Loading

ராணியின் உடல்நிலை சீரானதில், இரு நாட்கள் கழித்து நார்மல் வார்டிற்கு மாற்றப் பட்டார்.

அதற்குள் ரோஜா தான் மிகவும் வாடிப்போனாள். இரண்டு நாட்களாய் தாயைக் கண்ணில் காட்டாததில் கலக்கம் கொண்டு மாதவிடம் புலம்பினாள்.

“அம்மாவ ஒரு தடவை பார்க்க விடுங்க.” தேம்பியபடி கேட்டவளைக் கண்டு பாவமாக இருந்தாலும், “சொன்னா புருஞ்சுக்கோ ரோஜா. ஐசியூக்குள்ள யாரும் அலௌட் இல்ல. நாளைக்கு நார்மல் வார்டுக்கு வந்துடுவாங்க அங்க பாத்துக்கலாம். இப்போ நல்லாதான் இருக்காங்க.” என அவன் கூறிய சமாதானத்தை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க. அம்மாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. அதை மறைச்சு ஐசியூல வச்சுருக்கீங்க. நான் மஹா அக்காகிட்ட சொல்றேன். அவங்க இந்த ஹாஸ்பிடலை உண்டு இல்லைன்னு ஆக்க போறாங்க.” என்று கண்ணீரோடு மிரட்டலை வேறு கொடுக்க, அவனுக்கோ சிரிப்பை அடக்கவே இயலவில்லை.

கூடவே, ‘ஆத்தாடி அந்த சொர்ணாக்கா காலேஜ் படிக்கும் போதே எல்லாம் ரௌடிசமும் பண்ணும், இப்ப சொல்லவே வேணாம்… இந்த ஹாஸ்பிடலை தரைமட்டமாக்குனா, நம்ம பொழைப்புக்கு வேற ஹாஸ்பிடல்ல தேடணும்.’ என்று தனக்குள் மிரண்டும் கொண்டான்.

“தாராளமா சொல்லு. அவள் யூகேல இருந்து கிளம்பி வர்றதுக்குள்ள, உன் அம்மா நார்மல் வார்டுக்கு வந்துடுவாங்க.” என்றிட, மேலும் கண்கள் கலங்கியது அவளுக்கு.

சில நொடிகள் அவளையே பார்த்தவன், “ரெண்டு நிமிஷம் தான். அதுக்கு மேல உள்ள நிக்க கூடாது, அவங்ககிட்ட பேசவும் கூடாது. பேஷண்ட்க்கு இன்ஃபெக்ஷன் ஆகும்.” என்று கண்டிப்புடன் அனுமதி கொடுக்க, அவசரமாக தலையாட்டினாள்.

அதனைக் கண்டு அவனுள் ரசனைப் புன்னகை. சொன்னது போன்றே இரண்டு நிமிடத்தில் தாயைப் பார்த்து விட்டு வந்தவள், அவர் நலமுடன் இருப்பதில் மெல்லத் தெளிந்தாள்.

ஐசியூ வாசலில் கையைக்கட்டி சிரிப்புடன் நின்றிருந்த மாதவ், “நேத்து தான் மெச்சூரிட்டி வந்துடுச்சுன்னு சொன்ன. இப்ப சின்ன பிள்ளைய விட மோசமா நடந்துக்குற பாட்டி.” என்றிட,

அசடு வழிந்த ரோஜா, “நீங்க தான சொன்னீங்க. எல்லா விஷயத்துலயும் மெச்சூரிட்டி இருக்கனும்ன்னு அவசியம் இல்லன்னு…” என்று சமாளித்தாள்.

அவளது பாவனைகள் அவனுள் இனிய கலவரமூட்டியது. இதயத்திலிருந்து ஏதோ நழுவுவது போல உணர்ந்தவன், மெல்ல நெஞ்சைத் தேய்த்து விட்டுக் கொண்டு, அங்கிருந்து அகன்றான்.

அலுவலத்திலிருந்து வீடு திரும்பிய வசீகரன், எப்போதும் போல நிதினுக்கு சாக்லேட் கவரை நீட்ட, “ஹை… தேங்க்ஸ் ப்பா”. என குதூகலத்துடன் வாங்கி கொண்டவன், திரும்பி மஹாபத்ரா அவனை முறைப்பதை பார்த்தான்.

அப்போது தான் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

அவளைக்கண்டதும் அனைத்துப் பற்களையும் காட்டியவன், “சும்மா ஃப்ரிட்ஜ்ல தான் டாலுமா வைக்க போறேன். இப்ப சாப்பிடல.” என்று வேகமாக சமாதானம் செய்து விட்டு, நல்ல பையனாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு வந்து அமர்ந்தான்.

அதனைக் கண்டு வீட்டாருக்கு சிரிப்பு முட்டியது. ‘டெய்லி சாக்லேட் வாங்கிட்டு வராதீங்க!’ என்று வசீகரனிடம் கண்டிக்க எத்தனித்தாலும், ஏனோ அவளுக்கு அந்த உரிமை இல்லையென்றே தோன்றியது.

அதில் மெளனமாக அவள் தட்டில் புதைந்திட, எதிரில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தவளை கண்டும் காணாதது போல நோட்டம் விட்டுக் கொண்டிருந்த தஷ்வந்த், “தினமும் சாக்லேட் குடுக்காதீங்க மாம்ஸ்.” என்றான் அவனவளுக்கு பதிலாக.

வசீகரனோ, “இப்ப சாக்லேட் சாப்பிடாம வயசாகி சுகர் வந்ததுக்கு அப்பறமா சாப்பிட போறாங்க. கூடவே டாக்டரை வச்சுக்கிட்டா இப்படி தான் இதை சாப்பிடாத அதை சாப்பிடாதன்னு உயிரை வாங்குவாங்க…” என்று கிண்டலடித்தான்.

அவனை முறைத்த தஷ்வந்த், மஹாபத்ராவை ஒரு முறை பார்த்து விட்டு, “இருந்தாலும் கொஞ்சம் அவாய்ட் பண்ணலாம்.” என்று கண்ஜாடை காட்ட, அதை கண்டு கொண்ட வசீகரன், “சரி இனிமே வீக்லி ஒன்ஸ் வாங்கிட்டு வரேன். போதுமா சிஸ்டர்…” என்று நேரடியாக மஹாபத்ராவிடமே கூறினான்.

அவளோ அவனை குழப்பமாகப் பார்த்து விட்டு, தஷ்வந்தைக் காண அவன் தீவிரமாக உண்டு கொண்டிருந்தான்.

வசீகரனோ, “எங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதை விட அதிகமாவே உனக்கு உரிமை இருக்கு மஹா. நாங்க தொலைச்ச சிற்பத்தை செதுக்கி எங்ககிட்ட குடுத்து இருக்க. உனக்கு நாங்க எப்பவுமே கடமைப்பட்டுருக்கோம்.” என உணர்ந்து கூறிட, அவள் சின்னதாய் முறுவலித்தாள்.

ஆனால், நிதின் தான் தஷ்வந்தை மூச்சு முட்ட முறைத்தான்.

“துரோகி மாம்ஸ்… என் டாலுமாவை இம்ப்ரெஸ் பண்றதுக்காக என்னோட சாக்லேட்ட கட் பண்ணிட்டியே.” என்று உதட்டைப் பிதுக்க, குறும்புப் புன்னகை வீசியவன், “உன் டாலுமாவை உன்னை வச்சு இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு அவசியம் இல்ல மாப்ள. ஆல்ரெடி உன் டாலு இம்ப்ரெஸ்ட் தான்” என்று கண் சிமிட்டினான்.

மஹாபத்ரா பல்லைக்கடித்தாள். “அவன் தான் வயசுக்கு மீறி பேசுறான்னா நீயும் பேசிட்டு இருக்க.” என்று அதட்ட,

“வளர்ப்பு யாரோடது. அங்க இருக்குறது தான் இங்கயும் வரும்…” என்று அவளுடன் நிதினைக் கை காட்டினான்.

அவள் மேலும் முறைக்க, நிதின் “அப்போ நாளைல இருந்து சாக்லேட் கிடைக்காது. நான் இன்னைக்கே சாப்ட்டுக்குறேன்.” என்று வசீகரன் வாங்கி வந்ததை எடுத்துக் கொண்டு அறைக்குள் ஓட, அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

அதுவும் ஆடவர்களிடம் இருந்து தான். மஹாபத்ரா எப்போதும் போல முறுவலுடன் முடித்துக் கொள்ள, அங்கு அமர்ந்திருந்த மஞ்சுளா அத்தனை நேரமும் தலையை நிமிர்த்தவே இல்லை.

நெஞ்சம் தடதடவெனத் துடித்துக் கொண்டிருந்தது பெண்ணவளுக்கு. இன்று, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடக் கூறி விட்டு அல்லவா அலுவலகத்திற்கு சென்றான். தட்டில் இருந்த உணவை வெகு நேரமாய் அவள் அளந்து கொண்டிருக்க, கண்ணில் நீர் தேங்கி இருந்தது.

காலையில் நிதினை பள்ளிக்கு அனுப்பி விட்டதில் இருந்து அவள் அறையை விட்டே வரவில்லை. தஷ்வந்தும் மருத்துவமனைக்கு சென்றிருக்க, மஹாபத்ராவும் வீட்டில் இல்லை. நிதினையும் அவளே அழைத்து வந்து, அவனுக்காக அவள் கட்டிக்கொண்டிருக்கும் பீச் ஹவுஸ்ஸிற்கு சென்று பார்வையிட்டாள். இதனை காலையிலேயே மஞ்சுளாவிடம் கூறி இருந்ததில், அவள் கண்ணீருக்கு தடை போட வேண்டிய அவசியம் இல்லாது போய் விட்டது.

பின், சில நிமிடங்கள் இடைவெளியில் தான் மஹாபத்ராவும், தஷ்வந்தும் வீட்டினுள் நுழைந்திருக்க, முதலில் வந்த மஹாபத்ரா, மஞ்சுளாவின் கண்கள் சிவந்திருந்ததையும், அடுக்களை, காலையில் நிதினுக்கு சமைத்த உணவோடு அப்படியே இருந்ததையும் கண்டு அவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.

தன்னை பார்ப்பதை உணர்ந்து மஞ்சுளா தான், “காலைல இருந்து தலைவலி. அதான் மாத்திரை போட்டு தூங்கிட்டேன்.” என்று குனிந்தபடி கூற,

நிதினோ, “காலைலயே சொல்லிருந்தா டாலுமா டேப்லட் தந்துருப்பாங்கள்ல மஞ்சுமா. அட்லீஸ்ட் தஷு மாம்ஸ்கிட்டயாவது சொல்லி இருக்கலாம். நமக்கு ஃப்ரீ ட்ரீட்மெண்ட் பார்க்க தான் வீட்ல ரெண்டு டாக்டர்ஸ் இருக்காங்கள்ல” என்று தலையை ஆட்டிக் கூறியவனின் அக்கறையில் மஞ்சுளாவிற்கு அழுகைப் பொத்துக் கொண்டு வந்தது.

அவனது அன்பை தன்னவனுடன் சேர்ந்து அனுபவிக்க இயலாதோ என்றெண்ணி உடைந்தாள். அவனது உதாசீதனம், இத்தனை வருடங்களாய் அவள் செய்த உதாசீனத்தை நினைவுபடுத்தி சிதைத்தது. அவனுக்கும் வலித்திருக்கும் என்று தெரியும் தான். ஆனால், அனைத்தும் சரியான பிறகும் விலக நேரும் அளவு வலித்திருக்கும் என்று இப்போது தான் புரிந்தது.

முயன்று கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டவளிடம் எதுவும் பேசாமல் அறைக்கு சென்ற மஹாபத்ரா, இரவு உணவை அனைவர்க்கும் சேர்த்து அவளே ‘ஆர்டர்’ செய்தாள்.

கடையில் இருந்து வந்த உணவைக் கண்டு தஷ்வந்தும் துணுக்குற்றான். எவ்வளவு தான் உடல்நிலை சரியில்லாது போனாலும், எத்தனை முறை அதட்டினாலும், மஞ்சுளா சமைக்காமல் இருந்ததே இல்லை.

“உடம்பு ரொம்ப முடியலையா மஞ்சு? என்ன ஆச்சு?” எனக் கேட்ட தம்பியிடம் முகத்தைக் காட்டாமல், “தலைவலி தான் தம்பூ” என்றாள் சோர்வாக.

அதனை நம்பும் அளவு அவன் முட்டாள் இல்லையே. ஆகினும் தோண்டித் துருவாமல் சாப்பிட அழைத்து அமர வைத்தான்.

அவளது விழி சிவப்பை ஒரு முறை ஏறிட்ட வசீகரன், “என்ன அதிசயமா இன்னைக்கு வீட்ல நல்ல சாப்பாடு இருக்கு.” என்று கேட்டிட,
தஷ்வந்த் அவனை அமைதியாக பார்த்தான்.

“இங்க என்ன நடக்குது மாம்ஸ்? மஞ்சு ஏன் அழுதுருக்கா?” என்று பட்டென்று கேட்க, அதில் நிமிர்ந்த மஞ்சுளா “இல்ல தஷு…” என்று பதறினாள்.

“என்ன இல்ல? உன் மூஞ்சிய பார்த்தா எனக்கு வித்தியாசம் தெரியாதா? இல்ல தலைவலின்னு நீ சொல்ற பொய்ய நம்புற அளவு என்னை லூசுன்னு நினைச்சியா?” என தமக்கையை அதட்டிட, அவள் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

வசீகரன் புறம் திரும்பி, “சொல்லுங்க மாம்ஸ். இவ்ளோ வருஷமா ரெண்டு பேருக்குள்ள எதுவுமே சரி இல்லன்னு எனக்கு தெரியும். ஆனா, இப்பவும் ஏன் சரி ஆகல? இப்பவும் அவள் கூட ஏன் பேச மாட்டேன்றீங்க?” எனக் கேட்டான் வருத்தமாக.

அவனை இறுக்கத்துடன் பார்த்த வசீகரன், “ஒரு நாள் அவள் அழுதது தான் உனக்கு பெருசா தெரியுதுல. ஒவ்வொரு நாளும் நான் மனசுக்குள்ள அழுதது எனக்கு மட்டும் தான்டா தெரியும். இப்ப மட்டும் ஏன் எல்லாம் சரி ஆகணும்? பையன் தொலஞ்சுட்டான், என் மேல இருந்த காதலும் தொலைஞ்சது, இப்ப பையன் கிடைச்சதும் என் மேல இருக்குற காதலும் கிடைச்சுடுச்சா? என் மனசு ஒண்ணும் யூஸ் அண்ட் த்ரோ இல்ல தஷு” சொல்லும்போதே வலியில் தொண்டை அடைத்தது வசீகரனுக்கு.

“அவளை விட்டுட்டு ஃபாரீன் போயிருக்க கூடாதுன்னு எத்தனை நாள் துடிச்சுருக்கேன் தெரியுமாடா. நான் மட்டும் கூட இருந்திருந்தா, என் பையனையும் தொலைச்சு, அவள் மேல இருக்குற காதலையும் தொலைச்சுருக்க மாட்டேனே! உன் அப்பா பேசுனதை பெருசா நினைச்சு, பணத்துக்கு பின்னாடி போய் என் குடும்பத்தை தொலைச்சேன்.

அவள் தினம் தினம் அழுகும் போதும் அப்படி வலிக்கும் தஷு. அவளால தான் குழந்தை தொலைஞ்சு போச்சுன்னு அவள் கதறுறதை கேட்கவே முடியாது. எவ்ளவோ சமாதானம் செஞ்சாலும் நடந்தத கடக்க முடியாது தான்.

கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி, அவள் மேல எந்த தப்பும் இல்ல. எல்லாமே விதின்னு எவ்ளோவோ படிச்சு படிச்சு சொன்னேன். அவள் மரமண்டைக்கு எதுவுமே ஏறல. நானும் மனுஷன் தான தஷு. எனக்கும் எல்லா உணர்வும் இருக்குல்ல.

முடிஞ்சதை நினைச்சு எவ்ளோ நாள் அழுதாலும் வேஸ்ட்ன்னு புருஞ்சு, இருக்குற வாழ்க்கையாவாவது சந்தோசமா வாழணும்ன்னு நினைச்சேன். ஆனா, உன் அக்காவுக்கு நானும் கண்ணுக்கு தெரியல. என் காதலும் புத்திக்கு உறைக்கல.

டைவர்ஸ் குடுத்துட்டு, வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு, போக சொன்னா… அப்படி நான் போயிருந்தா தெரிஞ்சுருக்கும் அவளுக்கு. பைத்தியக்காரன் மாதிரி அப்பவும் அவளையே சுத்தி சுத்தி வந்தேன்ல என்னை தான் செருப்பால அடிக்கணும். அவளுக்கு பயந்தே, ஆபிஸ்ல இருந்துட்டு அர்த்த ராத்திரில வீட்டுக்கு வருவேன் தஷு. எங்க முட்டாள்தனமா என்னை விட்டுட்டு போய்டுவாளோன்னு அவ்ளோ பயந்தேன்.” என்னும் போதே கண்கள் கலங்கிட, தஷ்வந்த் அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

மஞ்சுளா தான் உதட்டைக் கடித்துக்கொண்டு கண்ணீருடன் அவனையே பார்த்தாள். தன்னை பற்றி மட்டுமே சிந்தித்தவள், தன்னவனைப் பற்றி சிந்திக்க மறுத்த முட்டாள்தனம் அப்போது தான் முழுதாய் புரிந்தது.

மெல்ல தன்னை அடக்கிக்கொண்ட வசீகரன், “இப்போ நிதின் கிடைச்சதும், நார்மலா எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி வாழ முடியும் தஷு. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்ன்னா கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் சரி பாதியா பகிர்ந்துக்குறது தான. கஷ்டம் வரும் போது என்னை வேற ஒருத்தி கூட போக சொல்லிட்டு, சந்தோசம் வர்றப்ப என்னை ஏத்துக்கிட்டா அது என்ன காதல்? அவளுக்கு என் மேல காதல் இருக்குன்னு இப்ப என்னால நம்பவே முடியல. அவளோட காதலை நான் இப்ப ஃபீல் பண்ணவும் இல்லை. அதான் அவள் கேட்ட விவாகரத்தை இப்ப குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணுனேன்.” என்றான் மஞ்சுளாவை முறைத்து.

அத்தனை நேரமும் அமைதியாக இருந்த மஹாபத்ரா, “எல்லாம் சரி தான் ஆனாலும் டைவர்ஸ் கேக்குறது ரொம்ப ஓவர் வசீகரன். அவளோட காதலை எந்த பாயிண்ட்ல நீங்க ஃபீல் பண்ணல? அவளோட இடத்துல இருந்து பார்த்தா, அவள் செஞ்சது சரி தான். எப்பவும் உங்க மேல அன்பு இருக்கறனால தான, அவளோட வாழ்க்கையை பத்தி யோசிக்காம, உங்களை விட்டு பிரிய முடிவெடுத்து இருக்கா” என்று வாதிட, இத்தனை நாட்களாக பட்டும் படாமல் இருந்து விட்டு இப்போது பேசியவளை சற்று வியப்புடன் பார்த்தான் வசீகரன்.

ஆனாலும், “இப்பவும் நான் அவள் மேல வச்சுருக்குற லவ்ல தான் சொல்றேன் சிஸ்டர்.” என்றதில், அவள் வசீகரனை முறைத்தாள்.

தஷ்வந்த் தான், “என்ன இது கொடுமையா இருக்கு. அவள் டைவர்ஸ் கேட்டா அது லவ்வு. அதே மாம்ஸ் கேட்டா அது ஓவரா? மாம்ஸ் அவளை விடாதீங்க. அழுது புரண்டாலும் சரி டைவர்ஸ் வாங்கிட்டு அனுப்புங்க. உண்மையா பாசம் வச்சவங்களை உதாசீனப்படுத்துனா எப்படி வலிக்கும்ன்னு அப்ப தான் மண்டைல ஏறும்.” என்று இரு பெண்களையும் உறுத்து விழித்தான்.

அதில் மஹாபத்ரா கண்ணில் நெருப்பைக் கக்க, மஞ்சுளா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

தமக்கை அழுவது வருத்தமாக இருந்தாலும், வசீகரனின் காயம் கொண்ட நெஞ்சை உணர்ந்து அமைதி காத்தான்.

மஹாபத்ரா ஆடவர்களை அனல் பார்வையுடன் ஏறிட்டு, “ஜஸ்ட் ஸ்டாப் திஸ் கைஸ்! உங்க விளையாட்டுக்கு ஒரு அளவு இல்லையா?” என்று அதட்டியவளுக்கு, வசீகரன் நிஜமாகவே விவாகரத்து கேட்கவில்லை என்று புரிந்தது.

வசீகரன் மஞ்சுளாவின் கண்ணீர் முகத்தையே உணர்வின்றி ஏறிட, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல், “மாம்ஸ் ப்ளீஸ்…” என்று கண்ணாலேயே கெஞ்சினான் தஷ்வந்த்.

அவனோ, “என்னடா ப்ளீஸ்… கல்யாணம் ஆகிடுச்சுல உனக்கு. பத்து மணிக்கு மேல டைனிங் டேபிள்ல உட்காந்து என் மூஞ்சியை ஏண்டா பாத்துட்டு இருக்க. என் பொண்டாட்டிகிட்ட நான் பெர்சனலா டைவர்ஸ் வாங்கிக்குறேன். நீ மொதல்ல உன் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்பு” என்றான் அடிக்குரலில்.

அதில் பொங்கிய சிரிப்பை அடக்கியவன், “என்ஜாய் மாம்ஸ்… நிதினை என் ரூம்க்கு கூட்டிட்டு போய்டுவா” எனக் கேட்டு கண் சிமிட்ட,

“அவன் இந்நேரம் மட்டை ஆகி இருப்பான். உன் பொண்டாட்டி செஞ்ச ஒரே நல்ல விஷயம், அவனை பத்து மணிக்குள்ள தூங்க பழக்குனது தான்…” என்று கிசுகிசுத்ததில், தஷ்வந்த் குறும்பு நகையுடன் மஹாபத்ராவை இழுத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டான்.

சுற்றி நடக்கும் குறும்புகள் எதையும் அறியாமல், கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் மஞ்சுளா.

“அழுதா எல்லாம் சரி ஆகிடுமா மஞ்சு?” கடினமான குரலில் வசீகரன் வினவ, இன்னும் சத்தமாக கேவினாள்.

“சா… சாரி வசீ… நா… நான்… குழந்தையை தொலைச்சுட்டேன்னு… நீங்க என்னை எப்படி நினைப்பீங்களோன்னு…” பேச இயலாமல் பிய்த்து பிய்த்து பேசியவள்,

“ஒரு நாள் இல்ல ஒரு நாள், என்னால தான் குழந்தை போச்சுன்னு சொல்லிட்டா என்னால தாங்கவே முடியாது வசீ. அதனாலயே உங்களை நெருங்க பயமா இருந்துச்சு. அந்த பயமே ஸ்ட்ரெஸ் – ஆ மாறிடுச்சு. நிறைய தடவை என் கூட எப்பவும் நீங்க இருக்கீங்கன்னு புரிய வச்சீங்க தான். ஆனா, என்னால எதையும் ஏத்துக்கவே முடியல. அதுக்கும் மேல, எல்லாத்தையும் மறந்துட்டு நீங்க சொன்ன மாதிரி உங்க கூட வாழணும்ன்னு நினைச்சாலும், நிதினை தொலைச்ச நிமிஷம் கண்ணு முன்னாடி வந்து பதற வச்சுச்சு வசீ. நான் உங்களுக்கு செஞ்ச எதையும் நியாயப்படுத்த விரும்பல. அது நியாயமும் இல்ல. அட்லீஸ்ட் நீங்களாவது நல்லா இருக்கணும்னு தான்… டைவர்ஸ்…” என்று கூறி மூக்கை உறிஞ்சினாள்.

அவளது மனநிலையும் அவன் அறிந்தது தான். அதனால் தானே, அவள் விவாகரத்து கேட்டபோது கூட, அவளை பேசிக் காயப்படுத்த மனம் வராமல், ஒதுங்கிப் போனான்.

இப்போது கன்னத்தில் கை வைத்தபடி, “நானும் நீ நல்லா இருக்கணும்ன்னு தான் டைவர்ஸ் கேக்குறேன் மஞ்சு. உன் அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி, பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.” என்று கூறிட,

விலுக்கென நிமிர்ந்தவள், “உங்க பணத்தை பார்த்து நான் உங்க கூட இருக்கல வசீ” என்று பட்டென கூறியதில், “நானும் நீ குழந்தை பெத்துக் குடுக்குற மெஷின்னு நினைச்சு லவ் பண்ணல” என்றான் அழுத்தமாக.

அதில் ஒரு நொடி திகைத்த மஞ்சுளா, அவனது கூர்பார்வையில் மீண்டும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவ, மஞ்சுளாவே அதனை கலைத்தாள்.

“சாரி வசீ…”

அவனிடம் பதில் இல்லாது போக, நிமிர்ந்து பார்த்தவள் அவனது பார்வை இன்னும் அவள் மீது அழுத்தமாக படிந்ததில் மனம் பதறினாள்.

என்னவோ செய்தது அவனது பார்வை. காதலிக்கும் பொழுதும், திருமணமாகி ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த போதும் கூட இப்படி நெஞ்சம் படபடக்கவில்லையே!

“வ… வசீ… என் மேல கோபம் போகலையா?” இப்போதும் அவனைப் பாராமல் கேட்க, “போகல!” என்றான் சட்டென.

அதில் முகம் சுருங்கியவள், “நான் என்ன செஞ்சா உங்க கோபம் போகும்” தவிப்புடன் கேட்டதில், “என்ன செய்யணும்ன்னு உனக்கு தான் தெரியணும்!” என்றான் சேரில் சாய்ந்து கொண்டு.

அவளோ முதலில் விழித்து, பின் தடுமாறி, சில நொடிகளில் கன்னம் சிவந்தாள்.

“ஃபிராடு வசீ. இவ்ளோ நேரம் விளையாண்டீங்களா?” என்பது போன்று பார்க்க, அவன் விழிகளோ அவளையே மேய்ந்தது.

வெட்கம் சூழ்ந்தாலும், விவாரகரத்து கேட்டது தன்னை தவிக்க விட என்று புரிந்தாலும், அவனது ஏமாற்றமும், வருத்தமும் உண்மை என்று உணர்ந்தவள், வெட்கத்தை விடுத்து அவனருகில் வந்தாள்.

வந்தவள், அவனது நெற்றி மத்தியில் இதழ் பதிக்க, கண்ணை மூடி அதனை அனுபவித்தவன், அப்போதும் இளகவில்லை.

“ஐ லவ் யூ வசீ. எப்பவுமே உங்க மேல இருந்த காதல் துளி கூட குறைஞ்சது இல்ல. எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க. ப்ளீஸ். எனக்கு உங்க மேல இருக்குற லவ்வை ஃபீல் பண்ண வைக்கிறேன்.” கலங்கிய குரலுடன் அவள் கூற,

“ம்ம். சான்ஸ் கொடுக்குறேன். ஃபீல் பண்ண வை… இப்பவே!” என்றான் அவனும்.

அவளோ எப்படி உடனே ஃபீல் செய்ய வைப்பது என்று புரியாமல் திகைத்து, கிண்டல் செய்கிறானா என அவனைப் பார்க்க, அவன் முகமோ வெகு தீவிரமாக இருந்தது.

“எ… எப்படி? ஃபீல் பண்ண வைக்க…” மஞ்சுளா தடுமாறிக் கேட்க, “என்கிட்ட கேட்டா…?” என்றான் அசட்டையாக.

சில நிமிடங்கள் தவிப்பும் குழப்பமும் நிறைந்த பாவையின் வதனத்தை ரசித்தவனின், ரசனைப் பார்வையை இப்போது கண்டுகொண்டாள்.

“வசீ… உங்கள…” என்று அவனைக் கட்டிக்கொண்டவள், “சாரி வசீ ரொம்ப ரொம்ப சாரி. இத்தனை வருஷமும்… உங்களை கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தி… ரொம்ப சாரி வசீ…” என்று ஒவ்வொரு ‘சாரி’க்கும் அவன் முகத்தில் முத்தம் வைத்தாள்.

அதனை உணர்வுப் பூர்வமாக ஏற்றவன், “சாரியை மிச்சம் வைடி. வெறும் முத்தத்துக்கே வேஸ்ட் பண்ணிடாத.” என்று குறும்புடன் கூற, அவளுக்கு வெட்கம் பிய்த்துத் தின்றது. மனைவியின் வெட்கத்தை ரசித்து ருசித்தவன், தன்னவளை கையில் அள்ளிக்கொண்டு அறை நோக்கி சென்றான், இழந்த வருடங்களை ஈடு கட்டி, காதலை ஃபீல் செய்யும் பொருட்டு.

காயம் ஆறும்…
மேகா…

ஹாய் டியர் ப்ரெண்ட்ஸ்… ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு. 🥰 கண்ணை கட்டுது. சோ மீதியை நாளைக்கு போடுறேன். மேக்சிமம் நாளைக்கு டிவிஸ்ட்ட க்ளியர் பண்ணிடுவேன். எல்லாரோட கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ், ஸ்டிக்கர்ஸ் எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டியர்ஸ். நானும் பதில் அனுப்பணும்ன்னு தான் போனை எடுக்குறேன். ஆனா, முடியல. பத்து நாளா என் குட்டி பிரின்ஸ்க்கு கோல்ட் வச்சு செய்யுது. அவன் என்னை வச்சு செய்றான். 🫣எல்லாரும் டிவிஸ்ட் ரிவீல்க்காக காத்துருக்கீங்கன்னு புரியுது. ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க. அடுத்த யூடில இருந்து கொஞ்ச கொஞ்சமா ரிலீஸ் பண்ணிடுறேன். அண்ட் ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச் ஆல்.🥰🥰🥰🥰🥰🥰 Your support is always encourage me

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
45
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்