Loading

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். எதிர்பாராத டெத்னாள நான் ஊருக்கு போக வேண்டியதா போய்டுச்சு. இப்பவும் ரிலேட்டிவ் ஹெல்த் issue நாள ஹாஸ்பிடல் வீடுமா தான் இருக்கேன். இன்னும் ஊருக்கே போகல. உங்க ரம்ஜான் வாழ்த்துகள், ஏன் யூடி போடலனு கேட்ட மெசேஜ் எதுக்கும் ரிப்ளை பண்ண முடியல ஃப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப சாரி. அடுத்த பதிவு திங்கள் அன்னைக்கு போடுறேன். ஹோப் அதுக்குள்ள ஊருக்கு போய்டுவேன். ஊனோடு ஸ்டோரி யும் எடிட் பண்ணி போட முடியல. இடையில டைம் கிடைச்சா அதையும் போட்டுடுறேன். Sorry for the inconveniences. நானே expect pannatha trip agiduchu. Monday free aagittu எல்லார் மெசேஜ் க்கும் ரிப்ளை பண்றேன் drs. ஆரவ பாக்காம நானும் ரொம்ப ஃபீல் ஆகிட்டேன்🙈🙈🙈 உங்க wishes க்கு romba romba thanks DRSSSS🤩🤩🤩🤩❤️❤️ போன் லயே type பண்ணேன். லேப்டாப் கூட எடுத்துட்டு வரல. 😭 ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா சொல்லுங்க drs crct paniduren. Last ud ku comment and stickers kudutha elarukum romba romba thanksssss😘😘 padichutu CMnts solunga drs… 🥰

 

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

அத்தியாயம் 24

ஆரவின் குறும்பு முகத்தில் வீழ்ந்த வான்மதி, அவனையே ரசனையுடன் பார்த்திருக்க, தன்விக்கின் கைகளில் சிக்காமல் ஓடிய மோனிஷா தான் வான்மதியை வியப்புடன் பார்த்தாள்.

எப்படி இவளால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடிந்தது? அதிலும் அத்தனை இறுகி இருந்தவளின் மனம், திடீரென பூத்த காதலால் மாறும் என்றெல்லாம் அவளால் நம்ப இயலவில்லை. ஆனாலும், அவளுள் பெரும் குழப்பம் சுழன்று கொண்டே தான் இருந்தது.

அந்த யோசனையுடனேயே நின்று விட்டவளின் தலையில் நங்கென்று கொட்டிய தன்விக், “என்னை போட்டு தள்ளிடுவியா?” என கோப பெருமூச்சுக்கள் வாங்க வினவ, அதையும் அவள் உணரவே இல்லை. அதன் பிறகே அவள் விழிகள் சென்ற திசையில் அவன் விழிகளும் பயணித்து ஆரவ், வான்மதியின் மீது நிலைத்தது.

ஆரவை காணும் போது இப்படி கூட எப்படி ஒருவனால் காதலிக்க இயலும் என்ற வியப்பு அவனுள் தோன்றாமல் இல்லை தான்.

அதே நேரம் நண்பனைக் கண்டு பெருமிதமும், நெஞ்சைக் குத்தும் வலியும் ஒரு சேர உருவாக, அதனை அடக்கிக்கொண்டு, “இதுக்கு முன்னாடி நீ உன் ஃப்ரெண்ட பார்த்ததே இல்லையா?” என்றான் கிண்டலாக.

அவளோ, “நான் பார்த்திருக்கேன் மாமா. பார்த்தனால தான், இப்போ இவளை ஆச்சர்யமா பாக்குறேன். அவ எந்த அளவு கஷ்டப்பட்டான்னு எனக்கு தெரியும். அவ்ளோ சீக்கிரம் மனசை விட்டு போகாத பெயின் தான். ஆனா எப்படி மாமா இவ ரெகவர் ஆனா…?” என சிந்தனையுடன் கேட்டவள், அவனை நோக்கி திரும்ப அவனோ முறைத்து வைத்தான்.

அதில், “இல்ல இல்ல. எல்லா பெயினும் காலப்போக்குல சரி ஆகும் தான். நான் இல்லைன்னு சொல்லல. இவ சேஞ்ச் ஆனதும் ஹேப்பி தான். பட், இந்த அளவு நான் எதிர்பார்க்கல.” என்றவளிடம்,

“அவள் கூட இருக்குறது என் ஃப்ரெண்டு” என்றான் காலரை தூக்கி விட்டு.

“அதுவும் கரெக்ட் தான்… ஆனாலும் ஏதோ ஒன்னு…” என அவள் இழுக்க,

தன்விக் தான், “இவ்ளோ நேரம் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர் பண்ணுன. இப்ப கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ற. உன்ன என் தலைல கட்டி வைச்சுருக்காங்க பாரு. அவங்களை சொல்லணும்…” எனக் கடுப்படித்தான்.

“ரொம்பத்தான்…” என்று சிலுப்பியவள், சிவந்த அதரங்களை சுளித்து வைக்க, ஒரு கணம் மனைவி என்ற உரிமையில் தன்விக்கின் கண்கள் அதன் மீது படிந்து மறுகணமே மீண்டது.

‘இருக்குற பிரச்சனைல இவ வேற சோதிக்கிறா.’ என கேசத்தைக் கோதி கொண்டவன், கவினின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

வான்மதி அப்போது தான், “கடைக்கு போகணும். கிளம்பலாமா?” என ஆரவிடம் வினவ, அவனும் அவளை அழைத்துச் சென்றான்.

இருவரும் மௌனத்துடனே பயணம் செய்ய, ஆரவ் தான் முதலில் அவ்வமைதியை உடைத்தான்,
“தேங்க்ஸ் கண்ணம்மா…” என்று.

அவள் எதற்கு என புரியாமல் பார்க்க, “தன்வி டைவர்ஸ்ன்னு சொல்லவும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். நீ மோனிஷாட்ட பேசி சரி செஞ்சதும் தான் ரிலீஃப் ஆ இருக்கு.” என்றான் மனமுவர்ந்து.

அதில் மெல்ல புன்னகைத்தவள், “என் பிரெண்டோட லைஃபும் அதுல அடங்கி இருக்கே. ரொம்ப டஃப் டைம்ல என் கூடவே இருந்து இருக்கா. பட், அது அவளை அஃபெக்ட் பண்ணும்ன்னு எதிர்பாக்கல ஆரவ்” என வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூற,

“ஷீ வில் பீ ஆல்ரைட் கண்ணம்மா. நானும் தன்விட்ட பேசுறேன். ஓகே வா?” என அவளின் கையைப் பற்றி ஆதரவாக அழுத்தியதில், அந்த தீண்டலின் வெப்பம் பாவையின் வருத்தங்களை உருக்கியது.

அப்படியே கடையும் வந்து விட, “நீ வேலையை முடிச்சுட்டு இஷுவை அழைச்சுட்டு வீட்டுக்கு போய்டுறியா மதி. ஆபிஸ்ல ஒர்க் இருக்கு.” என்றவனின் கேள்வியில், சரி என தலையசைத்தவள், இறங்கப் போக, “ஸ்வீட் கிஸ்?” எனக் கண்ணடித்தான்.

மோனிஷாவைக் கண்டதும், பழைய நினைவு அவ்வப்பொழுது தாக்கியதில் வேறு யோசனையில் மிதந்திருந்த வான்மதி, இப்போது ஆரவின் கண் சிமிட்டலில் சுத்தமாக மற்றவை மறந்து விட்டாள்.

“கடை வந்துருச்சு ஆரவ்.” என பதற்றத்துடன் சுற்றி முற்றி பார்த்தவளைக் கண்டு ஆரவிற்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

“நம்ம காருக்குள்ள தான இருக்கோம்?” வினவளுடன் அவனின் அழுத்த விழிகள் அவளை ரசனையுடன் ஆராய, அவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

“இஷு கையில இருக்கான் ஆரவ்.” என சமாளிக்க முற்பட்டவளிடம், “நான் வேணும்னா அவன் கண்ணை மூடிடுறேன் கண்ணம்மா.” என்றான் குறும்புடன்.

சற்றே தயங்கியவள், “வீட்டுக்கு போயிட்டு…” என்று மெல்லிய குரலில் கூற,

“இந்த ஸ்வீட் கிஸ், வீட்ல போய் தான் குடுக்கணும்ன்னு இல்ல கண்ணம்மா. எங்க வேணும்ன்னாலும் குடுக்கலாம்.” என்றவன், அவளின் பின்னந்தலை கூந்தலை பற்றி மெல்ல முன்னே இழுத்து, புருவ மத்தியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

ஏனோ, அம்முத்தம் அவன் பெயர் வைத்ததற்கு ஏதுவாக, உயிருக்குள் அத்தனை இனிப்பாக தான் ஊடுருவியது.

துளியும் காமம் இல்லை அந்த நெற்றி முத்தத்தில். கண் மூடி அந்த இதத்தை அனுபவித்தவள், சில நொடிகள் கழித்தே கண் திறக்க, எதிரில் ஆரவ் தான், இமை அசையாது அவளை மென் புன்னகையுடன் வருடிக் கொண்டிருந்ததில், வான்மதியின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

அதனை ரசித்துக் கொண்டே, இஷாந்திற்கும் ஒரு ஸ்வீட் முத்தத்தை பரிசளித்தவன், அவனிடமும் முத்தத்தை பெற்றுக்கொண்டு, வான்மதியை இன்னும் குறுகுறுப்புடன் காண, அவள் “நான் இறங்குறேன்…” என்றபடி நகர முற்பட்டாள்.

ஆனால், அவன் விட்டால் தானே, “சின்ன பையன், எப்படி குடுக்குறத திருப்பி தர்றான் பாரு.” என உதட்டைக் குவித்து முறைத்தவனைக் கண்டு அவளுக்குப் புன்னகை தோன்ற,

“சின்ன பையன் கூட அடம்பிடிக்காம சமத்தா இருக்கான். நீங்க தான் ரொம்ப சேட்டை பண்றீங்க” என்றாள் வெட்க முணுமுணுப்புடன்.

“நீ சமத்தா நான் கேட்டதை குடுத்தா நானும் சமத்து பையனா இருப்பேன்டி. இல்லைன்னா ரொம்ப சேட்டை பண்ணுவேன்.” என அவளின் கன்னம் கிள்ளி இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியவன், “கிஸ்ஸ்ஸ்ஸ்?” என ஸ் – ஐ அழுத்திக் கூறியபடியே கண்ணை மூடி நெற்றியைக் காட்டி அமர்ந்திருந்தான்.

அவனின் ஒவ்வொரு பாவனையையும் ரசித்து ருசித்தவளுக்கு, அவனை அள்ளி அணைக்க வேண்டுமென கரங்கள் பரபரத்தது.

கையை இறுக்கி மூடி அடக்கிக்கொண்டவள், வேறு வழியற்று மென்மையாக இதழ் ஒற்றலை பதித்து விட்டு, அவன் கண்ணைத் திறக்கும் முன்னே, கார் கதவை திறந்து வெளியில் சென்றிருந்தாள். கன்னங்கள் ரத்த நிறத்தை தத்தெடுத்திருந்தது.

அவள் சென்ற பின்னும் சில நிமிடங்கள் கண்ணை திறவாமலேயே ஸ்டியரிங்கை இறுக்கி பற்றியபடி அமர்ந்திருந்தான் ஆரவ் முகிலன்.

முகத்தில் வேதனையில் சாயல் அப்பட்டமாக தெறிக்க, மனமோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அனைத்தையும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையும், தைரியமும் பல மடங்கு இருந்தாலும், மீண்டுமொரு முறை காதலையும், அக்காதலை அள்ளிக் கொடுக்கும் பாவையையும் இழந்து விடுவோமோ என்ற உறுத்தல் உள்ளத்தை விட்டு அகலமாட்டேன் என சதி செய்ய, சதியும் விதியும் நிகழ்த்தி இருக்கும் கோர சிக்கலில் இருந்து விடுபடும் வழி புரியாது வெந்தான் ஆடவன்.

ஹேமா தன் வீட்டை நோக்கி, கலங்கிய முகத்துடன் வண்டியில் செல்ல, மனமோ புழுவாகத் துடித்தது.

ஆரவை நினைத்து மனம் வெகுவாய் காயப்பட்டாலும், வான்மதியை எண்ணி கலக்கமாகவும் இருந்தது. அந்நேரம், அவளை அணை கட்டுவது போல கார் ஒன்று அவள் முன்னே நிற்க, சட்டென்று பிரேக் போட்டவள், நிமிர்ந்து திட்ட வரும் முன் அமைதியாகி விட்டாள்.

சுதாகர் தான், அவளை வழிமறித்திருந்தான். காரில் இருந்து அவன் இறங்குவதைக் கண்டதும், எப்போதும் போல விழிகள் பல வண்ணத்தில் மின்னாமல், நிதானமாக இருந்தது.

அதனைக் கவனிக்கத் தவறியவன், “ஹாய் ஹேமா!” என எப்போதும் போல இளித்து வைக்க, அவள் லேசான புன்னகையுடன் “ஹாய்” என்றாள்.

அந்த அமைதியையும் கவனியாதவன், அவளை எதிர்பாராமல் சாலையில் தனியாக சந்தித்த மகிழ்வில், “என்ன ஆபிஸ் டைம்ல இந்த பக்கம்?” என்றான் ஆர்வமாக.

முதலில் புரியாது விழித்தவளுக்கு, அதன் பிறகே, அவன் கடைக்கு செல்லும் வழியில் தான் சென்று கொண்டிருப்பதே உறைத்தது. கை வந்த போக்கில் வண்டியை ஓட்டியவளுக்கு எங்கு செல்கின்றோம் என்ற நினைவே இல்லையே.

அவனோ மேலும், “என்னை பார்க்கவா?” என இன்னும் ஆர்வத்துடன் வினவ,

அவள் “இல்ல. பிரெண்ட் வீடு இந்த பக்கம் தான்.” என அவனைப் பாராமல் பதிலளிக்க, “நான் நம்பிட்டேன்” என்றான் சிரிப்புடன்.

அவள் மறுபேச்சின்றி வண்டியை கிளப்பத் தயாராக, வண்டி சாவியை கையில் எடுத்தவன், “உன்ட்ட பேசணும் ஹேமா!” என்க,

“என்கிட்ட என்ன பேசணும்?” என அவள் புருவம் சுருக்கினாள்.

“அதை நடு ரோட்டுல சொன்னா டீசண்டா இருக்காதே” என்றவனின் கண்களில் காதல் வழிய, “நான் இன்னும் லன்ச் சாப்பிடல. சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே.” என தலை சாய்த்தான்.

“நான் சாப்பிட்டேன் சுதாகர். இன்னொரு நாள் பாக்கலாம்” என்றவள் கிளம்புவதில் குறியாக இருக்க,

“அட்லீஸ்ட் கம்பெனி குடேன். நான் ஒன்னும் ரெண்டு தடவை சாப்ட்டா உன்ன கண்ணு வச்சிட மாட்டேன்.” என கேலியுடன் அவளை வம்படியாக ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

அவள் எங்கும் வேடிக்கை பாராமல், நேராக இருக்கையில் வந்து அமர்ந்து விட்டு, “என்ன பேசணும்ன்னு சொல்லுங்க!” என்று கேட்க,

“நீ என்ன சாப்புடுற?” என அவன் எதிர்கேள்வி கேட்டான்.

“எனக்கு எதுவும் வேணாம்” என்றதை காதில் வாங்காமல், “ஐஸ்க்ரீம்?” என கேட்டவன், அதனை ஆர்டரும் செய்தவன், அவனுக்கும் உணவை ஆர்டர் செய்து விட்டு, அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனின் பார்வை அவளுக்கு தான் சங்கடமாக இருக்க, அவனை எதிர்கொள்ள இயலாமல் அவனைத் தவிர, மற்ற அனைத்தையும் பார்வையிட்டாள்.

ஆனாலும், ஒரு கட்டத்தில் ஹேமாவின் விழிகள், சுதாகரின் விழியோடு மோதிட காயமானது என்னவோ அவளின் இதயம் தான்.

சுதாரித்து சட்டென்று விழியைத் திருப்பியவளின் கன்னம் பற்றி அவன் கண்ணைக் காண வைத்த சுதாகரை திடுக்கிட்டுப் பார்த்தவள், அசையாமல் அமர்ந்திருக்க,

சுதாகர் புன்சிரிப்புடன், “எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது ஹேமா. சொல்ல வந்ததை நேரடியா சொல்லிடுறேன்.” என்றவன் சிறிது இடைவெளி விட்டு, ரசனையுடன்,

“ஐ லவ் யூ. உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். உனக்கும் என் மேல ஒரு க்ரஷ் இருக்குன்னு எனக்கும் தெரியும். இருந்தாலும், உன் விருப்பத்தை வாய் வார்த்தையா கேட்கணும். அப்பறம் நானே உன் வீட்ல பேசி சம்மதம் வாங்குறேன்” என சரளமாக பொறுமையாக தன் நேசத்தை எடுத்துரைத்தான்.

ஒரு நொடி அவனின் நேரடி தாக்குதலை எதிர்பாராமல் தடுமாறியவள், சலனமின்றி கன்னத்தில் இருந்த அவனின் கரத்தை எடுத்து விட்டாள். அப்போது அவன் ஆர்டர் செய்த உணவும் வர, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவள், “முதல்ல சாப்பிடுங்க” என்றாள்.

அவளிடம் சிறு வெட்கத்தையோ அல்லது கோபத்தையோ எதிர்பார்த்தவனுக்கு சிறிது ஏமாற்றம் பரவினாலும், அவளின் திமிர் பார்வை ரசனையையும் கொடுக்க,

“உன் விருப்பத்தை சொல்லு. நான் சாப்பிடுறேன்.” என்றவனும் அவளை போன்றே நாற்காலியில் சாய்ந்து கையை கட்டி அமர,

“நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் சொல்றேன்” என அவள் பிடிவாதம் பிடிக்க, அவனும் அவளை ஊடுருவியபடி உணவை உண்டான்.

அவளுக்கு வந்த ஐஸ்க்ரீமையும் உண்ணும் படி, கண்ணைக் காட்டிட, அவளும் வேறு வழியின்றி அதனை உண்ண, தொண்டைக்குழிக்குள் குளிராக இல்லாமல் சூடாக இறங்கி சுட்டது.

இருவருமே, விருப்பமின்றி உண்டு முடிக்க, “ம்ம்… சொல்லு” என்றான் சுதாகர்.

அவளோ அடக்கப்பட்ட கோபத்துடன் “என்ன சொல்லணும் சுதாகர்? நான் என்ன சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?” என்றவள், அவன் ஏதோ பேச விழைந்ததில் அவனைத் தடுத்து, “வெய்ட் நான் பேசி முடிச்சுடுறேன்” என்றிட, அவன் மௌனத்துடன் அவளைக் கண்ணை சுருக்கி ஏறிட்டான்.

“இங்க பாருங்க சுதாகர். நான் விளையாட்டுக்கு உங்களை சைட் அடிச்சு கிண்டல் பண்ணுனேன் தான் இல்லைன்னு சொல்லல. ஆனா விளையாட்டு வேற வாழ்க்கை வேற. என் பிரெண்ட் வைஃபோட அண்ணன்ற ஒரே காரணத்துனால தான் இப்ப கூட உங்க கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன். உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது சுதாகர். இனிமே இதை பத்தி பேச வேணாம்.” என அழுத்தமாக உரைத்தவள் எழ முற்பட, சுதாகர் சுண்டிய முகத்துடன், “இன்னும் பேசி முடிக்கல ஹேமா” என்றான் சற்றே கோபத்துடன்.

அதில் இருக்கையில் மீண்டும் அமர்ந்தவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன், “ஏன் உனக்கும் எனக்கும் செட் ஆகாது?” என கூர்மையாக கேட்க,

“எப்படி ஆகும்ன்னு நினைக்கிறீங்க சுதாகர். முதல்ல உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? என் ப்ரெண்டுக்கு என்ன குறை சுதாகர்? அவனை காயப்படுத்தி வான்மதிக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டேன்னு சொன்னவங்க, என்னை மட்டும் எப்படி ஏத்துப்பாங்க” என்று காரமாக வினவ, சுதாகரின் மேனி அதிர்வில் சிதைந்திருந்தது.

அவளோ மேலும், “நானும் நேரடியாவே சொல்றேன். எனக்கு உங்க பேமிலியை சுத்தமா பிடிக்கல சுதாகர். நீங்க கேட்கலாம் என் குடும்பத்தையா கல்யாணம் பண்ணிக்க போற என்னை தான கல்யாணம் பண்ணிக்க போறன்னு. ஆனா, என்னை பொறுத்தவரை கல்யாணம்ன்றது ரெண்டு குடும்பத்தோட சங்கமம் தான். கண்டிப்பா உங்க வீட்ல என்னை ஏத்துக்க போறது இல்ல. கல்யாணத்துக்கு அப்பறம் உங்களுக்கும் சங்கடம். எனக்கும் மன கஷ்டம். அப்படிபட்ட காதலும் கல்யாணமும் எனக்கு தேவை இல்ல சுதாகர்.

அப்பறம் சொல்ல மறந்துட்டேன். என் அக்காவுக்கு 15 நாள்ல கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. அவளுக்கு பார்த்த மாப்பிளையோட தம்பியை தான் எனக்கும் பேசி இருக்காங்க. அவள் கல்யாணம் முடிஞ்ச கையோட எனக்கும் தேதி ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க.” என்று சிறிதும் பிசிறில்லாமல் கூறி முடித்தவளை வெறித்தான்.

“எனக்கு புரியல. உன்னோட எந்த ப்ரெண்ட என் வீட்ல வேணாம்ன்னு சொன்னாங்க?” அவன் இறுக்கத்துடன் வினவ, “ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்றாள் சற்றே கடுப்புடன்.

அதன் பிறகே, முதலில் ஆரவை தான் முதலில் வான்மதிக்கு பார்த்தது என உரைத்ததில், சுதாகருக்கு நெஞ்சம் வலித்தது.

அத்தனையையும் தன்னிடம் பகிர்ந்தவன், இதனை கூறாமல் விட்டுவிட்டானே… என நொந்தவனுக்கு, வீட்டினர் மீது கடும் கோபமே வந்தது.

அவன் முகத்தை பாராமல் ஹேமா கிளம்பியே விட, அவள் தந்த காதல் வலி அவனுள் தீயாக பரவியது.

அலுவல் முடிந்து இரவு எட்டு மணி அளவில் வீட்டை அடைந்த ஆரவ், அறைக்குள் சென்று பார்க்க அங்கு இஷாந்த் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான்.

‘இவ எங்க போனா…’ என வான்மதியைத் தேடிக் கொண்டு சமையலறைக்குள் சென்றவனின் குரல், “என்னடி செஞ்சிட்டு இருக்க?” என அதட்டலாக வெளிவந்தது.

அதில் சட்டியில் கொட்ட வேண்டிய கோதுமை மாவை பதறி கீழே போட்டுவிட்ட வான்மதி, “ஏன் ஆரவ் இப்படி கத்துனீங்க பயந்தே போய்ட்டேன்.” என்றாள் இடுப்பில் கை வைத்து.

அவள் விழியில் எழுந்த அடக்கப்பட்ட சிரிப்புடன், “நான் இல்லாதப்ப கிட்சன்க்கு வராதன்னு சொல்லி இருக்கேன்ல…” என்றவன், கீழே அமர்ந்து அவள் கொட்டிய மாவை அள்ளப் போக,

“நீங்க வர்றதுக்குள்ள சப்பாத்தி மாவு ரெடி பண்ணலாம்ன்னு தான்…” என்ற போதே அவளும் கீழே அமர்ந்து மாவை அள்ளப் போக, கூடவே கன்னங்களும் சிவந்து நின்றது.

அதனை கள்ளப்பார்வையுடன் ரசித்தவன், “ஒரே ஒரு தடவை தான் கத்துக் குடுத்தேன். அதுக்குள்ள சப்பாத்தி மாவு ரெடி பண்ண கத்துக்கிட்டியா மதி?” எனக் கேட்டவனின் குரல் வேறொரு அர்த்தத்தை தாங்கி இருக்க, உதட்டை அழுந்தக் கடித்து சிவப்பை அடக்கினாள் அவள்.

“ம்ம். கத்துக்கிட்டேன்.” என அவனைப் பாராமல் பதில் அளித்தவளுக்கு மாவை எடுக்கும் போதே கைகள் லேசாக நடுங்கியது.

இன்றும் முந்தைய நாள் போல் முத்தம் கொடுத்து விடுவானோ… என்ற பதட்டம் சூழ்ந்தாலும், மனமோ அவன் முத்தமிட்ட கணத்திலேயே உறைந்திருந்தது.

அவன் இதழ்கள் உரசிய கன்னங்கள், இப்போதும் அவனின் மீசை கொடுத்த காயத்தை உணர்ந்தது போல, சில்லிட்டு இருக்க, அவளின் பாவனைகளை படம் பிடித்தவன்,

“இப்படி எல்லா மாவையும் கொட்டி வச்சுட்ட. இதை எடுக்கவே லேட் ஆகும் போல” என சலித்துக் கொண்டான்.

“நீங்க போங்க. நான் அள்ளிடுறேன்.” என்றவளின் கரங்கள், கோதுமை மாவை பாத்திரத்தில் போட்ட படி இருக்க, கூடவே கண்ணில் வந்து விழுந்த கூந்தலையும் அவ்வப்பொழுது பின்னால் தள்ளிக் கொண்டது.

அதில் அவளின் நெற்றியில் ஆங்காங்கே மாவின் தடயம் இருக்க, அவனின் மனமோ தறிகெட்டு ஓடியது.

“ம்ம். இப்படி அமைதியா இருந்தா லேட் ஆகும். சோ ஒரு கேம் விளையாடலாமா?” எனக் கேட்டான் அவளை ரசித்துப் பார்த்தபடி.

‘அவன் குரலே சரி இல்ல மதி. எஸ்கேப் ஆகிடு.’ என மனம் அறிவுறுத்தும் போதே, அவளின் தலை ஆமோதிப்பாக ஆடியது.

அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவன், “பட், கேம்க்கு இடைல பின் வாங்கக் கூடாது. இப்போவே பயமா இருந்தா நோ சொல்லிடு” என்றவனின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்,

“எனக்கு என்ன பயம். நான்லாம் பின் வாங்க மாட்டேன். என்ன கேம்ன்னு சொல்லுங்க.” என்றாள் சிலுப்பியபடி.

ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன், “ஓகே. மாவை அள்ளி முடிச்சு பேட்டர் ரெடி பண்ற வரை, மாவு உன் முகத்துல படவே கூடாது.” என்றான்.

போன முறை மாவு பிசையுறேன் பேர்வழியென முகம் முழுதும் மாவை இழுவி வைத்து இருந்தாளே.

“ம்ம். நான் ரெடி” என வேகமாக உரைத்தவளை தடுத்தவன். “வெயிட் கண்ணம்மா. அப்படி முகத்துல எங்க பட்டாலும் உனக்கு ஹெவி பனிஷ்மென்ட் இருக்கும். “எனக் குறும்புடன் நிறுத்தினான்.

சுருங்கிய புருவங்களுடன் “என்ன பனிஷ்மென்ட்?” என அவள் கேட்க,

“எங்க மாவு ஒட்டி இருக்கோ அங்க கிஸ் பண்ணிடுவேன்.” என்றான் ரகசிய குரலில்.

அதில் வான்மதி தான் திகைத்து, பதறி, நடுங்கி, கூடவே வெட்கத்தில் விரிந்த இதழ்களை அடக்கி என பல்வேறு உணர்வுகளைக் காட்ட,

“நான் உன்ன எப்படி வேணாலும் இடைல டிஸ்டர்ப் பண்ணுவேன். நீ தான் கேர்புல் – ஆ இருக்கணும். அப்பறம் என்னை சொல்ல கூடாது.” என தோளைக் குலுக்கினான்.

அவள் தான், “நான் டிஸ்ட்ராக்ட் ஆக மாட்டேன்.” என வெளியில் வீராப்பாக கூறி விட்டு, முகத்தை முந்தானை கொண்டு அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

“ஹே. இன்னும் சரியா துடைக்கல பாரு நெத்தில இன்னும் இருக்கு” என அவன் தீவிரமாக கூற, “சீட் பண்ணாதீங்க.” என நாக்கை துருக்கினாள்.

“நிஜமாடி… சரி போ.” என விட்டவன், “மாவுல வண்டு இருந்துச்சா மதி. உன் கைல ஏறுது பாரு” என்று அவன் வேகமாக கூற,

“பாம்பே வந்தாலும் நான் இப்ப பதற மாட்டேன் ஆரவ்” என தெளிவாக உரைத்தவள், ‘உங்ககிட்ட இன்னைக்கு சிக்க மாட்டேன் முகில்.’ என மனதினுள் சபதம் எடுத்தாள்.

அவனோ, ‘சிக்க மாட்டுறாளே…’ என பின்னந் தலையை கோதிக்கொண்டவன், என்னன்னவோ சொல்லியும் அவளை திசை திருப்ப இயலவில்லை.

அவளும் மாவை அள்ளி விட்டு, பிசையவும் தொடங்கி விட்டாள்.

“மதி. உனக்கு ஒன்னு தெரியுமா. நான் குடிக்கலைன்னு பொய் தான் சொன்னேன். நீ தூங்குனதும் நாலு பாட்டிலை குடிச்சு மட்டை ஆகிட்டேன்.” என அவளைத் தாக்க,

அதில் சட்டென திரும்பி வாயில் கை வைத்து அதிர்ந்தவள்,

“ஏன் ஆரவ் பொய் சொன்னீங்க. என்கிட்ட இனிமே குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க தான” எனக் கூறும் போதே அவளவன் பொய்யுரைத்தது தாளாமல் குரலும் கண்களும் கலங்கியது.

ஆரவ் பக்கென சிரித்து, “நான் எப்பவும் என் கண்ணம்மாகிட்ட சொன்ன சொல்ல மீற மாட்டேன்.”என அழுத்தமாகக் கூறி, “லூசு…” என்று அவள் கண்களை துடைத்து விட்டான்.

வான்மதி அவன் கைகளை தட்டி விட்டு, “இன்னொரு தடவை இப்படி விளையாடாதீங்க ஆரவ். நீங்க என்கிட்ட பொய் சொன்னா அதை என்னால தாங்க முடியல.” என்றாள் லேசான கோபத்துடன்.

அவனுக்குத் தான், சட்டென நெஞ்சம் வலிக்க, இருந்தும் அதனை ஒதுக்கி விட்டு, “நல்ல விஷயத்துக்கு பொய் சொல்லலாம் மதி தப்பில்லை” என்று கண்ணடித்தான்.

“இப்ப என்ன நல்ல விஷயம் நடந்துச்சு?” என அவள் புரியாமல் கேட்க, அவன் போனை எடுத்து செல்ஃபி கேமராவில் அவள் முகத்தைப் பார்க்க வைக்க, அவளுக்கு தான் வெட்கம் பிய்த்து தின்றது.

நடந்து கொண்டிருந்த விளையாட்டை மறந்து மாவுடன் வாயில் கை வைக்க, அதன் விளைவாக அவள் இதழ்களை சுற்றி மாவின் தடம் தெரிந்தது.

அவள் இதழ்களை அளந்தபடி, போனை பாக்கெட்டினுள் போட்டவன், “நான் வின் பண்ணிட்டேன் கண்ணம்மா” என கிசுகிசுக்க, அவளுக்கு அவனை நிமிர்ந்து காணவே இயலவில்லை.

மெல்ல அவளருகில் நெருங்கிய ஆரவ், பாவையின் மலர் முகத்தை கைகளில் தாங்கி இருக்க, தன்னிச்சையாக அவளின் கண்கள் மூடிக் கொண்டது.

அவன் மூச்சுக் காற்று நெருங்க நெருங்க, அவளின் இதயம் தாறு மாறாகத் துடிக்க, அவனும் மோகத்தின் தாக்கத்தில் இதழ்களை சிறைப்பிடித்தான்.  இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றை ஒன்று தழுவ, மூச்சை இழுத்து அவளின் வாசத்தை சுவாசித்தான் முகிலன்.

முதல் இதழ் முத்தம் இருவருக்கும், தன்னிலை மறக்க வைக்க, மென்மையுடன் அதரங்களை ரசித்து சுவைத்தவனின் கரங்கள் பெண்மையின் இடை மென்மையை பரிசோதிக்க எத்தனித்தது.

அவளுக்கோ பயம் ஒரு புறமும், வெட்கம் ஒரு புறமும் தேவையற்ற பழைய நினைவுகள் ஒரு புறமும் தாக்க, பட்டென அவனை தள்ளி விட்டாள்.

தள்ளி விட்ட பிறகே, அவனின் மோனநிலை உணர்ந்தவள்

“சா… சாரி… நா… நான்… வேணும்ன்னு தள்ளி விடல ஆரவ்.” எனக் கூறும் போதே மீண்டும் கண்கள் கலங்கி நிற்க,

உடனடியாக உணர்வுகளின் பிடியில் இருந்து வெளிவந்தவன், “ஹே! இட்ஸ் ஓகே கண்ணம்மா.” என அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டு, அதனை அழுத்தி “ரிலாக்ஸ்” என்றான் மிருதுவாக.

இன்னும் அவளின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு,

“மாவுல உப்பு பத்தலையோ?” எனக் கண் சிமிட்டி வினவ, அத்தோடு
அவனளித்த இதழ் ஒற்றலை எண்ணி செங்கொழுந்தாக சிவந்து நின்றவள்,

“சரியா தான் இருந்துச்சு…” என புன்னகைக்கத் துடித்த அதரங்களை அடக்க இயலாமல் தலையை தரையில் புதைக்க, ஆரவ் வாய் விட்டு நகைத்து விட்டான்.

பின், “ஒன் மோர்?” என அவள் புறம் குனிந்து ரகசியமாக வினவ, திகைத்து நிமிர்ந்தவள் “ஹான்?” என்றாள் விழித்து.

“இன்னொரு தடவை கேம் விளையாடலாமான்னு கேட்டேன்டி.” என கேட்டவனின் தோரணையே அவளை வெட்கத்தில் தோய வைக்க, “நீங்க முதல்ல வெளிய போங்க ஆரவ்” என்றாள் சிணுங்கலாக.

ஆனால் நகராமல் கள்ளுண்டவன் போல அரை மயக்கத்தில் இருந்தவனோ, கெஞ்சல் பாவனையில் “சரி கேம் வேணாம். ஒன் பிரீத்திங் கிஸ்டி?” என்றான் ஆள்காட்டி விரலை காட்டி.

“அ… அப்… அப்டின்னா…?’ அவள் திணற,

அவனோ வெளிவராத குரலில், ஒரு விரலால் அவளின் நெற்றி தொடங்கி வருடியபடியே, “அப்படின்னா, கிஸ் பண்ணும் போது, ரெண்டு பேரும் ஒரே மாதிரி மூச்சு விடணும். நான் மூச்சிழுக்கும் போது நீயும் மூச்சு இழுக்கணும். நான் மூச்சை வெளிவிடும் போது நீயும் ப்ரீத் அவுட் பண்ணனும்.” எனக் கூறி முடிக்கும் போதே, அவன் விரல் அவளின் இதழ்களில் தஞ்சமடைய, வான்மதிக்கோ நிற்க கூட இயலவில்லை.

“ஆ… ஆரவ்… கூசுது… வேணாம்…” என்ற அவளின் வார்த்தைகள் அவனிதழுக்குள் ஒலிக்க, முதலில் தடுமாறியவளை, அவனின் மூச்சுக் காற்றை கவனிக்க வைத்தவன், அதற்கு ஏற்ப அவளையும் சுவாசிக்க வைத்தான்.

இப்போது அவன் கவனமாக, கரங்களை அவளின் கன்னங்களிலேயே அழுத்தி இருக்க, அவளும் அவ்வின்பத்தில் தொய்ந்து தாள இயலாமல், அவன் மீதே சரிந்தாள்.

நான்கு நாட்கள் கடக்க, ஞாயிறு அன்று இரவு தன்விக் டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். திடீரென திருமணம் ஆனதில், நண்பர்களுக்கு விருந்தளிக்க, அவனின் அபார்ட்மெண்டிலேயே பார்ட்டி ஹால் இருக்க, அங்கேயே வைக்க முடிவு செய்திருந்தவன், மோனிஷாவிடம் எப்போதும் போல பேசினாலும், ஒதுக்கத்துடனே தான் இருந்தான்.

அவளுக்கும் அது தான் அப்போதைக்கு தேவைப்பட, மாமன் மகனுடன் தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் சற்றே இலகுவாக இருந்தாள்.

அந்நிலையில் இருவருமே திட்டமிட்டு விருந்தை ஏற்பாடு செய்திருக்க, “மாமா… என் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் லொகேஷன் சென்ட் பண்ணிட்டேன். ஒரு சிலரை மட்டும் பஸ் ஸ்டான்ட் வர சொல்லி இருக்கேன். நான் போய் பிக்-அப் பண்ணிட்டு வரேன்.” என்றவள், சேலையின் கொசுவத்தை சரி செய்தபடி கூற,

தன்விக் “நீ ஏன் ஸ்ட்ரெய்ன் பண்ற. நான் போய் உன் ப்ரெண்ட்ஸ பிக் அப் பண்ணிக்கிறேன் மோனி.” என தாராள மனதுடன் கூற,

“ரொம்ப வழியாத. வர்ற பாதி பேரு ஜென்ட்ஸ் தான்” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“அதுல மீதி பாதி கேர்ள்ஸ் இருப்பாங்கள்ல…?” அவன் முறைப்புடன் கேட்க,

“ம்ம் இருக்காங்க. ஆனா, கூடவே நம்ம வீட்டு ஆளுங்களும் வருவாங்களாம் எப்படி வசதி?” என புருவம் உயர்த்தி கேட்டதில் அவன் கப்சிப் தான்.

அவளோ விடாமல், “உன் ப்ரெண்ட்ஸ எல்லாம் நான் எவ்ளோ அழகா அண்ணான்னு கூப்புடுறேன். அதே மாதிரி நீயும் என் ப்ரெண்ட்ஸ அழகா தங்கச்சின்னு கூப்பிடு மாமா.” என அவள் வார,

“நான் வேணும்னா மச்சினிச்சின்னு கூப்பிடவா?” அவன் யோசனையுடன் கேட்டதில் வெறியானவள், “போடாங்…” என்று திட்ட வந்ததில், “புருஷன்டி” என்றான் பாவமாக.

“அப்போ அப்போ சொல்லுடா மாமா. மறந்துருது.” என வாயைப் பொத்தி சிரித்தவளை, ஒரு மாதிரியாக பார்த்தவன்,

‘மறக்காம இருக்க ட்ரீட்மெண்ட் பண்ணுனா ஜென்மத்துக்கும் மறக்காது’ என தனக்குள் முணுமுணுத்துக்கொள்ள, “என்ன சொன்ன?” என்றாள் புரியாமல்.

“ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல” என அவன் நகர போக,

“இரு இரு. மேக் அப் கலையிறக்குள்ள செல்ஃபி எடுக்கலாம் வா. டிபில வைக்க போட்டோ இல்ல.” என்றவள் அவனை இழுத்து போட்டோ எடுக்க, எப்போதும் போல இருவரும் புகைப்படம் எடுத்து தள்ளினர்.

இதற்கு முன்னும் இப்படி தான். பண்டிகை, விஷேசம் என ஊருக்கு செல்லும் போதெல்லாம், இருவரும் கிண்டல் செய்து, இணைந்து புகைப்படம் எடுத்து, பின் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர்.

அதே போல இப்போதும் அவளின் தோள் மேல் கை போட்டு, தன்விக் போஸ் கொடுக்க ஏனோ, இப்போது இந்த நெருக்கம் மோனிஷாவிற்கு சற்றே நெளிவைக் கொடுத்தது.

புகைப்படம் எடுக்க இயலாமல் கை நடுங்க, முதலில் புரியாமல், “ஏண்டி ஷேக் பண்ற. ஒழுங்கா எடு” என்று அதட்டியவன், அதன் பிறகே அவளின் நிலை புரிந்து, தோளில் இருந்து கையை விருட்டென எடுத்துக்கொண்டான்.

அவனே போனையும் வாங்கி, சிறிது இடைவெளி விட்டு இருவரையும் செல்ஃபி எடுக்க, அப்புகைப்படத்தில் அவளின் விழிகள் அவனைத் தான் நோக்கி இருந்தது. 

எங்கடா இருக்க?” கவினுக்கு போன் செய்த லயா, அவனிடம் விசாரிக்க, “தன்வி பார்ட்டிக்கு தான் போய்ட்டு இருக்கேன். ஏன் நீ வரலையா?” எனக் கேட்டான் வண்டியில் சென்றபடி.

“ஏன் நான் வர வேணாமா?” அவள் சற்றே கடுப்புடன் வினவ, “இது என்ன கேள்வி. தன்வி உன்ன இன்வைட் பண்ணிருப்பான்ல. ஃப்ரீயா இருந்தா வா” என எதார்த்தமாக கூற,

“ஓ. ஃப்ரீயா இருந்தா மட்டும் வரணும். பிசின்னா வர தேவை இல்ல?” என்றவளின் கூற்றில் கடியானவன், “அட ச்சீ. இப்ப நீ வர்றியா இல்லையாடி” என்றவன் வண்டியை நிறுத்தி இருந்தான்.

“நீயே சொல்லு. நான் வரவா?” எனக் கேள்வியுடன் நிறுத்த, படுத்துறாளே என நொந்தவன், “வாடி…” என்றான் பரிதாபமாக.

“ம்ம். வந்து பிக் அப் பண்ணிக்க.” என்று விட்டு போனை வைத்தவளுக்கு, தலை கிண்ணென வலித்தது.

அவனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்றும் புரியவில்லை. ஏன் எதிர்பார்க்கிறோம் என்றும் புரியவில்லை அவளுக்கு.

அடுத்த பத்து நிமிடத்தில் லயாவின் வீட்டு வாசலை அடைந்தவனைக் கண்டவள், எதுவும் பேசாமல் பின்னால் அமர்ந்து கொள்ள, “போலாமா” எனக் கேட்டான் கண்ணாடியில் அவள் முகம் பார்த்து.

“உன் இஷ்டம்” என அவள் திரும்பிக் கொள்ள, அவளை விசித்திரமாக பார்த்தவன், “என்னடி ஆச்சு உனக்கு?” எனக் கேட்டான் குழப்பமாக.

“தெரியல. நீ தான் ஏதோ பண்ணிட்ட. நான் டெல்லி போயிருந்தா கூட தெளிவா தான் இருந்து இருப்பேன்.” எனக் கண்டமேனிக்கு திட்ட தொடங்கியதில் அவன் காதை மூடாத குறையாக நேராக தன்விக்கின் வீட்டை அடைந்தான்.

மதி கிளம்பிட்டியா?” ஆரவ் வான்மதியின் அறை வாசலில் நின்று சத்தம் கொடுக்க,

“வந்துட்டேன் ஆரவ்” என்றவள், ஆரஞ்சு நிற மெல்லிய பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு அவன் முன் நிற்க, அவனுக்குத் தான் மூச்சடைக்கும் நிலை.

தொண்டையை செருமிக் கொண்டவன், “மடிப்பு சரியா வைக்கல பாருடி.” என கீழே அமர்ந்து, மடிப்பை நீவி விட,

“விடுங்க ஆரவ். அதுவே செட் ஆகிடும். நீங்க போய் கீழ உட்காந்துட்டு” என்று பதறினாள்.

அதில் நிமிர்ந்து முறைத்தவன், “என் பொண்டாட்டிக்கு நான் ஹெல்ப் பண்றேன்.” என்று விட்டு,

“நீ சேரி கட்டுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும், லாவண்டர் ஷேட்ல கட்டினா அழகா இருக்கும்” என்றான் அவளுக்காக முதன் முதலில் பார்த்து வைத்த புடவையை மனதில் நிறுத்தி.

பின் அவனே, “பட் அடிக்கடி புடவை கட்டுறது கஷ்டம் தான். சுடி தான் கம்ஃபர்ட்டபிளா இருக்கும்” என அபிப்ராயமும், பதிலுமாக பேசியவன்,

“நீ வீட்ட பூட்டிட்டு வா கண்ணம்மா. நான் இஷுவ கூட்டிட்டு பார்க்கிங் போறேன்” என்றபடி, வெளியில் சென்றவனின் முதுகையே வெறித்தவளுக்கு ஏனோ அழுகை வரும் போல இருந்தது. அதற்கு பல காரணமும் இருந்தது.

முதலாவது, விக்ராந்துடன் என்றுமே அவனை ஒப்பிட்டு பார்த்ததில்லை அவள். ஆனால் இன்று ஏனோ அவனும் இப்படி இருந்திருந்தால் விவாகரத்து, இரண்டாம் திருமணம் என வாழ்க்கை சிக்கலாகி இருக்காதோ… என்ற எண்ணம் ஒரு நொடி வந்து போக, மறுநொடியே தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

இரண்டாவது, எப்போதும் எழுந்ததில் இருந்து தன்னையே சுற்றி வரும் ஆரவ், ஞாயிறு அன்றும் வேகமாகவே அலுவலகம் சென்று தாமதமாக தான் திரும்பி இருந்தான்.

வந்ததும், தன்விக் பார்ட்டிக்கு கிளம்ப ஆயத்தமாக, அவள் கிளம்பி வந்த பின்னும் கூட முத்த பாடத்தை நிகழ்த்தாமல், உடனடியாக வெளியேறி விட்டதில் மனமெங்கும் ஏக்கம் சூழ்ந்தது.

இரண்டையும் மாற்றி மாற்றி சிந்தித்து அழுத்தத்தை தலையில் ஏற்றிக் கொண்டவளின் முகமே வாடி இருக்க, அப்படியே காரில் சென்று அமர்ந்தாள்.

அப்போது தான் உறங்கி இருந்த மகனை பின் சீட்டில் மெத்தை போல அமைத்த தொட்டிலில் படுக்க வைத்து, என்ஜினை கிளப்பியவன்,
அவள் உள்ளே ஏறி அமர்ந்ததுமே, “என்னாச்சு மதி… ஃபேஸ் டல்லா இருக்கு” என புருவம் சுருக்கி கேட்க, தானாக கண்கள் கலங்கி விட்டது.

“நான் ஒன்னு சொன்னா என்மேல கோபப்பட மாட்டீங்கள்ல…? நான் வேணும்ன்னு யோசிக்கல. அதுவா வந்துடுச்சு.” என்றாள் பாவமாக.

“ஹே! என்னடி இப்படி கண்ணு கலங்கி இருக்கு. நான் ஏன் உன் மேல கோபப்பட போறேன் கண்ணம்மா. என்ன வேணாலும் என்கிட்ட சொல்லலாம். ஐ ஆம் யுவர் பெர்சனல் டைரி.” என அவளின் கைகளைப் பிடித்துக் கொள்ள,

அவளோ தலையை குனிந்தபடி, “அது… வந்து… நான் இதை சொல்றது சரியா தப்பான்னு தெரியல. தப்புன்னா சாரி.” என பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்க, அவன் “ம்ம்… மன்னிச்சுட்டேன்” என்றான் வசீகர நகையுடன்.

ஆனால் அதனை அவள் பார்த்தால் தானே.

“வந்து… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, விக்ராந்தும் உங்களை மாதிரி இருந்து இருக்கலாம், இப்படி எல்லாம் லைஃப் கிரிக்ட்டிகல் ஆகி இருக்காதுன்னு யோசிச்சேன்.” என தயக்க குரலில் மெதுவாக கூறியவள், உடனேயே

“எனக்கு அவன் மேல எந்த அபிப்ராயமும் இல்ல. அவனோட ஞாபகம் கூட இல்ல தான். ஆனா ஏன் இந்த தாட் வந்துச்சுன்னு தெரியல ஆரவ். சாரி. உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் அவனோட கம்பேர் பண்றது தப்பு தான…” என்றவளின் மடியில் ஒரு சொட்டு கண்ணீர் வந்து விழுக, அதே நேரம் அவன் மடியிலும் கண்ணீர் துளி ஒன்று சிதறியது.

அவள் பேச தொடங்கியதுமே தேகம் இறுகிப் போனது அவனுக்கு. பின், தன்னை சமன் செய்தவன், அவளின் நாடியைப் பற்றி நிமிர்த்த, அவளோ கண்ணை மூடிக் கொண்டு,

“என்ன தப்பா நினைக்காதீங்க ஆரவ். நான் யாருக்கும் துரோகம் பண்ணனும்ன்னு நினைக்கல. அவன் கூட வாழும் போதும் அவனுக்கு மனசார உண்மையா தான் இருந்தேன். உங்களுக்கும்…” என்ற போதே பேசிய அவளதரங்கள் சிறை செய்யப்பட்டது.

ஆற்றாமை தாங்காமல் எழுந்த கேவல்கள், அவனின் இதழுக்குள் மடிந்து விட, மெல்ல மெல்ல அவளின் கரங்கள் ஆடவனின் தோள்களில் பூ மாலையாக, அவனின் முரட்டு விரல்களும், பெண்ணின் இடையை சென்றடைந்தது.

இம்முறை அவள் தடுக்கவில்லை. தள்ளவும் இல்லை. தளரவும் இல்லை. அவனின் தோள் பட்டையை இறுக்கிப் பற்றிக் கொண்டாள்.

வான்மதியின் பின்னந்தலை கூந்தலையும், புடவை இடுக்கில் வெளிறிடும் இடையையும் சீராக பிடித்து விட்டவனின் இதழ்களும் மாயங்கள் புரிய, அந்த மயக்கம் அவளையும் தாக்கியதில் கிறங்கத் தொடங்கினாள்.

ஆரவின் அலைபேசி ஒலித்ததும் தான், வான்மதி தன்னிலை வந்து அவனை மெதுவாக தள்ளினாள்.

“போன் ஆரவ்…” என்றவளின் உதடுகள், சாயம் பூசாமலேயே கன்னத்திற்கு ஏதுவாக சிவந்திருக்க,

அவனோ பிடியை தளர்த்தாமல், “லவ் யூ கண்ணம்மா. ஐ லவ் யூ சோ மச். நீ என்ன கேள்வி கேட்டாலும், உன் மனசுல என்ன நினைச்சாலும் இதான் என் பதில். ஐ ஜஸ்ட் லவ் யூ. இதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும், ஏன் அவனை லவ் பண்ணி இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஐ லவ் யூ. உனக்கு என் மேல கடைசி வர லவ்வே இல்லைன்னாலும்…” என்று ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டே சென்றவனின் இதழ்கள் இப்போது அவளின் விரல்களுக்குள் அடைபட்டது.

“நானும் ஐ லவ் யூ தான்.” என்றவள் முகத்தை உம்மென வைத்து வேகமாக கூற, அவனுக்கு தான் அனைத்தும் மறந்து புன்னகை மலர்ந்தது.

“லவ் யூ டூ…” என சிறு சிரிப்புடன் கூறியவன், காரை கிளப்ப, அவளோ ஆரவின் கையைப் பிடித்துக் கொண்டு, “இது என்ன கிஸ்ன்னு சொல்லவே இல்ல” எனக் கேட்டு விட்டு அவனின் தோளிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்.

ஆரவ் தான் விழி விரித்து, சத்தமாக சிரித்து விட்டவன், “நான் குடுத்தது அரெஸ்ட் கிஸ் கண்ணம்மா” என்றான் குறும்பாக.

அவளோ நிமிர்ந்து, “என்னது? அப்படின்னா?” என புரியாமல் கேட்க, “உன் லிப்ஸ அரெஸ்ட் பண்ணேன்ல. அதான் அரெஸ்ட் கிஸ்… இப்போ நல்லா பார்த்துக்கோ” என்றபடி அவளின் கீழுதட்டை சிறை பிடிக்க, அவளும் விரும்பியே அவனிடம் கைதியானாள்.

தேன் தூவும்…!
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
240
+1
9
+1
9

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. priyakutty.sw6

      என்ன ஹேமா சுதாகர் கிட்ட இப்படி சொல்லிட்டாங்க…. 😔

      கவின் அஹ் குழம்புறாங்க லயா…. 🙄

      ஆரவ் என்ன மறைக்குறாரு…🤔