தேவையில்லை. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் எல்லாம் ஓசில தேய்க்க, ரெடிமேடா ஒருத்தனை ஹஸ்பண்ட் ஆக்கி வச்சுருக்கேன்…” எனக் குதூகலித்தாள்.

சில மணி நேரங்களுக்கு முன்பு, ஷாப்பிங் செல்லக் கிளம்பிய ஷைலேந்திரியைத் தடுத்து நிறுத்தினான் மைத்ரேயன்.

“ஆபிஸ் டைம்ல எங்க போற?”

“ஆபிஸ் டைம், ஹோம் டைம்னு எங்கடா ரெஸ்ட் குடுக்குறீங்க… அதான் நானே ஆபிஸ்டைம்ல ஷாப்பிங் போறேன்” என சிலுப்பியபடி கிளம்ப எத்தனிக்க, “இரு நானும் வரேன்! நமக்கு மேரேஜ் ஆகி பர்ஸ்ட் டைம், நீ மட்டும் வெளில போனா நல்லா இருக்காது. சேர்ந்தே போகலாமே…” எனக் கேட்டதும், அவளுக்கும் ஒரு சில்லென்ற உணர்வு.

அதனை வெளிக்காட்டாமல், “அப்போ அப்போ மேரேஜ் ஆகிடுச்சுன்னு அனவுன்ஸ் பண்ணுடா மைதா. மறந்து போயிடுது!” எனக் குறும்புடன் கூறியவளை முறைத்தவன், “அதுக்கு என்ன சிறப்பா ஞாபகப் படுத்துறேன்” என்றபடி அவள் அசந்த நேரத்தில் அவளை மென்மையாய் கட்டிக்கொண்டான்.

நொடிகளில் நேர்ந்த அணைப்பு அவளை அதிர வைத்தது. அவனைத் தொட்டுப் பேசியதில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது தான். சில நேரம் வேதனையின் போதும், அதீத மகிழ்வின் போதும் தோளோடு அணைத்திருக்கிறாள் தான். ஆனால் அப்போதெல்லாம் கரத்திலிருக்கும் பூனை முடிகள் சிலிர்த்ததில்லை. அப்போதெல்லாம் இதயம் தாறுமாறாகத் துடித்ததில்லை. அப்போதெல்லாம் இந்த அணைப்பின் நீளம் வேண்டுமென்று நெஞ்சம் கெஞ்சியதில்லை. இப்போதோ? அனைத்தும் தலைகீழாக, அவனையே புதிதாய் பார்ப்பதுபோல, வாழ்நாள் முழுமைக்கும் இனி பாதுகாப்பான கூட்டினுள் அடைந்து விட்டது போலொரு உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது.

இவையெல்லாம், மஞ்சள் கயிற்றின் மேஜிக் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இருவருக்குமே எதிர்பாராத திருமணம் என்பதாலும், அவளுக்கும் காதல் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்ததாலும் இப்போது கணவன் என்ற உரிமை கிடைத்த பிறகு, கணவன் மீது இயல்பாகத் தோன்றும் சிலிர்ப்பு என்று எண்ணிக்கொண்டவளுக்கு, ஒரு கணம் அவனுமே திருமணம் நிகழ்ந்து விட்டதால், அந்த உறவிற்கு மதிப்புக் கொடுத்து காட்டும் உரிமையான அக்கறை என்ற உண்மை முகத்தில் அறைந்தது.

மெல்ல அந்த விருப்பமற்ற நிஜத்தை விழுங்கி கொண்டவள், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக நின்றாள்.

அவளுடனான முதல் அணைப்பில் அவன் தான் வானத்தில் பறந்து கொண்டிருந்தான். அவளும் அவனைத் தடுக்கவில்லையே என்ற மகிழ்வில் இருந்தவன், அணைப்பிற்கு பின்னான அவளது உணர்வற்ற பார்வையில் ஏனோ சுக்கு நூறாக உடைந்து போனான்.

அவளுக்குத் தன் மீது தனி விருப்பம் எப்போதும் வராதென்ற நிஜம் சுட்டது. அதில் அவன் மீதே கோபம் கொண்டவனுக்கு, அப்போதும் அவனது காதலை உரைக்காத மடத்தனம் புரியவே இல்லை. சட்டென அவள் மீதிருந்த பார்வையைத் திருப்பியவன், “ஷிட்! இப்ப தான் ஞாபகம் வருது. மேட்ரிமோனி ஆப்ல ஒரு இஸ்யூ இருக்கு. அதை இப்பவே முடிக்கணும். நீ மட்டும் போயிட்டு வர்றியா ஷைலா?” என்றான் சமாளிக்கும் விதமாக.

அவனை முறைத்தவள், “நான் உன்னை கூட வான்னு சொன்னேனா? நீயா தான ஆஜர் ஆன” என எரிந்து விழுந்து விட்டு நகரப்போக, “இருடி…” என்றவன் தனது கார்டை அவளிடம் நீட்டினான்.

“உனக்கு எது வாங்குறதா இருந்தாலும் இதுல வாங்கு” என்றவனை மேலும் கீழும் பார்வையால் அளந்தவள், அந்த கார்டை மறுக்காமல் வாங்கி விட்டு, “ரொம்ப தாராள மனசுடா உனக்கு. அப்படியே உன் டெபிட், க்ரெடிட் கார்ட் எல்லாத்துலயும் எப்பவும் பணத்தை பில் பண்ணி வை. நான் அன்லிமிட்டடா யூஸ் பண்ணுவேன்” என்று கேலியுடன் கூறி விட்டுச் செல்ல, அவன் தலையாட்டிச் சிரித்துக் கொண்டான்.

ஷைலேந்தரி இவற்றை எண்ணியபடியே நேராக மாலுக்குச் சென்றாள். சிறிது நேரம் அங்கும் இங்கும் உலாவியவள், கூலர்ஸை மாட்டிக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.

வாஷ்பேசின் மீது தனது ஹேண்ட் பேகை வைத்தவள், தனது ஐயனிங் செய்யப்பட்ட கூந்தலை சரி செய்து விட்டு, கலைந்திருந்த லிப்ஸ்டிக்கை சரி செய்யும் விதமாக பேகைத் திறந்து உதட்டுச் சாயத்தை எடுத்தாள்.

அந்நேரம், அவளுக்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண், வாஷ்பேஸினில் கையைக் கழுவி விட்டு, அவர் கைக்கு மிக அருகில் இருந்த ஷைலேந்தரியின் ஹேண்ட் பேகில் கண்ணிமைக்கும் நேரம் எதையோ போட்டு விட்டு இயல்பாக நடந்து வெளியில் சென்று விட்டார்.

ஷைலேந்தரியும் பேகை மூடி விட்டு ட்ரெண்ட்ஸ் கடையினுள் நுழைந்தவள், அலைபேசி வாயிலாக, “ரிஸீவ்ட்…” என யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, வெற்றிப்புன்னகை வீசினாள்.

—–

ஒரு மணி கடந்தபிறகே கண்ணைச் சுருக்கி விழித்தாள் விஸ்வயுகா. தலைவேறு வலித்தது.

யுக்தா சாகித்யனின் மெத்தையில் தான் படுத்திருந்தாள். சோபாவில் அவன் மீது சாய்ந்தே உறங்கிப்போன ஞாபகம். ஆனால், இங்கு எப்படி வந்தோம்? என்ற கேள்விக்கு விடை கண்டறிவது ஒன்றும் அத்தனை கடினமானதாக இல்லை.

அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்க, கலைந்த கூந்தலை கையாலேயே சரிபடுத்திக்கொண்டவள், அவனது குளியலறைக்குள்ளேயே சென்று காயத்தில் படாமல் முகத்தில் தண்ணீரை அடித்தாள்.

வெளியில் வந்தவள் முகம் துடைக்க துவாலையைத் தேடிவிட்டு காணாமல் யுக்தாவிடமே வந்தாள். அவன் ஒரு கையால் பிரெட் ஆம்லேட்டை உண்டபடி, மற்றொரு கையால் இரண்டாவது பிரெட் ஆம்லேட்டை டவாவில் தயாரித்துக் கொண்டிருந்தான்.

“டவல் எங்க இருக்கு?” பெண்ணின் குரல் கேட்டதும் திரும்பியவன்,

“நொவ் பெட்டெர்?” எனக் கேட்டபடி அறைக்குள் புகுந்து கதவுக்குப் பின்னால் ஹேங்கரில் மாட்டி இருந்த துவாலையை எடுத்து நீட்டினான்.

அவளோ வாங்காமல், “இது நீ யூஸ் பண்ணதா? புதுசு இல்ல?” எனப் புருவம் நெறித்துக் கேட்க, அக்கேள்வியில் எப்போதும் போல குறும்புத்தனம் தலைதூக்கியது அவனுக்கு.

“நீ படுத்து உருண்டியே மெத்தை… அது நான் யூஸ் பண்ணது தான். உன் கன்னத்தை அழுத்தி வச்சு என் நெஞ்சுல சாய்ஞ்சு தூங்குனியே. நான் போட்டுருந்த சட்டையும் பல தடவை நான் யூஸ் பண்ணது தான்” எனக் கேலிப்புன்னகை புரிய,

பற்களை நறநறவெனக் கடித்தவள், “வேற டவல் யூஸ் பண்ணுனா எனக்கு ஸ்கின் அலர்ஜி ஆகும். டிஷ்ஷியூ கூட இல்லையா வீட்ல. நீ தர்றதுக்குள்ள அதுவே காஞ்சுடும்” என எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டவள், அறையை விட்டு வெளியில் செல்ல எத்தனிக்க அவளை இழுத்து தன்னருகில் இறுக்கினான்.

பிரெட் ஆம்லேட்டை ஒரே வாயில் உள்ளே தள்ளியவன், “புது டவலும் இல்ல. டிஸ்ஸியூவும் இல்ல. நான் இருக்கும்போது எதுக்கு இது ரெண்டும்?” என்றவனின் கூற்று புரியும் முன்னே, அவனது முள்தாடி கொண்ட கன்னத்தை வைத்து அவள் கன்னத்தின் ஈரத்தை தேய்த்து துடைத்தான்.

“டேய்… யுக்தா… தள்ளுடா” என்று அவள் தள்ள முயன்றும் அவன் முழுதாய் அவள் முகத்திலிருந்த ஈரத்தை அழுந்த துடைத்தபிறகே விலகினான்.

அவனது ஸ்பரிசத்தினாலோ அல்லது தாடியின் தேய்வினாலோ அவள் கன்னங்கள் இரத்த நிறத்தில் சிவந்து போக, “சென்சிடிவ் ஸ்கின்டி உனக்கு” என்று அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடினான்.

அதனை வெடுக்கென தள்ளிவிட்டவள், “ஸ்டே இன் யுவர் லிமிட் யுக்தா” என்று விரல் நீட்டி எச்சரிக்க, “என் லிமிட் எதுன்னு நீ சூஸ் பண்ண முடியாது ஏஞ்சல்” என அவனும் குதர்க்கமாக பதில் கூறியபடி அடுக்களைக்குச் சென்றான்.

அங்கு பிரெட் ஆம்லேட் கருகிப் போயிருக்க, விஸ்வயுகா முறைத்தாள்.

“அறிவில்ல. அடுப்பை ஆப் பண்ணாம வந்துருக்க” என்று அவசரமாக அடுப்பை அணைத்தவள், “காரை யாரு ஆக்சிடெண்ட் பண்ணுனதுன்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்டாள்.

அவன் வேறொரு பேன் எடுத்து புதிதாய் பிரெட் ஆம்லேட்டை போட்டபடி, “இப்போ தான் காரை ட்ரேஸ் அவுட் பண்ணிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில அவனை என் டீம் மெம்பெர்ஸ் கொத்தா தூக்கிடுவாங்க” என்றபடி ஒரு தட்டில் பிரெட் ஆம்லேட்டை நிரப்பி அவளிடம் நீட்டினான்.

அதனை சில நொடிகள் வெறித்தவள், “எனக்கு வேணாம்!” என்றிட, “யூ மஸ்ட் பீ ஹங்க்ரி ஏஞ்சல். உனக்காக ஹைஜீனிக்கா பண்ணிருக்கேன்…” என்று பிரெட்டை பிய்த்து அவள் வாயில் திணித்தான்.

“ஸ்ஸ்ஸ்… சுடுதுடா” என முகத்தைச் சுருக்கியவளுக்கு பசியின் அளவே அப்போது தான் தெரிந்தது.

“ஆமா அதென்ன ஹைஜீனிக்கா?” என்று கேட்டபடி அவளே தட்டை வாங்கி விரும்பி உண்ணத் தொடங்க, அதனை ரசித்தவன் “எப்பவும் கையையும் கடாயையும் கழுவாம செய்வேன். இன்னைக்கு கழுவிட்டு செஞ்சுருக்கேன்…” என்றான் சிரியாமல்.

அவன் கூறிய தோரணையில் அவளுக்கும் முறுவல் பிறந்திட, அதனை உதட்டுக்குள் மறைத்தவள், “ப்பா… வாட் அ ஹைஜீனிக் ஃபுட்!” எனப் போலி வியப்பைக் காட்டினாள்.

அதில் அவனும் பளீரெனப் புன்னகைக்க, அது அவளிடமும் தொற்றிக்கொண்டதில் சில நிமிட மௌன இதம் அங்கு ஆட்கொண்டது.

அதனைக் கலைக்கும் விதமாக யுக்தாவின் அலைபேசி ஒலித்தது. அருண் தான் அழைத்திருந்தான்.

“சார் உங்க கார ஹிட் பண்ணவனைப் பிடிச்சாச்சு. பேர் ருஹான். டெல்லில உங்க டீம்ல இருந்த வீரோட ரிலேட்டிவ் சார். அவரைப் பிடிச்சதுமே வீர் சார் கால் பண்ணிட்டாரு. இப்ப என்ன செய்றது?”

“நோ! நான் வர்றது வரைக்கும் அவன் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது” என்று கண்டித்ததில், அருணும் ஒப்புக்கொண்டான்.

யுக்தா அழைப்பைத் துண்டித்ததுமே, “என்ன ஆச்சு யுக்தா? யாரு ஆக்சிடென்ட் பண்ண ட்ரை பண்ணது? இதுவும் சீரியல் கில்லர் வேலையா” என விழிகளை விரித்து அவள் கேட்க,

“இல்லடி. இது ஒரு அரை மெண்டலு. டெல்லில எனக்கும் என் கோ கொலிக் வீர்க்கும் எப்பவுமே க்ளாஷ் தான். ஒருதடவை அவனோட கசின் ருஹான் ரன் பண்ணிட்டு இருந்த எக்ஸ்போர்ட் ஆபிஸ்ல ஒரு மர்டர் நடந்துடுச்சு. அதை பத்தி விசாரிக்க, நான் ருஹான்கிட்ட ரூடா பிஹேவ் பண்ண வேண்டியதா போய்டுச்சு. பட் இட்ஸ் அ பார்ட் ஆஃப் இன்வெஸ்டிகேஷன். சிலரை அடிச்சு தான் விஷயத்தை வாங்கணும்னா அதை செய்ய நான் யோசிக்கவே மாட்டேன். அதை தான் அவனுக்கும் செஞ்சேன். ஆனா, வீர் அதை ஒரு வெஞ்சன்ஸா எடுத்துக்கிட்டான், அவன் மட்டும் இல்லை ருஹானும் சேர்ந்து தான்… பொலிட்டிகல் பவர் வச்சு என்னை முடிச்சு விடலாம்னு பார்த்தானுங்க. முடியல! அதான் இப்படி சீப்பா ஒரு ஆக்சிடென்ட் ரெடி பண்ணிருக்கான் அந்த பாஸ்டர்ட். அவனுக்கு இருக்கு…” என்று கோபமும் விளக்கமும் கலந்து கூறி முடித்தவன், “உன்னை டிராப் பண்ணிட்டு நான் ஆபிஸ்க்குப் போறேன்” என்றான்.

“ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் வம்பு வளர்த்து வச்சா இப்படி தான் போற போக்குல அடிச்சுத் தூக்குவாங்க. பியூச்சர்ல நானே செஞ்சாலும் செய்வேன்” என விஸ்வயுகா பாடுநக்கலாகக் கூற, அணிந்திருந்த டி- ஷர்ட்டைக் கழற்றி விட்டு வெள்ளைச் சட்டையை அணிந்தவனோ, “அதுக்குள்ள செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சுடுவேன் யுகா ஏஞ்சல். அட்லீஸ்ட் ஒரு குட்டி யுக்தாவையாவது உருவாக்கிட்டுத் தான் என் ஆன்மா சாந்தியடையும்” என்றான் ஊடுருவும் பார்வையுடன்.

“க்கும்… பெட்டர் லக் நெஸ்ட் ஜென்மம்!” என நொடித்தவள், “அந்த ருஹானை நானும் பார்க்கலாமா?” எனக் கேட்டாள் ஆர்வமாக.

“ஏன்?” புருவம் இடுங்க அவன் வினவ,

“போட்ட பிளான் நல்லா தான் இருந்துச்சு. ஆனா அவனுக்கு டைமிங் தெரியல. அதான், நானே அவனை பார்த்து வச்சுக்கிட்டா, அவனை வச்சே உனக்கு ஸ்கெட்ச் போடலாமே!” மீண்டும் ஒரு நக்கல் தொனி.

அவனை வச்சுக்கிட்டு “நீ க்ரேயான்ல கூட கோடு போட முடியாது ஏஞ்சல். ஏன் அவ்ளோ சிரமப்படுற” என்றபடி அவள் இடையைப் பிடித்து இறுக்கி அனைத்தவனோ, “உன் லிப்ஸ ஒன் ஹவர் ஒன்ஸ் டேஸ்ட் பண்ணக் குடு. அதுவே ஒரு ஸ்லோ பாய்சன். என்னை கொஞ்ச கொஞ்சமா செத்துப் பிழைக்க வைக்குது…” எனத் தாபம் வழியக் கூறியபடி, அவளது அதரங்களுக்கு புத்துயிர் கொடுத்தான் ஆணவன்.

அத்தியாயம் 25

 

யுக்தா சாகித்யனும் விஸ்வயுகாவும் அடுத்து சென்றது சிபிஐ அலுவலகத்திற்குத் தான். அங்கு நாற்காலியில் திமிராக அமர்ந்திருந்தான் ருஹான். வயது முப்பதை நெருங்கி இருந்தது.

யுக்தாவைக் கண்டதும் ஏளனப் புன்னகை வீசியவன், “ஜஸ்ட் மிஸ் ஆகிட்ட போல” என்றதில்,

அவன் முன்னே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்த யுக்தா, “நீ தான் ஜஸ்ட் மிஸ்ல மிஸ் ஆகிட்ட ருஹான். கார்ல நான் தனியா இருந்திருந்தா அப்பவே உன்னை சேஸ் பண்ணி இடிச்சுத் தள்ளி உன் டெட் பாடியை வச்சு அது நீ தான்னு கண்டுபிடிக்கவே பல வருஷம் இழுத்து உன்னைக் காணா பொணம் ஆக்கி இருப்பேன். வெல், இப்பவும் அது தான் செய்ய போறேன். பிகாஸ் யூ ஹிட்டிங் மை ஏஞ்சல்” என உறுமியவனின் குரலில் எரிமலையே வெடித்தது.

ருஹானோ, “சும்மா மிரட்டுற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. நான் நினைச்சா இந்த வேலையை இப்பவே உங்கிட்ட இருந்து பறிக்க முடியும்” என்று எழுந்தவன், யுக்தாவின் அருகில் நின்றிருந்த விஸ்வயுகாவை மேலிருந்து கீழ் வரை வைத்தக் கண் வாங்காமல் பார்த்து வைத்தான்.

அவனது சில நிமிடப் பார்வை அவளது மேனியெங்கும் ஊர்வலம் போயிருக்க, “சும்மா சொல்லக் கூடாது” என்று ஏதோ பேச தான் வந்திருப்பான், அவனது தோள்பட்டையில் யுக்தாவின் குண்டு ஒன்று பரிதாபமாக இறங்கியது.

ருஹானின் பார்வை விஸ்வயுகாவிற்கும் பிடிக்கவில்லை. விட்டிருந்தால் அவளே அவனது முகத்தைப் பஞ்சராக்கி இருப்பாள் ஆனால் அதற்குள் அவளவன் பெரியதொரு வேலையைப் பார்த்து வைக்க திகைத்து விட்டாள்.

ருஹானும் இதனை எதிர்பாராமல் தோள்பட்டையில் கையை வைத்து வலியில் துவள, இரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்ந்தனின் முன் ஒரு காலை மடக்கி அமர்ந்த யுக்தா சிவந்த விழிகளுடன், “இன்னொரு தடவை அவளை இந்தக் கண்ணு பார்த்துச்சு, அடுத்த தடவை உன் மூஞ்சியைக் கண்ணாடில பார்க்கக் கூட இந்தக் கண்ணு இருக்காது” என உட்சபட்ச கோபத்துடன் கொந்தளித்தவன், அருணை திரும்பிப் பார்த்து “வாஷ் ஹிம் அவுட்!” என்று உத்தரவிட, அவனோ ஸ்தம்பித்து நின்றிருந்தான்.

ருஹான் அத்தனை வலியிலும் ஏதோ பேச வர, அது கூட யுக்தாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மீண்டும் அவனது நெற்றியை நோக்கி துப்பாக்கியை நீட்டிருந்தவனை அத்தனை நேரமும் பிரம்மைப் பிடித்தது போல நின்ற விஸ்வயுகா தான் தடுத்தாள்.

“யுக்தா என்ன பண்ற? விடு அவனை” என்று தடுக்க, “உன்னை ஹிட் பண்ணதும் இல்லாம, எப்படி பார்த்து வைக்கிறான், அவனை உயிரோட விடுறதா நெவர்” என்று அலுவலகம் அதிர கர்ஜித்தவனைக் கண்டு திகைத்த விழிகளை படபடவென சிமிட்டினாள்.

“ஐயோ நீ முதல்ல வா!” என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியில் அழைத்துச் சென்றவள், காரின் அருகில் நிறுத்தி விட்டு, “பைத்தியக்காரா! சைக்கோ… சும்மா பார்த்ததுக்கு எல்லாம் எதுக்குடா கொலை பண்ற அளவு போற” என்று அதட்டினாள்.

“உன்னைத் தப்பா பாக்குறான் அவன். அது புரியலையா உனக்கு!” நரம்பு புடைக்க அவன் கத்த,

“நீ மட்டும் சரியா பார்த்தியா?” அவளும் சுருக்கென கேட்டாள்.

“மீ? மீ?” என்றவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ தெரியவில்லை. காலால் காரை படாரென குத்தித் தள்ளியவன், வெறிப்பிடித்தவன் போல, “நான் உன்னைத் தப்பா பாக்குறேனா? ஃபக் ஃபக் ஃபக்…” என்ற கர்ஜனையில் பார்க்கிங்கை அலற விட்டான்.

பின் அவள் கழுத்தை நெறித்தவன், “என் பார்வை வேற அவன் பார்வை வேற… அப்படியே தப்பா பார்த்தாலும் எனக்கு உரிமை இருக்குடி பொண்டாட்டி. நான் பார்ப்பேன். உன்னைத் தப்பா பார்ப்பேன். அவன் எப்படி பார்க்கலாம். யூ ஆர் டோட்டலி மைன் யூ ஃபக்கிங் இடியட். யூ ஆர் மைன்!” என ஆழ்ந்த குரலில் அழுத்தத்துடன் உரைத்த பிறகே அவளை விட்டான்.

அவன் பிடித்த பிடியில் இருமல் வர, தொண்டையை கனைத்து இருமியவளின் முகம் ஆத்திரத்தில் மின்னியது.

அவனது பின்னந்தலையைப் பிடித்து தன் முகத்தோடு இழுத்தவள், “இங்க பாரு! நீ எவ்ளோ கத்துனாலும் என்மேல ஆசைப்படுறது பேராசை தான். நீ நினைச்சது நினைக்கிறது எதுவுமே நடக்காது. ஐ ஆம் நாட் யுவர்ஸ். இந்த டிராமா எல்லாம் கேஸ் முடியிற வரை தான்” என்று சூடாக பதில் அளித்தாள்.

“கேஸ் முடிஞ்சதும் டிராமாவை ரியல் ஆக்கிடலாம் ஏஞ்சல். ஹௌஎவர் யூ ஆர் மைன்! உன்னை எவனாவது பார்த்தா கூட கொல்லுவேன்!” என்றவனின் வார்த்தைகளில் அளவுக்கு அதிகமான பொஸசிவ்நெஸ் வழிந்தோடியது.

“டேய் சைக்கோ! எனக்கே தெரியாம தாலி கட்டி வச்சுருக்க. என்னமோ என்னை உருகி உருகி காதலிச்ச மாதிரி சீன் போடுற” அவனது அழுத்தம் கண்டு அவளுக்குள் இருந்த அழுத்தம் இலேசாக கரைந்து கொண்டிருக்க, அதனை முழுதாய் கரைய வைக்கும் வார்த்தையை உரைத்தான் யுக்தா.

“எஸ் ஏஞ்சல். ஐ லவ் யூ…” அவள் கன்னம் பிடித்து அவளது கண்ணுக்குள் தனது அழுத்த விழிகளை கலக்க வைத்து நிறுத்தி நிதானமாக யுக்தா கூற, விஸ்வயுகா பேச்சிழந்து நின்றாள்.

சட்டென கண்ணைச் சிமிட்டி, “ப்ச் உளறாத. உனக்கு என்மேல இருக்குறது பக்கா பொஸசிவ்நெஸ். லஸ்ட். லவ் இல்ல”. என அவள் சமாளிக்க முற்பட,

“லவ் இல்லைன்னா அது ரெண்டும் எங்க இருந்து வரும் யுகா? ஐ ஆம் இன் லவ் வித் யூ. வித் யூ ஒன்லி…” எனத் தேய்ந்த குரலில் கூறியபடி அவனது கன்னத்தை அவள் கன்னத்தோடு தேய்த்தான்.

அவனது பேச்சிலும் செயலிலும் பெண்ணின் மனம் தடுமாறியது. தடம் மாறியது. தடதடத்தது.

அவனை மெல்லத் தள்ளியவள் “உளராதன்னு சொல்றேன்ல” என விலக முற்பட, அவனோ தனக்குள் இறுக்கமாய் அவளை அடக்கியபடி, “உளறுவேன். பிகாஸ் ஐ லவ் யூ! ஐ லவ் யூ ஏஞ்சல்” என சொல்லிக்கொண்டே இருந்தவன், அவளை நெஞ்சில் புதைத்து அழுத்தி அணைத்தான்.

அவள் கழுத்தினுள் முகம் புதைத்து, “நீ எத்தனை தடவை என்னைத் தள்ளிவிட்டாலும், திரும்பத் திரும்பச் சொல்லுவேன். ஐ லவ் யூ பொண்டாட்டி” எனக் கழுத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

எப்போதும் அவன் காட்டும் முரட்டுத்தனத்தில் இறுகுபவள், இப்போது அவளே அறியாமல் இளகினாள்.

அவளை மீறி முதன்முறை அவளது கரங்கள் ஆணவனின் முதுகில் மெல்லப் படர்ந்தது.

‘இது வேண்டாம்!’ என மூளை அடித்துக் கூற, மனமோ அவன் நெருக்கத்தை துளித்துளியாய் விரும்பத் தொடங்கியது.

“யுக்தா… ஸ்டாப் திஸ்…” பலவீனக் குரலில் அவள் மறுக்க, அவனோ நிறுத்தவில்லை. கழுத்தில் ஆரம்பித்த முத்தம் கன்னம், நெற்றி, செவி மடல், கண், மூக்கு, இதழ் என பாரபட்சமின்றி பரவியது. இம்முத்தங்கள் அவளை முதன்முறை நெகிழ வைத்தது. அவனுடன் இழைந்தாள்.

தேனுத்தட்டில் இளைப்பாறி முடித்தவன், மீண்டும் கழுத்தின் வழியே பயணத்தைத் தொடர முற்பட, இம்முறை நன்றாக தள்ளிவிட்டவள் “இதென்ன உன் வீடுன்னு நினைச்சியா?” என்று முறைத்து விட்டு, சிலிர்த்த தேகத்தை மறைக்க கையை வயிற்றுக்கு குறுக்கே கட்டிக்கொண்டாள்.

அவனோ மிச்சமுள்ள மோகத்தின் பிடியில், “ரொமான்ஸ் பண்ண இடம் பொருள் ஏவல் எல்லாம் தேவை இல்ல ஏஞ்சல்” என்றான் சிறு நகையுடன்.

அவளை இழைய வைத்த கர்வத்து ஆடவனின் விழிகள் கெக்களிப்புடன் புன்னகைத்ததை பாவம் அவள் அறியவில்லை.

மீண்டுமொரு முறை அவனைப் போலியாக முறைத்து வைத்தவள், “சீரியல் கில்லர் கேஸ் முடியிற வரை, ஏதாவது பிரச்சனையை இழுத்து வச்சு உன் வேலைக்கு வேட்டு வச்சுக்காத யுக்தா” என்று அதட்டினாள்.

“அதெல்லாம் அவனால ஒன்னும் செய்ய முடியாது. அப்டியே எது வந்தாலும் ஐ கேன் ஹேண்டில்” என்றபோதே அவனது அலைபேசி அழைத்தது.

அவர்தான் உச்சஸ்தாதியில் கத்தினார். “என்னடா பண்ணி வச்சுருக்க? நீ செஞ்ச வேலையால எவ்ளோ பெரிய இஸ்ஸியூ ஆகிடுச்சு தெரியுமா? நீ அங்க கேஸ் பார்த்து கிழிச்சது போதும். டெல்லிக்கு வந்து சேரு. உன்னை சஸ்பெண்ட் பண்ண டிஸ்கஷன் போயிட்டு இருக்கு” என்று பொரிந்தார்.

“சஸ்பெண்ட் பண்ணுனாலும் ஐ டோன்ட் கேர் சார்” என்றவன் நடந்ததைக் கூற,

“அதுக்காக ஷூட் பண்ணுவியா? இனி இதுல என்னால எதுவும் செய்ய முடியாது. பொலிடீஷியன் எல்லாம் உள்ள நுழைய ஆரம்பிச்சுட்டாங்க.” என்று எச்சரிக்க, தோளைக் குலுக்கி விட்டு போனை வைத்தவனை விஸ்வயுகா பார்வையால் எரித்தாள்.

அவளுக்கும் அவர் பேசியது அனைத்தும் கேட்டது! “உனக்கு கொஞ்சம் கூட வேலை போயிடும்னு பயம் இல்லையாடா?”

“இங்க எதுவும் நிரந்தரம் இல்ல ஏஞ்சல்” கூர்பார்வையுடன் கூறியவனின் கூற்றிலிருக்கும் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை என்றாலும் உள்மனம் அதனை ஏற்றுக்கொண்டது உண்மையே.

அவள் பதில் பேசாமல் நிற்க, “தி கிரேட் பிசினஸ்வுமனோட புருஷன் நானு. என்னை அடிச்சு தூக்க உன் மினிஸ்டர் மாமாவை ஏவி விட்ட மாதிரி, என் வேலையைக் காப்பாத்த எதுவும் செய்யாமலா போய்டுவ” என அவளது கன்னம் கிள்ளியதில் அதனை வெடுக்கென தள்ளிவிட்டாள்.

“என் பிசினஸ்க்காகவே நான் யார்கிட்டயும் போய் நிக்க மாட்டேன். இதுல உனக்காக ஒவ்வொருத்தனையும் காக்கா பிடிக்க சொல்றியா? அப்படி என்னடா கண்ணுமுன்னு தெரியாம கோபம் உனக்கு. கோபம் வந்தா ஷூட் பண்றது டூ மச் சொல்லிட்டேன்…” என்று மூச்சிரைக்க திட்ட, அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன், “என்னமோ தெரியல உன் விஷயத்துல என் கோபம் கண்ட்ரோல்க்கு வர மாட்டேங்குது…” என்றான் ரசனையாக.

“ம்ம்க்கும் நீ சிபிஐ ஆபிஸரா சினிமா டைரக்டரான்னு தெரியல. எப்ப பாரு ட்ரமாட்டிக்காவே பேசுறது” என்றவள் போனை எடுத்துக்கொண்டு தனியே சென்று மினிஸ்டருடன் சிறிது நேரம் விவாதித்தாள்.

அவரோ “ம்மா அவன் சுட்டது எம். பி யோட வருங்கால மருமகனைம்மா. சென்ட்ரல்ல கையை வச்சிருக்கான். இதுக்குள்ள நான் எப்படி நுழைய முடியும் சொல்லு” என்று நெற்றியைத் தேய்க்க,

“வருங்கால மருமகன் தான… வருங்காலம் இல்லாமல் பண்ணிடலாம்” என அழைப்பைத் துண்டித்து விட்டு மைத்ரேயனுக்கு போன் செய்தாள்.

“ஹே எங்கடி இருக்க? வர வர நீ ஆபீஸ்லயே இருக்க மாட்டேங்குற விஸ்வூ” என விளையாட்டாய் மைத்ரேயன் வினவ,

“மைதா… நான் சொல்றதை தெளிவா கேளு. அவன் பேர் ருஹான். அவனைப் பத்தின எல்லாம் கறுப்புப் பக்கத்தையும் தோண்டி எடுக்கணும், லைக் கேர்ள் ப்ரெண்ட்ஸ், சோசியல் மீடியா… எக்ஸட்ரா… இஃப் பாசிபிள் அவனோட மொபைலை ஹேக் பண்ணி அதுல இருக்குற சில பிரைவேட் வீடியோஸை லீக் பண்ணனும்” என்று தீவிரத்துடன் உத்தரவிட்டாள்.

“பிரைவேட் வீடியோஸ் இல்லைனா?” மைத்ரா புரியாமல் கேட்க, “கண்டிப்பா இருக்கும். அது ஒரு காஜி மாடுன்னு பார்த்தாலே தெரியுது” என்றாள் ஏளனமாக.

“அதுசரி யார் அவன்?” எனக் கேள்வி கேட்டாலும் அவனது கரங்கள் அவள் சொன்ன வேலையை துரிதமாகச் செய்ய முயல, விஸ்வயுகா நடந்ததைக் கூறினாள்.

இதுக்காகவா அவன் சுட்டான்? என்ற கேள்வியையும் கேட்க இயலவில்லை. யுக்தாவின் இடத்தில் மைத்ரேயன் இருந்திருந்தால் கூட அவனை அடி பொளந்திருப்பான்.

அதற்காக தன் தோழியிடம் அதிகமாக அவன் ஒட்டுவதும் பிடிக்கவில்லை. அதனால் எந்த அபிப்ராயத்தையும் கூறாமல் அவள் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தான்.

போனை உபயோகித்தபடியே காரின் மீது சாய்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை நோக்கி வந்தாள் விஸ்வயுகா.

“இப்போதைக்கு அவனை ஹோல்டு பண்ண ட்ரை பண்ணலாம். நீ முதல்ல இந்த கேஸை சால்வ் பண்ற வழியைப் பாரு. இல்லைன்னா அந்த டாக்டர் சொன்னது மாதிரி எல்லாமே கோ – இன்சிடென்ட்ன்னு ப்ரூவ் பண்ணு” என்றாள் கட்டளையாக.

அவனோ அதையெல்லாம் காதில் வாங்கியபடி முன்நெற்றியில் விழுந்த பாவையின் கூந்தலை வருடி பின்னால் நகற்றிக்கொண்டிருக்க, அப்போது ஸ்கூட்டி பெப்பில் ஒரு ஆடவன் வந்தான்.

அவனிடம் ஒரு அவசரம் தெரிந்தது. நேராக யுக்தாவிடம் வந்தவன், “சார் நான் கோபால். ரீசண்டா கல்யாண மண்படத்துல இறந்து போன வனஜாவைக் கல்யாணம் பண்ணிக்க இருந்தது நான் தான்” என விளக்கமளித்தான்.

பின், அங்கும் இங்கும் திரும்பி பயத்துடன் பார்த்து விட்டு, “சார் வனஜா தற்செயலா இறந்து போகல. அது ஒரு கொலை. கொலை செஞ்சவனை நான் பார்த்தேன்” என்று நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளை கர்சீப்பால் ஒற்றி எடுத்தபடி அவன் கூற, யுக்தாவும் விஸ்வயுகாவும் திகைத்தனர்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
121
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுக்தா விஸ்யூ காதல் அழகு தான்